தோஹா – கத்ர் நாட்டில் இயங்கும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கம் ஏற்பாட்டில் அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களின் 75வது பிறந்ததின துஆ பிரார்த்தனை நிகழ்வு

February 16, 2019

அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பிறந்த தினத்தை(05.02.2019) முன்னிட்டு அவர்களின் வழிகாட்டலில் கத்ர் நாட்டில் இயங்கிவரும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் கடந்த 07.02.2019 வியாழக்கிழமை அன்று விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வு ஒன்றுஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

அன்றைய தினம் சரியாக இரவு10.00 மணிக்குஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவீ NM. பஸ்மில் றப்பானீ அவர்களால் ஆத்மீக விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. ஆன்மீகப் பாடகர் ஜனாப். எச்.ஏ. றஹீம் அவர்களினால் ஷெய்குனா அவர்களின் புகழ்கூறும் இஸ்லாமிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து மௌலித் மஜ்லிஸ் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

ஷெய்குனா அவர்களின் நோயற்ற நீடிய வாழ்வினை நோக்காகக் கொண்டு அப்துல் காதிர் மகானந்த பாவா றஹிமஹுல்லாஹ் அவர்களினால் இயற்றப்பட்ட கஸீததுஷ் ஷிபாஇய்யஹ் நோய் நிவாரணி மௌலித் ஓதப்பட்டதோடு மிஸ்பாஹீ நாயகம் அவர்கள் புகழ் பாடும் லதாயிபுல் அதூப் புகழ்மாலையும் ஷெய்குனா அவர்களின் பாதுகாப்பு வேண்டி புனித பத்ர் ஸஹாபாக்கள் திருநாமமும் வாசிக்கப்பட்டது.

இறுதியாக ஷெய்குனா அவர்களுக்கு பூரண சுகத்துடன் நீடிய வாழ்நாளும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் நோக்குடன் குத்புல் வுஜூத் இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்களினால் யாத்தளிக்கப்பட்ட ஹிஸ்புன் நஸ்ர் விஷேட துஆ ஓதப்பட்டு, தபர்றுக்விநியோகம் மற்றும் ஸலவாத்துடன் நிகழ்வு நள்ளிரவு12.30 மணிக்கு இனிதாக நிறைவெய்தியது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட 50ற்கும் மேற்பட்ட ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் முரீதீன்கள், முஹிப்பீன்களுக்கு இராப்போசனம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தகவல்: மௌலவீ என்.எம்.பஸ்மில் றப்பானீ

You may also like

Leave a Comment