அதிவிஷேட அவசரத் தகவல்

January 8, 2017

விசுவாசிகளான சகோதரர்களே! கலப்பற்ற உண்மையான உலமாஉகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.

மார்க்க ரீதியில் எனது எதிரிகளும், ”வஹ்ததுல் வுஜூத்” கொள்கையின் எதிரிகளும், வலீமாரின் எதிரிகளும், மற்றும் ”ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைக்கு எதிரான வஹ்ஹாபிகளும் ஒன்றிணைந்து எனது விடயத்தில் உண்மைக்கு மாறான , பொய்யான செய்திகளையும் , தகவல்களையும் பரப்பி எனக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் பிளவையும், விரோதத்தையும் ஏற்படுத்த நினைக்கின்றார்கள். எனக்கும், அவர்களுக்குமிடையில் ஒரு குழப்பத்தை தோற்றுவிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். நானும் , ”வஹ்ததுல் வுஜூத்” இறையியலை ஏற்றுக் கொண்டவர்களும், மற்றும் ”ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகளும் அவர்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றோம். அவர்கள் கூறி வரும் குற்றச்சாட்டுகளிலிருந்து நாங்கள் பரிசுத்தமானவர்களாக உள்ளோம்.  எனக்கும் , முஸ்லிம்களுக்குமிடையில் குழப்பத்தையும், விரோதத்தையும் ஏற்படுத்துவதற்கு அவர்களிடம் தகுந்த ஆதாரமும், காரணமும் இல்லாமற் போனதால் தமது குறிக்கோளை அடைந்து கொள்வதற்காக பல் வேறு தந்திரங்களை மேற் கொண்டார்கள். அல்லாஹ்வின் நல்லருளால் அவர்கள் மேற்கொண்ட சகல முயற்சிகளிலும் தோல்விகண்டு முகம் குப்புற விழுந்துவிட்டார்கள்.

தமது முயற்சிகளில் படுதோல்வி கண்ட எதிரிகள் தற்போது புதிய தந்திரம் ஒன்றை ”கொம்பியூட்டர்” மூலம் கண்டு பிடித்துள்ளார்கள் போலும். நானும், என்னுடன் இருக்கின்ற ”ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகளும் , மற்றும் ஸூபிஸ ஞானக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களும் ”ஷீஆ” கொள்கையுடையவர்கள் என்று மக்கள் மத்தியில் கூறி என்னையும், அவர்களையும் இஸ்லாம் மார்க்கத்தின் விரோதிகள் என்று படம் பிடித்துக் காட்ட முயற்சி செய்கின்றார்கள்.

நானும், என்னுடன் இருக்கும் கொள்கைவாதிகளும் ”ஷீஆ”  கொள்கையையும், வஹ்ஹாபிஸக் கொள்கையையும் , மற்றும் ஏனைய வழி கெட்ட கொள்கைகளையும் முற்றாக எதிர்ப்பவர்கள் என்றும் , அவர்கள் இரு பிரிவினர்களுடன் மார்க்க ரீதியான எந்த ஒரு தொடர்பும் இல்லாதவர்கள் என்றும் இறைவன் மீது ஆணையிட்டவனாக இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் அறிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் நானும், கொள்கையில் என்னைச் சார்ந்தவர்களும் ”ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகள் என்றும், ஷாபிஈ மத்ஹபை பின்பற்றுபவர்கள் என்றும், குத்பு நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ”காதிரிய்யஹ் தரீகஹ்” வழியை பின்பற்றுபவர்கள் என்றும் , இறையியலில் அஷ் ஷெய்குல் அக்பர்  முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வழி செல்பவர்கள் என்றும் இறைவன் மீது சத்தியம் செய்து சொல்கின்றோம்.

இதேபோல் இஸ்லாம் மார்க்கத்தின் ஆணிவேராகவும், விசுவாசத்தின் உயிராகவும், ஏகத்துவ வாதிகளின் உணவாகவும் உள்ள ”வஹ்ததுல் வுஜூத்” இறையியல் ஞானம் பேசுகின்றவன் என்றும், என்னுடன் இருப்பவர்களும், பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் தொழுபவர்களும் என் போன்றே இருக்கின்றார்கள் என்றும் நான் அல்லாஹ் மீது ஆணையிட்டுக் கூறிக் கொள்கின்றேன்.

எனவே, முஸ்லிம் சகோதரர்களே! ”ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வழி வாழும் சகோதரர்களே! என்னுடையவும், என்னுடன் இருப்பவர்களுடையவும் கொள்கை தொடர்பான நிலைப்பாட்டை உங்களுக்கு அறிவித்துவிட்டேன். எவராவது உங்களிடம் என்னைப் பற்றித் தவறாகக் கூறினால் அவரின் கூற்றை நம்பிவிட வேண்டாம் என்றும், அவர்களின் பொய் தகவல்களை கேட்டு ஏமாற வேண்டாம் என்றும் உங்களை அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

அல்லாஹ் என்னையும், உங்களையும் ”ஷீஆ” , வஹ்ஹாபிஸம் போன்ற கொள்கைகளில் விழுந்து விடாமல் காப்பாற்றுவானாக!

காதிமுல் கவ்மி
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ
08.01.2017

—————————————————————————————————————————————–
خبر عاجل وإعلان مهمّ
أيّها الإخوة المؤمنون والعلماء الصادقون المخلصون!
السلام عليكم ورحمة الله وبركاته
إنّ أعدائي في الدّين، وأعداء عقيدة وحدة الوجود، وأعداء أولياء الله تعالى، وجميع الوهّابيّين المخالفين لعقائد أهل السنّة والجماعة ، يريدون أن يوقعوا بيني وبين سائر المسلمين العداوة والبغضاء بإظهار أكاذيب وأباطيل، الّتي أنا ومن معي من معانقي وحدة الوجود، ومتّبعي عقائد أهل السنّة والجماعة برآء منها، ويسعون كلّ السّعي لإثارة فتنة بيني وبين المسلمين، 
لأنّ الأعداء المذكورين ليس لهم أيّ دليل من الدلائل ليوقعوا بيني وبين المسلمين العداوة والبغضاء والنّفرة، فاحتالوا بحيل كثيرة لنيل مقاصدهم وأغراضهم ومآربهم، ولكنّ الله عزّ وجلّ حفظني وحفظ من معي برحمته وفضله وإحسانه، وجعلهم خائبين وخاسرين، مقهورين ومدحورين، 
وهم الآن يحتالون بحيلة جديدة، وهي نسبتهم إيّاي ومن معي من أهل السنّة والجماعة ، ومن أهل التصوّف والعقيدة الصوفيّة إلى عقيدة الشيعة،
وأنا أعلن المسلمين بهذه الدولة ” سريلانكا “ وأخبرهم  ” وأنا مُقسم بالله العظيم، ربّ العزّة “ بأنّي ومن معي بُرئاء من عقيدة الشيعة ومن عقيدة الوهّابيّة، ومن سائر العقائد الزائغة ، الضالّة المضلّة، ومن  العلاقة الدينيّة مع الشيعة والوهّابيّين، وأخبر جميع المسلمين بأنّي سنّيّ عقيدة، وشافعيّ مذهبا، وقادريّ طريقة، وأكبريّ مشربا، وأتباعي كلّهم معي في العقيدة الأشعريّة ، ولكنّي قائل بوحدة الوجود ،الّتي هي أساس الإسلام، وروح الإيمان، وقوت الموحّدين المخلصين، ، وكذلك أتباعي وأحبابي وكلّ مصلّ بمسجدي، ” المسجد البدريّ “
أيّها الإخوة المسلمون! والسنّيّون الموحّدون! فمن جائكم بخبر مخالف لما قلت فلا تصدّقوه ولا تغترّوا به، والله يبارك فيكم ويحفظني وإيّاكم من العقائد الوهّابيّة والشيعة، ومن سائر العقائد المخالفة للكتاب والسنّة، ولأقوال الأولياء والعارفين ،

وأفيدكم أخيرا بأنّ بعض المولويّين من أهل السنّة والجماعة من خارج بلدي كاتانكودي يكيدونني ويمكرون بي ويريدون أن يسقطوني في وهدة عميقة وفتنة عظيمة.

خادم القوم،
مولوي الحاج عبد الرؤوف المصباحي.
٨/١/٢٠١٧

வீடியோக்கான இதில் Click செய்யவும்

You may also like

Leave a Comment