Friday, March 29, 2024
Homeஎழுத்தாக்கங்கள்சிருஷ்டிகள் அல்லாஹ் தானாவை தான்

சிருஷ்டிகள் அல்லாஹ் தானாவை தான்

“உலகிலுள்ள சகல சிருஷ்டிகளும் அவற்றின் மூலத்தைக்கவனிப்பது கொண்டு, அல்லாஹ் தானாகவே இருக்கின்றன. எனினும், வெளியமைப்பைக்கவனிப்பது கொண்டு மட்டும் நோக்கினால், அல்லாஹ் அல்லாதவையாக இருக்கின்றன. யதார்த்தத்தை கவனித்துப்பார்க்கும் பொழுது எல்லாம் அல்லாஹ்தானாகவே இருக்கின்றது.

உதாரணமாக, நீர் குமிழி, அலை, ஐஸ் கட்டி என்பன போன்று இவை அனைத்தும் (வெளியமைப்பில் எவ்வாறிருந்தாலும்) இவற்றுக்கு மூலமாயி ருப்பது தண்ணீர்தான். இதேபோல் கானல் நீர் யதார்த்தத்தில் ஆகாயம் (காற்று) தான். அதுவே கானல் நீரின் தோற்றத்தில் வெளியாகியுள்ளது.”

வஹ்ததுல் வுஜூத் ( உள்மை ஒன்று) என்பது சரியானது என்பதற்கு அல்குர்ஆனில் பல ஆதாரங்கள் உள்ளன.
(01وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۚ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ
கிழக்கும் மேற்கும் (இருண்ட கண்டங்களும் ஒளிர்ந்த கண்டங்களும்) அல்லாஹ்வுக்கே சொந்தம். ஆதலால், நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் “வஜ்ஹு” )முகம்- தாத்- உள்ளமை) இருக்கிறது!
(திருக்குர்ஆன் -2:115)

(02 وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ
“நாங்கள் மனிதனுக்கு, அவனின் பிடரி நரம்பு அவனுக்கு நெருங்கியிருப்பதை விட அதி நெருக்கமாக உள்ளோம்”
(திருக்குர்ஆன்-50:16)

03) وهو معكم اينما كنتم
“நீங்கள் எங்கிருந்தாலும் (சகலத்திலும் அவனது வுஜூது ஊடுருவி இருக்கிற விதத்தில்) அவன் உங்களுடன் இருக்கிறான்.
(திருக்குர்ஆன் -57:04)
04) وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ

“நாங்கள் அவனுக்கு (மரணம் நெருங்கிய மனிதனுக்கு) உங்களைவிட (அவனை நெருங்கியிருப்பவர்களை விட) நெருங்கியிருக்கிறோம். எனினும், நீங்கள் காணாமல் இருக்கின்றீர்கள்” (திருக்குர்ஆன் 56:85)

05) إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ

“(நபியே!) எவர்கள் உங்களுடைய கையைப் பிடித்து ஒப்பந்தம் செய்கின்றார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே ஒப்பந்தம் செய்கின்றனர். அல்லாஹ்வின் கை அவர்களின் கைக்கு மேலுள்ளது”
(திருக்குர்ஆன் 48:10)

06) هو الاوّل والآخر والظاهر والباطن وهو بكلّ شيي عليم

“அவனே (சகல சிருஷ்டிகளை விட) முந்தியவனும், (மள்ஹறு-வெளிப்படு ஸ்தானங்களில் வெளிப்படுவதில்) பிந்தியவனும், (சிருஷ்டிகளின் கோலங்களைக் கொண்டு) வெளியானவனும், (சிருஷ்டிகளின் வெளிப்பாடுகளை விட்டும்) உள்ளானவனும்.
அவன் சர்வ பொருள்களைக்கொண்டும் அறிந்தவன்-அறியப்பட்டவன்.
(திருக்குர்ஆன் 2:186)

07) وفي انفسكم أفلا تبصرون

“உங்களிலே (எனது வுஜூதை) நீங்கள் பார்க்க வேண்டாமா?”
(திருக்குர்ஆன் 51:21)

08) { سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ

நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்குள்ளேயும் அவர்களுக்கு வெளியில் பல கோணங்களிலும் அவர்கள் காண்பதெல்லாம் மெய்ப்பொருள்தான் என தெளிவாகும் பொருட்டு அவர்களுக்குத் நாம் காண்பிப்போம்
(திருக்குர்ஆன் 41:53. )

09) وإذا سئلك عبادي عنّي فانّي قريبٌ
“(நபியே!) என்னைப் பற்றி என்னுடைய அடியார்கள் உங்களிடம் கேட்டால் நான் (ஹகீகத்தை-எதார்த்தத்தைக் கொண்டு) சமீபமாக இருக்கிறேன்” (என்று சொல்வீராக!) (திருக்குர்ஆன் 2:186)

10) وما رميت إذ رميت ولكنّ الله رمي

(நபியே! காபிர்கள் மீது மண்ணை) நீங்கள் வீசியபோது நீங்கள் வீசவில்லை. எனினும் அல்லாஹ்தான் வீசினான்!
(திருக்குர்ஆன் 8:17)

11) وكان الله بكلّ شيي محيطا

அல்லாஹ் சகல பொருள்களையும் சூழ்ந்தவனாகிவிட்டான்!
(திருக்குர்ஆன் 4:126)

வஹ்ததுல் வுஜூத் ( உள்மை ஒன்று) என்பது சரியானது என்பதற்கு ஹதீதுகளிலும் பல ஆதாரங்கள் உள்ளன.

01) قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا الشَّاعِرُ، كَلِمَةُ لَبِيدٍ:
أَلاَ كُلُّ شَيْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ …
கவிஞர்கள்சொன்ன வார்த்தைகளில் மிக உண்மையானது லபீத் கவிஞன் – சொன்ன அல்லாஹ் தவிர உள்ள மற்ற அனைத்தும் பொய்யானது- இல்லாதது என்பதுதான் (புஹாரீ 4541)
02) نّ أحدكم إذا قام فى صلاته فإنّه يناجي ربّه أو إنّ ربّه بينه وبين القبلة

“உங்களில் ஒருவன் தொழ நின்றால் அவன் தனது இறைவனுடன் வசனிக்கின்றான். ஏனெனில், அவனுடைய இறைவன் அவனுக்கும் “கிப்லா” வுக்கும் இடையே இருக்கின்றான்.” என்று நபிகள் நாயகம்(ﷺ) அவர்கள் அருளினார்கள். (புஹாரீ 405)

03) وما يزال عبدي يبقرّب اليّ با لنّوافل حتي اُحبّه فاذا احببته كنت سمعه الّذي يسمع به وبصره الّذي يبصر به ويده الّتي يبطش بها ورجله الّتي يمشي بها

நப்லான வணக்கங்கள் கொண்டு எனதடியான் என்பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். நான் அவனை நேசிக்கும் வரை. நான் அவனை நேசித்துவிட்டால், அவன் கேட்கும் கேள்வியாக நான் ஆகிவிடுவேன். அவன் பார்க்கும் பார்வையாக நான் ஆகிவிடுவேன். அவன் பிடிக்கும் கையாக நான் ஆகிவிடுவேன். அவன் நடக்கும் காலாக நான் ஆகிவிடுவேன். (ஹதீதுல் குத்ஸி), புஹாரீ 6502)

04) قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي “
மறுமை நாளில் இறைவனின் திருமுன் நடக்கவிருக்கும் விசாரணையில்
இறைவன், “ஓ..! ஆதமின் மகனே..! நான் நோயுற்றிருந்தேனே! நீ ஏன் எனது நலம் விசாரிக்க வரவில்லை?” என்பான்.
அதற்கு அந்த மனிதன், “இறைவா..! உலக மக்களின் நோய் தீர்க்கும் கருணையாளன் நீ. உனக்கு நோயா? என்று வியந்து கேட்பான்.
“உண்மைதான்! நோயுற்றிருந்த எனது அடியானை நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால்.. அங்கு என்னை நீ கண்டிருக்கலாம்” என்று பதிலளிப்பான்
மீண்டும் “ஓ..! ஆதமின் மகனே! நான் பசித்திருந்தேன். எனது பசியை நீ ஏன் போக்கவில்லை?” என்று இறைவன் கேட்பான்.
“இறைவா! உலக மக்கள் அனைவரின் பசிப்பிணியைப் போக்கும் அருளாளன் நீ. உனக்கு பசியா?” என்று அந்த மனிதன் கேட்பான்.
அதற்கு இறைவன், “ஆம்.. அன்று உன்னிடம் பசியுடன் வந்த அந்த மனிதனுக்கு நீ உணவளித்திருந்தால் அதை என்னிடம்பெற்றிருப்பாய்” என்று பதிலளிப்பான்.
மீண்டும் இறைவன், “ஓ..! ஆதமின் மகனே! நான் தாகித்திருந்தேன். நீ எனது தாகத்துக்கு ஏன் தண்ணீர் அளிக்கவில்லை?” என்று கேட்பான்.
அதற்கு அம்மனிதன், “இறைவா..! உலக மக்கள் அனைவரின் தாகத்தை தீர்த்தருள்பவன் நீ. உனக்கு தாகமா?” என்பான்.
“ஆம்..! தாகம் என்று தண்ணீர் கேட்டு வந்த அந்த மனிதனின் தாகத்தை நீ தணித்திருந்தால் அதை என்னிடம்பெற்றிருப்பாய்!” என்பான் இறைவன்.
(முஸ்லிம் 2569)

05) والّذي نفس محمّد بيده لو أنّكم دليتم بحبل إلي الارض السفلى لهبط علي الله ثمّ قرأهو الأول والاَخروالظاهر والباطن وهو بكلّ شيئ عليم

முஹம்மதுடைய ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, ஒரு கயிற்றை பூமியில் தொங்கவிட்டீர்களேயானால் அது அல்லாஹ்வின் மேல் விழும். பின்பு நாயகம் (ﷺ) அவர்கள் அவனே முன்னவன், அவனே பின்னவன், அவனே வெளியானவன், அவனே உள்ளானவன், அவன் சகல பொருள்களையும் அறிந்தவன் என்ற (57:3) திருவசனத்தை ஓதினார்கள்.
(துர்முதீ – 3298)

ஆத்ம ஞானிகளின் பேச்சுக்களிலும் எண்ணிலடங்காத பல ஆதாரங்கள் வஹ்ததுல் வுஜூத் ( உள்மை ஒன்று) என்பது சரியானது என்பதற்கு
உள்ளன.
(இவை அத்துஹ்பதுல் முர்ஸலா எனும் நூலின் 45-50ம் பக்கங்களில் இருந்து எடுத்தெழுதப்பட்டவை)

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வஹ்ததுல் வுஜூத்பேசக்கூடியவர்களை காபிர்கள் என பத்வா – மார்க்கத்தீர்ப்பு வழங்க அத்துஹ்பதுல் முர்ஸலா எனும் இந்த நூலை ஆதாரமாக எடுத்துக்கொண்டது மிகப்பெரும் விந்தையானதும் அறிவீனமானதுமான விடயமாகும்

அத்துஹ்பதுல் முர்ஸலா எனும் நூலின் ஆசிரியர் இந்நூலில் வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று என்பதை மிகத்தெளிவாக கூறியுள்ளார்கள்.
அப்படியிருக்கும் போது ஒரு புத்திசாலி வஹ்ததுல் வுஜூத் பிழை என்றும் அதை பேசக்கூடியவர்களை காபிர்கள் என்றும் மார்க்கத்தீர்ப்பு வழங்க இந்நூலை ஆதாரமாக எடுப்பானா?

யா அல்லாஹ் எமக்கு பூரணமான புத்தியையும் சீரான விளக்கத்தையும் தருவாயாக!

المخلوقات كلُّها عينُ الخالق

واعلموا أنّ جميعَ الموجوداتِ عينُ الحقِّ سبحانه وتعالى، ولكنَّها من حيثُ التعيُّنِ غيرُ الحقِّ سبحانه وتعالى، والغيريَّةُ إعتباريَّةٌ، وأمّا من حيثُ الحقيقةِ فالكلُّ هو الحقُّ سبحانه وتعالى، مِثَالُه الحَبَابُ والمَوْجُ والثَّلْجُ،

فإنَّ كُلَّهُنَّ من حيثُ الحقيقةِ عينُ الماءِ، ومن حيث التعيُّنِ غيرُ الماءِ، وكذلك السَّرابُ فإنَّهُ من حيثُ الحقيقةِ عينُ الهواءِ، ومن حيث التعيُّنِ غيرُ الهواءِ،

ولأنّ السّرابَ فى الحقيقة هواءٌ ظَهَرَ بصورةِ الماءِ،

والدّلائل على وحدة الوجود كثيرة، أمّا من القرآن فكثيرةٌ، منها قولُه تعالى ” وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ “ وقولُه تعالى ” وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ “ وقوله تعالى ” وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ “ ”وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ “ وقوله تعالى ” إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ “ وقولُه تعالى ” هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ “ وقولُه تعالى ” وَفِي أَنْفُسِكُمْ أَفَلَا تُبْصِرُونَ “ وقولُه تعالى ” سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ “ وقولُه تعالى ” وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ “ وقولُه تعالى ” وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى “وقولُه تعالى ” وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ مُحِيطًا “

وأمّا من السُّنَّةِ فقولُه صلّى الله عليه وسلّم أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا الشَّاعِرُ كَلِمَةُ لَبِيدٍ: أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللَّهَ بَاطِلٌ، وقولُه صلّى الله عليه وسلّم إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ، فَإِنَّمَا يُنَاجِي رَبَّهُ أَوْ رَبُّهُ بَيْنَهُ وَبَيْنَ قِبْلَتِهِ، وقولُه صلّى الله عليه وسلّم عن الله وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وقولُه صلّى الله عليه وسلّم إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِي ، راوه مسلم، وروى التُّرْمُذِيْ فى السُّنَنِ عن أبي هريرة فى حديث طويل وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّكُمْ دَلَّيْتُمْ بِحَبْلٍ إِلَى الأَرْضِ السُّفْلَى لَهَبَطَ عَلَى اللَّهِ. ثُمَّ قَرَأَ هُوَ الأَوَّلُ وَالآخِرُ وَالظَّاهِرُ وَالبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ “ إلى غير ذلك من الأحاديث الصحيحة،

وأمّا الإجماعُ فَدَلَّتْ عليه أقوال العارفين الدالَّةُ على وحدة الوجود فكثيرةٌ بحيثُ لا تَتَأَتَّى فى العدد وبالحصر،
(منقول من كتاب ” التحفة المرسلة “ ص 45. 46. 47. 48. 49 . 50 )

ومن العجب الذي لا عجب فوقه استدلالُ المفتي من جمعيّة العلماء بسـري لانكا بهذا الكتاب، لتكفير القائلين بوحدة الوجود، فسبحان الله العظيم، هذا جهلٌ لا يُعادلُه جهلٌ، وهذه حماقة لا يشابهها حماقة، وهذه بلادة لا يكافئها بلادة،

لأنّ مؤلِّفَ هذا الكتاب صرّح بوحدة الوجود، فكيف يستدلُّ به العاقل الحاذق لإبطال وحدة الوجود وتكفير القائلين بها،

اللهم ارزقهم عقلا كاملا وفهما مستقيما،

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments