தந்தையை இழந்த மாணவர்களுக்கான உதவி வழங்கும் திட்டம் – 2019

December 30, 2019

அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் மற்றும் றப்பானிய்யஹ் இளைஞர் கழகம் & றப்பானிய்யஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தந்தையை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் உதவி திட்ட நிகழ்வு 29.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 5.00 மணியளவில் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி மற்றும் பாலமுனை ஆகிய பிரதேசங்களில் இருந்து சுமார் 60ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களும், சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி நகரசபையின் பிரதி தவிசாளர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் J.P அவர்களும் மற்றும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் நிறுவனங்களின் தலைவர், செயலாளர்களும், உலமாஉகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

You may also like

Leave a Comment