கத்ர் (Qatar) நாட்டில் சிறப்பாக நடைபெற்ற ஹாஜாஜீ புகழ் மஜ்லிஸ்

May 15, 2018

அஜ்மீர் அரசர், அதாயே றஸுல், குத்புல் ஹிந்த் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஸ்தீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்களினதும் அவர்களது அருமை மக்கள் மற்றும் அவர்களின் ஆன்மீக குருநாதர் பெயரிலான மௌலித் நிகழ்வும் கந்தூரியும் கடந்த 10.05.2018 வெள்ளிக்கிழமை இரவு தோஹா – கத்ர், பின் மஹ்மூத் மஜ்லிஸ் மண்டபத்தில், அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களை தவிசாளராகக் கொண்டு இயங்கும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது.

இவ்வருள்மிகு நிகழ்வு அன்றைய தினம் இரவு 10.00 மணியளவில் புனித ஹாஜாஜீ திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து ஆன்மீகப் பாடகர் சகோதரர். எச்.ஏ. றஹீம் அவர்களின் இஸ்லாமிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் இடம்பெற்ற சங்கைக்குரிய மௌலவீ  என்.எம்.பஸ்மில் றப்பானீ அவர்களின் மார்க்க சொற்பொழிவினைத் தொடர்ந்து மௌலித் மஜ்லிஸ் ஆரம்பமானது. மஜ்லிஸில் சங்கைக்குரிய மௌலவீமார்களான எஸ்.ஏ.ஏ.முரீத் றப்பானீ, எம்.ஏ.நஸீம் றப்பானீ, ஏ.ஜே.ஸம்ஹான் றப்பானீ, எம்.எச்.ஹன்ஸாத் றப்பானீ, ஏ.ஜே. ஜாஸுல் ஜெஸாத் றப்பானீ, எம்.எஸ்.கரீப் நாஜீ றப்பானீ ஆகியோர்கள் கலந்து கொண்டு மௌலித் அதாயே றஸூல் மற்றும் அஸ்மாஉ ஹாஜா பாராயணம் செய்து வைக்கப்பட்டதோடு விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

மஜ்லிஸின் மற்றுமொரு சிறப்பம்சமாக ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தில் கடந்த 10 வருடங்களாக பொருளாளர் பதவி வகித்து எமது பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் வளர்ச்சிக்கும், தௌஹீத் சமூக வளர்ச்சிக்கும் அயராது பணி செய்து மீண்டும் தாய் நாடு திரும்பவுள்ள சகோதரர் எம்.எம்.ஏ.பஹ்ஜீ அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. சங்க உபதலைவர் மௌலவீ எஸ்.ஏ.ஏ.முரீத் றப்பானீ அவர்கள் பொன்னாடை போர்த்த, சங்க சிரேஷ்ட ஆலோசகர் சகோதரர் எஸ்.எம்.முஸ்தாக் அவர்களால் கெளரவிப்பு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. இறுதியாக பொருளாளர் சகோதரர் எம்.பி.ஆர்.கரீப் அவர்களின் நன்றியுரையின் பின் தபர்றுக் வழங்கப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்ட 75ற்கும் மேற்பட்ட முஹிப்பீன்களுக்கு இரவு உணவும் வழங்கப்பட்டு புனித ஸலாவத்துடன் ஹாஜாஜீ கந்தூரி நிகழ்வு நிறைவு பெற்றது.

தகவல் –மௌலவீ என்.எம்.பஸ்மில் றப்பானீ.

You may also like

Leave a Comment