Thursday, March 28, 2024
Homeநிகழ்வுகள்கத்தார் (QATAR) நாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஹாஜாஜீ புகழ் மஜ்லிஸ்–2019.

கத்தார் (QATAR) நாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஹாஜாஜீ புகழ் மஜ்லிஸ்–2019.

கடந்த 02.05.2019 வெள்ளிக்கிழமை இரவு, அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்களினதும் அன்னாரின் அருந்தவப் புதல்வர்கள், புதல்வி மற்றும் அவர்களின் ஆன்மீக குருநாதர் பெயரிலான மௌலித் நிகழ்வும் கந்தூரியும் அதி சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆசிர்வாதத்துடன் எமது கத்தார் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் ஏற்பாட்டில் மிக விமர்சையாக நடாத்தப்பட்டது.

இவ்வருள்மிகு நிகழ்வு அன்றைய தினம் சரியாக இரவு 10.00 மணிக்கு புனித ஹாஜாஜீ திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து சங்கைக்குரிய மௌலவீ எம்.எஸ் கரீப் நாஜீ றப்பானீ அவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. அதனையடுத்து ஆன்மீகப் பாடகர் சகோதரர். எச்.ஏ. றஹீம் அவர்களின் இஸ்லாமிய கீதத்தினைத் தொடர்ந்து ஹாஜாஜீ மௌலித் மஜ்லிஸ் ஆரம்பமானது.

மஜ்லிஸ் நிகழ்வில் மௌலித் அதாயே றஸூல் மற்றும் அஸ்மாஉ ஹாஜா பாராயணம் செய்து வைக்கப்பட்டதோடு எமது தாய் நாட்டின் சுபீட்சம் மற்றும் சமாதானம் வேண்டி விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், கடந்த 06 வருடங்களாக ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தில் தலைமைத்துவம் வகித்து எமது தௌஹீத் சமூகத்தின் வளர்ச்சிக்கு அயராது பணி செய்து தாய் நாடு திரும்பவுள்ள சங்கைக்குரிய மௌலவீ என். எம். பஸ்மில் றப்பானீ அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அதன்பின் தபர்றுக் வழங்கப்பட்டு புனித ஸலாவத்துடன் ஹாஜாஜீ கந்தூரி நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

மேற்படி நிகழ்வில் கத்தார் நாட்டில் வசிக்கும் எமது சங்கைக்குரிய உலமாஉகள், ஹுப்புல் பத்ரிய்யீன் நிர்வாகிகள், மற்றும் ஹாஜாஜீ முஹிப்பீன்கள்அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

தகவல் –செயலாளர் – ஹுப்புல் பத்ரிய்யீன் – (தோஹா – கத்தார்)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments