அருள் மணம் கமழும் றிபாஈ றாதிபும், கந்தூரியும்.

May 1, 2018

ஸுல்தானுல் ஆரிபீன் அஸ் ஸெய்யித் அஹ்மதுல் கபீர் அர் றிபாஈ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் புனித “தஹறா” றாதிப் மஜ்லிஸும், அருள் மிகு கந்தூரியும் 28.04.2018 – சனிக்கிழமை (ஞாயிறு இரவு) மாலை 07 மணி முதல் 11 மணி வரை தௌஹீதின் தளம் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக கறாமத் கடல் “அஸ் ஸெய்யிதுஷ் ஷெய்கு, அல் வலிய்யுல் காமில், அல் ஆரிபுல் வாஸில் அப்துர் றஷீத் அல் காதிரீ வர் றிபாஈ, PPSS கோயா தங்கள் மௌலானா வாப்பா றஹிமஹுல்லாஹ் அவர்களின் மருமகன், அதி சங்கைக்கும், மரியாதைக்குமுரிய, அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு புகாரீ நல்ல கோயா தங்கள் (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) அவர்களும், தங்கள் வாப்பா நாயகம் அவர்களின் அருமைப் பேரர் அஸ் ஸெய்யிதுஷ் ஷெய்குல் மௌலவீ முஹம்மது றாஸீ அல் இர்பானீ தங்கள் (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இம்மஜ்லிஸ் நிகழ்வில் தங்கள் வாப்பாவின் முரீதீன்கள், முஹிப்பீன்கள், மற்றும் காதிரிய்யஹ் திருச்சபை உறுப்பினர்களும், பெரும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு அருள் பெற்றார்கள்.

இறுதியாக துஆ, தபர்றுக் விநியோகம் ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

You may also like

Leave a Comment