Friday, April 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்شِعْر "கவி" என்றால் என்ன?

شِعْر “கவி” என்றால் என்ன?

மௌலவீ A.S.M இர்ஷாத் (றப்பானீ)

قال الشيخُ الأكبرُ والمسكُ الأذفرُ والكبريتُ الأحمرُ والنّور الأبهر محي الدين ابن عربي قدّس سرّه فى الباب الثاني من الفتوحات فى قوله تعالى ” وما علّمناه الشِّعر وما ينبغي له” أنّ الشِّعر مَحَلُّ الإجمال والَّلغْزِ والرَّمْزِ والتَّوْرِيَةِ، أي ما رَمَزْنَا لمحمدٍ صلى الله عليه وسلم ولا لَغَزْنَا، ولا خاطَبْنَاهُ بِشَيْئٍ، ونحنُ نُرِيْدُشياً آخَرَ، ولا اَجْمَلْنَاله الخطاب بحيث لم يفهمه

அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் “அல்புதூஹாதுல்மக்கிய்யா” இரண்டாம் பாடத்தில் “நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கவியை கற்றுக் கொடுக்கவுமில்லை. அது அவர்களுக்குத் தேவையுமில்லை” என்ற திரு வசனத்துக்கு விளக்கம் எழுதுகையில் ٌشِعْر “கவி” என்றால் பாட்டு என்பது கருத்தல்ல. இச் சொல் மூலம் கருதப்படும் கருத்து என்னவெனில் மூடல்,விளக்கமின்மை என்பதாகும். அதாவது கவிதைகளில் தரமான கவி என்பது பல கருத்துக்களை உள்வாங்கி நிற்கும் வசனங்களாகும். இன்னும் இதை தெளிவாக சொல்வதாயின் “கவியின் கருத்து கவிஞனின் வயிற்றினுள்”مَعنى الشِّعر فى بطن الشّاعر ” என்பது போல் எளிதில் – வெளிப்படையில் சரியான கருத்து விளங்காத வசனமாகும். அதாவது “இஜ்மால்” மூடலான வசனமாகும். இதுவே சரியான அர்த்தபுஷ்டியுள்ள நாகரீகமான கவியாகும்.

இவ்வாறு நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு நாங்கள் மூடலாக,எளிதில் பொருள்-கருத்துப்புரியாத அமைப்பில் எதையும் கற்றுக் கொடுக்கவில்லை.”இஜ்மால்”மூடல் என்பதற்கு எதிரானது “தப்ஸீல்”ஆகும்.அதாவது அனைத்தையும் விளக்கமாகவே கற்றுக் கொடுத்தோம் என்பதே திருவசனத்தின் பொருளும்,கருத்துமாகும்.لَغْزْ என்றால் நொடி போன்றது. நொடி என்பது கருத்தை தெளிவாகத்தராத மூடலான வசனமாகும்.رَمْزْ என்றால் சுட்டிச் சொல்வது,மறைத்துச் சொல்வது போன்றது.تَوْرِية வலிந்துரை கொண்டு விளங்கக் கூடிய ஒன்று.

எனவே மேற்கண்ட وما علّمناه الشّعر என்ற வசனத்திற்கு “நாங்கள் நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு விளக்கமில்லாமல்,மூடலாக எதையும் கற்றுக் கொடுக்கவில்லை”என்பதே சரியான கருத்தாகும். இவ்வாறு விளக்கம் சொல்கிறார்கள் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் “கவி”பாடியுள்ளார்கள் என்பதற்கு “புஹாரீ”என்ற நூலில் ஆதாரங்கள் உள்ளன.

எல்லாவகை அறிவு ஞானங்களும் வளங்கப்பட்ட ஒரு நபீ கவி இயற்ற தெரியாதவராக இருக்க முடியுமா? அறிவு ஏற்றுக் கொள்ளுமா? இது اَلنَّبِيُّ الْأُمِّيُّ என்ற வசனத்துக்கு எழுத வாசிக்கத்தெரியாத நபீ என்று சொல்வது போன்றாகும். நபீ பெருமானுக்கு எழுதவும் வாசிக்கவும் நிச்சயமாக தெரியும். எனினும் அவர்கள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

ஒரு சமயம் நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தாங்கள் مِنْ محمدٍ رسولِ الله என்று எழுதிய கடிதம் ஏற்றுக்கொள்ளப்படாமல் திரும்பி வந்த சமயம் இந்த வசனத்திலுள்ள رسول الله என்பதை அழித்து விட்டு مِن محمدٍ عبدِالله என்று எழுதியனுப்பியதற்கு புஹாரீயில் ஆதாரம் உண்டு. எழுத வாசிக்கத் தெரியாதவர் எவ்வாறு அழித்தார்?எவ்வாறு எழுதினார்? என்று கேள்வி வரும்.

“உம்மீ”என்பது “மக்கீ”என்ற சொல் போன்றதாகும். மக்கா நகருக்கு اُمُّ الْقُرَى “உம்முல் குறா” நாடு நகரங்களின் தாய் என்றும் ஒரு பெயருண்டு. இவ்வடிப்படையில் மக்காவில் பிறந்தவருக்கு “உம்மீ”என்று சொல்லப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments