Tuesday, April 16, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்.

அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்.

هو محمد بن علي بن محمد، الحاتميّ الطائيّ المُرسي، الملقّب عند الصوفيّة بالشيخ الأكبر، المشهور عند أهل المشـرق بابن عربي، بدون أداة التعريف، ليُميّزوا بينه وبين القاضي أبي بكر ابن العربي، وأمّا أهل المغرب فشُهرته عندهم ابن العربي، بالألف واللّام، كما يسمّي هو نفسه بذلك فى كتبه،

அவர்களின் இயற் பெயர் முஹம்மத். அவர்களின் தந்தையின்பெயர் அலீ. இவர்கள் ஸ்பெய்ன், ஹாதிம் தாஈ வமிசத்தைச் சேர்ந்தவர்கள். ஸூபிய்யாக்களிடம் “அஷ் ஷெய்குல் அக்பர்” என்று பெயர் பெற்றவர்கள். பூமி மத்தியின் கிழக்குப் பகுதியில் வாழ்பவர்களிடம் “அலிப், லாம்” இல்லாமல் “இப்னு அறபீ” என்று பிரபல்யமானவர்கள். காரணம் அந்த மக்கள் அல் காழீ அபூ பக்ர் இப்னுல் அறபீ அவர்களையும் இவர்களையும் வேறுபடுத்தி அறிவதற்காக“இப்னு அறபீ”என இவர்களை அழைக்கின்றனர். மொரோக்கோ வாசிகள் “இப்னுல் அறபீ என (“அலிப், “லாம்” சேர்த்து) இவர்களை அழைக்கின்றனர்.அஷ் ஷெய்குல் அக்பர் நாயகம் அன்னவர்களும் தன்னுடைய பெயரை இவ்வாறே “அலிப்” , “லாம்” உடனே இப்னுல் அறபீ என தன்னுடைய நூற்களில் எழுதுகின்றார்கள்.


وُلد فى مدينة مُرسيّة بالأُندلس سنة 560 هـ ، ولمّا بلغ الثامنةَمن عمره انتقلت أسرته إلى مدينة إشبيلية، وفيها بدأ بطلب العلم، فدرس القرآن والحديث والفقه، وعمل فى شبابه كاتبا لبعض الحُكّام،

இவர்கள் ஸ்பெயினின் “முர்சியா” நகரில் ஹிஜ்ரீ 560ல் பிறந்தார்கள். தனது 8 வது வயதில் தன் குடும்பத்தாருடன் இஷ்பீலிய்யா – SEVILLA – நகரை நோக்கிச் சென்றார்கள். அங்கேதான் கல்வி கற்கத் தொடங்கினார்கள். அல் குர்ஆன், அல் ஹதீது, இஸ்லாமிய சட்டம் போன்றவற்றைக் கற்றார்கள். தன்னுடைய வாலிப வயதில் சில நீதிபதிகளுக்கு செயலாளராக – எழுத்தாளராகப் பணி புரிந்தார்கள்.

ثمّ سلك طريق التصوّف، فانقطع عن الدنيا، وتزهَّدَ، واعتزلَ النّاس، وسَاحَ فى بُلدان الأندلس وشمالي إفريقة مُدّة عشـر سنين، إلتقى خلالها بعدد من شيوخ التصوّف،

பின்பு “துன்யா” இவ்வுலக தொடர்புகளைத் துண்டித்து “ஸூபிஸ” வழியில் சென்றார்கள். துறவரம் பூண்டு, மனித தொடர்புகளைக் குறைத்துக் கொண்டார்கள். சுமார் பத்து வருடங்கள் ஸ்பெய்ன் மற்றும் ஆபிரிக்க பகுதிகளில் சுற்றித் திரிந்தார்கள். இக்காலப் பகுதியில் ஸூபீகள் பலரைச் சந்தித்தார்கள்.


ثمّ اتّجه إلى مكّة فأقام بها سنتين، ثمّ أقام بمَلَطْيَة من بلاد الأَنَاضُول، وتزوّج بأمّ تِلميذه محمد القَونَوي، ثمّ استقرّ فى دمشق، إلى وفاته سنة 638 هـ (الأَنَاضُول معناها الشـرق، وتُطلق الآن على الأراضي الواقعة شرقيّ البحرالمُتوسِّط،وهي جزء من الجمهورية التركيّة)

பின்பு புனித மக்கஹ் நகரை நோக்கிச் சென்றார்கள். அங்கே இரண்டு வருடங்கள் தங்கினார்கள். அதன்பின் துருக்கி நாட்டு அனாளூல் – மலத்யஹ் பகுதியில் சிறு காலம் தங்கினார்கள். தன்னுடைய மாணவர் முஹம்மத் கவ்னவீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் தாயைத் திருமணம் செய்தார்கள். பின் டமஸ்கஸ் நகரிலேயே தனது “வபாத்” வரை (ஹிஜ்ரீ – 638) தங்கியிருந்தார்கள்.


والشيخ الأكبر محي الدين وابن عربي رحمه الله هو أكبر دُعاة وحدة الوجود، يرى ابن عربي أن (ما فى الوجود إلّا الله ) وأنّ جميعَ ما يُدركون بالحواسّ هو مظهرٌ للهِ تعالى، وهذه عنده ‘ حقيقةُ الحقائق ‘، الّتي تُفرِّق بين العارف بالله والجاهل به،

அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் அன்னவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய மகான்களில் மிகப் பிரசித்தி பெற்ற பெரிய மகான் ஆவார்கள். அவர்கள் “அல்லாஹ் தவிர எதுவுமே இல்லை” என்று நம்புகின்றார்கள். மேலும் புலன்களால் உணரப்படுபவை அனைத்தும் அல்லாஹு தஆலாவின் வெளிப்பாடுகள் என்றும் கருதுகின்றார்கள். இது – இந்த நம்பிக்கை அவர்களிடம் அல்லாஹ்வை அறிந்த ஞானிக்கும், அவனை அறியாத ஜாஹிலுக்கும் இடையே பிரித்துக் காட்டக் கூடிய “ஹகீகதுல் ஹகாயிக்” – எதார்த்தங்களின் எதார்த்தம் ஆகும்
.

يقول الشيخ الأكبر ابن عربي رحمه الله(فإنّ العارف من يَرى الحقّ فى كلّ شيئ، بَلْ يراه عينَ كلّ شيئ) – (فصوص الحكم ، ص 192)

ஆரிப் – இறை ஞானி என்பவர் அனைத்து வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வை – ஹக்கை பார்ப்பவரே!, அனைத்தையும் அவனாகப் பார்ப்பவரே! என்று அஷ் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்.
(புஸூஸுல் ஹிகம் – பக்கம்192)

فالعوامّ والمحجوبون يفرِّقون بين الحقّ والخلق، ويُثبتون للكون وُجودا غير وجود الله، ولكن هذا عند ابن عربي وهمٌ وخيالٌ، وفى هذا يقول :
إنّما الكون خيالٌ، وهو حقٌّ فى الحقيقة ،
(فصوص الحكم ، ص 160)

பாமரர்களும், திரையிடப்பட்டவர்களும் ஹக் (இறைவனையும்) , கல்க் – படைப்பையும் பிரிக்கின்றார்கள். படைப்புக்கு அல்லாஹ்வின் வேறான ஒரு வுஜூத் – உள்ளமையை தரிபடுத்துகின்றார்கள். ஆனால் இது இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களிடம் பேதமை ஆகும். இதையே அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். படைப்பென்பது மாயை ஆகும். எதார்த்தத்தில் அது ஹக் – இறைவனே!
(புஸூஸுல் ஹிகம், பக்கம் – 160 )

والكون عنده معدومٌ ، والّذي جَعَلَنا نَتَوَهَّمُ وجودَه هو سَرَيَانُ الله فيه،
படைப்பென்பது அவர்களிடம் “இல்லாதது”. அது இருப்பது போன்று எமக்கு காட்சியளிப்பது அதிலே “ஹக்” ஊடுருவிப் பாய்வதாகும்.

يقول الشيخ الأكبر ابن عربي: ولو لا سَرَيَانُ الحقّ فى الموجودات بالصورة، ما كان للعالَمِ وجود، (فصوص الحكم ، ص 55)

படைப்புக்கள் என்ற உருவத்தில் ஹக் தஆலா ஊடுருவிப் பாயவில்லையானால் இவ் வையகத்திற்கு “வுஜூத்” உள்ளமையே இருந்திருக்காது.
(புஸூஸுல் ஹிகம், பக்கம் 55)

فالشيخ الأكبر ابن عربي لا يؤمن بالخلق من العدم ، وهو يفسّر وجود الموجودات بالتّجَلّى الإلهيّ الدّائم ، وظهورِ الله بصورة الكائنات، فعلى الحقيقة ليس هناك عند الشيخ الأكبر ابن عربي خالقٌ ومخلوقٌ،

அஷ் ஷெய்குல் அக்பர் நாயகம் (இல்லாத) சிருஷ்டியை நம்பவில்லை. இப்படைப்புக்கள் இருப்பதானது நிரந்தரமான, இறைவனின் “தஜல்லீ” வெளிப்பாடு என்றே விபரிக்கின்றார்கள். அங்கே ஷெய்குல் அக்பர் நாயகத்திடம் “காலிக்” படைத்தவன், “மக்லூக்” படைப்பு என் இரண்டு இல்லை.


இக்கருத்தைப் பின்வரும் கவியின் மூலம் கூறிக் காட்டுகின்றார்கள்.

فَالْحَقُّ خَلْقٌ بِـهَذَا الْوَجْهِ فَاعْتَبِرُوْا
وَلَيْسَ خَلْقًا بِـذَاكَ الْوَجْهِ فَادَّكِرُوْا
مَنْ يَدْرِ مَا قُلْتُ لَمْ تَخْذُلْ بَصِيْرَتُهُ
وَلَـيْـسَ يَـدْرِيْهِ إِلَّا مَنْ لَـهُ بَـصَرٌ
جَـمِّـعْ وَفَـرِّقْ فَـإِنَّ الْعَيْـنَ وَاحِدَةٌ
وَهِـيَ الْكَثِـيْـرَةُ لَا تَبْقَـى وَلَا تَذَرُ
(فصوص الحكم ، ص 79)

وجعل الصوفيّة قولَ الشيخ الأكبر ابن عربي هو القولَ الفصلَ، والمعتمدَ فى مسائل التصوّف، وصار مِقْياسَ العلم بالتصوّف هومقدارُ ما يستوعب الصوفيُّ من آراء الشيخ الأكبر ابن عربي، بل اعتقدوا أنّ إدامةَ مطالعةِ كتبِه تجعل المرأ وليّا عارفا بالله ، (مراتب الوجود للجيلي، ص – 9 )

ஸூபிய்யாக்கள் இப்னு அறபீ நாயகத்தின் சொல்லையே இறுதி முடிவாக எடுத்துக் கொள்கின்றார்கள். ஸூபிஸம் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர்களின் சொல்லையே நம்பத்தகுந்த வார்த்தையாகவும் எடுத்துக் கொள்கின்றார்கள். ஒரு ஸூபீயின் தஸவ்வுப் பற்றிய அறிவின் அளவுகோல் அவர் இப்னு அறபீ நாயகத்தின் கருத்துக்களை எந்தளவு புரிந்து கொள்கின்றாரோ அந்த அளவு ஆகும். இப்னு அறபீ நாயகத்தின் நூற்களை ஒருவன் தொடர்ந்து படித்துவருவதால் அவனை அல்லாஹ்வை அறிந்த வலிய்யாக ஆக்கும் என்று நம்புகின்றார்கள்.

وباختصارٍ فقد صار ابن عربي (بُرهان متقدّمي هؤلاء الطائفة، وحُجّةَ متأخِّرِيهم
المكتوبات للسّرهندي، 2 5/

சுருங்கக் கூறின் இப்னு அறபீ நாயகம் ஸூபீகளின் முன்னோர்களின் சான்றாகவும், பின்னோர்களின் ஆதாரமாகவும் ஆகிவிட்டார்கள்.
(அல் மக்தூபாத் லிஸ் ஸர்ஹன்தீ, பக்கம் 2-5 )

ويزعم محمد البُوطي أنّ ما فى كُتب ابن عربي من الأقوال الدالّة على وحدة الوجود مَدْسوسٌ عليه، ويرى أنّ الحقّ (الإمساك عن اتّهامه بأيّ جنوح أو زيغ، فإنّنا لا نملك أن نَجْزِمَ بأن هذا الباطل من كلامه يقينا، بل لا نملك حتّى الظّنَّ الراجح بذلك
(التصوّف السليم جوهر ا|لإسلام، مقال للبوطي)

முஹம்மத் அல் பூதீ, இப்னு அறபீ நாயகம் அவர்களின் நூல்களில் “வஹ்ததுல் வுஜூத்”ஐ காட்டக் கூடிய அனைத்து விடயங்களும் அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுகின்றார். அவர்களை எந்தவொரு தவறைக் கொண்டும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதும், அவர்களின் பேச்சிலிருந்து இந்தப் பொய்யை உறுதி செய்யாமுடியவில்லை என்றும் என்றும் கூறுகின்றார்.
(அத் தஸவ்வுபுஸ் ஸலீம் ஜௌஹறுல் இஸ்லாம் – மகாலுல் பூதீ)

وممّا ينقضُ هذا الزعم أنّ كتابه المشهور ‘ الفتوحات المكيّة ‘ يوجد منه الآن نسخة كاملة فى سبعة وثلاثين مجلّدا، هي بخطّ ابن عربي نفسه، وكتابه ‘ فصوص الحكم ‘ يوجد منه الآن نسخة بخطّ محمد القونوي تلميذ ابن عربي وربيبه، وعلى هذه النسخة سماع مصدّق عليه من ابن عربي، فهل دسّ ابن عربي على نفسه؟
(مؤلّفات ابن عربي لعثمان يحيى، ص – 431 ، 477 ، 479 )

இப்னு அறபீ நாயகம் அன்னவர்களின் பிரபல்யமான “அல் புதூஹாதுல் மக்கிய்யஹ்” என்ற நூல் இப்போதும் 37 வால்யூம் கொண்ட அவர்களின் கையெழுத்துப் பிரதிகளாக காணப்படுவதும், மேலும் அவர்களின் பிரதான மாணவனும், வளர்ப்பு மகனுமாகிய முஹம்மத் அல் கவ்னவீ அவர்களின் கையெழுத்துடன் “புஸூஸுல் ஹிகம்” என்ற நூல் காணப்படுவதும் (இப்பிரதிகளில் இப்னு அறபீ நாயகம் அவர்கிடமிருந்து கேட்டு உண்மைப்படுத்தப்பட்டவைகளும் உள்ளவை குறிப்பிடத்தக்கது), முஹம்மத் அல்பூதீ உடைய கருத்தாகிய இப்னு அறபீ நாயகம் அவர்களின் நூல்களில் “வஹ்ததுல் வுஜூத்”ஐ காட்டக் கூடிய அனைத்து விடயங்களும் அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டவை என்ற மேலே கூறிய அவரது நம்பிக்கைக்கு மாற்றமாக உள்ளன.


அவ்வாறாயின் இப்னு அறபீ நாயகம் தன்மீது தானே இட்டுக் கட்டினார்களா? என்ற வினாவும் உண்டாகின்றது.

(முஅல்லபாது இப்னி அறபீ லிஉத்மான் யஹ்யா, பக்கம் – 431, 477, 479)


وهذا الكلام الوارد فى فصوص الحكم يؤمن به كلّ الصوفيّة، لأنّهم يؤمنون بأنّ ابن عربي هو وليّ الأولياء، وصدّيق الصِّدّيقين، ومقَرَّبُ المقرّبين، والشيخ الأكبر والكبريت الأحمر، وكتابه ‘ فصوص الحكم ‘ هو أعظم مؤلّفاته كلّها قدرًا، وأعمقُها غورا، وأبعدها أثرا، وقد شَرَحَه شُرَّاحٌ كثيرون من أئمّة الصوفيّة، وكُبرائهم حتّى صار ابن عربي يُعرف بِـ صاحب الفصوص،

புஸூஸுல் ஹிகம் என்ற நூலில் வரக் கூடிய இந்த(“வஹ்ததுல் வுஜூத்”ஐ காட்டக் கூடிய) பேச்சுக்களை அனைத்து ஸூபிய்யாக்களும் முழுமையாக நம்புகின்றார்கள். ஏனெனில் இப்னு அறபீ நாயகத்தை அவர்கள் அவ்லியாஉகளுக்கெல்லாம் அதிகாரியானவர்கள் என்றும், ஸீத்தீகீன்களுக்கெல்லாம் ஸித்தீக் என்றும், இறை நெருக்கத்தைப் பெற்றவர்களில் எல்லாம் மிக நெருக்கம் பெற்றவர்கள் என்றும், பெரும் ஷெய்கு (அஷ் ஷெய்குல் அக்பர்) என்றும், செங்கந்தகம் (அல் கிப்ரீதுல் அஹ்மர்) என்றும் நம்புகின்றார்கள். அவர்களின் “புஸூஸுல் ஹிகம்” என்ற நூலை அவர்கள் கோர்வை செய்த நூற்களில் மிக ஆழம் நிறைந்த வலுப்பமானது என்றும் நம்புகின்றார்கள். அந்த நூலுக்கு ஸூபீ இமாம்களிலுள்ள பல விரிவுரையாளர்கள் இப்னு அறபீ நாயகம் அவர்களை “ஸாஹிபுல் புஸூஸ்” என்று அறியப்படும் அளவுக்கு விரிவுரை எழுதியுள்ளார்கள்.

ويقول ابن عربي نفسُه عن كتاب (الفصوص) ما يلي، أمّا بعد، فقد رأيتُ رسول الله صلّى الله عليه وسلّم فى مُبشِّرةٍ اُريتُها فى العشـر الآخر من محرّم سنة سبعٍ وعشـرين وستّمأةٍ، بِمحرُوسة دمشق، وبيده صلّى الله عليه وسلّم كتابٌ، فقال لي: هذا كتاب ‘فصوص الحكم ‘ ، خُذْهُ واخرج به إلى النّاس ينتفعون به، فقلت السَّمْعَ والطَّاعةَ لله ولرسوله وأولى الأمر منا كما أمرنا ، فحققت الأمنية وأخلصت النيّة، وجرّدتُ القصد والهمّة إلى إبراز هذا الكتاب ، كما حدّه لي رسولُ الله صلّى الله عليه وسلّم من غير زيادة ولا نُقصان،
(فصوص الحكم ، ص 47 )

இப்னு அறபீ நாயகம் தனது புஸூஸுல் ஹிகம் என்ற நூலைப் பற்றி கூறுகையில் பின்வருமாறு கூறுகின்றார்கள். அறிந்து கொள்! ஹிஜ்ரீ 627ம் ஆண்டு முஹர்றம் இறுதிப்பத்தில் டமஸ்கஸ் நகரில் நான் நபீ பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவில் கண்டேன். அவர்களின் முபாறகான கரத்தில் ஒரு “கிதாப்” நூல் ஒன்று இருந்தது. இது “புஸூஸுல் ஹிகம்” என்ற நூல் இதை எடுத்து மக்களிடம் கொண்டு சேருங்கள். அவர்கள் இதைக் கொண்டு பயனடைவார்கள் என்று சொன்னார்கள். நான் “அல்லாஹ்வுக்கும் அவனது திருத்தூதருக்கும், அவனது அவ்லியாஉகளுக்கும் செவிமடுத்து, வழிப்படுமாறு இறைவன் கட்டளையிட்டது போல் நான் செவிமடுத்து வழிப்படுகின்றேன் என்று கூறினேன். நம்பிக்கையை உறுதி செய்து கொண்டு, எண்ணத்தை தூய்மைப்படுத்திக் கொண்டு இந்தப் புத்தகத்தை (கிதாபை) வெளிப்படுத்தும் நோக்கத்தை (எனக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கட்டளையிட்டது போன்று கூட்டாமலும், குறைக்காமலும்) உறுதி செய்து கொண்டேன்.
(புஸூஸுல் ஹிகம், பக்கம் – 47)


الخلاصة المفهومة من السطور المذكورة

والكون عند الشيخ محي الدين ابن عربي رضي الله عنه معدومٌ فى الحقيقة، لا وجود له أصلا، ولكنّه موجود فى نظر المحجُوبين بالحُجُب الظلمانيّة ، لا بالحُجُب النّورانيّة، كما حُجب كثير من علماء الرّسوم، والّذي جَعَلَنا نَتَوَهَّمُ وُجودَه هو سَرَيانُ الحق فيه – أي فى صورته، كما قال غير واحد من العارفين الواصلين المحقّقين،
كالشيخ أحمد البدوي، والشيخ إبراهيم الدّسوقي ، والشيخ أبي مدين المغربي ، والشيخ القطب الأكبر أبي الحسن علي الشاذلي، وأبي يزيد البسطامي ، وأمثالهم ، (الكونُ كلّه ظلمةٌ، وإنّما أناره وجود الحقّ فيه) أي فى صورته، كما فى تقريب الوُصول للشيخ زيني دحلان رحمه الله،
والكون فى الحقيقة عَدَمٌ محضٌ، لا وجود له، كالظُّلمة التي هي عدم محضٌ فى الحقيقة، لا وجود لها، ولو رأىها الرائي بوَهمه،
فمن أثْبَتَ الوجودَ للخلق فقد أشرك لإثباته الوجودَين، وجودا للحق ووجودا للخلق، وأمّا إثبات الوجود للخلق غير وجوده تعالى فهو شرك، لأن القائم بنفسه هو الله سبحانه فقط، وأمّا غيره من الكائنات والخلائق فَقَائمٌ به تعالى،
ومعنى قيام الخلق بالله تعالى كونه عينَه، كما يظهر هذا المعنى بالامثلة الآتية، كقيام القميص بالقطن، وقيام الخاتم بالذهب، وقيام الكرسي المصنوع بالخشب بالخشب، وقيام الكرسي المصنوع بالحديد بالحديد، وقيام الحَباب والموج والثلج بالماء، وهنا وجود واحدٌ فقط، لا حاجة إلى الوجودين، والشيئ واحد وإن دُعيَ باسمين،
لأن وجود القميص فى المثال الاوّل بالقطن، ووجود الخاتم فى المثال الثاني بالذهب، وقيام الكرسي فى المثال الثالث بالخشب، والرابع بالحديد، وقيام الحباب والموج والثلج كلها بالماء، وهنا شيئ واحد فى الحقيقة، لا فى الإسم، وفى الإسم فقط شيآن،

وليس معنى قيام الخلق بالله كقيام الجدار الذي كاد أن يسقط على الأرض بالعَمود، وقيام الشيخ العاجز بعصاه التي يعتمد عليها، لاحتياج هذين المثالين إلى وجودين وإلى أمرين،
أيها العلماء المنكرون وحدة الوجود اعتبروا بهذا الخطاب، وتعلّموا دروسا لا تتعلّمونها من الكتب التي ألّفَها علماء الظاهر وعلماء الرسوم،
فإن كنتم فى ريب فيما قلتُ فزُورُوني بقلوب سالمة خالصة وظُرُوف خالية قابلة، وعلّموني الحقّ والصوابَ إن كنتُ فى الباطل والعقيدة المخالفة للكتاب والسنة والعقيدة الأشعرية، وإلّا – إن كنتم فى الخطأ والباطل – فتعلّموا الحق من هذا المسكين الحقير الفقير لأنّي،
خُصّصْتُ بعلم لم يُخَصَّ بمثله – سوَايَ من الرحمن ذى العرش والكرسي
قال الله تعالى ومن يُؤت الحكمة فقد اُوتي خيرا كثيرا ، وما يَذَّكَّرُ إلّا اُولو الألباب،
وقال أيضا ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة،
وقال النبي صلى الله عليه وسلم الحكمة ضالة المؤمن أخذها حيث وجدها.
والله يعلم وأنتم لا تعلمون
وفوق كلّ ذي علم عليمٌ
وافهموا أيّها العلماء قول الله تعالى حقّ الفهم،
فَفرُّوا إلى الله، وكيف يفرّ العبد إلى الله؟ وإلى أين يفرّ العبد؟
وهو منزّه عن الجهات والمكان، وافهموا أيضا معنى إشارتي من قول الرسول صلى الله عليه وسلم (الموت أدنى من شراك نعله، فانتفعوا بي قبل انتقالي وسفري.

خادم القوم وأخوكم فى الله
والمقتول بسيف الفتوى

சாராம்சம்

முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் அவர்களிடம் சிருஷ்டி என்பது யதார்த்த்தில் இல்லாதது.


அதற்கு அறவே உள்ளமை இல்லை. இருளான திரைகளைக்கொண்டு மறைக்கப்பட்டவர்களின் பார்வையில் அவை இருப்பதாக தோற்றுகின்றன.


வெளிரங்க அறிஞர்களில் பலர் இவ்வாறே திரையிடப்பட்டுள்ளனர். படைப்பென்பது அவர்களிடம் “இல்லாதது”. அது இருப்பது போன்று எமக்கு காட்சியளிப்பது அதிலே( அதன் உருவத்திலே) “ஹக்” ஊடுருவிப் பாய்வதாகும்.


சிருஷ்டி என்பது யதார்த்த்தில் இல்லாதது என்ற இந்தக் கருத்தை யதார்த்த ஞானிகளில் அஷ்ஷெய்க் அஹ்மத் அல்பதவீ, அஷ்ஷெய்க் இப்றாஹீம் அத்தஸூகீ, அஷ்ஷெய்க் அபூ மத்யன் அல் மக்ரிபீ, அஷ்ஷெய்க் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ, அபூ யஸீத் அல் பிஸ்தாமீ போன்றவர்கள் கூறியுள்ளனர்.


சிருஷ்டி என்பது இருள் அதை ஒளிபெறச்செய்திருப்பது அதில்(அதன் தோற்றத்தில்) ஹக் தஆலா இருப்பதுதான் என அஷ்ஷெய்க் ஸைனீ தஹ்லான் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தக்ரீபுல் வுஸுல் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.


பேதமையால் இருளை பார்த்தாலும் இருள் என்பது யதார்த்தத்தில் அறவே இல்லாதது போல் சிருஷ்டி என்பது யதார்த்தத்தில் அறவே இல்லாதது. அதற்கு தனியான உள்ளமை இல்லை.


யார் படைப்புகளுக்கு உள்ளமை இருப்பதாக நம்புகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு ஒரு உள்ளமையும் படைப்புகளுக்கு ஒரு உள்ளமையும் என இரண்டு உள்ளமைகள் இருப்பதாக நம்பியதால் இணைத்வைத்தவராகிவிடுவார்.


அல்லாஹ்வின் உள்ளமையை தவிர படைப்புகளுக்கு தனியான உள்ளமை இருப்பதாக நம்புவது ஷிர்க் – இணையாகும்.


ஏனெனில் ( அல்காயிமு பி நப்ஸிஹீ )தன்னைக்கொண்டு நிலைபெற்றவன் அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா தான். அவனல்லாத ஏனைய படைப்புகள் அனைக்கொண்டே நிலைபெற்றுள்ளன.


படைப்புகள் அவனைக்கொண்டே நிலைபெற்றுள்ளன என்பதன் கருத்து என்னவெனில் அவன் படைப்புகள் தானாக இருக்கின்றான் என்பதாகும்.


பஞ்சைக் கொண்டு சேட் நிலைத்திருப்பது, தங்கத்தைக் கொண்டு மோதிரம் நிலைத்திருப்பது, மரப்பலகையைக் கொண்டு மரக்கதிரை நிலைத்திருப்பது, இரும்பைக் கொண்டு இரும்புக் கதிரை நிலைத்திருப்பது, நீரைக்கொண்டு அலையும் குமிழியும் ஐஸ் கட்டியும் நிலைத்திருப்பது போலவே அல்லாஹ்வைக்கொண்டு படைப்புகள் நிலைபெற்றுள்ளன. இங்கு இரண்டு பெயர்கள் சொல்லப்பட்டாலும் பொருள் ஒன்றுதான் இரண்டு உள்ளமை இங்கு அவசியமில்லை .


சேட் உண்டாகியிருப்பது பஞ்சைக்கொண்டுதான். மோதிரம் உண்டாகியிருப்பது தங்கத்தைக் கொண்டுதான். மரக்கதிரை நிலைபெற்றிருப்பது மரத்தைக் கொண்டுதான். இரும்புக்கதிரை நிலைபெற்றிருப்பது இரும்பைக் கொண்டுதான். குமிழியும் அலையும் ஐஸ் கட்டியும் நிலைபெற்றிருப்பது நீரைக்கொண்டுதான். இங்கு யதார்த்தத்தில் இருப்பது ஒரு வஸ்து தான். பெயர்தான் இரண்டுள்ளது.


படைப்புகள் அல்லாஹ்வை கொண்டு நிலைபெற்றுள்ளன என்பதன் கருத்து விழப்போகும் ஒரு சுவர் ஒரு தாங்கும் தூணின் துணையால் நிலைபெற்றிருப்பது போன்றல்ல. ஒரு வயோதிபன் கைத்தடி ஒன்றைக்கொண்டு நிலைபெற்றிருப்பது போன்றல்ல. இந்த உதாரணங்களில் இரு உள்ளமைகள் காணப்படுகின்றன.


வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று என்பதை மறுக்கும் உலமாக்களே!


இந்த கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். வெளிரங்க உலமாக்களின் நூல்களில் நீங்கள் கற்காதவைகளை கற்றுக்கொள்ளுங்கள்.


நான் கூறுவதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தூய உள்ளத்துடன் என்னை சந்திய்யுங்கள். நான் அல்குர்ஆன், அல்ஹதீது, அஷ் அரிய்யாகொள்கை என்பவற்றிற்கு மாற்றமான பிழையான கொள்கையில் இருந்தால் எனக்கு சரியானதை சொல்லித்தாருங்கள். நீங்கள் பிழையான கொள்கையில் இருந்தால் இந்த இழிவான ஏழையிடம் உண்மையை கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான் அர்ஷையும் குர்ஸியையும் உடைய றஹ்மானிடம் இருந்து விஷேட அறிவைப் பெற்றுள்ளேன்.


யார் ஞானம் வழங்கப்பட்டாரோ அவர் அதிக நன்மைகள் வழங்கப்பட்டுள்ளார் .


ஞானத்தைக்கொண்டும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் உமது இரட்சகனின் பாதைக்கு அழையுங்கள்.

என அல்லாஹ் அல் குர்ஆனில் கூறியுள்ளான்

ஞானம் விசுவாசியின் தவறிப்போனபொருள் அதை அவன் எங்கு கண்டாலும் எடுத்துக்கொள்வான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.


அல்லாஹ் அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
ஒவ்வொரு அறிஞனை விடவும் மிகச்சிறந்த அறிஞன் இருக்கின்றான்.


அல்லாஹ் அளவில் விரண்டோடுங்கள் என்ற அல்லாஹ்வின் கூற்றை சரியாக விளங்கிக்கொள்ளுங்கள்.


அல்லாஹ் இடத்தைவிட்டும் திசையை விட்டும் பரிசுத்தமானவனாக இருக்கும் போது அடியான் அல்லாஹ் அளவில் எப்படி விரண்டோடுவான்? எங்கே விரண்டோடுவான் ?


“மரணம் செருப்பின் பட்டியை விட மனிதனுக்கு மிக நெருக்கமானது” என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழியில் சுட்டப்படுவதையும் விளங்கிக்கொள்ளுங்கள்.


என்னைக் கொண்டு பிரயோசனம் பெறுங்கள். உங்கள் சகோதரனும், சமூக சேவகனும், பத்வா எனும் வாளால் கொல்லப்பட்டவருமான மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் – மிஸ்பாஹீ, பஹ்ஜீ.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments