இதுவே தியாகம்!

October 14, 2016

காத்தான்குடி-05 பத்ரிய்யா ஜும்அஹ் பள்ளிவாயலின் கட்டட நிதிக்காக காத்தான்குடி மக்கள் தமது செல்வங்களை அள்ளிக் கொடுத்து வருவது, நபீ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஸஹாபாக்கள் இஸ்லாமியப் போருக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் தமது உடைமைகளை அள்ளிக் கொடுத்த அந்த நிகழ்வை நினைவூட்டுகின்றது.

பெண்கள் தமது தாலிகளையும், மற்றும் நகைகளையும் ஆண்கள் பணத்தையும், மற்றும் தமது காணி உறுதிகளையும், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களையும் அன்பளி்ப்பாக வழங்கி வருவது ஊர் மக்களின் தியாக உணர்வை படம் பிடித்துக் காட்டுகின்றது.

இது தொழுகைக்கான பள்ளிவாயல் மட்டுமல்ல. “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையினதும், “தரீகா” மற்றும், இறைஞானத்தினதும் பிரதான தளமாகும்.

இதன் சுருக்க வரலாறு :

இப்பள்ளிவாயல் அலியார் ஆலிம் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்களால் 1960ம் ஆண்டு தாபிக்கப்பட்டது. 1979ம் ஆண்டு வரை ஐங்காலத் தொழுகைக்கான பள்ளிவாயலாக மட்டுமே அது இயங்கியது. பின்னர் 1980ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை 36 வருடங்களாக ஜும்அஹ் பள்ளிவாயலாகவே இயங்கி வருகின்றது.

இப்பள்ளிவாயலில் வலீமார் பெயரில் அடிக்கடி கந்தூரி நடந்து வருவதால் இது “கந்தூரிப் பள்ளிவாயல்” என்றும், அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ  அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ தால உம்றுஹூ அன்னவர்களின் தலைமையில் இயங்கி வருவதால் “றஊப் மௌலவீ பள்ளிவாயல்” என்றும் பொதுமக்களால் அழைக்கப்பட்டு வருகின்றது.

நீங்கள் இப்போது காண்பது வழங்கப்பட்ட அன்பளிப்புக்களிற் சிலவற்றை மட்டுமே.

அதி நவீன அமைப்பில் “லிப்ட்” வசிதியுடன் அமைக்கப்பட்டு வருகின்ற இப்பள்ளிவாயலுக்காக பின்வரும் முகவரிக்கு உங்களின் அன்பளிப்புக்களை வழங்கலாம்.

Badriyyah Jumah Mosque
Peoples bank A/C No :
065-1-001-2-0000937
Kattankudy

——————————

BJM New Building Fund

Seylan bank A/C No :
7956070
Kattankudy

தொடர்புகளுக்கு :

Tel : +94 652245625 , +94 652245542 , +94 652247558

Mob : +94 77 4849786, +94 77 9185192

dsc_0002-for-web dsc_0005-for-web dsc_0009-for-web dsc_0010-for-web dsc_0012-for-web dsc_0013-for-web dsc_0014-for-web dsc_0015-for-web-2 dsc_0015-for-web dsc_0016-for-web dsc_0017-for-web dsc_0019-for-web dsc_0023-for-web dsc_0032-for-web-2 dsc_0032-for-web dsc_0037-for-web dsc_0038-for-web dsc_0052-for-web dsc_0054-for-web dsc_0056-for-web dsc_0072-for-web jewel-1-for-web jewel-2-for-web

You may also like

1 Comment

Habeebul jawaadh October 14, 2016 at 5:01 am

Masha allah

Reply

Leave a Comment