Thursday, April 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பேராசிரியர் ரொஹான் குணரட்ன அவர்கள் “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” எனும் நூலுக்கு வழங்கிய முன்னுரை

பேராசிரியர் ரொஹான் குணரட்ன அவர்கள் “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” எனும் நூலுக்கு வழங்கிய முன்னுரை

இஸ்லாம் 8 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அது தலைமுறைகளாக பௌத்த, ஹிந்து மற்றும் கிறிஸ்தவ சமயங்களுடன் நல்லிணக்கத்தைப் பேணியது. இலங்கையின் அடித்தளமான ஸூபிஸம், 1400 வருடங்களுக்கு மேலாக ஏனைய மதங்களோடு இடைவெளியின்றி பரிணமித்த ஒரு பாரம்பரிய சொத்தாகும். ஸூபிஸம் உள்நாட்டு மற்றும் பாரம்பரிய இஸ்லாத்தின் அடித்தளத்தினை உருவாக்கியது. 1977ஆம் ஆண்டின் திறந்த பொருளாதாரத்தினால், இந்திய உப கண்டத்தினதும் மத்திய கிழக்கினதும் சித்தாந்தங்கள் வெரூன்றின.

1970களில் இலங்கை முஸ்லீம்களில் 90 வீதமானோர் ஸூபிகளாகவே இருந்தனர். நிதியுதவியுடன், வெளிநாடுகளின் செல்வாக்கு மற்றும் சித்தாந்தத்துடன் தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, மற்றும் வஹ்ஹாபிய கொள்கையுடையோர் ஸூபிஸத்தைப் புறந்தள்ளி தமது கொள்கையை நிலை நாட்டத் தொடங்கினர். இந்த சீர்திருத்தவாதிகள், சமய மறுமலர்ச்சியாளர்கள், அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரியத்தை சிறிது சிறிதாக அழித்தனர்.

இஸ்லாத்தின் ஒத்திசையும் தன்மை, மனித வரலாற்றையும், கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும் எதிர்க்கின்ற மிகக் கண்டிப்பான இயக்கங்களால் சவாலுக்குட்படுத்தப்பட்டது. இலங்கையின் உள்நாட்டு பாரம்பரிய முஸ்லிம்களின் மதிப்பு அராபிய கலாச்சார மற்றும் வெளிநாட்டு சித்தாந்தங்களினால் மாற்றப்பட்டு, ஒரு பகுதி முஸ்லிம்கள் இலங்கைத் தேசத்திலிருந்தும் கலாச்சாரத்திலிருந்தும் தாமாகவே தூரப்பட்டனர். அவர்கள் இஸ்லாமிய சட்டம் கோரி, ஏனைய மதங்களை இழிவுபடுத்தி, முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்குமிடையில் குரோதத்தைப் பரப்பி, தனியான பாடசாலைகளைக் கோரி, தேசிய கீதம் பாடுவதையும் எழுந்து நிற்பதையும் எதிர்த்து, பௌத்த, ஹிந்து மற்றும் கிறிஸ்தவர்களின் உருவச் சிலைகளை தாக்கவேண்டுமெனவும் வாதிட்டனர். முடிவில் அவர்கள் வணக்கஸ்தலங்களின் புனிதத்தன்மையை மாசுபடுத்தினர். இந்த இயக்கங்களின் சில குழுக்கள் குறிப்பாக வஹ்ஹாபிஸம் மற்றும் ஜமாஅதே இஸ்லாமி போன்றோர் அல்கைதா, இஸ்லாமிய அரசு மற்றும் ஏனைய வன்முறைக்கும்பல்களுடன் தம்மை அடையாளம் காட்டின. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் (இஹ்வானுல் முஸ்லிமீன்) வன்முறை தீவிரவாத ஆசிய வடிவத்திலிருந்தும், ஜமாஅதே இஸ்லாமியின் தீவிர சித்தாந்தத்திலிருந்தும் சவூதி மற்றும் தமிழ் நாட்டிலிருந்து வந்த வஹ்ஹாபிஸத்தின் பதிப்புகளாலும் இஸ்லாமிய அரசின் (இலங்கை கிளைக்காக) இணைந்த போராளிகள் உயிர்த்த ஞாயிறு மற்றும் ஏனைய தாக்குதல்களை ஒழுங்கு செய்து நடாத்தினர்.

இஸ்லாமிய அரசின் ஆரம்பம் 2017 மார்ச் 10 இல் காத்தான்குடியில் ஸூபிஸ சமூகத்துக்கிடையில் நடந்த சண்டை என குறிப்பிடலாம். பிரதான நாயகனாக வஹ்ஹாபிஸ தலைவர் ஸஹ்றான் ஹாஸிமும் அவரின் எதிராளியாக ஸூபிஸ தலைவர் சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹ் அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ அவர்களும் இருந்தனர். செம்மஞ்சள் நிற சட்டை அணிந்து கொண்டு, போர் வாள்களையும், கிரீஸ் கத்திகளையும், தடிகளையும் ஏந்திக்கொண்டு ஸஹ்றானின் ஆதரவாளர்கள் ஸூபி முஸ்லிம்களை அலியார் சந்தியில் தாக்கினார்கள். இச்சம்பவத்தின் ஒரு மாதத்துக்கு முன்னர் 03.02.2017ல் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடந்த இஸ்லாமிய அரசுக்கு எதிரான கூட்டத்திற்கு ஸஹ்றானின் ஆதரவாளர்கள் இடையூறு விளைவித்தனர். தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஸூபிகளின் புனிதஸ்தலங்களை தகர்க்கவும், ஸூபிஸ தலைவர்களைக் கொல்லவும், ஸூபிகளை தாக்கவும் அழைப்பு விடுத்தது. ஆயினும் எல்லா தவ்ஹீத் அமைப்புகளும் இதை ஆதரிக்கவில்லை. எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகும் கூட அனேகமான தவ்ஹீத் அமைப்புக்கள் ஸூபிஸத்துக்கு எதிரான தமது பிரச்சாரங்களை தொடர்கின்றன.

இஸ்லாமிய அரசை மையமாகக் கொண்ட அச்சுறுத்தலை சந்திக்க அரசாங்கத்துக்கு இன்று ஆறு முனையான மூலோபாயங்கள் அவசியமாகின்றது. முதலாவது, தரமான தலைவர்களை நியமிப்பதன் மூலமாகவும், உளவுத்துறையை நவீனப்படுத்துவதன் மூலமாகவும், முஸ்லிம் தீவிரவாதமயப்படத்தலுக்காகப் போராடும் ஆற்றல்களை அடைந்து கொள்வதற்கான தேசிய பாதுகாப்பு அமைப்பின் மறுகட்டமைப்பு அவசியமாகும். இரண்டாவது, அல்கைதா, இஸ்லாமிய அரசு, மற்றும் இதுபோன்ற மன நிலையுடைய குழுக்களான பயங்கரவாத நிறுவனங்களை குற்றமாக்குவதற்கும், வெறுப்பான பேச்சு, வன்முறைத் தூண்டல், மற்றும் இணையத்தளம் மூலமான பொய்த்தன்மைகளை இணக்கப்பாட்டு சட்டத்தினால் குற்றமாக்குவதற்காகவும், பொய் செய்திகளை எதிர்க்க கையாளும் மசோதாவுடன் சட்ட அமைப்பை விருத்தி செய்வது அவசியமாகும். மூன்றாவது, அனைத்து இன, சமய பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்து படிக்கின்ற தேசிய கல்விக் கொள்கை ஒன்றின் நடைமுறை அவசியமாகிறது. நான்காவது, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் நிதானப்போக்கினை முன்னெடுப்பதற்கு இஸ்லாமிய அமைப்புகளிலும், மத்ரசாக்களிலும், பள்ளிவாயல்களிலும் இணக்கப்பாட்டு முன்னெடுப்புகளை ஸ்தாபிப்பதன் மூலமாக சமய இடைவெளியை ஒழுங்குபடுத்துவது அவசியமானது. ஐந்தாவது, இணைய வழி பயங்கரவாத சித்தாந்தங்களை எதிர்கொள்ள இணையத்தள ஆற்றல்களை விருத்திசெய்வது அவசியமானது. ஆறாவது, ஒருவருக்கு IS செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் தீவிர செயற்பாட்டைக் குறைத்துக் கொள்ளவும், தேசிய நீரோட்ட வாழ்வுக்கு திருப்புவதற்கு வசதியாக மறு ஒருங்கமைப்புத் திறன்களுடன் புனர்வாழ்வு ஆற்றல்களை விருத்திசெய்வது அவசியமானது.

அரசாங்கமும் முஸ்லிம் தலைவர்களும் பயங்கரவாதத்தின் முன்னோடிகளையும், தீவிரவாதம் மற்றும் பிரத்தியேகவாதத்தினதும் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடக் கூடாது. இஸ்லாமிய அரசு (IS) அண்டை நாடுகளை தாக்குவதால் இலங்கையும் பிராந்திய அச்சுறுத்தலை துல்லியமாக மதிப்பிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னால் விளையும் அச்சுறுத்தல் மீது அலட்சியமாக, அக்கறையின்மையாக இருப்பதற்கு இடமில்லை. இலங்கைக்கும் பிராந்தியத்துக்குமான இஸ்லாமிய தேசத்தின் (IS) தொடரான அச்சுறுத்தலைக் குறைப்பதற்கு உடனடியான நடுத்தர மற்றும் நீண்ட கால யுக்திகளை விருத்தி செய்வது இன்றியமையாதது.

ஒரே இலங்கையை கட்டி எழுப்புவது தேசிய பாதுகாப்பு முன்னுரிமையாக இருக்க வேண்டும். L.T.TEயின் அச்சுறுத்தலைக் குறைப்பதற்கான வழி தமிழர்களை சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்துடன் ஒருங்கிணைப்பதாகும். இதேபோல், இஸ்லாமிய அரசை மையப்படுத்திய அச்சுறுத்தலை தணிக்க மூன்று வகையான திறன்கள் அவசியமானவை.

முதலாவதாக, வெறுப்பு மற்றும் வன்முறைத் தூண்டலில் ஈடுபட்ட எந்த ஒரு குழுவினரையும் அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதன் மூலமும், அவர்களின் தலைவர்களையும் அங்கத்தவர்களையும் சிறையில் இடுவதன் மூலமும் கலைப்பதற்கு சட்டம் மற்றும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டமைப்பு அவசியமாகிறது. விரோதத்தைப் பரப்புகின்ற மற்றும் வன்முறையைத் தூண்டுகின்ற பொதுபலசேனா, சிங்கள ராவய, மஹசென் பலகாய மற்றும் இதுபோன்ற மனநிலையுடைய குழுக்களைத் தடை செய்யாமல் தற்போதுள்ள பயங்கரவாத மற்றும் தீவிரவாத அலை அடக்கப்படவோ, தனிமைப்படுத்தவோ நீக்கவோ முடியாது. இல்லாவிட்டால், வருடா வருடம் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதோருக்குமிடையில் வன்முறை நடக்கின்ற இந்தியாவைப்போல் நாம் ஆகுவோம். சமூகங்களை ஒன்றிணைப்பதற்கு முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும் ஒன்றாகப் பயிலக் கூடிய ஒரு தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு உபாயம் அவசியமாகிறது. தப்பெண்ணத்தையும், சந்தேகத்தையும் கட்டுப்படுத்துவதற்கும், நல்லுறவைக் கட்டியெழுப்பவதற்கும் பல் கலாச்சார பாடசாலைகள் இன்றியமையாதவை.

இரண்டாவதாக, இலங்கை முஸ்லிம் பயங்கரவாதிகள் மத்ரஸாக்களிலிருந்தும் மத்ரஸாக்கள் அல்லாத பின்புலங்களிலிருந்தும் வந்தார்கள். என்றாலும் அவர்கள் ஏனைய மதங்களை இழிவுபடுத்துகின்ற மத்ரஸா கல்வியை தலைமைத்துவம் அனுமதிக்கிறது. எல்லாப் பாடசாலைகளிலும் விஷேடமாக மத்ரஸாக்களிலும் மேலும் தாமதமின்றி சமய அறிவு அறிமுகப்படுத்துவது மிக அவசியமானது. மத்ரஸாக்கள் தடை செய்யப்படக் கூடாது. ஆனால் உலகளாவிய பாடங்கள் உள்ளடக்கப்பட்டு மறு சீரமைக்கப்படவேண்டும். பொதுவாக, உலகளாவிய கல்வியில் தோல்வியடைந்தவர்களே மத்ரஸாக்களில் சேர்ந்து பின்னர் பட்டம் பெற்று முஸ்லிம் சமுகத்தில் செல்வாக்கு செலுத்த ஆரம்பிக்கிறார்கள். இந்த பட்டதாரிகள் குறைவாகக் கற்றவர்கள், ஸஹ்றானைப் போன்றவர்கள் உலக அறிவில் குறுகிய பார்வையுடையவர்கள். உலகத்தைப் பற்றிய பரந்த புரிந்துணர்வை விருத்தி செய்வதற்கு கணிதம், விஞ்ஞானம், தத்துவம், மொழிகள் மற்றும் திறனாய்வு சிந்தனை ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். எந்தவொரு மத்ரஸாவும் மறுசீரமைப்பினை விரும்பவில்லை என்றால் அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

மூன்றாவது, வெளிநாடுகளில் இருந்து அறிமுகமாகிய அனைத்து கொள்கைகளையும், தீவிரவாதிகளை உருவாக்கும் வெளிநாட்டு பாடசாலைகளில் கற்கின்ற இலங்கையர்களையும் இலங்கை ஆராய வேண்டும். இலங்கை கல்வி அதிகாரிகள் எல்லா பாடப்புத்தகங்களையும் மீளாய்வு செய்ய வேண்டும். இதேபோன்று, குரோதப் போக்குள்ள வெளிநாட்டு பிரச்சாரகர்கள் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு நிகழ்நிலையிலும் (Online) தடைநிலையிலும் (Offline) இலங்கையர்கள் மீதான அவர்களின் செல்வாக்கை உன்னிப்பாக அவதானித்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இலங்கை சூபிஸ தலைவர்கள் தமது தர்ஹாக்களை இணக்கப்பாட்டு மையங்களாக மாற்றுவதற்கு வழி சமைக்க வேண்டும். தர்காக்களின் உள்ளார்ந்த நிலை நல்லிணக்க மையங்கள், வாய்ப்புகள், நூலகங்கள், பிரசங்கங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டி எழுப்புவதற்கான பரிமாற்றங்களை உருவாக்குவதற்கான முன் உதாரணமாக ஏனைய முஸ்லிம் அமைப்புகளுக்கும் குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் இருக்க முடியும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஒரு வருடமாகியும் கூட அனேகமாக முஸ்லிம் நிறுவனங்கள் தீவிரவாதிகளை தொடர்ந்து உருவாக்கும் தீவிரமயமாக்கள் தொடரை தடுப்பதற்கான தலைமைத்துவம் இல்லாமலிருக்கின்றன. சரித்திர வாயிலாக காத்தான்குடி, படித்த அறிஞர்களையும் நேர்மையான வியாபாரிகளையும் உருவாக்கியிருக்கிறது. காத்தான்குடி, வஹ்ஹாபிஸ சித்தாந்தத்திற்கும் நிதியுதவிக்கும் ஒரு மையமாக மாறியுள்ள நிலையில் இன்று அது ஒரு மத்திய கிழக்கு நகரம் போல் காட்சியளிக்கிறது. ஸஹ்றானாலும் அவனது ஆதரவாளர்களாலும் கட்டவிழ்த்து விடப்பட்ட சாவு மற்றும் அழிவுகளினால் ஏற்பட்ட அவப்பெயரை தடுப்பதற்காக காத்தான்குடியை ஒரு நல்லிணக்க வதிவிடமாக மாற்றுவதற்கு முஸ்லிம் தலைவர்கள் அறிவூட்டலை வழங்க வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக பாரம்பரியத்தினை மீள நிலை பெறச் செய்வதற்காக சங்கைக்குரிய அஷஷெய்க் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ அவர்களின் ‘வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்’ என்ற நூல் நிகழ்நிலை (Online) மற்றும் தடைநிலை (Offline) மூலமாக பரவலாக்கப்பட வேண்டும். இலங்கையைப் பாதுகாப்பதற்கான முதல் நடவடிக்கை, வெளிநாட்டு சித்தாந்தங்களினாலும் கலாச்சார நடைமுறைகளாலும் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த நிபுணர்களின் புரிந்துணர்வு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு இரண்டையும் உயர்த்துவதாகும். அனைத்து இலங்கையர்களுக்கும் அறிவூட்டுவதற்கான ஒரு படைப்பைத் தயாரித்தமைக்காக சங்கைக்குரிய அஷ்ஷெய்க் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ அவர்களுக்கும் மற்றும் தலைமை ஸூபி நிறுவனமான அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பிற்கும் நாங்கள் நன்றியுடையவர்களாவோம்.

பேராசிரியர் ரொஹான் குணரட்ன
சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கற்கைகளுக்கான பேராசிரியர் மற்றும் தீவிரமயமாக்கலின் மூன்று தூண்கள் (Oxford University Press) இணை ஆசிரியர்.

——————————-

FOREWORD given by Prof. Rohan Gunaratne for the tome “Vaanmarai Marukkum Wahhabisam”

Islam was introduced to Sri Lanka in the eight century. Islam coexisted with Buddhism, Hinduism and Christianity for generations. The foundation of Sri Lankan Islam is Sufism, a heritage that evolved side-by-side with other religions for over 1400 years. Sufism formed the foundation of local and traditional Islam. With the open economy of 1977, the subcontinental and Middle Eastern ideologies took root in Sri Lanka.

In the 1970s, 90% of the Sri Lankan Muslims were Sufis. With funding, ideology and influence from overseas, Tabligh Jamaat, Jamaati Islami and Wahhabi ideologues started to supplant Sufism. These reformist, revivalist and radical movements eroded the Sri Lankan Muslim heritage.

The syncretic form of Islam was challenged by puritanical movements that opposed human history, culture and civilization. With local and traditional Muslim values in Sri Lanka replaced by Arab culture and foreign ideologies, a segment of Muslims distanced themselves from the Sri Lankan nation and culture. They called for Islamic law, denigrated other religions, spread hatred between Muslims and non-Muslims, called for dedicated Muslim schools, opposed singing and standing for the national anthem and advocated attacks against Buddhist, Christian, and Hindu images. They eventually even desecrated places of worship. Some of the factions of these movements notably Wahhabism and Jamaati-Islami identified themselves with al Qaeda, Islamic State, and other violent groups. The recruits for the Islamic State (Sri Lanka Branch), that mounted the Easter Sunday and other attacks, came from Saudi and Tamil Nadu versions of Wahhabism, Muslim Brotherhood’s (Ikhwanul Muslimeen) Asian version of violent extremism and the virulent ideology of Jamaat-i-Islami.

The genesis of the Islamic State can be traced backed to a fight between the Sufi community in Kathankudi on March 10, 2017. The protagonist was the Wahhabi leader Zahran Hashim and the antagonist was the Sufi leader His Holiness Ash-sheikh Abdur Rauf Misbahee, Bahjee. Wearing orange shirts and carrying swords, kris knives and poles, Zahran’s followers attacked Sufis at the Aliyar Junction. About a month before the incident, Zahran’s followers disrupted a conference against the Islamic State at the Hizbullah Hall in Kattankudy on February 3, 2017. Zahran’s National Thawheed Jamaat called for the desecration of Sufi shrines, death of Sufi leaders, and attacks on Sufis, albeit this was not endorsed by all Thawheed organizations. However, even after the Easter Sunday attacks, most Thawheed organizations continue to campaign against Sufism.

Government today needs a six-pronged strategy to meet the Islamic State-centric threat. First, there is a need to restructure the national security apparatus by appointing competent leaders, modernize Intelligence agencies, and create far reaching capabilities to fight Muslim radicalization. Second, it would be important to develop legislation to criminalize terrorist entities such as al Qaeda, Islamic State and like-minded groups, with a Harmony Act to criminalize hate speech and incitement to violence, and an online falsehoods and manipulation bill to fight fake news. Third, there is a need to implement a national education policy for children of all faiths and ethnicities to study together. Fourth, there is a need to regulate the religious space by institutionalizing harmony initiatives in mosques, madrasahs and Islamic associations to promote moderation, toleration and coexistence. Fifth, it is important develop cyber capabilities to counter ideologies and online extremism. Six, one needs to develop rehabilitation capabilities to deradicalize IS operatives and supporters and reintegration capabilities to support their transition back to mainstream living.

Government and the Muslim leaders should not underestimate the threat of exclusivism and extremism, the precursors to terrorism. With the Islamic State attacking the neighborhood, Sri Lanka should also assess the regional threat accurately and take appropriate action. There is no room for apathy, neglect or over reaction to threats. It is vital to develop immediate, mid and long term strategies to mitigate the continuing threat of the Islamic State to Sri Lanka and the region.

Building one Sri Lanka should be a national security priority. The key to mitigating the LTTE threat is to integrate Tamils to Sinhalese and Muslim communities. Similarly, to mitigate the Islamic State centric threat, three types of capabilities are needed.

First, a legal and policy based framework is needed to dismantle any group engaged in hate and incitement to violence by confiscating their assets and incarcerating their leaders and members. Without proscribing entities that spread hate and inciting violence – Bodu Bala Sena, Sihala Ravaya, Mahason balakaya, and like minded groups – the current wave of extremism and terrorism cannot he contained, isolated and eliminated. Otherwise, we will become like India, where every year there is a Muslim – non Muslim riot. To unite the communities, a strategy is needed to create a national education policy where Muslims and non Muslims school together. Multicultural schools are vital for building relationships and for keeping prejudice and suspicion under control.

Second, Sri Lankan Muslim terrorists came both from madrasahs and non Madrasah backgrounds. However, the leadership allows Madarasah education where they denigrated other religions. It is vital to introduce religious knowledge to all schools, especially madrasahs, without further delay. Madrasahs should not be banned but reformed to include secular subjects. In general, those who fail in secular education join madrasahs, then graduate and start to influence the Muslim community. The graduates are poorly educated and like Zahran have a narrow view of the world. To develop a broad understanding of the world, maths, science, philosophy, languages and critical thinking should be introduced. If any madrasah is unwilling to reform, it should be scrutinized and firm action taken.

Third, Sri Lanka should scrutinize all the religious doctrines introduced from abroad and Sri Lankans who study abroad in schools that are producing radicals. Sri Lankan education authorities should review all educational textbooks. Likewise foreign hate preachers should be blacklisted and their influence on Sri Lankans both online and offline should be closely monitored and action taken.

The Sufi leaders of Sri Lanka should take the lead to transform their dargahas into harmony centres. The spirit of the dargahas can be an example to other Muslim bodies, notably the All Ceylon Jamiyyathul Ulama, to create harmony centres, rooms, libraries, sermons, and exchanges to build amity between communities. Even after a year of the Easter Sunday attacks, most Muslim institutions have lacked the leadership to break the radicalization pipeline that continues to produce radicals. Historically, Kattankudy produced learned scholars and honest businessmen. With Kattankudy becoming a hub for the Wahhabi ideology and funding, it today looks like a Middle Eastern city. To prevent demonization of the Muslims of Kathankudi for the death and destruction unleashed by Zahran and his followers, enlightened Muslim leaders should transform Kattankudy into an abode of harmony. To restore the Sri Lankan Muslim heritage, His Holiness Ash-sheikh Abdur Rauf Misbahee, Bahjee “The Qur’an that rejects Wahhabism” should be disseminated widely both online and offline. The first step to securing Sri Lanka is to raise both the specialist understanding and public awareness of the threat posed by foreign ideologies and cultural practices. We are grateful to His Holiness Ash-sheikh Abdur Rauf Misbahee, Bahjee along with the chief Sufi institution, Alhaj Abdul Jawadh Aalim Waliyyullah Trust for producing a work to enlighten all Sri Lankans.

Dr. Rohan Gunaratna is Professor of Security Studies at the Nanyang Technology University in Singapore and co-author of Three Pillars Of Radicalization (Oxford University Press)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments