உடலாலும், உள்ளத்தாலும் வணக்கம் செய்து புனித றமழானைக் கழித்திட்ட அனைத்து ஸூபிகளுக்கும் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

June 4, 2019
ஸூபிஸ வழி செல்லும் உண்மை முவஹ்ஹிதுகளே!  உங்கள் அனைவருக்கும் எனது “ஈதுல் பித்ர்” நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

 
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களையும், உங்கள் மனைவி, மக்கள், உங்கள் பொருளாதாரம், வீடுகள், வியாபார தளங்கள் தோட்டங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் வழிகெட்ட வஹ்ஹாபிகளின் தீங்குகளிலிருந்தும், எடுத்தெறியப்பட்ட ஷெய்தானாகிய ஸக்றானின் உதவியாளர்கள், அடிவருடிகளின் தீங்குகளை விட்டும் பாதுகாப்பானாக என்றும், மேலும் உங்கள் உள்ளங்களை உள்ரங்க, வெளிரங்க அசுத்தங்களை விட்டும், அவ் உள்ளங்களில் நானென்ற, வேறென்ற மற்றும் நான் எனும் மமதை போன்ற அசுத்தங்கள் நுழைந்துவிடாமல் பாதுகாப்பானாக என்றும் பிரார்த்திக்கின்றேன்.
 
“விஸால்” எனும் போதையில் “அத் தாதுல் முகத்தஸா” என்ற பூமியில் விழுந்து, தங்களின் உயர்ந்த சத்தத்தினால் எல்லாம் அவனே – அவனன்றி எதுவுமில்லை என்று சத்தமிடும் வலீமார்களாக உங்கள் அனைவரையும் ஆக்குவானாக!
 
காதிமுல் கவ்மி,
அல்ஆலிம் அஷ்ஷெய்கு அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ
————————————————————
 
 
التهنئة الصوفيّة لطائفة قضوا شهر رمضان بالأعمال القلبيّة والبدنيّة.
 
أهنّيكم أيّها الموحّدون المخلصون المتصوّفون بتهنئة صوفيّة صافية بمناسبة عيد الفطر المبارك الميمون،
 
والله يحفظكم وأزواجكم وأولادكم وأموالكم وما لكم من المنازل والمتاجر والبساتين والدّكاكين، من شرور الطائفة الوهّابيّة النّجديّة، ومن شرور أعوان وأتباع الشيطان الرجيم سكران، الّذي فَجّر القنبلة المسمومة وقتل بها جمّا غفيرا من عباده ومظاهره،
 
ويحفظكم ربّي وربّكم من كلّ سوء ومكروه وأمراض مخوفة، ويطهّر أفئدتكم من كلّ نجاسة ظاهرة وباطنة، ومن دخول الغيريّة والأنّيّة والأنانيّة فيها،
 
ويجعلكم أوليائه الّذين شربوا خمرة الوصال وسقطوا بسكرها على الأرض الذّات المقدّسة وصاحوا بأعلى صوتهم (هو الكلّ لا إله إلّا هو)
 
خادم القوم
العالم الشيخ عبد الرؤوف المصباجي البهجي،

You may also like

Leave a Comment