முஹர்றம் மாத மஜ்லிஸ் நிகழ்வும், இரு பெரு மகான்களின் கந்தூரியும் – 2018

August 23, 2018

மலர்ந்திருக்கும் இஸ்லாமியப் புது வருடமான முஹர்றம் ஹிஜ்ரி 1440 இனை சிறப்பிக்கும் முகமாகவும், இம்மாததத்தில் ஷஹீதான நபீமணி பேரர் இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களை நினைவு கூரும் நினைவு மஜ்லிஸும், பாசிப்பட்டணம் வாழும் மகானான அஷ்ஷெய்க் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், கோட்டைப்பட்டணத்தில் வாழும் அஷ்ஷெய்க் ராவுத்தர் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாகவும் கடந்த 18,19,20.09.2018 ஆகிய மூன்று தினங்கள் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான நினைவு தின மஜ்லிஸும், அருள்மிகு கந்தூரியும் மிகச்சிறப்பாக நடைபெற்றன.

ஆன்மீக நிகழ்வுகளாக மேற்கூறிய மகான்களின் பெயரிலான திருக்கொடியேற்றம், மவ்லிது ஹஸனைன், ஆஷூறா தின நிகழ்வு, மகான்கள் புகழ்பாடும் மவ்லி்த் மஜ்லிஸ், சங்கைக்குரிய உலமாஉகளின் சிறப்பு சொற்பொழிவுகள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

சிறப்பு நிகழ்வுகளாக அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ நாயகம் அன்னவர்கள் அறபு மொழியில் எழுதிய “அல் குலாஸதுல் மிஸ்பாஹிய்யஹ்” எனும் இறையில் “வஹ்ததுல் வுஜூத்” சம்பந்தமான நூல் முதலாம் நாளன்று இஷா தொழுகையின் பின்னால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், இறுதித் தினமான 20.09.2018 அன்று ஷஹீதே கர்பலா இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் திருமுடிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மஜ்லிஸை அலங்கரித்தது.

இறுதியாக துஆப்பிரார்த்தனை நடைபெற்று தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

You may also like

Leave a Comment