றபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸுக்கான பொதுக் கூட்டம்

November 18, 2016

இறையொளி எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனிதமிக்க றபீஉனில் அவ்வல் மாதத்தினை சிறப்பித்து வருடாவருடம் காத்தான்குடி-06 தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயலில் நடைபெற்று வரும் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வு இவ்வாண்டு 40வது வருடமாக மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வினை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காகவும், மௌலித் மஜ்லிஸுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் 18.11.2016 வெள்ளிக்கிழமை அன்று இஷா தொழுகையின் பின் மன்பஉல் கைறாத் பள்ளிவாயல் மஹல்லாவாசிகள் மற்றும் இறைநபீ நேசர்களுக்கான பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களும், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் முக்கியஸ்தர்களும், மன்பஉல் கைறாத் பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டு 30.11.2016 அன்று திருக்கொடியேற்றப்பட்டு 11.12.2016ம் திகதியன்று கந்தூரியயை நடாத்துவதாகவும் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
dsc_0008-for-web dsc_0015-for-web dsc_0017-for-web dsc_0023-for-web dsc_0025-for-web dsc_0038-for-web dsc_0043-2-for-web dsc_0054-for-web dsc_0070-for-web dsc_0072-for-web

You may also like

Leave a Comment