விஷேட ஸலவாத் மஜ்லிஸும், ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும் – 2018

March 26, 2018

அகிலத்தின் அருட்கொடை, காரிருள் நீக்க வந்த ஜோதி அருமை நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன் தாயின் வயி்ற்றில் கருத்தரித்த மாதமான றஜப் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நாளை கண்ணியம் செய்யும் முகமாக அவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸ் 22.03.2018 வியாழக்கிழமை பின்னேரம் வெள்ளியிரவு இஷா தொழுகையின் பின் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அதே போன்று கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்ற மஜ்லிஸ் 24.03.2018 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையின் பின் திருக்கொடியேற்றமும் அதனைத் தொடர்ந்து ஹாஜாஜீ மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MM. ஜுமான் றவ்ழீ அன்னவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு இறுதியாக பெரிய துஆ, தபர்றுக் விநியோகம் ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.

– அல்ஹம்துலில்லாஹ் –

You may also like

Leave a Comment