முஹர்றம் மாத மஜ்லிஸ் நிகழ்வும், இரு பெரு மகான்களின் கந்தூரியும் – 2016

October 12, 2016

மலர்ந்திருக்கும் இஸ்லாமியப் புது வருடமான முஹர்றம் ஹிஜ்ரி 1438 இனை சிறப்பிக்கும் முகமாகவும், இம்மாததத்தில் ஷஹீதான நபீமணி பேரர் இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களையும் நினைவு கூரும் நினைவு மஜ்லிஸும், பாசிப்பட்டணம் வாழும் மகானான அஷ்ஷெய்க் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், கோட்டைப்பட்டணத்தில் வாழும் அஷ்ஷெய்க் ராவுத்தர் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாகவும் கடந்த 09,10,11.10.2016 ஆகிய மூன்று தினங்கள் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான நினைவு தின மஜ்லிஸும், கந்தூரியும் மிகச்சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்வில் கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸ், திருக்கொடியேற்றம், மவ்லிது ஹஸனைன், ஆஷூறா தின நிகழ்வு, மகான்கள் புகழ்பாடும் மவ்லி்த் மஜ்லிஸ், சங்கைக்குரிய மௌலவீ MM.ஜுமான் றவ்ழீ அன்னவர்களின் பயான் போன்ற நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

இறுதியாக துஆப்பிரார்த்தனை நடைபெற்று தபர்றுக் விநியோகத்துடன் ஸலவாத் சொல்லி நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

dsc_0006-for-web dsc_0009-for-web dsc_0016-for-web dsc_0024-1-for-web dsc_0034-for-web dsc_0037-for-web dsc_0038-for-web dsc_0045-for-web dsc_0046-1-for-web dsc_0049-for-web dsc_0051-for-web dsc_0060-for-web dsc_0064-for-web dsc_0065-for-web dsc_0067-for-web dsc_0077-11-for-web dsc_0077-40-for-web dsc_0077-45-for-web dsc_0077-49-for-web dsc_0077-71-for-web dsc_0077-84-for-web dsc_0165-for-web dsc_0186-for-web dsc_0188-for-web dsc_0196-for-web dsc_0200-for-web dsc_0218-for-web dsc_0222-for-web

You may also like

Leave a Comment