அஸ்ஸெய்யித் அலவி மௌலானா அன்னவர்களுக்கான மறைவான ஜனாஸா தொழுகை

June 17, 2016

WhatsApp-Image-20160616அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் 15.06.2016 அன்று காலம் சென்ற முன்னால் மேல் மாகாண சபை ஆளுநர் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா அன்னவர்களுக்கான மறைவான ஜனாஸா தொழுகை இன்று 17.06.2016 ஜும்அஹ் தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

யாஅல்லாஹ்! எம்மை விட்டும் மறைந்த அஸ்ஸெய்யித் அலவி மௌலானா அன்னவர்களின் பாவங்களை மன்னித்து, அன்னாரின் சேவைகளை ஏற்றுக் கொண்டு, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஷபாஅத்தை கிடைக்கச் செய்து, அன்னாரை மேலான சுவனமான ஜன்னதுல் பிர்தௌஸில் குடி அமர்த்துவாயாக!

– ஆமீன் –

A49

You may also like

Leave a Comment