“இப்தார்” நோன்பு திறக்கும் நிகழ்வு – 2019

June 2, 2019

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கும் காத்தான்குடி -5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் புனித “இப்தார்” நோன்பு திறக்கும் நிகழ்வு 02.06.2019 ஞாயிற்றுக்கிழமை  அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிர் துறந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும், தேசிய கீத நிகழ்வும், சிறப்பு சொற்பொழிவுகளும், நாட்டின் சமாதானத்தை வேண்டி நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கான இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதி நகரமுதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்களும், கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் KPJ. அருண ஜெயசேகர அவர்களும், மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் முகாமைச் சபை உறுப்பினர்களும், பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

You may also like

Leave a Comment