Thursday, April 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவதா? உலமா சபையின் கட்டளைக்கு அடிபணிவதா?

அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவதா? உலமா சபையின் கட்டளைக்கு அடிபணிவதா?

இது ஓர் அவசர சிகிச்சை மட்டும்தான்.

விரிவான சிகிச்சை இன்னும் சில தினங்களில்…

وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ،

அன்றியும் அல்லாஹ்வுடைய “மஸ்ஜித்”களில் அவனுடைய பெயர் அவற்றில் கூறப்படுவதைத் தடுத்து அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவர்களை விட மகா அநியாயக்காரன் யார்? இத்தகையோர் அச்சமுடையவர்களாகவேயன்றி அவைகளில் நுழைய அவர்களுக்குத் தகுதியில்லை. அவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு. மறுமையிலோ அவர்களுக்கு மகத்தான வேதனையுமுண்டு. (திருக்குர்ஆன் – 02:114)

அன்புப் பொதுமக்களுக்கு.

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.

“கொரோனா வைரஸ்” தாக்கிவிடாமலிருப்பதற்காக அல்லாஹ்வின் இல்லங்களான பள்ளிவாயல்களில் ஐங்காலத் தொழுகை, வெள்ளிக்கிழமை “ஜும்ஆ” தொழுகை, மற்றும் மார்க்க அனுஷ்டானங்கள் நடைபெறக்கூடாதென்று சொல்வதற்கும், முஸ்லிம்களைத் தடை செய்வதற்கும் உலமா சபைக்கு எந்த ஓர் அதிகாரமுமில்லை. இவ்வாறு தடை செய்பவர்கள் அநீதியாளர்களும், அல்லாஹ்வின் கட்டளையை மீறிச் செயல்படுபவர்களுமேயாவர்.

யுத்த களத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கூட தொழ வேண்டுமென்றும், அதற்காக விஷேட அமைப்பிலான “ஸலாதுல் கவ்பி” என்று ஒரு தொழுகை உண்டென்றும் இஸ்லாம் – திருக்குர்ஆனும், நபீ மொழிகளும் – கூறிக் கொண்டிருக்கும் நிலையில் “கொரோனா வைரஸ்” தாக்கிவிடுமென்பதற்காக அல்லாஹ்வின் கட்டளையை மீறி புதியதோர் மார்க்கம் கொண்டுவந்துள்ள உலமா சபையினரை – பத்வா குழுவினரை மகா அநீதியாளர்கள் என்று கூறாமல் வேறெவ்வாறு கூறுவது? அல்லாஹ் இவர்களை “அள்லம்” என்ற சொல் கொண்டு மிக அநீதியாளர்கள் என்று வருணித்திருப்பது இவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்து இவர்கள் யாரென்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

அல்லாஹ் இவர்களை அநீதியாளர்கள் என்று கூறியிருப்பதால் நாம் இவர்களை நீதியாளர்கள் என்று வருணிப்பது அவனுக்கு மாறு செய்வதாக ஆகிவிடும்.

அநீதியாளர்களே!

இலங்கைத் திரு நாட்டில் கசடறக் கற்ற “ஹஸ்றத்”மார்களும், சட்டக்கலையில் விற்பன்னர்களான “புகஹாஉ” சட்ட மேதைகளும் இருக்கும் நிலையில் வஹ்ஹாபிஸக் கொள்கையுள்ள ஒரு சிலரை – குறை குடங்களை – மட்டும் வைத்துக் கொண்டு “பத்வா” வழங்கி நாட்டு மக்களிடையே பிளவையும், மனக்கசப்பையும், பிரச்சினையையும் தோற்றுவிக்கும் உங்களை நினைத்துச் சிரிப்பதா? அழுவதா? சிரிப்பதாயினும் சும்மா சிரிக்க முடியாது. கை கொட்டியும், மேளதாளம் அடித்துமே சிரிக்க வேண்டும். அழுவதாயினும் ஊர், உலக மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஒலி பெருக்கியில் ஒப்பாரி வைத்தே அழவேண்டும். உங்களின் அறியாமையை என்னென்பது?

“பத்வா” வழங்கும் அதிகாரமே உங்களுக்கு இல்லாத நிலையில் ஸூபிஸம் பேசிய எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்களென்று அந்தகர்கள் போலும், அறிவற்ற முண்டங்கள் போலும் “பத்வா” வழங்கி நாற்பதாண்டுகளாக எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் தீர்ப்புக் கூறி, குண்டிக்குத்துணியற்ற, உண்டிக்கும் உணவற்ற காடையர்களை மார்க்கத்தின் பெயரால் கொலைக்குத் தூண்டியும் வருகிறீர்கள்.

உங்கள் “பத்வா”வின் பின்னணிதான் மௌலவீ MSM. பாறூக் காதிரீ அவர்கள் கொலை செய்யப்பட்டதும், என்னைக் கொலை செய்வதற்காக ஆயுதம் தாங்கிய ஒன்பது பேர்களைக் கொண்ட குழுவொன்று எனது அலுவலகத்திற்கு வந்து 34 வேட்டுக்கள் வைத்ததும் என்பதை காத்தான்குடியிலுள்ள சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட அனைவரும் அறிவர்.

எனவே, கண்களை மூடிக் கொண்டு “பத்வா” கொடுத்துவிடாமல் ஸுன்னீ உலமாஉகளில் தரமானவர்களையும் அழைத்து ஆலோசனை பெற்றுச் செயல்படுங்கள்.

“கொரோனா வைரஸ்” தாக்கிவிடாமல் மக்களைப் பாதுகாக்க வேண்டுமென்பது நியாயமானதே. அதற்காக அல்லாஹ்வின் பள்ளியில் வணக்கத்திற்காக அவர்கள் ஒன்று கூடுவதைத் தடுக்காமலும், அல்லாஹ்வின் அருள் வீடான பள்ளிவாயலை பாழ் வீடாக பொது மக்களுக்கு ஆக்கும் முயற்சியை கைவிட்டும் கொரோனாவின் தாக்கம் ஏற்படாமலிருப்பதற்கான வழிகளை முதலில் கற்றுக் கொடுத்து தொழுகையையும், மார்க்க அனுஷ்டானங்களையும் பள்ளிவாயல்களில் நடத்துவதற்கு வழி காட்டுங்கள்.

உங்களை அல்லாஹ்வின் பயங்கர சோதனை அல்லது தண்டனை தாக்குமுன் “பத்வா”வை வாபஸ் பெற்று “தவ்பா” செய்து கொள்ளுங்கள். பள்ளிவாயல்களைப் பாழாக்கும் வஹ்ஹாபிகளின் திட்டத்திற்கு வழி செய்யாமல் “கொரோனா”வை விட வஹ்ஹாபிஸம் கடுமையான “வைரஸ்” என்பதை புரிந்து செயல்படுங்கள். “கொரோனா”வின் தாக்கத்தால் பீற்றற்றுருத்திதான் அழியும். அது அழிய வேண்டியதுதான். ஆயினும் வஹ்ஹாபிஸம் என்ற “வைரஸ்” ஆன்மீகத்தையே அழித்துவிடும். இது உங்களுக்குத் தெரிந்த விடயம்தான். என்ன செய்வது “துன்யா” ஹால் விழாங்காய்ப் பால்”

لَا تَحْصُلُ الدُّنْيَا إِلَّا بِحِيْلَةٍ

குறிப்பு: இஸ்லாமும், தொற்று நோயும் என்ற பெயரில் எமது விரிவான விளக்கத்தை எதிர்பாருங்கள்.

காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ
தலைவர்: அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா
காத்தான்குடி. 06
கைபேசி: 0777 733 786.
17.03.2020

اَللهم احْفَظْ أَبْنَاءَ هَذِهِ الدَّوْلَةِ سِرِيْلَانْكَا، مِنْ كُرُوْنَا فَايْرَسْ وَمِنْ مَرَضِ السَّرَطَانْ،
اَللهم بَارِكْ فى معيشة العلماء – علماء الآخرة، بركةواسعة، الّذين طهّرُوا قلوبهم من الأخلاق المذمومة، وزكّوها من الأنجاس الحسّيّة والمعنويّة، والأخلاق السّباعيّة، من الكِبر والعُجب والسُّمعة والغيريّة والأنّيّة والأنانيّة والغضب وحبّ الجاه والخيانة، ومِن بَطَرِ الحقّ وغَمط النّاس والحيلة الثعلبيّة،

اللهم لا تبارك فى معيشة علماء هذه الدّنيا الدّنيّة، الّذين ملؤوا قلوبهم بالنّجاسات المذكورة، وخانُوا القائلين بعلم التصوّف وعلم وحدة الوجود، وأفتوهم بالردّة وردّة أتباعهم الّذين صدّقوا أقوالهم وآمنوا بعقائدهم، وأباحوا دمائهم وأموالهم وأفتوا بجواز قتلهم وحرّضوا النّاس والفاسقين على قتلِهم ونهَبِ أموالهم، كما كتبوا فى فتواهم،

اللهم لا تبارك أيضا فى معيشة الوهّابيّين الّذين خالفوا الكتاب والسنّة وخالفوا عقائد أهل السنّة والجماعة، وعقائد أهل التصوّف، وعقائد أهل وحدة الوجود، وهدموا مراقد الأولياء وعتباتهم المقدّسة، ومنعوا النّاس من زيارتهم والتوسّل بهم وتعظيم قبورهم، وفجّروا القنبلات فى الفنادق والكنائس ومعابد أهل هذه الدولة،

اللهم أعْلِ درجات علماء الآخرة عندك، واحفظهم واحفظ من تبعهم واحفظ الصوفية الصافية من الأمراض المخوفة ومن مرض السّرطان ومن موت الفجأة، واحفظهم واحفظ عيالهم وأولادهم من كُرُوْنَا فايرس، وصلّى الله وسلّم على سيّدنا محمد وآله وصحبه أجمعين، والحمد لله ربّ العالمين،

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments