புகாரீ ஷரீப் மஜ்லிஸ், ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ், விஷேட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2019

March 17, 2019

றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கோர்வை செய்த, ஈருல வழிகாட்டி அண்ணலெம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன் மொழிகளை பாராயணம் செய்யும் புனித ஸஹீஹுல் புகாரீ மஜ்லிஸ் 04.03.2019 திங்கட்கிழமை அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. அன்றைய தினம் விஷேட நிகழ்வாக 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைகளுக்காக கரீப் நவாஸ் பௌண்டேஷன் அலுவலகமும் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் திறந்து வைக்கபட்டது.

அதே போன்று கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ் 13.03.2019 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையின் பின் திருக்கொடியேற்றமும் அதனைத் தொடர்ந்து ஹாஜாஜீ மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MTF. ஸுஹ்தீ றப்பானீ, மிஸ்பாஹீ அவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு இறுதியாக பெரிய துஆ, தபர்றுக் விநியோகம் ஸலவாதுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

அதேபோன்று அகிலத்தின் அருட்கொடை, காரிருள் நீக்க வந்த ஜோதி அருமை நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன் தாயின் வயிற்றில் கருத்தரித்த மாதமான றஜப் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை தினத்தை கண்ணியம் செய்யும் முகமாக அவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸ் 14.03.2019 வியாழக்கிழமை பின்னேரம் வெள்ளியிரவு இஷா தொழுகையின் பின் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

You may also like

Leave a Comment