றபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் – 2017 ஆரம்ப நிகழ்வுகள்

November 20, 2017

நபீகட்கரசர், பூமான் நபீகள் கோமான் எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக, காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி்ய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ் ஆகிய இடங்களிலும், காத்தான்குடி நெசவு நிலைய வீதியில் இயங்கி வரும் உஷ்ஷாகுல் ஹபீப் ஆன்மீகச் சங்கத்தின் தலைமையகத்திலும் 19.11.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கொடியேற்றத்துடன் றபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து 12 தினங்கள் பின்வரும் இடங்களில் மஜ்லிஸ் நிகழ்வுகள் நடைபெற்று அருள் மிகு கந்தூரியும் இறுத்தினத்தில் நடைபெறவிருக்கின்றன. இந்நிகழ்வுகளில் நிறை நபீ நேசர்கள் கலந்து சிறப்பித்து அண்ணலாரின் அருள் அன்பை பெற்றுக் கொள்ளுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

நேற்று ஆரம்பமான நிகழ்வுகளின் தொகுப்பு….

காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்

தீன் நகர் மன்பஉல் கைறாத் பள்ளிவாயல்

நூறாணிய்யஹ் மாவத்தை அல்மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ்

ஜன்னத் மாவத்தை அல்மத்றஸதுர் றஹ்மானிய்யஹ்

உஷ்ஷாகுல் ஹபீப் ஆன்மீகச் சங்கம்

 

 

You may also like

Leave a Comment