முரீதுகள் – சிஷ்யர்களுக்கான மாநாடு

October 14, 2016

அதிசங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (அதாலல்லாஹு உம்றஹு) அன்னவர்களிடம் “பைஅத்” ஞானதீட்சை – ஆன்மீக ஒப்பந்தம் செய்து கொண்ட “முரீதீன், முரீதாத்” ஆண்கள், பெண்களுக்கான மாநாடு 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை “மஃரிப்” தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி-5 பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில்  மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

இம்மாநாடு அல்ஜாமிஅதுர் றப்பானிய்யா அறபுக் கலாபீட விரிவுரையாளர் மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்களின் தலைமையில் மௌலவீ MS.அஹ்மத் ஸாஹ்ஜஹான் றப்பானீ அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பாகும்.

இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆன்மீகப் பேருரை இடம்பெற்று சுமார் 10:00 மணிக்கு இராச்சாப்பாடு வழங்கப்பட்டு “ஸலவாத்” உடன் மாநாடு நிறைவு பெறும்.

இம்மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் அறபு, தமிழ் மொழிகளில் அவ்லியாக்களைப் புகழ்ந்தும், அவர்களிடம் “வஸீலா” உதவி தேடியும் எழுதிய பாடல்கள் தொகுப்பு “ஆதாறுல் ஜன்னஹ்” – சுவர்க்கத்தின் சுவடுகள் என்ற நூலும், அப்பாடல்கள் அடங்கிய இறுவெட்டும் அன்பளிப்பாக வழங்கப்படும்.

இம்மாநாட்டிற்கு “பைஅத்” பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மட்டுமே இராச்சாப்பாடும் வழங்கப்படும்.

– அல்ஹம்துலில்லாஹ் –

நிர்வாகம்

காதிரிய்யா திருச்சபை

காத்தான்குடி.

You may also like

Leave a Comment