ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நிகழ்வுகள்

July 6, 2016

ஈகைத் திருநாளாம் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்வுகள் (06.07.2016) இன்று புதன்கிழமை காலை 08.30 மணிக்கு தக்பீருடன் ஆரம்பமாகி 09.00 மணியுடன் பெண்களுக்கான பெருநாள் தொழுகை நிறைவுபெற்றது.

தொடர்ந்து தக்பீர் ஆரம்பமாகி 09.45 மணியுடன் நிறைவு பெற, சிறப்பு நிகழ்வாக ஸூபிஸ ஆன்மீக கீதங்கள் அடங்கிய “குல்சன்” இறுவெட்டு வெளியீடு நிகழ்வு நடைபெற்றது. அதை சங்கைக்குரிய மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அன்னவர்கள் கையளிக்க சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பொற்கரங்களினால் வெளியி்ட்டு வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆத்மீகப் பேருரையை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான பெருநாள் தொழுகை நடாத்தப்பட்டு, பெருநாள் குத்பஹ், துஆ, ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றதன் பின் தௌஹீத் சொந்தங்களின் முஸாபஹஹ், முஆனகாவுடன் பெருநாள் நிகழ்வுகள்  சந்தோஷமாய் கழிந்தன.

– அல்ஹம்துலில்லாஹ் –

– ஈத் முபாறக் –


DSC_0007 [for web]

DSC_0012 [for web]

DSC_0016 [for web]

DSC_0020 [for web]

DSC_0021 [for web]

DSC_0023 [for web]

DSC_0036 [for web]

DSC_0041 [for web]

DSC_0043 [for web]

DSC_0053 [for web]

DSC_0055 [for web]

DSC_0008 (2) [for web]

DSC_0007 (2) [for web]

You may also like

Leave a Comment