வெசாக் அன்னதானம் வழங்கும் நிகழ்வு – 2019

May 19, 2019

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில், காத்தான்குடி பொலிஸ் நிலையத்துடன் இணைந்து “இந்நாட்டில் அனைத்து மக்களும் ஒருதாய் பிள்ளைகளாக, சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன்” வெசாக் தினத்தை முன்னிட்டு 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள், காத்தான்குடி நகர பிரதி நகர முதல்வர், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மற்றும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

சுமார் ஆயிரம்(1000) இற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சமைத்த உணவுகள் வெசாக் அன்னதானமாக வழங்கி வைக்கப்பட்டது.

You may also like

Leave a Comment