டோஹா-கட்டார் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கம் நடாத்திய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகத்தின் 74வது பிறந்த தினத்தை முன்னிட்டு துஆ பிரார்த்தனை நிகழ்வு

February 11, 2018

கடந்த 05.02.2018இல் தமது 74 வயது வயதினை பூர்த்திசெய்த அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 08.02.2018 அன்று ஷெய்குனா அன்னவர்களின் வழிகாட்டலில், கட்டார் நாட்டில் இயங்கிவரும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

கட்டார், பின் மஹ்மூத் மஜ்லிஸ் மண்டபத்தில் இரவு 10.00 மணிக்கு சங்க உப பொருளாளர் ஜனாப். M.B.R. கரீப் அவர்களது வரவேற்பு நிகழ்வுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவீ A.J. ஜாஸுல் ஜெஸாத் றப்பானீ அவர்களால் வலீமார்கள்,ஷெய்குமார்களின் அகமியங்கள் தொடர்பான சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. பின்னர், ஷெய்குனா அவர்களின் புகழினை எடுத்துக்கூறும் இஸ்லாமிய கீதம் பாடகர் ஜனாப்.H.A. றஹீம் அவர்களால் வழங்கப்பட்டு, சங்கைக்குரிய மௌலவீ S.A.A. முரீத் றப்பானீ அவர்களது பாதிஹாவுடன் மௌலித் ஓதும் நிகழ்வு ஆரம்பமாகியது.

மஜ்லிஸ் நிகழ்வில் மாதிஹுர் றஸுல், கவித்திலகம் மௌலவீ H.M.M.இப்றாஹீம் நத்வீ அவர்களால் மிஸ்பாஹீ நாயகம் அவர்கள் பெயரில் யாத்தளிக்கப்பட்ட “லதாயிபுல் அதூப் பீ மத்ஹிஷ் ஷெய்கில் காமில் அல்ஆரிப் அப்திர் றஊப்” என்னும் புகழ் மாலை ஓதப்பட்டதும் குறப்பிடத்தக்கது. அத்தோடு, கண்மணி நாயகம் ﷺ அவர்களின் அருள்மிகு திருநாமங்கள் பாராயணம், பெரிய ஆலிம் நாயகம் புகழ் பாடல் நிகழ்வுகள் அனைத்தும் சங்கைக்குரிய மௌலவீ M. நஸீம் அஹ்மத் றப்பானீ அவர்களின் நெறியாள்கையில் இடம்பெற்று, ஷெய்குனா அன்னவர்களுக்கு சரீர சுகமும் நீண்ட ஆயுளும் வேண்டி சங்கைக்குரிய மௌலவீ N.M. பஸ்மில் றப்பானீ அவர்களால் துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது. மற்றும் சங்கைமிக்க மௌலவீமார்களான A.J. ஸம்ஹான் றப்பானீ, M.H.M. ஹன்ஸாத் றப்பானீ ஆகியோர்களால் பிறந்ததின கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது நிகழ்வினை மேலும் சிறப்பாக்கியது. இறுதியாக, கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் முரீதீன்கள், முஹிப்பீன்கள், சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தபர்றுக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு ஸலவாத்துடன் நிறைவு பெற்றது.

செய்தி – மௌலவீ N.M. பஸ்மில் றப்பானீ

 

You may also like

Leave a Comment