“மக்ரிப்” தொழுகையின் பின் ஓதுதல்.

October 28, 2019

வஹ்ஹாபிஸ வழிகேடு நமது இலங்கை நாட்டிற்கு தலை நீட்டுமுன் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் எந்த ஒரு கருத்து வேறுபாடுமின்றிச் செய்து வந்த நற்காரியங்களிற் பல வஹ்ஹாபிகளின் விஷம, பயங்கரப் பிரச்சாரத்தினால் கைவிடப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் கூறி ஆதாரங்களுடன் நிறுவ முற்பட்டால் அண்மையில் நாம் “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற பெயரில் வெளியிடவுள்ள 1600 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் போன்ற இன்னுமொரு நூல் அல்லது பல நூல்கள் எழுத வேண்டும். எனினும் அவற்றில் சில விடயங்களை மட்டும் தனித் தனித் தலைப்பில் மிகச்சுருக்கமாக எழுதுகிறோம்.

அவற்றில் ஒன்று “ஜமாஅத்” கூட்டாக “மக்ரிப்” தொழுகை முடிந்ததும் தொழுபவர்களில் எவரும் எழுந்து செல்லாமல் பின்வரும் ஓதலை பத்து தரம் ஓதி முடித்தபின் “இமாம்” தொழுகை நடத்தியவர் “துஆ” ஓத – பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஒரே குரலில் “ஆமீன்” சொல்வார்கள். இவ்வழக்கம் இலங்கை நாடெங்கும் பரவலாக இருந்து வந்த வழக்கமாகும்.

வஹ்ஹாபிஸ நச்சுப் பாம்பு இலங்கை நாட்டிற்குள் நுழைந்த பின் கூட்டு “துஆ”வும் நின்றது. மக்ரிப் தொழுகையின் பின் 10 தரம் ஓதப்பட்டு வந்த ஓதலும் நின்றது. இதோடு “முஸீபத்” என்ற துன்பமும் நாட்டு மக்களைத் தொட்டது.

கூட்டு “துஆ” தொடர்பாக “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற நூலில் எழுதியுள்ளோம். இத்தலைப்பில் “மக்ரிப்” தொழுகையின் பின் 10 தரம் ஓதப்பட்டு வருகின்ற ஓதல் தொடர்பாக மட்டும் எழுதுகிறோம்.

روينا في كتاب الترمذي، عن عمارة بن شبيب، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ‘ مَنْ قالَ: لا إِلهَ إلا الله وحده لا شَريكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ يُحْيِي ويُمِيتُ وَهُوَ على كُلّ شئ قَدِيرٌ عَشْرَ مَرَّاتٍ على أثَرِ المَغْرِبِ، بَعَثَ اللَّهُ تَعالى لَهُ مَسْلَحَةً يَتَكَفَّلُونَهِ مِنَ الشَّيْطانِ حَتَّى يُصْبحَ، وَكَتَبَ اللَّهُ لَهُ بِها عَشْرَ حَسَناتٍ مُوجِبات، وَمَحَا عَنْهُ عَشْرَ سَيِّئاتٍ مُوبِقاتٍ، وكانَتْ لَهُ بِعِدْلِ عَشْرِ رِقابٍ مُؤْمناتٍ ‘ (ترمذي – 3534 ، الأذكار للنّووي – 167 )

قال الترمذي: لا نعرفُ لعمارة بن شبيب سماعا من النبي صلى الله عليه وسلم.
قلت: وقد رواه النسائي في كتاب ‘ عمل اليوم والليلة ‘ من طريقين.
أحدهما: هكذا، والثاني عن عمارة عن رجل من الأنصار. (نسأي – 583 – 584 )
قال الحافظ أبو القاسم بن عساكر: هذا الثاني هو الصواب.
قلتُ: قوله: ‘ مَسلحة ‘ بفتح الميم وإسكان السين المهملة وفتح اللام وبالحاء المهملة: وهم الحرس. (الأذكار للنووي، ص – 167 )

“அல் அத்கார்” என்ற நூலில் இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தந்துள்ள விபரங்கள்.
“மக்ரிப்” தொழுதவுடன் யாராவது ஒருவன் (லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹ், லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, யுஹ்யீ வயுமீத், வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்) என்று 10 முறை சொன்னானாயின் அவனை “ஷெய்தான்” ஷாத்தானின் தீமையிலிருந்து பாதுகாப்பதற்காக பாதுகாவலர்களை அல்லாஹ் அவனுக்காக அனுப்புவான். அவனுக்காக பத்து நன்மைகள் எழுதுவான். அவனின் பத்து பாவங்களை அழித்துவிடுவான். பத்து விசுவாசிகளான அடிமைகளை உரிமையிட்ட நன்மைகளையும் அவனுக்கு வழங்குகிறான்) என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
(துர்முதீ – 3435, அல் அத்கார் – இமாம் நவவீ – 167, அறிவிப்பு – உமாறதுப்னு ஷைப்)

இந்த அறிவிப்பாளர் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டார்களா என்பது எமக்குத் தெரியாதென்று இமாம் துர்முதீ கூறியுள்ளார்கள்.

இமாம் துர்முதீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் இக் கூற்றை ஆதாரமாகக் கொண்டு இந்த நபீ மொழி “ழயீப்” பலம் குறைந்ததென்று சொல்ல முடியாது. ஏனெனில் இமாம் துர்முதீ அவர்கள் “உமாறதுப்னு ஷைப்” என்ற அறிவிப்பாளர் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்கவில்லை என்று திட்டமாகச் சொல்லாமல் தனக்குத் தெரியாதென்றே சொல்லியுள்ளார்கள். ஆகையால் இமாம் துர்முதீ அவர்களின் கூற்றை இரும்புத் துரும்பாக வஹ்ஹாபிகள் எண்ணிக் கொண்டு வாலாட்டவோ, வாயடிக்கவோ முடியாது.

இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்வதைப் பாருங்கள். இந்த நபீ மொழியை ஹதீதுக் கலை மேதைகளில் ஒருவரான இமாம் நஸாயீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அமலுல் யவ்மி வல்லைலதி” என்ற நூலில் இரண்டு வழியில் அறிவித்துள்ளார்கள். ஒன்று – மேற்கண்ட அறிவிப்பாளர்கள் “உமாறதுப்னு ஷைப்” கூறிய வழி. இரண்டு – “அன்ஸார்”களில் ஒருவர் “உமாறதுப்னு ஷைப்” என்பவருக்கு அறிவித்த வழி. (நஸாயீ – 583, 584)

இக்கருத்து பற்றி ஹதீதுக்கலை மேதை “அபுல் காஸிம் இப்னு அஸாகிர்” றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில் இரண்டாவதாகச் சொல்லப்பட்டதே சரியானதென்று கூறியுள்ளார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்காமல் அன்ஸார்களில் ஒருவர் மூலம் கேட்டார்கள் என்பதாகும்.

சுருக்கம் என்னவெனில் இந்த ஹதீது எந்த வகையிலும் “ழயீப்” பலம் குறைந்ததென்று கூற முடியாது. அவ்வாறு வைத்துக் கொண்டாற் கூட பலம் குறைந்த “ஹதீது” நபீ மொழியின் படி ஒரு மனிதன் அமல் செய்யலாம், செயல்படலாம் என்பதே இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் தெரிவாகும்.

(அல் அத்கார், இமாம் நவவீ, பக்கம் – 167)

ஒருவன் மக்ரிப் தொழுகையை “ஜமாஅத்” கூட்டாகத் தொழுதாலும், அல்லது தனியாகத் தொழுதாலும் தொழுகை முடிந்தவுடன் சற்றும் தாமதிக்காமல் மேற்கண்ட ஓதலை 10 தரம் ஓதுவானாயின் மேலே சொல்லப்பட்ட நன்மைகள் அவனுக்கு கிடைக்கும்.

இவ்வாறு ஓதும் வழக்கம் “வஹ்ஹாபிஸ” வழிகேடு இலங்கை நாட்டுக்கு வருமுன் இந் நாட்டிலுள்ள பட்டணம் முதல் பட்டிக்காடு வரை வாழ்ந்த மக்களிடம் இருந்து வந்தது. வஹ்ஹாபிஸம் வந்த பிறகு கூட்டு “துஆ”வும் நின்றுவிட்டது. மேற்கண்ட ஓதலை ஓதுவதும் நின்றுவிட்டது. வஹ்ஹாபிஸம் என்பது நல்லமல்களை நிறுத்துவதற்கும், “கப்ர்” சமாதிகளை உடைப்பதற்கும், முஸ்லிம்களிடம் மார்க்க ரீதியான கருத்து வேறுபாடுகளை தோற்றுவித்து அவர்களைப் பிளவுபடுத்தி அவர்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களை பலவீனர்களாக மாற்றுவதற்கும் யஹூதீகள் – யூதர்கள் கையாண்ட ஒரு நச்சு மருந்தேயாகும்.

காதிமுல் கவ்மி
மௌலவீ அல்ஹாஜ் ஏ அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
28.10.2019

You may also like

Leave a Comment