வஹ்ததுல் வுஜூத் கோட்பாடும், முல்லாக்களும்

August 3, 2018

ஆக்கம் – மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

கடந்த 1979ம் ஆண்டு தொடக்கம் நமது இலங்கை நாட்டில் வஹ்ததுல் வுஜூத் – இறையியல் பகிரங்கமாக, தெட்டத் தெளிவாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவது யாவரும் அறிந்த ஒன்றே. காத்தன்குடியில் ஆரம்பிக்கப்பட்ட கொள்கைப் பிரச்சாரம் இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவு உலகலாவிய ரீதியில் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகின்றது. 1979ம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த, நம் தாய்த்திரு நாட்டிற்கு வருகை தந்த ஷெய்குமார்கள் மற்றும் மார்க்க அறிஞர்களால் தமக்கு நெருங்கிய முரீதுகள், முஹிப்புகள் மத்தியில் போதிக்கப்பட்டு வந்த போதிலும் அதனை பகிரங்கமாக பேச வேண்டிய கட்டாயத்தின் அடிப்படையில் ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹு அன்னவர்கள் இன்று வரை சுமார் நாற்பது வருடங்களாக பல சவால்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பேசியும், எழுதியும் வருகின்றார்கள். இவர்களின் இப்புனித சேவையின் காரணத்தினால் ஒரு இஸ்லாமியன் கட்டாயம் அறிய வேண்டிய இறையியல் கோட்பாட்டை பல்லாயிரக்கணக்கான மக்கள் அறிந்து தரீகஹ் வழியில் செவ்வனே சென்று கொண்டிருக்கின்றார்கள்.

முதன் முதலில் மக்கள் எழிதில் விளங்கிக் கொள்ளும் பாணியில் தன்னுடைய அழகிய பேச்சாற்றல், செந்தமிழ் சொற்பிரயோகங்கள் மூலமும் பேசிய போது காத்தான்குடியிலேயே பூகம்பம் வெடித்தது. அன்று காத்தான்குடிக்கு இரண்டு ஷெய்குமார்கள் வருகை தருபவர்களாக இருந்தார்கள். ஒன்று காமில் வலீ அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள். இரண்டாமவர் அஷ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ காதிரீ காஹிரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள். குறித்த மார்க்கப் பிரச்சாரம் செய்யப்பட்ட போது இவ்விருவருமே நாட்டில் இல்லாத நேரம். காத்தான்குடியைப் பொறுத்த மட்டில் முஸ்லிம்கள் தனித்து வாழும் ஒரு ஊர். அன்று வஹ்ஹாபிஸ் வழிகேடு மருந்துக்கும் இல்லாமல் இருந்தது. அனைத்து மக்களுமே ஸுன்னத் வல் ஜமாஅத், தரீகஹ் வழியில் செல்பவர்களாக காணப்பட்ட காரணத்தினால் குறித்த இரு ஷெய்குமார்களும் வருகை தந்த பின் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் பேசிய இறையியல் பற்றி அவ்விருவரிடம் பைஅத் செய்த மக்கள் அவரவர் ஷெய்கிடத்தில் கேட்டு தெளிவு பெற்றார்கள். குறித்த இரண்டு ஷெய்குமார்களும் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் கூறிய தத்துவம் இஸ்லாமிய தத்துவமே! என்று மக்களை அமைதிப்படுத்தினர்.

குறித்த சம்பவத்தை அடுத்து முதலில் இறையடி சேர்ந்தவர்கள் ஷெய்குனா அப்துல் காதிர் ஸூபீ ஹழ்றத் அவர்களாவர். அவர்களின் காலத்தின் பின் பொறாமை என்று கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட முல்லாக்களில் சிலர் ஷெய்குனா ஸூபீ ஹழ்றத் அன்னவர்கள், ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அவர்கள் பெசிய இறையியலை ஏற்கவில்லை. ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் ஸூபீ ஹழ்றத் அன்னவர்களுக்கு மாறு செய்துவிட்டார்கள் என்றெல்லாம் தமது விஷம பிரச்சாரத்தை முன்னெடுக்க ஆரம்பித்தார்கள். இது அவர்களுக்கு மட்டும் உள்ள ஒன்றல்ல. எம்பெருமான் றஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவரகள் தொடக்கம் அவர்களுக்கு முன் வாழ்ந்த நபீ மார்கள் அதே போல் அவர்களுக்குப் பின் வந்த நாதாக்கள் வரை அனைவரினது காலத்தின் பின்னும் தோன்றக் கூடியவர்கள் அவர்களுக்கு மாற்றமாக, மனோ இச்சையின் அடிப்படையில் வாழ்ந்துள்ளர்கள் என்பது வரலாறு. இதனாலேயே பெருமான் ஸல்லல்லாஹு அவைஹி வஸல்லம் அன்னவர்கள்
خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَفْشُو الكَذِبُ
”மனிதர்களில் சிறந்தவர்கள் எனது நூற்றாண்டில் வாழ்பவர்கள். பின் அதையடுத்தவர்கள், பின் அதையடுத்தவர்கள். பின்பு பொய் பரவும்” என்று நவின்றுள்ளார்கள். அவ்வாறு பொய் பரவக்கூடிய நேரத்தில் மனித குலத்தை நேர்வழிப்படுத்துவதற்காக இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்குப் பிறகு ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒரு “முஜத்தித்” – மார்க்கத்தை புதுப்பிப்பவர் தோன்றுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்து சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு ஷெய்குனா அஸ் ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் இறையடி சேர்ந்தார்கள். அது வரைக்கும் தங்கள் வாப்பா ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் கருத்தை சரிகண்டமையால் எத்தனையோ சொல்லொணா துயரங்களை அனுபவித்தும் கூட அணுவளவும் மாற்றமின்றி, தன்னுடன் ஆன்மீகத்தை எதிர்பார்த்து பழகக் கூடியவர்களுக்கு ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களிடம் இறையியலைக் கற்றுக் கொள்ளுமாறு அறிவுருத்தியே வந்துள்ளார்கள். ஆனால் அவர்களின் முரீதுகளில் சிலர் தங்களின் குரு நாதர் தங்கள் வாப்பா அன்னவர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களுடன் எவவாறு நடந்து கொண்டார்கள் என்பதை கண்ணால் கண்டும் கூட நேற்று முளைத்த சிறார்களின் சொல் கேட்டு இன்று மாறாக மனோ இச்சைக்கு வழிப்பட்டே நடக்கின்றார்கள். இது மனித குலத்தின் பண்பு. இதை மாற்ற முடியாது. ஒரு மனிதனின் விதி இவ்வாறுதான் விளையாடும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

இதனடிப்படையில் அன்மைக்காலமாக மௌலவீ பத்றுத்தீன் என்பவர் வஹ்ததுல் வுஜூத் – இறையியலை கால் பந்தென்றெண்ணி தான் நினைக்கின்ற புறத்தில் அடித்து வருகின்றார். இவரைப்பற்றி, இவர் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இலங்கை நாட்டில் வாழ்கின்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள், பொது மக்கள் மட்டுமன்றி வஹ்ஹாபிகள் கூட நன்கறிவர். ஸூபிய்யாக்களின் கொள்கை பற்றி பேசவோ, எழுதவோ எவ்வித அருகதையுமற்ற இவர் இன்று தனது பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் தனது அறியாமையை வெளிப்படுத்தி வருகின்றார். இவரது நோக்கம் தான் பெற்ற அல்லது பெற்றதாக கூறும் கிலாபத் – கலீபா பதவியை செயற்படுத்தி தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்ப்பதாகும். மக்கள் மிகவும் நிதானமாக உள்ளார்கள். தான் ஏறுவது முருங்கை மரம் என்று புரியாமல் மௌலவீ ஸாஹிப் ஏறிக் கொண்டிருக்கின்றார். விழுவதற்கு வெகு காலம் எடுக்காது. இன்ஷா அல்லாஹ்.

எனது நோக்கம் தனிநபர் பற்றி பேசி காலத்தை வீணடிப்பதல்ல. மாறாக இவர் கூறும் விதண்டாவாதங்களுக்கு பதிலளிப்பதுமல்ல. ஏனெனில்

البليد لا يفيده التطويل، ولو تليت عليه التوراة والإنجيل
மடையன் (மட்டி மடையன்) என்பவனுக்கு தௌறாத் வேதத்தையும், இன்ஜீல் வேதத்தையும் எடுத்தோதினாலும் அவனுக்குப் பயனளிக்காது. இதில் எங்கே புர்கான் வேதம் பயனளிக்கும்? இவருடைய விஷமப் பிரச்சாரத்தின் சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தரீகஹ் வழி செல்லும் உலமாஉகள், பொது மக்களுக்கு ஒரு தெளிவை வழங்குவதேயாகும்.

ஸூபிய்யாக்கள் வஹ்ததுல் வுஜூத் என்பதைக் கொண்டு என்ன நாடுகின்றார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.

ومعنى وحدة الوجود عند العارفين القائلين بها إنّ واجب الوجود واحد، أي ذات الله تعالى واحدة لا كثرة فيها ولا تعدّد، وإنّ وجوده هو الوجود الحقيقيّ فلا وجود سوى وجوده، وإنّ وجود المخلوقات كلِّها وجودٌ إعتباريٌّ وإضافيٌّ، لا وجودٌ حقيقيّ وإن الوجود الحقيقيّ وجودُه تعالى فقط لا مَحالة، وإنّ ذوات الممكناتِ أي الكائنات كلِّها إعتباريّةٌ وإضافيّةٌ لا حقيقيّةٌ، وإنّ الذات الحقيقيّة هو ذاتُه تعالى فقط كما أنّ الوجود وجودُه تعالى، وإنّ وجود المخلوقات كلِّها مُفاضٌ من وجوده تعالى لا من وجود غيره، لأنّ وجود غيره عدمٌ محضٌ حقيقةً، وإنّ الوجود وإن كان واحدا كما ذكرت بلا تعدُّد ولا تكثُّر فشُئوناتُ ذلك الوجود كثيرةٌ لاتُعدُّ ولا تُحصى، وإنّ الشّؤوناتِ الإلهيّةَ تجلّياتُهُ عزّ وجلّ، ولا حَصْرَ ولا انتهاءَ لِتَجَلِّيه تعالى وهو فى كلّ آن فى التجلّي، كما قال فى كلامه القديم كلَّ يوم هو فى شأن،والشأن جمعُه شئون، والشئون الإلهيّة تجلّياته تعالى فى كلّ حين من الأحيان وفى كلّ ذرّة من ذرّات الكائنات، كما أراد وكما شاء، وإن الشئوناتِ الإلهيّة أي تجلّياتِ الحقّ سبحانه وتعالى عينُ ذاتِه العليّة المقدّسة لا غيرُها لِعَدَمِ الغيريّة، ولو ظهرت التجلّيات فى أي مظهر من المظاهر الخلقيّة من الإنس والجنّ والمحسُوس والمعقول بخلاف المحجوبين القائلين بغيريّة تجلّياته تعالى لذاته المقدّسة،

ஆரிபீன்கள் – ஞானவான்களிடத்தில், “வஹ்ததுல் வுஜூத்” பேசக் கூடியவர்களிடத்தில் அதன் கருத்தாகின்றது “மெய்ப் பொருள் ஒன்றே” என்பதாகும். அதாவது அல்லாஹ்வின் “தாத்” உள்ளமை ஒன்று. இருமை கிடையாது. அதுவே எதார்த்தமான “வுஜூத்” உள்ளமையாகும். அவனுடைய “வுஜூத்” உள்ளமை தவிர வேறில்லை. படைப்புக்களின் “வுஜூத்” உள்ளமையாகின்றது எதார்த்தமானதல்ல. அது “இஃதிபாரீ” பொய்யானது. உண்மையான “வுஜூத்” உள்ளமை சந்தேகமின்றி அல்லாஹ்வுடையது மாத்திரமே! படைப்புக்களின் உள்ளமையாகின்றது பொய்யானது. உண்மையானதல்ல. படைப்புக்களின் “வுஜூத்” ஆகின்றது அது அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமையிலிருந்து இரவலாகப் பெறப்பட்டதேயன்றி வேறொன்றிலிருந்தல்ல. ஏனெனில் அவனுடைய உள்ளமையல்லாதது சுத்தமான இல்லாமை (அதமுன்) ஆகும். அல்லாஹ்வுடைய “வுஜூத்” உள்ளமை மேலே கூறப்பட்டது போன்று ஒன்றாக இருந்தாலும் அதன் விடயங்கள் அதிகம். அதற்கு மட்டில்லை. இங்கு விடயங்கள் எனப்படுவது அதன் “தஜல்லியாத்” வெளிப்பாடுகள் ஆகும். அவனுடைய வெளிப்பாட்டுக்கு மட்டில்லை, முடிவில்லை. அவன் ஒவ்வொரு நொடியிலும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றான். “ஒவ்வொரு விநாடியும் அவன் ஒவ்வொரு வேலையிலேயே (ஷஃன்) இருக்கின்றான்” என்று திருமறையில் கூறியிருப்பது போன்று. “ஷஃன்” என்பதன் பன்மைச் சொல் “ஷுஊன்” என்பதாகும். இறைவனுடைய “ஷுஊன்” என்பது அவன் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு அசைவும் தான் நாடிய பிரகாரம் “தஜல்லீ” வெளியாகிக் கொண்டு இருப்பதாகும். இறை வெளிப்பாடென்பது அவனுடைய பரிசுத்த “தாத்” உள்ளமையில் நின்றுமுள்ளதே தவிர, வேறொன்றின் வெளிப்பாடல்ல. ஏனெனில் வேறொரு வஸ்த்து இல்லவே இல்லை. அது மனு, ஜின், புலன்களால் உணரப்படக் கூடிய, புத்தியால் அறியப்படக் கூடிய எந்தப் படைப்பாக, வெளிப்பாடாக இருந்தாலும் அவைகள் அவனுக்கு வேறானவைதான் என்று திரையிடப்பட்ட மூதேவிகள் கூறுவது போலன்றி அவனுடைய பரிசுத்த “தாத்” உள்ளமையின் வெளிப்பாடே!

قال العلّامة الغزويني رضي الله عنه فى شرح عقائد النسفي أنّ قول المعتزلة وجمهور البخاريّة أنّ الحقّ تعالى بكلّ مكانٍ بعلمه وقدرته وتدبيره دون ذاته باطلٌ، نقله الشيخ عبد الوهّاب الشعراني رحمه الله فى كتابه اليواقيت والجواهر فى المبحث الثامن، ما احسن قول الغزويني رحمه الله ، وبأيّ حكم يفتي العلماء المنكرون لوحدة الوجود للإمام الغزويني،

அல்லாமஹ் கஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “அகாயிதுந் நஸபீ”யின் “ஷர்ஹு” விரிவுரையில் “முஃதஸிலாக்களினதும், புகாரிய்யாவின் பெரும்பாலனோரினதும், அல்லாஹு தஆலா எல்லா இடங்களிலும் தனது இல்முன் – அறிவு கொண்டும், குத்றத் – சக்தி கொண்டுமே இருக்கின்றான் என்ற பேச்சாகின்றது “பாதில்” தவறானதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதனை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் தன்னுடைய “அல் யவாகீத் வல் ஜவாஹிர்” என்ற நூல் 8வது பாடத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் கஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளார்கள். “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை மறுப்பவர்கள் எந்த சட்டத்தை வைத்து இவர்களுக்கு “பத்வா” தீர்ப்பு வழங்குவார்கள்?

قال شيخ الإسلام ابن اللَّبَّان رحمه الله فى قوله تعالى ونحن أقرب إليه منكم ولكن لا تبصـرون، أنّ فى هذه ا|لآية دليلا على أقربيّته تعالى من عبده قربا حقيقيّا كمايليق بذاته لِتعالِيه عن المكان، إذ لو كان المراد بِقُربِه تعالى من عبده قُربَه بالعلم أو بالقدرة أو بالتدبير مثلا لَقَال ولكن لا تعلمون ونحوه، فلمّا قال ولكن لا تبصـرون دَلَّ على أنّ المراد به القربُ الحقيقيُّ المُدركُ بالبصـر، لو كشف الله عن بصـرنا، فإنّ من المعلوم أنّ البصرَ لا تعلُّقَ لإدراكه بالصفات المعنويّة، وإنّما يتعلّق بالحقائق المرئِيَّة،

ஷெய்குல் இஸ்லாம் இப்னுல் லப்பான் றஹிமஹுல்லாஹ் “நாங்கள் அந்த மனிதனுக்கு (நோயாளிக்கு) உங்களை விட மிக நெருக்கமாக உள்ளோம். ஆனால் நீங்கள்தான் பார்க்காமல் இருக்கின்றீர்கள்” என்ற திருமறை வசனத்தில் அல்லாஹு தஆலா தன்னுடைய அடியானுக்கு எதார்த்தமாகவே நெருக்கமாக இருக்கின்றான் , இடத்தை விட்டும் துய்யவனாகையால் தன்னுடைய “தாத்” கொண்டு நெருங்கி இருக்கின்றான் என்பதற்கு தெளிவான ஆதாரம் உள்ளதாகக் கூறிக் காட்டுகின்றார்கள். உண்மையிலேயே அவன் தன்னுடைய அடியானுக்கு “குத்றத்” – சக்தி கொண்டோ, அல்லது “இல்முன்” – அறிவு கொண்டோ நெருங்கியிருந்தால் “வலாகின் லா துப்ஸிறூன்” ஆனால் நீங்கள்தான் பார்க்காமல் இருக்கின்றீர்கள் என்பதற்குப் பதிலாக “வலாகின் லா தஃலமூன்” ஆனால் நீங்கள்தான் அறியாமல் இருக்கின்றீர்கள் என்றோ அல்லது அது போன்ற ஒரு வசனம் கொண்டோ சொல்லியிருப்பான். அவன் “ஆனால் நீங்கள்தான் பார்க்காமல் இருக்கின்றீர்கள்” என்று சொன்னது கொண்டு பார்வையால் எத்திக் கொள்ளக் கூடிய எதார்த்தமான நெருக்கமாகவே உள்ளான் என்பது தெளிவாகின்றது. அல்லாஹ் எமது பார்வையை கூர்மையாக்கினால் (அகக்கண்ணைத் திறந்தால்) அவனையே காண்போம். பார்வை என்பது கருத்து ரீதியான தன்மைகளை அது எத்திக் கொள்ளாது. மாறாக பார்க்கக் கூடிய எதார்த்தங்களையே அது காணும்.

وكذلك القول فى قوله تعالى ونحن أقرب إليه من حبل الوريد، هو يدلّ أيضا على ما قلناه، لأنّ أَفْعَلَ ممّا يدلّ على الإشتراك فى اسم القرب وإن اختلف الكيفُ، ولا اشتراك بين قُرب الصفات وقُرب حبلِ الوريد، لأنّ قُرب الصفات معنويٌّ وقُربَ حبلِ الوريد حِسّيٌّ، ففى نسبة أقربيّته تعالى إلى الإنسان من حبل الوريد الّذي هو حقيقيٌّ دليلٌ على أنّ قربَه تعالى حقيقيٌّ أي بالذات اللازم لها الصفاتُ، نقله الشيخ عبد الوهّاب الشعراني رحمه الله فى كتابه اليواقيت والجواهر فى المبحث الثامن، أيّها المنكرون! تفكّروا وتدبّروا واقلعوا شجرة التعصّب والعناد من قلوبكم، وشجرة الحسد من ظروفكم،

அதே போன்றே “நாங்கள் அவனுக்கு (மனிதனுக்கு) பிடறி நரம்பைவிட மிக நெருங்கியுள்ளோம்” என்ற வசமும் ஆகும். பிடறி நரம்பு நெருங்கியிருப்பதற்கும், ஸிபாத் – தன்மைகள் நெருங்கியிருப்பதற்கும் தொடர்பில்லை. ஏனெனில் ஸிபாத் – தன்மைகள் நெருங்கியிருப்பதென்பது “மஃனவிய்யத்” – கருத்து ரீதியானது. பிடறி நரம்பு நெருங்கியிருப்பதென்பது புலனைச் சார்ந்தது. அல்லாஹு தஆலா மனிதனுக்கு பிடறி நரம்பை விட நெருங்கியிருப்பதென்பது அவன் தன்னுடைய “தாத்” – உள்ளமை கொண்டு (ஸிபாத் – தன்மைகளை உடைய) நெருங்கியிருக்கின்றான் என்பதற்கான ஆதாரமாகும். இதனையும் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் தன்னுடைய “அல் யவாகீத் வல் ஜவாஹிர்” என்ற நூலின் 8வது பாடத்திலேயே பதிந்துள்ளார்கள். “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுப்பவர்களே! சிந்தியுங்கள்! உங்களின் உள்ளத்திலிருந்து மனமுரண்டு என்ற மரத்தை வேறோடு கழட்டி விடுங்கள்! அதேபோல் பொறாமை என்ற மரத்தையும் வேறோடு பிடுங்கி விடுங்கள்.

قال الشيخ محمد بن فضل الله فى كتابه ‘ التحفة المرسلة ‘إعلموا أنّ ذلك الوجود ليس له شكل ولا حدّ ولا حصـر، يعني أنّ ذلك الوجود ليس له حدّ فى ذاته ولا فى صفاته الحقيقية كلّها، لأنّ ذلك الوجود كما أنّه من حيث هُوَ هُوَ أي من غير إعتبار شيئٍ مَّا معه من صفة ولا اسم مطلقٌ غير محدود، كذلك صفاته الحقيقية منبسطة أي غير مخصوصة بِمَحَلٍّ خاصٍّ من الذات غير محدودة، ومع وجود هذا التنزيه المذكور فقد ظهر بنفسه وتجلّى بأسمائه وصفاته بالشكل أي بالأثر والحد، يعني أنّ ذلك الوجود ظهر وتجلّى فى الخارج بصور المخلوقات على نفسه وعلى غيره مدركا لنفسه ولغيره من المخلوقات المدركة كالثقلين والملائكة، ولم يتغيّر بسبب هذا الظهور فى المظاهر الخلقيّة ممّا كان هو عليه منه عدم الشكل وعدم الحد، إذ ظهور أثره كذلك لا يلزم منه شيئ من المذكورات المنفيّة، بل هو الآن إلى الأبد، كما كان عليه فى الأزل، هذا هو المراد بقول الشيخ محي الدين ابن عربي رضي الله عنه،

فإن قلت بالتنزيه كنت مقيّدا – وإن قلت بالتشبيه كنت محدّدا
فإن قلت بالأمرين كنت مسدّدا – وكنت إماما فى المعارف سيّدا
فمن قال بالإشفاع قد كان مشركا – ومن قال بالإفراد كان موحدا

“அத் துஹ்பதுல் முர்ஸலஹ்” என்று நூலில் இமாம் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அல் ஹிந்தீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் வுஜூத் – உள்ளமைக்கு தோற்றமோ, மட்டுப்பாடோ இல்லை. அதாவது அந்த உள்ளமை தன்னுடைய தாத் – சுய இருப்பிலோ, தன்மைகளிலோ எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஏனெனில் அந்த உள்ளமையாகின்றது அது எப்படியோ அப்படியேதான். அதாவது அதனுடன் மட்டுப்பாடற்ற எந்த ஒரு தன்மையோ, பெயரோ கொண்ட வஸ்த்துவும் கிடையாது. அதே போன்றுதான் அவனுடை ஸிபாத் – தன்மைகளுமாகும். அதாவது அவனுடைய தாத் – சுய இருப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தை கொண்டதோ அல்லது கட்டுப்பாடுடையதோ அல்ல. மேலே சொல்லப்பட்ட பரிசுத்த தன்மையில் இருப்பதுடன் அவனே தன்னுடைய அஸ்மா – திரு நாமங்கள், ஸிபாத் – தன்மைகள் கொண்டு மட்டுப்பாடுடன் “தஜல்லீ” வெளியாகியுள்ளான். அதாவது அவனுடைய உள்ளமையே படைப்புக்களின் உருவங்களில் தன்னாலும், படைப்பாலும் (மனு, ஜின், மலக்குகள்) பார்க்கும்படியானதாக வெளியாகியுள்ளான். இவ்வாறு படைப்புக்களாக வெளியாகியிருப்பதால் அவற்றை வெளிப்படுத்த முன் மட்டின்றி, உருவின்றி எவ்வாறு துய்யவனாக இருந்தானோ அதை விட்டும் மாறவில்லை. அவ்வாறு வெளியானதினால் மேலே கூறப்பட்ட அவனுக்கிருந்திராத மட்டுப்பாடுகள் அவசியமில்லை. ஆனால் அவன் இந்தப் படைப்புக் களாக “தஜல்லீ” வெளியாக முன் எவ்வாறிருந்தானோ அவ்வாறே இப்போதும், எப்போதும் இருப்பான். இதுவே அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் பின்வரும் பாடலின் கருத்தாகும்.

“நீ தன்ஸீஹை மட்டும் சொன்னால் நீ மட்டுப்படுத்தினவனாக ஆகிவிட்டாய்”
“நீ தஷ்பீஹை மட்டும் சொன்னாலும் நீ மட்டுப்படுத்தினவனாக ஆகிவிட்டாய்”
“இரண்டையும் சொன்னால் சரியாகச் செர்னனவனாய் ஆகிவிட்டாய்”
“மேலும் ஞானக்கலையில் தலைவனாகவும் ஆகிவிட்டாய்”
“இரட்டை கொண்டு எவன் பேசுகின்றானோ அவன் முஷ்ரிக் ஆகிவிட்டான்”
“ஒற்றை கொண்டு எவன் பேசுகின்றானோ அவன் முவஹ்ஹித் ஆகிவிட்டான்”
“நீ தஷ்பீஹ் கொண்டு மட்டும் பேசுபவனாக இருந்தால் உன்னை எச்சரிக்கின்றேன்”
“நீ தன்ஸீஹ் மட்டும் கொண்டு பேசுபவனாக இருந்தாலும் உன்னையும் எச்சரிக்கின்றேன்”

நிச்சயமாக அல்லாஹ்வின் வுஜூத் – உள்ளமையாகின்றது அது ஒன்றேதான். அதிலே அறவே எண்ணிக்கை கிடையாது. அதன் உடைகள் – உருவங்கள் கொண்டு அந்த உள்ளமை தன்னை வேற்றுமை உடையோரின் பார்வையை விட்டும் மறைத்துக் கொண்டது. அவைகளில் (அந்த உருவங்களில்) இரகசியங்கள் உடையோருக்கு வெளியாகி உள்ளான். அந்த உருவங்கள் – உடைகள் அவற்றின் இனம், வகை, அமைப்பு, மாறுபடுவது கொண்டு மாறுபட்டதாகும். எண்ணிக்கை அவசியமானவை கொண்டு எண்ணிக்கையானதாகும். அங்கே எண்ணிக்கை என்பது வெளிப்பாடுகளைப் பொறுத்ததேயன்றி, வெளியானவனை (அல்லாஹ்வை) பொறுத்ததல்ல. ஒரு கவிஞரின் வார்த்தை போன்று.

وما الوجه إلّا واحد غير أنّه – إذا أنت عدّدت المرايا تعددا
அதாவது “முகம் ஒன்றுதான். ஆனால் நீ கண்ணாடிகளை

அதிகப்படுத்தினால் அதன் எண்ணிக்கை அதிகமாகும்”

மெய்ப் பொருளாகிய அல்லாஹ் வெளியாகிய படைப்புக்கள் என்ற உடைகள் – உருவங்கள் உயிரினங்கள், மனிதன், சடமுள்ளவை, சடமற்றவை என்று பலவாயினும் அவைகளின் மூலப் பொருளாகிய அல்லாஹ்வின் வுஜூத் – உள்ளமை “வாஹிதிய்யத்” என்ற மர்தபா – அந்தஸ்த்தில் ஒன்றுதான்.

மேலே எழுதிக்காட்டிய விளக்கங்கள் சுயமாக ஏழதப்பட்டவை அல்ல. ஸூபிய்யாக்களின் நூல்களிலிருந்து பெறப்பட்டவையே. மௌலவீ பத்றுத்தீன் தான் தொடராக எழுதி வருகின்ற கட்டுரையில் இலங்கை நாட்டைப் பொறுத்து இறைவனுக்கு உருவம் கற்பித்த முதல் நபர் ஷெய்குனா மிஸ்பாஹீதான் என்று எழுதியிருக்கின்றார். மேலே சுட்டிக் காட்டிய அத்துஹ்பதுல் முர்ஸலஹ்எனும் நூலில் இமாம் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அல் ஹிந்தீ அவர்கள் இறைவனின் உருவம் பற்றி தெளிவாகக் கூறியுள்ளார்கள். இதே கருத்தையே ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களும் கூறினார்கள். இன்றும் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். சிறு பிள்ளைத் தனமாக தனது அறியாமையை வெளிப்படுத்தும் முல்லாக்களை எண்ணி வருந்துகின்றோம்.

வஹ்ஹாபிகள் கூறும் உருவமும், ஸூபிய்யாக்கள் கூறும் உருவமும் என்ற விளக்கம் பின்னால் வரும் இன்ஷா அல்லாஹ்.

நான் மேலே கடந்த தொடரில் எழுதிக்காட்டிய வஹ்ததுல் வுஜூத் என்பதை ஓரளவேனும் உண்மையை அறிய வேண்டும் என்ற ஆவலுடைய, நஸீப் உள்ளவர்கள் புரிந்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். மௌலவீ பத்றுத்தீன் ஸாஹிப் போன்ற மன முரண்டு பிடித்தவர்கள் நிச்சயம் புரிந்திருக்கமாட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டட்டும்.

ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹூ அன்னவர்கள் போதித்த, போதித்துக் கொண்டிருக்கின்ற வஹ்ததுல் வுஜூத் அவர்கள் தான் சுயமாக ஆராய்ந்து சொல்லக் கூடிய ஒன்றல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தான் பேசுகின்ற, எழுதுகின்ற கருத்துக்கள் இமாம்கள் அதாவது ஸூபிஸ ஞானிகளின் தஸவ்வுப் கலையோடு சம்பந்தப்பட்ட, மற்றும் இல்ஹாம் என்ற அறிவு வழங்கப்பட்ட மேதைகளின் கருத்துக்களிலிருந்து பெறப்பட்ட சாரம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வறிவானது ஒரு ஞான குருவிடத்தில் கால்மடித்திருந்து பெறப்பட வேண்டியதேயாகும். “முனாழறஹ்” வாதப் பிரதிவாதம் செய்து அறிய வேண்டிய ஒன்றல்ல. ஏனெனில் இது உள்ளத்தோடு சம்பந்தப்பட்ட மற்றும் “தவ்க்” என்ற அனுபவத்தோடும் சம்பந்தப்பட்டதுமாகும். காலத்தின் கோலம் வாதம் என்ற அடிப்படையிலன்றி மாற்றுக் கருத்துக்களுக்கு பதிலளித்து மக்களை வழிகேட்டிலிருந்து பாதுகாக்க வேண்டிய காலமாயிற்று.

அடுத்து இன்னுமொரு கருத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அறபுக் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும் “அகீதஹ்”வுடைய நூல்களில் உள்ள சில கருத்துக்கள் தஸவ்வுப், இறையியல் பேசுகின்றவர்களின் சில கருத்துக்களுக்கு முரணாக தெரியும். ஏனெனில் முதகல்லிமீன்கள் அனுபவம் இன்றி அறிவால் கொள்கையை பேசுபவர்கள். மாறாக ஸூபிய்யாக்கள் எனப்படுவோர் அனுபவ ரீதியாக பேசக் கூடியவர்கள். அது அவர்களின் பேச்சல்ல. அல்லாஹ்வின் பேச்சேதான். அல்லாஹ் வசனம் சொல்ல இவர்கள் எழுதியவைகள். உதாரணமாக முஸ்தஹீலான – அசாத்தியமானவைகள் கொண்டு இறை சக்தி கொழுகமாட்டாது என்று முதகல்லிமீன்கள் பேசுவார்கள். ஆனால் ஞான ஊற்றெடுத்த உள்ளம் வழங்கப்பட்டவர்கள் அதற்கு மாறாக பேசுவார்கள். உதாரணமாக பின்வரும் ஹதீதை எடுத்துக் கொள்ளலாம்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ العَاصِ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهِ كِتَابَانِ، فَقَالَ: أَتَدْرُونَ مَا هَذَانِ الكِتَابَانِ؟ فَقُلْنَا: لاَ يَا رَسُولَ اللهِ إِلاَّ أَنْ تُخْبِرَنَا، فَقَالَ لِلَّذِي فِي يَدِهِ اليُمْنَى: هَذَا كِتَابٌ مِنْ رَبِّ العَالَمِينَ فِيهِ أَسْمَاءُ أَهْلِ الجَنَّةِ وَأَسْمَاءُ آبَائِهِمْ وَقَبَائِلِهِمْ، ثُمَّ أُجْمِلَ عَلَى آخِرِهِمْ فَلاَ يُزَادُ فِيهِمْ وَلاَ يُنْقَصُ مِنْهُمْ أَبَدًا، ثُمَّ قَالَ لِلَّذِي فِي شِمَالِهِ: هَذَا كِتَابٌ مِنْ رَبِّ العَالَمِينَ فِيهِ أَسْمَاءُ أَهْلِ النَّارِ وَأَسْمَاءُ آبَائِهِمْ وَقَبَائِلِهِمْ، ثُمَّ أُجْمِلَ عَلَى آخِرِهِمْ فَلاَ يُزَادُ فِيهِمْ وَلاَ يُنْقَصُ مِنْهُمْ أَبَدًا، فَقَالَ أَصْحَابُهُ: فَفِيمَ العَمَلُ يَا رَسُولَ اللهِ إِنْ كَانَ أَمْرٌ قَدْ فُرِغَ مِنْهُ؟ فَقَالَ: سَدِّدُوا وَقَارِبُوا، فَإِنَّ صَاحِبَ الجَنَّةِ يُخْتَمُ لَهُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ وَإِنْ عَمِلَ أَيَّ عَمَلٍ، وَإِنَّ صَاحِبَ النَّارِ يُخْتَمُ لَهُ بِعَمَلِ أَهْلِ النَّارِ وَإِنْ عَمِلَ أَيَّ عَمَلٍ، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيْهِ فَنَبَذَهُمَا، ثُمَّ قَالَ: فَرَغَ رَبُّكُمْ مِنَ العِبَادِ فَرِيقٌ فِي الجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ.

ஹதீதின் சுருக்கம்: ஒரு தடவை நபீ பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஸஹாபாக்கள் முன் இரண்டு புத்தகங்களுடன் தோன்றி இவ்விரு புத்தகங்களும் அல்லாஹ்விடமிருந்து வந்தவை.தனது வலரக்கரத்திலுள்ளதைப் பார்த்து இதிலே சுவனவாதிகள் அனைவரினது பெயர்களும், அவர்கள் தந்தைமார்களின் பெயர்களும், அவர்களின் கோத்திரப் பெயர்களும் உள்ளன. தனது இடது கையிலுள்ள புத்தகத்தை காட்டி இதில் நரகவாதிகள் அனைவரினது பெயர்களும், அவர்களின் தந்தைமார்களின் பெயர்களும், அவர்களின் கோத்திரப் பெயர்களும் உள்ளன.பின்பு அதை எறிந்து விட்டார்கள்.

இங்கு நாம் சிந்திக்க வேண்டிது என்னவெனில் ஒரு மனிதன் தனது கையால் தூக்கக் கூடிய அளவு கொண்ட ஒரு புத்தகத்தில் சுவன வாதிகள் அனைவரினது பெயர்களையும் எழுத முடியுமா? அதே போல் நரக வாதிகள் அனைவரினது பெயர்களையும் எழுத முடியுமா? பெருமானார் பொய் சொல்ல மாட்டார்கள் என்பது திண்ணம். தனது மனோ இச்சசையின் படியும் பேசமாட்டார்கள். அவர்கள் எது பேசினாலும் இறைவன் புறத்திலிருந்து வருகின்ற வஹீயாகவே அது இருக்கும்.

முதகல்லிமீன்களின் கருத்தடிப்படையில் அசாத்தியமான ஒன்றளவில் இறை சக்தி கொழுகாதென்றிருந்தால் இது எவ்வாறு சாத்தியமாகும்? இது சாத்தியமே என்பதை இன்றைய நவீன விஞ்ஞானம் நிரூபணம் செய்துள்ளது. ஒரு சீடீயில் எத்தனையோ பாடல்கள், பேச்சுகள், பல காரீகளின் முப்பது பாகத்தையும் ஓதிய கிறாஅத்துக்களை உள்ளடக்கிவிடுகின்றார்கள். ஆனாலும் இவ்வாறான நவீன தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் இதனை நிகழ்த்திக் காட்டினார்கள் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்.

ஆகவே, முதகல்லிமீன்களின் கருத்தடிப்படையில் வஹ்ததுல் வுஜூத் – இறையியலின் அனைத்து விடயங்களையும் ஆய்வு செய்ய முற்பட்டால் மௌலவீ பத்றுத்தீன் ஸாஹிப் போன்று கால் சறுகி நிற்க வேண்டித்தான் ஏற்படும். ஷர்கீ என்றிருந்தவர் ஷிர்கீ ஆகிவிட்டாரே என்று கைசேதப்பட வேண்டி வரும்.

நான் ஸூபிஸ வழி செல்கின்றேன் என்று மார்தட்டுவதில் அர்த்தமல்ல. ஸூபிய்யாக்கள் எதனைப் போதித்தார்கள் என்பதை அறிந்து அவ்வழி செல்ல வேண்டும். அதனை விடுத்து வெறுமனே ஸூபிஸம், ஸூபிய்யாக்கள், ஷெய்குமார்கள் என்றெல்லாம் வாய்கிழிய கத்துவதில் எந்தப் பயனும் இல்லை. ஸூபிய்யாக்கள் என்ன கொள்கையில் வாழ்ந்தார்கள் என்பதை அறிவதில் வழி கெட்ட வஹ்ஹாபிகளை விட கீழ்த்தரமானவர்களாகவே மௌலவீ பத்றுத்தீன் ஸாஹிப் போன்றோர் காணப்படுகின்றனர். ஏனெனில் வஹ்ஹாபிஸம் பேசக் கூடிய அறபு நாடுகளைச் சேர்ந்த பல கலாநிதிகள் (வஹ்ஹாபிகள்) ஸூபிய்யாக்களின் நூல்களை ஆய்வு செய்து அவர்களின் கொள்கை என்ன என்பதை, அதனை அவர்கள் ஏற்காவிட்டாலும் எழுதியிருக்கின்றார்கள். இன்னுமொரு பாணியில் சொல்லப் போனால் எம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கலிமா பிரகடனம் செய்த நேரம் பெருமானார் எதனை நாடுகின்றார்கள் என்பதை அன்றைய குறைஷிக் காபிர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் இன்று வாழுகின்ற முஸ்லிம் பெயர் தாங்கிகள் அதற்கு வலிந்துரை வைத்து இஸ்லாமின் நோக்கத்தையே இல்லாமலாக்கிவிட்டார்கள். துறை தெரியாமல் தோணி தள்ளி நடு ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தக் குறைஷிக் காபிர்களை விட கேவலமானவர்கள் என்றும் சொல்லலாம். ஒரு வேளை காசுக்காய் வேஷம் போடும் தரகர்களோ என்றும் எண்ணத் தோணுகின்றது. இஸ்லாமியர்கள் மத்தியில் யூதக் கைக்கூலிகளே வஹ்ஹாபிஸ நச்சுக் கருத்துக்களை பரப்ப வேஷம் போட்டார்கள். ஸுன்னீ வேஷம் போட்டு தரீகஹ் களையும், தஸவ்வும் வழியையும் இல்லாமலாக்க முயற்சிக்கின்றார்களோ என்றும் எண்ணத் தோணுகின்றது.

மௌலவீ பத்றுத்தீன் ஸாஹிப் தான் எழுதிவரும் தொடரில் தப்லீக் ஜமாஅத் தொழுகையையும், ஜமாஅதே இஸ்லாமீ ஸகாத்தையும், தஃவதே இஸ்லாமீ மீலாத் விழாவையும் கையில் தூக்கிப்பிடித்து தங்களை வளர்த்துக் கொள்வது போன்று மௌலவீ அப்துர் றஊப், காஜா கரீப் நவாஸ் அஜ்மீரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களையும், பிரபலமான வலீமார்களின் கந்தூரிகளையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றார் என்று எழுதியுள்ளார்.

இவரைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? இவர் இவ்வாறு எழுதியும் கூட ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மௌனிகளாக இருப்பது வேடிக்கையே! கொழும்பு தெவடகஹ ஜும்அஹ் பள்ளியை எடுத்துக் கொண்டால் அங்கு அனைத்து பிரபலமான வலீமாரின் நினைவு தினங்களும் கொண்டாடப்படும். காரணம் கொழும்பில் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மத்திய கேந்திரமாக அது காணப்படுகின்றது. அங்கு கந்தூரி கொடுக்காவிட்டால் பள்ளியை மூட வேண்டும் என்பதல்ல. அவ்லியாஉகளின் அருளையும், அன்பையும் அங்கு வருகின்ற மக்கள் பெற வேண்டும் என்பதே நோக்கமாகும்.

இவர் ஒரு பதவி மோகம் பிடித்தவர் என்பதற்கு ஓர் உண்மைச் சம்பவத்தை இங்கு பகிர்கின்றேன். கடந்த 2007 காலப்பகுதியில் காத்தான்குடியில் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை படு கொலை செய்வதற்காக வஹ்ஹாபிகள் ஆயத முனையில் முயற்சி செய்தார்கள். ஆனால் அவ்லியாஉகள் பொருட்டால் அல்லாஹ் அவர்களைப் பாதுகாத்தான். இதன் பிற்பாடு ஷெய்குனா அன்னவர்கள் கொழும்பு மருதானையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த நேரம் இந்த பத்றுத்தீன் ஸாஹிப் ஷெய்குனா அன்னவர்களைச் சந்திக்க வருவார். அன்று அவர் கண்ணுக்கு வழிகேடும் தெரியவில்லை, ஷெய்குனா அப்துல் காதிர் ஸூபீ நாயகத்திற்கு முரணாக நட்பபதும் புரியவில்லை. இன்றுதான் ஞானம் பிறந்திருக்கின்றது போலும். அந்த நேரத்தில் அங்கு இருக்கின்ற எங்களிடம் காத்தான்குடியைச் சேர்ந்த என்போன்ற சகோதரர்களிடம் “நாம் இங்கு ஸுன்னத் வல் ஜமாஅத் அமைப்பு ஒன்றை உருவாக்கிச் செயல்பட வேண்டும்” என்றார். நல்ல விடயம்தானே செய்வோம் என்றோம். அந்நேரம் இவர் “புஷ்றா” பத்திரிகை நடத்திவருகின்றார். அடுத்து அவர் வைத்த கோரிக்கை “இந்த கொழும்பானுகளை எல்லாம் சேர்க்கக் கூடாது” என்பதுதான். அப்போதே நான் இவரின் பதவி மோகத்தைப் புரிந்து கொண்டேன். இவரா தரீகா வளர்ப்பவர், சிந்தியுங்கள் சகோதரர்களே! கடைசி காலத்தில் ஷெய்கு வேடம் பூண்டு தன்னைப் பிரபல்யப்படுத்த எடுத்துக் கொண்ட ஆயுதம் வஹ்ததுல் வுஜூத். ஆழம் தெரியாமல் கால் வைக்கின்றார். 40 வருட தௌஹீத் வரலாறில் இவர் போன்று எத்தனை பேர்தான் வந்து சென்று வி;டடார்கள். சீசனுக்கு ஒன்று வரும். சீசன் முடிய அது சென்றுவிடும் அட்றஸ் இல்லமாலாகிவிடும்.

நாம் இவர் பற்றி பேசி காலத்தை வீணடிக்காமல் நமது முன்னோர்களான ஸூபிய்யாக்கள் பேசிய கருத்துக்களை அடுத்த தொடரில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்…

சூபிய்யாக்கள் வஹ்ததுல் வுஜூத் தொடர்பாக பேசிய கருத்துக்கள் சில..

நாங்கள் சுன்னிகள், சூபிச வழி செல்பவர்கள் என்று கூறி பிழையான வியாக்கியானங்களை மக்கள் மத்தியில் முன் வைத்து வழி கெடுக்கும் மௌலவி பத்ருத்தீன் சாஹிப் போன்றவர்களின் வலையிலிருந்து மக்களை விளிப்படையச்செய்வதற்காக சில சூபிய்யாக்களின் கருத்துக்களை தொடராக தருகின்றோம், இன்ஷா அல்லாஹ். அந்த அடிப்படையில் முதலாவதாக,
الإمام أبو حامد الغزالي رحمه الله
அல் இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

أبو حامد محمد الغزّالي الطوسي النيسابوري الصوفي الشافعي الأشعري، أحد أعلام عصـره وأحد أشهر علماء المسلمين في القرن الخامس الهجري، (450 هـ – 505 هـ ஃ 1058م – 1111م).
அவர்களின் இயற் பெயர் முஹம்மத் ஆகும். அபூ ஹாமித் என்பது புனைப் பெயராகும். (அல் கஸ்ஸாலீ அத்தூஸீ, அந் நைஸாபூரீ, அஸ் ஸூபீ, அஷ் ஷாபிஈ அல் அஷ்அரீ) அவர்கள் தங்களின் காலத்தில் (ஹிஜ்ரீ 450 – 505 , ஆங்கில வருடம் 1058 – 1111) வாழ்ந்த பிரபல்யமான அறிஞர்களில் ஒருவராகும்.

كان فقيهاً وأصولياً وفيلسوفاً، وكان صوفيّ الطريقةِ، شافعيّ الفقهِ إذ لم يكن للشافعية في آخر عصـره مثلَه . وكان على مذهب الأشاعرة في العقيدة،
அவர்கள் ஒரு சட்டக்கலை வல்லுநராகவும், அடிப்படைவாதியாகவும், தத்துவஞானியாகவும் காணப்பட்டார்கள். மேலும் ஞான வழியில் ஸூபீயாகவும், மத்ஹபுகளில் ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றுபவராகவும் காணப்பட்டார்கள். அந் நேரம் ஷாபிஈ மத்ஹபில் இவர்கள் போன்ற திறமை மிக்க எவரும் இருக்கவில்லை. அகீதாவில் அஷ்அரிய்யாக்களைப் பின்பற்று பவராகவும் இருந்தார்கள்.
لُقّب الغزالي بألقاب كثيرة في حياته، أشهرها لقبُ ‘حُجّة الإسلام’، وله أيضاً ألقاب مثل: زين الدين، ومحجّة الدين، والعالِم الأوحد، ومفتي الأمّة، وبركة الأنام، وإمام أئمة الدين، وشرف الأئمة.
இமாம் கஸ்ஸாலீ அவர்கள் தன்னுடைய காலத்திலேயே பல பெயர்களைக் கொண்டு பட்டம் சூட்டப் பட்டவர்களாக இருந்தார்கள். அவற்றில் மிகப் பிரபல்யமானது “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” என்பதாகும். மேலும் அவர்களுக்கு “ஸைனுத்தீன்” “மஹஜ்ஜதுத் தீன்” “அல் ஆலிமுல் அவ்ஹத்” “முப்தில் உம்மஹ்” “பறகதுல் அனாம்” “இமாமு அஇம்மதித் தீன்” “ஷறபுல் உம்மஹ்” போன்ற பெயர்களும் உண்டு.

ولقد ضَمَّنَ أبو حامد الغزّالي رحمه الله كتُبه الصوفيّة – وبخاصّة إحياءَ علوم الدين – عقيدةَ وحدة الوجود، وفيما يَلي نَمَاذِجُ من ذلك،
இமாம் கஸ்ஸாலீ அவர்கள் தன்னுடைய ஸூபித்துவ நூல்களை (குறிப்பாக இஹ்யாஉ உலூமித்தீன்) “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை உள்ளடக்கியதாகவே ஆக்கியுள்ளார்கள். அதன் விபரங்கள் பின்னால் வரும்.

قال أبو حامد الغزالي رحمه الله : (للتوحيد أربع مراتب) فذكر ثلاث مراتبَ، ثمّ قال، والرابعة أن لا يرى فى الوجود إلّا واحدا، وهي مشاهدة الصِّدّيقين، وتُسمّيه الصوفيّةُ الفناءَ فى التّوحيد، لأنّه من حيث لا يَرى إلّا واحدا، فلا يرى نفسه أيضا، وإذا لم يَرَ نفسَه – لكونه مستغرقا بالتوحيد – كان فانيا عن نفسه فى توحيده، بمعنى أنّه فَنَى عن رؤية نفسه والخلق،
இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். ஏகத்துவத்திற்கு நான்கு படித்தரங்கள் உள்ளன. மூன்றைக் கூறிவிட்டு பின்பு கூறினார்கள். நான்காவதாகிறது உள்ளமையில் ஒன்றையே பார்ப்பான். அது “ஸித்தீகீன்களின்” காட்சி நிலையாகும். அதை ஸூபீகள் “அல் பனாஉ பித் தௌஹீத்” ஏகத்துவத்தில் அழிதல் என்று கூறுவார்கள். ஏனெனில் உள்ளமையில் ஒன்றையே பார்ப்பது கொண்டு அவன் தன்னையும் காண மாட்டான். ஏகத்துவத்தில் மூழ்கியிருப்பது கொண்டு தன்னையே காணவில்லையானால் அவன் தன்னை விட்டும் (நான் என்பதை விட்டும்) ஏகத்துவத்தில் அழிந்தவனாக ஆகிவிட்டான். அதாவது தன்னையும் ஏனையவற்றையும் காணாமல் “பனா” ஆகிவிடுவான்.
ويقول الغزّالي: ليس فى الوجود – تحقيقا – إلّا الله وأفعالُه،
மேலும் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள். உள்ளமையில் (உறுதியாக) அல்லாஹ்வையும், அவனது செயல்களையும் தவிர வேறு இல்லை.

وتحت عنوان (حقيقة الحقائق) يقول الغزالي فى كتاب مشكاة الأنوار: ومن هنا يفاع العارفون من حَضيض المجاز إلى ذروة الحقيقة، واستكملوا معراجَهم، فَرَأَوْا بالمشاهدة العِيانيّة – أن ليس فى الوجود إلّا الله تعالى – وأنّ كلّ شيئ هالك إلّا وجهه، لا أنّه يصير هالكا فى وقت من الأوقات، بَل هو هالك أزلا وأبدا، إذ لا يُتصوّر إلّا كذلك، فإنّ كلّ شيئ سواه إذا اعتُبر ذاته من حيث ذاته فهو عدمٌ محضٌ، وإذا اعتُبر من الوجه الذي يسري إليه الوجود من الأوّل الحقّ رُؤِيَ موجودا لا فى ذاته، لكن من الوجه الذي يلى مُوجدَه، فيكون الموجود وجه الله تعالى فقط،
(مشكاة الأنوار للغزالي، ص 69 )
ஹகீகதுல் ஹகாயிக் எனும் தலைப்பின் கீழ் தன்னுடைய மிஷ்காதுல் அன்வார் எனும் நூலில் பின்வருமாறு கூறுகின்றார்கள். இந்த இடத்திலிருந்துதான் ஆரிபீன்களாகிய ஞானிகள் ஏற்படுத்தப்பட்டதின் (மஜாஸ் – ஒரு பொருள் மற்றொண்டாக குறிக்கப்படும் ஓர் உருவணி) அடியிலிருந்து எதார்த்தத்தின் உச்சிக்கு ஏறுகின்றார்கள். தங்களின் விண்ணுலக யாத்திரையை சம்பூரணப்படுத்திக் கொள்கின்றார்கள். அல்லாஹு தஆலா தவிர வேறொன்று இல்லை என்று நேரடிக் காட்சி மூலம் காணுகின்றார்கள். அவனைத் தவிர உள்ள அனைத்தும் அழிந்தவை, இல்லாதவை என்று காணுகின்றார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அது அழியும் என்பதல்ல. மாறாக அது (படைப்பு) நிரந்தரமாக அழிந்த, இல்லாத ஒன்றாகும். அது வெறும் கற்பனை மாத்திரமே. ஏனெனில் அனைத்து வஸ்த்துக்களும் அதன் அதனுடைய “தாத்” உள்ளமையை எடுத்துப் பார்த்தால் அது கலப்பற்ற “அதம்” இல்லாமையாகும். ஆரம்பத்திலிருந்து “வுஜூத்” உள்ளமை பொருந்தக்கூடிய வகையில் எடுத்துப் பார்த்தால் ஹக் தஆலா தான் சிருட்டியாக தெரிகிறான். உண்மையில் சிருட்டி என்று ஒன்று இல்லை. ஆனால் அதை உண்டாக்கியவனை வைத்துப் பார்க்கும் போது இருப்பது அவன் மாத்திரமே!
(மிஷ்காதுல் அன்வார், இமாம் கஸ்ஸாலீ, பக்கம்: 69)
فمن ادّعى أحد منكم أنّ هذا العلم – ولو كان صحيحا فى نفس الأمر – فلا يجوز إظهاره وإفشائه لغير المستحقّين فادّعائه باطل، لأنّ الإمام الغزالي أفضل وأعلم ممّن يدّعي هكذا، وإظهارُه بالكتابة فى مؤلَّفاته دليلٌ لنا لجواز إظهاره مطلقا،
இந்த ஞானம் உண்மையில் சரியான, ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான். ஆனால் இதை வெளிப்படுத்துவது தான் கூடாது என்று உங்களில் எவராவது கூறினல் அவரின் வாதம் தவறானதாகும். ஏனெனில் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு வாதிப்பவரை விட பன்மடங்கு சிறந்த அறிவாளியாகும். அவர்கள் தன்னுடைய நூற்களில் இத் தத்துவத்தை எழுதியிருப்பது அதை வெளிப்படுத்தலாம் என்பதற்கு தெளிவான ஆதாரமாகும்.

ثمّ انْتَهت أزمّته وحيرتُه بترجيح طريق الصوفيّة ، وتريِيفِ ما عداها، يقول الغزالي : ثمّ إنّي لمّا فرغتُ من هذه العلوم ، أقبلتُ بهمّتي على طريق الصوفيّة ،
பின் அவர்களின் பிரச்சினைகள், தடுமாற்றம் எல்லாம் ஸூபிய்யாக்களின் வழியை மேம்படுத்துவது கொண்டும், அது அல்லாததை விடுவது கொண்டும் இல்லாமலாகிவிட்டன. பின்பு இந்த அறிவுகளிலிருந்து ஓய்வு பெற்று ஸூபிய்யாக்களின் வழியை நோக்கி உண்மையான எண்ணத்துடன் சென்றார்கள்.
حصّل الغزالي رحمه الله علومَ الصوفيّة من مطالعة كتبهم، مِثْلَ قوت القلوب لأبي طالب المكّي، ودِراسةِ أقوال شيوخِ التصوّفِ الأوائل، كأبي يزيدَ البسطامي، والجنيد، والحلّاج ،والشّبلي ونحوِهم، رضي الله عنهم،
இமாம் கஸ்ஸாலீ அவர்கள் ஸூபிய்யாக்களின் நூல்களை மீட்டிப் பார்ப்பதன் மூலம் அவர்களின் அறிவுகளை உண்டாக்கிக் கொண்டார்கள். அபூ தாலிபுல் அல் மக்கீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “கூதுல் குலூப்” என்ற நூல், மற்றும் ஸூபிஸத்தின் குருமார்களின் பேச்சுக்கள் போன்று. (அபூ யஸீத் அல் பிஸ்தாமீ, ஜுனைதுல் பக்தாதீ, இமாம் ஹல்லாஜ், இமாம் ஷிப்லீ றஹிமஹுமுல்லாஹ் இன்னுமிவர்கள் போன்றோர்கள்)
ولم يكتف بالتصوّف العلميّ المأخوذِ من بُطونِ كتب الصوفيّة، بل عزم على تحصيل التصوّف العمليّ، لِينال غايةَ التصوّف بالذّوق والحال والكشف،
இவ்வாறு நூற்களை மாத்திரம் படிப்பதன் மூலம் அவர்களுக்கு கிடைத்த அறிவுகள் தனக்கு போதாது என்று எண்ணிய அவர்கள், ஸூபிஸ ஞானத்தை (வஹ்ததுல் வுஜூதை) அனுபவ ரீதியாக பெற்றுக் கொள்ள முயற்சித்தார்கள்.
فخرج من بغداد سائحا فى الأرض، مُتنقِّلا بين مكّةَ ودمشقَ، وبيتِ المقدّس، مُلازِما للخلوة، تاركًا الجاهَ والمالَ والعلمَ،
எனவே பக்தாத் நகரிலிருந்து வெளியாகி புனித மக்கஹ், சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் மற்றும் பைதுல் மக்திஸ் ஆகியவற்றுக்கிடையே பதவி, பட்டம், பொருளாதாரம் ஆகியவற்றை துறந்து தனிமையை (கல்வத்) அவசியமாக்கிக்கொண்டு சுற்றித் திரிந்தார்கள்.

قال تلميذه أبو بكر ابن العربي رحمه الله (رأيت الغزالي فى البرّيّة، وعليه مُرَقَّعةٌ ، وعلى عاتقه رَكوةٌ، وقد كنت رأيته ببغداد يحضـر دروسَه أربعُمأةِ عِمامةٍ، من أكابر النّاس وأفاضلِهم، يأخذون عنه العلم) الركوة: إناء صغير من جلد، يُشرب فيه الماءُ،
அவர்களின் மாணவர் அபூ பக்ர் இப்னுல் அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். நான் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களை ஸூபிய்யாக்களின் ஆடை அணிந்தவராக வனாந்தரப் பகுதிகளில் கண்டேன். அவர்களின் தோல்புயத்தில் தோலினால் ஆன ஒரு நீர் அருந்தும் பாத்திரமும் இருக்கக் கண்டேன். அதேபோன்று பக்தாதில் அவர்களின் சபையில் 400 தலைப்பாகை அணிந்த பெரியவர்கள் அவர்களிடமிருந்து அறிவு கற்பதையும் கண்டுள்ளேன்.
وبعد عشـر سنين من السّياحة والخلوة والمجاهدة على طريقة المتصوّفة ، عاد الغزاليّ إلى طُوس، وبَنَى بِجِوارِ دارِه مدرسةً للفقهاء ومأوى للصّوفيّة،
இவ்வாறு சுற்றியும் “கல்வத்” தனித்திருந்தும், நப்ஸுடன் போராடியும் பத்து வருடங்களின் பின் மீண்டும் தூஸ் நகர் நோக்கி வந்து தன்னுடைய வீட்டுக்கு அருகில் ஒரு “புகஹாஉ” சட்டக் கலை வல்லுநர்களுக்கு ஒரு கல்லூரியையும், ஸூபிய்யாக்களுக்கு ஒரு தளத்தையும் கட்டினார்கள்.
وفى آخر عمره أقبل على طلب الحديث ، ومُجالسة أهله، حتّى توفّي سنة 505 هـ ،
தன்னுடைய இறுதி காலத்தில் தான் மரணிக்கும் வரை (ஹிஜ்ரீ 505) ஹதீதுகளைத் தேடிப்படித்து, “முஹத்திதீன்” களுடன் அமர்வதையும் ஆக்கிக் கொண்டார்கள்.
وللغزاليّ مؤلّفات كثيرة فى التصوّف والفقه والأصول والمنطق وعلم الكلام والردّ على الفلاسفة وغير ذلك،

ومن الكتب الّتي ألّفها بعد سلوكه طريقَ التصوّف
01) إحياء علوم الدين
02) المنقذ من الضلال
03) المضنون به على غير أهله
04) المضنون به على أهله
05 ) مشكاة الأنوار
06 ) المقصد الاَسْنَى فى شرح أسماء الله الحُسنى

இமாம் கஸ்ஸாலீ அவர்களுக்கு ஸூபித்துவம், சட்டக்கலை, “உஸூல்” அடிப்படை, தர்க்கவியல், “இல்முல் கலாம்” கொள்கையறிவு, தத்துவ வாதிகளுக்கு மறுப்பு, இன்னும் இது போன்றவற்றில் அதிகமான நூற்கள் உள்ளன.

அவர்கள் ஸூபிஸ வழியில் சென்ற பிறகு கோர்வை செய்த நூற்கள்:

01. இஹ்யாஉ உலூமித்தீன்
02. அல் முன்கிது மினள்ளலால்
03. அல் மள்னூனு பிஹீ அலா ஙைரி அஹ்லிஹ்
04. அல் மள்னூனு பிஹீ அலா அஹ்லிஹ்
05. மிஷ்காதுல் அன்வார்
06. அல் மக்ஸதுல் அஸ்னா பீ ஷர்ஹி அஸ்மாஇல்லாஹில்
ஹுஸ்னா

وينقل الغزالي رحمه الله إجماعَ الصوفيّة على اعتقاد وحدة الوجود، فيقول العارفون – بعد العروج إلى سماء الحقيقة – اتّفقوا على أنّهم لم يَرَوْا فى الوجود إلّا الواحدَ الحقَّ، لكن منهم من كان له هذه الحال عرفانا علميّا، ومنهم من صار له ذلك حالا ذوقيّا، وانتفتْ عنهم الكثرةُ بالكليّة، واستغرقوا بالفردانيّة المَحْضَةِ …..،
இமாம் கஸ்ஸாலீ அவர்கள் ஸூபீகள் அனைவரும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். மேலும் ஆரிபீன்கள் – ஞானிகள் எதார்த்தம் என்ற வானின் பக்கம் உயர்த்தப்பட்ட பிறகு ஹக் தஆலா தவிர எதையும் காணவில்லை என்று ஏகோபித்துவிட்டதாகவும் கூறுகின்றார்கள். ஆனால் அவர்களில் சிலருக்கு இந்நிலமை அறிவு ஞானத்தைக் கொண்டு ஏற்படுவதாகவும், மேலும் சிலருக்கு அனுபவத்தால் ஏற்படுவதாகவும், அவர்கள் அனைவரிடத்திலும் பல அல்லது இருமை என்பது இல்லாமலாகி தூய ஏகத்துவத்தில் மூழ்கிவிட்டதாகவும் கூறுகின்றார்கள்.

وهذه الحالة إذا غلبت سُمّيت بالإضافة إلى صاحب الحالة فناءً، بل ‘فناءَ الفناء ‘ ، ….. وتُسمّى هذه الحالة بالإضافة إلى المستغرق به بلسان المجاز إتّحادا، أوبلسان الحقيقة تَوحيدا، ووراء هذه الحقائق أيضا أسرارٌ يطول الخوض فيها، (مشكاة الأنوار للغزالي، ص 72 – 76 )
இந்நிலை மிகைத்தால் அந்நிலையுடைவரைப் பொறுத்து “பனா” என்று சொல்லப்படும்…. மேலும் இந்நிலை மூழ்கக் கூடியவரைப் பொறுத்து “மஜாஸ்” அடிப்படையில் “இத்திஹாத்” என்றும், “ஹகீகத்” அடிப்படையில் “தௌஹீத்” என்றும் கூறப்படும். இவ் எதார்த்தங்களுக்கு அப்பால் பல இரகசியங்கள் உள்ளன. அதிலே பேச்சு நீண்டு விடும்.
(மிஷ்காதுல் அன்வார், பக்கம்: 72 -76)
ومن أقوال الغزالي رحمه الله الدالّةِ على وحدة الوجود قولُه : ههنا نظران، النّظر بعين التوحيد المحضِ وهذا النّظر يُعرِّفك قطعا أنّه الشاكر وأنّه المشكور، وأنّه المحِبُّ وأنّه المحبوب، وهذا نظر من عرف أنّه ليس فى الوجود غيرُه، (إحياء علوم الدين، 4 ஃ 86 )
மேலும் இமாம் கஸ்ஸாலீ அவர்களின் “வஹ்ததுல் வுஜூத்” ஐக் காட்டக் கூடிய பேச்சுக்களில் நின்றும்: இங்கு இரு பார்வைகள் உள்ளன. தூய ஏகத்துவத்தின் கண் கொண்டு பார்த்தலாகிறது உனக்கு நன்றி செலுத்துபவனும், நன்றி செலுத்தப்படுபவனும் அவனே என்பதை தெளிவாகக் காட்டும். மேலும் நேசிப்பவனும், நேசம் வைக்கப்படுபவனும் அவனே என்றும் தெளிவாகக் காட்டும். இது உள்ளமையில் அவனன்றி எதுவுமில்லை என்று அறிந்தவனின் பார்வையாகும்.
(இஹ்யாஉ உலூமித்தீன், 86 -4 )
يقول الغزالي رحمه الله: والعارفون لم يفهموا من قوله (الله أكبر) أنّه أكبر من غيره، حاش لله إذ ليس فى الوجود معه غيرُه، حتّى يكونَ هو أكبرَ منه، بل ليس لغيره رُتبة المعيّة ، بل ليس لغيره وجود إلّا من الوجه الّذي يليه، فالموجود وجهُه فقط، ومُحال أن يقال إنّه أكبرُ من وجهه، (مشكاة الأنوار للغزالي ص – 71 )
மேலும் கஸ்ஸாலீ றஹிமஹூல்லாஹ் கூறுகின்றார்கள். “ஆரிபீன்கள்” – ஞானிகள் “அல்லாஹு அக்பர்” என்பதிலிருந்து அல்லாஹ் பிறிதொன்றைவிடப் பெரியவன் என்று விளங்கவில்லை. ஏனெனில் இன்னொன்றைவிடப் பெரியவன் என்று விளங்க அல்லாஹ்வுடன் அவனல்லாத ஒன்று இல்லை. அவனல்லாதவற்றுக்கு உடனிருத்தல் “மஇய்யத்” என்பது இல்லை. இன்னும் சொன்னால் அவனல்லாதவற்றுக்கு “வுஜூத்” என்பதே இல்லை. இருப்பது அவன் மாத்திரமே. ஆகவே இன்னொன்றை விடப் பெரியவன் என்று கூறுவது அசாத்தியமாகும்.
(மிஷ்காதுல் அன்வார், பக்கம்: 71)
فالكائنات ليس لها عنده – الغزالي -وجود حقيقيّ، بل هي من حيث ذاتها معدومةٌ، وهي موجودة بوجود الله، وفى هذا يقول (والوجودُ ينقسم إلى ماللشيئ من ذاته، وإلى ما له من غيره، وما له الوجودُ من غيره فوجوده مستعارٌ ، لا قِوام له بنفسه، بل إذا اعتُبر ذاتُه – من حيث ذاته – فهو عدم محض، وإنّما هو موجود من حيثُ نسبتِه إلى غيره، وذلك ليس بوجود حقيقيّ كما عرفت فى مثال استعارة الثوب من الغنيّ فالموجود الحقّ هو الله تعالى، كما أنّ النّور الحقّ هو الله تعالى،
(مشكاة الأنوار للغزالي ، ص 68 )
இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் சிருஷ்டிகளுக்கு எதார்த்தமான வுஜூத் – உள்ளமை இல்லை என்பதுதான் முடிவு. அவற்றின் “தாத்” இருப்பு என்ற வகையில் அவை இல்லாதவை. ஆனால் அல்லாஹ்வின் உள்ளமை கொண்டே உளதாகத் தெரிகின்றன. இந்த விடயத்தைப் பின்வருமாறு கூறுகின்றார்கள். “வுஜூத்” – உள்ளமை என்பது இரண்டு வகைப்படும். ஒன்று, தன்னுடைய இருப்பைக் கொண்டு உளதாக இருத்தல். இரண்டு, தன்னல்லாததின் இருப்பைக் கொண்டு உளதாகத் தெரிதல். இவ்வாறு தன்னல்லாததின் இருப்பைக் கொண்டு உளதாக இருக்கக் கூடிய ஒன்றின் “வுஜூத்” உள்ளமை ஆகிறது இரவலாகும். தன்னைக் கொண்டு தரிபாடானது அல்ல. அதன் “தாத்” – இருப்பை எடுத்துக் கொண்டால் அது அறவே இல்லாதது. அது இருப்பதாகிறது தன்னல்லாததைக் கொண்டாகும். அது எதார்த்தமான வுஜூத் அல்ல. ஒரு செல்வந்தனிடமிருந்து உடுப்பை இரவலாகப் பெற்றுக் கொள்ளல் என்ற உதாரணத்தில் இருந்து நீ விளங்குவது போன்று. எனவே உண்மையான வுஜூத் – உள்ளமை அல்லாஹ் மாத்திரமே! உண்மையான ஒளி அல்லாஹ்மாத்திரமே என்பது போன்று.
(மிஷ்காதுல் அன்வார் , பக்கம்:68 )

ويقول الغزالي: أنّ أهمّ جوانب كمال الله ورُبُوبيّته إثباتُ تفرُّدِه بالوجود، ونفيُ الوجود عن غيره، ويُقرِّرُ أنّ إثبات موجودٍ مع الله شركٌ محقَّقٌ، مستلزمٌ لوصف الله بالنّقائِص،

وفى هذا يقول الغزالي رحمه الله: ومعنى الرُّبوبيّة التوحُّدُ بالكمال والتفرُّدُ بالوجود على سبيل الإستقلال،….. فإنّ المشاركة فى الوجود نقصٌ لا مَحالةَ،….. والمنفرِدُ بالوجود هو الله تعالى، إذ ليس معه موجود سواه،
(إحياء علوم الدين، 3 ஃ 281 )
மேலும் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள். அல்லாஹ்வின் சம்பூரணத்துவம், பிரபு நிலை என்பதில் மிக முக்கியமான விடயம் உள்ளமையைக் கொண்டு தனித்திருத்தல். அதாவது அவன் மாத்திரமே இருத்தல். அவனல்லாதவற்றுக்கு உள்ளமை இல்லை என்றாக்குவதாகும். அல்லாஹ்வுடன் இன்னொன்று இருத்தல் என்பது திடமான இணை, அவனுக்கு பரிபூரணம் இல்லை, அவன் குறையுள்ளவன் என்பதாகும்.

இதை அவர்கள் பின்வருமாறு சுட்டிக் காட்டுகின்றார்கள். பிரபு நிலை என்பதன் கருத்து அவன் மாத்திரமே பரிபூரணமாக இருத்தலும், அவன் மாத்திரமே உள்ளமையாக இருத்தலுமாகும்…. உள்ளமையில் கூட்டென்பது சந்தேகமின்றி குறையாகும். “வுஜூத்” உள்ளமை கொண்டு தனித்திருத்தல் என்பது அல்லாஹ் மாத்திரமே. அப்படியானால் அவனன்றி எதுவும் இல்லை என்பதாகும்.
(இஹ்யாஉ உலூமித்தீன், 281 – 3 )
ويقول أيضا : إنّ من لم يُبصـر فناءَ غير الموجود الحقّ، فأثبت موجودا آخر مع الله تعالى فهذا مشـرك تحقيقا،
(إحياء علوم الدين ، 4 ஃ 86 )

மீண்டும் கூறுகின்றார்கள். எவன் ஒருவன் அல்லாஹ் தவிரவுள்ளவை இல்லை என்று பார்க்கவில்லையோ அவன் அல்லாஹ்வுடன் இன்னொன்றைத் தரிபடுத்துகின்றான். இது திடமான இணைவைப்பாகும்.
(இஹ்யாஉ உலூமித்தீன், 86-4)
ويقرّ الإمام الغزالي رحمه الله أنّ عقيدة الصوفيّة التي يدعو إليها تَتَنَافَى مع كلمة التوحيد (لا إله إلّا الله ) الّتي هي عنده دالّة على توحيد العوامّ المحجوبين عن الحقيقة،

மேலும் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள். ஸூபிய்யாக்களின் கொள்கையாகிறது எதார்த்தத்தை விட்டும் திரையிடப்பட்ட பாமரர்களின் தௌஹீதின் பால் காட்டக் கூடிய “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவுடன் நிலை பெறாது.
يقول الغزالي : فإذن لا إله إلّا هو: فإنّ الإله عبارة عما الوجه موليه نحوه بالعبادة والتأله: أعنى وجوه القلوب فإنّها الأنوار، بل كما لا إله إلّا هو، فلا هو إلّا هو، لأنّ ‘ هو ‘ عبارة عما إليه إشارة كيفما كان، ولا إشارة إلّا إليه،…..

فإذن ‘ لا إله إلّا الله ‘ توحيد العوامّ ، ‘ ولا إله إلّا هو ‘ توحيد الخواصّ، لأنّ هذا أتمّ وأخصّ وأشمل وأحقّ وأدقّ وأدخل بصاحبه فى الفردانيّة المحضة والوحدانيّة الصرفة، (مشكاة الأنوار، ص 79 )

இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள். “லா இலாஹ இல்லா ஹூ” என்பதாகும். “இலாஹ்” என்பது வணங்குவது கொண்டு , வழிபடுவது கொண்டு எவனளவில் முகம் முன்னோக்குகின்றதோ அதற்குச் சொல்லப்படும். அதாவது இதயங்களின் முகங்கள். அவைகள் ஒளிகளாகும். ஆனால் “லாஇலாஹ இல்லா ஹூ”, “லா ஹூ இல்லா ஹூ” போன்றதாகும். “ஹூ” என்பது அவன் எவ்வாறிருந்தாலும் அவனையே சுட்டி நிற்கின்றது….

எனவே “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பது பாமரர்களின் தௌஹீதாகும். “லா இலாஹ இல்லா ஹூ” என்பது குறிப்பானவர்களின் – விஷேடமானவர்களின் “தௌஹீத்” ஆகும். இதுவே பரிபூரணமானதும், குறிப்பானதும், மிக நுட்பமானதும் தகுதியானதுமாகும். இவ்வாறு நம்புவதே பரிபூரண ஏகத்துவத்தில் நுழைந்தவராகுவார். (மிஷ்காதுல் அன்வார், பக்கம்: 79)

و’لا هُوْ إلّا هُوْ ‘ يعنى بها أن لا موجود فى الكون إلّا الله، وأنّ كُلّ ما يُرى فهو الله،
هذا محمد الغزالي صرّح بوحدة الوجود فى مواضع كثيرة من كتابيه ‘ إحياء علوم الدين ‘ ، و’مشكاة الأنوار ‘ كما نقلت بعض العبارات منهما، وهذه العبارات المنقولة قد صرّحت بوحدة الوجود، وصرّحت أيضا بأنّ الغزالي مؤمن بوحدة الوجود، وناطق بها ومصرّح بها كتابة وخطبة،

“லா ஹூ இல்லா ஹூ” என்பது கொண்டு அல்லாஹ் தவிர எந்தப் படைப்பும் இல்லை என்பதையே கருதுகிறார்கள். பார்க்கப்படுபவை அனைத்தும் அவை அல்லாஹ் என்றும் கருதுகின்றார்கள்.

இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய “மிஷ்காதுல் அன்வார்” மற்றும் “இஹ்யாஉ உலூமித்தீன்” போன்ற நூற்களில் பல இடங்களில் நான் எழுதிக் காட்டியது போன்று “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையைப் பகிரங்கமாக, தெளிவாகக் கூறியுள்ளார்கள். நான் எழுதிக்காட்டிய வசனங்கள் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை ஏற்றுக் கொண்டு, அதைப் பகிரங்கமாகப் பேசியும், எழுதியும் உள்ளார்கள் என்பதையே காட்டுகின்றன.

இன்று வஹ்ஹாபிகள் அவர்களை “காபிர்” என்று கூறுவதற்குப் பிரதான காரணம் அவர்கள் இத் தத்துவத்தை போதித்தமையே ஆகும். அதேபோல் ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களை எதிர்ப்பவர்கள் கூட அவர்களை எதிர்ப்பதற்கும், விமர்சிப்பதற்கும் பிரதான காரணம் வஹ்ததுல் வுஜூத் தத்துவத்தை போதிப்பதே ஆகும்.

அவர்களை (வஹ்ஹாபிகளை) பின் பற்றியே ஸுன்னத் வல் ஜமாஅத் வேடம் பூண்ட மௌலவீ பத்றுத்தீன் ஸாஹிப் போன்ற முல்லாக்களும் எதிர்த்து வருகின்றனர். காரணம் இவர்கள் அத் தத்துவத்தை முறையாக படிக்கவும் இல்லை. விளங்கவுமில்லை. இடக்குமடக்காக ஏதேதோ பேசி வருகின்றார்கள்.

“வஹ்ததுல் வுஜூத்” என்று ஒன்றே இல்லை என்று கூறிவிடுவார்கள். ஸூபிய்யாக்களின் நூல்களில் மிகத் தெளிவாக இத்தத்துவம் கூறப்பட்டிருக்கின்ற காரணத்தினால் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் பிழையான வியாக்கியானங்கள் கூறி மழுப்பி வருகின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் ஸூபிஸ கவிஞரும் மாபெரும் ஞானியுமான இமாம் இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் கருத்துக்களை ஆராய்வோம்.

ابن الفارض رحمه الله ووحدة الوجود
இமாம் இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
هو عُمر بن عليّ بن مرشد الحموي، حمويّ الأصل، مصـريّ المولد والمنشأ والوفاة، عُرف بابن الفارض، لأنّ والده كان يُثبت الفروض للنّساء على الرجال عند القُضاة، وُلد بالقاهرة سنة 576 هـ، واشتغل فى أوّل حياته بطلب العلم ، فَدَرَسَ الحديث والفقه الشافعيّ وعلوما أخرى،

அவர்களின் இயற் பெயர் உமர் ஆகும். அவர்களின் தந்தை அலீ என்பவரும் அவர்களின் தந்தை முர்ஷித் அல் ஹமவீயும் ஆகும். அடிப்படை “ஹமவீ” நகரைச் சார்ந்தவர்கள் (சிரிய பகுதியில் உள்ள ஓர் ஊர்). இவர்கள் பிறந்தது, வளர்ந்தது, வபாத் ஆனது அனைத்தும் எகிப்து ஆகும். இப்னுல் பாரிள் என்று அறியப்பட்டவர்கள். காரணம் அவர்களின் தந்தை பெண்களுக்கு ஆண்களால் செய்யப்பட வேண்டிய கடமைகளை காளீ – நீதிபதிகளிடம் நிலைநாட்டுபவராக காணப்பட்டார்கள். இவர்கள் (இப்னுல் பாரிள்) கெய்ரோவில் ஹிஜ்ரீ 576ல் பிறந்தார்கள். தனது ஆரம்ப காலத்தில் அறிவைத் தேடுவதில் ஈடுபட்டார்கள். ஹதீது, ஷhபிஈ மத்ஹப் சட்டங்கள் மற்றும் ஏனைய அறிவுகளைக் கற்றார்கள்.
ثمّ سَلَكَ طريقَ الصوفيّة، وسافر بإشارة من أحدِ شيوخه إلى مكّة، فأقام فيها خمسة عشـر عاما، مُرَوِّضًا نفسه على طريقة الصوفيّة، فكان يخرج إلى الأماكن النّائية الخَرِبة، ويَسيح فى شِعاب مكة وأودِيتها، وكان يبقى أيّاما لا يأكل ولا ينام،
பின்பு ஸூபிய்யாக்களின் வழி சென்றார்கள். தன்னுடைய ஷெய்குமார்களில் நின்றும் ஒருவரின் கட்டளைக்கமைய புனித மக்கஹ் நகர் நோக்கிப் பயணித்தார்கள். தன்னுடைய “நப்ஸ்”ஐ ஸூபிய்யாக்களின் வழியில் பழக்குபவர்களாக அங்கு 15 வருடங்கள் தங்கியிருந்தார்கள். தூரப் பிரதேசங்களுக்குச் செல்பவராகவும் இருந்தார்கள். மக்கஹ் மற்றும் அதன் சூழவுள்ள பிரதேசங்களில் நடந்து திரிந்து, பல நாட்கள் உண்ணாமல், உறங்காமல் தங்குவார்கள்.
وبعد أن بلغ ابن الفارض درجةَ الكمالِ الصوفيّ، بوصوله إلى ذروة الإعتقاد بوحدة الوجود، عاد إلى القاهرة سنة 628 هـ فاشتهر أمره عند العامّة والحُكّام، وعظّمه الصوفيّة وغَلَوا فيه، حتّى عدَّوْه قطب زمانه، ولقّبوه سلطان العاشقين، وإمام المحبّين، وتوفّي سنة 632 هـ،
இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை நம்புவதில் உச்ச நிலையை அடைவது கொண்டு அவர்கள் ஸூபிஸத்தில் பரிபூரண நிலையை அடைந்த பின் மீண்டும் ஹிஜ்ரீ 628ல் கெய்ரோ திரும்பினார்கள். அவர்கள் பொது மக்களிடத்திலும், ஞானிகளிடத்திலும் பிரபல்யமானார்கள். ஸூபீகள் அவர்களை உச்சி நிலையில் கண்ணியம் செய்தார்கள். எந்தளவு என்றால், அவர்கள்தான் அக்காலத்து “குத்பு” என்று எண்ணினார்கள். “ஸுல்தானுல் ஆஷிகீன்” (காதலர்களின் அரசன்), “இமாமுல் முஹிப்பீன்” (காதலர்களின் தலைவன்) என்று அவர்களுக்கு பட்டம் சூட்டினார்கள். இமாம் இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் ஹிஜ்ரீ 632ல் வபாத் ஆனார்கள்.
وديوان الشِّعر هو ا|لإنتاج الوحيد لابن الفارض، فلم يؤلّف كتابا، ولم تُرْوَ عنه أقوال فى علوم الصوفيّة، ولكن مع هذا فإنّ أثره على الصوفيّة – كان ولا يزال – عظيما، وذلك يرجع إلى أنّه أشعرُ المتصوّفين، وحاملُ لِواء الشِّعر بينهم،
இப்னுல் பாரிள் அவர்களின் கவிதைத் தொகுப்பு ஒன்று மட்டுமே அவர்களின் வெளியீடாகும். அவர்கள் எந்த ஒரு நூலையும் தொகுக்கவில்லை. அவர்களைத் தொட்டும் “தஸவ்வுப்” கலையில் எந்தவொரு சொல்லும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையிலும் அவர்களின் பிரதிபலிப்பு ஸூபிய்யாக்களிடம் மிக வலுப்பமானது. எந்த அளவு என்றால் ஸூபிய்யாக்களில் மிகப் பெரிய கவிஞன் என்று கூறப்படுகின்றது. கவி என்ற கொடியை ஸூபிய்யாக்கள் மத்தியில் சுமப்பவர்களாகவும் கருதப்படுகின்றது.

ولـهذا فَقَدْ أكثر مؤلّفوا الصوفيّة من الإستدلال بشعره على مسائل التصوّف، وكانت قصائدُه زَادَ الصوفيّة فى مجالس السَّماع، (أنظر: التصوّف الإسلاميّ فى الأدب والأخلاق لِزَكيّ مبارك (1ஃ 309 ) وكان الطُّلّاب يدرسون ديوانه، بل ويحفظونه عن ظهر قلب، (أنظر : الفارض والحبّ الإلهي لمحمد مصطفى حِلمي ص 84 )
இதன் காரணமாகவே “தஸவ்வுப்” உடைய விடயத்தில் அவர்களின் கவிதையிலிருந்து ஸூபிய்யாக்கள் அதிகமானவற்றை ஆதாரங்களாக காட்டுகின்றார்கள். “மஜ்லிஸுஸ் ஸமாஇ” எனும் சபைகளில் ஸூபிய்யாக்களின் உணவாக அவர்களின் கவிதைகள் ஆகிவிட்டன. (அத் தஸவ்வுபுல் இஸ்லாமீ பில் அதபி வல் அக்லாகி – ஸகீ முபாறக் , பக்கம் 309 பாகம் 01 ) மாணவர்கள் அவர்களின் கவிப் பெட்டகத்தை படிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். மாறாக அதனை உள்ளத்தில் மனனம் செய்யக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். (அல் பாரிள் வல் ஹுப்புல் இலாஹீ – முஹம்மத் முஸ்தபா ஹில்மீ, பக்கம் 84)
يقول أحمد بن عبد العزيز القصير مصنّف كتاب ‘عقيدة الصوفيّة وحدة الوجود الخفيّة ‘- وشعر ابن الفارض شعر رائقٌ، عذْبٌ، ولكنّه يَنْعق بوحدة الوجود، ولهذا فقد شبّهَهُ الذّهبي بـ ‘الْفَالُوْذَج المسموم ‘
“அகீததுஸ் ஸூபிய்யா வஹ்ததுல் வுஜூதில் கபிய்யஹ்” எனும் நுஸலை எழுதிய அஹ்மத் அப்துல் அஸீஸ் அல் கஸீர் என்பவர் “இப்னுல் பாரிள் உடைய கவிதை தெளிவானது, இன்பமானது. ஆனால் அவர் காகம் கரைவது போன்று வஹ்ததுல் வுஜூத் பற்றி கரைகின்றார். இதனாலேயே இமாம் தஹபீ அவர்கள் இப்னுல் பாரிள் அவர்களின் கவிதையை “அல் பாலூதஜுல் மஸ்மூம்” (நஞ்சூட்டப்பட்ட இனிப்புப் பண்டம்) என்று ஒப்பிட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார்”
(إنّ الإمام الذّهبي ولو كان بحرا عميقا فى الحديث والتّاريخ – بعيد عن التصوّف بُعدَ الثّرى عن الثُّرَيّا، لأنّه يستهزأ بقصيدة ابن الفارض بقوله ‘ الفالوذج المسموم ‘ ، وهذا هوالدليل عندي لبُعده عن التصوّف بُعد المشـرق عن المغرب، ويُلحق به الدكتور أحمد بن عبد العزيز القصير، مؤلِّف كتاب ‘ عقيدة الصوفيّة وحدة الوجود الخفيّة ‘ ،لأنّه طعن على شعر ابن الفارض بقوله – بعبارته فى الكتاب المذكور – لكنّه يَنْعق بوحدة الوجود، لأنّ النّعق صوت الغراب، هدى الله هذا المصنّف إلى الصـراط المستقيم، إن كان حيّا، وغفر ذنوبه إن كان مات، وكذلك غفر الله ذنوب الإمام الذّهبي، )
(இமாம் தஹபீ ஹதீதுக் கலையிலும், வரலாற்றுக் கலையிலும் கடலாக இருந்தாலும் “தஸவ்வுப்” கலைக்கும் அவருக்கும் (துரையா நட்சத்திரத்திற்கும் , பூமிக்குமுள்ள துரம் போன்று) வெகு தூரம். ஏனெனில் இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அவர்களின் கஸீதாவைக் கொண்டு ஏளனம் செய்கின்றார். இதுவே அவருக்கும் ஸூபிஸத்திற்கும் (உதயகிரிக்கும் அஸ்தகிரிக்குமிடையேயான தூரம் போன்று) வெகு தூரம் என்பதற்கு ஆதாரம். இமாம் தஹபீயின் இக்கருத்தை கலாநிதி அஹ்மத் அப்துல் அஸீஸ் அல் கஸீர் (அகீததுஸ் ஸூபிய்யா வஹ்ததுல் வுஜூதில் கபிய்யா நூலாசிரியர்) மேற்குறித்த தனது நூலில் கூறிக்காட்டுகின்றார். இந் நூலாசிரியர் உயிரோடிருந்தால் அல்லாஹ் அவருக்கு நேர்வழியைக் காட்டுவானாக! மரணித்திருந்தால் அவரது பாவங்களை மன்னிப்பானாக! அதே போன்று இமாம் தஹபீயின் பாவங்களையும் மன்னிப்பானாக!)

اشتهرت قصيدة ابن الفارض : التّائيّة الكبرى والميميّة فأمّا التّائيّة فهي أطولُ قصائده ، إذْ تبلغ 761 بيتا، وقد زعم أنّ النّبي صلّى الله عليه وسلّم أمره أن يُسمّيها ‘نظم السُّلوك ‘ وأمّا الميميّة فهي الّتي تُسمّى ‘ الخمريّة ‘ وعدد أبياتها 41 بيتا، وهاتان القصيدتان أصرَح قصائده، وأوضحُها فى الدّلالة على مذهبه فى وحدة الوجود، وأمّا باقي قصائده فهي – فى ظاهرها – قصائد غَزْليّة، يذكر فيها أوصاف النّساء، وشوقَه إليهنّ، وهو يَرْمُزُ بهنّ إلى الذّات الإلهيّة،

இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அவர்களின் அத் தாஇய்யதுல் குப்றா மற்றும் அல் மீமிய்யஹ் இரு கஸீதஹ் களும் பிரபல்யாமனவை. “தாஇய்யஹ்” என்பது அவர்களின் கஸீதஹ்களில் பெரியது. 761 பாடல் அடிகளைக் கொண்டது. இந்த கஸீதஹ் வுக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “நள்முஸ் ஸுலூக்” என்று பெயர் வைக்கச் சொன்னதாக கூறுகின்றார்கள். “மீமிய்யஹ்” என்ற கஸீதஹ் ஆகிறது அதற்கு “அல் கخம்ரிய்யஹ்” என்றும் சொல்லப்படுகின்றது. அது 41 பாடல் அடிகளைக் கொண்டதாகும். இவ்விரு கஸீதஹ் களும் இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் வழி “வஹ்ததுல் வுஜூத்” என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. அவர்களின் ஏனைய கஸீதஹ்கள் (அதிலே பெண்களில் மீது தனக்குள்ள காதலையும், அவர்களின் வர்ணனைகளையும் கூறுகின்றார்கள்) காதல் கவிதைகள் போன்று வெளிரங்கத்தில் தெரிந்தாலும் அதைக் கொண்டு அவர்கள் இறை காதலையே வெளிப்படுத்துகின்றார்கள்.

ஸூபிய்hக்கள் பேசுகின்ற இறை ஞானக் கருத்துக்களை புரியாத, அவர்களின் “இஸ்திலாஹாத்” பரிபாஷைகளை அறியாத “புகஹாஉ” என்று சொல்லப்படும் சட்டக்கலையோடு தொடர்பு பட்டவர்களில் சிலரும் மற்றும் அதே போல் ஹதீதுக்கலையுடன் தொடர்பு பட்டவர்களில் சிலரும் இறையியலை மறுத்தே வந்துள்ளார்கள். இது வரலாறு. இதே வரிசையில் இலங்கையில் அட்டாளைச்சேனை ஷர்கிய்யாவிலும், பரேலவியும் ஒரு சில கிதாபுகளை ஓதிவிட்டு (மாடு வைக்கோலை சப்புவது போல் காலத்தை கடத்திவிட்டு) வஹ்ததுல் வுஜூத் தத்துவத்துக்கு தவறான வியாக்கியானங்களைக் கூறிக் கொண்டிருக்கின்றார் மௌலவீ பத்றுத்தீன் ஸாஹிப். இதில் சங்கைக்குரிய ஷெய்குனா அப்துல் காதிர் ஸூபீ நாயகத்தையும் சம்பந்தப் படுத்தி சம காலத்தில் இறைஞானம் பேசி வாழ்ந்து மறைந்த தாலயன் பாவா, வதூத் பாவா றஹிமஹுமல்லாஹ் போன்றோரையும், இக்காலத்தின் கதாநாயகர் ஷெய்குனா மிஸ்பாஹீ, மற்றும் அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா ஆகியோரையும் குறை கண்டும், இழிவு படுத்தியும், அவர்கள் பேசி வரும் இறையியலை மறுத்தும் வருகின்றார்.

“எவன் என்னுடைய வலிய்யை எதிர்க்கின்றானோ அவனுடன் போர்ப்பிரகடனம் செய்கின்றேன்” என்று அல்லாஹு தஆலா ஹதீதுல் குத்ஸீயில் கூறியது வஹ்ஹாபிகளுக்கு மாத்திரம் அல்ல என்பதை இவ்விடத்தில் ஞபாகமூட்டிக் கொள்கின்றேன். இவரின் முடிவு இவர் போன்ற நயவஞ்சகர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். வரலாறைப் புரட்டிப் பார்த்தால் இவர் போன்று பலரின் முடிவு எவ்வாறிருந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இமாம் இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் தொடர்…

يقول ابن الفارض أنّ الذّات الإلهيّة كشفت له عن حقيقة الكون، وهو أنّه كلّه مَجَالِى لله تعالى، فكلّ ما يرى ببصـره فهو مظهر للوجود الإلهيّ بزعمه،
இமாம் இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் “இறைவனுடைய “தாத்” தனக்கு இப் பிரபஞ்சத்தின் எதார்த்த நிலையை காட்டியது. இப்பிரபஞ்சம் முழுவதும் அல்லாஹு தஆலாவின் வெளிப்பாடுகள். தன்னுடைய பார்வை கொண்டு காண்பவை அனைத்தும் இறை உள்ளமையின் வெளிப்பாடுகள்” என்று பின்வரும் பாடல் மூலம் கூறுகின்றார்கள்.
جَلَتْ فِى تَجَلِّيْهَا الوجود لناظري – فَفِيْ كُلِّ مَرْئِيٍّ أَرَاهَا بِرُؤْيَةٍ

ولئلّا يتوهّم أحد أنّ هذا الشُّعور بوحدة الوجود أمرٌ طارئٌ، أو مُوَقّتٌ بحال السّكر والمحو، أكّد ابن الفارض على أنّ اعتقاده بوحدة الوجود ثابتٌ فى حَالَيِ الصّحو والمحو،
எவரும் “வஹ்ததுல் வுஜூத்” ஐ உணர்வது புதிதான ஒரு விடயம் அல்லது போதையில் ஏற்படக் கூடிய விடயம் என்று எண்ணாமலிருக்க “வஹ்ததுல் வுஜூத்” ஐ நம்புதல் என் நிலையிலும் தரிபாடான விடயம் என்பதை பின் வரும் பாடல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
فَفِى الصَّحْوِ بَعْدَ الْمَحْوِ لَمْ أَكُ غَيْرَهَا -وَذَاتِيْ بِذَاتِيْ إِذَا تَحَلَّتْ تَجَلَّتِ

إنّ العاشق ابن الفارض – وإن لم يؤلّف كتابا – فهو فانٍ فى الله، وفانٍ فى ذاته ، وفان فى صفاته ، وفانٍ فى أسمائه وأفعاله ، وفانٍ بكليّته فى الله،
இமாம் இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் எந்தவொரு நூலையும் கோர்வை செய்யாவிட்டாலும் அவர்கள் இறைவனில் “பனா” வான, அவனது “தாத்” இல் “பனா” வான, அவனது “ஸிபாத்” தன்மைகளில் “பனா” வான, அவனது “அஸ்மா” க்களில் , அவனது செயல்களில் “பனா” வான ஏன் முழுமையாகவே அவனிலேயே “பனா” வான ஒரு மாமேதையாகும்.
وأمّا أشعاره ‘ التائيّة ‘ فهي أشعار معروفة بين المتصوّفين، ومشهورة فى العالم الصوفيّ ، وما من صوفيّ فى العالم إلّا علم أحواله وأشعاره ومكانته عند الله،
அவர்களின் “அத் தாஇய்யஹ்” என்ற கவித் தொகுப்பாகின்றது ஸூபிய்யாக்களிடம் அறியப்பட்ட ஒன்றாகும். மேலும் ஸூபிஸ உலகில் பிரபல்யமானதுமாகும். உலகில் தோன்றிய எந்தவொரு ஸூபீயாவது இப்னுல் பாரிள் அன்னவர்களின் நிலைகளை அறியாதவராக, அவர்களின் கவிதைகளை அறியாதவராக, அல்லாஹ்விடம் அவர்களின் அந்தஸ்த்தை அறியாதவராக இருக்க முடியாது.

وبالإختصار أنّ ابن الفارض أكبر المتصوّفين حالا وذوقا وشهودا، وأقربهم إلى الله ، ومن لا له دخل فى علم التصوّف وعلمٌ بأحوال العاشقين حكم عليه بالردّة والكفر، وأفتى بإخراجه من بلده، لأنّه كان فى زمانه كالحلّاج المقتول فى زمانه،
சுருங்கக் கூறின், இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் ஸூபிய்யாக்களில் நிலையாலும், அனுபவத்தாலும், காட்சி நிலையாலும்; பெரியவர்கள் என்பதாகும். மேலும் அவர்களில் அல்லாஹ்வை மிக நெருங்கியவர்களுமாவார்கள். ஸூபிஸக் கலையில் அனுபவம் இல்லாத, ஆஷிகீன் – இறை காதலர்கள் பற்றி அறிவில்லாத மடையர்கள், அவர்களை “முர்தத்” என்றும், “காபிர்” என்றும் தீர்ப்புச் செய்தார்கள். அவர்களை ஊரை விட்டும் வெளியேற்றும்படி “பத்வா” மார்க்கத்தீர்ப்பு வழங்கினார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் காலத்தில், இமாம் ஹல்லாஜ் அவர்கள் போன்றாகும்.

வஹ்ததுல் வுஜூத் தொடர்பாக ஸூபிய்யாக்கள் கூறிய கருத்துக்களில் சில…

الشيخ الأكبر محي الدين ابن عربي رحمه الله
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

هو محمد بن علي بن محمد، الحاتميّ الطائيّ المُرسي، الملقّب عند الصوفيّة بالشيخ الأكبر، المشهور عند أهل المشـرق بابن عربي، بدون أداة التعريف، ليُميّزوا بينه وبين القاضي أبي بكر ابن العربي، وأمّا أهل المغرب فشُهرته عندهم ابن العربي، بالألف واللّام، كما يسمّي هو نفسه بذلك فى كتبه،
அவர்களின் இயற் பெயர் முஹம்மத் ஆகும். அவர்களின் தந்தை அலீ என்பவர் ஆகும். ஸ்பெய்ன், ஹாதிம் தாஈ வமிசத்தைச் சேர்ந்தவர்கள். ஸூபிய்யாக்களிடம் “அஷ் ஷெய்குல் அக்பர்” என்று பெயர் பெற்றவர்கள். பூமி மத்தியின் கிழக்குப் பகுதியில் வாழ்பவர்களிடம் “அலிப், லாம்” இல்லாமல் “இப்னு அறபீ” என்று பிரபல்யமானவர்கள். காரணம் அந்த மக்கள் அல் காளீ அபூ பக்ர் இப்னுல் அறபீ அவர்களை விட்டும் வேறுபடுத்தி அறிவதற்கேயாகும். மொரோக்கோ வாசிகளிடம் “இப்னுல் அறபீ” என்பதாகும். (“அலிப், “லாம்” சேர்த்து) அஷ் ஷெய்குல் அக்பர் நாயகம் அன்னவர்களும் இவ்வாறே “அலிப்” , “லாம்” உடனே தன்னுடைய நூற்களில் எழுதுகின்றார்கள்.
وُلد فى مدينة مُرسيّة بالأُندلس سنة 560 هـ ، ولمّا بلغ الثامنةَمن عمره انتقلت أسرته إلى مدينة إشبيلية، وفيها بدأ بطلب العلم، فدرس القرآن والحديث والفقه، وعمل فى شبابه كاتبا لبعض الحُكّام،
ஸ்பெயினின் “முர்சியா” நகரில் ஹிஜ்ரீ 560ல் பிறந்தார்கள். தனது 8 வது வயதில் தன் குடும்பத்தாருடன் இஷ்பீலிய்யா – SEVILLA – நகரை நோக்கிச் சென்றார்கள். அங்கேதான் கல்வி கற்கத் தொடங்கினார்கள். அல் குர்ஆன், ஹதீது, சட்டம் போன்றவற்றைக் கற்றார்கள். தன்னுடைய வாலிப வயதில் சில நீதிபதிகளுக்கு எழுத்தாளராகப் பணி புரிந்தார்கள்.

ثمّ سلك طريق التصوّف، فانقطع عن الدنيا، وتزهَّدَ، واعتزلَ النّاس، وسَاحَ فى بُلدان الأندلس وشمالي إفريقة مُدّة عشـر سنين، إلتقى خلالها بعدد من شيوخ التصوّف،
பின்பு “துன்யா” இவ்வுலக தொடர்புகளைத் துண்டித்து “ஸூபிஸ” வழியில் சென்றார்கள். துறவரம் பூண்டு, மனித தொடர்புகளைக் குறைத்துக் கொண்டார்கள். சுமார் பத்து வருடங்கள் ஸ்பெய்ன் மற்றும் ஆபிரிக்க பகுதிகளில் சுற்றித் திரிந்தார்கள். இக்காலப் பகுதியில் ஸூபீகள் பலரைச் சந்தித்தார்கள்.
ثمّ اتّجه إلى مكّة فأقام بها سنتين، ثمّ أقام بمَلَطْيَة من بلاد الأَنَاضُول، وتزوّج بأمّ تِلميذه محمد القَونَوي، ثمّ استقرّ فى دمشق، إلى وفاته سنة 638 هـ (الأَنَاضُول معناها الشـرق، وتُطلق الآن على الأراضي الواقعة شرقيّ البحرالمُتوسِّط،وهي جزء من الجمهورية التركيّة)
பின்பு புனித மக்கஹ் நகரை நோக்கிச் சென்றார்கள். அங்கே இரண்டு வருடங்கள் தங்கினார்கள். அதன்பின் துருக்கி நாட்டு அனாளூல் – மலத்யஹ் பகுதியில் சிறு காலம் தங்கினார்கள். தன்னுடைய மாணவர் முஹம்மத் கவ்னவீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் தாயைத் திருமணம் செய்தார்கள். பின் டமஸ்கஸ் நகரிலேயே தனது “வபாத்” வரை (ஹிஜ்ரீ – 638) தங்கியிருந்தார்கள்.
والشيخ الأكبر محي الدين ابن عربي رحمه الله هو أكبر دُعاة وحدة الوجود، يرى ابن عربي أن (ما فى الوجود إلّا الله ) وأنّ جميعَ ما يُدركون بالحواسّ هو مظهرٌ للهِ تعالى، وهذه عنده ‘ حقيقةُ الحقائق ‘، الّتي تُفرِّق بين العارف بالله والجاهل به،
அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் அன்னவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய மகான்களில் மிகப் பிரசித்தி பெற்ற பெரிய மகான் ஆவார்கள். அவர்கள் “அல்லாஹ் தவிர எதுவுமே இல்லை” என்று நம்புகின்றார்கள். மேலும் புலன்களால் உணரப்படுபவை அனைத்தும் அல்லாஹு தஆலாவின் வெளிப்பாடுகள் என்றும் கருதுகின்றார்கள். இது – இந்த நம்பிக்கை அவர்களிடம் அல்லாஹ்வை அறிந்த ஞானிக்கும், அவனை அறியாத ஜாஹிலுக்கும் இடையே பிரித்துக் காட்டக் கூடிய “ஹகீகதுல் ஹகாயிக்” – எதார்த்தங்களின் எதார்த்தம் ஆகும்.
يقول الشيخ الأكبر ابن عربي رحمه الله(فإنّ العارف من يَرى الحقّ فى كلّ شيئ، بَلْ يراه عينَ كلّ شيئ) – (فصوص الحكم ، ص 192)

ஆரிப் – இறை ஞானி என்பவர் அனைத்து வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வை – ஹக்கை பார்ப்பவரே! இல்லை, அனைத்தையும் அவனாகப் பார்ப்பவரே! என்று அஷ் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்.
(புஸூஸுல் ஹிகம் – பக்கம்192)
فالعوامّ والمحجوبون يفرِّقون بين الحقّ والخلق، ويُثبتون للكون وُجودا غير وجود الله، ولكن هذا عند ابن عربي وهمٌ وخيالٌ، وفى هذا يقول : إنّما الكون خيالٌ، وهو حقٌّ فى الحقيقة ، (فصوص الحكم ، ص 160)

பாமரர்களும், திரையிடப்பட்டவர்களும் ஹக் (இறைவனையும்) ஐயும், கல்க் – படைப்பையும் பிரிக்கின்றார்கள். படைப்புக்கு அல்லாஹ்வின் வேறான ஒரு வுஜூத் – உள்ளமையை தரிபடுத்துகின்றார்கள். ஆனால் இது இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களிடம் பேதமை ஆகும். இதையே அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். படைப்பென்பது மாயை ஆகும். எதார்த்தத்தில் அது ஹக் – இறைவனே!
(புஸூஸுல் ஹிகம், பக்கம் – 160 )

والكون عنده معدومٌ ، والّذي جَعَلَنا نَتَوَهَّمُ وجودَه هو سَرَيَانُ الله فيه،
படைப்பென்பது அவர்களிடம் “இல்லாதது”. அது இருப்பது போன்று எமக்கு காட்சியளிப்பது அதிலே “ஹக்” ஊடுருவிப் பாய்வதாகும்.
يقول الشيخ الأكبر ابن عربي: ولو لا سَرَيَانُ الحقّ فى الموجودات بالصورة، ما كان للعالَمِ وجود، (فصوص الحكم ، ص 55)
படைப்புக்கள் என்ற உருவத்தில் ஹக் தஆலா ஊடுருவிப் பாயவில்லையானால் இவ் வையகத்திற்கு “வுஜூத்” உள்ளமையே இருந்திருக்காது. (புஸூஸுல் ஹிகம், பக்கம் 55)
فالشيخ الأكبر ابن عربي لا يؤمن بالخلق من العدم ، وهو يفسّر وجود الموجودات بالتّجَلّى الإلهيّ الدّائم ، وظهورِ الله بصورة الكائنات، فعلى الحقيقة ليس هناك عند الشيخ الأكبر ابن عربي خالقٌ ومخلوقٌ،
அஷ் ஷெய்குல் அக்பர் நாயகம் (இல்லாத) சிருஷ்டியை நம்பவில்லை. இப்படைப்புக்கள் இருப்பதானது நிரந்தரமான, இறைவனின் “தஜல்லீ” வெளிப்பாடு என்றே விபரிக்கின்றார்கள். அங்கே ஷெய்குல் அக்பர் நாயகத்திடம் “காலிக்” படைத்தவன், “மக்லூக்” படைப்பு என் இரண்டு இல்லை. இக்கருத்தைப் பின்வரும் கவியின் மூலம் கூறிக் காட்டுகின்றார்கள்.
فَالْحَقُّ خَلْقٌ بِـهَذَا الْوَجْهِ فَاعْتَبِرُوْا
وَلَيْسَ خَلْقًا بِـذَاكَ الْوَجْهِ فَادَّكِرُوْا
مَنْ يَدْرِ مَا قُلْتُ لَمْ تَخْذُلْ بَصِيْرَتُهُ
وَلَـيْـسَ يَـدْرِيْهِ إِلَّا مَنْ لَـهُ بَـصَرٌ
جَـمِّـعْ وَفَـرِّقْ فَـإِنَّ الْعَيْـنَ وَاحِدَةٌ
وَهِـيَ الْكَثِـيْـرَةُ لَا تَبْقَـى وَلَا تَذَرُ
(فصوص الحكم ، ص 79)
وجعل الصوفيّة قولَ الشيخ الأكبر ابن عربي هو القولَ الفصلَ، والمعتمدَ فى مسائل التصوّف، وصار مِقْياسَ العلم بالتصوّف هومقدارُ ما يستوعب الصوفيُّ من آراء الشيخ الأكبر ابن عربي، بل اعتقدوا أنّ إدامةَ مطالعةِ كتبِه تجعل المرأ وليّا عارفا بالله ، (مراتب الوجود للجيلي، ص – 9 )

ஸூபிய்யாக்கள் இப்னு அறபீ நாயகத்தின் சொல்லையே இறுதி முடிவாக எடுத்துக் கொள்கின்றார்கள். ஸூபிஸம் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர்களின் சொல்லையே நம்பத்தகுந்த வார்த்தையாகவும் எடுத்துக் கொள்கின்றார்கள். ஒரு ஸூபீயின் தஸவ்வுப் பற்றிய அறிவின் அளவுகோல் அவர் இப்னு அறபீ நாயகத்தின் கருத்துக்களை எந்தளவு புரிந்து கொள்கின்றாரோ அந்த அளவு ஆகும். இல்லை. இப்னு அறபீ நாயகத்தின் நூற்களை ஒருவன் தொடர்ந்து படித்துவருவதால் அவனை அல்லாஹ்வை அறிந்த வலிய்யாக ஆக்கும் என்று நம்புகின்றார்கள்.

வஹ்ததுல் வுஜூத் தொடர்பாக ஸூபிய்யாக்கள் கூறிய கருத்துக்களில் சில… (இப்னு அறபீ நாயகம்…)
وباختصارٍ فقد صار ابن عربي (بُرهان متقدّمي هؤلاء الطائفة، وحُجّةَ متأخِّرِيهم)
(المكتوبات للسّرهندي، 2 ஃ5 )

சுருங்கக் கூறின் இப்னு அறபீ நாயகம் இக் கூட்டத்தாரில் (ஸூபீகளின்) முன்னோர்களின் சான்றாகவும், பின்னோர்களின் ஆதாரமாகவும் ஆகிவிட்டார்கள்.
(அல் மக்தூபாத் லிஸ் ஸர்ஹன்தீ, பக்கம் 2-5 )

ويزعم محمد البُوطي أنّ ما فى كُتب ابن عربي من الأقوال الدالّة على وحدة الوجود مَدْسوسٌ عليه، ويرى أنّ الحقّ (الإمساك عن اتّهامه بأيّ جنوح أو زيغ، فإنّنا لا نملك أن نَجْزِمَ بأن هذا الباطل من كلامه يقينا، بل لا نملك حتّى الظّنَّ الراجح بذلك)
(التصوّف السليم جوهر ا|لإسلام، مقال للبوطي)
முஹம்மத் அல் பூதீ, இப்னு அறபீ நாயகம் அவர்களின் நூல்களில் “வஹ்ததுல் வுஜூத்”ஐ காட்டக் கூடிய அனைத்தும் அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுகின்றார். அவர்களை எந்தவொரு தவறைக் கொண்டும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதும், அவர்களின் பேச்சிலிருந்து இந்தப் பொய்யை உறுதி செய்யாமலிருப்பதும், நல்லெண்ணம் கொள்ளாமலிருப்பதும் உண்மை என்றும் கூறுகின்றார்.
(அத் தஸவ்வுபுஸ் ஸலீம் ஜௌஹறுல் இஸ்லாம் – மகாலுல் பூதீ)
وممّا ينقضُ هذا الزعم أنّ كتابه المشهور ‘ الفتوحات المكيّة ‘ يوجد منه الآن نسخة كاملة فى سبعة وثلاثين مجلّدا، هي بخطّ ابن عربي نفسه، وكتابه ‘ فصوص الحكم ‘ يوجد منه الآن نسخة بخطّ محمد القونوي تلميذ ابن عربي وربيبه، وعلى هذه النسخة سماع مصدّق عليه من ابن عربي، فهل دسّ ابن عربي على نفسه؟
(مؤلّفات ابن عربي لعثمان يحيى، ص – 431 ، 477 ، 479 )
இப்னு அறபீ நாயகம் அன்னவர்களின் பிரபல்யமான “அல் புதூஹாதுல் மக்கிய்யஹ்” என்ற நூல் இப்போதும் 37 வால்யூம் கொண்ட அவர்களின் கையெழுத்துப் பிரதிகளாக கிடைக்கப் பெறுவதும், மேலும் அவர்களின் பிரதான மாணவனும், வளர்ப்பு மகனுமாகிய முஹம்மத் அல் கவ்னவீ அவர்களின் கையெழுத்துடன் “புஸூஸுல் ஹிகம்” என்ற நூல் கிடைக்கப் பெறுவதும் (இப்பிரதிகளில் இப்னு அறபீ நாயகம் அவர்கிடமிருந்து கேட்டு உண்மைப்படுத்தப்பட்டவைகளும் உள்ளவை குறிப்பிடத்தக்கது), மேலே கூறிய முஹம்மத் அல்பூதீ உடைய நம்பிக்கையை மறுக்கின்றன. ஆகவே இப்னு அறபீ நாயகம் தன்மீது தானே இட்டுக் கட்டினார்களா? என்ற வினாவும் உண்டாகின்றது.
(முஅல்லபாது இப்னி அறபீ லிஉத்மான் யஹ்யா, பக்கம் – 431, 477, 479)

وهذا الكلام الوارد فى فصوص الحكم يؤمن به كلّ الصوفيّة، لأنّهم يؤمنون بأنّ ابن عربي هو وليّ الأولياء، وصدّيق الصِّدّيقين، ومقَرَّبُ المقرّبين، والشيخ الأكبر والكبريت الأحمر، وكتابه ‘ فصوص الحكم ‘ هو أعظم مؤلّفاته كلّها قدرًا، وأعمقُها غورا، وأبعدها أثرا، وقد شَرَحَه شُرَّاحٌ كثيرون من أئمّة الصوفيّة، وكُبرائهم حتّى صار ابن عربي يُعرف بِـ صاحب الفصوص،
இந்த புஸூஸுல் ஹிகம் என்ற நூலில் வரக் கூடிய பேச்சுக்களை அனைத்து ஸூபிய்யாக்களும் முழுமையாக நம்புகின்றார்கள். ஏனெனில் இப்னு அறபீ நாயகத்தை அவர்கள் அவ்லியாஉகளுக்கெல்லாம் அதிகாரியானவர்கள் என்றும், ஸீத்தீகீன்களுக்கெல்லாம் ஸித்தீக் என்றும், இறை நெருக்கத்தைப் பெற்றவர்களில் எல்லாம் மிக நெருக்கம் பெற்றவர்கள் என்றும், பெரும் ஷெய்கு (அஷ் ஷெய்குல் அக்பர்) என்றும், செங்கந்தகம் (அல் கிப்ரீதுல் அஹ்மர்) என்றும் நம்புகின்றார்கள். அவர்களின் “புஸூஸுல் ஹிகம்” என்ற நூலை அவர்கள் கோர்வை செய்த நூற்களில் மிக ஆழம் நிறைந்த வலுப்பமானது என்றும் நம்புகின்றார்கள். அந்த நூலுக்கு ஸூபீ இமாம்களில் நின்றும் பல விரிவுரையாளர்கள் விரிவுரை எழுதியுள்ளார்கள். இப்னு அறபீ நாயகம் அன்னவர்களை “ஸாஹிபுல் புஸூஸ்” என்று அறியப்படும் அளவுக்கு விரிவுரை எழுதியுள்ளார்கள்.

ويقول ابن عربي نفسُه عن كتاب (الفصوص) ما يلي، أمّا بعد، فقد رأيتُ رسول الله صلّى الله عليه وسلّم فى مُبشِّرةٍ اُريتُها فى العشـر الآخر من محرّم سنة سبعٍ وعشـرين وستّمأةٍ، بِمحرُوسة دمشق، وبيده صلّى الله عليه وسلّم كتابٌ، فقال لي: هذا كتاب ‘فصوص الحكم ‘ ، خُذْهُ واخرج به إلى النّاس ينتفعون به، فقلت السَّمْعَ والطَّاعةَ لله ولرسوله وأولى الأمر منا كما أمرنا ، فحققت الأمنية وأخلصت النيّة، وجرّدتُ القصد والهمّة إلى إبراز هذا الكتاب ، كما حدّه لي رسولُ الله صلّى الله عليه وسلّم من غير زيادة ولا نُقصان،
(فصوص الحكم ، ص 47 )

இப்னு அறபீ நாயகம் தனது புஸூஸுல் ஹிகம் என்ற நூலைப் பற்றி கூறுகையில் பின்வருமாறு கூறுகின்றார்கள். அறிந்து கொள்! ஹிஜ்ரீ 627ம் ஆண்டு முஹர்றம் இறுதிப்பத்தில் நான் நபீ பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைக் கனவில் கண்டேன். அவர்களின் முபாறகான கரத்தில் ஒரு “கிதாப்” நூல் ஒன்று இருந்தது. இது “புஸூஸுல் ஹிகம்” என்ற நூல் இதை எடுத்து மக்களிடம் கொண்டு சேருங்கள். அவர்கள் இதைக் கொண்டு பயனடைவார்கள் என்று சொன்னார்கள். நான் “அல்லாஹ்வுக்கும் அவனது திருத்தூதருக்கும், அவனது அவ்லியாஉகளுக்கும் செவிமடுத்து, வழிப்படுமாறு இறைவன் கட்டளையிட்டதுபோல் நான் செவிமடுத்து வழிப்படுகின்றேன் என்று கூறினேன். நம்பிக்கையை உறுதி செய்து கொண்டு, எண்ணத்தை தூய்மைப்படுத்திக் கொண்டு இந்தப் புத்தகத்தை (கிதாபை) வெளிப்படுத்தும் நோக்கத்தை (எனக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கட்டளையிட்டது போன்று கூட்டாமலும், குறைக்காமலும்) உறுதி செய்து கொண்டேன்.
(புஸூஸுல் ஹிகம், பக்கம் – 47)
ويقرّر ابن عربي: أنّ الله تعالى يتَجلَّى فى جميع الكائنات ، ويظهر فى جميع المظاهر ، ولكن أكمل شُهودٍ له وأجملُه هو شُهودُه فى النّساء،
இப்னு அறபீ நாயகம் பின்வருமாறு பதிவிடுகின்றாhர்கள். அல்லாஹு தஆலா சகல வஸ்த்துக்களிலும் வெளியாகின்றான். எல்லா வெளிப்பாடுகளிலும் “ழாஹிர்” வெளியாகி உள்ளான். ஆனால் அவனை “ஷுஹூத்” காணுதலில் மிக சம்பூரணமானதும், அழகானதும் பெண்களிலேதான் என்று கூறியுள்ளார்கள்.
فإذا شاهد الرجل الحق فى المراة كان شهودا فى منفعل، وإذا شاهده فى نفسه – من حيث ظهور المرأة عنه – شاهده فى فاعل، وإذا شاهده فى نفسه من غير استحضار صورة ما تكوَّن عنه كان شهوده فى منفعل عن الحق بلا واسطة، فشهوده للحق فى المرأة أتمّ وأكمل، لأنّه يشاهد الحقّ من حيث هو فاعل منفعل، ومن نفسه من حيث هومنفعل خاصة، فلهذا أحبّ صلّى الله عليه وسلّم النّساء لكمال شهود الحقّ فيهنّ، إذ لا يشاهد الحقّ مجردا عن المواد أبدا، فإنّ الله بالذات غنيّ عن العالمين،
ஒரு மனிதன் ஹக் தஆலாவை பெண்ணிலே காட்சி பெற்றால் அது தனது பிரதிபலிப்பில் பெறும் காட்சியாகும். அவன் தன்னிலே காட்சி பெற்றால் “செய்பவன்” என்ற நிலையில் பெறும் காட்சியாகும். தன்னை விட்டும் வெளியான ஒரு உருவத்தின் உதவி இன்றி தன்னிலே ஹக் உடைய ஷுஹூதைப் பெற்றால் அவனுடைய “ஷுஹூத்” காட்சி ஒரு “வாஸிதா” உதவியின்றி பிரதிபலிப்பிலே பெற்ற ஷுஹூதாக – காட்சியாக ஆகும். எனவே அவன் பெண்ணிலே பெறக் கூடிய காட்சியே சம்பூரணமானதாகும். ஏனெனில் அவன் ஹக்கை “பாஇல், முன்பஇல்” (செயலுக்குரியவன், அதன் பிரதிபலிப்பு) என்ற அடிப்படையில் காணுகின்றான். அவனில் நினறும் அவனே குறிப்பாக பிரதிபலிப்பவன் என்ற அடிப்படையில் காணுகின்றான். இதனாலேயே நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பெண்களை விரும்பினார்கள். அவர்களிலே சமபூரண காட்சியை பெற முடியும் என்பதனாலேயே! ஏனெனில் ஒருபோதும் ஒரு பொருளின்றி ஹக்கை காணமுடியாது. அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் உள்ளமை (தாத்) கொண்டு தேவையற்றவன்.
وإذا كان الأمر من هذا الوجه ممتنعا، ولم تكن الشهادة إلا فى مادة، فشهود الحقّ فى النّساء أعظم الشهود وأكمله،
(فصوص الحكم ، ص 217 )
இந்த அடிப்படையில் இல்லையென்றால் ஒரு பொருளின்றி ஹக்கை ஷுஹூத் செய்ய முடியாது. எனவே பெண்களில் காட்சி பெறுதல் என்பது காட்சிகளில் மிக வலுப்பமானதும், சம்பூரணமானதுமாகும்.
(புஸூஸுல் ஹிகம் , பக்கம் – 217 )

وجعل ابن عربي اعتقادَ وحدة الوجود أصلَ أصولِ طريقة الصوفيّة المُسمّاةِ ‘ الأكبريّة ‘ المنسوبة إليه من حيث إنّه شيخ الصوفيّة الأكبر، كما بثّها فى كتبه ورسائله التّي تجاوزت 400 مؤلّف، من مؤلّفاته،
இப்னு அறபீ நாயகம் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை நம்புவதை “அல் அக்பரிய்யஹ்” எனும் தன்னுடைய ஸூபிஸ தரீகஹ் வின் அடிப்படையாக ஆக்கியுள்ளார்கள். தன்னுடைய 400 க்கும் அதிகமான நூல்களில் வியாபித்திருப்பது போன்று. அவர்களின் நூல்களில் பிராதனமானவைகள் சில…
01 ) الفتوحات المكيّة
02 ) فصوص الحكم
03 ) إنشاء الدوائر
04 ) التنزُّلاتُ المَوصلِيّة
05 ) الفناء
06 ) التجلّيات
07 ) ذخائر الأعلاق وترجمان الأشواق،

01. அல் புதூஹாதுல் மக்கிய்யஹ்.
02. புஸூஸுல் ஹிகம்
03. இன்ஷhஉத் தவாஇர்
04. அத் தனஸ்ஸுலாதுல் மவ்ஸிலிய்யஹ்.
05. அல் பனாஉ
06. அத்தஜல்லியாத்
07. தகாயிருல் அஃலாக் வதர்ஜுமானுல் அஷ;வாக்.

يقول عبد الوهّاب الشعراني : اعلم يا أخي أنّي اِطَّلعتُ من كلام أهل الكشف ما لا يُحصـى من الرسائل، وما رأيت فى عبارتهم أوسعَ من عبارة الشيخ الكامل المحقّق مربّي العارفين الشيخ محي الدين ابن عربي، (اليواقيت والجواهر، 1 ஃ 3 )

يقول الشيخ الأكبر ابن عربي رحمه الله:

இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். நான் ஸூபிய்யாக்களின் (கஷ்புடையவர்களின்) எண்ணற்ற நூல்களை பார்த்துள்ளேன். அவற்றில் அஷ் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்களின் வசனங்களைப் போன்று விசாலமான, கருத்தாழமுள்ள ஒன்றை நான் காணவில்லை என்று கூறியுள்ளாரகள்.
(அல் யவாகீது வல் ஜவாஹிர் – 1(3) )
سبحان من أظهر الأشياء وهوعينها.
(الفتوحات المكيّة ، ص 4 ஃ 136 )
இப்னு அறபி நாயகம் அன்னவர்கள் அல் புதூஹாதுல் மக்கிய்யஹ் என்ற தன்னுடைய நூலின் 4ம் பாகம் 136 வது பக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

“அனைத்து வஸ்த்துக்களாகவும் தானே இருந்து கொண்டு அவற்றை வெளிப்படுதர்தியவன் துய்யவன்”

(முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம்……)

يقول ابن عربي، إذا قيل لك بِمَاذا وحّدت الحقّ؟ فقل بقبوله الضِّدَّين معا، فإن قيل ما معنى الضِّدّين؟ قل ما من كون يُنعتُ أو يُوصف بأمرٍ إلّا وهو مسلوبٌ من ضِدِّ ذلك الأمر، عندما يُنعت به من ذلك الوجه، وهذا الأمر أي قبول الضِّدّين يصحّ فى نعت الحقّ خصوصا، إذ ذاتُه لا تُشبهُ الذّوات، والحُكم عليه لا يشبه الأحكام،(التجليات لابن عربي، ص447 )
மேலும் இப்னு அறபி நாயகம் கூறுகின்றார்கள். உன்னிடம் யாராவது நீ எதைக் கொண்டு இறைவனை தவ்ஹீத் செய்தாய் (ஒன்றாக்கினாய்) என்று கேட்டால், அவனிடம் “அவன் (அல்லாஹ்) எதிரான தன்மைகளை ஒரே நேரத்தில் ஏற்றுக் கொள்வதால்” என்று சொல். “ளித்தைன்” எதிரான இரண்டு எது என்று கேட்டால், எந்தவொரு பொருளாயினும் அதை வருணிக்கப்படும் போது அதற்கு எதிரான ஒன்று இருக்கும். ஆனால் இறைவனை வருணிக்கும் போது அந்த வருணனைக்கு எதிரானதையும் அவன் ஏற்றுக் கொள்கின்றான். அவனுடைய உள்ளமை “தாத்” ஏனைய உள்ளமைகளுக்கு (படைப்புக்களின் “தாத்” ) ஒப்பாகாது. அவனுடைய சட்டம் ஏனைய சட்டங்களுக்கு ஒப்பாகாது.
(அத் தஜல்லியாத் லிப்னி அறபீ , பக்கம் – 447 )
قال الشيخ ابن عربي فى الباب الثمانين ومأتين من الفتوحات المكيّة اعلم أنّه لا يصحّ من إنسان عبادةٌ إلّا إن كان يعرف ربّه على القَطع، وأمّا من أقام فى نفسه معبودا ليعبده على الظنّ لا على القطع فلا بدّ أن يحزنه ذلك الظنّ ولا يغني عنه من الله شيأ،
قال ابن عربي فى أكثر كتبه:
إنّما الكون خَيال – وهو حقٌّ فى الحقيقة
كلّ من يعرف هذا – حاز أسرارَ الطريقة

وكذلك قال فى أكثر كتبه : إذا تغيّبتُ بَدَا وإن بَدَا غَيَّبَنِيْ
(تفسير ابن عربي، 2 ஃ 31 )
இப்னு அறபீ நாயகம் தனது அல் புதூஹாதுல் மக்கிய்யஹ் என்ற நூல் 280 வது பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். அறிந்து கொள். எந்தவொரு மனிதனின் வணக்கமும் அவன் இறைவனை சரியாக அறியாத வரை “ஸிஹத்” ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆகாது. தன்னுடைய எண்ணத்தில் ஒரு “மஃபூத்” வணங்கப்படக் கூடிய ஒன்றை ஆக்கி அதை வணங்க வேண்டுமென்று எண்ணி அவன் வணங்கினால் அவனுக்கு அது கவலையையே ஏற்படுத்தும். மாறாக அல்லாஹ்விடமிருந்து எதனையும் பெற்றுத் தராது.

இப்னு அறபி நாயகம் தன்னுடைய அதிக நூல்களில்,

“படைப்பு என்பது மாயை –
எதார்த்தத்தில் அது ஹக்கேதான்.
இதை அறிந்த அனைவரும் –
தரீகஹ் வின் இரகசியங்களைப் பெற்றுக் கொண்டான்”

என்று கூறியுள்ளார்கள். அதே போன்று அநேக நூல்களில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

“நான் மறைந்தால் அவன் வெளியாவான். அவன் வெளியானால் நான் மறைவேன்”

(தப்ஸீர் இப்னி அறபீ – 2-31 )

اعلم أنّ الأصل فى صحّة الرؤية ما رواه الطبراني وغيره مرفوعا رأيتُ اللّيلة ربّي فى صورة شابٍّ أمرد قطط له وفرة من شعر، وفى رجليه نعلان من ذهب، الحديث، قال الحافظ السيوطي رحمه الله وهو حديث صحيح، (اليواقيت والجواهر للشعراني، ج – 1 ، ص – 115 )
அறிந்து கொள்! கனவில் இறைவனைக் காணலாம் என்பதில் அடிப்படையாகின்றது இமாம் தப்றானீ உள்ளிட்ட சில முஹத்திதீன்கள் பதிவு செய்த ஹதீது ஆகும். “நான் என்னுடைய இறைவனை முகத்தில் முடி முளைக்காத சுருண்டை முடியுள்ள வாலிபனின் உருவில் இரவு கனவில் கண்டேன். அதிக முடியிருந்தது. அவனின் இரு கால்களிலும் தங்கத்திலான இரு செருப்புக்கள் இருந்தது… (இந்த ஹதீது ஸஹீஹ் என்று இமாம் அல் ஹாபிழ் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அல் யவாகீது வல் ஜவாஹிர் லிஷ் ஷஃறானீ, பாகம் – 01, பக்கம் – 115)

قال الشيخ محي الدين ابن عربي فى الباب الأحد وثمانين وثلاثمأة فى الفتوحات المكيّة قد اضطربت عقول العلماء فى معنى هذا الحديث وفى صحّته، فَنَفَاهُ بعضُهم،وأثبته بعضُهم، وتوقّفَ فى معناه وأوّله، ولا يحتاج الأمر إلى تأويل، فإنّه صلّى الله عليه وسلّم إنّما رأى هذه الرؤيا فى عالم الخيال، الّذي هو النّوم، ومن شأن الخيال أنّ النائم يَرى فيه تجرُّدَ المعاني فى الصُّور المحسوسة، وتجسُّدَ ما ليس من شأنه أن يكون جسدًا، لأنّ حضرته تُعطي ذلك، فما ثمّ أوسعُ من الخيال ،قال : ومن حضرته أيضاظهرَ وجودُ المُحال، فإنّك ترى فيه واجب الوجود الّذي لا يقبل الصُّورَ فى صورة ، ويقول لك مُعبَّرُ المنام صحيحٌ ما رأيتَ، ولكنّ تأويلها كذا وكذا، فقد قَبِلَ المُحالَ الوجودُ، فى هذه الحضـرة، فإذا كان الخيالُ بهذه القوّةِ من التّحكّم فى الأمور من تجسُّدِ المعاني وجعلِه ما ليس قائما بنفسه وهو مخلوقٌ، فكيف بالخالق؟ وكيف يقول بعضهم إنّ الله تعالى غيرُ قادرٍ على خلق المُحال، وهو يشهد من نفسه قدرة الخيال على المحال، وأطال الشيخ الكلام على ذلك فى الباب الثامن والتّسعة ومأة، ثمّ قال ولو لمْ يكن من قُوّة الخيال إلّا انّه يريك الجسم فى مكانين، فيكون الإنسان نائما فى بيته ويرى فى منامه أنّ عينَ جسمه فى مدينة أخرى، وعلى حالة أخرى، تخالف حاله الّذي هو عليه فى بيته، وهوعينُه لا غيرُه، (اليواقيت ،ج- 1 ، ص – 115 )
இப்னு அறபீ நாயகம் அவர்கள் தன்னுடைய அல் புதூஹாதுல் மக்கிய்யஹ் என்ற நூல் 381 வது பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். மேலே கூறப்பட்டுள்ள ஹதீதை விளங்குவதிலும், சரியானதா என்பதிலும் உலமாஉகளின் புத்திகள் தடுமாறின. அவர்களிற் சிலர் அதை மறுத்தனர். சிலர் தரிபடுத்தி அதன் கருத்தில் நின்று வலிந்துரை செய்தார்கள். ஆனால் எந்த வலிந்துரையும் அவசியமில்லை. நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்தக் கனவை கண்டது “ஆலமுல் கயால்” கனவுலகிலேயே. (தூக்கத்திலேயே). கனவுலக விடயத்தில் நின்றுமுள்ளதுதான் ஒரு மனிதன் கருத்து ரீதியானதை புலன்களால் உணரக் கூடியதாக கனவுலகில் காண்பதென்பது முடியுமான ஒன்றாகும். ஜடமில்லாத ஒன்றை ஜடத்தில் காண்பதும் முடியுமான ஒன்றாகும். ஏனெனில் கனவுலகம் என்பது அதைக் கொடுக்கும். அதைவிட விசாலமான ஒன்று இல்லை. மேலும் கூறுகின்றார்கள். அந்தக் கனவுலகின் விடயத்தில் நின்றுமுள்ளதுதான் அசாத்தியமான ஒன்றையும் அசாத்தியமாகக் காட்டும். எந்தவொரு உருவத்தினையும் ஏற்காத “வாஜிபுல் வுஜூத்” ஆகிய அல்லாஹ்வைக் காண்கின்றாய். நீ கண்ட கனவு சரியானது என்று சொல்வார். ஆனால் அதன் வலிந்துரை இவ்வாறு என்றும் சொல்வார். கனவுலகில் அசாத்தியமான ஒன்றை உள்ளமை ஏற்றுக் கொள்கின்றது. கருத்து ரீதியானவற்றை ஜடமாகக் கண்டு அதற்கு சட்டம் எடுக்க முடியுமானால் (அது படைப்பாக இருக்கின்ற நிலையிலும்) படைத்தவனுக்கு ஏன் முடியாது? அவர்களிற் சிலர் எவ்வாறு இறைவனுக்கு அசாத்தியமானதைப் படைக்க முடியாதென்று கூற முடியம்? அவனுக்கு அசாத்தியமான ஒன்றை “கயால்’’ ஆக ஆக்க முடியும். இப்னு அறபீ நாயகம் அவர்கள் இது தொடர்பாக 108, 109ம் பாடங்களில் நீட்டிக் கொண்டே செல்கின்றார்கள். கனவுலகில் இவ்வாறு நடப்பது அசாத்தியம் என்றால் எப்படி ஒரு மனிதன் தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் (அந்த நேரத்தில் தன்னுடைய எதார்த்தமான நிலைக்கு மாற்றமாக) இன்னொரு நகரில் வேறோரு நிலையில் தன்னைக் காண்பான்? அது அவனேதான் வேறான ஒன்றல்ல.
(அல் யவாகீத், பாகம் 01, பக்கம் 115 )

قال الشيخ أبو طاهر رحمه الله فعلم أنّه لا يلزم من كون الشيئ لا صورة له أن لا يُرى في صورة على ما قرّرناه ، ألا ترى أنّ كثيرا من الأشياء التي لا أشخاص لها ولا صورة تُرى في المنام بأمثلة تناسبها بأدنى معنى ولا يوجب التشبيه ولا التمثيل، وذلك كالمعاني المجرّدة مثل الإيمان والكفر والشـرف والقرآن والهدي والضّلالة والحياة الدنيا ونحو ذلك،

அஷ் ஷெய்கு அபூ தாஹிர் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கூறுகின்றார்கள். ஒரு உருவமில்லாத வஸ்த்து உருவத்தில் பார்க்கப்படுவது முடியாதென்பதல்ல. நீ பார்க்கவில்லையா? எத்தனையோ உருவமற்ற வஸ்த்துக்கள் கனவுலகில் பொருத்தமான உருவங்களில் பொருந்தக் கூடிய கருத்துக்களைத் தரக்கூடிய அமைப்பில் காண்பிக்கப்படுகின்றது. ஒப்புதல்களாகவோ, உதாரணங்களாகவோ அல்ல. அது ஈமான், “குப்ர்” , சிறப்பு, அல் குர்ஆன், நேர்வழி, வழிகேடு, உயிர் வாழ்தல் போன்ற கருத்து ரீதியானவை போல.

وأمّا الإيمان فكقول النبيّ صلّى الله عليه وسلّم رأيت النّاس في المنام يُعرضون، منهم من قميصه إلى كعبه، ومنهم من قميصه إلى أنصاف ساقَيْهِ، فجاء عمر بن الخطاب وهو يجرّ قميصه ، فقالوا يا رسول الله ما أوّلتَ ذلك؟ قال الإيمان، فالإيمان لا شكل له ولا صورة، ولكن جُعل القميصُ له مثالا فرُؤي بواسطته، وكذلك الكفر يُمثّل في المنام بالظّلمة، وكذلك الشـرف والعِزُّ يُرى بواسطة صورة الفرس، وكذلك يُمثَّل القرآن باللّؤلؤ، ويمثّل الهدى بالنّور، والضّلالةُ بالعَمَى، اليواقيت ، ج – 1 ، ص – 108 )
அறிந்து கொள்! ஈமானாகிறது, நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சொன்னது போல. (கனவுலகில் மனிதர்களை எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது. அவர்களில் சிலரினது “கமீஸ்” ஷேட் ஆகிறது கரண்டை வரை காணப்பட்டது. சிலரினது “ஷேட்” தண்டைக்கால் அரைவாசிக்கு காணப்பட்டது. உமர் இப்னுல் கத்தாப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய “ஷேட்” ஐ தரையிலே இழுத்துக் கொண்டு வந்தார்கள். இதைக் கேட்ட ஸஹாபாக்கள், அதற்கு என்ன வலிந்துரை கொடுத்தீர்கள் நாயகமே? என்று கேட்டார்கள். ஈமான் என்று பதிலளித்தார்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்). எனவே, ஈமான் என்பதற்கு உருவமில்லை. தோற்றமில்லை. ஆனால் ஈமான் “ஷேட்” உடைய உருவத்தில் காண்பிக்கட்டுள்ளது. அதே போன்றுதான் இணை வைத்தல் “குப்ர்” உம் ஆகும். கனவுலகிலே இருளின் உருவத்தைப் பெறும். அதேபோல் சிறப்பு என்பது குதிரையின் உருவிலும், அல் குர்ஆன் ஆகிறது முத்தின் உருவிலும், நேர்வழி என்பது ஒளியின் உருவிலும், வழிகேடு என்பது குருடு என்ற தோற்றத்திலும் உருப்பெறும்.
(அல்யாவகீத், பாகம் 01, பக்கம் – 108 )

உருவமும், அரூபமும்…

மேலே தொடர் ல் கூறப்பட்டுள்ளது போன்று உருவமற்ற ஒன்று உருவில் தோன்ற முடியும். இதற்கு ஆதாரமாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பொன் மொழியையும் இமாம் இப்னு அறபீ நாயகம் கூறிக் காட்டுகின்றார்கள். அதை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ அவர்கள் விபரிக்கின்றார்கள்.

சூபிய்யாக்களிடம் இறைவனுக்கு உருவம் உண்டு என்பது இந்த அடிப்படையிலேயே அன்றி வகாபிகள் கூறுவது போன்று அவனுடைய பரிசுத்த “தாத்” உள்ளமைக்கு உருவம் உண்டு என்பது போன்றல்ல. அவர்கள் கூறும் உருவம் அல்லாஹு தஆலா படைப்புக்களின் உருவில் வெளியாக முன்னும், வெளியாகிய பின்னும் உருவத்தில் கட்டுப் பட்டவன். படைப்புக்கு உருவம் இருப்பது போன்று , படைப்புக்கு ஜடம் இருப்பது போன்று அல்லாஹ்வுக்கும் ஒரு உருவம் அல்லது அண்மையில் ஒரு வகாபி, அபுத் தலாயில் ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலி ஹஸ்ரத் அவர்களுடனான விவாதத்தில் கூறியது போன்று இரு உருவம் , பட்பைப்புக்கு ஜடம் இருப்பது போன்று அல்லாஹ்வுக்கும் ஜடம் உண்டு என்பதாகும்.

ஞானவான்களிடம் உருவமற்ற , ஜடமற்ற , எல்லையற்ற, மட்டில்லாத இறைவன் உருவத்திலும் ஜடத்திலும் அவனே தோற்றுகின்றான் என்பதாகும். இந்த கருத்தையே அத் துஹ்பதுல் முர்ஸலஹ் எனும் நூலை எழுதிய முஹம்மத் இப்னு பழ்லில்லாஹ் ரஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் தங்களின் நூலில் கூறிக் காட்டுகின்றார்கள். ஆச்சரியம் என்னவெனில் ஷெய்குனா மிஸ்பாஹி நாயகம் தால உம்ருஹு அன்னவர்கள் இக்கருத்தை பேசிய நேரத்தில் அவர்களுக்கு “பத்வா” வழங்குவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குறித்த இந் நூலையே ஆதாரமாக எடுத்தார்கள். அதில் முந்தின வசனத்தை எடுத்துக்கொண்டு பின்னால் வரும் வசனத்தை விட்டுவிட்டு தீர்ப்பு வழங்கினார்கள். கேவலம் தங்களும் சுன்னிகள் என்று கூறிக்கொண்டு மௌலவி பத்ருத்தீன் சாஹிப் போன்றோரும் உலமா சபையின் (வகாபிகள் நிறைந்த சபை) கருத்தையே கூறி வருகின்றார்கள். இலங்கையில் முதன் முதலில் இறைவனுக்கு உருவம் கற்பித்தவர் மிஸ்பாஹி நாயகம்தான் என்று பேசியும், எழுதியும் வருகின்றார்கள்.
‘إعلموا أنّ ذلك الوجود ليس له شكل ولا حدّ ولا حصـر، يعني أنّ ذلك الوجود ليس له حدّ فى ذاته ولا فى صفاته الحقيقية كلّها، لأنّ ذلك الوجود كما أنّه من حيث هُوَ هُوَ أي من غير إعتبار شيئٍ مَّا معه من صفة ولا اسم مطلقٌ غير محدود، كذلك صفاته الحقيقية منبسطة أي غير مخصوصة بِمَحَلٍّ خاصٍّ من الذات غير محدودة، ومع وجود هذا التنزيه المذكور فقد ظهر بنفسه وتجلّى بأسمائه وصفاته بالشكل أي بالأثر والحد، يعني أنّ ذلك الوجود ظهر وتجلّى فى الخارج بصور المخلوقات على نفسه وعلى غيره مدركا لنفسه ولغيره من المخلوقات المدركة كالثقلين والملائكة، ولم يتغيّر بسبب هذا الظهور فى المظاهر الخلقيّة ممّا كان هو عليه منه عدم الشكل وعدم الحد، إذ ظهور أثره كذلك لا يلزم منه شيئ من المذكورات المنفيّة، بل هو الآن إلى الأبد، كما كان عليه فى الأزل، هذا هو المراد بقول الشيخ محي الدين ابن عربي رضي الله عنه،
فإن قلت بالتنزيه كنت مقيّدا – وإن قلت بالتشبيه كنت محدّدا
فإن قلت بالأمرين كنت مسدّدا – وكنت إماما فى المعارف سيّدا
فمن قال بالإشفاع قد كان مشركا – ومن قال بالإفراد كان موحدا
“அத் துஹ்பதுல் முர்ஸலஹ்” என்று நூலில் இமாம் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அல் ஹிந்தீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் வுஜூத் – உள்ளமைக்கு தோற்றமோ, மட்டுப்பாடோ இல்லை. அதாவது அந்த உள்ளமை தன்னுடைய தாத் – சுய இருப்பிலோ, தன்மைகளிலோ எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஏனெனில் அந்த உள்ளமையாகின்றது அது எப்படியோ அப்படியேதான். அதாவது அதனுடன் மட்டுப்பாடற்ற எந்த ஒரு தன்மையோ, பெயரோ கொண்ட வஸ்த்துவும் கிடையாது. அதே போன்றுதான் அவனுடை ஸிபாத் – தன்மைகளுமாகும். அதாவது அவனுடைய தாத் – சுய இருப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தை கொண்டதோ அல்லது கட்டுப்பாடுடையதோ அல்ல. மேலே சொல்லப்பட்ட பரிசுத்த தன்மையில் இருப்பதுடன் அவனே தன்னுடைய அஸ்மா – திரு நாமங்கள், ஸிபாத் – தன்மைகள் கொண்டு மட்டுப்பாடுடன் “தஜல்லீ” வெளியாகியுள்ளான். அதாவது அவனுடைய உள்ளமையே படைப்புக்களின் உருவங்களில் தன்னாலும், படைப்பாலும் (மனு, ஜின், மலக்குகள்) பார்க்கும்படியானதாக வெளியாகியுள்ளான். இவ்வாறு படைப்புக்களாக வெளியாகியிருப்பதால் அவற்றை வெளிப்படுத்த முன் மட்டின்றி, உருவின்றி எவ்வாறு துய்யவனாக இருந்தானோ அதை விட்டும் மாறவில்லை. அவ்வாறு வெளியானதினால் மேலே கூறப்பட்ட அவனுக்கிருந்திராத மட்டுப்பாடுகள் அவசியமில்லை. ஆனால் அவன் இந்தப் படைப்புக் களாக “தஜல்லீ” வெளியாக முன் எவ்வாறிருந்தானோ அவ்வாறே இப்போதும், எப்போதும் இருப்பான். இதுவே அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் பின்வரும் பாடலின் கருத்தாகும்.
“நீ தன்ஸீஹை மட்டும் சொன்னால் நீ மட்டுப்படுத்தினவனாக ஆகிவிட்டாய்”
“நீ தஷ்பீஹை மட்டும் சொன்னாலும் நீ மட்டுப்படுத்தினவனாக ஆகிவிட்டாய்”
“இரண்டையும் சொன்னால் சரியாகச் செர்னனவனாய் ஆகிவிட்டாய்”
“மேலும் ஞானக்கலையில் தலைவனாகவும் ஆகிவிட்டாய்”
“இரட்டை கொண்டு எவன் பேசுகின்றானோ அவன் முஷ்ரிக் ஆகிவிட்டான்”
“ஒற்றை கொண்டு எவன் பேசுகின்றானோ அவன் முவஹ்ஹித் ஆகிவிட்டான்”
“நீ தஷ்பீஹ் கொண்டு மட்டும் பேசுபவனாக இருந்தால் உன்னை எச்சரிக்கின்றேன்”
“நீ தன்ஸீஹ் மட்டும் கொண்டு பேசுபவனாக இருந்தாலும் உன்னையும் எச்சரிக்கின்றேன்”
நிச்சயமாக அல்லாஹ்வின் வுஜூத் – உள்ளமையாகின்றது அது ஒன்றேதான். அதிலே அறவே எண்ணிக்கை கிடையாது. அதன் உடைகள் – உருவங்கள் கொண்டு அந்த உள்ளமை தன்னை வேற்றுமை உடையோரின் பார்வையை விட்டும் மறைத்துக் கொண்டது. அவைகளில் (அந்த உருவங்களில்) இரகசியங்கள் உடையோருக்கு வெளியாகி உள்ளான். அந்த உருவங்கள் – உடைகள் அவற்றின் இனம், வகை, அமைப்பு, மாறுபடுவது கொண்டு மாறுபட்டதாகும். எண்ணிக்கை அவசியமானவை கொண்டு எண்ணிக்கையானதாகும். அங்கே எண்ணிக்கை என்பது வெளிப்பாடுகளைப் பொறுத்ததேயன்றி, வெளியானவனை (அல்லாஹ்வை) பொறுத்ததல்ல. ஒரு கவிஞரின் வார்த்தை போன்று.
وما الوجه إلّا واحد غير أنّه – إذا أنت عدّدت المرايا تعددا
அதாவது “முகம் ஒன்றுதான். ஆனால் நீ கண்ணாடிகளை அதிகப்படுத்தினால் அதன் எண்ணிக்கை அதிகமாகும்”
மெய்ப் பொருளாகிய அல்லாஹ் வெளியாகிய படைப்புக்கள் என்ற உடைகள் – உருவங்கள் உயிரினங்கள், மனிதன், சடமுள்ளவை, சடமற்றவை என்று பலவாயினும் அவைகளின் மூலப் பொருளாகிய அல்லாஹ்வின் வுஜூத் – உள்ளமை “வாஹிதிய்யத்” என்ற மர்தபா – அந்தஸ்த்தில் ஒன்றுதான்.

எனவேதான் இறைவனின் உருவம் என்பது “கைரிய்யத்” வேற்றுமையில் வாடி வதங்கும் வகாபிகள் கூறுவது போன்ற, அல்லது அகக்கண் பாரவையிளந்த மௌலவி பதுர்தீன் சாஹிப் போன்றோர் எண்ணுகின்ற படைப்புக்கு ஒப்பான உருவம் இல்லை. “நீங்கள் எங்கு நோக்கினாலும் அவனே உள்ளான்” என்ற திருமறை வசனத்தின் அடிப்படையிலான அவன் தானான உருவங்கள்.

இதை புரியாமல் யாரோ கொடுத்த பணத்துக்காக மார்க்கத்தை விற்கும் முல்லாக்கள் கூறுவது போன்றல்ல.

ابن سبعين رحمه الله
இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

هو عبد الحقّ بن إبراهيم بن محمد، ابن سبعين، الرُّقُوطي المرسي الأندلسـي، ولد فى بلدة رُقُوطة فى مرسيّة بالأندلس، سنة 613 هـ أو 614 هـ ،

அவர்களின் இயற் பெயயர் அப்துல் ஹக் என்பதாகும். அவர்களின் தந்தை இப்றாஹீம் என்பவரும், அவரின் தந்தை முஹம்மத் என்பவருமாகும். ஸ்பெய்ன் நாட்டின் றிகோட் (Ricote) நகரைச் சேர்ந்தவர்கள். ஹிஜ்ரீ 613 அல்லது 614ல் பிறந்தார்கள்.
نشأ فى الأندلس ، تعلّم فيها مَبَادِئَ العلوم الشـرعيّةِ والعربيّةِ، وتعمّق فى علوم الفلسفة والمنطق والسحر، وسلك طريق المتصوّفة على يد كبار صوفيّة الأندلس،
ஸ்பெய்ன் நாட்டில் வளர்ந்த அவர்கள் அங்கேயே தனது ஆரம்பக் கல்வியை – ஷரீஅத் மற்றும் அறபு – கற்றார்கள். தத்துவம் (philosophy), தர்க்கவியல் மற்றும் சூனியக் கலைகளை ஆழமாகக் கற்றிருந்த அவர்கள் உந்துலுஸ் நகரில் இருந்த பெரும் ஸூபிய்யாக்களிடம் சென்று அவ்வழியே (ஸூபிஸம்) சென்றார்கள்.
وفى سنة 640 نُفي ابن سبعين من الأندلس، فانتقل هو وبعضُ أتباعِه إلى المغرب، وعكَفَ فى المغرب على قرائة كتب التصوّف وتدريسها، كما قام بتأليف أكثر كتبه ورسائله هناك، وتَجَوَّلَ فى بلدان المغرب لِنَشْرِ طريقته السّبعينيّة، ولمّا تكشّف مذهبه ، أنكر عليه العلماء الجاهلون بعقيدة وحدة الوجود ، وحَكَمُوا عليه بالزّندقة، ثمّ أخرجوه من المغرب،
ஹிஜ்ரீ 640ல் ஸ்பெய்ன் நாட்டிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள். அவர்களும், அவர்களின் சில சீடர்களும் அங்கிருந்து வெளியாகி “மொரோக்கோ” நாட்டுக்கு வந்தார்கள். அவர்களின் அநேக நூல்களை “மொரோக்கோ” விலேயே கோர்வை செய்தது போன்று, அங்கேயே “ஸூபிஸ” நூல்களைப் படித்து, அவைகளைக் கற்றுக் கொடுக்கும் வேலையிலும் ஈடுபட்டார்கள். “மொரோக்கோ” நாட்டின் பல பாகங்களுக்கும் தன்னுடைய “ஸப்ஈனிய்யஹ்” தரீகஹ்வை பரப்புவதற்காகச் சென்றார்கள். அவர்களின் வழி பரவியபோது “வஹ்ததுல் வுஜூத்” தெரியாத உலமாஉகள் அவர்களை எதிர்த்தார்கள். அவர்களுக்கு “ஸிந்தீக்” பட்டம் வழங்கி அங்கிருந்தும் வெளியேற்றினார்கள்.
فكّر ابن سبعين فى بلد آخر يُقيم فيه، وينشـر فيه دعوته، فاتّجه إلى مصـر، ولكنّ علماء المغرب الجاهلين بوحدة الوجود قد أرسلوا رسولا إلى أهل مصـر، لِيُحذِّرَهم من ابن سبعين، ولِيُبيِّنَ لهم عقيدتَه وقولَه بوحدة الوجود، فلم يلقَ ابن سبعين قبولا من أهل مصـر، بل قام بعض علمائها بكشف عقيدته، والرَّدِّ عليه، وتنفير النّاس عنه، فغادرَ مصر، متوجّها إلى مكّة،
இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் தான் குடியேறுவதற்காக, அங்கே தனது அழைப்புப் பணியை மேற்கொள்வதற்காக ஒரு நாட்டை யோசித்து “மிஸ்ர்” நாட்டை வந்தடைகின்றார்கள். இதை கேள்வியுற்ற “மொரோக்கோ” வாசிகள், இமாம் இப்னு ஸப்ஈன் அவர்களின் கொள்கையை விளங்கப்படுத்தி “மிஸ்ர்” நாட்டு மக்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு தூதரை அனுப்புகின்றார்கள். “மிஸ்ர்” வாசிகளிடமிருந்து எந்த வரவேற்பும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவர்களில் (“மிஸ்ர்” வாசிகளில்) சில உலமாஉகள் இமாம் இப்னு ஸப்ஈன் அவர்களை மறுத்து, அவர்களின் கொள்கையை இல்லாமலாக்கி, அவர்களை விட்டும் மக்களை திசை திருப்பவுதில் ஈடுபட்டனர். எனவே இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் அங்கிருந்தும் வெளியாகி திரு “மக்கஹ்” வந்தடைந்தார்கள்.
أقام ابن سبعين بمكّة من سنة 652 هـ حتّى وفاته،
இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் ஹிஜ்ரீ 652 தொடக்கம் தான் “வபாத்” ஆகும் வரை திரு மக்கஹ் நகரிலேயே இருந்தார்கள்.
فقام ابن سبعين بمكّة بِنَشاطٍ مَلْحُوظٍ، فى الدعوة إلى مذهبه،
ثمّ إنّ علماء مكّة أنكروا عليه مَسْلَكَه الصوفيّ، وحذّروا النّاس منه، فَهَمَّ بالإرتحال إلى الهند، بزعم أنّ أرض الإسلام لا تَسَعُهُ، ولكنّه بعد ذلك آثَرَ الإرتحال عن الدنيا بالكليّة ، فقد ذكر جمع من المؤرّخين أنّه مات بمكّة مُنتحرا، وكان ذلك سنة 669 هـ ،(البداية والنّهاية 13 261 ، ولسان الميزان 2 392 ، والطبقات الكبرى 1 203 ، والموسوعة الصوفيّة 197 ، وابن سبعين وفلسفته الصوفيّة(
இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் தன்னுடைய “வஹ்ததுல் வுஜூத்” வழிக்கு மக்களை அழைக்கும் பணியில் தீவிரமாக இருந்தார்கள்.

பின்பு திரு மக்கஹ் நகரில் இருந்த உலமாஉகள் அவர்களின் ஸூபிஸ வழியை மறுத்து, மக்களை எச்சரிக்கவும் செய்தார்கள். அதன் காரணத்தால் (இஸ்லாமிய பூமி தனக்கு இடமளிக்காது என்றெண்ணி) அங்கிருந்தும் வெளியாகி இந்தியா செல்ல எண்ணினார்கள். ஆனால் அவர்கள் இந்தியா செல்லாமலேயே தன்னுடைய வாழ்வை முடித்துக் கொண்டார்கள். வரலாற்றாசிரியர்கள் ஒரு கூட்டம் அவர்கள் திரு மக்கஹ் நகரில் கொலை செய்யப்பட்டு மரணித்ததாக கூறுகின்றார்கள். இது ஹிஜ்ரீ 669 ல் நடைபெற்றதாகவும் கூறப்படுகின்றது.
(அல் பிதாயஹ் வந் நிஹாயஹ் 13 -261, லிஸானுல் அறப் 2-392, அத் தபகாதுல் குப்றா 1-203, அல் மல்ஸூஅதுஸ் ஸூபிய்யஹ் 197, இப்னு ஸப்ஈன் வபல்ஸபதுஸ் ஸூபிய்யஹ்)
ولابن سبعين عددٌ من المؤلّفات : منها
01 ) بَدُّ العارف 02 ) المسائل الصقليّة
03 ) الإحاطة 04 ) الألواح
05 ) التوجّه 06 ) الرسالة النوريّة
இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் அதிக எண்ணிக்கையிலான நூல்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.

01. பத்துல் ஆரிப்
02. அல் மஸாயிலுஸ் ஸக்லிய்யஹ்
03. அல் இஹாதஹ்
04. அல் அல்வாஹ்
05. அத் தவஜ்ஜுஹ்
06. அர் றிஸாலதுன் நூரிய்யஹ்.
آمن ابن سبعين بوحدة الوجود، ولخَّصَ مذهبه بعبارة موجزة، هي قولُه ‘ الله فقط ،الكلّ له بالأصالة كلّ كمال وهو الكلّ بالمطابقة ، (رسائل ابن سبعين، ص 192 ) فليس فى الوجود عنده إلّا الله، والله عنده هو كلُّ ما فى الكون،
இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை நம்பியவர்களும், தனது வழியை சுருக்கமாகப் பின்வரும் வார்த்தை மூலம் கூறியுள்ளார்கள். அதுவாகின்றது, “அல்லாஹ் மாத்திரமே உள்ளான். அனைத்துக்கும் அடிப்படையான, சம்பூரணமானவன் அவனே! எல்லாம் அவனே!” என்பதாகும்.
(றஸாயில் இப்னு ஸப்ஈன், பக்கம் 192 )

இமாம் இப்னு ஸப்ஈன் அவர்களிடம் உள்ளமையில் அல்லாஹ் தவிர வேறொன்று இல்லை. பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அவனே என்பதுமாகும்.

وقد اعتمد ابن سبعين على مَبْدَءِ التّمييز بين ما هو (وجود حقيقيّ ) وما هو (وجود وهميّ ) (حركة التصوّف الإسلاميّ لمحمد شرف ، ص 659 ) مقرّرا أنّ (الحقّ واحد ، وما عداه وهم ) (رسالة ابن سبعين ، ص 276 )

இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் உண்மையான “வுஜூத்” இற்கும், பேதமையான “வுஜூத்” இற்குமிடையில் பாகுபாட்டை உறுதி கொண்டார்கள்.
(ஹறகதுத் தஸவ்வுபுல் இஸ்லாமீ – முஹம்மத் ஷறப், பக்கம் – 659)

மேலும் மெய்ப்பொருள் ஒன்றே என்றும் அது தவிரவுள்ளவை பேதமை என்றும் கூறுகின்றார்கள்.
(றிஸாலதுப்னி ஸப்ஈன், பக்கம் – 276 )
ومعنى اسم الله الظاهر عنده : (أنّ الله هو عين كلّ مظاهر الكون، يقول ابن سبعين : (هو عين كلّ ظاهر، فحُقَّ له أن يتسمّى بالظاهر) (رسائل ابن سبعين ، ص 190 )
இமாம் இப்னு ஸப்ஈன் அவர்களிடம் அல்லாஹ்வின் திரு நாமமாகிய “ளாஹிர்” வெளியானவன் என்பது “நிச்சயமாக பிரபஞ்சத்தின் அனைத்து வெளிப்பாடுகளும் அல்லாஹ் தானானதே!” மேலும் கூறுகின்றார்கள். வெளியான ஒவ்வொன்றும் அவன் தானானதே! அதனாலேதான் தனக்கு “ளாஹிர்” வெளியானவன் என்று பெயர் வைக்கத் தகுதியானான் என்று கூறுகின்றார்கள்.
(றிஸாலதுப்னி ஸப்ஈன், பக்கம் – 190 )
أنّ العوامّ – الّذين يحكمون بالوهم – يعتقدون أنّ الله هو خالق الكون، ويرون أنّ المخلوقات من آثار قدرته، وأمّا العلماء : أي هو وأمثاله فهم الذين يعتقدون أنّ المخلوقات هي الله، أو كما يقول (هي بالله فى الوهم ، وهي الله فى الحقيقة) (رسائل ابن سبعين ، ص 136 )
பாமரர்கள் – பேதமமை கொண்டு பார்க்கக் கூடியவர்கள் – அல்லாஹ் சகல வஸ்த்துக்களையும் படைத்தவன் என நம்புகின்றார்கள். அதே நேரம் அனைத்து வஸ்த்துக்களும் அவனுடைய “குத்றத்” சக்தியின் பிரதிபலிப்பு என்றும் நம்புகின்றார்கள். ஆனால் உலமாஉகள் அதாவது இப்னு ஸப்ஈன் மற்றும் அவர்கள் போன்றவர்கள் படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ் தான் என்று நம்புகின்றார்கள். அல்லது அவர்கள் கூறுவது போன்று “படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வைக் கொண்டு பேதமையில் காட்சியளிக்கின்றன. எதார்த்தத்தில் அவை அல்லாஹ்வேதான்”
(றஸாயில் இப்னு ஸப்ஈன், பக்கம் – 136 )

ويؤكّد ابن سبعين هذا المعنى بقوله (الله فى كلّ شيئ بكلّه، وليس فى الكلّ والبعض، وهوشيئ فيه ما ليس بشيئ وما هو شيئ معا، فعينُ ماتَرى ذاتٌ لاتُرى ، وذاتٌ لاتُرى عينُ ما تَرى) (رسائل ابن سبعين، ص 196) أي أنّ الذات الإلهيّة الغايبة عنّا الّتي لا تُرى فى الدنيا بالأبصار ، هي عينُ الذّوات الظاهرة، المُدرَكَة بالحواسّ،
இக்கருத்தை இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு உறுதி செய்கின்றார்கள். “அல்லாஹ் அனைத்து வஸ்த்துக்களிலும் முழுமையாக உள்ளான். அவன் சிலவற்றில் முழுமையாகவும், சிலவற்றில் கொஞ்சமாகவும் இருக்கின்றான் என்பதல்ல. ஒரே நேரத்தில் “ஷைஉன்” வஸ்த்துவாகவும், வஸ்த்துக்களல்லாமலும் இருக்கின்றான். நீ காணக் கூடிய அனைத்தும் இன்னொன்றால் பார்க்க முடியாத “தாத்”. அத்தகைய “தாத்” ஐயே நீ பார்த்துக் கொண்டிருக்கின்றாய்.
(றஸாயில் இப்னி ஸப்ஈன், பக்கம் 196) அதாவது எம்மை விட்டும் மறைந்துள்ள, வெளிக் கண்களால் இவ்வுலகில் பார்க்க முடியாத அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையாகின்றது அதுவே புலன்களால் உணரப்படக் கூடிய வஸ்த்துக்களாக வெளியாகி உள்ளன.
ويقول أيضا: (فالوجود واحد، هو القائم بجميع الصُّور)
(رسائل ابن سبعين، ص 242 )

இன்னும் கூறுகின்றார்கள். உள்ளமை ஒன்றே! அதுவே அனைத்து உருவங்களாகவும் இருக்கின்றது.
(றிஸாலதுப்னி ஸப்ஈன், பக்கம் – 242 )

وهو يرى بُطلانَ كلّ اعتقاد يُنافى الوحدة ، حتّى التوحيد الّذي يدين به المسلمون ،وفى هذا يقول (لا منفعة فى التوحيد، ولا خير عندي فى الفيض، ولا سعادة فى الحلول، ولا فائدة فى الإتّحاد ، ولا شوق إلى مقام…. ثمّ انظر إلى الإحاطة، (أي وحدة الوجود ) وتأمّل ما فيها ، وحرِّر القول فيها، (رسائل ابن سبعين، ص 133 )
இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் “வஹ்ததுல் வுஜுத்” ஐ மறுக்கக் கூடிய முஸ்லிம்கள் தௌஹீதாக கொண்டுள்ள அனைத்து நம்பிக்கைகளையும் பிழை காணுகின்றார்கள். இது தொடர்பாக பின்வருமாறு கூறுகின்றார்கள். (பாமரர்களின் தௌஹீதில் பிரயோசனம் இல்லை. உதவி பெறுவதில் சிறப்பில்லை. “ஹுலூல்” கோட்பாட்டில் ஈடேற்றம் இல்லை. “இத்திஹாத்” கோட்பாட்டிலும் பிரயோசனம் இல்லை. எந்தவொரு அந்தஸ்த்திலும் ஆசையில்லை… பின் “வஹ்ததுல் வுஜூத்” – சூழ்தல் – அளவில் பார். அதிலே சிந்தனை செய். அதை சுதந்திரமாகச் சொல்.
(றஸாயில் இப்னு ஸப்ஈன் , பக்கம் – 133
يقول ابن سبعين ‘ الله لا وصف له سوى الثُّبوت، وهو الوجود فى كلّ موجود ‘
(حركة التصوّف الإسلاميّ ، ص – 284 )
அல்லாஹு தஆலாவுக்கு “தரிபாடாகுதல்” (உள்ளமையாக இருத்தல்) என்ற வர்ணனை தவிர எந்த ஒரு வர்ணனையும் இல்லை. அவனே சகல வஸ்த்துக்களிலும் இருக்கின்றான்.
(ஹறகதுத் தஸவ்வுபுல் இஸ்லாமீ, பக்கம் – 284 )

وهذا من حيث اسمه الباطن، وأمّا من حيث اسمه الظاهر فالله موصوف بكلّ صفات الكائنات، ومُسمًّى بكلّ أسمائها ، لأنّها ليست إلّا هو،
இக்கருத்தாகின்றது அவன் – அல்லாஹ் – “பாதின்” (உள்ளானவன்) என்ற தனது பெயரின் அடிப்படையிலாகும். அறிந்து கொள்! அவனது “ளாஹிர்” – வெளியானவன் – என்ற பெயரின் அடிப்படையில் படைப்புக்கள் அனைத்தினதும் தன்மைகள் கொண்டு வருணிக்கப்பட்டவன் ஆவான். அதுமட்டுமன்றி அவற்றின் பெயர்கள் கொண்டும் பெயர் வைக்கப்பட்டவன். ஏனெனில் அவை அனைத்தும் அவனே!
والوحدة الإلهيّة عنده تشمل كلّ حسن وقبيح، وكلّ شريف وخَسِيس، قال ابن تيميّة (حدّثني من كان معه – أي ابن سبعين – ومع آخر نظيرله، فمَرَّا على كلب أجربَ مَيِّتٍ بالطريق، فقال له رفيقُه هذا أيضا هو ذاتُ الله؟ فقال ابن سبعين وهل ثَمَّ شيئ خارج عنه؟ نعم، الجميع فى ذات الله
(مجموع فتاوى ابن تيميّة ، 13 186 )
“அல் வஹ்ததுல் இலாஹிய்யஹ்” என்ற “வஹ்ததுல் வுஜூத்” அனைத்து அழகிய மற்றும் இழிவானவைகளையும் உள்ளடக்கிக் கொள்ளும். மேலும் சிறப்பான, சிறப்ற்றவைகளையும் அடக்கும். இப்னு தைமிய்யஹ் என்பவர் சொன்னார். (எனக்கு இப்னு ஸப்ஈன் அவர்களுடனும் அவர்கள் போன்றவர்களுடனும் இருந்தவர்கள் பின்வருமாறு சொன்னார்கள். ஒரு தடவை இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் வீதியால் ஒரு செத்த நாயின் பினத்துக்கருகால் சென்ற போது அவர்களின் நண்பன் அவர்களிடம் இதுவும் அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையில் கட்டுப்பட்டதுதானா? என்ற கேட்டதற்கு, அவனுக்கு வேறான ஒரு பொருள் உண்டா? ஆம், இதுவும் அவனின் உள்ளமையில் உள்ளதுதான் என்று பதில் அளித்தார்கள்.
(மஜ்மூஉ பதாவா இப்னி தைமிய்யஹ்,)

الشيخ عبد الكريم الجِيْلِيْ رحمه الله**

இமாம் அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

هو عبد الكريم بن إبراهيم بن عبد الكريم، اَلْجِيْلِيْ أو الجِيْلَانِيْ، نسبته إلى جيلان، وهي منطقةٌ فى بلاد فارس، (أنظر معجم البلدان (2ஃ201 )) وهو بغداديُّ الأصل، وُلد سنة 767 هـ، وتَنَقَّلَ فى بُلدان كثيرة، كالهند وفارس ومصر وفلسطين والحجاز، ثمّ اتّجه سنة 796 هـ، إلى مدينة زُبَيْد فى اليمن ، فأقام فيها حتّى وفاته سنة 826 هـ ،
அவர்களின் இயற் பெயர் அப்துல் கரீம் ஆகும். அவர்களின் தந்தை இப்றாஹீம் என்பவரும், அவர்களின் தந்தை அப்துல் கரீம் என்பவருமாவார். “அல் ஜீலீ” அல்லது “அல் ஜீலானீ” என்று “ஜீலான்” நகரைச் சார்ந்தவர்கள் என்பதால் சொல்லப்படுகின்றது. (ஜீலான் நகர் பாரிஸ் நகர்களில் ஒரு பகுதியாகும்) அடிப்படை “பக்தாத்” நகரைச் சார்ந்தவர்கள். ஹிஜ்ரீ 767ல் பிறந்தார்கள். இந்தியா, பாரிஸ், மிஸ்ர், பலஸ்தீன், ஹிஜாஸ் போன்ற அதிக ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள். பின்பு ஹிஜ்ரீ 796ல் யமன் தேசத்திலுள்ள “ஸுபைத்” நகர் வந்து அங்கேயே தனது “வபாத்” மரணம் வரை (ஹிஜ்ரீ – 826) இருந்தார்கள்.
أخذ الجيلي التصوّف عن شيخ صوفيّة اليمن اسماعيل الجَبْرَتِيْ وعن مؤلّفاتِ من سبقه من أئمّة الصوفيّة، فَبَرِعَ فى علم القوم حتّى صار من أكبر صوفيّة القرن التاسع الهجري،
இமாம் அப்துல் கரீம் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் “ஸுபிஸ” வழியை யமன் தேச ஸூபீகளின் தலைவர் இஸ்மாயீல் அல் ஜப்றதீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களிடமிருந்தும், அவர்களுக்கு முன் வாழ்ந்த ஸூபிய்யஹ் களின் நூல்களிலிருந்தும் பெற்றுக் கொண்டார்கள். ஹிஜ்ரீ 9ம் நூற்றாண்டின் தலைசிறந்த பெரிய ஸூபீ என்று சொல்லப்படும் அளவிற்கு சிறந்து விளங்கினார்கள்.

وللجيلي نحو ثلاثين مؤلّفا، عامّتُها فى تقرير العقيدة الصوفيّة، منها الإنسان الكامل ، والمناظر الإلهيّة، والقاموس الأعظم، وشرح مشكلات الفتوحات، والوجود المطلق، ومراتب الوجود، (قام يوسف زيدان بحَصـر مؤلّفات الجيلي والتعريف بها، فى كتابه الفكرُ الصوفي عند الجيلي، ص 52 )

இமாம் ஜீலீ அவர்களுக்கு சுமார் 30 க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஸூபிய்யஹ் களின் கொள்கையை எடுத்துக் கூறக் கூடிதாகவே உள்ளன. அவற்றில் முக்கியமான சில நூல்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.

* அல் இன்ஸானுல் காமில்
* அல் மனாளிறுல் இலாஹிய்யஹ்
* அல் காமூஸுல் அஃளம்
* ஷர்ஹு முஷ்கிலாதில் புதூஹாத்
* அல் வுஜூதுல் முத்லக்
* மறாதிபுல் வுஜூத்

والجيلي من دُعاة مذهب وحدة الوجود، فلقد كانت هذه العقيدة هي الشغلَ الشاغِلَ له، وهي ظاهرة بوُضوحٍ فى مُعظمِ مؤلّفاته،
இமாம் ஜீலீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை போதித்தவர்கள் ஆவர். அவர்களுக்கு இக் கொள்கையைப் போதிப்பதே தொழிலாக இருந்தது. இது இவர்களின் பிரதான நூல்களில் தெளிவாக விளங்குகின்றது.
فهو يرى أي يعتقد أنّ الله تعالى هو المنفرد بالوجود، وإثبات هذا هو غاية التوحيد، وفى هذا يقول ‘ كلمة الشهادة مَبْنِيّة على سلب، وهي ‘ لا ‘ وإيجابٍ، وهي ‘ إلّا ‘ ، معناه لا وجود لشيئ إلّا الله (الإنسان الكامل للجيلي ، 2 ஃ 134 )
அவர்கள் “அல்லாஹ் மாத்திரமே தனியான உள்ளமை உடையவன்” என்று கருதுகின்றார்கள். இதை தரிபடுத்துவதே தவ்ஹீதின் உச்ச நிலை என்றும் கருதுகின்றார்கள். இந்த விடயத்தையே பின்வருமாறு கூறுகின்றார்கள். “ஷஹாதஹ் கலிமஹ் என்பது இல்லாமற் செய்தல் மீதும் (கலிமஹ்விலுள்ள “லா” என்ற சொல் மூலம்) தரிபடுத்துதல் மீதும் (கலிமஹ்விலுள்ள “இல்லா” என்ற சொல் மூலம்) கட்டுப்பட்டதாகும். இதன் பொருளாகின்றது “அல்லாஹ் தவிர எந்தவொரு படைப்புக்கும் உள்ளமை கிடையாது” என்பதாகும்.
(அல் இன்ஸானுல் காமில் 2-134 )
أمّا الكون أو الخلق أو العالم فهو وهم من الأوهام، أو خَيَالٌ من الخيالات، الّتي تَطْرَأ على عقول المحجوبين، والخلقُ عند الجيلي ليس له وجود حقيقيّ ، بل وجودُه مجازيّ إعتباريّ، وحقيقته عنده أنّه هو الله، ولكنّه تجلّى بصُور المخلوقات،
பிரபஞ்சம் அல்லது படைப்பு அல்லது வையகம் என்பது திரையிடப்பட்டவர்களின் புத்தியில் திடீரென ஏற்படும் பேதமைகளில் நின்றும் ஒரு பேதமையாகும். அல்லது மாயைகளில் நின்றும் ஒரு மாயை ஆகும். படைப்பென்பது இமாம் ஜீலீ அவர்களிடம் சுயமான உள்ளமை இல்லாததாகும். அதனுடைய உள்ளமை “மஜாஸீ” (மெய்நிகர்) ஆகும். அதனுடைய எதார்த்தம் அல்லாஹ்வேதான். ஆனால் அவனே அவைகளின் உருவங்களில் வெளியாகி உள்ளான்.
يقول الجيلي:
فأوصافه والاسم والأثـر الّـذي – هو الكون عينُ الذات والله جامع
فما ثمّ من شيئ سوى الله فى الورى – وما ثمّ مسموع وما ثمّ سامع
(قصيدة النّادرات العينيّة للجيلي، ص 88)
இமாம் ஜீலீ அவர்கள் அந் நாதிறாதுல் ஐனிய்யஹ் என்ற தனது பாடல் தொகுப்பில் பின்வருமாறு ஒரு பாடலில் கூறுகின்றார்கள்.

“அவனுடைய பிரதிபலிப்பாக, பெயராக, வர்ணனைகளாக உள்ள பிரபஞ்சம் அவன் தானானதே! அல்லாஹ் என்பது அனைத்தையும் உள்ளடக்கியவன். அங்கே அல்லாஹ் தவிர எதுவும் கிடையாது. அவனன்றி கேட்பவனும், கேட்கப்படுபவனும் இல்லை”
يقول الجيلي رحمه الله:

هو المُوجد الأشياء وهو وجودها – وعـينُ ذوات الكُلِّ وهــو الجوامـعُ
حــقائق ذاتٍ فـى مراتب حــقِّـه – تُسمَّى باسم الـخلق والحقّ واسـع
(قصيدة النّادرات العينيّة للجيلي، ص 91،92 )
மேலும் ஒரு பாடல் அடியில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

“வஸ்த்துக்களின் உள்ளமையாக அவனே இருந்து கொண்டு அவற்றை வெளிப்படுத்தியவன் அவன். அனைத்தினதும் “தாத்” உள்ளமையாக அவனே உள்ளான். அவன் அனைத்தையும் உள்ளடக்கியவன். தன்னுடைய “தாத்”தின் படித்தரங்களின் அடிப்படையில் “ஹக்” என்றும் “கல்க்” என்றும் பெயர் சொல்லப்படும் அவன் விசாலமானவன்.
ولئلّا يظنّ أحد أنّ الجيلي يعتقد أنّ المخلوق له وجود حقيقيّ أو ذاتٌ مستقلّة يتجلّى الله فيها، بيّن الجيليّ (فما تجلّى إلّا على نفسه، لكنّا نُسمّي تلك اللّطيفة الإلهيّة ‘عبدا ‘ باعتبار أنّها عوض عن العبد، وإلّا فلا عبدَ ولا ربّ، إذ بانتفاء المربُوب انْتَفى اسمُ الربّ ، فما ثمّ إلّا الله وحده، الواحد الأحد )
(الإنسان الكامل للجيلي ، ص 97 )
எவரும் தன்னை, படைப்புகளுக்கு தனியான “வுஜூத்” உண்டு என்றும் அதிலே இறைவன் வெளியாகின்றான் என்றும் நம்புவதாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காக பின்வருமாறு கூறுகின்றார்கள். “அவன் தன்னிலேயன்றி வேறெதிலும் வெளியாகவில்லை. ஆனால் நாங்கள்தான் அந்த இலாஹிய்யத்தான நுட்பத்திற்கு “அப்து” அடிமை என்று (அடிமைக்குப் பகரமாக உள்ளதென்று எண்ணி ) பெயர் வைக்கின்றோம். அப்படி இல்லை என்றால் “றப்பு” ம் இல்லை, “அப்து” அடிமையும் இல்லை. ஏனெனில் வளர்க்கப்படுபவன் இல்லை என்றால் வளர்ப்பவன் எப்படி இருப்பான். அதாவது “மர்பூப்” வளர்க்கப்படுபவன் என்பதே இல்லை என்றால் “றப்பு” வளர்ப்பவன் என்ற பெயர் எதற்கு? அல்லாஹ் மாத்திரமே உள்ளான்”
(அல் இன்ஸானுல் காமில், பக்கம் – 97 )

وصرّح الجيلي أنّ الله تبارك وتعالى هو (عينُ هويّة المسمّى بالخلق والحقّ)
(الإنسان الكامل للجيلي ، ص 5)

இமாம் ஜீலீ அவர்கள் படைப்பு (கல்கு), படைத்தவன் (ஹக்கு) என்ற பெயர்கள் சூட்டப்படுபவைகளின் எதார்த்தம் அவனே! அல்லாஹ்வே! என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.
(அல் இன்ஸானுல் காமில், பக்கம் – 5 )
وقد مثّل الجيلي للتَّجلِّي الإلهيّ بصُور المخلوقات، كما يزعم بالماء والثلج، فالله عنده مَثل الماء ،والخلقُ كالثّلج، وليس الثلج فى الحقيقة إلّا ماءً ظهر بصورة الثلج، قال الجيلي،

وما الخلقُ فى التِّمْثَال إلّا كثَلْجَةٍ – وأنت بها الماء الّذي هو نابعٌ
(قصيدة النادرات العينيّة للجيلي ، ص 94)

இமாம் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் படைப்புக்கு ஐஸ்கட்டி, நீர் ஆகிவற்றை உதாரணமாகச் சொல்லிக் காட்டியுள்ளார்கள். அவர்களிடம் அல்லாஹ்வாகிறவன் நீர் போன்றும், படைப்பாகின்றது ஐஸ்கட்டி போன்றும் ஆகும். ஐஸ்கட்டியென்பது எதார்த்தத்தில் அவ்வுருவில் தோன்றிய நீரன்றி வேறில்லை. இதையே பின்வரும் பாடல் மூலம் கூறுகின்றார்கள்.

وما الخلقُ فى التِّمْثَال إلّا كثَلْجَةٍ – وأنت بها الماء الّذي هو نابعٌ

وبناءً على اعتقاده الوحدة بين الخالق والخلق، فإنّه يرى أنّ الله موصوف بكلّ صفات الخلق، أو كما يقول ‘ظهر فى كلّ ذات بكلّ خلق واتّصف بكلّ معنًى فى كلّ خلق وحقّ ‘ وموصوفٌ بكلّ وصفٍ، (الكهف والرقيم للجيلي ، ص 8)

;
இமாம் ஜீலீ அவர்கள் படைப்புக்கும், படைத்தவனுக்கும் உள்ளமை ஒன்று என்ற அடிப்படையில் அல்லாஹு தஆலா படைப்புக்களின் அனைத்து தன்மைகள் கொண்டும் வருணிக்கப்பட்டவன் என்று கருதுகின்றார்கள். அல்லது அவர்கள் பின்வருமாறு கூறுவது போன்று. “ஒவ்வொரு வஸ்த்துவிலும் அவன் வெளியாகியுள்ளான். “ஹக்”, “கல்கு” ஆகியவற்றின் கருத்துக்கள் ஒவ்வொன்றைக் கொண்டும் குணம் பெற்றுவிட்டான்”
(அல் இன்ஸானுல் காமில், பக்கம் – 8 )

الشيخ عبد الغنيّ النّابلسي رحمه الله
இமாம் அப்துல் கனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
هو عبد الغنيّ بن إسماعيل بن عبد الغنيّ ، الدمشقي، الحنفيّ، المشهور كأسلافه بالنابلسي، وُلد سنة 1050 هـ، فى مدينة دمشق، ونشأ بها، تحت كنف والده، الذي كان صوفيّا على طريقة ابن عربي،
அவர்களின் இயற் பெயர் அப்துல் கனீ ஆகும். அவர்களின் தந்தை இஸ்மாயீல் அவர்களும், அவர்களின் தந்தை அப்துல் கனீயுமாகும். டமஸ்கஸ் நகரைச் சேர்ந்தவர்கள். ஹனபீ மத்ஹபைப் பின்பற்றியவர்களுமாவர். தன்னுடைய முன்னோர்கள் போன்று “அந் நாபலஸீ” என்று பிரபல்யமானவர்கள். ஹிஜ்ரீ 1050 ல் டமஸ்கஸ் நகரில் பிறந்து, அங்கேயே தனது தந்தையான இப்னு அறபீ நாயகத்தின் வழி செல்லும் ஸூபீ அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்கள்.
أخذ الشيخ عبد الغنيّ النابلسـي رحمه الله علوم الفقه، والحديث، والكلام ، واللّغة عن علماء الشّام، حتّى تمكّن من هذه العلوم، وأخذ التصوّف عن البَلْخِيّ،
(البَلْخِيّ : هو سعيد البلخي ، من مشائخ الطريقة النّقشبنديّة ، قَدِم دمشق سنة 1087 هـ )

இமாம் அப்துல் கனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடிக்கும் அளவு சட்டக்கலை, ஹதீதுக்கலை, இல்முல் கலாம் (கொள்கை), மற்றும் மொழியறிவு போன்பவற்றை ஷாம் – சிரிய அறிஞர்களிடமிருந்து பெற்றார்கள். “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்தை “பல்கீ” அவர்களிடமிருந்து பெற்றார்கள். (அல் பல்கீ: ஸஈதுல் பல்கீ, நக்ஷபந்திய்யஹ் தரீகஹ்வின் ஷெய்குமார்களில் நின்றும் ஒருவர். டமஸ்கஸ் நகருக்கு ஹிஜ்ரீ 1087ல் வந்தார்கள்)
ولمّا تجاوز النّابلـسـي الأربعين من العمرلزم الخلوة المُقرّرة عند الصوفيّة، فأقام فى بيته سبع سنين، لا يخرج منه، معفيا شعره، مُطيلا أظفاره، مُلازما للرّياضات الصوفيّة، مواظبا على قرائة كتب دُعاة وحدة الوجود،
இமாம் நாபலஸீ அவர்கள் தனது 40வது வயதை கடந்ததும் ஸூபிய்யாக்களிடம் உள்ள “கல்வத்” தனிமையை தனக்கு அவசியமாக்கிக் கொண்டார்கள். தனது வீட்டிலேயே 07 வருடங்கள் வெளியாகாமால் தங்கியிருந்தார்கள். முடிகள் நீளமாக வளர்ந்தும், நகங்கள் வளர்ந்தும், ஸூபீகளின் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டும் , “வஹ்ததுல் வுஜூத்” பேசிய ஸூபீகளின் நூல்களை வாசித்துக் கொண்டும் இருந்தார்கள்.
يقول عنه أحد معاصريه من الصوفيّة، أدْمن المطالعة فى كتب الشيخ محي الدين ابن عربي قدّس الله سرّه، وكتُبَ السادة الصوفيّة، كابن سبعين، فعادت عليه بركةُ أنفاسهم، فأتاه الفتحُ اللّدنّي،
அவர்களின் காலத்து ஸூபீகளில் ஒருவர் பின்வருமாறு கூறுகின்றார். இப்னு அறபீ நாயகம் மற்றும் இப்னு ஸப்ஈன் மற்றும் ஸூபீகளின் நூல்களைப் படிப்பதில் நிரந்தரமாக இருந்ததால் இவர்களின் அருள் கிடைக்கப்பெற்று அவர்களின் உள்ளம் “பத்ஹுல் லதுன்னீ” என்ற இறைஞானம் (உள்ளம் திறக்கப்படல்) கிடைக்கப்பெற்றார்கள்.
ولمّا بلغ مرتبة اليقين عند الصوفيّة ، واستشعر وحدة الوجود خرج من خلوته، وقلع عَزْلتَه،وقام برحلات إلى بلدان الشام ومصـر، لزيارة أضْرِحَةِ المقدّسين عند الصوفيّة، وللإتّصال بأقطاب الصوفيّة الأحياء، ثم عاد إلى دمشق، سنة 1143 هـ ،
ஸூபிய்யாக்களிடமிலுள்ள உறுதி நிலையைப் பெற்றதும் “வஹ்ததுல் வுஜூ” ஐ உணர்ந்தார்கள். தனது வீட்டை விட்டும் (“கல்வத்” ஐ விட்டும்) வெளியேறினார்கள். சிரிய மற்றும், எகிப்து நாட்டின் பல ஊர்களுக்கும் ஸூபிய்யாக்களின் புனித ஸ்தளங்களைத் தரிசிப்பதற்காகவும், உயிர் வாழ்ந்து கொண்டிருந்த ஸூபிய்யாக்களின் “குத்பு”மார்களைத் தரிசிப்பதற்காகவும் சென்றார்கள். மீண்டும் டமஸ்கஸ் நகருக்கு ஹிஜ்ரீ 1143ல் வந்தார்கள்.
وللنّابلسـي رحمه الله مؤلّفات كثيرة فى التصوّف وعلوم الشـريعة واللّغة، وغير ذلك، وله دواوين شعريّة، ومن مؤلّفاته الصوفيّة،

01 ) إيضاح المقصود من معنى وحدة الوجود،
02 ) جواهر النّصوص فى حلّ كلمات الفصوص،
03 ) جمع الأسرار فى منع الأشرار من الطعن على الصوفية الأخيار،
04 ) الوجود الحقّ
05 ) شرح ديوان ابن الفارض
06 ) ديوان الحقائق
இமாம் நாபலஸீ அவர்களுக்கு ஸூபிஸம், ஷரீஅத், மொழி மற்றுமுள்ள கலைகளில் அதிக நூல்கள் உள்ளன. மேலும் கவிப் பெட்டகம் ஒன்றும் உள்ளது. அவர்களின் ஸூபிஸம் சம்பந்தப்பட்ட நூல்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.

01. ஈளாஹுல் மக்ஸூத் மின் மஃனா வஹ்ததில் வுஜூத்
02. ஜவாஹிருன் நுஸூஸ் பீ ஹல்லி கலிமாதில் புஸூஸ்
03. ஜம்உல் அஸ்ரார் பீ மன்இல் அsஷ்றார் மினத் தஃனி அலஸ்
ஸூபிய்யதில் அக்யார்.
04. அல்வுஜூதுல் ஹக்
05. ஷர்ஹு தீவானி இப்னில் பாரிழ்
06. தீவானுல் ஹகாயிக்
ويرى النّابلسـي رحمه الله أنّ الله وحده هو الموصوف بالوجود على وجه الحقيقة ، وفى هذا يقول:
ليس لله فى الوجود شريك – لا اشتباه فيه ولا تشكيكٌ
(ديوان الحقائق للنّابلسي 2 16)
இமாம் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள், அல்லாஹ் மாத்திரமே எதார்த்தமான “வுஜூத்” உள்ளமை கொண்டு வர்ணிக்கப்பட்டவன் என்று கருதுகின்றார்கள். பின்வரும் பாடல் மூலம் இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

ليس لله فى الوجود شريك – لا اشتباه فيه ولا تشكيكٌ

ثمّ اعتقد تبعا لذلك أنّ كلّ موجود فهو الله، قال النّابلسي
பின்பு அதைத் தொடர்ந்து படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வே என்று நம்புகின்றார்கள். பின்வரும் பாலட் மூலம் இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
وقال :
ألا إنّ ذاتي ذاتُ كُلِّ الخلائقِ – وسَلْ عنه ذا علمٍ كريمِ الخلائقِ
(ديوان الحقائق للنّابلسي 2 ஃ 343)
(அறிந்து கொள்! என்னுடைய “தாத்” உள்ளமையாகின்றது எல்லா படைப்புக்களினதும் “தாத்” உள்ளமையாகும். அதுபற்றி அறிவும், நற்குனங்களும் உள்ளவரிடம் கேள்!)

ألا إنّ ذاتي ذاتُ كُلِّ الخلائقِ – وسَلْ عنه ذا علمٍ كريمِ الخلائقِ

وَحَقِّقْ وجودَ الحقِّ فى الكونِ وحده – ولا كونٌ ولا شفعٌ هناك ولا وِتْرٌ
(ديوان الحقائق للنّابلسي 1 229)

மேலும் “சிருஷ்டியில் இறைவனின் உள்ளமையை மட்டும் உறுதி செய். அங்கே சிருஷ்டி, இரட்டை, ஒற்றை என்பன கிடையாது|| என்றும் ஒரு பாடலில் கூறுகின்றார்கள்.
(தீவானுல் ஹகாயிக் லின் நாபலஸீ, 1-229)

ومن هنا آمن النابلسـي بوحدة الوجود ، وقال إذ الوجود كلّه عندهم أي عند الصوفيّة حقيقة واحدة، متميّزة عن الأشياء،
(الوجود الحقّ للنّابلسي، ص 104 )
இந்த இடத்தில் இமாம் அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஐ நம்புகின்றார்கள். “ஸுபிய்யஹ்”களிடம் அனைத்து உள்ளமைகளும் ஒரே எதார்த்தம்தான். வஸ்த்துக்களை விட்டும் வேறுபட்டதாகும்.
(அல் வுஜூதுல் ஹக் லிந் நாபலஸீ, பக்கம் – 104)
وقال أيضا:
إنّ الوجودَ الحقّ شيئٌ واحدٌ – يا سعدُ مَنْ يُجْلِيْ له فَيُشاهِدُ
(ديوان الحقائق للنّابلسي ، 1 ஃ 138)
தனது தீவானுல் ஹக் என்ற பாடல் பெட்டகத்தின் ஒரு பாடலில் (1-138) பின்வருமாறு கூறுகின்றார்கள். “உண்மையான வுஜூத் – உள்ளமை ஒன்றுதான். அதன் வெளிப்பாட்டை எவன் தரிசிக்கின்றானோ அவன் சீதேவியாகிவிட்டான்”
ويرى النّابلسـي – يعتقد – أنّ وحدة الوجود شاملة للحقّ والخلق، والربِّ والمربوبِ، وفى هذا يقول : وما هما – الخالقُ والمخلوقُ – إثنان، بل عينٌ واحدةٌ،
(حكم شطح الولي للنّابلسي، ص 196)
இமாம் அந் நாபலஸீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” என்பது படைப்பையும், படைத்தவனையும் , பரிபாலிப்பவனையும் (றப்பு), பரிபாலிக்கப்பட்டவனையும் (மர்பூப்) சேர்த்த ஒன்றாகும் என்று பின்வரும் வாக்கியத்தின் மூலம் கூறிக் காட்டுகின்றார்கள். “அவ்விரண்டும் (படைப்பும், படைத்தவனும்) இரண்டல்ல. ஆனால் ஒன்றேதான்”
(ஹுக்மு ஷத்ஹில் வலிய்யி லிந் நாபலஸீ, பக்கம் – 196 )

You may also like

Leave a Comment