கஃபத்துல்லாஹ் 

July 23, 2015

முடிவில்லா முதலோனின் முழுமை இல்லம் !

முஃமீன்கள் முன்னோக்கும் முதன்மை இல்லம் !

இறை கொள்கை ஈமானை சொல்லும் இல்லம் !

குறை கொள்கை குபுறை மறுக்கும் இல்லம் !

ஒற்றுமை உணர்வுகள்  ஓங்கும் இல்லம் !
வேற்றுமை வேதாந்தங்கள்  மறுக்கும் இல்லம் !
இறைநேசச் செல்வர்கள்  இணைந்த இல்லம் !
இறைவணக்க வழிபாடு  நடக்கும் இல்லம் !

இறைசின்னம் எத்தனையோ இருக்கும் இல்லம் !
இறைதியாகச் செயல்கள் நிகழ்ந்த இல்லம் !
சமத்துவம் சமரசம் பேணும் இல்லம் !
சாந்தி சமாதானம் காணும் இல்லம் !

வல்லமை அல்லாஹ்வின் வாய்மை இல்லம் !
உள்ளமை அல்லாஹ்வை உணர்த்தும் இல்லம் !
இறையின்பம் எல்லோரும் தேடும் இல்லம் !
இறைகடமை ஹஜ்ஜூக்காய் நாடும் இல்லம் !                                                = காத்தான்குடி றபாய்தீன் =

You may also like

Leave a Comment