Friday, March 29, 2024
Homeஎழுத்தாக்கங்கள்எழுவாய், பயனிலை இரண்டும் சேர்ந்தே ஒரு வசனம்.

எழுவாய், பயனிலை இரண்டும் சேர்ந்தே ஒரு வசனம்.

ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம்

ஞானமகான் ஒருவர் தந்த தத்துவ முத்து. வாசகர்களுக்கு அந்த மகான் யாரென்று அறிந்து கொள்ளத் தேவையில்லை. அவர் சொன்ன தத்துவம் சரியானதா? இல்லையா? என்பதை மட்டும் அறிந்து கொண்டால் போதும். அது சரியானதா? இல்லையா? என்பதை நிறுத்துப் பார்க்கும் தராசு குர்ஆனும், ஹதீதும், இஜ்மாஉம், கியாஸுமேயாகும். இந் நான்குமே உரை கல்லாகும்.

அறபு மொழி இலக்கணத்தில் “முப்ததா” “கபர்” என்று இரண்டு உள்ளன. அவை முறையே எழுவாய், பயனிலை எனப்படும்.

ஒரு வசனம் பூரணமாவதாயின் இரண்டும் இருக்க வேண்டும். ஒன்று மட்டும் இருந்தால் வசனம் பூரணமாகாது. கருத்துப் புரியாது.

உதாரணமாக مزمّل آكل முஸம்மில் சாப்பிடுகிறான் என்பது போன்று. முஸம்மில் என்ற சொல் “முப்ததா” எழுவாய் என்றும், “ஆகிலுன்” என்ற சொல் “கபர்” பயனிலை என்றும் அறபு மொழி இலக்கணத்தில் சொல்லப்படும்.

எழுவாய் மட்டும் தனியாக ஒரு கருத்தை தரமாட்டாது. அதேபோல் பயனிலை மட்டும் தனியாக ஒரு கருத்தை தராது.

மேற்கண்ட இவ்விதியை விளங்கிக் கொண்ட ஒருவர் பின்வரும் விடயத்தை கவனத்திற் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.

அதாவது ஒருவன் “அல்லாஹ்” என்று மட்டும் “திக்ர்” செய்கிறான் என்று வைத்துக் கொண்டால் இது ஒரு சொல்லேயன்றி ஒரு வசனமல்ல.

இவ்வாறு ஒருவன் சொல்லும் போது இச் சொல்லை எழுவாயாக – “முப்ததா”வாக வைத்துக் கொள்ளவும் முடியும். அல்லது பயனிலையாக “கபர்” ஆக வைத்துக் கொள்ளவும் முடியும். இதை எழுவாய் என்று வைத்துக் கொண்டால் இதற்கு ஒரு “கபர்” பயனிலை வேண்டும். பயனிலை என்று வைத்துக் கொண்டால் இதற்கு ஒரு “முப்ததா” எழுவாய் வேண்டும்.

இதை எழுவாயாக – “முப்ததா” என்று வைத்துக் கொண்டால் இதற்கான பயனிலை “கபர்” “ஹாழிறுன்” என்றும், “மவ்ஜூதுன்” என்றும் வைத்துக் கொள்ளலாம். இன்னுமிவை போன்ற பொருத்தமான சொற்களையும் வைத்துக் கொள்ளலாம்.

“அல்லாஹ்” என்பதை பயனிலையாக – “கபர்” என்று வைத்துக் கொண்டால் இதற்கான எழுவாய் هو அவன், أنت நீ, أنا நான் இம்மூன்றில் ஒன்றை வைத்துக் கொள்ளலாம். “ஹுவ” என்றதன்படி هو الله அவன் அல்லாஹ் என்றும், “அன்த” என்றதன்படி أنت الله நீ அல்லாஹ் என்றும், “அன” என்றதன்படி أنا الله நான் அல்லாஹ் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது ஹுவ என்றும், அன்த என்றும் எழுவாயை வைத்துக் கொள்வதால் எந்தச் சிக்கலும், பிரச்சினையும் வரப்போவதில்லை. இதையே “ளாஹிர்” வெளியரங்க உலமாஉகள் சரியென்று சொல்வார்கள். இவ்வாறு வைப்பதில் “ஷரீஆ”வுக்கு எந்த மாற்றமும் இல்லை என்றும் சொல்வார்கள்.

இங்கு மொழியிலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு விதியை கருத்திற் கொண்டால் இவ்விரண்டு விதமாக வைப்பதை விட “அன” என்று வைப்பதே சிறந்ததென்று கூற வேண்டும்.

இதன் விபரம் என்னவெனில் الضمائر كلها معرفة “ழமீர்கள் யாவும் மஃரிபாவாகும்” என்பது ஒரு பொது விதி. ஹுவ என்பதும், அன்த என்பதும், அன என்பதும் ழமீர்கள்தான். ஆயினும் இவற்றில் “அன” என்பது மற்ற இரண்டு ழிமீர்களை விடவும் சிறந்ததென்று மொழியிலக்கணவாதிகள் கூறுகின்றனர். இவர்களின் கூற்றுப்படி أنا الله என்று வசனம் அமைவதே மிகவும் சிறந்ததாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments