Friday, March 29, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ் என்ற திருநாமம் “தாத்”தின் பெயராகும்.

அல்லாஹ் என்ற திருநாமம் “தாத்”தின் பெயராகும்.

(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)

அல்லாஹ் என்ற பெயர் மட்டும் “தாத்”தின் பெயரென்றும், ஏனைய பெயர்கள் யாவும் “ஸிபாத்” அவனின் தன்மைகளைக் குறிக்கும் பெயர்களென்றும் கடந்த பதிவுகளின் போது குறிப்பிட்டிருந்தேன்.

தன்மைகளுக்குரிய பெயர்களை எந்த மொழியிலும் மொழியாக்கம் செய்யலாம். உதாரணமாக “றஸ்ஸாக்” உணவளிப்பவன், “ஹாதீ” நேர்வழி காட்டுபவன் என்பது போன்று. ஆயினும் “தாத்”தின் திருப்பெயரான “அல்லாஹ்” என்ற பெயரை எந்த மொழியிலும் மொழியாக்கம் செய்ய முடியாது. கடவுள், இறைவன் என்று சொன்னாலும் கூட அது “அல்லாஹ்” என்ற திருப்பெயரின் மொழியாக்கம் என்று கொள்ள முடியாது. கொள்ளவும் கூடாதென்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இத் திரு நாமம் மட்டுமே உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரிந்த ஓர் திரு நாமமாகும். முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் தெரிந்த ஒன்றாகும். அவனின் “ஸிபாத்” தன்மைகளுக்கான அறபு மொழியிலான திரு நாமங்களிற் சில திரு நாமங்கள் மட்டுமே முஸ்லிம்களுக்குத் தெரியும். அது கூட மற்றவர்களுக்குத் தெரியாது.

அல்லாஹ் என்ற சொல்லை எவ்வாறு மொழிய வேண்மென்பதில் பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் ஒன்றுமில்லை. ஆயினும் ஒரு சிலர் மட்டுமே அல்லாஹ் என்று மொழிவார்கள். 90 வீதமானோர் எந்த நாட்டவர்களாயினும் அதை “அள்ளாஹ்” என்றே மொழிவார்கள்.

“தஜ்வீத்” என்ற சட்டத்தில் அறபியில் எழுதும்போது அல்லாஹ் என்றும், அதை மொழியும் போது “அள்ளாஹ்” என்றும் மொழிய வேண்டுமென்றும் கூறப்படுகிறது.

எனவே, இதை பெரிய சர்ச்சைக் குரிய விடயமாக்காமல் விட்டு விடுவதே சிறந்தது.

ஆயினும் “அள்ளாஹ்” என்றுதான் எழுதவேண்டுமென்றும், ஒரு போதும் “அல்லாஹ்” என்று எழுதக் கூடாதென்றும் குரங்குப் பிடி பிடித்து நிற்கும் கூட்டம் எல்லா ஊரிலும் இருப்பது போல் எனதூரிலும் உள்ளது. அவர்களிடம் بسم الله الرحمن الرحيم என்று தமிழில் எழுதச் சொன்னால் அவர்களின் குரங்குப் பிடி குழந்தைப் பிடியாக ஆகிவிடும்.

“அல்லாஹ்” என்று அவனுக்குப் பெயர் சொன்னவர் யார்? அவனேதான் தனக்கு பெயர் வைத்துக் கொண்டானா? அல்லது யாராவது சொன்னார்களா?

இது தொடர்பாக குத்புல் வாஸிலீன் அப்துல் அஸீஸ் அத்தப்பாஙீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய கருத்துக்களை இங்கு தருகிறேன்.

قال قطب الواصلين عبد العزيز الدبّاغ رضي الله عنه في أسماء الحسنى إنّ معانيها حصلت للأنبياء عليهم الصلاة والسلام من مشاهداتٍ ، فمن شاهدَ معنًى وضع له اسما ، فالمعاني ظهرت لهم على قدر مشاهدتهم في الله عزّ وجلّ . والأسماءُ خرجت منهم بِحَسَبِ ذلك ، قال رضي الله عنه فجميعُ الأسماء حصلت بوضع الأنبياء عليهم الصلاة والسلام ، وسيّدنا إدريس عليه السلام أَوَّلُ من وضع عليما وقويّا وعظيما ومنّانا، وهكذا كل نبيّ وضع شيئا منها ، ولكنّهم وضعوها بلغتهم ، ومَزِيَّةُ القرآن أنّه جمعها كلّها وأتَى بها مع ذلك بِلُغة العرب ، لا بأَلْسِنَةِ الأنبياء المُتقدِّمين،

அல்லாஹ்வின் திருநாமங்கள் தொடர்பாக குத்புல் வாஸிலீன் அப்துல் அஸீஸ் அத்தப்பாஙீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். நபீமார்களிற் பலர் இறைவனுக்கு பெயர் சொல்லியுள்ளார். அவர்கள் கற்பனை செய்து அப்பெயர்கள் சொல்லவில்லை. அவர்களுக்கு ஆன்மீக அடிப்படையில் கிடைத்த “முஷாஹதா” காட்சிகளைப் பொறுத்து அவற்றுக் கேற்ப பெயர்கள் சொன்னார்கள். அவர்களில் ஒருவருக்கு ஒரு பொருள் – கருத்து காட்சியாகக் கிடைக்குமாயின் அந்தப் பொருளுக்குப் பொருத்தமான பெயரைச் சொன்னார்கள். அவர்களின் காட்சிக் கேற்றவாறே கருத்துக்கள் வெளியாகின. அதற்கேற்றவாறே பெயர்களும் வைத்தார்கள். பொதுவாக அவனின் திருநாமங்கள் யாவும் அவர்களுக்கு கிடைத்த காட்சியடிப்படையில் வைக்கப்பட்டவையேயாகும்

இறைவனுக்கு مَنَّانٌ ، عَظِيْمٌ ، قَوِيٌّ ، عَلِيْمٌ)) அலீமுன், கவிய்யுன், அளீமுன், மன்னானுன் என்று முதலில் பெயர் வைத்தவர்கள் நபீ இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களேயாவர். இவ்வாறுதான் ஏனைய நபீமார்களும் பெயர்கள் வைத்தார்கள்.

எனினும் அக்காலங்களில் வாழ்ந்த நபீமார்கள் தமது மொழியிலேயே பெயர்கள் வைத்தார்கள். எனினும் திருக்குர்ஆனின் சிறப்பு அவற்றை அறபு மொழியில் ஆக்கியுள்ளதாகும். முன் வாழ்ந்த நபீமாரின் மொழிகளிலல்ல.

அல்லாஹ் என்ற திருநாமம் “தாத்”தின் பெயர் என்றும், ஏனைய திருநாமங்கள் “ஸிபாத்” தன்மைகளைக் குறிக்கும் பெயர்கள் என்றும், அல்லாஹ்வுக்கு நபீமார்களே தமக்குக் கிடைத்த “முஷாஹதா” காட்சிகளின் அடிப்படையில் பெயர்கள் வைத்தார்கள் என்றும் கடந்த பதிவுகளில் எழுதியிருந்தேன். அவற்றின் தொடரில் சில குறிப்புகள் தருகிறேன்.

وأَوَّلُ من وَضَع اسمَ الجلالة أبونا آدم على نبيّنا وعليه الصلاة والسلام ، وذلك أنّ الله سبحانه وتعالى لمّا نَفَخَ فيه الرّوحَ نَهَض مستوفِزا ، فقام على رِجْلٍ ، واتّكأ على رُكبةِ الرِّجل الأخرى ، فحصلت له في تلك الحالة مع ربّه مشاهدةٌ عظيمة ، فأنطَق اللهُ لِسانَه بلفظٍ يُؤَدِّ ي الأسرارَ الّتي شَاهدَها ، من الذات العليّة، فقال الله ، وقد خَرَج في علمه سبحانه وتعالى أنّه يَتَسَمَّى بهذه الأسماء الحسنى، فلذا أجراها على لسان أنبيائه وأصفيائه .

“அல்லாஹ்” என்று இறைவனின் “தாத்”திற்கு முதலில் பெயர் சொன்னவர்கள் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாவர். அதன் விபரம் பின்வருமாறு.

ஆதம் நபீ அவர்களை அல்லாஹ் படைத்து அவர்களில் “றூஹ்” உயிரை ஊதிய போது அவர்கள் எழுந்து ஒரு காலின் முழங்காலை – முட்டுக்காலை தரையில் குத்தியவர்களாக ஒரு காலில் நின்றார்கள். அவ்வேளை அவர்களுக்கு ஹக்தஆலாவின் வலுப்பமிகு காட்சியொன்று கிடைத்தது. அந்தக் காட்சிக்கு என்ன பெயர் வைக்க வேண்டுமென்று அல்லாஹ் விரும்பினானோ அந்தப் பெயரை நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நாவின் மூலம் வெளியாக்கினான். அந்த நாவு அல்லாஹ் என்று மொழிந்தது. அவர்கள்தான் இறைவனின் “தாத்”திற்கு அல்லாஹ் என்று பெயர் சொன்னார்கள். அல்லாஹ்வின் அறிவில் அவன் “அஸ்மாஉல் ஹுஸ்னா” அழகிய திருநாமங்கள் கொண்டு தனக்கு பெயர் வைக்க வேண்டுமென்று விரும்பி நபீமாரின் நாவுகளின் மூலம் அப்பெயர்களை வெளியாக்கினான்.

மேற்கண்ட இந்த விபரங்களுக்கு ஒரு ஹதீதைக் கூட ஆதாரமாகக் கூறாமல் அறபு மொழி மூலம் எழுதப்பட்ட விடயங்களை வாசகர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன்.

இதற்கு முன்னர் இத்தலைப்புத் தொடர்பாக நான் பதிவு செய்த செய்திகளும், இப்போது எழுதிக் கொண்டிருக்கின்ற இந்த விபரங்களும் “அல் இப்ரீஸ்” என்ற நூல், என்னிடமுள்ள பிரதி 257ம் பக்கத்தில் கூறப்பட்டவையாகும். என்னிடமுள்ள இன்னொரு பிரதியில் 287ம் பக்கம் கூறப்பட்டுள்ளது.

இந்த விபரங்களை வாசிக்கின்ற ஒரு சகோதரனுக்கு, ஹதீதுகள் ஆதாரங்களின்றி ஒருவர் சொல்கின்ற கருத்துக்களை நம்புதல் தொடர்பாக சந்தேகம் ஏற்படச் சாத்தியமுண்டு. இவ்வாறான சகோதரனுக்கு தெளிவை ஏற்படுத்துவது எமது கடமையாகும்.

அன்புச் சகோதரா! நீங்கள் ஸுன்னியா? வஹ்ஹாபியா? என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் வஹ்ஹாபியாயிருந்தால் நான் எதை எழுதினாலும் உங்கள் கல்பில் ஏறாது. ஏனெனில் வஹ்ஹாபிகளின் பண்பாடு எனக்கு நன்றாகத் தெரியும்.

எனக்கு தற்போது 77வயது நடந்து கொண்டிருக்கிறது. எனது 25ஆவது வயதிலிருந்து வஹ்ஹாபிகளை எதிர்த்துக் கொண்டும், அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களுக்கு மறுப்புக் கொடுத்துக் கொண்டுமே இருக்கிறேன். நான் அறிந்த வரை அவர்கள் அறிவிலும், ஆய்விலும் திறமையுள்ளவர்களாயிருந்தாலும் அவர்கள் ஸுன்னத் ஜமாஅத் கொள்கையிலும், “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்திலும் நற்பாக்கிய மற்றவர்கள் என்பதே எனது முடிவு.

الشَّقِيُّ لَا يُفِيْدُهُ أَيُّ دَلِيْلٍ ، وَلَا يُفِيْدُهُ التَّطْوِيْلُ ، وَلَوْ تُلِيَتْ عَلَيْهِ التَّوْرَاةُ وَالْإِنْجِيْلُ ، وَكذَالِكَ الْبَلِيْدُ وَالْمُتَعَصِّبُ ، وَكُلُّ وَهَّابِيٍّ مُتَعَصِّبٌ وَمُعَانِدٌ ، كَمَا هُوَ مَعْرُوْفٌ وَمُجَرَّبٌ ، خَتَمَ اللهُ عَلَى قُلُوْبِهِمْ ، وَعَلَى سَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ غِشَاوَةٌ ، اَعْمَى اللهُ اَبْصَارَهُمْ وَبَصَائِرَهُمْ،

ஆகையால் நீங்கள் கொள்கையில் ஸுன்னியாகவும், வலீமாரின் நேசராகவும் இருந்தால் நான் கூறுகின்ற கருத்து பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் உங்களுக்காக ஓர் ஆதாரம் தருகிறேன். இவ் ஆதாரம் மூலம் உங்களின் மனக் கண் திறக்குமென்று நம்புகிறேன்.

நபீமார்கள் எதைச் சொன்னாலும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி அதற்கு ஆதாரம் தேடி அலையத் தேவையில்லை. இதே போல் இல்ஹாம், கஷ்பு, இல்முல் லதுன்னீ வழங்கப்பட்ட குத்புமார் எது சொன்னாலும் அதற்கு ஆதாரம் தேடி காலத்தை வீணாக்காமல் கண்ணை மூடிக் கொண்டே அவர்களின் பேச்சை நம்பலாம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ”لَقَدْ كَانَ فِيمَا قَبْلَكُمْ مِنَ الأُمَمِ مُحَدَّثُونَ، فَإِنْ يَكُ فِي أُمَّتِي أَحَدٌ، فَإِنَّهُ عُمَرُ”

“உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகத்தவர்களில் “முஹத்ததூன்” இருந்தார்கள். எனது உம்மத்தில் அத்தகைய ஒருவர் இருப்பாராயின் அவர் உமர்தான்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
ஆதாரம் – புகாரீ
பாடம் – மனாகிபு உமர்
அறிவிப்பு – அபூ ஹுறைறா

இது போல் இன்னும் பல நபீ மொழிகள் உள்ளன. எடுத்துக் காட்டுக்கு ஒன்று போதும். مُحَدَّثُونَ என்றால் مُلْهَمُوْنَ – இல்ஹாம் வழங்கப்பட்டவர்கள் என்பது பொருள்.

எனவே இத்தகையோர் எது சொன்னாலும் அது நம்ப வேண்டியதேயாகும். ஏனெனில் “இல்ஹாம்” என்பதும் ஒரு வகையில் “வஹீ” தான் قال ابن عباس مِنْ نَبِيٍّ وَلَا مُحَدَّثٍ)) இந்த விடயத்தில் நபீ போன்றவரே “இல்ஹாம்” வழங்கப்பட்டவருமாவார் என்று இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியுள்ளார்கள்.

“இப்ரீஸ்” என்ற நூலை எழுதியவர் “அஹ்மத் இப்னு முபாறக்” என்பவராவார். இவர் குத்புல் வாஸிலீன் அப்துல் அஸீஸ் தப்பாஙீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லச் சொல்ல எழுதியவரேயன்றி தனது அறிவைக் கொண்டு எழுதியவரல்ல. இந்த விபரம் குறித்த நூல் 1ம், 2ம் பக்கங்களில் கூறப்பட்டுள்ளது.

கடந்த பதிவுகளின் போது “அல்லாஹ்” என்ற பெயர் மட்டும் இறைவனின் “தாத்”திற்குரிய பெயரென்றும், ஏனைய பெயர்கள் “ஸிபாத்” என்ற தன்மைகளைக் குறிக்கும் பெயர்களென்றும் பதிவு செய்திருந்தேன்.

முஸ்லிம்களில் 90 வீதமானோர் அல்லாஹ் என்பது இறைவனின் திருப்பெயரென்று மட்டும்தான் அறிந்திருப்பார்களேயன்றி வேறெந்த விபரமும் அறிந்திருக்கமாட்டார்கள். ஆயினும் ஓதிப்படித்த உலமாஉகளும், அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொண்டிருப்பவர்களும் “அவாம்முன்னாஸ்” சாதாரண பொது மக்களை விட சற்று அதிகமாக அறிந்திருப்பார்கள். இவர்களிற் கூட கத்தம், பாதிஹா, மௌலித் போன்றவை ஓதுவதிலும், இஸ்ம் – தாயத்து கட்டுதல், வைத்தியம் பார்த்தல், மற்றும் வியாபாரம், வயல், தோட்ட வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவோரும் இவ்விடயத்தில் சாதாரண பொது மக்கள் போன்றே இருப்பார்கள்.

எவராயினும் வாஜிபான “ஸிபாத்” தன்மைகள் இருபதையும், “ஜாயிஸ்” ஆன “ஸிபத்” ஒன்றையும், “முஸ்தஹீல்” ஆன “ஸிபாத்” இருபதையும் அறியாதவர்களாயிருந்தால் இவர்கள் முஸ்லிம்களாயிருந்தாலும் பாவிகளேயாவர். அறியாமல் விட்டதற்காக இவர்களுக்கு தண்டனை உண்டு. இந்த விபரங்களை அறிவது வயது வந்த ஒவ்வோர் ஆண், பெண் மீதும் கடமையாகும்.

கடந்த பதிவுகளில் அல்லாஹ்வின் “தாத்” என்று பல இடங்களில் நான் குறிப்பிட்டுள்ளேன். அது தொடர்பாக கவனம் செலுத்தாதவர்கள் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் ஒரு முஸ்லிம் இது பற்றி சிறிதளவேனும் அறிந்திருக்க வேண்டும்.

அல்லாஹ் என்ற சொல்லை எந்த ஒரு மொழிக்கும் மொழியாக்கம் செய்ய முடியாதது போல் இச் சொல்லையும் மொழியாக்கம் செய்ய முடியாது. பெயரை அல்லாஹ் என்று எழுதுவதுபோல் இதையும் “தாத்” என்றே எழுத வேண்டும்.

“தாத்” என்ற சொல்லைத்தான் மொழி பெயர்க்க முடியாதேயன்றி அது எது என்று ஓரளவு விளக்கங்கள் கூறி அதைப்புரிய வைக்க முடியும்.

“தாத்” என்றால் ஒரு பெயர் கொண்டு எது அழைக்கப்படுகின்றதோ அதுவே “தாத்” எனப்படும். உதாரணமாக மனிதன் என்ற பெயர் எதைக் குறிக்கிறதோ அதுவே அந்தப் பெயருக்குரிய “தாத்” எனப்படும். சுருக்கமாகக் கூறுவதாயின் “உடல்” என்று கூறலாம். சிருட்டிகளின் “தாத்”திற்கு உடல் என்று கூறினாலும் அல்லாஹ்வின் “தாத்”திற்கு அவ்வாறு கூற முடியாது. கூறினாற்கூட எதார்த்தம் புரியாத குழப்பவாதிகள் மாபெரும் போரொன்றையே ஆரம்பித்து விடலாம். அதோடு “பத்வா” வியாபாரிகளும் தயாராகிவிடுவார்கள். ஆங்கிலத்தில் ESSENCE என்று சிலர் எழுதினாலும் கூட அதை “தாத்” என்ற சொல்லின் சரியான பொருளுக்குரிய சொல்லாகக் கருதமுடியாது, பிற மதத்தவர்கள் “பிரம்மம்” என்று ஒரு சொல் பாவிக்கிறார்கள். இதற்கு தமிழ் அகராதியில் “அறிவே வடிவமான அடிப்படை உண்மை” என்றும், “தனிமுதல்” என்றும் பொருள் எழுதப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுக்கு “தாத்” உண்டு என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். ஆயினும் அது சிருட்டிகளின் “தாத்” போன்றதல்ல என்றும், அதற்கு எடை, நிறம், கட்டுப்பாடு, ஏதோனுமோர் வடிவம் இல்லை என்றும் நம்ப வேண்டும்.
وَكُلُّ مَا خَطَرَ بِبَالِكَ فَاللهُ عَلَى خِلَافِ ذَلِكَ
உனதுள்ளத்தில் ஏற்படுகின்ற அனைத்து கற்பனைகளுக்கும் மாறானவன், அவற்றுக்கு அப்பாற்பட்டவன் என்றும் நம்ப வேண்டும்.

عَلَا رَبُّنَا عَنْ كَيْفَ أَوْ أَيْنَ أَوْ مَتَى – وَعَنْ كُلِّ مَا فِى بَالِنَا يَتَصَوَّرُ

அல்லாஹ்வின் “தாத்” எப்படியானது, எங்கே உள்ளது, எப்போதிலிருந்து உள்ளது என்ற கேள்விகளை விட்டும் உயர்த்தியாகிவிட்டது. அது மட்டுமன்றி எமது உள்ளத்தில் உருவாகின்ற அனைத்து எண்ணங்களை விட்டும் அவன் துய்யவன்.

மேற்கண்ட இரண்டு பாடல்களினதும் சுருக்கம் என்னவெனில் அல்லாஹ்வின் “தாத்”தை எவராலும் எப்படியென்று மட்டிட்டுச் சொல்ல முடியாதென்பதேயாகும்.

இதனால்தான் ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்களும், இன்னும் பல மகான்களும் அல்லாஹ்வின் “தாத்” பற்றிக் கூறுகையில் اَلْعَجْزُ عَنْ إِدْرَاكِهِ إِدْرَاكٌ என்றும், اَلْعَجْزُ عَنْ دَرْكِهِ دَرْكٌ என்றும் கூறியுள்ளதாகவும், நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் مَا عَرَفْنَاكَ حَقَّ مَعْرِفَتِكَ என்று சொல்லியுள்ளார்கள் என்பதாகவும் கடந்த பதிவுகளில் நான் கூறியிருந்தேன்.

இன்னும் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் تَفَكَّرُوْا فِى خَلْقِ اللهِ وَلَا تَتَفَكَّرُوْا فِى ذَاتِ اللهِ அல்லாஹ்வின் படைப்புகள் பற்றிச் சிந்தியுங்கள். அவனின் “தாத்” பற்றிச் சிந்திக்காதீர்கள் என்றும், كُلُّكُمْ فِى ذَاتِ اللهِ حَمْقَى நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் “தாத்” விடயத்தில் மடையர்களாக உள்ளீர்கள் என்றும் சொல்லியுள்ளார்கள் என்பதையும் இங்கு நினைவு படுத்த விரும்புகின்றேன்.

அல்லாஹ்வின் “தாத்” தொடர்பாக நான் கூறவிரும்பும் சுருக்கம் என்னவெனில் அல்லாஹ்வுக்கு “தாத்” உண்டென்று அனைத்து முஸ்லிம்களும் நம்ப வேண்டும். இது கடமை. “பர்ழ்ஐன்” ஆகும். நம்பாதவர் தண்டிக்கப்படுவது மட்டுமன்றி அவர் விசுவாசிகள் பட்டியலில் இருக்கவும் முடியாது.

இன்று இவ் உண்மை தெரியாமல் தீனுடைய சேவை என்று மூட்டை முடிச்சுகளுடன் நாடுகளை வலம் வருபவர்களும், “தவ்ஹீத்” அமைப்பைச் சேர்ந்தவர்களும் எந்த ஒரு பலனையும் அடைந்து கொள்ள மாட்டார்கள். ஒரு விசுவாசியின் முதற்கடமை அல்லாஹ்வை அறிவதென்று அண்ணல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அழகாகவும், தெளிவாகவும் சொல்லியிருந்தும், இன்னும் “அகீதா” கொள்கை தொடர்பான அனைத்து நூல்களிலும் அனைத்து இமாம்களும்

يَجِبُ عَلَى كُلِّ مُكَلَّفٍ أَنْ يَعْرِفَ مَا يَجِبُ لِمَوْلَانَا عَزَّ وَجَلَّ وَمَا يَسْتَحِيْلُ عَلَيْهِ وَمَا يَجُوْزُ لَهُ،

வயது வந்த ஒவ்வொருவர் மீதும், அல்லாஹ்வுக்கு “வாஜிப்” ஆன கட்டாயமாக இருக்க வேண்டிய இருபது “ஸிபாத்” தன்மைகளையும், அவனுக்கு “ஜாயிஸ்” இருப்பதும், இல்லாதிருப்பதுமான ஒரு தன்மையையும் அறிந்து கொள்வது “வாஜிப்” கடமை என்று கூறியிருந்தும் இவற்றைப் புறம் தள்ளிவிட்டும், இவையெல்லாம் எமக்குத் தேவையில்லை என்று தூக்கியெறிந்து விட்டும் தொப்பி போடுவதும், நீண்ட ஜுப்பா – ஷேட் போடுவதும், தலைப்பாகை கட்டுவதும், தாடி வளர்ப்பதும், கையில் ஜெப மாலை எடுப்பதுமே இஸ்லாமும், ஈமானுமென்று நம்பியுள்ளவர்கள் எரி நரகிற்கிரையாவர் என்பதில் சந்தேகமே இல்லை. “ஷரீஆ” வைப் பேண வேண்டுமென்று கூறுவோரிடம் இதைவிட “ஷரீஆ” என்ன இருக்கின்றதென்று கேட்கிறோம்?!

அல்லாஹ் என்ற பெயர் இறைவனின் “தாத்”திற்குரிய பெயரென்று கூறிவரும் நான் அந்த “தாத்” எதையெல்லாம் உள்வாங்கியதென்று சுருக்கமாகக் கூறி அதன் விபரத்தை முதலில் சில உதாரணங்கள் மூலம், பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள், நபீ மொழிகள் மூலமும், இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய ஞான மகான்களின் பேச்சுகள் மூலமும் தெளிவு படுத்தலாமென நினைக்கிறேன்.

முதலில் ஒரு கதை சொல்கிறேன். இதைப் புரிந்து கொண்டால் இதன் பிறகு நான் கூறவுள்ள விடயங்களைப் புரிந்து கொள்வது மிக இலகுவாக இருக்குமென்று எதிர்பார்க்கிறேன்.

இறைஞான தாகம் கொண்ட ஒரு “ஸாலிக்” இறைவழி நடப்பவன் ஒரு ஞானகுருவிடம் சென்று மகானே! எனக்கு அல்லாஹ் யாரென்று விளக்கித் தாருங்கள் என்றான். குருமகான் அவனிடம் இதுவரை நீ எவ்வாறு விளங்கி வைத்துள்ளாய் என்பதை சுருக்கமாகச் சொல்ல முடியுமா? என்று கேட்டார். ஆம், சொல்கிறேன் என்று கூறிய அவன் பின்வருமாறு சொன்னான்.

(நான் மார்க்கம் கற்ற மார்க்க அறிஞன் அல்ல. மார்க்க அறிஞர்கள் சொல்வதைக் கேட்டுச் செயல்பட்டு வருகின்ற சாதாரண ஒருவன்தான். இறைவன் யார்? அவன் எங்கே இருக்கின்றான்? எப்படி இருக்கின்றான் என்று அறிந்து கொள்வதற்காக பல வருடங்கள் பல அறிஞர்களிடம் சென்று மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தேடியிருக்கிறேன். அவர்களில் எவரும் என் தாகத்தை தீர்க்கவில்லை. சிலர் அவன் “அர்ஷ்” என்ற இடத்தில் இருக்கின்றான் என்றார்கள். இன்னும் சிலர் எல்லா இடத்திலும், எல்லா வஸ்த்திலும் இருக்கின்றான் என்றார்கள். அவன் ஒருவன் உள்ளான் என்று மட்டும் அறிந்தால் போதும் என்றார்கள். எவரின் அறிவுரையும் எனக்குப் பயன் தரவில்லை) என்றான்.

குருமகான் அவனிடம் வீட்டிலிருந்து பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. எனக்கு கடலோரம் ஒரு தோட்டம் உண்டு. அது அமைதியான இடம். அங்கு எவரும் வரவும் மாட்டார்கள். நீங்கள் “அஸ்ர்” தொழுத பின் இங்கு வாருங்கள். இருவரும் அங்கு சென்று பேசுவோம் என்றார். “அஸ்ர்” தொழுகையின் பின் இருவரும் தோட்டத்திற்குச் சென்றார்கள்.

குருமகானின் தோட்டத்தில் 100 வகையான மரங்களும், செடிகளும், ஒரு கிணறும், ஒரு குளமும் இருந்தன. குருமகான் அவரை அழைத்துக் கொண்டு தோட்டத்தைச் சுற்றிக் காட்டினார். ஒவ்வொரு மரத்தையும், செடியையும் சுட்டிக் காட்டி அவற்றின் பெயர்களையும், விபரங்களையும் கூறினார். கிணற்றையும், குளத்தையும் சுட்டிக் காட்டி அவற்றின் பெயர்களையும், விபரங்களையும் கூறினார். இறுதியாக ஓர் இடத்தில் இருவரும் அமர்ந்து தோட்டத்திலுள்ள பழ வகைகள் சாப்பிட்டு தேனீரும் குடித்தபின் குருமகான் வெளியேறத்தயாரான போது குருமகானிடம் அவர், அல்லாஹ்வைப் பற்றிச் சொல்லித் தருவதற்காகவே என்னை அழைத்து வந்தீர்கள். ஏன் சொல்லித்தராமல் செல்லப் போகின்றீர்கள் என்று கேட்டான்.

குருமகான், நான் சொல்லித் தந்துவிட்டேன் புரியவில்லையா? என்று கேட்டார். இல்லை என்றார் அவர். அவரைத் தன்னருகே அழைத்து அவரின் நெற்றி முத்தி அன்பு மகனே! தோட்டம் என்ற பெயர் போன்றதே அல்லாஹ் என்ற பெயருமாகும். நீ இங்கு எத்தனையோ மரங்களையும், செடி கொடிகளையும் பார்த்தாய். இவையாவையும் உள்வாங்கிய ஓர் இடத்தின் பெயர்தான் தோட்டம். இதேபோல் மனிதர்கள், ஜின்கள், ஷெய்தான்கள், ஊர்வன, பறப்பன, நடப்பன, பாய்வன, மற்றும் ஆறுகள், கடல்கள், மலைகள், மற்றுமுள்ள அனைத்துப் படைப்புக்களையும் உள்வாங்கிய ஒன்றின் பெயர்தான் அல்லாஹ் என்ற பெயராகும். இத் தோட்டம் நீ பார்த்த அனைத்தையும் உள்ளடக்கிய ஓர் இடமாயிருப்பது போன்றுதான் அல்லாஹ்வின் “தாத்”துமாகும். அந்த “தாத்”தின் பெயர்தான் அல்லாஹ் என்ற பெயர். இந்த இடத்தின் பெயர்தான் தோட்டம் என்ற பெயர். நீ இங்கு கண்ட ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு செடியும் ஒன்று மற்றதுக்கு தோற்றத்திலும், தன்மையிலும் மாறுபட்டதாயிருப்பது போல் அல்லாஹ் என்ற தோட்டத்திலுள்ள நான் உனக்கு மாறுபட்டவனாகவும், நீ எனக்கு மாறுபட்டவனாகவும், ஒவ்வொரு படைப்பும், தோற்றத்திலும், தன்மையிலும் மாறுபட்டதாகவே உள்ளது.

ஆயினும் தோட்டத்திலுள்ள எந்த ஒரு மரமும், எந்த ஒரு செடியும் ஒன்று மற்றதுக்கு தோற்றத்திலும், தன்மையிலும் மாறுபட்டிருந்தாலும் அவற்றில் ஒன்று கூட தோட்டத்திற்கு வேறானதாக இல்லை அல்லவா? இவ்வாறுதான் அல்லாஹ்வின் “தாத்” என்ற தோட்டத்திலுள்ள ஒரு படைப்பும் அவனுடைய “தாத்”திற்கு வேறுபட்டதாக இல்லை என்பதுமாகும்.

இவ்வாறு கூறிய குருநாதர் இப்போது புரிகிறதா? என்று கேட்டார். ஆம், ஓரளவு புரிந்து விட்டது. ஆயினும் இன்னும் தெளிவு தேவை என்றான். குருநாதர், நான் திருக்குர்ஆன், திரு நபீயின் நிறை மொழிகளின் ஆதாரங்கள் மூலம் இதற்கான விளக்கம் சொல்லவில்லை. ஒரு கதை மட்டும்தான் சொன்னேன். இன்ஷா அல்லாஹ் நான் கூறிய இத்தத்துவம்தான் இஸ்லாம் கூறும் தத்துவம் என்று நிறுவுவதற்கு சுமார் 25 திருக்குர்ஆன் வசனங்களும், பல நபீ மொழிகளும் உள்ளன. அதேபோல் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் முதல் இன்று வரை தோன்றிய அவ்லியாஉகளின் பேச்சுக்களும்ஆதாரங்களாக உள்ளன. இவற்றையெல்லாம் நான் உனக்கு விளக்கி வைத்து உன்னை மூடியுள்ள الحجب الظلمانية என்ற இருள் திரைகளையும் அகற்றி வைத்தால் وكشفنا عنك غطائك فبصرك اليوم حديد என்ற திருமறை வசனத்தின்படி நீ தெளிவு பெற்றுக்கொள்வாய். நீ என்னோடு தொடர்ந்து நாற்பது நாட்கள் பொறுமையுடன் இரு என்றார் குரு.

அல்லாஹ்வின் “தாத்”திற்கு நான் கூறிய தோட்டம் என்பது ஓர் உதாரணமேயன்றி அது நிகர் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத மௌலவீ சகோதரர் ஒருவர் நான் தோட்டத்தை அல்லாஹ்வுக்கு நிகர் கூறியதாகப் புரிந்து போனில் என்னை எச்சரித்தார். அவருக்கு நான் ஒரு பதிலும் சொல்லாமல் எனது 7வது பதிவைப் பார்க்குமாறு ஆலோசனை கூறினேன். ஆகையால் அவருக்காக சில வரிகள் மட்டும் எழுதிவிட்டு தோட்டத்தில் உரையாடிய குரு, சிஷ்யனின் கதையை தொடர்வேன்.

أيّها الأخ المغترّ! حقِّق هذه المسئلة واعرف الفرق بين المَثَلِ والمِثْلِ، وإنّما ذكرتُ البستان مثلا لذات الله تعالى لا مِثْلًا لها، ولكنّي أشكرك باتّصالك بي فى الهاتف، لأنّ العلم بالتّعلُّم،

وها أنا أبيّن لك الفرق بين المَثَلِ والمِثْلِ، واعلم يا أخي أنّ الله مُنزّه ومُقدّسٌ عن المثل والشـريك والكفو والنِّدِّ، كما قال الله تعالى فى كلامه القديم ‘لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ ‘ (الشورى – 11) ولم يكن له كفوا أحد، (الإخلاص – 4 ) ولكن له المَثَلُ الأعلى، كما قال الله تعالى ‘ ولله المثل الأعلى ‘ (النحل 60 )

واعلم أنّ الفرق بين المَثَل والمِثْلِ واضح بيّن، كما بيّنه الشّيخ الإمام عبد الوهّاب الشّعراني رحمه الله فى الجزء الأوّل من كتابه اليواقيت والجواهر فى المبحث الثاني والعشرين،

قال الإمام: مَنْ ظَنَّ أنَّ المَثَلَ بِفَتْحَتَيْنِ كَالْمِثْلِ بِكَسْرِ الْمِيْمِ وَسُكُوْنِ الْمُثَلَّثَةِ وذلك خطأ فاحش، فإنّ المِثلَ بالسّكون يستَدعي المُساواةَ فى جميع الصّفات كالسَّوادين والجوهرين، ويقوم كلُّ واحدٍ منهما مقامَ الآخرِ من جميع الوجوه، فى كلّ حال، بخلاف المَثَلِ بفتحتين، فإنّه لا يُشترط فيه المساواةُ من كلّ وجه، وإنّما يُستعمل فيما يُشاركُه بأدنَى وَصفٍ، قال تعالى ‘ إنّما مَثَلُ الحياة الدنيا كماءٍ أنزلناه من السّماء، والحياةُ لا صورةَ لها ولا شَكْلَ، والماءُ ذو شكلٍ وصُورةٍ، وقد مثَّلَ الله به الحياة
அன்பிற்குரிய சகோதரர் மௌலவீ அவர்களே! நான் தோட்டத்தை அல்லாஹ்வின் “தாத்”திற்கு உதாரணமாகத்தான் கூறினேன். தவிர நிகராகக் கூறவில்லை. உங்களுக்கு مَثَلٌ என்பதற்கும், مِثْلٌ என்பதற்கும் வித்தியாசம் தெரியாமற் போனதால் தவறாக விளங்கிவிட்டீர்கள். எனினும் என்னுடன் போனில் தொடர்பு கொண்டதற்காக உங்களுக்கு எனது நன்றிகள். “கல்வி என்பது கற்பது கொண்டே”

உங்களுக்காக அறபு மொழியில் சிறிய அளவிலான விளக்கம் எழுதியுள்ளேன். வாசித்து விடயத்தைப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். அறபு மொழியில் எழுதியதற்கான விளக்கம் தேவையென்றால் கைபேசி மூலம் அறிவியுங்கள். அடுத்தடுத்த பதிவுகளில் தமிழில் தருகிறேன்.

தோட்டம் என்ற சொல், அதிலுள்ள மரங்கள், செடிகள், கொடிகள் என்பவற்றையெல்லாம் உள்வாங்கிய ஒரு சொல்லாக இருப்பது போல் அல்லாஹ் என்ற பெயருக்குரிய “தாத்” என்பதும் இவ்வாறுதான். இந்த “தாத்” முதல் படைப்பிலிருந்து இது நொடி வரை படைத்த படைப்புகளையும், இதே நொடியில் அவன் படைத்துக் கொண்டிருக்கின்ற படைப்புகள் யாவையும் மற்றும் இதன் பிறகு அவன் படைக்கவிருக்கின்ற படைப்புக்கள் யாவையும் உள்வாங்கியதேயாகும். இவையாவும் அவனின் “தாத்”திலேயே இருந்தன.
அவனின் “தாத்”தை ஒரு சிருட்டியின் “தாத்” போன்றதென்று நாம் கற்பனை செய்து கொண்டால்தான் இத்தத்துவத்தை ஜீரணிக்க முடியாமற் போய்விடும். மனிதனின் கட்டுப்பாட்டிற்குரிய “அக்ல்” புத்தி ஏற்றுக் கொள்ளாது. والله واسع عليم என்ற திருமறை வசனத்தின்படி அவனின் “தாத்”தை எவராலும், எந்த நவீன கருவியாலும் மட்டிட, அளந்திட முடியாதென்று விளங்கிக் கொண்டால் அந்த “தாத்” சிருட்டிகளை உள்வாங்கியதென்று சொல்வது வியப்பாக இருக்காது.

இன்றைய விஞ்ஞான நவீன கண்டுபிடிப்புகள் இத்தகைய இறை தத்துவங்களை நிறுவுவதற்கு ஆதாரங்களாக இருப்பது சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றல்ல. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் இறுவெட்டுக் கூட கோடிக்ககணக்கான எழுத்துக்களை உள்வாங்கிக் கொள்கின்றதென்றால், பல்லாயிரம் நூல்கள் – கிதாபுகளை உள்ளடக்கிக் கொள்கின்றதென்றால் சாதாரணமாக மனிதன் கையில் எடுத்துச் செல்லக் கூடிய ஒரு சிறிய (CD) இறுவெட்டு ஸஹீஹான ஹதீதுக் கிரந்தங்களான புகாரீ, முஸ்லிம், அபூ தாவூத், நஸயீ, இப்னு மாஜா, துர்முதீ முதலான கிரந்தங்களையும், அவற்றுக்கான விரிவுரை நூல்களையும் உள்ளடக்கிக் கொள்கின்றதென்றால் எவராலும் படைக்கப்படாத “கதீம்” பூர்வீகமான “தாத்” சிருட்டிகள் அனைத்தையும் உள்ளடக்கியதென்றால் அது வியப்பான ஒன்றல்ல.

ஒரு சிறு இறுவெட்டில் இலட்சக்கணக்கான எழுத்துக்கள் ஒன்றுடன் இன்னொன்று சேராமலும், பிரியாமலும், ஒன்று இன்னொன்றுடன் சிக்கிக் கொள்ளாமலும் எவ்வாறு இருக்கின்றனவோ அதைவிட ஆயிரம்படி மேலாக, சிறப்பாக அல்லாஹ்வின் “தாத்”தில் அனைத்து சிருட்டிகளும் பதிவாகியுள்ளன.

இறுவெட்டில் எழுத்துக்கள், சொற்கள், வசனங்கள் பதிவாகியிருக்கும் நிலையில் அவற்றுக்கு ஒரு பெயர் இருக்க வேண்டும் (Data). அதேபோல் அல்லாஹ்வின் “தாத்” தில் அனைத்து சிருட்டிகளும் பதிவாகியிருந்த இருந்த நிலையில் அவற்றுக்கு الشُّؤُونُ الذَّاتِيَّةُ என்றும், اَلْأَعْيَانُ الثَّابِتَةُ என்றும் பெயர் இருந்தது.

இறுவெட்டில் பதிவான எதுவாயினும் அது உருவமற்றதாயிருப்பதுபோல் அல்லாஹ்வின் “தாத்”தில் பதிவான எதுவாயினும் அதுவும் உருவமற்றதாகவே இருக்கும். எப்போது இறுவெட்டில் உள்ளது வெளியாகின்றதோ அப்போது அது தனக்குரிய உருவத்தில் வெளியாகும். உருவம் என்பது சிலைகளையும், விக்கிரகங்களையும் மட்டும் குறிக்காதென்ற தத்துவத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும். உருவம் என்பது ஒன்று இன்னொன்றை விட்டும் வேறுபடுத்திக் காட்டும் அடையளமாகும். “அ” என்ற எழுத்தின் அந்த உருவம் அது “ஆ” அல்ல என்றும், “இ” என்ற அந்த எழுத்தின் உருவம் அது “ஈ” அல்ல என்றும் பிரித்து வகுத்துக் காட்டும் உருவமாகும்.

இதேபோல் இறைவனின் “தாத்”தில் பதிவாயிருந்த ஒன்று வெளியாகுமாயின் அது தனக்குரிய உருவத்தை பெற்றுக் கொள்ளும். அதாவது அல்லாஹ் தனது “தாத்”தில் பதிவாகியிருந்த ஒரு படைப்பை வெளியாக்க விரும்பினானாயின் – படைக்க நாடினானாயின் அவன் நாடிய படைப்பாக அவனே வெளியாகின்றான். இதையே ஸூபீ மகான்கள் தமது பாஷையில் “தஜல்லீ” என்பார்கள்.

அல்லாஹ்வின் “தாத்”தில் பிரபஞ்சங்கள் அனைத்தும் அடங்கி அவை வெளியாகாமலிருந்த நிலையில் அவை اَلشُّؤُوْنُ الذَّاتِيَّةُ என்றும், اَلْأَعْيَانُ الثَّابِتَةُ என்றும் அழைக்கப்படுமென்று 7வது பதிவின் இறுதியில் குறிப்பிட்டிருந்தேன். இவ்வுண்மையைப் புரிய வைப்பதற்காக தோட்டம், இறுவட்டு இரண்டு உதாரணங்களையும் கூறியிருந்தேன்.

நான் கூறிய இதே கருத்தை ஒரேயொரு பாடலில் உள்வாங்கிச் சொல்லிவிட்டார்கள் குணங்டியார் அப்துல் காதிர் ஆலிம் புலவர் அவர்கள்.

கொப்பு வித்தினுள்ளே குடியிருந்த கொள்கை என
எப் பொருட்கும் சித்தாய் இருந்தாய் மனோன்மணியே!

ஒரு மா விதையில் – மாங் கொட்டையில் மரம், இலை, பழம், பூ என்பன அடங்கியிருப்பது போல் அல்லாஹ்வின் “தாத்”தில் அனைத்து படைப்புகளும் அடங்கியிருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்கள் மஸ்தான்.

இதே கருத்தை ஸெய்யித் முஹம்மத் மௌலானா அவர்கள்,

எள்ளுக்குள் எண்ணெயைப் போல் எங்கும் நிறைந்தவனே!
உள்ளுக்குள்ளாயிருந்து உட்கதவைப் பூட்டிக் கொண்டாய்

என்று கூறியுள்ளார்கள்.

பிரபஞ்சம் அனைத்தையும் உள்வாங்கிய அந்த “தாத்”, தான் விரும்பிய ஒன்றை – ஒரு வஸ்த்தை வெளியாக்க விரும்பினால் அந்த ஒன்றாக – அந்த வஸ்த்தாக அந்த “தாத்”தே வெளியாகும். வெளியானதும் அது اَلشُّؤُوْنُ الْخَارِجِيَّةُ என்றும், اَلْأَعْيَانُ الْخَارِجِيَّةُ என்றும், خَلْقٌ படைப்பு என்றும் பெயர் பெறும்.

“தாத்” என்பதுதான் சிருட்டியாக வெளியானதா? அல்லது வேறொன்றா? என்று நாம் ஆராயத் தேவையில்லை. ஏனெனில் வெளியானது அந்த “தாத்” தானேயன்றி இன்னொன்றல்ல. இதற்குப் பின்வரும் திருவசனம் ஆதாரமாக உள்ளது.

قال الله تعالى إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ
அவன் ஒரு வஸ்த்தைப் படைக்க நாடினால் அதற்கு – அந்த வஸ்த்துக்கு “நீ ஆகு” என்று சொல்வான் அது ஆகிவிடும். (36-82)

(பின்வரும் இந்த விளக்கம் பொது மக்களுக்குத் தேவையற்றது)

இந்த வசனம் மிகவும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய வசனமாகும். ஏனெனில் இவ்வசனத்தில் பல “ழமாயிர்” பிரதிப் பெயர்ச் சொற்கள் உள்ளன. அவற்றை அறபு மொழி கற்கும் மாணவர்கள் சிக்கலின்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அலுப்பையும் கவனியாமல் ஓரளவு விளக்கமாக எழுதுகிறேன்.

முதலில் “ழமீர்” என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம் இச் சொல் علم النحو மொழியிலக்கணத்தோடு சம்பந்தப்பட்ட சொல்லாகும். இதற்கு தமிழில் பிரதிப் பெயர்ச் சொல் எனப்படும். உதாரணமாக “முஸம்மில் வந்தான். அவன் நல்லவன்” என்பது போன்று. இவ்வசனத்தில் வந்துள்ள “அவன்” என்பதே அறபு மொழியிலக்கணத்தில் “ழமீர்” எனப்படும். இதில் நிறைய விபரமுண்டு. நமது தலைப்புக்கு அவசியம் தேவையான விபரத்தை மட்டும் எழுதுகிறேன்.

அறபு மொழியிலக்கணத்தில் வசனத்தில் கூறப்பட்ட “ழமீர்” என்றும், கூறப்படாத மறைந்த “ழமீர்” என்றும் இருவகை உண்டு.

நாம் ஆய்வு செய்ய வேண்டிய மேற்கண்ட வசனத்தில் மட்டும் மொத்தம் ஆறு “ழமீர்”கள் – பிரதிப் பெயர்ச் சொற்கள் உள்ளன. இவற்றில் வசனத்தில் கூறப்பட்ட “ழமீர்” இரண்டு மட்டும்தான். மற்ற நான்கும் மறைந்துள்ளவையாகும்.

அவ்விரண்டும் اَمْرُهُ என்ற சொல்லில் வந்துள்ள “ஹூ” என்பதும், لَهُ என்ற சொல்லில் வந்துள்ள “ஹூ” என்பதுமாகும். இவ்விரண்டும் வசனத்தில் கூறப்பட்ட பிரதிப் பெயர்ச் சொற்களாகும்.

மற்ற நான்கில் ஒன்று أَرَادَ என்ற சொல்லிலும், يَقُوْلَ என்ற சொல்லிலும், كُنْ என்ற சொல்லிலும், يَكُوْنُ என்ற சொல்லிலும் உள்ளன.

வசனத்தில் கூறப்பட்ட பிரதிப் பெயர்ச் சொற்களில் اَمْرُهُ என்பதிலுள்ள பிரதிப் பெயர்ச் சொல் அல்லாஹ்வையும், لَهُ என்பதிலுள்ள பிரதிப் பெயர்ச் சொல் முன்னால் வந்துள்ள شَيْئًا என்ற சொல்லையும் குறிக்கும். வசனத்தில் கூறப்படாத நான்கு பிரதிப் பெயர்ச் சொற்களில் أَرَادَ என்பதிலுள்ளதும், يَقُوْلُ என்பதிலுள்ளதும் அல்லாஹ்வையே குறிக்கும். வசனத்தில் கூறப்படாத மற்ற பிரதிப் பெயர்ச் சொற்கள் இரண்டும் – كُنْ என்ற சொல்லில் உள்ளதும், يَكُوْنُ என்ற சொல்லிலுள்ளதும் شَيْئًا என்ற சொல்லைக் குறிக்கும்.

இத்துடன் பிரதிப் பெயர்ச் சொல் பற்றிய விபரம் முற்றுப் பெற்றது.

அல்லாஹ் ஒரு வஸ்த்தைப் படைக்க நாடினால் அவ் வஸ்த்திற்கு “நீ ஆகு” என்று அவன் சொல்வான். அவ்வஸ்த்து ஆகிவிடும்.

அல்லாஹ் ஒரு வஸ்த்தைப் படைக்க நாடிய போது அவ்வஸ்த்து எங்கே இருந்தது? என்று சிந்திக்க வேண்டும். சிந்தித்தால் அவனுடைய “தாத்”தில்தான் நாட்டமாக அது இருந்தது. வேறெங்கும் அது இருந்ததென்று சொல்வதற்கு வழியே இல்லை. அவனுடைய “தாத்”தில் நாட்டமாக இருந்த அந்த வஸ்த்து அவனுடைய “தாத்”தானாக இருந்ததேயன்றி ஒரு பெட்டிக்குள் ஒரு பொருள் இருப்பது போல் பெட்டி வேறாகவும், பொருள் வேறாகவும் இருக்கவில்லை. உதாரணமாக தேனில் இனிமை இருப்பது போன்றும், மிளகாயில் உறைப்பு இருப்பது போன்றும், உப்பில் உவர்ப்பு இருப்பது போன்றும், புளி மாங்காயில் புளி இருப்பது போன்றுமே இருந்தது.

இந்நிலையில் – அதாவது அல்லாஹ் படைக்க நாடிய அவ்வஸ்த்து “தாத்” தானாக இருந்த நிலையில் அவ்வஸ்த்துக்கு “நீ ஆகு” என்று சொல்வது அவன் தனது “தாத்”திற்குச் சொல்வதாகவே ஆகும். சொன்னதும் அவ்வஸ்த்து ஆகிவிடுகிறதென்றால் அந்த “தாத்” துதான் அவ்வாறு ஆகிவிடுகின்றது.

இப்போது அல்லாஹ் படைக்க நாடிய வஸ்த்தாக வந்தது அவனின் “தாத்”தேயன்றி வேறொன்றில்லை. வேறொன்று என்று சொல்வதற்குக் கூட அங்கு வேறொன்றுமே இல்லை.

எனவே, அல்லாஹ் நீ இன்ன வஸ்த்தாக ஆகுக என்று தனக்குத் தானே சொன்னான் என்றும், அதன்படி அவனின் “தாத்”துதான் அவ்வஸ்த்தாக ஆனதென்றும் நம்பவும் வேண்டும், விளங்கவும் வேண்டும். இதுவே எதார்த்தம்.

ஒரு பெட்டிக்குள்ளிருந்த ஒரு பொருள் – ஒரு சாமான் வெளிவந்தது போல் அவனின் “தாத்”திலிருந்து வெளியே வந்தது போலென்று கொள்ளுதலும், விளங்குதலும் எதார்த்தத்திற்கு முரணானதாகும். இது இறுதியில் “குப்ர்” என்ற நிராகரிப்பை உண்டாக்கிவிடவும் கூடும்.

இவ்விடத்தில் மாபெரும் பிரச்சினையொன்று உண்டு. நீங்கள் சொல்வது போல் “தாத்”துதான் அல்லாஹ் நாடிய ஒவ்வொரு வஸ்த்தாகவும் வெளியாகிறதென்று வைத்துக் கொண்டால் அந்த “தாத்”துக்கு ஏதும் குறைகள் ஏற்படமாட்டாதா? இது நியாயமான கேள்விதான்.

“அல்லாஹ்” என்ற திரு நாமம் மட்டும் “தாத்”தின் பெயர் என்றும், ஏனைய 99 திரு நாமங்களும் “ஸிபாத்” பண்புகளின் திருநாமங்கள் என்றும் கடந்த பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.

“தாத்”தின் பெயர் என்பது இயற் பெயர் என்றும், ஏனைய பெயர்கள் தொழிற் பெயர்களென்றும் கூறலாம். உதாரணமாக முஸம்மில் என்று ஒருவருக்கு பெற்றோரால் வைக்கப்பட்ட பெயர் இயற் பெயர் என்றும், அவர் சமயற் காரனாயிருந்தால் طَبَّاخٌ என்றும், தையற் காரனாயிருந்தால் خَيَّاطٌ என்றும், தச்சனாயிருந்தால் نَجَّارٌ என்றும் மக்களால் அழைக்கப்படுகின்ற பெயர்கள் தொழிற் பெயர்கள் என்றும் சொல்லப்படும். இப்பெயர்கள் பண்புப் பெயர்கள் என்றும் சொல்லப்படும்.

இவ்வாறுதான் இறைவனின் “அல்லாஹ்” என்ற பெயரும், அவனுடைய “றஸ்ஸாக்” உணவளிப்பவன், “கப்பார்” குற்றங்களை மன்னிப்பவன், “ஹாதீ” வழிகாட்டுபவன் என்ற பெயர்களுமாகும். தொழிற் பெயர்கள் காரணப் பெயர்கள் என்றும் அழைக்கப்படும். இந்த விபரமும் கடந்த பதிவுகளில் சுருக்கமாகக் கூறியிருந்தேன்.

சிருட்டிகள் – அண்டசாசரங்கள் அனைத்தும் “அல்லாஹ்”வின் “தாத்” என்ற அந்தக் கருவில் தேனில் இனிமை போன்றும், மிளகாயில் உறைப்பு போன்றும், உப்பில் உவர்ப்பு போன்றும், புளி மாங்காயில் புளி போன்றும் இருந்தன என்றும் பதிவு செய்திருந்தேன்.

அவனின் “தாத்”தில் அடங்கியுள்ள சிருட்டிகளில் ஏதாவதொன்றை வெளிக்கொணர அவன் நாடினால் தனது “தாத்”திற்கு நீ ஆகுக என்பான். அது அவன் நாடிய பொருளாக ஆகிவிடும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

இவையாவும் இதற்கு முன்னால் பதிவு செய்த குறிப்புகளாகும். இவற்றில் ஏதாவதொரு விடயத்தில் யாருக்காவது தெளிவில்லாதிருந்தால் அவர்கள் என்னுடன் அல்லது இறைஞானம் தெரிந்தவர்களுடன் தொடர்பு கொண்டு தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பதிவின் மூலமும் மீண்டும் அதை நான் வலியுறுத்துகிறேன்.

ஏனெனில் நான் கூறும் விளக்கத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு எனக்கு “பத்வா” வழங்குவதோ, என்னை குறை கூறுவதோ அறிவுடைமை அல்ல. எனது கருத்தை தவறாக விளங்கி வழிகெட்டு விடக் கூடாதென்பதில் நான் மிகவும் அவதானமுள்ளவனாக இருக்கின்றேன். மீண்டும் ஒரு முறை அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். நான் கடந்த பதிவுகளில் கூறிய கருத்துக்களிலோ, இதன் பிறகு கூறவுள்ள கருத்துக்களிலோ யாருக்காவது தெளிவின்மை, சந்தேகம் இருந்தால் “கொரோனா” நமது நாட்டிலிருந்து விடை பெற்றுச் சென்று ஊரடங்குச் சட்டமும் எடுக்கப்பட்டு நமது நாடு பழைய நிலைமைக்குத் திரும்பிய பின் என்னை நேரில் கண்டு தெளிவு பெற்றுக் கொள்ளுமாறு அவர்களை அன்பாய் – பணிவாய் கேட்டுக் கொள்கின்றேன். கடிதம் மூலமும், கைபேசி மூலமும் பதில் கூறும் நிலையில் நான் இல்லை. இதை நான் விரும்பவில்லை. நேரில் பேசுவதே சிறந்தது.

கடந்த எனது பதிவுகளை அறிந்தவர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்க சாத்தியம் உண்டு. அதாவது “அல்லாஹ்” தனது “தாத்”தில் அடங்கியுள்ள ஏதாவதொன்றை வெளிப்படுத்த நாடினால் தனது “தாத்”திற்கு – தனக்கு “நீ ஆகு” என்று சொல்வான். அது அப் பொருளாய் வெளியாகும். இதனால் அவனுடைய “தாத்” நாளடைவில் அழிந்து போகாதா? அல்லது மாறுபட்டுப் போகாதா? அல்லது ஏதாவதொரு குறை அதற்கு ஏற்பட்டு விடாதா? இதுதான் கேள்வி.

அல்லாஹ்வின் அருளால் முடிந்தவரை விளக்கம் கூறி சந்தேகத்தை நீக்கி வைக்க முயற்சிக்கிறேன். الله هُوَ الْهَادِيْ அல்லாஹ்தான் நல்வழிப்படுத்துபவன். நான் அல்ல. நான் அதற்கு ஒரு மழ்ஹர் – பாத்திரமேதான்.

அல்லாஹ்வின் “தாத்” சிருட்டியாக வெளியாவதால் அந்த “தாத்”திற்கு ஓர் அணுவளவேனும் எந்த ஒரு குறையும், எந்த மாற்றமும் ஏற்படமாட்டாது. இதுவே ஞானத்தின் உச்சியில் நிற்கும் “முஹக்கிகீன்”, “முதக்கிகீன்” என்று அழைக்கப்படுகின்ற பெரும் பெரும் மகான்களின் ஒன்றுபட்ட முடிவாகும்.

إٍنَّ ذَاتَ اللهِ تَعَالَى لَا تَفْنَى وَلَا تَتَغَيَّرُ بِظُهُوْرِهَا وَتَجَلِّيْهَا فِى صُوَرِ الْمَخْلُوْقَاتِ، وَالْحَقُّ تَعَالَى هُوْ الْآنَ كَمَا كَانَ، أَيْ هُوَ الْآنَ بَعْدَ ظُهُوْرِهِ فِى صُوَرِ الْمَخْلُوْقَاتِ كَمَا كَانَ قَبْلَ ظُهُوْرِهِ فِى صُوَرِ الْمَخْلُوْقَاتِ،
அல்லாஹ்வின் பரிசுத்த “தாத்” எத்தனை கோடி சிருட்டிகளாக வெளியானாலும் கூட அவன் அவ்வாறு வெளியாகு முன் எவ்வாறிருந்தானோ அவ்வாறே வெளியான பின்னும் இருக்கிறான். வெளியானதால் அவனின் “தாத்” அழிந்துவிடவுமில்லை, மாறுபட்டுவிடவுமில்லை, விகாரப்பட்டுவிடவுமில்லை, அந்த “தாத்”திற்கு எந்த ஒரு குறையும் ஏற்படவுமில்லை. இதுதான் உண்மை, இதுதான் சத்தியம்.

அல்லாஹ்வின் “தாத்” பலகோடி படைப்புகளாக வெளியாகும் போது அது அழியாமலும், மாறுபடாமலும் இருப்பது எவ்வாறு? என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் வரவே செய்யும்.

இங்கு ஒரு விடயத்தை விபரமாகச் சொல்கின்றேன். மிக அவதானத்தோடு படித்து பயனடையுங்கள்.

உதாரணங்கள்:

ஒரு பொருள் இன்னொரு பொருளாக – அல்லது ஒரு வஸ்த்து இன்னொரு வஸ்த்தாக வருவதற்கு மூன்று வழிகள் உள்ளன. இம் மூன்று வழிகளையும் முதலில் எழுதுகிறேன். بِذِكْرِ الْأَمْثِلَةِ تَتَبَيَّنُ الْأَشْيَاءُ உதாரணங்கள் கூறுவதன் மூலம் விஷயங்கள் தெளிவாகும் என்ற கூற்றின் படி இவ்வுதாரணங்கள் தெளிவை ஏற்படுத்தும்.

மூன்று வழிகளில் ஒன்று, ஒரு பொருள் முற்றாக அழிந்து இன்னொரு பொருளாதல். உதாரணமாக மாங் கொட்டை – மாவிதை முற்றாக அழிந்து மா மரமாவது போன்று. மாங் கொட்டை நட்டப்பட்டவாறே இருக்க ஒருபோதும் மாமரம் தோன்றுவதில்லை. எனினும் அது அழிந்துதான் மா மரம் முளைத்து அது காய், கனி, இலை, பூ உடையதாக ஆகின்றது. பல நாட்கள் சென்றபின் தோண்டிப் பார்த்தால் மாங் கொட்டை இருக்காது. இவ்வாறு ஒன்று அழிந்து இன்னொன்று தோன்றலாம்.

மூன்று வழிகளில் இரண்டாம் வழி. ஒரு பொருள் முற்றாகவோ, சிறிதாகவோ அழியாமல் அது இருந்தவாறே இருக்க சில மாற்றத்தோடும், விகாரப்படுதலோடும் இன்னொரு பொருளாக மாறுதல். உதாரணமாக குயவன் செய்யும் பானை, சட்டி போன்று.

குயவன் களி மண்ணை எடுத்து அதை நீருடன் கலந்து நன்றாகப் பிசைந்து சட்டி, பானை செய்கின்றான். இவ்வுதாரணத்தில் மண் அறவே அழிந்து போகாமல் அது அவ்வாறே இருக்கும் நிலையில், ஆனால் அந்த மண் மாறுபட்டும், விகாரப்பட்டும் இன்னொரு பொருளாக அதாவது சட்டி, பானையாக ஆகிறது. முதலாம் உதாரணத்தில் மாங் கொட்டை முற்றாக அழிந்து மரமானதுபோல் இவ்வுதாரணத்தில் களிமண் முற்றாக அழிந்தோ அல்லது சிறிதாக அழிந்தோ சட்டி, பானையாக ஆகவில்லை.

மூன்று வழிகளில் மூன்றாவது வழி முதலாம் உதாரணத்தில் கூறப்பட்டது போல் ஒரு பொருள் முற்றாகவோ, சிறிதாகவோ அழிவதுமில்லை, இரண்டாவது உதாரணத்தில் கூறப்பட்டது போல் மாறுபடுவதுமில்லை, விகாரப்படுவதுமில்லை. எனினும் அது இருந்தவாறே இருக்கும் நிலையில் இன்னொரு பொருளாதல்.

இதற்கு உதாரணம் மாங் கொட்டையும் இல்லை, களி மண்ணும் இல்லை. மலக்குகளில் ஒருவரான பிரதான மலக் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான்.

அல்லாஹ் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வலுப்பமிகு இரண்டு இறக்கைகளுடைய, வலுப்பமிகு உருவமுடையவராக தனி ஒளியால் படைத்தான். அவரின் சுய உருவத்தை மனிதன் கண்டால் அவன் உருகிக் கரைந்துவிடுவானாம். நபீ பெருமானார் கூட அவரின் சுய உருவத்தில் இரண்டு அல்லது மூன்று தரம் மட்டுமே கண்டதாக கூறப்படுகின்றது.

அத்தகைய சுய உருவம் கொண்ட ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெருமானாரிடம் “வஹீ” என்ற இறைவனின் செய்திகளைக் கொண்டு வரும் வேளைகளில் ஒரு மனிதனின் உருவமெடுத்தே வருவார்கள். அதிகமாக “திஹ்யதுல் கல்பீ” என்ற நபீ தோழரின் உருவத்திலே வருவார்கள். பல தரம் வந்துமுள்ளார்கள்.

இங்குதான் நாம் சிந்திக்க வேண்டிய இடமாகும். ஏனெனில் ஜிப்ரீல் தனது சுய தோற்றத்தை விட்டு ஒரு மனிதனின் தோற்றத்தில் வந்ததால் அவரின் சுய தோற்றம் அறவே அழியவுமில்லை, அது மாறுபடவோ, விகாரப்படவோ இல்லாத நிலையில் அந்தச்சுய உருவம் அவ்வாறே இருக்கும் நிலையிலேயே மனித உருவமெடுத்து அவர் வந்துள்ளார்.

இந்த உதாரணம்தான் ஒரு பொருள் அழியாமலும், மாறுபடாமலும் இன்னொரு பொருளாவதற்கான உதாரணமாகும்.

இவ்வுதாரணத்தில் ஜிப்ரீல் என்ற படைப்பிற்கு தனது சுய உருவமும், உடலும் அவ்வாறே இருக்க இன்னொரு உருவமும், உடலும் எடுத்து வர முடியுமாயின் ஜிப்ரீல் உள்ளிட்ட அனைத்துப் படைப்புக்களையும் படைத்த அல்லாஹ்வுக்கு ஏன் அவ்வாறு வர முடியாது? படைப்பபுக்கு இப்படியொரு வல்லமை இருக்கும் போது படைத்தவனுக்கு தனது “தாத்” அழியாமலும், அது மாறுபடாமலும் இருக்கும் நிலையில் வேறோர் உருவமெடுத்து ஏன் வர முடியாது? இது சிந்திக்க வேண்டிய இடமாகும்.

இறுதியாக நான் செய்த பதிவில் ஒரு வஸ்த்து இன்னொரு வஸ்த்தாக ஆவதற்கு மூன்று வழிகள் உள்ளன என்றும், அவற்றின் விபரங்களையும் குறிப்பிட்டிருந்தேன்.

அவற்றில் ஒன்று ஒரு வஸ்த்து முழுமையாக அழிந்து இன்னொரு வஸ்த்தாதல். இரண்டு ஒரு வஸ்த்து அறவே அழியாமல் ஆயினுமது மாறுபட்டும், விகாரப்பட்டும் இன்னொரு வஸ்த்தாதல். மூன்று ஒரு வஸ்த்து அழியாமலும், மாறுபடாமலும் அது இருந்தவாறே இருக்க இன்னொரு வஸ்த்தாதல்.

அல்லாஹ்வின் “தாத்” சிருட்டிகளாக வெளியாவது – தஜல்லீயாவது அல்லது “ளுஹூர்” ஆவது மேற்கண்ட மூன்று வகைகளில் மூன்றாம் வகையைச் சேர்ந்ததென்றும் சுட்டிக்காட்டி அதற்கு உதாரணமாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விபரத்தையும் சொல்லியிருந்தேன். அவதானத்தோடு வாசித்தவர்கள் பயன் பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். நான் எழுதும் இறைஞான தத்துவத்தை வாசிப்பவர்களில் ஒருவராவது சரியாக விளங்கிக் கொள்வாராயின் அது எனக்குப் போதும். அல்ஹம்து லில்லாஹ்.

ஏனெனில் நபீ தோழர் முஆத் பின் ஜபல் றழியல்லாஹு அன்ஹு அவர்களை நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எமன் நாட்டுக்கு ஆளுநராக அனுப்பிய போது அவர்களிடம்,

لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا، خَيْرٌ لَكَ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا

“முஆதே! உங்களைக் கொண்டு – உங்கள் மூலம் அல்லாஹ் ஒரேயொருவரையேனும் நல்வழிப்படுத்துவது இந்த உலகமும், அதிலுள்ளவையும் உங்களுக்கு சொந்தமாயிருப்பதை விடச் சிறந்ததாகும்” என்று கூறி அனுப்பினார்கள். நானும் இதையே எதிர்பார்க்கிறேன். அல்ஹம்து லில்லாஹ்!

அல்லாஹ் தனது “தாத்” கொண்டு சிருட்டியாக வெளியாவதால் அவனின் பரிசுத்த “தாத்”திற்கு அணு அளவிலும் எக்குறையும் ஏற்படாதென்று கூறிய நான் அதற்கு ஜிப்ரீல் உடைய விடயத்தை உதாரணமாகக் கூறியிருந்தேன். இன்னும் சில உதாரணங்கள் கூறுகின்றேன்.

நாம் T.V. மூலம் பல காட்சிகளைப் பார்க்கிறோம். ஒரு காட்சியா? இரண்டு காட்சியா? பல்லாயிரம் காட்சிகள் பார்க்கிறோம். சிறிய காட்சிகளையும் காண்கிறோம். கடல்கள், நதிகள், மலைகள், கட்டிடங்கள் போன்ற பல்வேறு பெரிய காட்சிகளையும் காண்கிறோம். எதார்த்தத்தில் இவற்றில் ஒன்றுமே T.V. பெட்டிக்குள் வருவதில்லை. சிறுவர், சிறுமிகளும், புத்தி குறைந்தவர்களும், படிப்பறிவில்லாத வயோதிபப் பெண்களும், ஆண்களும் மேற்கண்ட வஸ்த்துக்கள் T.V. பெட்டிக்குள் வருவதாகவே நினைப்பார்கள். அவ்வாறு நினைத்து 109 வயதுடைய ஒரு பாட்டியும் என்னிடம் கேட்டுள்ளார். உண்மை அவ்வாறில்லை என்பதை அறிவும், புத்தியும் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

நாம் T.V. மூலம் காணும் அனைத்து காட்சிகளும் ஒளி உருவங்களே ஆகும். ஏனெனில் ஒளியின் வரைவிலக்கணம் இதை நிறுவுகிறது.

اَلنُّوْرُ يَتَشَكَّلُ بِأَشْكَالٍ مُخْتَلِفَةٍ وَيَظْهَرُ فِى صُوَرٍ مُتَنَوِّعَةٍ

ஒளியானது பல உருவங்களிலும், பல்வேறு தோற்றங்களிலும் வெளியாகும் தன்மையுள்ளதாகும். இவ்வடிப்படையிலேயே ஒளியை பல உருவங்களில் நாம் காண்கிறோம். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுருக்கம் என்னவெனில் ஒளி எந்த உருவத்தில் வெளியானாலும் அது அழிவதுமில்லை, மாறுபடுவதுமில்லை, விகாரப்படுவதுமில்லை. அது எத்தன்மை உள்ளதோ அத்தன்மையில் எந்தவொரு மாற்றமும், குறையும் இல்லாமல் அது அவ்வாறு இருந்து கொண்டே நாம் காணும் பல காட்சிகளாகவும் தோற்றுகிறது.

அல்லாஹ்வின் திரு நாமங்களில் “நூர்” ஒளி என்பதும் ஒன்றாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான். اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ “அல்லாஹ் வானங்களினதும், பூமியினதும் ஒளியாக உள்ளான்” (24-35).

ஒளியின் தன்மை மேற்டகண்டவாறு இருப்பதாலும், அல்லாஹ் ஒளியாக இருப்பதாலும் அவன் எத்தனை உருவங்களில் தோன்றினாலும் கூட அவனுடைய “தாத்” எப்போதும் எந்த ஒரு குறையுமின்றி பரிசுத்தமானதாகவே இருக்கும்.

அல்லாஹ்வின் பரிசுத்த “தாத்”திற்கு எந்த ஒரு குறையும் ஏற்படாமலேயே அது அண்டசராசரங்களாகத் தோற்றுகின்றதென்பதற்கு இன்னுமொரு உதாரணம் தருகிறேன்.

ஒரு மனிதன் கனவில் காணும் காட்சிகள் யாவும் அவனுடைய மனதின் காட்சிகளே ஆகும். அவனின் மனம்தான் கனவுலகில் கடலாக, நதியாக, மலையாக, மற்றுமுள்ள ஏனைய காட்சிகளாகவெல்லாம் தெரிகிறது. மனமானது கனவுலகில் பல காட்சிகளாக தோற்றுவதால் மனம் அழிந்து போவதுமில்லை, அது மாறுபடுவதுமில்லை. ஆயினும் அது எவ்வாறிருந்ததோ அவ்வாறிருக்கும் நிலையிலேயே பல காட்சிகளாக காட்சியளிக்கிறது.

ஒரு பொருள் இன்னொரு பொருளாவதற்கு மூன்று வழிகள் உண்டு என்று குறிப்பிட்டிருந்தேன். அவற்றில் அல்லாஹ்வின் “தாத்” சிருட்டிகளாக வெளியாவது நான் கூறிக்காட்டிய மூன்றாவது வழி போன்றதேயாகும். முதலாம், இரண்டாம் வழிகள் போலென்று கொள்வது முற்றிலும் பிழையானதாகும்.

ஏனெனில் முதலாம் வழி ஒரு பொருள் முற்றாக அழிந்து இன்னொரு பொருளாவதாகும். அல்லாஹ்வின் “தாத்” சிருட்டியாக வெளியாவதற்கு இவ்வழி பொருத்தமற்றதாகும். ஏனெனில் அல்லாஹ்வின் “தாத்” எக்காரணம் கொண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முற்றாக அழிவதுமில்லை, சிறிதாக அழிவதுமில்லை.

இவ்வாறுதான் இரண்டாவது வழியுமாகும். அதாவது ஒரு பொருள் அழியாது போனாலும் அது மாறுபட்டும், விகாரப்பட்டும் இன்னொரு பொருளாதல் அல்லாஹ்வின் “தாத்” வெளியாவதற்கு இவ்வழியும் பொருத்தமற்றதாகும். ஏனெனில் அல்லாஹ்வின் “தாத்” எக்காரணம் கொண்டும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாறுபடவுமாட்டாது, விகாரப்படவுமாட்டாது.

எனவே, ஒரு பொருள் இன்னொரு பொருளாவதற்கு நான் கூறிய மூன்று வழிகளிலும் அல்லாஹ்வின் “தாத்” சிருட்டியாக வெளியாவதற்கு மூன்றாவது வழியே சரியான உதாரணமாகும்.

இவ்வழிக்கு மூன்று உதாரணங்கள் கூறியுள்ளேன். ஒன்று ஜிப்ரீலின் உதாரணம். இரண்டு ஒளியின் உதாரணம். மூன்று கனவின் உதாரணம்.

எனது பதிவுகளை வாசிப்பவர்கள் இம் மூன்று உதாரணங்களையும் சிந்தனைக்கு எடுத்து சிந்திக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன். நான் கூறியுள்ள விளக்கத்தில் சந்தேகம் உள்ளவர்கள் என்னை நேரில் சந்தித்து அல்லது என்னைவிட இறைஞானக் கொள்கை விளக்கம் தெரிந்தவர்களிடம் கேட்டு சந்தேகங்களை நீக்கிக் கொள்ளுமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன். எவரிடம் கேட்டாலும் மகான்களிடம் மட்டும் கேட்டுவிட வேண்டாம் என்று உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வுக்கு ஓர் இடத்தை தரிபடுத்தும் வழிகேடர்களாவர். எமது அடுத்த பதிவு “சிருட்டி அல்லாஹ்வின் “தாத்”தின் வெளிப்பாடல்ல” என்று கூறுபவர்களுக்கான ஏவுகணையாகும்.

அல்லாஹ் தனது “தாத்”தைக் கொண்டு சிருட்டிகளாக வெளியானானா? அல்லது “ஸிபாத்” என்ற தன்மைகள் கொண்டு வெளியானானா? என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகளும், சர்ச்சைகளும் நிறைய நடந்துள்ளன.

“வஹ்ததுல் வுஜூத்” ஞானம்தான் அல்லாஹ் “தாத்”தைக் கொண்டுதான் வெளியானான் என்பதை ஆணித்தரமாக ஆதாரங்களோடு விளக்கி வைக்கும் ஞானமாகும். அக்காலத்தில் இந்த ஞானத்தைப் பேசிய பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். இன்னும் பலர் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். இன்னும் சிலர் மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு துன்புறுத்தப்பட்ட ஸூபீ மகான்களின் வரலாறுகளைப் பலர் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார்கள். இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்யவாகீத்” என்ற நூல் 13ம் பக்கத்தை அதற்கென்று ஒதுக்கியுள்ளார்கள்.

இவ்வாறு ஸூபீகள் கொலை செய்யப்படுவதையும், மிருகங்களுக்கு இரையாக்கப்படுவதையும் கண்ட, அறிந்த ஏனைய ஸூபீகள் சற்று தயங்கினார்கள். தளர்ந்து போனார்கள். பகிரங்கமாகப் பேசுவதால் தமக்கும் அவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட்டால் குறித்த ஞானத்தை இரகசியமாகவேனும் சொல்லிக் கொடுக்க ஸூபீகள் இல்லாமற் போய்விடுவார்கள் என்பதற்காக – கொலையைப் பயந்ததற்காக அல்ல – கட்டுப்பாட்டுடன் பேசலானார்கள்.

وقد كان حَسَنُ البصـري وكذلك الجنيد والشّبلي وغيرُهم لا يُقرِّرُون علم التوحيد إلّا فى قُعور بُيوتهم بعد غَلْقِ أبوابهم وجَعْلِ مفاتيحها تحت وَرِكِهم، ويقولون أتُحبّون أن تُرمى الصحابة والتابعون الذين أخَذْنَا عنهم هذا العلمَ بالزَّنْدَقَةِ بُهتانا وظُلما،
(اليواقيت ، ص17 ، الجزء الأوّل)
இறை ஞானிகளான இமாம் ஹஸனுல் பஸரீ, ஸெய்யிதுத் தாயிபதிஸ் ஸூபிய்யா ஜுனைத் பக்தாதீ, இமாம் அபூ பக்ர் ஷிப்லீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோரும், இன்னும் பல ஸூபீகளும், “வஹ்ததுல் வுஜூத்” தத்துவங்களை பேச விரும்பினால் தமது வீடுகளின் கதவுகளைத் தாழிட்டு அவற்றின் திறப்புகளை தமது துடையின் கீழ் வைத்துக் கொண்டு பேசுவார்கள். சபையில் இருப்போரிடம், “நாங்கள் இந்த ஞானத்தை நபீ தோழர்கள், தாபியீன்களிடமிருந்து பெற்றோம். அத்தகைய ஞானத்தை எமக்குச் சொல்லித் தந்த மகான்களை “ஸிந்தீக்” என்று எதிரிகள் சொல்வதை நீங்கள் விரும்புகிறீர்களா? என்று அவர்களிடம் கேட்பார்கள்.

#ஹஸனுல்_பஸரீ பற்றி ஓர் அறிமுகம்.

இவ்வாறு வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு இந்த ஞானம் பேசிய ஹஸனுல் பஸரீ அவர்கள் “தாபியீன்”களில் ஒருவராவார். இவர்கள் இரண்டாவது கலீபா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில் திரு மதீனா நகரில் பிறந்தார்கள். கலீபா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் ஹஸனுல் பஸரீ அவர்களுக்கு “தஹ்னீக்” செய்தார்கள்.
التحنيكُ: هو دَلْكُ حَلْقِ الطِّفْلِ قبلَ أن يُرضَعَ بِدُهْنِ اللَّوْزِ وماءِ الرُّمَّانِ وغير ذلك،
“தஹ்னீக்” என்றால் ஒரு குழந்தைக்கு பாலூட்டு முன் பாதாம் பருப்பின் எண்ணெய், மாதுளம் பழச்சாறு இரண்டையும் கலந்து அந்தக் குழந்தையின் தொண்டையின் அடியில் உட்பகுதியில் தேய்த்து விடுதல்.

ஹஸனுல் பஸரீ அவர்களின் தாய் “உம்முல் முஃமினீன்” உம்மு ஸலமா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பணி செய்து கொண்டிருந்தார். சில சமயம் தாய் இல்லாத நேரம் உம்மு ஸலமா நாயகி அவர்கள் ஹஸனுல் பஸரீ அவர்களுக்கு பாலூட்டியதாகவும் வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே அவர்களுக்கு இறைஞானம் கிடைத்ததாகவும் சொல்லப்படுகின்றது. மூன்றாவது கலீபா உத்மான் றழியல்லாஹு அன்ஹு அவர்களையும் ஹஸனுல் பஸரீ கண்டுள்ளார்கள். கலீபா உத்மான் கொலை செய்யப்பட்ட பிறகுதான் ஹஸனுல் பஸரீ இறாக் நாட்டுக்கு வந்து “பஸறா”வில் வாழ்ந்தார்கள். அவர்களின் காலத்தில் “இமாம்” என்று போற்றப்பட்டார்கள். ஹிஜ்ரீ 110ம் ஆண்டு “வபாத்” ஆனார்கள்.

பிற்காலத்தில் தோன்றிய ஸூபீகளிற் பலரும் இவர்கள் போல் கொள்கையை பாதுகாக்கும் நோக்கத்தோடு இந்த ஞானத்தை மறைத்துப் பேசி வந்தார்கள்.

#ஆதாரங்கள்:

அல்லாஹ் தனது “தாத்”தைக் கொண்டே சிருட்டிகளாக வெளியாகியுள்ளான் என்பதற்கான சில ஆதாரங்கள் மட்டும்.

ذكر شيخ الإسلام ابن اللَّبَّانِ رحمه الله فى قوله تعالى ‘ ونحنُ أَقْرَبُ إليه منكم ولكن لا تُبْصِرُوْنَ ‘ إنّ فى هذه الآية دليلا على أقربيّته تعالى من عبده قربا حقيقيا كما يليق بذاته لِتَعَالِيْهِ عن المكان، إذ لو كان المرادُ بقُربه تعالى من عبده قُربَه بالعلم أو بالقدرة أو بالتّدبيرمَثلا لَقَالَ ولكن لا تعلمون ونحوه، فلمّا قال ولكن لا تُبصرون دلَّ على أنّ المرادَ به القُربُ الحقيقيُّ المُدرَكُ بالبصر لو كَشَف اللهُ عن بصرنا، فإنّ من المعلوم أنّ البصر لا تعلُّقَ لإدراكه بالصفات المعنويّة، وإنّما يتعلّق بالحقائق المرئيّة،
(اليواقيت، الجزْء الأوّل، ص 61 )

ஷெய்குல் இஸ்லாம் இப்னுல் லப்பான் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். அல்லாஹ் திருக்குர்ஆனில் وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُوْنَ “நாங்கள் அவனுக்கு உங்களை விட மிக நெருங்கியுள்ளோம். ஆயினும் நீங்கள் பார்க்காமல் இருக்கின்றீர்கள்” என்று கூறியுள்ளான்.

இத்திரு வசனம் மரண வருத்தத்தில் இருப்பவன் தொடர்பாக அருளப்பட்ட வசனமாகும். இந்த வசனத்தில் إِلَيْهِ – “இலைஹி” என்று ஒரு சொல் வந்துள்ளது. இதன் பொருள் அவனுக்கு அல்லது அவனளவில் என்று வரும். யாரளவில், யாருக்கு என்ற விபரம் திரு வசனத்தில் கூறப்படவில்லை. “இலைஹி” என்ற சொல்லில் உள்ள “ஹி” என்ற பிரதிப் பெயர்ச் சொல் மரண வருத்தத்தில் இருப்பவனைக் குறிக்கிறதென்று திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். إِلَى مَنْ حَضَرَهُ الْمَوْتُ மரணம் நெருங்கியவனுக்கு என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒரு மனிதன் மரணப்படுக்கையில் இருக்கும் போது عِيَادَةُ المَرِيْضِ سُنَّةٌ நோயாளியைப் பார்க்கச் செல்வது “ஸுன்னத்” என்ற வகையில் அவனின் உறவினர்களும், மற்றவர்களும் அவனைப் பார்க்கச் செல்வார்கள். அவ்வாறு செல்பவர்கள் அவனுக்கு நெருங்கியிருப்பார்களேயன்றி அவனை விட்டும் தூரத்தில் இருக்கமாட்டார்கள். இது உலக மக்களின் நடைமுறையல்ல. விஷேடமாக அவனின் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றவர்களை விடவும் அவனுக்கு நெருங்கியே இருப்பார்கள்.

இந்த நிலை குறித்தே மேற்கண்ட திருவசனம் அருளப்பட்டது. “மின்கும்” திரு வசனத்தில் வந்துள்ள இச் சொல் நோயாளியைப் பார்க்கச் சென்றவர்களைக் குறிக்கிறது. இதன் பொருள், “நோயாளியைப் பார்க்கச் சென்றவர்களே! நீங்கள் அவனுக்கு நெருங்கியிருப்பதை விட நான் அவனுக்கு மிக நெருங்கியிருக்கிறேன். நீங்கள் பார்க்காமல் – காணாமல் இருக்கிறீர்கள்” என்பதாகும்.

இவ்வசனத்தில் لا تُبْصِرُوْنَ என்று ஒரு வசனம் வந்துள்ளது. இதன் பொருள் காணாமல் இருக்கிறீர்கள் என்பது மட்டும்தான். அறபு மொழியிலக்கணத்தில் இதற்கு ஒரு “மப்ஊல்” வேண்டும். எதைக் காணாமல் இருக்கின்றீர்கள் என்று அறிவிக்கும் படியான ஒரு சொல் வேண்டும். அது வசனத்தில் கூறப்படாமலிருப்பதால் வசனத்தின் முன் பின் தொடரைக் கவனித்து இடத்திற்குப் பொருத்தமான ஒரு சொல்லை நாம் ஏற்பாடு செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் لا تُبْصِرُونَنِيْ என்னை நீங்கள் காணாமல் இருக்கின்றீர்கள் என்று பொருள் வரும்.

நான் உங்களை விட நோயாளிக்கு மிக நெருங்கியிருக்கின்றேன். ஆனால் நீங்கள் என்னைக் காணாமல் இருக்கின்றீர்கள் என்று கருத்து அமையும்.

அல்லாஹ் “தாத்”து கொண்டுதான் சிருட்டியாக வெளியாகியுள்ளான் என்பதற்கான ஆதாரம் இந்த இடத்தில்தான் உள்ளது.

இதன் விபரமாவது تُبْصِرُونَ என்ற சொல் أَبْصَرَ என்ற சொல்லடியில் உள்ளதாகும். இதற்கு கண்ணால் காணுதல் என்றுதான் பொருள் வரும். நான் அவனுக்கு நெருங்கியிருப்பதை கண்ணால் காணாமல் உள்ளீர்கள் என்ற இவ்வசனம் நான் “தாத்”தைக் கொண்டு சடப் பொருளாக வெளியாகியுள்ளேன் என்று அல்லாஹ் சொல்கின்றான் என்ற கருத்தை தருகின்றது. அல்லாஹ் “தாத்”தைக் கொண்டு வெளியாகாமல் தனது அறிவு, சக்தி போன்ற தன்மைகளைக் கொண்டு வெளியாகியிருந்தால் لا تبصـرون கண்ணால் காணாமல் இருக்கின்றீர்கள் என்று சொல்லாமல் وَلَكِنْ لَا تَعْلَمُوْنَ நீங்கள் அறியாமல் உள்ளீர்கள் என்று சொல்லியிருப்பான். ஏனெனில் அறிவு, நாட்டம், சக்தி என்பன “ஸிபாத்” தன்மைகளாயிருப்பதால் தன்மைகளை எவரும் கண்களால் காண முடியாது. மாறாக அவற்றை அறியத்தான் முடியும்.

எனவே, அல்லாஹ்வின் மேற்கண்ட வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் அவன் தனது “தாத்”தைக் கொண்டு சடமாக வெளியாகியுள்ளான் என்பது நிறுவப்படுகிறது.

இங்கு இன்னுமொரு நுட்பம் உண்டு. அதையும் இங்கு சொல்லி விடுகின்றேன். நோய் வினவச் சென்றவர்கள் நோயாளிக்கு நெருங்கியிருப்பதை விட அல்லாஹ் அவனுக்கு நெருங்கியிருக்கின்றான் என்றால் நோயாளியின் “ஸூறத்” உருவத்தில் அல்லாஹ்தான் உள்ளான் என்பதே கருத்தாகும். ஏனெனில் நோயாளியை நெருங்கியிருப்பவன் என்றால் அங்கு நோயாளி தவிர வேறெவரும் நெருங்கவில்லை. ஆகையால் அல்லாஹ் “தாத்”தைக் கொண்டுதான் வெளியாகியுள்ளான் என்பதற்கு ஷெய்குல் இஸ்லாம் இப்னுல்லப்பான் கூறிய ஆதாரம் மிகப் பொருத்தமான ஆதாரமாகும்.

لِكُلِّ فَنٍّ رِجَالٌ ஒவ்வொரு கலைக்கென்றும் பலர் அல்லது சிலர் இருப்பார்கள். இந்த வசனம் அறிஞர்களால் சொல்லப்பட்ட ஒரு வசனமாகும். யாரோ ஒருவர்தான் சொல்லியிருப்பார். இது ஏற்றுக் கொள்ளத்தக்க ஒன்றாயிருப்பதால் இதைப் பலர் சரி கண்டிருப்பார்கள். நாம் இது பற்றிச் சிந்தித்தால் இது சரியென்றே எமக்குப் புரிகிறது.

இதை சற்று விபரமாக சொல்ல வேண்டிய தேவை, அவசியம் இக்காலத்தைப் பொறுத்தவரை இருப்பதால் சற்று விளக்கமாக எழுதுகிறேன். இது பொதுவான ஓர் அறிவேயன்றி முஸ்லிம்களுக்கோ, வேறு மதத்தினருக்கோ சொந்தமானதல்ல. இது ஒரு பொது அறிவேயாகும்.

அதாவது “பிக்ஹ்” என்ற சட்டக் கலையோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையை – ஒரு சிக்கலை அக்கலையோடு சம்பந்தப்பட்டவர்களைக் கொண்டே தீர்த்து வைக்க வேண்டும்.

உதாரணமாக இஸ்லாமிய சட்டக்கலையோடு சம்பந்தப்பட்டவர்களென்று பிரசித்தி பெற்ற பலர் உள்ளார்கள். நான்கு மத்ஹபுகளின் இமாம்களான இமாம் ஷாபிஈ, இமாம் அபூ ஹனீபா, இமாம் மாலிக், இமாம் ஹன்பலீ. இமாம் நவவீ, இமாம் இப்னு ஹஜர், இமாம் ஸுயூதீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் போன்று.

சட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயத்திற்கான தீர்வை இவர்கள் மூலமே அறிந்து கொள்ள வேண்டும். இதுவே நியாயமும், அறிவுடைமையுமாகும்.

சட்டத்தோடு தொடர்புடைய பிரச்சினைக்கான தீர்வை ஹதீதுக் கலை மேதைகளான இமாம் புகாரீ, இமாம் முஸ்லிம், இமாம் துர்முதீ, இமாம் அபூ தாவூத், இமாம் நஸயீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் மூலம் அறிந்து கொள்வது பொருத்தமானதல்ல.

இதனால் ஹதீதுக்கலை மேதைகளுக்கு சட்டக்கலை தெரியாதென்பது கருத்தல்ல. அவர்களைப் புறம் தள்ளுகிறோம் என்பதும் கருத்தல்ல.

பொதுவாக உலகத்தோடு சம்பந்தப்பட்ட சட்டப்பிரச்சினைகளுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்களிடமே தீர்வு தேட வேண்டும். இதற்கு “டொக்டர்”மாரிடம் தீர்வை எதிர்பார்ப்பது அறிவுடைமையல்ல. இவ்வாறுதான் ஏனைய ஒவ்வொரு கலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுமாகும்.

இந்த அடிப்படையில் علم التصوّف ஸூபிஸக் கலையில் ஏற்படுகின்ற பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள், சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வதாயின் இக்கலையோடு சம்பந்தப்பட்டவர்களைக் கொண்டுதான் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தீர்த்துக் கொள்வதற்கு “புகஹாஉ” சட்டக்கலை மேதைகளையோ, مُحَدِّثُوْنَ ஹதீதுக்கலை மேதைகளையோ, نَحْوِيُّوْنَ மொழியிலக்கணக் கலை மேதைகளையோ நாடக் கூடாது. இவ்விடயத்தில் அவர்களின் கருத்தை தீர்ப்பாக எடுத்தல் அறிவுடைமையல்ல.

علم التصوف – ஸூபிஸக் கலை தனியானது. علم العقيدة – கொள்கைக் கலை தனியானது. இரண்டும் ஒன்றல்ல. ஸூபிஸ ஞானிகளின் கருத்துகளுக்கும், “அகீதா” உடையோரின் கருத்துகளுக்கும் பல விடயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எந்த ஒரு பிரச்சினையாயினும் அந்தப்பிரச்சினை எந்தக் கலையோடு தொடர்புள்ளதோ அந்தக் கலை மேதைகளைக் கொண்டே அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தேட வேண்டும்.

ஸூபிஸக் கலையில் – இறைஞானக் கலையில் – பிரசித்தி பெற்றவர்கள் (நான் அறிந்த வகையில்) பொதுவாக தரீகாக்களின் தாபகர்களான குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ, ஸுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் ரிபாயீ, அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அஷ் ஷாதுலீ, அஷ் ஷெய்கு ஷுஐப் அபூ மத்யன் அல் மக்ரிபீ, அஷ் ஷெய்கு அஸ் ஸெய்யித் ஷெய்கு அஹ்மத் அல் பதவீ, அல்குத்புல் வஹீத் இப்றாஹீம் அத்தஸூகீ கத்தஸல்லாஹு அஸ்றாறஹும் ஆகியோர்களும். மற்றும் “ஸூபிஸம்” தொடர்பான ஆழமான கருத்துக்களை எழுதிய அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ, அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல் ஜீலீ, அஷ் ஷெய்கு அப்துல் கனீ அந்நாபலஸீ, றழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களுமாவர்.

நான் அறிந்தவகையில் ஸூபிஸ ஞானிகளே அல்லாஹ்வின் விடயத்தில் அதியுச்ச தத்துவங்களைச் சொல்பவர்களாக உள்ளனர். எல்லாம் அவனே, எல்லாம் அவனின் வெளிப்பாடுகளே, அல்லாஹ் தவிர வேறொன்றுமே இல்லை, அல்லாஹ்வுக்கு வேறான எதுவுமே இல்லை. اَلْخَلْقُ عَيْنُ الْحَقِّ சிருட்டி சிருட்டிகர்த்தா தானானதே என்பன போன்ற தத்துவங்களை ஸூபீ மகான்களே கூறியுள்ளார்கள். இவர்கள் தவிர வேறெவரும் மேற்கண்ட தத்துவங்களை மிகவும் தெளிவாகவும், விளக்கமாகவும் கூறியதாக நான் அறியவில்லை.

இமாம் முஹம்மத் அல் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் முஹ்யித்தின் இப்னு அறபீ போல் இவ் உண்மையை மிகவும் தெளிவாகவும், பட்டவர்த்தனமாகவும் தங்களின் இஹ்யாஉ உலூமித்தீன், மிஷ்காதுல் அன்வார் முதலான நூல்களில் கூறியுள்ளார்கள். குறிப்பாக هُوَ الْكُلُّ எல்லாம் அவனே என்று அவர்கள் எழுதியிருப்பதேயாகும்.

மத்ஹபுடைய நான்கு இமாம்களில் எவரும், அதேபோல் ஹதீதுக்கலை மேதைகளில் எவரும், அதேபோல் சட்டக்கலை மேதைகளில் எவரும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை பகிரங்கமாகப் பேசியதற்கோ, அதைச் சரிண்டு எழுதியதற்கோ வெளிப்படையான ஆதாரங்களை நான் காணவில்லை. அதேபோல் அவர்களில் எவரும் அது “குப்ர்” என்று சொன்னதற்கும், எழுதியதற்கும் ஆதாரங்களைக் காணவுமில்லை.

ஸூபீ மகான்கள் சரியென்று சொன்ன ஒரு ஞானத்தை தகுதிவாய்ந்த, தரமான ஓர் அறிஞர் பிழையென்று சொன்னால் மட்டும் அது பற்றி ஆய்வு செய்து பார்க்க இடமுண்டு. ஆயினும் மேற்கண்ட ஹதீதுக்கலை மேதைகளோ, சடடக்கலை மேதைகளோ ஸூபீ மகான்கள் சொன்ன குறித்த ஞானத்தை எழுதாமலிருந்தது அவர்கள் அந்த ஞானத்தை பிழை கண்டார்கள் என்பதற்கு ஆதாரமாகாது.

இமாம்களை விடுவோம். பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அருமைத் தோழர்கள் கூட “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை பகிரங்கமாகப் பேசியதற்கு ஆதாரங்களைக் காண்பது மிக அரிதாக உள்ளது. இதற்குக் காரணம் பெருமானாரைப் பாதுகாப்பதிலும், யுத்தங்கள் செய்து இஸ்லாம் மார்க்கத்தைப் பலப்படுத்துவதிலுமே அவர்கள் முழுக்கவனமும் செலுத்தினார்கள். முழு நேரத்தையும் கழித்தார்கள். தவிர அவர்கள் குறித்த ஞானத்தைப் பேசாமலிருந்தது அவர்கள் அதை அறியாதவர்களாயிருந்தார்கள் என்பதற்கோ, அதை அவர்கள் பிழை கண்டார்கள் என்பதற்கோ ஆதாரமாகாது.

وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ நாங்கள் மனிதனுக்கு அவனின் பிடரி நரம்பு நெருங்கியிருப்பதைவிட நெருங்கியிருக்கின்றோம். திருக்குர்ஆன்: 50:16

இத் திருவசனத்திலும், இதற்கு முன்னர் நான் எழுதிக்காட்டிய திருவசனத்திலும் أَقْرَبُ “அக்றபு” என்ற சொல்லை அல்லாஹ் கையாண்டிருப்பது கவனத்திற் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

“அக்றபு” என்ற சொல் قَرُبَ என்ற சொல்லடியில் உள்ளதாகும். இதற்கு அதிகம் நெருங்கினவன் என்று பொருள் வரும். இதற்கு அறபு மொழியிலக்கணத்தில்أفعل التفضيل என்று சொல்லப்படும்.

“ஹப்லுல் வரீத்” என்றால் பிடரி நரம்பு என்று பொருள் சொல்லப்படுகின்றது. மார்க்க அறிஞர்களில் அநேகர் இவ்வாறுதான் பொருள் கூறுகிறார்கள். இவ்வாறு பொருள் கூறினாலும் அது முதுகிலுள்ள நடு முள்ளைக் குறிக்கும் என்பது எனது கருத்தாகும்.

ஏனெனில் ஒரு மனிதனின் உடலில் முதுகின் நடுவிலுள்ள முள் இரண்டு விலா முட்களோடு இணைந்திருப்பதுடன் நடு முள் கீழ்ப்பக்கமாகச் சென்று முடியும் இடம் வாலாமனை முள் என்று சொல்லப்படும். இந்த முள்ளின் முடிவில் தான் عَجَبُ الذَّنَبِ என்று அறபு மொழியில் சொல்லப்படுகின்ற, தமிழில் கருப்புப் பெட்டி என்று சொல்லப்படுகின்ற ஒன்று உண்டு. இது நெருப்பிலும் எரியாத, எதனாலும் அழிக்க முடியாத அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் அற்புதமான படைப்பாகும். முதுகிலுள்ள நடு முள் மேற்பக்கம் சென்று மூளையுடன் தொடர்புள்ள நரம்புகளுடன் இணைகிறது. இது சிறிய அளவிலான செங்கு மணி வடிவத்திலுள்ள ஒன்றாகும். அல்லாஹ் மனிதனை மறுமையில் மீண்டும் படைப்பதற்கு இதனையே கருவாக் கொள்கிறான்.

எனவே, மனிதனின் முதுகிலுள்ள நடு முள் அவனுக்கு நெருங்கியிருப்பதை விட அதிகமாக அல்லாஹ் அவனுக்கு நெருங்கியிருக்கிறான் என்றால் மனிதனாய் வெளியானவன் அவன்தான் என்ற தத்துவத்தை சூசகமாகச் சொன்னது போலுள்ளது. ஏனெனில் மனிதனிலுள்ள பிடரி நரம்பு அல்லது முதுகு முள்ளு உள்ளிட்ட அனைத்து உறுப்புக்களும் சேர்ந்துதான் மனிதன் என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறிருக்கும் நிலையில் “ஹப்லுல் வரீத்” மனிதனுக்கு நெருங்கியிருப்பதை விட நான் அவனுக்கு நெருங்கியிருக்கின்றேன் என்று சொல்வது ஒரு தத்துவமான, ஆட்சேபனைக்கு இடமில்லாத வசனமென்று கொள்ள முடியாது, ஆயினும் ஒரு மனிதன் இவ்வாறு சொல்லியிருந்தால் வசனம் பிழையென்று கூறிவிடலாம். இது அல்லாஹ்வின் பேச்சு. அவனின் பேச்சை பிழையென்று நினைப்பது கூட “குப்ர்” என்ற நிராகரிப்பை ஏற்படுத்திவிடும். مَعَاذَ الله மஆதல்லாஹ்.

அல்லாஹ் சொன்ன வசனம் சரியானதே. إنّ الْإِنْسَانَ كَانَ ظَلُومًا جَهُولًاஆயினும் மனிதன் அநீதி செய்பவனாகவும், அறிவில்லாதவனாகவும் ஆகிவிட்டான்.

قُرْبُ நெருங்குதல் என்று சொல்வதற்கு குறைந்தது இரண்டு பொருளாவது வேண்டும். அவ்விரண்டுமே வேறு வேறான இரண்டு பொருளாகவே இருத்தல் வேண்டும். உதாரணமாக முஸம்மில் வீட்டை நெருங்கிவிட்டான், முஸம்மிலுக்கு முனாஸ் நெருங்கியிருப்பதை விட நான் முஸம்மிலுக்கு நெருங்கியிருக்கிறேன் என்பது போன்று. நெருங்குதல் என்று சொல்வதற்கான விதி இங்கு இல்லாதிருப்பதால் – அதாவது “ஹப்லுல் வரீத்” என்பதும் சேர்ந்தே மனிதனாயிருப்பதால் அது மனிதனுக்கு நெருங்கியிருப்பதைவிட என்று சொல்வது பொருத்தமற்றதாகும்.

நான் இவ்வாறு எழுதுவது எனக்கு இன்னொரு “பத்வா” தருவதற்கு நாய் இறைச்சி முள்ளைக் காத்திருப்பது போல் ஒரு தவறு ஏற்படுவதை தவத்தின் மூலம் எதிர்பார்த்திருப்பவர்களுக்கு பிரியாணி இறைச்சி முள் கிடைத்தாற் போலாகிவிடும்.

நான் அல்லாஹ்வின் வசனத்தை பிழை சொல்லவில்லை. அல்லாஹ் என்ன கருத்தை மக்களுக்குச் சொல்கின்றான் என்பதையே இந்தப்பாணியில் விளங்கப்படுத்துகிறேன். அல்லாஹ்வுக்கும், அடியானுக்குமுள்ள நெருக்கம் இடத்தைப் பொறுத்த நெருக்கம் அல்ல. அது கருத்தைப் பொறுத்த நெருக்கமேயாகும்.

காதலன் ஒருவன் தனது காதலியிடம் நாமிருவரும் ஒருவர்தான். நீ வேறு நான் வேறென்பது நமக்குள் கிடையாதென்று அவளிடம் கூறி தனது காதலின் உச்ச கட்டத்தை வெளியாக்குவதற்கு ஏதேதோ சொல்லிச் சொல்லி இலட்சியத்திற்கு – குறிக்கோளுக்கு வருவதற்கு உலகமெல்லாம் சுற்றி வருவது போல் அல்லாஹ் மனிதனிடம் நீ நான்தான், நான் நீதான் என்ற அதியுச்ச கட்ட தத்துவத்தை இந்தப் பாணியில் கூறியுள்ளான் என்றே நான் நம்புகிறேன். அவன் தவறாகப் பேசவில்லை. இலக்கண இலக்கிய வித்துவான்களுக்கெல்லாம் பெரிய வித்துவான் அவனேதான். இந்த விபரத்தை எழுதிக் கொண்டிருந்த சமயம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தாபகர் மர்ஹூம் MHM அஷ்றப் அவர்கள் எழுதிய நூலின் பெயர் என் கண் முன்னால் வந்து கை காட்டிச் சென்றது. (நான் எனும் நீ)

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسّع مدخله، وأسكنه الفردوس الأعلى مع سيّد الوجود والشّهود سيّدنا محمد صلّى الله عليه وسلّم، وذات ليلة كلّمني فى الهاتف وهو حيّ، وأخبرني بأنّه موحّد وموقن بعقيدة وحدة الوجود ، ووعدني بمساعدته ومعاونته لإفشاء هذه العقيدة التي أقولها، ولكنّ الله دعاه إليه بحكمته وعدله قبل وفائه بوعده، وما ربّك بظلّام للعبيد،

قال الإمام عبد الوهّاب الشّعراني (وكذلك القول فى قوله تعالى ‘ونحن أقرب إليه من حبل الوريد ‘، هو يدلّ أيضا على ما قلناه، لأنّ أَفْضَلَ من يدلّ على الإشتراك فى اسم القرب، وإن اختَلف الكَيْفُ، ولا اشتِرَاكَ بين قرب الصّفات وقُربِ حبل الوريد، لأنّ قربَ الصّفات معنويٌّ، وقربَ حبل الوريد حِسِّيٌّ، ففِي نسبة أقربيّته تعالى إلى الإنسان من حبل الوريد الّذي هو حقيقيٌّ دليلٌ على أنّ قربَه تعالى حقيقيٌّ، أي بالذّات اللّازم لها الصِّفاتُ) (اليواقيت والجواهر للشّعراني، الجزء الأول، ص 61 )

இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ “நாங்கள் மனிதனுக்கு அவனின் பிடரி நரம்பு – அல்லது முதுகு முள் நெருங்கியிருப்பதைவிட அதிகமாக நெருங்கியுள்ளோம்” என்ற திருமறை வசனத்தை அல்லாஹ் “தாத்”தைக் கொண்டே வெளியாகியுள்ளான் என்பதை நிறுவுவதற்கு ஆதாரமாகக் கூறி விளக்கம் கொடுக்கிறார்கள்.

எனினும் அவர்களின் அறபு வசனத்தில் சிறியதோர் மயக்கம் இருப்பது போல் எனக்கு விளங்குகிறது. இது அச்சில் ஏற்பட்ட பிழையா? என்று எனக்கு எண்ணத் தோணுகிறது. இது தொடர்பாக என்னோடுள்ள மௌலவீமார்களிடம் கேட்டபோது அவர்கள் கூறிய விளக்கம் நூறு வீதம் எனக்குத் தெளிவைத் தரவில்லை. இருந்தாலும் அவர் சொல்ல நினைக்கின்ற சாராம்சத்தை நான் விளங்கிவிட்டேன். அதை மட்டும் இங்கு எழுதுகிறேன். உலமாஉகளில் யாருக்காவது இது தொடர்பான தெளிவு கிடைக்குமாயின் அவர்கள் எமக்கு அறிவிக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “மனிதனுக்கு அவனுடைய “ஹப்லுல் வரீத்” நெருங்கியிருப்பதை விட நாங்கள் அவனுக்கு நெருங்கியுள்ளோம்” என்று அல்லாஹ் சொன்னதிலிருந்து சில உண்மைகள் தெளிவாகின்றன என்று கூறியுள்ளார்கள்.

அதாவது “ஹப்லுல் வரீத்” என்பது பிடரி நரம்பு என்றோ முதுகு முள் என்றோ எவ்வாறு வைத்துக் கொண்டாலும் அது சடமுள்ளதேயாகும். நெருக்கம் என்பது சடமில்லாத கருத்தோடு தொடர்புடைய ஒன்றாகும். இவ்வாறிருக்கும் நிலையில் சடமுள்ள ஒன்று நெருங்கியிருப்பதை விட சடமற்ற ஒன்று அதிகம் நெருங்கியுள்ளதென்று கூறியதிலிருந்து அல்லாஹ் “தாத்”தை கொண்டே சடமுள்ளதாக வெளியாகியுள்ளான் என்பது விளங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்கள். (அல்யவாகீத் – இமாம் ஷஃறானீ, பாகம் 01, பக்கம் 61)

இஸ்லாமிய வரலாற்றில் இறைஞானிகளிற் பலர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நான் கூறவில்லை. வரலாறு கூறுகின்றது.

இவர்கள் இறைஞானிகளாயிருந்தும் இவர்கள் கொலை செய்யப்பட்டதேன்? இவர்களைக் கொலை செய்தவர்கள் யார்? என்று வரலாற்று நூல்களைப் புரட்டிப் பார்த்தால் யஹூதீ, நஸாறாக்களோ, காபிர்கள், முஷ்ரிகீன்களோ இவர்களைக் கொலை செய்யவில்லை என்பதும், இவர்களைக் கொலை செய்தவர்களும், இவர்களைக் கொலை செய்வதற்கு காரண கர்த்தாக்களாக இருந்தவர்களும் மார்க்க ஞானத்தை அரை குறையாகக் கற்ற உலமாஉகளும், அவர்களில் பொறாமைக்காரர்களுமேயாவர். எனது எழுத்தில் சந்தேகமுள்ளவர்கள் முதலில் வரலாற்று நூல்களை வாசிக்க வேண்டுமென்று அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறேன்.

இறைஞானிகள் என்று நான் கூறுவது علم التصوّف என்ற ஸூபிஸ ஞானம் கற்ற ஸூபீ மகான்களையே குறிக்கும். இவர்கள் மட்டுமே மேற்கண்டவாறு துன்புறுத்தப்பட்டவர்களாவர்.

இவர்கள் தவிர “புகஹாஉ” என்று அழைக்கப்படுகின்ற ஷரீஆவின் சட்ட மேதைகள், ஹதீதுக்கலை மேதைகள், تفسير திருக்குர்ஆன் விரிவுரைக் கலை மேதைகள் போன்றோரில் சிலர் வேறு சிலரால் எதிர்க்கப்பட்டிருந்தாலும் கூட ஸூபீ மகான்கள் துன்புறுத்தப்பட்டது போல் அவர்களில் எவரும் துன்புறுத்தப்பட்டதற்கு வரலாறுகளைக் காண முடியவில்லை.

ஸூபீ மகான்கள் மட்டும் துன்புறுத்தப்பட்டதற்குக் காரணம் அவர்கள் இறைவனைப் பற்றிப் பேசியதும், எதார்த்தம் பேசியதுமேயாகும். “எதார்த்தவாதி பொது சன விரோதி” என்று ஒரு பழமொழி உண்டு. இது உண்மைதான். இதை நான் மறுக்கவில்லை. எனினும் இவ்வாறு சொன்னவர் இன்னும் சற்று ஆழமாக ஆய்வு செய்திருந்தால் “எதார்த்தவாதி போலி அறிஞர்களின் விரோதி” என்று சொல்லியிருப்பார். இக்காலத்தைப் பொறுத்த மட்டில் இந்தப் பழமொழி “எதார்த்தவாதி போலி அறிஞர்களினதும், அறிவற்ற பொது மக்களினதும் விரோதி” என்று மாற்றி அமைக்கப்பட வேண்டியதாகும்.

சட்டக்கலை, ஹதீதுக்கலை உள்ளிட்ட எந்த ஒரு கலையிலும் சொல்லப்படாத இறை ஞானம் ஸூபீ மகான்களால் எழுதப்பட்ட நூல்களில்தான் உள்ளன.

இறைஞானத்தினதும், ஸூபிஸ ஞானத்தினதும் தத்துவங்களை அறியாத அரை வேக்காடு அறிஞர்களும், நீரினுள் நீச்சலடிக்காமல் நீரின் மேல் நீச்சலடிப்பவர்களும் நான் கூறும் இறைஞானம் மார்க்கத்திற்கு முரணானதென்றும், நானும் எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களும் மதம் மாறியவர்கள் என்றும் சொல்வார்கள்.

இது பற்றி அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பேரர்களில் ஒருவரான ஸெய்யிதுனா ஸெய்னுல் ஆபிதீன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.

وَرُبَّ جَـوْهَـرِ عِـلْمٍ لَوْ أَبُوْحُ بِـهِ
لَقِيْلَ لِيْ أَنْتَ مِـمَّـنْ يَعْبُدُ الْوَثَنَا
وَلَا اسْتَحَلَّ رِجَالٌ مُسْلِمُوْنَ دَمِيْ
يَرَوْنَ أَقْبَحَ مَا يَأْتُـوْنَـهُ حَـسَـنًـا
إِنِّيْ لَأَكْتُمُ مِنْ عِـلْمِـيْ جَـوَاهِـرَهُ
كَيْ لَا يَرَى الْحَقَّ ذُوْ جَهْلٍ فَيُفْتِنَنَا

“மாணிக்கம் போன்ற எவ்வளவோ அறிவு என்னிடம் உள்ளது. நான் அதை வெளிப்படுத்தினால் நீ விக்கிரகத்தை வணங்குகின்றவன் என்று எனக்குச் சொல்லப்படும்.

அதுமட்டுமல்ல, முஸ்லிம்கள் என்னைக் கொலை செய்வது ஆகும் – ஹலால் என்றும் சொல்வார்கள். அதோடு அவர்களின் இழி செயல்களையே நல்லவை என்றும் அவர்கள் சொல்வார்கள்.

நான் என்னிடமுள்ள மாணிக்கம் போன்ற அறிவை நிச்சயமாக மறைத்து வைத்துள்ளேன். ஏனெனில் உண்மையான தத்துவத்தை – சத்தியக் கொள்கையை நான் சொல்லும் போது விஷயம் அறியாத அறிவிலிகள் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள் என்று நான் அஞ்சுகிறேன்” என்று இமாம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இமாம் அவர்கள் மேற்கண்டவாறு ஏன் கூறினார்கள் என்பது தொடர்பாக சற்று ஆய்வு செய்து பார்ப்போம்.

தெளிவான எந்த ஒரு ஞானியும் “ஷரீஆ”வுக்கு முரணான கருத்துக்கள் சொன்னதாகவோ, எழுதியதாகவோ எந்த ஓர் ஆதாரமும் இல்லை. இன்னும் விளக்கமாகச் சொல்வதாயின் தொழத்தேவையில்லை என்றோ, நோன்பு நோற்கத் தேவையில்லை என்றோ, ஹஜ் வணக்கம் தேவையில்லை என்றோ, இவைபோல் ஷரீஆவில் கடமையாக்கப்பட்ட எதுவும் தேவையில்லை என்றோ சொன்னதற்கு எந்த ஓர் ஆதாரமும் இல்லை. அவ்வாறு ஞானிகளில் யாராவது சொல்லியிருந்தால் அவரை தெளிவான ஞானியென்று நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். மார்க்கமும் ஏற்றுக்கொள்ளாது.

இவ்வாறுதான் தெளிவான எந்த ஒரு ஞானியும் ஷரீஆவில் விலக்கப்பட்ட விடயங்களைச் செய்யலாம், குடிக்கலாம், விபச்சாரம் செய்யலாம், திருடலாம் இன்னுமிவை போன்ற ஹறாமான காரியங்களைச் செய்யலாம் என்று சொன்னதற்கோ, எழுதியதற்கோ எந்த ஓர் ஆதாரமும் இல்லை. அவ்வாறு யாரும் சொல்லியிருந்தால் அவரைத் தெளிவான ஞானியென்று நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். மார்க்கமும் ஏற்றுக்கொள்ளாது.

مجذوب – “மஜ்தூப்” என்று ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் போல் நடிக்கும் கூட்டமும் உண்டு. உண்மையான “மஜ்தூப்கள்” அல்லாஹ்விடம் ஒரு அந்தஸ்த்திற்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆயினும் அவர்கள் கூறும் ஞான வழியில் நடப்பது தவிர்க்கப்பட வேண்டும். அதேபோல் அவர்களை ஏசுதல், அடித்தல், துன்புறுத்தல் போன்றவற்றையும் கட்டாயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறிருக்கும் நிலையில் எந்த ஒரு ஞானியும் விக்கிரக வணக்கம், சிருட்டி வணக்கம் சரியானதென்று ஒருபோதும் சொல்லமாட்டார். மேற்கண்ட பாடலைக் கூறிய இமாம் அவர்கள் தன்னிடம் மாணிக்கம் போன்ற அறிவுகள் இருப்பதாகவும், அவற்றை மக்கள் மத்தியில் சொன்னால் அவர்கள் தன்னை விக்கிரகத்தை வணங்குபவன் என்று சொல்வதுடன் என்னைக் கொலை செய்வது ஆகுமென்றும் சொல்லிவிடுவார்கள் என்று கூறியுள்ளார்களே அந்த அறிவு எது?

அந்த அறிவுதான் நான் கூறிக் கொண்டிருக்கின்ற ”வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைக் கடந்த அதியுச்சக்கட்ட ஞானமாகும். ஒரே வார்த்தையில் சுருக்கமாகச் சொல்வதாயின் اَلْأَصْنَامُ عَيْنُ اللهِ – اَلْآلِهَةُ عَيْنُ الله விக்கிரகங்கள் அல்லாஹ் தானானவையும், இலாஹுகள் என்று சொல்லப்படுகின்ற யாவும் அல்லாஹ் தானானவை என்ற ஞானமாகும். இதையே இமாம் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

இமாம் அவர்களின் பேச்சுக்கு ஆதாரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எம்மைக் கொலை செய்வது மார்க்கப்படி ஆகும் என்றும் அவர்கள் “பத்வா” வழங்கி எம்மைக் கொலை செய்யுமாறு பொது மக்களைத் தூண்டியதேயாகும்.

இன்னோரை ذُوْ جَهْلٍ அறிவிலிகள் என்று “அஹ்லுல் பைத்” பெருமானாரின் குடும்பத்தவர்களில் ஒருவரான அலீ நாயகத்தின் பேரர் 1400 வருடங்களுக்கு முன்னாலேயே கூறிவிட்டார்கள். உலமா சபை மட்டுமல்ல. “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைப் பேசுகின்றவர்களை “முர்தத்” என்று சொல்பவர்கள் அனைவரும் அறிவிலிகளே!

சுருக்கம் என்னவெனில் மெய்ஞ் ஞானிகளை அஞ்ஞானிகள் எக்காலமும் எதிர்த்துக் கொண்டே இருப்பார்கள். இதற்கு காரணம் ஒன்றோ அறிவின்மையாகும். அல்லது பொறாமையாகும். “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்றே ஒன்றுதான். அது இரண்டுமல்ல. பலதுமல்ல. அண்ட சராசரங்கள் அனைத்தும் அவனின் “தாத்”தின் வெளிப்பாடுகளேயாகும் என்ற கொள்கையில் நாம் செவ்வனே செல்வோம்.

அல்லாஹ் தனது “தாத்”தைக்கொண்டு சிருட்டியாக “தஜல்லீ” ஆனானா? “ளுஹூர்” வெளியானானா? அல்லது “ஸிபாத்” என்ற தன்மைகள் கொண்டு வெளியானானா? என்பது தொடர்பாக விளக்கம் கூறிய நான் அவன் தனது “தாத்” கொண்டுதான் சிருட்டியாக – “கல்க்” ஆக – வெளியானான் என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களில் சில வசனங்களை ஆதாரமாகக் கூறி விளக்கி வைத்தேன். பிடிவாதம், பொறாமை என்ற பெரு நோய்களால் பாதிக்கப்படாதவர்கள் வாசித்து பயன்பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

قال الشّاعر : وَعَيْنُ الرِّضَا عَنْ كُلِّ ذَنْبٍ كَلِيْلَةٌ
وَلَكِنَّ عَيْنَ السَّخَطِ تُبْدِى الْمَسَاوِيَا،
صدق الشاعر وقال الحق وأصاب فيما قال،
எந்த ஒரு நூலை வாசிக்கும்போதும் பொருந்திக் கொள்ளுதல் என்ற கண்கொண்டு ஒருவன் வாசித்தால் அதில் உள்ள தவறும் கூட தவறாகத் தெரியாது. ஆயினும் வாசிப்பவன் கோபக்கண் கொண்டு வாசிப்பானாயின் தவறில்லாத, சரியானதும் கூட தவறாகத் தெரியும்.

وقال الشّاعر: إِنَّ التَّعَصُّبَ دَاءٌ لَا دَوَاءَ لَهُ
إِلَّا بِتَرْكِكَ إِيَّاهُ بِرُمَّتِهِ
பிடிவாதம் என்பது எந்தவொரு மருந்துமில்லாத நோயாகும். அதற்கு மருந்து அதை விடுவதேயாகும்.

அல்லாஹ் “தாத்”தைக் கொண்டுதான் – “ஸிபாத்” என்ற தன்மைகளுடன் – சிருட்டியாக வெளியாகியுள்ளான் என்பதற்கு நான் எழுதிக்காட்டிய திருமறை வசனங்கள் الأدلة النقلية – சுருதிப்பரமாணங்களில் ஒன்றாகும். இன்னும் ஒரு சுருதிப்பிரமாணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

قَالَ: وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّكُمْ دَلَّيْتُمْ بِحَبْلٍ إِلَى الأَرْضِ السُّفْلَى لَهَبَطَ عَلَى اللَّهِ. ثُمَّ قَرَأَ {هُوَ الأَوَّلُ وَالآخِرُ وَالظَّاهِرُ وَالبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ}. (رواه الترمذي)
எனது ஆன்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் ஒரு கயிற்றை எடுத்து அதை பூமியை நோக்கித் தொங்கவிட்டால் அது அல்லாஹ்வில் விழும். இவ்வாறு சொன்ன நபீ பெருமான் இதைத் தொடர்ந்து முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, உள்ளானவனும் அவனே, வெளியானவனும் அவனே. அவனே கேட்பவனும், அவனே பார்ப்பவனும் ஆவான் என்ற திருமறை வசனத்தை ஓதினார்கள். ஆதாரம் (துர்முதீ)

இது ஸஹீஹ் – பலமான ஹதீதாகும். இதை “ழயீப்” பலம் குறைந்ததென்று மக்கள் மத்தியில் படம் பிடித்துக் காட்டி இறை தத்துவத்தை குழி தோண்டிப் புதைப்பதற்கு ஞானத்தின் எதிரிகளும், ஸூபீ மகான்களின் எதிரிகளும் படும் பாடோ சொல்ல முடியாத ஒன்றாகும். சிறகடித்துப் பறந்து பார்க்கிறார்கள் கிடைக்கவில்லை. இவர்களின் அறியாமையை எண்ணி சிரிப்பதா? அழுவதா? அல்லது இவர்களை மூளைக்கான மருத்துவ நிபுணரிடம் காட்டுவதா? ஒன்றுமே புரியவில்லை. காட்டுவதுதான் நல்லது என்று பலர் கூறுகின்றார்கள். அங்கோடைக்குப் போய் வந்தால்தான் பூரண சுகம் கிடைக்குமென்று பலர் அபிப்பிராயம் கூறுகிறார்கள்.

அறிவுள்ளவர்களும், சிந்தனைத் திறன் உள்ளவர்களும் நபீ பெருமான் இவ்வாறு ஏன் சொன்னார்கள் என்று சிந்திக்க வேண்டும். ஏனெனில் ஒருவன் கையில் ஒரு கையிறை எடுத்து அதன் ஒரு தொங்கலை கையால் பிடித்துக் கொண்டு அதன் மறு தொங்கலை பூமியை நோக்கிவிட்டால் அத் தொங்கல் எங்கே விழும் என்று பாலர் வகுப்பு மாணவனிடம் கேட்டால் கூட அது பூமியில் விழும் என்றுதான் அவன் சொல்வான். அல்லது அரைப் பைத்தியகாரனிடம் கேட்டால் கூட அவனும் அவ்வாறுதான் சொல்வான். இந்த நாசக்காரர்களின் நடவடிக்கையைப் பாரத்தால் இன்னும் சில நாட்களில் அல்லது சில மாதங்களில் கண்மணி நாயகத்தை முழுப்பைத்தியம் என்று சொல்லிவிடுவார்களோ என்று எண்ணத் தோணுகிறது. பெருமானாரை طارش – “தாரிஷ்” தபாற்காரன் என்று இழித்துரைத்த ஒருவனின் வழிகாட்டலில் வளர்ந்தவர்களாயிற்றே. அவ்வாறு சொல்லமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஞானத்தின் எதிரிகளை விடுவோம். மற்றும் மகான்களையும், வழிகேடர்களையும் விடுவோம். ஞான வழியிலும், தரீகா வழியிலும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருப்பவர்களிடம் கேட்போம்.

ஷெய்குமார்களே! “பைஅத்” வழங்கி வருகின்ற குருநாதர்களே! பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏன் அவ்வாறு சொன்னார்கள்? நீங்கள்தான் அவ்வாறு சொல்வீர்களா? இவ்வாறு பெருமானார் சொன்னதால் அவர்களின் “உம்மத்” சமூகத்தவர்களுக்கு அறிவு ரீதியாக கிடைக்கின்ற பயன் என்ன?

இந்த ஹதீதை “ழயீப்” பலம் குறைந்ததென்று சொல்லவும் முடியாமலும், பூமியையும் அல்லாஹ் என்று ஏற்றுக் கொள்ள முடியாமலும் எந்தக் கொப்பில் பாய்வோம் என்று தலை மயிரை இரு கைகளாலும் பிசைந்து கொண்டிருப்பவர்களுக்கு ஓர் “ஐடியா” வருகிறது போலும். அதாவது لَهَبَطَ عَلَى اللهِ அந்தக் கயிறின் தொங்கல் அல்லாஹ்வில் விழும் என்றால் لَهَبَطَ عَلَى قُدْرَةِ اللهِ அல்லாலஹ்வின் சக்தியில் விழுமென்று முருங்கை மரத் தடியை முதிரை மரத்தடி என்று ஏமாந்து தூக்கிக் கொண்டு வருகிறார்கள். இவர்களிடம் சில கேள்விகள் கேட்டுப் பார்ப்போம். கேள்வி கேட்கும் நாம் பக்கத்தில் ஒரு மல கூடத்தையும் ஒழுங்கு செய்து வைப்போம். ஏனெனில் சிலருக்கு வாந்திபேதி நோயாலன்றிப் பயத்தாலும் அது வருவதுண்டு.

வலிந்துரைவாதிகளே! பெருமானார் நீங்கள் சொன்னதுபோல் لَهَبَطَ عَلَى قُدْرَةِ اللهِ அல்லாஹ்வின் சக்தியில் விழுமென்று சொல்லியிருந்தால் எவருக்கும் எந்த ஆட்சேபனையும் வரப்போவதில்லையே! உங்களுக்கு வந்த “ஐடியா” பெருமானாருக்கு வராமற் போனதேனோ? இதற்கு பதில் தாருங்கள்!

நபீ பெருமான் எவ்வாறு சொன்னார்களோ அவ்வாறே பொருள் கொள்ளாமல் நீங்கள் “குத்றத்” சக்தி என்று வலிந்துரை கொள்வதற்கான காரணம் என்ன?

வலிந்துரை கொள்ளாமல் அல்லாஹ்வில் விழும் என்று சொன்னால் பாமர மக்கள் பூமியையும் அல்லாஹ் என்று நினைத்து வழிகெட்டுப் போவார்கள். ஆகையால் அவர்கள் வழிகெட்டுப் போகாமலிருக்க வேண்டுமென்பதற்காகவே அவ்வாறு வலிந்துரை கொள்கிறோம் என்று சொல்ல நினைக்கிறீர்களா? உங்களுக்கு வருகின்ற இந்த “ஐடியா” عَلِمْتُ عِلْمَ الْأَوَّلِيْنَ وَالْآخِرِيْنَ முன்னோர், பின்னோர் அனைவரின் அறிவையும் நான் அறிந்து கொண்டேன் என்று கூறிய பெருமானாருக்கு ஏன் வரவில்லை? பதில் தருவீர்களா?

நீங்கள் சொல்வது போல் அந்தக் கயிறு அல்லாஹ்வில் விழாமல் அவனின் “குத்றத்” சக்தியில்தான் விழுகிறதென்று வைத்துக் கொண்டால் பின்வரும் கேள்விக்கு நீங்கள் பதில் கூற வேண்டும்.

“குத்றத்” என்றால் சக்தி. சக்தி என்பது அறிவு, நாட்டம், கேள்வி, பார்வை போல் “ஸிபாத்” தன்மைகளில் ஒன்றாகும். “ஸிபத்” என்றால் விட்டுப் பிரியாத தன்மையாகும். اَلصِّفَةُ لَا تُفَارِقُ الْمَوْصُوْفَ தன்மை என்பது ஆதேயமானதேயன்றி அது ஆதாரமானதல்ல. ஆதாரத்திற்கு جوهر “ஜவ்ஹர்” என்று சொல்லப்படும். ஆதாரம் தனியே நிற்கக் கூடியதாகும். ஆனால் “ஸிபத்” என்று சொல்லப்படுகின்ற தன்மை என்பது ஆதேயமானதாயிருப்பதால் அது தனியே நிற்காமல் ஏதேனுமோர் ஆதாரத்தைக் கொண்டே நிற்கும். அந்த ஆதாரத்தை விட்டும் பிரிந்து தனியே நிற்காது. உதாரணமாக சக்தி என்ற தன்மை ஏதாவதொன்றைக் கொண்டுதான் நிற்குமேயன்றி தனியே நிற்காது. அது மனிதனில் நிற்க வேண்டும். அல்லது கத்தி, வாள் போன்ற ஒன்றில் நிற்க வேண்டும். “ஸிபத்” என்ற சொல்லுக்கு விட்டுப் பிரியாத தன்மை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். “இல்மு” அறிவு ஒரு “ஸிபத்” விட்டுப்பிரியாத தன்மை என்றே சொல்லப்படும். அது தனியே நிற்காது. ஒரு மனிதனில்தான் நிற்கும்.

எனவே, மேற்கண்ட விளக்கத்தின்படி “குத்றத்” என்ற அல்லாஹ்வின் சக்தி அவனின் “தாத்”தில்தான் நிற்குமேயன்றி அதை விட்டுப் பிரிந்து தனியே நிற்காது. ஆனால் நீங்களோ அல்லாஹ்வின் “தாத்”தை விட்டும் அவனின் “ஸிபத்” தன்மையான “குத்றத்” என்ற சக்தியை பிரித்து எடுக்கின்றீர்கள். இது அசாத்தியமே அன்றி சாத்தியமானதல்ல. சாத்தியமானதென்றிருந்தால் என்னுடைய “தாத்”தில் உள்ள அறிவு என்ற தன்மையை எப்பவோ பிரித்தெடுத்து என்னை வெறும் கோதாக ஆக்கியிருப்பீர்கள் அல்லவா? எனவே நீங்கள் சொல்லும் வலிந்துரை பிழையானதாகும்.

அல்லாஹ் தனது “தாத்”தைக் கொண்டு சிருட்டியாக வெளியானான் என்று நான் கூறும் போது அவன் தனது “ஸிபாத்” என்ற தன்மைகளோடும், “அஸ்மாஉ” என்ற திரு நாமங்களோடுமே வெளியாகியுள்ளான் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதுவே சரியான கொள்கை. “தாத்”தைக் கொண்டு மட்டுமே வெளியாகியுள்ளான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இதுவே தொடரான நீண்டகால ஆய்வின் பின் நான் அறிந்த உண்மையாகும்.

நான் மறுப்புக் கூறுவது அல்லாஹ் “தாத்”தைக் கொண்டு வெளியாகாமல் தனது “ஸிபத்” என்ற தன்மை கொண்டு மட்டும் வெளியாகியுள்ளான் என்ற கருத்துக்கேயாகும். இதற்கான ஆதாரங்களையே நான் கூறியும் வருகிறேன்.

அல்லாஹ் தனது “தாத்” இன்றி “ஸிபத்” என்ற தன்மை கொண்டு மட்டும் வெளியாகியுள்ளான் என்று சொல்வதும், நம்புவதும் اَلْأَدِلَّةُ النَّقْلِيَّةُ என்ற சுருதிப் பிரமாணங்களுக்கும், اَلْأَدِلَّةُ العَقْلِيَّةُ என்ற யுக்திப் பிரமாணங்களுக்கும் முரணானதாகும். நாம் குர்ஆன், ஹதீதுக்கும், அவ்லியாஉகளான ஸூபீ மகான்களின் கொள்கைக்கும் முரணில்லாத கொள்கையையே நம்ப வேண்டும்.

“வஹ்ததுல் வுஜூத்” – “வுஜூத்” ஒன்றே ஒன்றுதான் என்றும், ஆயினும் அதன் “தஜல்லியாத்” என்ற வெளிப்பாடுகள்தான் எண்ணிலடங்காதவை என்றும், எந்த ஒரு சிருட்டியும் அதன் கருவான அல்லாஹ்வின் “தாத்”திற்கு வேறானதில்லை என்றும் நான் எழுதி வருகின்றேன். இக் கொள்கையை மக்கள் நம்பும் வகையில் திருக்குர்ஆன், ஹதீதுகள், ஸூபீ மகான்களின் பேச்சுக்கள் என்பவற்றை ஆதாரங்களாக கூறி விளக்கி வைத்தும் வருகிறேன்.

எனினும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை மிக எழிதில் விளங்கிக் கொள்வதற்கு சில அடிப்படைகள் உள்ளன. அவ் அடிப்படைகளை அறிந்து கொண்டால் மிக இலகுவாக இக் கொள்கையை புரிந்து கொள்ள முடியும்.

அவற்றில் சில அடிப்படைகளை எழுதுகிறேன். முதலில் “ஹுலூல் – இத்திஹாத்” என்ற இரண்டு விடயங்கள் பற்றி எழுதுகிறேன். இவ் இரண்டு கொள்கைகளும் “வஹ்ததுல் வுஜூத்” என்ற கொள்கைக்கு மட்டுமன்றி திருக்குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரணான கொள்கையாகும். விளக்கமில்லாத சிலர் நான் பேசி வருகின்ற கொள்கை பிழையான “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை என்று நினைத்து என்னை எதிர்க்கிறார்கள். அவர்களின் எதிர்ப்புக்கு விஷயம் விளங்காத உலமாஉகளும், குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையைச் சேர்ந்த சில உலமாஉகளும் மற்றும் என்மீது பொறாமை கொண்டவர்களும் துணை நிற்கிறார்கள்.

“வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்னவென்று அணுவளவும் தெரியாதிருந்த உலமாஉகள் நான் பேசுவது “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையென்று கற்பனை செய்து கொண்டு என்னிடம் எந்தவொரு விசாரணையும் செய்யாமல் ஒரு தலைப்பட்சமாக எனக்கும், எனது கருத்தைச் சரிகண்ட பல்லாயிரம் மக்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கி எங்களை இஸ்லாம் மார்க்கத்தின் விரோதிகள் என்று மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தினார்கள்.

அல்லாஹ்வின் அருளாலும், அவ்லியாஉகளின் “பறகத்”தாலும் நானும், என்னுடன் இருக்கின்ற உலமாஉகளும் இன்றுவரை இந்த இறைஞானத்தைப் பகிரங்கமாகப் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டுமே இருக்கின்றோம். இந்த வரலாறு மிகப்பெரியது. இதற்கென்று தனியான ஒரு நூல்தான் எழுத வேண்டும். இன்ஷா அல்லாஹ் அதையும் நாம் செய்வோம். இதோடு இந்த வரலாறை சுருக்கிக் கொண்டு “ஹுலூல் – இத்திஹாத்” தொடர்பான விபரத்தை தருகின்றேன்.

“ஹுலூல் – இத்திஹாத்”

حُلُوْلْ – “ஹுலூல்” என்ற சொல் حَلَّ “ஹல்ல” என்ற சொல்லடியில் உள்ளதாகும். “ஹல்ல” என்றால் – இறங்கினான் – இறங்கியது என்று பொருள் வரும். இதன்படி “ஹுலூல்” என்ற சொல்லுக்கு இறங்குதல் என்று பொருள் வரும்.

உதாரணமாக حَلَّ الْمَاءُ فِى الْكَأْسِ நீர் கிளாஸில் இறங்கியது, حَلَّ الذُّبَابُ فِى الطَّعَامِ ஈ (கொசு) உணவில் இறங்கியது, حَلَّ الْمَطَرُ فِى الْبَلَدِ ஊரில் மழை இறங்கியது என்பன போன்று, “ஹல்ல” என்ற சொல்லுக்கு نَزَلَ இறங்கியது என்ற பொருள் உண்டு. இந்த உதாரணங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு வஸ்த்துக்கள் உள்ளன. முதலாவது உதாரணத்தில் நீரும், கிளாஸும், இரண்டாவது உதாரணத்தில் ஈ – கொசுவும், உணவும், மூன்றாவது உதாரணத்தில் மழையும், ஊரும் உள்ளன.

எது இறங்குகின்றதோ அதற்கு حَالٌّ – ஹால்லுன் என்றும், எந்த இடத்தில் – எதில் இறங்குகின்றதோ அதற்கு مَحَلٌّ – மஹல்லுன் என்றும் சொல்லப்படும்.

இவ்விபரப்படி முதலாவது உதாரணத்தில் தண்ணீர் இறங்கிய வஸ்த்தாகவும், கிளாஸ் அது இறங்கிய இடமாகவும், இரண்டாவது உதாரணத்தில் கொசு (ஈ) இறங்கிய வஸ்த்தாகவும், உணவு அது இறங்கிய இடமாகவும், மூன்றாவது உதாரணத்தில் மழை இறங்கிய வஸ்த்தாகவும், ஊர் அது இறங்கிய இடமாகவும் உள்ளன.

இவ் உதாரணங்களை சரியாக விளங்கிக் கொண்ட பின் பின்வரும் விடயங்களைக் கவனிக்க வேண்டும். அதாவது اللهُ حَلَّ فِى الْإِنْسَانِ அல்லாஹ் மனிதனில் இறங்கினான், اللهُ حَلَّ فِى الْمَسْجِدِ அல்லாஹ் பள்ளியில் இறங்கினான், اللهُ حَلَّ فِى الْخَلْقِ அல்லாஹ் சிருட்டியில் இறங்கினான் என்பன போன்று.

இவ்வாறு நம்புவதைத்தான் “ஹுலூல்” கொள்கை என்று சொல்லப்படுகின்றது. இது “அகீதா”வுக்கு முற்றிலும் பிழையானது. “ஸுன்னத் வல் ஜமாஅத்” “அகீதா”வுக்கு முற்றிலும் முரணானது. இக் கொள்கை பிழையென்று சொல்வதை விட “குப்ர்” என்று சொல்வதே பொருத்தமானதாகும். இப்படியான கொள்கையுடையோர் முஸ்லிம்களில் நிறைய இருக்கின்றார்கள்.

இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று முதியவர்கள் சொல்வார்கள். அவர்கள் என்ன கருத்தை மனதில் கொண்டு சொன்னார்கள் என்பது எமக்குத் தெரியாது. நான் மேலே எழுதிய கருத்தின் அடிப்படையில் அவர்கள் சொல்லியிருந்தால் அவர்களின் “ஈமான்” விசுவாசம் பிழையானதேயாகும். அவர்கள் அவ்வாறு சொல்லாமல் இறைவன் தூணாகவும் இருப்பான், துரும்பாகவும் இருப்பான் என்ற கருத்தின் அடிப்படையில் சொல்லியிருந்தார்களாயின் அவர்கள் அசல் தவ்ஹீத்வாதிகளேயாவர்.

“ஹுலூல்” என்ற “அகீதா” கொள்கை ஏன் பிழையாயிற்று என்பதற்கான விளக்கத்தை “இத்திஹாத்” தொடர்பான விளக்கத்தை எழுதி முடித்தபின் எழுதுவேன். இன்ஷா அல்லாஹ். அதன் பின் “ஹுலூல் – இத்திஹாத்” இரண்டும் பிழையென்று சொல்வதற்கான காரணம் என்ன என்ற விளக்கத்தையும் எழுதுவேன். எனது பதிவுகளை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வாசிப்பவர்கள் மட்டுமே சரியான கொள்கை விளக்கத்தை அறிந்து கொள்வர்.

சென்ற பதிவில் “ஹுலூல்” என்ற கொள்கை தொடர்பாக பல்வேறு உதாரணங்களுடன் தெளிவாக எழுதியிருந்தேன்.

இலங்கை உலமாஉகளில் எவரும் தமிழிலோ, அல்லது அறபு மொழியிலோ “ஹுலூல் – இத்திஹாத்” தொடர்பாக எந்த ஒரு நூலும் எழுதியதாக நான் அறியவுமில்லை. அப்படியொரு நூலை நான் கண்டதுமில்லை.

இந்திய உலமாஉகளிற் பலர் தமிழிலும், அறபு மொழியிலும் பல நூல்கள் எழுதியிருந்தாலும் கூட “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பற்றியோ, “ஹுலூல் – இத்திஹாத்” பற்றியோ அவர்களில் எவரும் தெளிவான, விரிவான எந்த ஒரு நூலும் எழுதி வெளியிட்டதாகவும் நான் அறியவில்லை.

மதிப்பிற்குரிய மர்ஹூம் RPM கனீ அவர்கள் “மெய்யறிவின் ஒளிச்சுடர்கள்” என்ற பெயரில் இறைஞான நூலொன்று எழுதியிருந்தாலும் கூட அந்நூல் படித்த, படிக்காத அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கவில்லை. அந்நூல் ஷெய்குனா ஸெய்யிதுனா அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் இறுதி நூலான فصوص الحكم – புஸூஸுல் ஹிகம் என்ற நூலின் மொழியாக்கம் என்று நான் நினைக்கிறேன். அது மொழியாக்கம் மட்டுமேயன்றி அதன் விரிவுரை நூல் அல்ல. அதை வாசிப்பதன் மூலம் சாதாரண மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்காதென்று நான் நினைக்கிறேன்.

رحمه الله رحمة واسعة وعفى عنه وأكرم نزله ووسّع مدخله وأسكنه الفردوس الأعلى مع أسعد مخلوقاته وأفضل موجوداته

இலங்கையில் வாழ்ந்து மறைந்த அறிஞர், வழக்கறிஞர், அல் ஆலிம் சித்தி லெப்பை அவர்கள் “அஸ்றாருல் ஆலம்” என்ற பெயரில் தமிழ் மொழியில் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக எழுதிய நூல் பெறுமதி மிக்க நூலாகும். எனினும் அந்நூல் மீண்டும் அச்சிட்டு வெளியிடப்பட வேண்டும். உரியவர்கள் கவனத்திற் கொள்வார்களா?

رحم الله العالم العارف المُحامي ستِّ لبّي صاحب كتاب ‘أسرار العالم ‘ وغفر ذنوبه وعطّر قبره، وجعل الفردوس الأعلى مأواه ومثواه، وأسكنه فيه مع الموحّدين القائلين بوحدة الوجود ومع المحقّقين والمدققين،

“இத்திஹாத்”

إتّحاد – இத்திஹாத் என்ற சொல் أِتَّحَدَ – “இத்தஹத” என்ற சொல்லடியில் உள்ளது. இச் சொல் இரண்டு வஸ்த்துக்கள் சேர்ந்து ஒன்றாதல் என்ற பொருளைத்தரும். அதாவது வேறு வேறான இரண்டு வஸ்த்துக்கள் ஒன்றாகக் கலந்து ஒரு வஸ்த்தாவதைக் குறிக்கும்.

உதாரணமாக நீரையும், சீனியையும் போன்று. நீர் ஒரு வஸ்த்து. சீனி அதற்கு வேறான இன்னொரு வஸ்த்து. இவ்விரண்டும் கலக்குமுன் நீர் என்றும், சீனி என்றும் சொல்வோம். இரண்டும் கலந்து ஒன்றான பின் – அதாவது சீனி நீருடன் கலந்து ஒன்றான பின் ஒரு வஸ்த்துதான். அதை சீனித்தண்ணி என்று அல்லது இனிப்பு நீர் என்று சொல்வோம்.

உதாரணமாக إِتَّحَدَ السُّكَّرُ مع الماء சீனி நீருடன் கலந்து ஒன்றாகிவிட்டது போன்று.

“ஹுலூல்” தொடர்பான உதாரணங்களில் இரண்டு வஸ்த்துக்கள் கூறப்பட்டது போல் “இத்திஹாத்” தொடர்பான உதாரணத்திலும் இரண்டு வஸ்த்துக்கள் கூறப்பட்டுள்ளன.

“ஹுலூல்” கொள்கையுள்ளோர், கிளாஸில் நீர் இறங்குவது போல் அல்லாஹ் சிருட்டியில் இறங்கியுள்ளான் என்றும், உணவில் ஈ இறங்குவதுபோல் அல்லாஹ் சிருட்டியில் இறங்கியுள்ளான் என்றும், மலரில் தேனருந்தும் வண்டு இறங்குவது போல் அல்லாஹ் சிருட்டியில் இறங்கியுள்ளான் என்றும் சொல்வார்கள்.

“இத்திஹாத்” கொள்கையுள்ளோர் சீனி நீருடன் கலந்து ஒரே பொருளானது போல் அல்லாஹ் சிருட்டியுடன் கலந்து ஒரே பொருளாகிவிட்டான் என்று சொல்வார்கள்.

வஹ்ஹாபிகள் நெடுங்காலமாக اَلرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى – றஹ்மான் ஆகிய அல்லாஹ் “அர்ஷ்” என்ற சிம்மாசனத்தில் இருக்கின்றான் என்றே சொல்லி வந்தார்கள். அல்லாஹ் “அர்ஷ்”இல் இல்லையென்றும், வஹ்ஹாபிகள் சொல்வது முற்றிலும் பிழையென்றும் நானும், என்னுடனுள்ள உலமாஉகளும், மற்றும் இந்நாடு, வெளிநாடுகளிலுள்ள உலமாஉகளும் பேச்சு மூலமும், எழுத்து மூலமும் அவர்களுக்கு மறுப்புக் கொடுத்த பிறகு அவர்கள் தமது பழைய நிலைப்பாட்டிலிருந்து நழுவி அல்லாஹ் அர்ஷில் இல்லை. அர்ஷுக்கு அப்பால் உள்ளான் என்ற இடத்திற்கு இறங்கியுள்ளார்கள்.

வஹ்ஹாபிகளிடம் ஹுலூலும் இல்லை, இத்திஹாதும் இல்லை. அவர்கள் கலப்பில்லாத “முஜஸ்ஸிமா” சடவாதிகளேயாவர்.

“வஹ்ததுல் வுஜூத்” கொள்கை வாதிகள் சடவாதிகள் அல்லர். ஆயினும் அல்லாஹ்வின் “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” நிலைகள் பற்றிப் பேசும் போது كُلُّ مَا نَفَيْتَهُ فِى التَّنْزِيْهِ فَقَدْ أَثْبَتَّهُ فِى التَّشْبِيْهِ அல்லாஹ்வின் “தன்ஸீஹ்” நிலையில் அவனுக்கு எதெல்லாம் இல்லை என்று நீ சொன்னாயோ, அதெல்லாம் “தஷ்பீஹ்” உடைய நிலையில் உண்டு என்று சொல் என்று ஒரு தத்துவம் சொல்வார்கள். அது பற்றி அதற்குரிய இடத்தில் எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்.

“வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்னவென்று தெரியாதவர்கள் கூட “ஹுலூல் – இத்திஹாத்” இரண்டும் பிழையென்றே சொல்வார்கள். இதனால்தான் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனக்கு “முர்தத்” என்று “பத்வா” தந்தார்கள். “ஹுலூல் – இத்திஹாத்” பேசியவர் “முர்தத்” என்று அவர்கள் “பத்வா” வழங்கியது சரியானதே. நாங்களும் அவர்களை “முர்தத்” என்றே சொல்வோம். ஆயினும் அவர்கள் துறை தெரியாமல் தோணி தள்ளிவிட்டார்கள்.

“ஹுலூல் – இத்திஹாத்” என்ற இரண்டு கொள்கைகளும் பிழை என்பதற்கான காரணம் என்னவென்றும், அவ்வாறு நம்புவதால் “ஷரீஆ”வுக்கு முரணான அம்சம் அதில் என்ன உள்ளதென்றும் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையை மறுப்பவர்களிடம் கேட்டால் அவர்களால் ஒருவனின் அறிவுத் தாகம் தீரும் வகையில் விளக்கம் கூற முடியாதுள்ளது.

“ஹுலூல் – இத்திஹாத்” என்ற இரண்டு கொள்கைகளும் பிழை என்று நிறுவுவதாயின் “வஹ்ததுல் வுஜூத்” என்ற கோட்டைக்குள் நின்றே நிறுவ முடியும். அடுத்த தொடரில் அதை நிறுவுவோம்.

“ஹுலூல் – இத்திஹாத்” என்றால் என்ன? அதெவ்வாறு? என்பது தொடர்பான விபரத்தை மட்டும் கடந்த பதிவுகளின்போது உதாரணங்கள் மூலம் தெளிவாக எழுதியிருந்தேன். வாசித்த பலர் பலன் பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்விரு கொள்கையும் எந்த வகையில் வழிகேடானவையென்று கடந்த பதிவுகளில் நான் குறிப்பிடவில்லை. அதற்கான விளக்கத்தை இப்பதிவில் எழுதுகிறேன்.

கடந்த பதிவுகளில் “ஹுலூல் – இத்திஹாத்” இரண்டிற்கும் பல உதாரணங்கள் எழுதியிருந்தேன். அவ் உதாரணங்கள் ஒரு சிருட்டி இன்னொரு சிருட்டியில் இறங்குவதற்கும், அதேபோல் ஒரு சிருட்டி இன்னொரு சிருட்டியுடன் கலந்து கொள்வதற்குமான உதாரணங்களாகும்.

இவ் உதாரணங்கள் “ஹுலூல் – இத்திஹாத்” என்பதை விளங்கப்படுத்துவதற்காக கூறிய உதாரணங்களேயன்றி அவ்வாறு உதாரணங்கள் சொல்லக் கூடாதென்பதற்காக எழுதியதல்ல.

ஒரு சிருட்டி இன்னொரு சிருட்டியில் இறங்குதல் பற்றியோ, ஒரு சிருட்டி இன்னொரு சிருட்டியுடன் கலந்து ஒன்றாதல் பற்றியோ பேச வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. அது ஒரு சிருட்டிக்கும், இன்னொரு சிருட்டிக்குமுள்ள பிரச்சினையாகும். அது பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அது நமது தலைப்புக்கு அப்பாற்பட்டதாகும்.

எமது நோக்கம் அல்லாஹ் சிருட்டியில் இறங்குதல் பிழையென்றும், அவன் சிருட்டியுடன் கலந்து ஒன்றாதல் பிழையென்றும் கூறுவதும், நிறுவுவதுமேயாகும்.

அல்லாஹ் சிருட்டியில் இறங்குகின்றான் என்று நம்புவதும், அவன் அதோடு கலந்து ஒன்றாகிவிடுகின்றான் என்று நம்புவதும் பிழையென்று சொல்வதை விட அது “குப்ர்” என்று சொல்வதே பொருத்தமானதாகும். ஏனெனில் அக் கொள்கையை ஆழமாக ஆய்வு செய்தால் அதனுள் “குப்ர்” மறைந்திருப்பது தெளிவாகும்.

“ஹுலூல்”காரர்கள் அல்லாஹ் சிருட்டிகளில் இறங்குகின்றான் என்று கூறும்போது அவன் எங்கிருந்து இறங்குகின்றான் என்று அவர்களிடம் கேட்க வேண்டும். இறங்குதல் என்ற பொருளுக்கு அறபு மொழியில் நுஸூல்- نُزُوْلْ என்ற சொல்தான் பயன்படுத்தப்படுகின்றது. மேற்திசையிலிருந்து கீழ்த்திசைக்கு வருவதற்கே இறங்குதல் என்று சொல்லப்படும். அவர்கள் இக்கேள்விக்கு பதில் சொல்வதாயின் “அர்ஷ்” என்ற இடத்திலிருந்து இறங்குகின்றான் என்று சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்வார்களாயின் இவர்களும் வஹ்ஹாபிகள் போல் அல்லாஹ்வுக்கு ஓர் இடத்தை தரிபடுத்தியவர்களேயாவர். அவ்வாறு சொன்னால் இவர்கள் “ஹுலூல்” வாதிகள் மட்டுமன்றி “முஜஸ்ஸிமா” சடவாதிகளுமேயாவர்.

#குட்டிக்கதை

குட்டிக் கதையொன்று எழுதியபின் “ஹுலூல் – இத்திஹாத்” பற்றித் தொடர்வேன்.

1976ம் ஆண்டு நான் திரு மதீனா முனவ்வறா அல்ஜாமிஅதுல் இஸ்லாமிய்யா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். எனது வகுப்பிற்கு வந்த ஹதீதுப் பாட ஆசிரியர் மஹ்மூத் பஸறாவீ மிஸ் ரீ அவர்கள்,

يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ
இரவின் பிற்பகுதியில் எங்களின் “றப்பு” இரட்சகன் முன்வானத்திற்கு இறங்குகின்றான் என்ற நபீ மொழிக்கு விளக்கம் சொல்கையில் மனிதன் இறங்குவது போல் முன்வானத்திற்கு இறங்குகின்றான் என்றே சொன்னார். அப்போது எனது வகுப்பில் பத்து மாணவர்கள் இருந்தார்கள். அவர்களில் மூவர் கறுப்பு இனத்தைச் சேர்ந்த “ஸுன்னத் ஜமாஅத்” கொள்கைவாதிகள். நான் ஆசிரியரிடம் مَنْ كَانَ فِى الْعَرْشِ حِيْنَ نَزَلَ الرَّبُّ إِلَى السَّمَاءِ الدُّنْيَا؟ முன்வானத்திற்கு அல்லாஹ் இறங்கிய நேரம் அர்ஷில் யார் இருந்தார்? என்று கேட்டேன். அதற்கவர் كَانَ الْعَرْشُ خَالِيًا அந்நேரம் “அர்ஷ்” காலியாக இருந்தது என்றார். நான் தொடரவில்லை.

சில நாட்களின் பின் இந்த ஆசிரியர் “மஸ்ஜிதுன் நபவீ” பள்ளிவாயலில் “இஷா” தொழுகையின் பின் பெருமானாரின் “றவ்ழா ஷரீபா” அடக்கவிடத்தில் நடமாடிக் கொண்டிருந்தார். அவரின் நடைபாவனை எனக்கு சந்தேகமாயிருந்ததால் நான் மறைந்து நின்று அவரை அவதானித்தேன். அவர் பெருமானாரின் “றவ்ழா”வை முத்தமிட்டார். மறு நாள் வகுப்பிற்கு சென்ற நான் அவரைக் கண்டு உங்களுடன் தனிமையில் பேச வேண்டுமென்று சொன்னேன். அவர் மதீனாப் பள்ளிவாயலில் ஓர் இடத்தைக் குறித்து வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகையின் பின் சந்திக்கவும் என்றார். அதேபோல் சந்தித்து அவர் “றவ்ழா”வை முத்தமிட்டது பற்றிக் கேட்டேன். அவர் என்னிடம், நான் வஹ்ஹாபீ அல்ல. நான் “ஆஷிகுர் றஸூல்” நாயகத்தை நேசிப்பவன். எனது நாடு மிஸ்ர். நான் ஒரு கலாநிதி. அஸ்ஹர் பல்கலைக் கழகப் பட்டதாரி. என்னை மறைத்துக் கொண்டு இங்கு வாழ்கின்றேன் என்றார்.

இன்னுமொரு குட்டிக்கதையையும் கூறிவிட்டு எனது தலைப்பைத் தொடர்கிறேன். மன்னிக்கவும்.

இஸ்லாமிய வரலாற்றில் இருபது வருடங்கள் உலக நாடுகளில் முக்கிய நாடுகளைச் சுற்றிப் பார்த்த ஒருவர் இருந்தார். அவர் “மிஸ்ர்” நாட்டைச் சேர்ந்தவர். அவரின் பெயர் “#இப்னு_பதூதா”. அவர் பிரசித்தி பெற்ற வரலாற்றாசிரியராவார்.

இவர் தனது இருபதாண்டு சுற்றுலாப் பயணத்தின் போது ஒரு வெள்ளிக் கிழமை சிரியா நாட்டின் தலைநகர் “திமஷ்க்” டமஸ்கஸில் ஜும்ஆத் தொழுகைக்காக ஒரு பள்ளிவாயலுக்குச் சென்றுள்ளார். அங்கு அன்று “குத்பா” பிரசங்கம் நிகழ்த்தியவர் ஹிஜ்ரீ 661-728 காலப்பகுதியில் வாழ்ந்த வஹ்ஹாபிகளால் “ஷெய்குல் இஸ்லாம்” என்றழைக்கப்படுகின்ற “இப்னு தைமிய்யா” ஆவார்.

அவர் தனது “குத்பா” பிரசங்கத்தில் மேலே நான் குறிப்பிட்ட يَنْزِلُ رَبُّنَا எங்கள் “றப்பு” முன்வானத்திற்கு இறங்குகின்றான் என்ற ஹதீதுக்கு விளக்கம் கூறிய அவர் يَنْزِلُ رَبُّنَا كَنُزُوْلِيْ هَذَا நான் இப்போது இறங்குவது போன்றுதான் இறைவன் முன்வானத்திற்கு இறங்குகின்றான் என்று கூறிய அவர் “மின்பர்” படியில் இருந்து இறங்கிக் காட்டியுள்ளார். அவ்வேளை பள்ளிவாயலில் அறிவுலக மேதைகளிற் பலர் இருந்துள்ளனர். பள்ளிவாயலில் குழப்பம் எற்பட்டு இப்னு தைமிய்யா அரசாங்கத்தினால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வரலாறை நேரில் கண்ட “இப்னு பதூதா” இதை தனது رحلة ابن بطوطة என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதாக சரித்திராசிரியர்களிற் பலர் தமது நூல்களில் கூறியுள்ளார்கள்.

#தகிய்யுத்தீன்_அஹ்மத்_இப்னு_தைமிய்யா

ஹிஜ்ரீ 661ல் பிறந்தார். ஹிஜ்ரீ 728ல் மரணித்தார்.
இவர் திறமை மிக்க அறிஞர். இவர் பற்றிப் புகழ்ந்து கூறிய, கொள்கையில் இவருக்கெதிரானவர்கள் கூட عِلْمُهُ أَكْثَرُ مِنْ عَقْلِهِ – இவரின் அறிவு இவரின் புத்தியை விட அதிகம் என்று கூறியுள்ளார்கள். கொள்கை தொடர்பாக பலதரம் சிறைவாசம் செய்துள்ளார். சிறையிலேயே மரணித்தார். பல நூல்கள் எழுதியுள்ளார். இவருக்கும், இவரின் நூல்களுக்கும் ஸஊதியில் நல்ல வரவேற்பு உண்டு.

وَهَذَا الشَّيْخُ مِمَّنْ سَبَقَتْ شَقَاوَتُهُ سَعَادَتَهُ، رَحِمَهُ الله إِنْ كَانَ تَابَ قَبْلَ انْتِقَالِهِ،

முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் அந்நஜ்தீ

ஹிஜ்ரீ 1111ல் பிறந்தார். ஹிஜ்ரீ 1206ல் மரணித்தார். இவர் இப்னு தைமிய்யாவை விட அறிவில் குறைந்தவர். அமலிலும் குறைந்தவர். ஆயினும் அட்டூழியத்திலும், வழிகேட்டைப் பரப்புவதிலும் ஸக்றானை வென்றவர். வஹ்ஹாபிஸத்தின் தந்தை இவர்தான். இப்னு தைமிய்யாவின் கொள்கை வழி நடந்தவர்.

وَهَذَا الشَّخْصُ أَيْضًا مِمَّنْ سَبَقَتْ شَقَاوَتُهُ سَعَادَتَهُ وَحَمَاقَتُهُ حَذَاقَتَهُ، فَمَنْ تَبِعَهُ ضَلَّ وَزَلَّ، وَخَابَ وَخَسِرَ،

2019 ஏப்ரல் 21ம் திகதிக்குப் பின் இலங்கை நாட்டில் வஹ்ஹாபிஸக் கிழவி இடுப்பொடிந்து கோலில் நடக்கிறாள்.

إِنَّ اللهَ لَيُؤَيِّدُ هَذَا الدِّيْنَ بِالرَّجُلِ الْفَاجِرِ
நிச்சயமாக அல்லாஹ் மார்க்கத்தை கெட்ட மனிதனைக் கொண்டு பலப்படுத்துவான் என்ற வள்ளல் நபீயின் வாக்கு பொய்யாகவில்லை.

ஹுலூல் – இத்திஹாத் கொள்கை இரண்டும் பிழையென்பதை பல வழிகளில் நிறுவ முடியும். அவற்றில் முக்கியமான வழிகளை மட்டும் கூறுகின்றேன்.

பாம்பை ஒரே அடியில் கொல்வதாயின் அதன் தலையில்தான் அடிக்க வேண்டும். வயிற்றில் அல்லது வாலில் அடித்துக் கொல்வதாயின் பல அடிகள் அடிக்க வேண்டும். உண்மையான பாம்பும் உண்டு. றப்பர் பாம்பும் உண்டு.

இறங்குபவர்களே! இறக்குபவர்களே! ஹுலூலிகளே! வண்டு மலரில் இறங்குவதுபோல் அல்லாஹ் அவனின் சிருட்டியில் இறங்குகிறான் என்று நம்புகின்றீர்கள். இதுவே சரியான கொள்கையென்றும் சொல்கின்றீர்கள். உங்களின் இக் கொள்கை ஒரு வகையில் அர்த்தமற்றதென்றும், இன்னொருவகையில் “குப்ர்” நிராகரிப்பு என்றும் எம்மால் நிறுவ முடியும்.

உங்களின் இக் கொள்கை அர்த்தமற்றது என்று முதலில் நிறுவுகிறோம். இரண்டாவதாக “குப்ர்” என்று நிறுவுவோம்.

திருக்குர்ஆனின் ஆதாரங்களும், நபீ பெருமானின் அருள் மொழிகளும், இறைஞானிகளின் “அக்வால்” பேச்சுக்களும் சிருட்டியென்பது அல்லாஹ்வின் “மளாஹிர்”கள், அவனின் வெளிப்பாடுகள் என்று கூறுகின்றன.

“மள்ஹர்” என்ற சொல்லின் பன்மைச் சொல்தான் “மளாஹிர்” என்ற சொல். இவ்வாறுதான் “தஜல்லீ” என்ற சொல்லுமாகும். இதன் பன்மைச் சொல் “தஜல்லிய்யாத்” என்று வரும்.

مظهر – “மள்ஹர்” என்ற சொல் ظَهَرَ என்ற சொல்லடியிலுள்ளது. “ளஹற” என்றால் வெளியானான் என்று பொருள். “மள்ஹர்” என்றால் வெளியாகுமிடம் என்று பொருள்.

இவ்வாறு சொல்வதால் மட்டும் இது சரியாக விளங்காது. இது தொடர்பான முன்னறிவுள்ளவர்களுக்கு அது மிக இலகுவாக விளங்கிவிடும். அவ்வறிவில்லாதவர்களுக்கு உதாரணங்கள் கூறியே விளக்கி வைக்க வேண்டும்.

அதிக உதாரணங்கள் கூறி நேரம், மை, பேப்பர் முதலானவற்றை வீணாக்காமல் மூன்று உதாரணங்கள் மட்டும் கூறுகின்றேன். விளங்க வேண்டும் என்ற தூய மனதோடு வாசிப்பவர்களுக்கு விளங்காமற் போகாது.

ஒன்று: தங்கமும் மாலையும்.
இரண்டு: பஞ்சும், ஷேட்டும்.
மூன்று: இரும்பும், ஆணியும்.

மாலை என்பது தங்கத்தின் “மள்ஹர்” என்று சொல்லப்படும். இதை அறபியில் சொல்வதாயின் اَلْقِلَادَةُ مَظْهَرُ الذَّهَبِ என்று சொல்ல வேண்டும்.

ஷேட் என்பது பஞ்சின் “மள்ஹர்” என்று சொல்லப்படும். இதை அறபியில் اَلْقَمِيْصُ مَظْهَرُ الْقُطْنِ என்று சொல்லப்படும்.

ஆணி என்பது இரும்பின் “மள்ஹர்” என்று சொல்லப்படும். அறபியில் اَلْمِسْمَارُ مَظْهَرُ الْحَدِيْدِ என்று சொல்லப்படும்.

“மள்ஹர்” என்றால் வெளியாகும் இடம் அல்லது வெளியான இடம் என்று பொருள் வரும். எது வெளியானதோ அது “ளாஹிர்” என்றழைக்கப்படும். முதலாம் உதாரணத்தில் தங்கம் “ளாஹிர்” என்றும், இரண்டாம் உதாரணத்தில் பஞ்சு “ளாஹிர்” என்றும், மூன்றாம் உதாரணத்தில் இரும்பு “ளாஹிர்” என்றும் சொல்லப்படும்.

மேற்கண்ட மூன்று மூலங்களும் மூன்று வஸ்த்துக்களாக வெளியாகியுள்ளன. ஒவ்வொரு மூலத்திற்கும் ஒவ்வோர் உதாரணம்தான் சொன்னோம். ஆயினும் இம்மூன்று மூலங்களில் ஒவ்வொன்றும் கோடிக்கணக்கான வஸ்த்துக்களாக வெளியாக முடியும். சற்று சிந்தித்தால் உண்மை உதிக்கும்.

இவ்வுதாரணங்களில் ஒவ்வோர் உதாரணமும் இரண்டு பெயர்களில் இருந்தாலும் கூட இருப்பது ஒரு வஸ்த்து மட்டுமேயாகும். தங்கம் மாலையானதென்றால் தங்கம் வேறு மாலை வேறு என்பது கருத்தல்ல. இங்கு இரண்டு வஸ்த்துக்கள் இல்லை. தங்கம் மட்டுமே உள்ளது. உள்ளது ஒன்றுதான்.

இதை இன்னும் சற்றுத் தெளிவாக விளங்கப்படுத்துவதற்காக இன்னொரு உதாரணமும் சொல்கிறேன்.

ஓர் இரும்புக்கடையில் இரும்பால் செய்யப்பட்ட ஆயிரம் வகையான பொருட்கள் மட்டும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் அந்தக் கடைக்குள் நின்று எங்கு பார்த்தாலும் அவனின் கண்ணுக்கு இரும்பைத்தவிர வேறொன்றும் தெரியவில்லையென்றால் அவன் இக்கடையில் இரும்பைத் தவிர வேறொன்றுமில்லை என்று சொல்வான். இது பிழையாகுமா?

நீரில் – நீரின் அடியில் வாழும் மீன் தனது கண்ணைத் திறந்தால் அதற்கு நீரைத்தவிர வேறொன்றும் தெரியாது. எல்லாமே நீரென்றால் வேறொன்று தெரிவது எப்படி?

ஒருவன் நீரின் அடியில் குழியோடுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். இவன் நீரின் அடியில் இருந்த நிலையில் நாற் திசையிலும், மேலும் கீழும் அவனுக்கு நீரைத்தவிர வேறொன்றும் தெரியாது. அவன். நாற்திசையிலும் பார்த்தேன், மேலும் பார்த்தேன், கீழும் பார்த்தேன் நீரைத்தவிர வேறொன்றும் எனக்குத் தெரியவில்லை என்று சொன்னால் இவனை பொய்யனென்றா சொல்வது?

ஒரு ஞானியிடம் ஞானத்தாகம் உள்ள ஒருவன் சென்று எனக்கு அல்லாஹ் என்றால் யார்? அவன் எத்தகையவன் என்று சொல்லித் தாருங்கள் என்று கேட்டான். அதற்கவர் என்னிடம் கேட்பதைவிட கடலில் வாழும் மீன்களிடம் கேட்டுப்பார். அது சுருக்கமாகச் சொல்லித்தரும் என்றார்.

அவன் கடற்கரைக்கு வந்து நின்று கடலில் வாழும் மீன்களே! எனக்கு அல்லாஹ்வைப் பற்றிச் சொல்லித் தாருங்கள் என்றான். இரண்டு மீன்கள் நீருக்கு மேல் தலையை உயர்த்தி உன் தாகம் தீர்க்க நாங்கள் தயார். ஆனால் ஒன்று. இறைவன் பரிசுத்தமானவன். அவனைப்பற்றிச் சொல்பவர்கள் பரிசுத்தமானவர்களாக இருக்கும் நிலையில்தான் அவனைப் பற்றிச் சொல்ல வேண்டும். நாங்களோ நெடுங்காலமாக முழுக்கை இறுக்க நீரில்லாமல் நீர் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். நீரைக்கண்டால் குளித்து முழுக்கை இறுத்துவிட்டு சொல்லித் தருகிறோம் என்றன.

நீரிலேயே வாழும் மீனுக்கு நீர் கிடைக்கவில்லையா? இது என்ன புதுமை? சற்று நேரம் சிந்தித்தான். எதார்த்தம் புரிந்தது. இறைவனை அறிந்து நிம்மதியடைந்தான்.

இதனையே தமிழ் நாடு காயல் நகரில் சமாதி கொண்டுள்ள தைக்கா ஸாஹிபு வலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்,

காணும் சொரூபமெல்லாம் கர்த்தன் “மள்ஹர்” என்று
பேணி ஷுஹூது செய்து பிலப்படுவதென்னாளோ!

என்று சுட்டிக்காட்டினார்கள்.

தங்கம் கோடிக்கணக்கான வடிவங்களில் நகைகளாக வெளியாவது போலும், பஞ்சு அதேபோல் கோடிக்கணக்கான வடிவங்களில் உடைகளாக வெளியாவது போலும், அதே போல் இரும்பு கோடிக்கணக்கான வடிவங்களில் பல் பொருட்களாக வெளியாவது போலும் அல்லாஹ்வின் “தாத்”, அல்லாஹ் என்ற பெயருக்குரிய அந்த மூலப் பொருள் அனைத்துச் சிருட்டிகளாகவும் வெளியாகித் தோற்றுகின்றது என்பதே எதார்த்தம். இதுவே இஸ்லாம் கூறும் இறைஞானம். துறை தெரியாமல் தோணி தொடுப்பவர்களின் தோணியில் ஏறினால் நாசமேதான். தங்கத்தாலான எந்த ஒரு நகையும் தங்கத்திற்கு வேறாகாமலும், பஞ்சினாலான எந்த ஒரு துணியும் பஞ்சுக்கு வேறாகாமலும், இரும்பிலான எந்த ஒரு வஸ்த்தும் அதற்கு வேறாகாமலும் இருப்பது போல் எந்த ஒரு சிருட்டியும் அல்லாஹ் என்ற பெயருக்குரிய மூலப் பொருளுக்கு வேறாகாமலேயே இருக்கிறது.

இன்னும் விபரமாகச் சொல்வதாயின் மாலை தங்கம் தானானதாகவும், ஷேட் பஞ்சு தானானதாகவும், ஆணி இரும்பு தானானதாகவும் இருப்பது போல் அல்லாஹ் படைத்த, படைத்துக் கொண்டிருக்கின்ற, இதன் பிறகு படைக்கப் போகின்ற அண்டசராசரங்கள் அனைத்தும் அவன் தானானவையேயாகும்.

ஹுலூலிகளே! இவ்வாறிருக்கும் நிலையில் – அதாவது சிருட்டிகள் என்பன அவன் தானானவையாக இருக்கும் நிலையில் “ஹுலூல்” எது எங்கே இறங்குவது? எது எதோடு கலந்து ஒன்றாகுவது? “ஹுலூல் – இத்திஹாத்” என்ற இரண்டுக்குமே இடம் கிடையாதென்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வஸ்த்து தன்மீது இறங்குதல் என்பது எவ்வாறு? அது சாத்தியமா? எனவே, இஸ்லாமிய “அகீதா”வின் அடிப்படையில் “ஹுலூல் – இத்திஹாத்” என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதே தீர்க்கமான முடிவாகும்.

“ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று பல்வழிகளில் நிறுவ முடியுமென்றும், எவ்வழியில் நிறுவுவதாயினும் “வஹ்ததுல் வுஜூத்” என்ற இடத்திற்கு வந்தே நிறுவ முடியுமென்றும் எழுதியிருந்தேன். அதன்படி இப்போது ஒரு வழியில் நிறுவியுள்ளேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவுகளில் மற்ற வழிகள் மூலம் நிறுவுவேன்.

“ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை தொடர்பாக கடந்த பதிவுகளின் போது சில விளக்கம் கூறியிருந்தேன். இந்தப் பதிவிலும் சில விளக்கம் கூறுகிறேன்.

அல்லாஹ் قَائِمٌ بِنَفْسِهِ தன்னைக் கொண்டு நிற்பவன் என்பது அவனுக்கு “வாஜிப்” ஆன, அதாவது அவனில் அவசியம் இருக்க வேண்டிய இருபது பண்புகளில் ஒன்றாகும். இதன் பொருள் தன்னைக் கொண்டு நிற்பவன் என்பதாகும்.

இதற்கு நேர் எதிரான பண்பு قَائِمٌ بِغَيْرِهِ என்பதாகும். இதன் பொருள் சிருட்டி அல்லாஹ்வைக் கொண்டு நிற்பதாகும். முந்தினது அல்லாஹ்வில் அவசியம் இருக்க வேண்டிய பண்பு. இரண்டாவது அல்லாஹ்வில் அறவே இருக்க முடியாத, சிருட்டியில் அவசியம் இருக்க வேண்டிய பண்பு. இதன் சுருக்கம் என்னவெனில் அல்லாஹ் தன்னைக் கொண்டு நிற்பவன். சிருட்டி தன்னைக் கொண்டு நிற்காமல் அது அல்லாஹ்வைக் கொண்டு நிற்பதாகும்.

அல்லாஹ் தன்னைக் கொண்டு நிற்பவன் என்றால் அவனுடைய “தாத்” தன்னைக் கொண்டு நிற்பதாகும். அது நிற்பதற்கு இன்னொன்று தேவையில்லை. இதை அனைவரும் எந்த ஒரு மறுப்புமில்லாமல் ஏற்றுக்கொள்வார்கள்.

ஆயினும் சிருட்டி அவனைக் கொண்டு நிற்கிறதென்றால் ஒரு மரம் முட்டில் நிற்பதுபோலென்று பலர் கற்பனை செய்து கொள்கிறார்கள். இதை இன்னும் விளக்கமாக சொல்வதாயின் ஒரு வாழை மரம் சாய்ந்து விழுந்து விடாமல் ஒரு عَمُوْدْ தூணில் நிற்பது போலென்று நினைக்கிறார்கள்.

எதார்த்தத்தில் சிருட்டி அல்லாஹ் என்ற முட்டில்தான் நிற்கிறது என்று வைத்துக் கொண்டால் இரண்டு வஸ்த்துக்கள் வேண்டும். ஒன்று அல்லாஹ். மற்றது சிருட்டி. சிருட்டி என்ற மரம் அல்லாஹ் என்ற முட்டில் நிற்கிறது என்பது போன்று. உதாரணமாக شَجَرَةُ الْمَوْزِ قَائِمَةٌ بِالْعَمُوْدِ வாழை மரம் முட்டில் நிற்கிறது என்பது போன்று. இங்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவை.

சிருட்டி அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிறதென்ற விடயத்தில் ஹுலூல் காரர்களும், இன்னும் பலரும் வாழை மரம் முட்டில் நிற்பது போலென்று விளங்கிக் கொண்டார்கள் போலும். இவ்வாறு விளங்குவதால்தான் இரண்டு வஸ்த்துக்கள் தேவையாகின்றன. இவ்வாறு விளங்காமல் ஆணி இரும்பைக் கொண்டு நிற்பது போலும், மாலை தங்கத்தைக் கொண்டு நிற்பது போலும், ஷேட் பஞ்சைக் கொண்டு நிற்பது போலும் என்று விளங்கிக் கொண்டால் இரண்டு வஸ்த்துக்கள் தேவைப் படாது. பெயரளவில்தான் இரண்டு தேவையேயன்றி எதார்த்தத்தில் இரண்டு வஸ்த்துக்கள் தேவையே இல்லை.

ஆணி இரும்பைக் கொண்டு நிற்கிறதென்றால் ஆணி வேறு இரும்பு வேறு என்றும், ஷேட் பஞ்சைக் கொண்டு நிற்கிறதென்றால் ஷேட் வேறு பஞ்சு வேறு என்றும், மாலை தங்கத்தைக் கொண்டு நிற்கிறதென்றால் மாலை வேறு தங்கம் வேறு என்றும் சொல்ல முடியாதல்லவா? இதே போல்தான் அல்லாஹ்வைக் கொண்டு நிற்கிற சிருட்டியுமாகும். சிருட்டி வேறு அல்லாஹ் வேறு என்று எந்த வகையிலும் சொல்ல முடியாதல்லவா?

ஆகவே உள்ளது ஒன்று மற்றது அன்று என்ற தத்துவத்தின் அடிப்படையில் இரும்பு ஆணியில் இறங்குகிறதென்றும், பஞ்சு ஷேட்டில் இறங்குகிறதென்றும், தங்கம் மாலையில் இறங்குகிறதென்றும் சொல்ல முடியாது. சொல்வதாயின் ஆணி இரும்புதான், ஷேட் பஞ்சுதான், மாலை தங்கம்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவே, எல்லாமே ஒன்றுதான், எல்லாமே ஒரு தாத்தின் பல காட்சிதான் என்று கொள்ளும் போது இறங்குதல், கலத்தல் என்ற சொற்களுக்கே இடமில்லாமற் போய்விடும். ஒரே ஒரு பொருள் எதில் இறங்குவது? எதோடு கலப்பது?

فَبَطَلَ الحلولُ والإتّحاد لعدم الإثْنَيْنِيَّةِ، فلا يتصوّر حلُول شيئ على نفسه، واتِّحادُ شيئ بنفسه، وامّا الحلولُ والإتّحادُ فهما في اعتقاد المعتقد فقط لا في الحقيقة، كما أنّ الشرْك كذلك، أي فلا شرك في الحقيقة لعدم الإثنينيّة وإنّما الشرْك في اعتقاد المعتقدين، فمن قال إنّ الحقّ تعالى غَيْرُ الخلق أو الخلق غير الحقّ فَقَدْ هَدَم القَصْرَ الذي بناه الله ورسولُه والأولياء، أي هدم قصرَ وحدة الوجود الذي هو الروح لدين الإسلام، وهو الأساس لكلمة الحقّ، لا اله الا الله، بإثباتِه الغيريّة بين الواجد والموجود وبين الوجود والموجود، وبإثباته أيضا وجودين، وجودا للحق تعالى ووجودا آخر للخلق الذي هو عدم محض في الحقيقة، كما قال غير واحد من الصُّوفيين الذين صَفَتْ قلوبهم عن النجاسات الغيريّة،

فيكفي هذا القدر للحُلُوْلِيّ والإتّحاديّ لرجوعهما من الشرك إلى الإيمان الخالص الصافي، إن كانا من السّعداء المقبولين، وإلّا فلاخلاص لهما ولا نجاة،

(மேற்கண்ட அறபு வரிகளை தமிழில் தருகிறேன்.)

“ஹுலூல், இத்திஹாத்” என்ற இரண்டு கொள்கையில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு வஸ்த்துக்கள் தேவை. இரண்டில்லையென்றால் ஹுலூலுமில்லை, இத்திஹாதுமில்லை.

“வஹ்ததுல் வுஜுத்” எல்லாம் அவன் தானானவை என்ற கருத்தின்படி அல்லாஹ் தன்னில் தானே இறங்குகிறான், தன்னுடன் தானே கலந்து விடுகிறான் என்று சொல்ல வேண்டும். இது அசாத்தியம். இது பிழை. ஹுலூல், இத்திஹாத் இரண்டும் எதார்த்தத்தில் கிடையாது. ஆயினும் நம்புகிறவர்களைப் பொருத்ததே ஹுலூலும், இத்திஹாதுமாகும். “ஷிர்க்” அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்பதும் இவ்வாறுதான். எதார்த்தத்தில் இணை என்பதே இல்லை. அல்லாஹ்வுக்கு நிகராக யாராவது அல்லது எதாவது இருக்குமா? நிச்சயமாக இருக்காது. ஆகையால் நிச்சயமாக எதார்த்தத்தில் “ஷிர்க்” இணை என்பதே இல்லை. எனினும் இணை என்பது நம்புகின்றவனின் நம்பிக்கையை பொறுத்ததேயாகும்.

ஏனெனில் இரண்டில்லை என்ற காரணத்தால் ஹுலூல் – இத்திஹாத் என்ற எதுவுமே இல்லையென்பது போன்றதே “ஷிர்க்” இல்லை என்பதுமாகும். ஏனெனில் “ஷிர்க்” இணை ஏற்படுவதற்கு இரண்டு வேணும். ஒரு பொருளை வைத்துக் கொண்டு “ஷிர்க்” என்ற கதைக்கே இடமில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

யாராவதொருவன் சிருட்டி கர்த்தாவான அல்லாஹ் சிருட்டிக்கு வேறானவன் என்றோ, அல்லது சிருட்டி அல்லாஹ்வுக்கு வேறானது என்றோ சொன்னானாயின் அவன் அல்லாஹ்வும், அவனின் திருத்தூதரும், அவ்லியாஉகளும் கட்டிய மாளிகையை உடைத்து விட்டான் என்பதே அதன் அர்த்தமாகும். அல்லது அவர்கள் கட்டிய, இஸ்லாம் மார்க்கத்தின் உயிராகவும், சத்தியத் திருக்கலிமாவின் அத்திவாரமுமான “வஹ்ததுல் வுஜுத்” மாளிகையை உடைத்து விட்டான் என்பதே அதன் கருத்தாகும்.

இதற்கான காரணம் இவ்வாறு சொல்பவன் – அதாவது சிருட்டி வேறு, சிருட்டித்தவன் வேறு என்று சொல்பவனும், ஹுலூல் – இத்திஹாத் காரனும் இரண்டு “வுஜுத்” அல்லது இரண்டு “தாத்” தை தரிபடுத்துகிறான். அல்லாஹ்வுக்கு ஒரு “வுஜுதும்”, சிருட்டிக்கு ஒரு “வுஜுதும்” உண்டென்று சொல்கிறான். சிருட்டி என்பது عدم محض இல்லவே இல்லை என்பதே தெளிவு பெற்ற ஸூபி மகான்களின் ஏகோபித்த முடிவாகும்.

எனவே, ஹுலூல் காரனுக்கும், இத்திஹாத் காரனுக்கும் நான் கூறி வந்த விளக்கம் போதும். இவர்கள் போல் சிருட்டி வேறு, சிருட்டி கர்த்தா வேறு என்று ஒற்றைக் காலில் நிற்கும் குழப்பவாதிகளுக்கும் நான் வழங்கிய அறிவுரை போதும். அவர்கள் நற்பாக்கியமுள்ளவர்களாயின் தெளிவான, சரியான நம்பிக்கைக்கு அவர்கள் திரும்பட்டும். இதுவே அவர்களின் வெற்றிக்கான சரியான வழியாகும்.

“ஐனிய்யத் – ஙெய்ரிய்யத்”

“ஐனிய்யத்” என்றால் சிருட்டியும், சிருட்டி கர்த்தாவான அல்லாஹ்வும் “வுஜுத்” என்ற உள்ளமையடிப்படையில் இரண்டும் ஒன்றேதான் என்ற கொள்கையாகும். இக் கொள்கைதான் “வஹ்ததுல் வுஜுத்” மெய்ப்பொருள் ஒன்று என்ற கருத்தில் சொல்லப்படுகிறது.

“ஙெய்ரிய்யத்” என்றால் மேலே சொன்ன “ஐனிய்யத்” என்ற கொள்கைக்கு நேர் முரணான கொள்கையாகும். அதாவது சிருட்டி வேறு, சிருட்டி கர்த்தா வேறு என்ற கொள்கையாகும்.

நான் இவ்விரு கொள்கையிலும் “ஐனிய்யத்” என்ற கொள்கையை மட்டுமே சரி கண்டு ஏற்றுக் கொண்டுள்ளேன். ஆயினும் “ஙெய்ரிய்யத்” என்ற விடயத்தில் மட்டும் என்னிடம் ஒரு விபரம் உண்டு. அதாவது ஒரு நிபந்தனை உண்டு. அந்த நிபந்தனையின்படி மட்டுமே “ஙெய்ரிய்யத்” என்ற கொள்கையையும் நான் சரிகண்டு ஏற்றுக்கொள்வேன்.

இதையும் சற்று விபரமாக எழுதுகிறேன். அதாவது சிருட்டியை அல்லாஹ்வின் “வுஜுத்” உள்ளமையின் பக்கம் சேர்த்து பார்க்கும் வகையில் மட்டும் “ஐனிய்யத்” என்பதே சரியானதாகும். “ஙெய்ரிய்யத்” என்பது நூறு வீதம் பிழையானதும், “குப்ர்” என்ற நிராகரிப்புமேயாகும்.

ஆயினும் சிருட்டியை அல்லாஹ்வின் உள்ளமையோடு சேர்த்துப் பார்க்கும் வகையில் அது “ஐனிய்யத்” இரண்டும் ஒன்றுதான் என்பதை ஏற்றுக்கொண்டு ஒரு சிருட்டியை இன்னொரு சிருட்டியுடன் சேர்த்துப் பார்க்கும் வகையில் மட்டும்தான் ஒரு சிருட்டி மறு சிருட்டிக்கு வேறானதென்று கொள்ளுதல் – நம்புதல் பிழையாகவோ, “குப்ர்” ஆகவோமாட்டாது.

உதாரணமாக அப்துல்லாஹ் என்ற சிருட்டியை அல்லாஹ்வின் “வுஜுத்” உள்ளமையளவில் சேர்த்துப் பார்ப்பது கொண்டு அப்துல்லாஹ் என்ற சிருட்டி அல்லாஹ்வின் “வுஜுத்” உள்ளமை தானானதேயன்றி அதற்கு வேறானதல்ல என்பதை ஏற்றுக் கொள்வதுடன் அப்துல்லாஹ் என்ற சிருட்டியை அப்துல் ஜப்பார் என்ற சிருட்டியுடன் சேர்த்துப் பார்ப்பது கொண்டு அவ்விருவரும் வேறு வேறானவர்கள் என்று நம்புதல் “ஷிர்க்” ஆக மாட்டாது. எந்த ஒரு சிருட்டியாயினும் அதை அல்லாஹ்வின் “வுஜுத்” உள்ளமையளவில் சேர்த்துப் பார்க்கும் போது அந்த சிருட்டி அவனுடைய உள்ளமைக்கு வேறானதாயிருக்க வழியே இல்லை. வேறானதென்று ஒருவன் சொன்னால் அவன் “முஷ்ரிக்” என்பதில் சந்தேகம் கொள்பவனும் “முஷ்ரிக்” ஆகி விடுவான். இதுவே இஸ்லாம் கூறும் ஏகத்துவமும், நம்பிக்கையுமாகும்.

الوجودُ عَيْنُ الْمَوْجُوْدِ لَا غَيْرُالْمَوْجُوْدِ، وَلَكِنَّ الْغَيْرِيَّةَ اِعْتِبَارِيَّةٌ وإضَافيّة،
ஸூபி மகான்கள் இத்தத்துவத்தை மேற்கண்ட சிறிய வசனத்தில் அடக்கிவிட்டார்கள். அவர்களின் தத்துவம் பின்வருமாறு.
(சிருட்டி கர்த்தாவான அல்லாஹ் சிருட்டி தானானவனேயன்றி அதற்கு வேறானவன் அல்ல. வேறு என்பது கூட ஒரு சிருட்டியை இன்னொரு சிருட்டியுடன் சேர்த்துப் பார்ப்பது கொண்டேயன்றி ஒரு சிருட்டியை அவனுடைய உள்ளமையின் பக்கம் சேர்த்துப் பார்ப்பது கொண்டல்ல)

இத் தத்துவத்தை ஐயமற அறிந்து நம்பினவன் மட்டும்தான் ஸூபி மகான்கள் கூறும் வரைவிலக்கணக்கத்திற்கு உட்பட்ட விசுவாசியாவான்.

ஒரு சிருட்டி அல்லாஹ்வின் “வுஜுத்” உள்ளமையளவில் சேர்த்துப் பார்ப்பது கொண்டு அது தானானதென்றும், ஒரு சிருட்டியை இன்னொரு சிருட்டியளவில் சேர்த்துப் பார்ப்பது கொண்டு ஒன்று மற்றதற்கு வேறானதென்றும் அறிந்து கொள்வதற்கு ஓர் உதாரணம் கூறுகிறேன்.

ஒருவனின் கையையும், அக்கையிலுள்ள விரல்களையும் கருவாக – மையமாகக் கொண்டு சிந்தனை செய்து பார்ப்போம்.

கையென்பது ஒருவனின் கமுக்கட்டு முதல் விரல் நுனி வரையான பகுதியை குறிக்கும் ஒரு சொல்லாகும். இச்சொல் அக்கையிலுள்ள முழங்கை, முன்னங்கை, மணிக்கட்டு, உள்ளங்கை, புறங்கை, விரல்கள் என்பவற்றை உள்வாங்கிய ஒரு சொல்.

கையென்ற சொல்லை “வுஜுத்” அல்லாஹ்வின் உள்ளமை என்றும், அதிலுள்ள மேற்குறிப்பிட்ட ஆறு உறுப்புகளும் சிருட்டிகள் என்றும் கற்பனையில் எடுத்து ஆய்வு செய்தால் குறிப்பிட்ட ஆறு உறுப்புகளும் கை தானானதென்பதும், ஆறு உறுப்புகளில் ஒன்று மற்ற உறுப்புகளுக்கு வேறானதென்றும் விளங்கும்.

இவ்வாறு தான் மனிதன், வீடு, கடை, வாகனம் என்ற சொற்களுமாகும். விரிவையஞ்சி விபரிக்கவில்லை.

மனிதன் என்ற சொல் அவனின் உறுப்புகள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். அவ்வுறுப்புகளில் எவ்வுறுப்பை அவனுடன் சேர்த்துப் பார்த்தாலும் அவை அவன் தானானவை என்றுதான் சொல்ல வேண்டும் வேறானவை என்று சொல்லவே முடியாது. எனினும் அவனின் முழு உடலளவிலும் சேர்த்துப் பார்க்காமல் மூக்கை வாயளவிலும், காதை தலையளவிலும், காலை கையளவிலும் சேர்த்துப் பார்ப்பது கொண்டு மட்டும் அவற்றில் ஒன்று மற்றதற்கு வேறானதாக விளங்கும். இவ்வடிப்படையில் வேறு என்பது “ஷிர்க்” இணையாகாது.

மேற்கண்ட இந்த வகையிலேயே “ஐனிய்யத்” – “ஙெய்ரிய்யத்” என்பதை நோக்க வேண்டும். விளங்கவும் வேண்டும்.

“வஹ்ததுல் வுஜுத்” என்றால் உள்ளமை ஒன்று என்று நம்பும் கொள்கையாகும். இவ்வாறு நம்புதல்தான் உண்மையான நம்பிக்கையுமாகும். இதற்கு மாறாக “வுஜுத்” என்ற உள்ளமை இரண்டு என்றோ, பலது என்றோ நம்பினவன் ஸூபி மகான்களின் எந்த ஒரு கருத்து வேறுபாடுமின்றி அசல் “முஷ்ரிக்” ஆவான் என்பதில் சந்தேகமில்லை. الوجود واحد، لا كثرة فيه ، ولا تعدد ، وإنما الكثرة في المظاهر كما في الفتاوى الحديثيّة لإبن الحجر الهيتمي رحمه الله

உள்ளமை என்பது ஒன்றுதான். அதில் அதிகம் என்பதோ, எண்ணிக்கை என்பதோ கிடையாது. ஆயினும் அதிகம் என்பது அவனின் வெளிப்பாடுகளான சிருட்டிகளிலேதான். இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ அவர்களின் அல்பதாவல் ஹதீதிய்யா என்ற நூலில் இந்த விளக்கம் உண்டு.

அகில இலங்கை உலமா சபையும், அவர்களைச் சார்ந்த சிலரும் என்னைப் புரியாமலும், நான் கூறும் இஸ்லாமிய ஸூபிஸ தத்துவத்தை விளங்காமலும் தமது கண்களை மூடிக் கொண்டும், ஸூபி மகான்கள், தரீகாவின் ஷெய்குமார்களின் கருத்துக்களைக் கேட்காமலும், ஒருவனுக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்குவதின் தீய விளைவுகளைச் சிந்திக்காமலும் “பத்வா” வழங்கிவிட்டு இப்போது இஞ்சி திண்ட குரங்கு போல் தடுமாறி நிற்கிறார்கள்.

இவர்கள் என்னையோ, எனது கருத்தைச் சரிகண்டவர்களையோ “முர்தத்” – “காபிர்” என்று சொல்லாமல் என்னை விசாரித்து, என்னுடன் கலந்தாலோசித்து நல்லதோர் முடிவுக்கு வந்திருக்கலாம். பொறாமையும், பெருமையும், நான் என்ற உணர்வும், அகங்காரமும் இவர்களின் தலைக் கேறி இவர்களின் சிந்தனைக் கதவிற்கு தாழிட்டுவிட்டன.

இவர்கள் செய்த பஞ்சமா பாதகம் என்வெனில் என்னையும், எனது கருத்தை சரிகண்டவர்களையும் மதம் மாறிய “முர்தத்”துகள் என்று “பத்வா” வழங்கியது போதாதென்று அவர்களைக் கொன்று குவிக்க வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கி அதை நாடெங்கும் பிரகடனம் செய்து கொலைகாரக் கூலிப்படைகளை தூண்டியதுமேயாகும். உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். மழுப்பி விடாமலும், மறைத்து விடாமலும் பதில் தாருங்கள்.

பத்வா வழங்கிய மகான்களே!
நீங்கள் வஹ்ஹாபிகளா? ஸுன்னிகளா? மழுப்பாமலும், விளக்கம் கூறாமலும் கேள்விக்கு மட்டும் பதில் தாருங்கள். நீங்கள் வஹ்ஹாபிகளாயிருந்தால் அல்லாஹ் அர்ஷில் உள்ளான் என்று காலையிலும், அவன் அதற்கு அப்பால் உள்ளான் என்று மாலையிலும், அவன் சடமுள்ளவன் என்றும் கூறுவீர்கள் என்பது எனக்கும் தெரியும். உங்களைப் புரிந்தவர்களுக்கும் தெரியும். உங்களுடன் பேசி எந்த ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை. நேரமே வீணாகும்.

நீங்கள் “அகீதா” இறை கொள்கையில் ஸுன்னிகளாயின் அக் கொள்கையின் இமாம் என்று உலகெல்லாம் பின்பற்றப்படுகின்ற இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கொள்கை வழியிற் செல்வீர்கள்.

இமாம் அவர்கள் “சிருட்டி, சிருட்டி கர்த்தாவின் தொடர்பு” என்பது தொடர்பாக என்ன கருத்துக் கூறியுள்ளார்கள் என்று உங்களால் தெளிவான ஆதாரத்தோடு சொல்ல முடியுமா?

الوجود عين الموجود – சிருட்டி சிருட்டிகர்த்தா தானானவன் என்று சொல்லியுள்ளார்களா? அல்லது الوجود غير الموجود சிருட்டி வேறு சிருட்டி கர்த்தா வேறு என்று சொல்லியுள்ளார்களா? இதற்கு தெளிவான பதிலைத் தெளிவாகக் கூறுங்கள்.

இமாமவர்கள் எவருக்காவது தங்களின் வாழ்க்கையில் “முர்தத்” என்றோ, “முஷ்ரிக்” என்றோ “பத்வா” வழங்கியுள்ளார்களா? என்றும் தெளிவாகக் கூறுங்கள். நீங்கள் அவர்கள் பற்றி அறியாமலிருந்தால் பின்வரும் விடயத்தை சற்று கவனத்திற் கொண்டு செயல்படுங்கள்.
نقل الشّيخ أبو طاهر القزويني رحمه الله فى كتابه سراج العقول عن أحمد بن زاهر السَّرخسـي اَجَلِّ أصحابِ الشّيخ أبى الحسن الأشعريّ رحمه الله قال (لمّا حضـرتِ الشّيخَ أبا الحسن الوفاةُ فى داري بِبَغْدَادَ، قال لي اِجمعْ أصحابي، فجمعتُهم، فقال لنا ، اِشْهدُوا أنِّيْ لا أقولُ بِتَكْفِيْرِ أحدٍ من أهلِ القِبلة، لِأَنِّيْ رأيتُهم كلَّهم يشيرون إلى معبودٍ واحد، والإسلام يشملُهم ويعمُّهم،
(اليواقيت، ج أوّل، ص 21 )

பின்வரும் செய்தியை இமாம் அபூ தாஹிர் அல் கஸ்வீனி றஹிமஹுல்லாஹ் அவர்கள், தங்களுக்கு அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் மிக நெருங்கிய அஹ்மத் இப்னு சாஹிர் அஸ்ஸர்கஸீ என்பவர் சொன்னதாக கூறியுள்ளதாவது,

ஒரு நாள் பக்தாத் நகரிலுள்ள எனது வீட்டுக்கு இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ அவர்கள் வந்திருந்த போது அவர்களுக்கு “வபாத்” மரணம் நெருங்கி விட்டது. அப்போது என்னிடம் எனது தோழர்களை இங்கு ஒன்று கூட்டித்தாருங்கள் என்று சொன்னார்கள். நான் அவ்வாறு ஒன்று சேர்த்துக் கொடுத்தேன். அவர்கள் அவர்களிடம் (நீங்கள் அனைவரும் சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள். முஸ்லிம்களில் எவரையும் நான் காபிர், முர்தத் என்று சொல்லமாட்டேன். ஏனெனில் முஸ்லிம்கள் அனைவரும் வணங்கப்படுகின்றவன் ஒருவன் தான் என்ற நம்பிக்கையிலேயே இருக்கிறார்கள். இஸ்லாம் என்பது இவர்களையும் உள்வாங்கிக் கொள்ளும்.) என்று கூறினார்கள்.

இமாம் அவர்களின் நடவடிக்கை மூலம் அவர்கள் தங்களின் வாழ்நாளில் எந்த ஒரு முஸ்லிமையும் மதம் மாற்றவில்லை – மதம் மாறியவர் என்று சொல்லவுமில்லை என்பது தெளிவாகிறது. மரணப்படுக்கையில் இருந்த நேரத்தில் கூட இப்படியொரு ஏற்பாடு செய்து இந்தச் செய்தியை ஏன் சொன்னார்களென்றால் தனது மறைவுக்குப் பின் எந்த ஒரு முஸ்லிமும், எந்த ஒரு முஸ்லிமையும் காபிர், முர்தத் என்று சொல்லக் கூடாதென்பதை தங்களின் இறுதியுபதேசமாகச் சொல்வதற்கேயாகும்.

توبوا إلى الله توبة نصوحا قبل أن يأتيكم عزرائيل وقبلَ أن تسئلوا وتسجنوا وتعذبوا وتعاقبوا،
واعلموا أن الله على كل شيئ قدير، وأن الله أحكم الحاكمين، وأن الله خير الماكرين، وأن بطشه أشدّ من بطشي بكم، ولله در الشاعر حيث قال،
وسبعة لا يرد الله دعوتهم – مظلوم، والد، ذو صوم، وذو مرض، ودَعْوَةٌ لأَخٍ بالغيب، ثم نبي – لأمة ، ثمّ ذو حجّ بذاك قُضي،
وسبعة لا يرد الله دعوتهم – مظلوم، والد، ذو صوم، وذو مرض، ودَعْوَةٌ لأَخٍ بالغيب، ثم نبي – لأمة ، ثمّ ذو حجّ بذاك قُضي،

الشّيخ المُحَقِّقُ عبد الكريم الجيلي
மெய்யறிவின் ஒளிச்சுடர் அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ

عبد الكريم الجيلي واحد من كبار صوفية الإسلام وفلاسِفتِهم، ويعتبر الجيلي – الّذي كان مُعظمُ تراثة مخطوطا حتّى اليوم، وما طبع منه طبع بدون تحقيق مِن أهمّ المُعتبريّ عن النّظريّة الصوفيّة فى الفكر الإسلاميّ، لُقِّب بالجيلي نِسبة إلى جيلان، وهي منطقة فارسيّة، يَنتسبُ إليها الكثيرُ من رجال العلم والثقافة فى تاريخ الإسلام، وكان مولد الجيلي فى أوّل شهر محرّم سنة 767 هجريّة، لكنّه ما لَبِثَ أن رحل فى سنّ مُبكّرة لِيَسيح فى الأرض على طريقة صوفية عصره،

قضـى الجيليّ حياته فى السّفر والسّياحة، فزار الهند وبلاد فارس والعراق، ونزل مِصرَ وفلسطين والحجاز وأرض اليمن، وكانت وفاة الجيلي بمدينة ‘زُبيد ‘ ببلاد اليمن سنة 826 هجرية، وخلال سياحات الجيلي المستمرّة حصل الرجل الكثير من العلوم والمعارف، فأحاط بالتّراث اليُوناني وعرف أسرار اللّغات الهنديّة والفارسيّة والعربيّة، وألّف بكلّ هذه اللّغات، كما كان عالما بالحُروف وحِساب الجُمَل إلى جانب درايته الواسعة بالمذاهب والعقائد غيرِ الإسلاميّة، وبفنون المعارف الإسلاميّة كالفقه والتفسير،

أمّا عن تَصَوُّفِه فقد أخذ الطريق عن شيخه شرف الدين إسماعيل الجبرتي (المتوفّى سنة 806 هجريّة) الذي كان آنَذاك شيخا لصوفية اليمن، وقد كان الجبرتيّ فى أوّل أمره من أتباع الطريقة القادريّة، ثُمّ ما لَبِثَ أن كَوَّنَ مدرسة خاصّة على فكرِ محي الدين ابن عربي، فكان يدعو تلاميذَه ومُريدِيْه إلى قرائة مؤلّفات ابن عربي كالفتوحات المكّيّة وفصوص الحكم، ومِن هُنا ظهرت تلك الصِّلةُ القويّة بين عبد الكريم الجيلي وبين ابن عربي الّذي لقّبه الصوفيّة بالشّيخ الأكبر،

وقد ترك الجيلي العَديدَ من المؤلّفات غير قصيدة النّادرات،وكان أسلوبُه فى هذه المؤلّفات التي تَربو على الثلاثين مفعما بالرزيّة الشّديدة ولُغة الإشارة والتّلويح، ومن أشهر مؤلّفاته ‘ الإنسان الكامل فى معرفة الأواخر والأوائل ‘، الكمالات الإلهيّة، غُنية أرباب السماع، الكهف والرقيم، (تمهيد قصيدة النادرات العينيّة، ص 10 -11) تحقيق وتقديم يوسف زيدان، دار الجيلي،بيرورت

மெய்யறிவின் ஒளிச்சுடர் அஷ் ஷெய்கு அப்துல்கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள், ஈரான் நாட்டின் ஜீலான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மாகாணம் பட்டுக்கு மிகப் பிரசித்தி பெற்ற இடம்.

இங்குதான் காதிரிய்யா தரீகாவின் தாபகர் குத்புல் அக்தாப், அல் பாஸுல் அஷ்ஹப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பிறந்தார்கள்.

شَرَّفْتَ جِيْلَانَ بِالْمِيْلَادِ سَاكِنَهُ – عَظَّمْتَ بِالْقَبْرِ بَغْدَادًا أَمَاكِنَهُ
என்ற பாடல் அவர்கள் ஜீலான் நகரில் பிறந்து இறாக் – தலைநகர் பக்தாத் பட்டணத்தில் அடக்கம் பெற்றுள்ளார்கள் என்ற கருத்தை தருகின்றது. இலங்கையில் பலாங்கொடை என்ற ஊரிலிருந்து சுமார் 27.5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஜெய்லானீ என்று அழைக்கப்படுகின்ற ஊர்தான் பாடலில் கூறப்பட்ட ஜீலான் என்ற ஊராகும்.

இமாம் அப்துல் கரீம் அல் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பிரசித்தி பெற்ற தலை சிறந்த ஸூபீ மகான்களில் ஒருவரும், தத்துவ ஞானியுமாவார்கள். இவர்கள் எழுதிய பல நூல்கள் கையெழுத்துப் பிரதிகளாக பல நாடுகளிலுமுள்ள நூலகங்களில் உள்ளன. அவற்றில் அச்சிடப்பட்ட நூல்கள் யாவும் சரி பார்க்கப்பட்டவையாகும்.

இமாம் அவர்கள் பிரசித்தி பெற்ற ஸூபீ மகானாகவும், இஸ்லாமிய சிந்தனைச் சிற்பியாகவும் விளங்கினார்கள். இது ஒரு பாரசீக நாடு. இஸ்லாமிய வரலாற்றில் தலை சிறந்த ஞானமகான்களும், அறிஞர்களும் இங்கு தோன்றியுள்ளார்கள்.

ஜீலீ அவர்கள் ஹிஜ்ரீ 767ல் முஹர்றம் மாத முற்பகுதியில் “ஜீலான்” என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் பிறந்த ஊரில் அதிக காலம் வசிக்கவில்லை. இவர்களின் காலத்தில் வாழ்ந்த ஸூபீ மகான்களின் வழியால் கவரப்பட்டு சிறு வயதிலிருந்தே பல நாடுகளுக்கும் பயணிக்கலானார்கள்.

இந்தியா, பாரசீகம், இறாக், மிஸ்ர், பலஸ்தீன், ஹிஜாஸ், மற்றும் எமன் போன்ற நாடுகளில் அதிக காலத்தை கழித்துள்ளார்கள்.

இவர்கள் இறுதியாக எமன் நாட்டில் இருந்த காலத்தில் ஹிஜ்ரீ 826ல் “சுபைத்” என்ற ஊரில் “வபாத்” ஆனார்கள்.

இவர்கள் சுற்றுப் பயணத்தில் கழித்த நாட்களில் பல அறிஞர்களைச் சந்தித்து உறவாடியும், உரையாடியும் உள்ளார்கள். யூனானீ, பாரசீகம், ஹிந்தி, அறபு மொழி போன்றவற்றைக் கற்றுத் தேறினார்கள். பல கலைகளில், பல மொழிகளில் பல நூல்கள் எழுதியுள்ளார்கள். “தல்ஸமாத்” கலையோடு சம்பந்தப்பட்ட அறிவு ஞானங்களிலும் திறமை பெற்றிருந்தார்கள். இஸ்லாமிய சட்டக்கலை, திருக்குர்ஆன் விளக்கவுரை, மற்றும் ஏனைய மதக் கொள்கைகளையும் விளங்கியிருந்தார்கள்.

ஸூபிஸ ஞானக் குருவாக அஷ் ஷெய்கு ஷறபுத்தீன் இஸ்மாயீல் அல்ஜப்றதீ றஹிமஹுல்லாஹ் அவர்களைத் தெரிவு செய்து அவர்களின் “முரீத்” ஆனார்கள். ஜப்றதீ அவர்கள்தான் அக்காலத்தில் எமன் நாட்டில் தலை சிறந்த ஷெய்காக விளங்கினார்கள்.

ஷெய்கு ஜப்றதீ அவர்கள் ஆரம்பத்தில் காதிரிய்யா தரீகா வழியில் நடந்து பின்னர் ஷெய்குல் அக்பர் முஹ்யீத்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் சிந்தனை வழியில் “வஹ்ததுல் வுஜூத்” ஞான வழியில் இறங்கி தமது மாணவர்களுக்கு இப்னு அறபீ அவர்களின் ஞான வழியை கற்றுக் கொடுக்கலானார்கள்.

இவர்கள் எழுதிய நூல்களில் “அல்இன்ஸானுல் காமில்”, “அல்கமாலாதுல் இலாஹிய்யா”, “குன்யது அர்பாபிஸ்ஸமாயி”, “அல்கஹ்பு வர்றகீம்” போன்றவை மிகப் பிரசித்தி பெற்றவையாகும்.

قال الشّيخ عبد الكريم الجيلي صاحب ‘ الإنسان الكامل ‘ فى قصيدة ‘ النّادرات العينيّة ‘

وَمَا الْـخَلْقُ فِى التِّمْثَالِ إِلَّا كَـثَلْجَةٍ – وَأَنْتَ بِهَا الْمَاءُ الَّذِيْ هُوَ نَـابِــعُ
فَمَا الثَّلْجُ فِـى تَـحْقِيْقِنَا غَـيْرَ مَائِهِ – وَغَيْرَانِ فِى حُكْمٍ دَعَتْهُ الشَّرَائِعُ
وَلَكِنْ بِـذَوْبِ الثَّلْجِ يُرْفَعُ حُكْمُهُ – وَيُوْضَعُ حُكْمُ الْمَاءِ وَالْأَمْرُ وَاقِعُ
تَـجَـمَّعَتِ الْأَضْدَادُ فِى وَاحِدِ الْبَهَا – وَفِيْهِ تَلَاشَتْ فَهُوَ عَنْهُنَّ سَـاطِـعُ
(النّادرات العينية، ص – 75 للشيخ عبد الكريم الجيلي)

இமாம் அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “கஸீததுன்னாதிறாதில் ஐனிய்யா” என்ற நூலில் மேற்கண்ட பாடல்களை கூறியுள்ளார்கள். இவர்கள் “அல் இன்ஸானுல் காமில்” என்ற உலகப் பிரசித்தி பெற்ற மெய்ஞ்ஞான நூலை எழுதிய மா மேதை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடலடிகள் ஒவ்வொன்றும் “வஹ்ததுல் வுஜூத்” மெய்ப்பொருள் ஒன்றேதான் என்ற மெய் ஞானத்தை அப்பட்டமாகவும், மிகத் தெளிவாகவும் கூறுவது குறைந்தபட்ச அறிவுள்ளவர்களுக்குக் கூட தெளிவாக விளங்குமென்பதில் சந்தேகமே இல்லை. இந்த அளவு தெளிவாகக் கூறப்பட்ட பின்னும் யாராவதொருவன் இதை மறுத்தானாயின் அவன் நற்பாக்கியமிழந்தவனாகவே இருப்பான்.

சிருட்டிக்கு உதாரணம் ஐஸ் கட்டி போன்று. அதாவது சிருட்டி ஐஸ் கட்டி போன்றதாகும். சிருட்டிக்கு ஐஸ் கட்டி உதாரணமாகும்.

அதிலுள்ள நீர் சிருட்டி கர்த்தாவான இறைவனுக்கு உதாரணமாகும்.

எங்களின் சரியான, வடித்தெடுத்த கொள்கை ஐஸ்கட்டியும், நீரும் ஒன்றென்பதேயாகும். ஆயினும் அவ்விரண்டும் “ஷரீஆ”வின் வெளிப்படையான பார்வையில் ஒன்று மற்றதற்கு வேறானதாகும்.

எனினும் ஐஸ் கட்டி கரைந்தால் ஐஸ்கட்டி என்ற பெயர் இல்லாமற் போய் நீர் என்ற பெயர் அதற்கு வந்து விடும்.

ஒன்றுக்கொன்று எதிரானவை அல்லாஹ்வில் ஒன்று சேர்ந்துவிட்டன.

(அந்நதிறாதுல் ஐனிய்யா, பக்கம் – 75, ஆசிரியர் – அப்துல் கரீம் அல்ஜீலீ)

இந்நூலை எழுதிய அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் வேறு ஞான நூல்களும் எழுதியுள்ளார்கள். அவற்றில் உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற நூல் இதுவும், “அல் இன்ஸானுல் காமில்” என்ற நூலுமாகும். இவ் இரு நூல்களிலும் இறைஞானத்தின் உச்ச கட்ட கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவர்கள் எழுதிய எந்த ஒரு நூலையும் உலகில் எவரும் எதிர்த்ததற்கு ஓர் ஆதாரத்தைக் கூட நான் காணவில்லை. இஸ்லாமிய வரலாற்றில் மெய்யறிவின் ஒளிச் சுடர்களாக விளங்கிய மா மேதைகள் அனைவரும் இந்நூலை இறைஞானக் கலைக்கு ஆதாரமாக எடுத்துப் பேசுகிறார்கள்.

இந்த மகான் சிருட்டியும், சிருட்டி கர்த்தாவும் ஒன்றேதான். அது வேறு, இது வேறு என்பதல்ல என்று கூறியுள்ளார்கள். இதோடு فِى تَحْقِيْقِنَا என்ற ஒரு சொல்லையும் இணைத்துள்ளார்கள்.

இச் சொல் علم التصوّف ஸூபிஸ ஞானிகள் என்ற இஸ்லாமிய ஸூபிஸத்தை திட்டமாக அறிந்தவர்கள் என்ற கருத்தை தரும். அதாவது சிருட்டியும், சிருட்டி கர்த்தாவும் ஒன்று என்பதில் ஸூபிஸ ஞானிகளிடம் எந்த ஒரு கருத்து வேறுபாடுமில்லை.

قال الشّيخ عبد الكريم الجيلي صاحب ” الإنسان الكامل “ فى قصيدة ” النّادرات العينيّة “

وَمَا الْـخَلْقُ فِى التِّمْثَالِ إِلَّا كَـثَلْجَةٍ – وَأَنْتَ بِهَا الْمَاءُ الَّذِيْ هُوَ نَـابِــعُ
وَمَا الثَّلْجُ فِـى تَـحْقِيْقِنَا غَـيْرَ مَائِهِ – وَغَيْرَانِ فِى حُكْمٍ دَعَتْهُ الشَّرَائِعُ
وَلَكِنْ بِـذَوْبِ الثَّلْجِ يُرْفَعُ حُكْمُهُ – وَيُوْضَعُ حُكْمُ الْمَاءِ وَالْأَمْرُ وَاقِعُ
تَـجَـمَّعَتِ الْأَضْدَادُ فِى وَاحِدِ الْبَهَا – وَفِيْهِ تَلَاشَتْ فَهُوَ عَنْهُنَّ سَـاطِـعُ
(النّادرات العينية، ص – 75 للشيخ عبد الكريم الجيلي)
அஷ் ஷெய்கு அப்துல் கரீம் ஜீலீ அவர்கள் மேற்கண்ட பாடலில் கூறியுள்ள கருத்தை சுருக்கமாக எழுதுகிறேன்.

மகான் ஜீலீ அவர்கள் படைப்புக்கு ஐஸ் கட்டியையும், படைத்தவனான இறைவனுக்கு நீரையும் உதாரணமாக கூறியுள்ளார்கள்.

“பதினெண்ணாயிரம் உலகம் அல்லது பதின் நான்காயிரம் “ஆலம்”கள் – உலகங்கள் பரந்து விரிந்து வியாபித்திருப்பது போல் வியாபித்துள்ள இறைஞானம்” பற்றிச் சற்று ஆய்வு செய்து பார்ப்போம்.

நமது கண்ணுக்கு ஐஸ்கட்டியாகத் தோற்றுவது எதார்த்தத்தில் ஐஸ் கட்டியல்ல. எதார்த்தத்தில் அது நீர்தான். இது மறுக்க முடியாத உண்மை. இவ்வாறு சொல்வது பொய்யாகுமா? அல்லது இதை யாராவது பொய்யென்று சொல்வானா?

ஜீலீ அவர்கள் படைப்புக்கும், இறைவனுக்கும் இவ்வாறு உதாரணம் சொல்லியுள்ளார்கள். அதாவது ஐஸ் கட்டியாக கண்ணுக்குத் தெரிவது நீரேயன்றி வேறொன்றல்ல. இதன்மூலம் இருப்பது நீர் மட்டும்தான். ஐஸ் கட்டியல்ல என்பது நிரூபணமாகின்றது.

இதன் சுருக்கம் படைப்பாகத் தெரிவது படைப்பு அல்ல. இறைவனின் “வுஜூத்” உள்ளமைதான். அதாவது இறைவன்தான் படைப்பாகத் தோற்றுகின்றான் என்பதாகும். இதை இன்னும் விளக்கமாகச் சொல்வதாயின் ஐஸ் கட்டியாகத் தெரிவது நீரேயன்றி வேறொன்றில்லாதது போல் சிருட்டியாகத் தெரிவது இறைவனேயன்றி வேறொன்றில்லை என்பதாகும்.

இந்தச் சாராம்சத்தை மக்களுக்குச் சொல்லி அல்லாஹ் என்பவன்தான் படைப்பாக வெளியாகிக் காட்சியளிக்கின்றான் என்ற உண்மைத் தத்துவத்தை உணர்த்துவதற்காகவே நீரையும், ஐஸ்கட்டியையும் உதாரணமாகக் கூறியுள்ளார்கள் இமாம் ஜீலீ அவர்கள். சாதாரண நீர் உறைந்து கட்டியாகி வேறொரு தோற்றத்தைப் பெறும் போது அது ஐஸ் கட்டி என்ற பெயரைப் பெறுகிறது. அதேபோல் சாதாரண நீரின் தன்மையும் மாறி கடுங்குளிராகிவிடுகின்றது. நீர் ஐஸ் கட்டியான பின் அதை நீரென்று எவரும் சொல்வதில்லை. அதேபோல் ஐஸ் கட்டி நீருக்கு வேறான ஒன்றென்றும் எவரும் சொல்வதில்லை. ஐஸ் கட்டி கரைந்தால் அது தனது பழைய நிலையான நீராகிவிடுகின்றது. இதேபோல் ஐஸ் கட்டியாக இருக்கும் வரை அதற்கு ஐஸ்கட்டி என்ற பெயர் சொல்ல வேண்டும். நீரென்று சொல்ல முடியாது.

இவ்வாறுதான் படைப்பும், படைத்த இறைவனும் என்கிறார்கள் இமாம் ஜீலீ அவர்கள். படைப்பு படைப்பாக இருக்கும் வரை அதைப் படைப்பென்றே சொல்ல வேண்டும். இறைவன் என்று சொல்ல முடியாது. ஆயினும் ஐஸ் கட்டி நீருக்கு வேறாகாத, அது தானானதாயிருப்பது போல் படைப்பும் இறைவனுக்கு வேறாகாத, அவன் தானானதென்று விளங்கி நம்ப வேண்டும். சொல்லத் தேவையில்லை. சொல்லவும் கூடாது. ஆயினும் இவ்வாறே விளங்குதலும், நம்புதலும் வேண்டும். இதுவே சரியான ஈமான் – நம்பிக்கையாகும். இதுவே எதார்த்தமுமாகும். எது எதார்த்தமோ அதை எதார்த்தமென்று நம்புவதே மெய்யான நம்பிக்கையாகும். பொய்யை மெய்யென்று நம்புதல் பொய்தான்.

நீரானது தன்னை நீராகக் காட்டாமல் நீருக்கு வேறான ஒன்றாக – ஐஸ் கட்டியாக – காட்டுவதையே ஏமாற்றுதல் என்று சொல்லப்படும். ஏமாற்றுதல் என்பது ஒரு வஸ்த்து எதுவோ அதை அவ்வஸ்த்துவாகக் காட்டாமல் வேறொரு வஸ்த்தாக காட்டுதல்தான் ஏமாற்றுதல் என்று சொல்லப்படும்.

உதாரணமாக ஐஸ் கட்டி போன்று. உண்மையில் – எதார்த்தத்தில் ஐஸ் கட்டி என்பது நீர்தான். அது நீருக்கு வேறான ஒன்றல்ல. ஆயினும் அது தன்னை நீராகக் காட்டாமல் எதார்த்தத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுகிறது. இங்கு ஐஸ் கட்டி மனிதனை ஏமாற்றுகிறது. எமது கண்களும், “அக்ல்” என்ற எமது புத்தியுமே எம்மை ஏமாற்றுகிறது. நாம் ஏமாந்து போகிறோம்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் وَغَرَّتْكُمُ الْحَيَاةُ الدُّنْيَا உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட்டதென்று கூறியுள்ளான். திருக்குர்ஆன் (45- 35)

உலக வாழ்க்கை யாரை? எப்போது? ஏமாற்றியது என்று ஆய்வு செய்தால் இவ்வுண்மை தெளிவாகும். வெளியாகும். இவ்வுலகு எதார்த்தத்தில் இறைவனாக இருக்கும் நிலையில் உலகம் தன்னை அவனுக்கு வேறான வேறொன்றாக காட்டுகின்றதல்லவா? அதுவே ஏமாற்றுதலாகும்.

எதார்த்தத்தில் துணி என்பது பஞ்சுதான். ஆனால் அது பஞ்சென்று தன்னைக் காட்டாமல் துணியாகக் காட்டுகின்றது. இது ஏமாற்றுதான். நகை என்பது தங்கம்தான். ஆனால் அது தன்னைத் தங்கமென்று காட்டாமல் நகையாக காட்டுகின்றது. இதுவும் ஏமாற்றுதான்.

ஒருவன் கல்லால் நாயின் உருவத்தைச் செய்து தனது மேசையில் வைத்துள்ளான். அதை ஒருவன் கல்லாகப் பார்த்தால் அவனுக்கு நாய் தெரியாது. அதை நாயாகப் பார்த்தால் கல் தெரியாது. இதையே “நாயைக் கண்டால் கல்லைக் காணவில்லை. கல்லைக் கண்டால் நாயைக் காணவில்லை” என்று சொல்வார்கள்.

மேற்கண்ட பாடல் மூலம் மகான் ஜீலீ அவர்கள் இறை ஞானத்தை, இறை ஞான தத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அனைவரும் விளங்கும் வகையில் சாதாரண உதாரணம் மூலம் தெளிவு படுத்தியுள்ளார்கள். இவர்கள் மட்டும் இவ்வாறு சொல்லவில்லை. இவர்கள் போல் ஞானமகான்களிற் பலர் சொல்லியுள்ளார்கள். அவர்களின் பாடல்களும், அவற்றுக்கான விளக்கங்களும் தொடர்ந்து பதிவு செய்யப்படும்.

இமாம் ஜீலீ அவர்களின் நாலடிகளைக் கொண்ட பாடலில் மூன்று அடிகளிலும் நீரும், ஐஸ் கட்டியும் என்பது தொடர்பான விளக்கத்தை முடித்துவிட்டு تَجَمَّعَتِ الْأَضْدَادُ என்று தொடங்கும் நாலாவது அடியில் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பான விளக்கமொன்று கூறியுள்ளார்கள். அதாவது எதிர்ச் சொற்கள் இரண்டு ஒருவனில் அல்லது ஒரு வஸ்த்தில் ஒன்று சேர்வதில்லை. அது அசாத்தியமானதாகும். இதை ஸூபீ மகான்கள் اِجْتِمَاعُ الضِّدَّيْنِ مُحَالٌ ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு ஒன்று சேர்வது அசாத்தியம் என்று சொல்வார்கள். இது ஸூபீ மகான்களிடம் மட்டுமன்றி பொதுவான கண்ணோட்டத்திலும் பிழைதான். ஆயினும் இது அல்லாஹ்வின் விடயத்தில் நிச்சயமாக சாத்தியமானதாகும் பகல் இரவு, ஆண் பெண், கட்டை நெட்டை என்பன போன்று. பகல் அல்லது இரவு என்றும், ஆண் அல்லது பெண், கட்டை அல்லது நெட்டை என்றுதான் சொல்ல முடியும். பகலும்தான் இரவும்தான் என்றும், ஆணும்தான் பெண்ணும்தான் என்றும், கட்டையும்தான் நெட்டையும்தான் என்று சொல்ல முடியாது. எனினும் இறைவனில் மட்டும் எதிரான இரு சொற்கள் ஒன்று சேர முடியும்.

هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே! திருக்குர்ஆன் (57-03)

இறைவன் ஒரே நேரத்தில் முந்தினவனாகவும், பிந்தினவனாகவும், அதேபோல் ஒரே நேரத்தில் வெளியானவனாயும், உள்ளானவனாயும் உள்ளான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

ஒருவன் ஒரே நேரத்தில் முந்தினவனாயும், பிந்தினவனாயும் இருப்பதும், ஒரே வஸ்த்து ஒரே நேரத்தில் உள்ளானதாயும், வெளியானதாயும் இருப்பதும் அசாத்தியமானதாகும். இவ்வாறு அசாத்தியமான ஒன்று இறைவனில் எவ்வாறு சாத்தியமாகும்?

இத்திரு வசனத்திற்கு விளக்கம் சொன்ன, தப்லீக் அமைப்பின் அமீர்களில் ஒருவர் பின்வருமாறு கூறினாராம். அவரின் பெயர் ஆதிபிதாவை நினைவுபடுத்தும்.

படைப்புகளைப் படைப்பதற்கு முன் அல்லாஹ் மட்டுமே இருந்தான். ஆகையால் அவன் முந்தினவன், படைப்புகள் யாவும் அழிந்த பின் அவன் மட்டுமே எஞ்சியிருப்பான் ஆகையால் அவன் பிந்தினவன் என்று விளக்கம் சொன்ன அமீர் ஸாஹிபு தனது உள்ளங்கையை பொத்திக் காட்டி இப்போது உள்ளங்கை மறைந்துள்ளது. அதை விரித்துக் காட்டி இப்போது உள்ளங்கை வெளியாகிவிட்டது என்று விளக்கம் கொடுத்தாராம். அவரைச் சுற்றியிருந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஜமாஅத்தார்கள் ஸுப்ஹானல்லாஹ்! என்று சத்தமிட்டார்களாம். இன்னொருவர் அழுது கண்ணீர் வடித்தாராம். இத்தகைய மகான்களும் உலகில் வாழத்தான் செய்கிறார்கள்! سبحان الله “வஹ்ததுல் வுஜூத்” அடிப்படையில் அனைத்துப் படைப்புக்களும் அவனே என்றால் எந்தவொரு போட்டியிலும் யார் முந்தினாலும், யார் பிந்தினாலும் எதார்த்தத்தில் முந்தினவனும், பிந்தினவனும் அவனேதான். இதேபோல் கண்ணுக்குத் தெரிபவைகளும், தெரியாதவைகளும் அவனேதான்.

(அமீர் ஸாஹிபுவின் விளக்கத்திலிருந்து எமது பதிவு தொடரும். அவருக்கு “வாவு”க்கும், “அவ்”வுக்குமிடையிலுள்ள வேறுபாடு தொடர்பாக பாடம் நடத்த வேண்டும்)

“ஐனிய்யா – ஙெய்ரிய்யா” என்ற தலைப்பில் இறுதியாக இமாம் அப்துல் கரீம் அல் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் நாலடிப் பாடலுக்கு விளக்கம் எழுதினேன்.

ஜீலீ அவர்களின் பாடல் தந்த அதே தத்துவத்தை தமிழ்நாடு காயல் நகரில் சமாதி கொண்டுள்ள சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் உமர் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் அழகிய பாடலொன்றில் அள்ளிக் குவித்துள்ளார்கள்.

முதலில் காயல் பதி பற்றியும், காமில் வலீ உமர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றியும் சில வரிகள் எழுதிய பின் அவர்களின் பாடலுக்கு விளக்கம் எழுதுகிறேன்.

காயல்பட்டினம்

சுமார் நூறாண்டுகளுக்கு முன் காயல் பட்டினம், காமில் வலீமார் நிறைந்த பட்டினமாக இருந்தது. தரமான “ஸுன்னீ” உலமாஉகளும் அங்கு நிறைந்திருந்தனர். வஹ்ஹாபிஸம் ஒரு துளி கூட அங்கு இருக்கவில்லை. தமிழகத்திற்கு காயல்பட்டினம்: இலங்கைக்கு காத்தான்குடி என்று முதியவர்கள் சொல்வார்கள். வீட்டுக்கு ஒரு ஹாபிளும், வீட்டுக்கு ஓர் ஆலிமும் இருந்தனர். அன்று காயல் நகரைப் பார்த்த போது இரண்டு கண்களும், உள்ளமும் ஒன்றுசேர்ந்து குளிர்ந்தன. ஆனால் இன்று வஹ்ஹாபிஸத்தின் தலையீட்டால் ஒரு கண் மட்டுமே குளிர்கிறது.

1940ம் ஆண்டளவில் எனது தந்தை காயல் நகரில் ஓதிக் கொண்டிருந்த காலம் அவர்களிடம் இரண்டு கைலிகள் மட்டுமே இருந்ததாம். அவ்விரண்டையும் மாறி மாறி உடுத்தும், கழுவியும் வந்ததால் அவை பன்னாடை போலாகிவிட்டதாம்.

ஒரு நாள் காயல் நகர் கடைத் தெருவால் என் தந்தை நடந்து செல்கையில் அவர்களை அவதானித்த புத்தகக் கடைக்காரர் ஒருவர் அவர்களை அழைத்து சுக செய்திகளையும், ஊரையும் விசாரித்து விட்டு உன்னிடம் எத்தனை கைலிகள் உண்டு என்று கேட்டாராம். இரண்டு என்று சொன்னவுடன் சற்றுக் கண் கலங்கியவராக நாளை இதே நேரம் இங்கு வா என்று சொன்னாராம். மறுநாள் போனதும் இரண்டு புதிய கைலிகள் அன்பளிப்பாகக் கொடுத்தாராம். அக் காலை காயல் நகரில் இப்படியான நல்ல மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள். இதுவும் ஓர் ஆதாரம்தான். رحم الله ذلك الرجل ونسله وأسباطه وأسباط أسباطه

உமர் வலீ

உமர் வலிய்யுல்லாஹ் அவர்கள் காயல்பட்டினத்தில் ஹிஜ்ரீ 1162ல் பிறந்தார்கள். ஹிஜ்ரீ 1216ல் துல்கஃதா பிறை 14 வெள்ளிக்கிழமை மாலை தனது 53வது வயதில் “வபாத்” ஆனார்கள். அவர்கள் மறைந்து 225 வருடங்களாகிவிட்டன.

இவர்கள் மூன்று மகான்களிடம் “பைஅத்” ஞான தீட்சை பெற்றிருந்தார்கள். இறுதியாக கேரளா மாநிலத்தில் மிகப் பிரசித்தி பெற்றிருந்த “குத்பு” ஸெய்யித் முஹம்மத் புகாரீ தங்கள் அவர்களிடம் “பைஅத்” பெற்றுக் கொண்டார்கள். இவர்களுக்கு ஆறு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர்.

புகாரீ தங்கள் காயல்பட்டினம் வந்திருந்த சமயம் இவர்கள் தம் மூத்த மகன் அப்துல் காதிரை அவர்களிடம் அழைத்துச் சென்ற போது அவர்கள் அப்துல் காதிரின் தலையைத் தடவி வாழ்த்தி, தம் நாவை அவர்களின் வாயில் நுழைத்தனர் என்றும், அவர் அதைச் சுவைப்பது கண்டு “உம் மக்கள் அனைவரும் வலீமார்கள் ஆகாது இறக்கமாட்டார்கள்” என்று இவர்களிடம் அவர்கள் கூறினார்கள் என்றும் வரலாறு கூறுகிறது. பிற்காலத்தில் தைக்கா ஸாஹிபு வலீ என்று புகழ் பெற்றிருந்த அப்துல் காதிர் அவர்கள் கால் நடையாக கண்ணனூர் சென்று ஸெய்யித் முஹம்மத் புகாரீ தங்கள் அவர்களின் அடக்கவிடத்தை தரிசித்து வந்தனர்.

உமர் வலீ அவர்கள் இயற்றிய إِلَهِيْ كَمْ تُبَقِّيْنِيْ – “இலாஹீ கம் துபக்கீனீ” என்ற பாடலை பல ஆண்டுகள் கழித்து ஒரு நாள் அவர்களின் மகன் ஸெய்யித் முஹம்மத் அவர்கள் தலைமையில் “தைக்கா”வில் “திக்ர்” நடைபெற்ற போது இக்கவியில் ஐந்தாவது கண்ணியான فَأَيْنَ أَنَا إِذَا أَنْتَا – “பஐன அன இதா அந்த” என்பது மறந்து போய்விடவே உடனே இவர்கள் தம் “கப்றில்” இருந்து சத்தமிட்டு மகனை அழைத்து மறந்துபோன “பைத்தை” நினைவூட்டினார்கள்.

மெய்ஞ்ஞானிகள் இக்கவிதை தொகுப்பை “மஃரிபா” என்னும் இறைஞானத்தின் மாசற்ற இரத்தினம் என்று போற்றுகின்றார்கள்.

உமர் வலீ அவர்களின் பாடல்

அவர்களின் 10 அடிப் பாடல்களில் 4, 5, 6ம் பாடல்களையும், அவற்றின் விளக்கத்தையும் இங்கு எழுதுகிறேன்.

إِلَـهِي الْـخَلْقُ فِى التِّمْثَالْ – بِثَلْـجٍ يُضْرَبُ الْأَمْثَالْ
فَثَـلْـجٌ مَـا لَـدَى الْأَمْثَالْ – بِـكُلِّ الْـحَـالِ يَـا اَلله
إِلَهِي الْخَلْقُ مِثْلُ حَبَابْ – عَلَا مَاءً لَدَى الْأَحْـبَابْ
فَمَاءٌ فِـى الْـفَـنَـاءِ حَبَابْ – وَحَـالَ بَـقَـاهُ يَـا اَلله
فَــأَيْـنَ أَنَـا إِذَا أَنْــتَـا – بِـذَاتِـيْ دَائِــمًـا كُـنْـتَـا
فَـمَـا بِـنْـتُ وَلَا بِــنْـتَـا – وَلَا تَـا بَــيْـنَــنَـا اَلله

பாடலின் சுருக்கம்

இறைவா! படைப்புக்கு உதாரணம் ஐஸ் கட்டி போன்றதாகும். ஐஸ்கட்டி என்பது நீரேதான்.
இறைவா! படைப்பு நீரின் மேல் உயர்ந்து நிற்கும் குமிழி போன்றதாகும். குமிழி இல்லாமற் போனால் அது நீரேதான்.

நீ என் “தாத்”தில் – என்னில் இருக்கும் போது நான் எங்கே? நான் இல்லையே! நீதானே! நான் உன்னைப் பிரியவுமில்லை. நீ என்னைப் பிரியவுமில்லை.

பாடலின் விளக்கம்

முதலாம் பாடலில் இமாம் அப்துல் கரீம் ஜீலீ அவர்கள் கூறிய உதாரணத்தையே உமர் வலீ அவர்களும் கூறியுள்ளார்கள்.

படைப்புக்கு ஐஸ் கட்டியையும், இறைவனுக்கு நீரையும் உதாரணமாகச் சொல்கின்றார்கள் என்று மட்டும் சொல்வதால் எந்த ஒரு தத்துவத்தையும் எம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஏன் சொன்னார்கள்? எந்த வகையில் அந்த உதாரணம் பொருந்தும் என்பதை ஆய்வு செய்து, சிந்தனைக்கெடுத்து ஆராய்ந்துணர வேண்டும்.

ஐஸ்கட்டி என்பது பெயரிலும், பார்வையிலும், தோற்றத்திலும் உள்ளதேயன்றி எதார்த்தத்தில் ஐஸ்கட்டியென்று ஒன்றில்லை. சுருங்கச் சொன்னால் ஐஸ்கட்டியென்பது நீரின் தோற்றமேயாகும். நீர் உறைந்தால் – இறுகினால் அதே நீர் வேறோர் தோற்றத்தைப் பெறும். அத்தோற்றமுள்ள நீர் ஐஸ்கட்டி என்ற பெயரால் அழைக்கப்படும். ஐஸ்கட்டி என்பது நீருக்கு வேறான ஒன்றல்ல. ஐஸ்கட்டியாயிருக்கும் போதும் அது நீர்தான். அது கரைந்த பிறகும் அது நீரேதான்.

இறைவனுக்கு நீரையும், படைப்புக்கு ஐஸ் கட்டியையும் உதாரணமாகக் கொண்டு ஆய்வு செய்தால் நீர் ஐஸ் கட்டியானது போல் மெய்ப் பொருளான இறைவன்தான் படைப்பாக வெளியாகியுள்ளான், படைப்பாகத் தோற்றுகிறான். ஐஸ்கட்டி நீருக்கு வேறாகாத, நீர் தானானதாயிருப்பது போல் படைப்பு என்பதும் இறைவனுக்கு வேறாகாத, இறைவனின் “வுஜூத்” உள்ளமை தானானதாகவே உள்ளது. ஐஸ்கட்டி நீர்தான் என்று சொல்ல முடியுமாயின் படைப்பு இறைவன்தான் என்று ஏன் சொல்ல முடியாது?

இதேபோல் இறைவனுக்கு நீரையும், படைப்புக்கு நீரின் மேல் எழக்கூடிய குமிழியையும் உதாரணமாகக் கொண்டு ஆய்வு செய்தால் நீர் குமிழியானதுபோல் மெய்ப் பொருளான இறைவன்தான் படைப்பாக வெளியாகியுள்ளான், படைப்பாக தோற்றுகிறான், குமிழி நீருக்கு வேறாகாத, நீர் தானானதாயிருப்பது போல் படைப்பு என்பதும் இறைவனுக்கு வேறாகாத, இறைவனின் “வுஜூத்” உள்ளமை தானானதாகவே உள்ளது. குமிழி நீர்தான் என்று சொல்ல முடியுமாயின் படைப்பு இறைவன்தான் என்று ஏன் சொல்ல முடியாது?

இறைவா! فَأَيْنَ أَنَا إِذَا أَنْتَا – بِذَاتِيْ دَائِمًا كُنْتَا நீயே என்னாக இருக்கும் நிலையில் நான் இருப்பது எங்கே? நான் உன்னை விட்டும் பிரியவுமில்லை, நீ என்னை விட்டும் பிரியவுமில்லை. இறைவா! நமக்கிடையில் “தே” என்பதில்லை. أَنْتَ – “அன்த” என்றால் நீ. “தே”என்பதை நீக்கினால் أَنْتَ என்பது أَنَا என்றாகிவிடும்.

உமர் வலீ அவர்கள் இறைவனை முன்நிலைப்படுத்தி நீயே என்னாக இருக்கும் நிலையில் நான் எவ்வாறு இருப்பது? என்று கேட்கிறார்கள்.

இரண்டு வஸ்த்துக்கள் இருந்தால்தான் ஒன்று மற்றதை விட்டும் பிரிதல் என்ற பேச்சுக்கு இடமுண்டு. ஒரேயொரு வஸ்த்து எவ்வாறு பிரிவது?

وَلَا تَا بَيْنَنَا اَلله என்ற இந்தப் பாடல் அடிக்கே மேற்கண்டவாறு நான் விபரம் எழுதினேன். சுமார் 35 – 40 வருடங்களுக்கு முன் நான் ஓர் இந்திய இறைஞானியைக் கண்டேன். அவ்வேளை என்னுடன் மர்ஹூம் மௌலவீ MSM பாறூக் அவர்களும் இருந்தார்கள். குறித்த ஞானி وَلَا تَا بَيْنَنَا اَلله என்ற வசனத்திற்கு நான் மேலே எழுதிக் காட்டிய பொருளை ஏற்றுக் கொண்டதுடன் அதற்கு இன்னுமொரு விளக்கம் உண்டு என்று கூறி அந்த விளக்கத்தையும் தெளிவாகச் சொன்னார். அதை நான் மறந்து விட்டேன். கேட்டறிய சொன்னவருமில்லை. என்னுடன் கேட்டவருமில்லை. நான் கூறிய விளக்கம் தவிர வேறு விளக்கம் தெரிந்தவர்கள் எமக்கு அறிவித்தால் பெரிய உதவியாக இருக்கும்.

கடந்த பதிவொன்றில் அல் இமாம் அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இறைவனுக்கு நீரையும், படைப்புக்கு ஐஸ் கட்டியையும் உதாரணமாகக் காட்டிப் பாடிய பாடலைக் குறிப்பிட்டிருந்தேன்.

وَمَا الْخَلْقُ فِى التِّمْثَالِ إِلَّا كَثَلْجَةٍ – وَأَنْتَ بِهَا الْمَاءُ الَّذِيْ هُوَ نَابِعُ

இதன் தொடரைக் கடந்த பதிவுகளில் காணலாம்.

இவ்வாறு உதாரணம் கூறி படைப்பும், படைத்தவனும் ஒன்றுதான் என்று கூறிய “இன்ஸான் காமில்” ஆசிரியர் அப்துல் கரீம் அல்ஜீலீ அவர்கள் ஹிஜ்ரீ 767ல் வாழ்ந்தவர்கள்.

இவர்கள் போலவே நீரையும், ஐஸ்கட்டியையும் படைத்தவனுக்கும், படைப்புக்கும் உதாரணமாகக் கூறிய உமர் வலீ அவர்கள் ஹிஜ்ரீ 1162ல் வாழ்ந்தவர்கள். இருவருக்குமிடையில் சுமார் 395 வருடங்கள் வித்தியாசமுள்ளன.

இவர்கள் இருவர் மட்டும்தான் இவ்வாறு உதாரணம் காட்டித் தெளிவு படுத்தினவர்கள் என்று எவரும் நினைத்துவிடக் கூடாது. இன்னும் பல மகான்கள் பல்வேறு உதாரணங்கள் மூலம் படைத்தவனையும், படைப்பையும் விளங்கப்படுத்தியுள்ளார்கள்.

“வஹ்ததுல் வுஜூத்” “குப்ர்” அல்லது “ஷிர்க்” என்று கூறுபவர்களும், அது பிழையென்று நிறுவ கொழும்பில் மாநாடு நடத்த திட்டமிடுபவர்களும் வஹ்ஹாபிகளை விடக் கேவலமானவர்களாவர். அவர்கள் புகாரீ என்ற நூலில் “ழயீப்” பலம் குறைந்த ஹதீதுகளும் உள்ளன என்று ஒவ்வொரு ஹதீதாகத் தூக்கியெறிந்து இறுதியில் புகாரியையே தூக்கியெறிந்துவிடுவார்கள். ஆனால் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை “குப்ர்” என்று கூறும் குறை குருடர்கள் ஞானமகான்களில் ஒவ்வொருவராகத் தூக்கியெறிந்து இறுதியில் ஒரு ஞானியுமில்லை, ஒரு வலீயுமில்லை என்று சொல்லிவிடுவார்கள் போல் தெரிகிறது.

இவர்கள் கொழும்பில் மாநாடு நடத்தினால் என்ன? கொலாலம்பூரில் நடத்தினால் என்ன? இவர்கள் வழங்கிய “பத்வா”வை விடவும் பெரிய மாநாடா நடத்தப் போகின்றார்கள்? “பத்வா”வை விடப் பெரிய ஆயுதம் என்ன இருக்கிறது? அதுவே செயலிழந்து செருப்பு துடைக்கும் கடதாசியாகிவிட்டதே! முதன் முதலாக மாநாடு நடத்திய மகானே இன்று கப்றுக்குள் மண்ணுடன் மண்ணாகிக் கிடக்கிறாரே! அவர் இவருக்கு ஒரு பாடமாக அமையவில்லையா? இவர்கள் “பர்தா” போடவேண்டியவர்களேயாவர்.

قال الشاعر:
إِنَّ قَوْمِيْ تَجَمَّعُوْا – وَبِقَتْلِيْ تَحَدَّثُوْا
لَا أُبَالِيْ بِجَمْعِهِمْ – وَكُلُّ جَمْعٍ مُؤَنَّثٌ

ஹைதறாபாத் “குத்பு” சென்னை வருகை

ஹைதறாபாத் “குத்பு” ஒருவர் இருந்தார்கள். இவர்கள் இமாமுல் ஆரிபீன், ஸுல்தானுல் வாயிளீன், பஹ்றுல் ஹகாயிக் வத்தகாயிக், றயீஸுல் மாஜாதீப் என்னும் சிறப்புப் பெயர்களால் அக்கால மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்கள். இவர்களின் இயற் பெயர் அஷ் ஷாஹ் முஹம்மத் அப்துல் காதிர் ஸூபீ என்பதாகும்.

இப்படியொரு மகான் ஹைதறாபாதில் இருப்பதாக அறிந்த தமிழ் நாட்டு உலமாஉகளிற் பலர் அவர்களை சென்னைக்கு அழைக்க ஏற்பாடு செய்தார்கள். அக்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த உலமாஉகளில் அப்துல் ஜப்பார் ஹழ்றத் என்பவர் மிகப் பிரசித்தி பெற்ற ஒருவராக இருந்ததால் அவரின் தலைமையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

குத்புல் ஹைதறாபாத் சென்னைக்கு வந்துவிட்டார்கள். சில நாட்கள் மட்டும் தங்கியிருந்தார்கள். அவர்களைச் சந்திப்பதற்கு உலமாஉகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். தலைமை தாங்கிய அப்துல் ஜப்பார் ஹழ்றத் அவர்களுக்கு ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய ஒரு பாடலுக்கு குத்பு அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டுமென்ற விருப்பம் நெடுநாளாக இருந்து வந்தது. அவர்களின் தலைமையில் உலமாஉகளில் ஒரு குழு சேர்ந்து விளக்கம் கேட்டார்கள்.

குத்பு அவர்கள், நான் விளக்கம் சொல்வதைவிட அதை சிறிய அளவிலான “கிதாப்” நூலாக எழுதித் தந்தால் பலர் பயன்பெற வாய்ப்புண்டு என்று கூறி ஒரு வாரத்திற்குள்ளாக எழுதிக் கொடுத்தார்கள்.

அந்தப் பாடலுக்கு சுருக்கமாக விளக்கம் எழுதுகின்றேன்.

إِنَّمَا الْكَوْنُ خَيَالٌ – وَهُوَ حَقٌّ فِى الْحَقِيْقَةِ
كُلُّ مَنْ يَعْرِفُ هَذَا – حَازَ أَسْرَارَ الطَّرِيْقَةِ

விளக்கம் :

“அல் கவ்ன்” என்பது படைப்புக்கள் யாவையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாகும். படைப்புக்கள் யாவும் “கயால்” என்று கூறியுள்ளார்கள். இச் சொல்லுக்கு பின்வருமாறு விளக்கம் எழுதியுள்ளார்கள் “குத்பு” அவர்கள்.

كُلُّ مُا يُرَى وَلَا يُوْجَدُ فِى الْخَارِجِ بِالذَّاتِ فَهُوَ خَيَالٌ

கண்ணால் பார்க்கப்படக் கூடிய, ஆனால் எதார்த்தத்தில் கண்ணால் பார்க்கப்படுகின்ற வஸ்த்தாக இல்லாத எல்லாம் “கயால்” என்று சொல்லப்படும். “கயால்” என்ற அறபுச் சொல்லுக்கு நான் ஆய்வு செய்தறிந்த வகையிலும், பிறரிடம் கேட்டறிந்த வகையிலும் “கற்பனை” என்று சொல்லலாம் என்பது எனது கருத்து.

நான் கூறும் விளக்கத்தை கருவாக் கொண்டு, மையமாகக் கொண்டு தமிழ் மொழித் திறமையுள்ளவர்கள் தமது அறிவுக்குப் பொருத்தமான ஒரு சொல்லை அதன் பொருளாகக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

“குத்பு” அவர்கள் மேலே கூறியுள்ள விளக்கத்தின்படி – வரைவிலக்கணத்தின்படி “கயால்” என்றால் கண் பார்வைக்குத் தெரியும், ஆனால் தெரிந்த பொருள் – வஸ்த்து எதார்த்தத்தில் இருக்காது. இவ்வாறுள்ள எதுவாயினும் அதற்கு “கயால்” என்று சொல்லப்படும்.

இவ்விபரத்தை இன்னும் சற்று அழமாக ஆய்வு செய்தால் “கற்பனை” என்று சொல்வது கூட சரியான பொருளாகுமா? என்று எண்ணத் தோணுகிறது. ஏனெனில் கற்பனையில் தெரிவது மனக் கண்ணுக்குத் தெரிவதைக் குறிக்குமேயன்றி தலைக்கண்ணுக்கு தெரிவதைக் குறிக்காது. குத்பு அவர்கள் சொன்ன كُلُّ مَا يُرَى என்ற வரைவிலக்கணத்தின்படி தலைக் கண்ணால் காணக் கூடியதை மட்டுமே “கயால்” என்ற சொல் உள்வாங்குமேயன்றி கற்பனைக் கண்ணால் காணப்படுவதற்கு அறபு மொழியில் “கயால்” என்று சொல்வதில்லை.

“குத்பு” அவர்கள் கூறிய வரைவிலக்கணத்தின்படியும், அவர்கள் அதற்கு விளக்கம் சொல்லும் போது கூறுகின்ற உதாரணத்தின்படியும் தலைக்கண்ணால் காணப்பட வேண்டுமென்பது விளங்கப்படுகின்றது.

எனவே, “கயால்” என்ற சொல்லுக்கு சரியான, பொருத்தமான தமிழ்ச் சொல் எதுவென்று ஆய்வு செய்தறியும் பொறுப்பை தமிழ் மொழி கற்றவர்களின் கவனத்தில்விட்டு விளக்கத்தை “கயால்” என்ற அறபுச் சொல்லைப் பயன்படுத்தி எழுதுகிறேன்.

கண்ணால் காணப்படக் கூடிய, ஆனால் காணப்படும் வஸ்த்தாக எதார்த்தத்தில் இல்லாததற்கு உதாரணம் “ஸறாப்” سَرَابْ கானல் நீர் என்று குத்பு அவர்கள் கூறியுள்ளார்கள்.

கானல் நீர் என்பது தலைக்கண்ணால் காணக் கூடியதேயன்றி கற்பனைக் கண்ணால் காணக் கூடியதல்ல. “குத்பு” அவர்கள் சொன்ன வரைவிலக்கணத்தின்படி “கயால்” என்ற சொல்லுக்கு கானல் நீரை உதாரணமாகச்சொன்னது சரியானதேயாகும்.

ஏனெனில் கானல் நீர் தலைக் கண்ணுக்குத் தெரியுமாயினும் எதார்த்தத்தில் தெரிந்த பொருள் இருக்காது.

“குத்பு” அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் படைப்பு என்பது தலைக்கண்ணுக்குத் தெரியும். தெரிந்த வஸ்த்து எதார்த்தத்தில் இருக்காது என்று கூறுகின்றார்கள். அதாவது படைப்பு என்பது பொய் என்று சொல்கிறார்கள். பொய் என்றால் இல்லாதது என்று விளக்கம் வரும்.

“குத்பு” அவர்கள் சொன்னபடி கானல் நீர் கண்ணுக்குத் தெரிந்தாலும் அப்படியொன்று எதார்த்தத்தில் இல்லை. அப்படியும் ஒன்றுமில்லை. எப்படியும் ஒன்றுமில்லை. அது பொய்த் தோற்றம். இல்லாதது இருப்பது போல் தெரிந்தது மட்டும்தான்.

கானல் நீரை விடுவோம். “குத்பு” அவர்கள் படைப்பு இல்லையென்றுதானே சொல்கிறார்கள். இதன்படி மனிதன் ஒரு படைப்பு. இது எமது தலைக் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் கானல் நீர் போலன்றி கண்ணுக்குத் தெரிந்த மனிதன் எதார்த்தத்தில் உள்ளான். கானல் நீர் அவ்வாறில்லை.

இங்கு நாம் விளங்க வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. அதாவது கானல் நீரைப் பொறுத்தமட்டில் எதார்த்தத்தில் கண்ணுக்குத் தெரிந்த நீருமில்லை. அதற்குப் பதிலாக வேறொன்றுமே இல்லை. ஆனால் நாம் மனிதனைப் பார்க்கும் போது மனிதனாகத் தெரிந்த மனிதன் எதார்த்தத்தில் இருக்கிறான். இதற்கு விளக்கம் வேண்டும். இதற்கான சுருக்கமான விளக்கம் என்னவெனில் படைப்பு இல்லையென்ற தத்துவத்தின்படி மனிதனாகத் தெரிந்தது மனிதனல்ல. அது இறைவனின் தோற்றமேயாகும். மனிதனே இல்லையென்றால் மனித தோற்றமும் இல்லையென்பது விளக்கமாகும்.

إنما الكون خيال – படைப்பு “கயால்” என்றால் அது என்ன என்று ஒரு கேள்வி வருமல்லவா? அதற்கான விடையை அதடுத்தாற்போல் சொல்கிறார்கள். وهو حق فى الحقيقة – எதார்த்தத்தில் அது மெய்ப் பொருளான அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமையின் தோற்றமேயாகும். இன்னும் தெளிவாகச் சொன்னால் மனிதனின் “ஸூறத்” தோற்றம் இறைவனின் தோற்றம் என்றே சொல்ல வேண்டும்.

இவ்வாறுதான் அண்டசராசரங்கள் அனைத்துமாகும். படைப்புகளில் எதுவாயினும் கொரோனா வைரசாயினும் அது மெய்ப் பொருளின் வெளிப்பாடேயன்றி அதற்கு வேறான ஒன்றல்ல. எந்த ஒரு படைப்பாயினும் அது இறைவனுக்கு – அவனின் “வுஜூத்” உள்ளமைக்கு வேறானதென்று நம்புதல் கலப்பற்ற இணையேயாகும்.

இது புதிய இஸ்லாமாயிருக்கிறதேயென்று சிலர் தலையில் கை வைத்து கண்களை உருட்டலாம். இவ்வாறு சொல்பவன் யார்? இது இந்து மத ஞானமோ என்று கூட சிலர் சந்தேகம் கொள்ளலாம். அவ்வாறு ஒன்றுமே இல்லை. இதுவே சத்தியமென்று அனுபவரீதியாக அறிய யாராவதொருவர் விரும்பினால் அவருக்கு அஷ் ஷெய்குல் ஆரிப் பில்லாஹ் முஹம்மத் அல் மக்ரிபீ அஷ் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னது போல் நானும் சொல்வேன்.

قال الشّيخ العارف بالله محمد المغربي الشّاذلي شيخ الجلال السيوطي رحمه الله: إن أراد أحدكم أن يعرف هذه المسألة ذوقا فَلْيُسَلِّمْ قِياده لي، أُخرِجُه عن وظائفه وثيابه وماله وأولادِه، وأُدخِلُه الخلوةَ وأَمنَعه النوم وأكلَ الشهوات، وأنا اَضْمَنُ له وُصوله إلى علم هذه المسئلة ذوقا وكشفا، (اليواقيت والجواهر، الجزء الأوّل، ص 61 )

படைப்பு “கயால்” என்றும், அது எதார்த்தத்தில் மெய்ப் பொருள்தான் என்றும் கூறிய ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொடர்ந்து பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

كُلُّ مَنْ يَعْرِفُ هَذَا – حَازَ أَسْرَارَ الطَّرِيْقَةِ

படைப்பு பொய் தொற்றமென்றும், அது எதார்த்தத்தில் மெய்ப் பொருளான இறைவன்தான் என்றும் அறிந்து கொண்டவன் “தரீகா”வின் இரகசியங்களைப் பெற்றுக் கொண்டான் என்று கூறி பாடலை முடித்துள்ளார்கள்.

ابن عربي: الوارثُ المحمّديُّ، وسلطانُ العارفين، الشّيخ الأكبر، والكبريتُ الأحمر، والمِسكُ الأذفرُ، والنّورُ الأبهرُ، محمد بن علي الحَاتَمِيُّ المُكَنَّى بأبي عبد الله محي الدين ابن عربي، قدّس سرّه، وُلد فى الأندلس عام 560 هجري (ஹிஜ்ரீ 560 ) وتُوُفِّي ليلة الجمعة 28 ربيع الآخر 638 (ஹிஜ்ரீ 638)
مكتوب على باب روضته: خُصِّصْتُ بِعِلْمٍ لَمْ يُخَصَّ بِمِثْلِهِ – سِوَايَ مِنَ الرَّحْمَنِ ذِي الْعَرْشِ وَالْكُرْسِيِّ

#عالم_بسيلان_يطلب_سيلان

أتعجّب من عالم سيلانيّ، وُلد بسيلان ونشأ بسيلان، ويعيش الآن بسيلان،ولكنّه يطلب سيلان، أتعجّب من هذا العالم تعجّبا لا نهاية له ولا غاية، لأنّه يسئل المتصوّفين القائلين بوحدة الوجود، عن البراهين الدالّة على كون المخلوقات كلّها عينَ الله سبحانه وتعالى، ويخاطبهم هذا العالم بقوله ‘ هاتوا برهانكم من الكتاب والسنّة إن كنتم صادقين فيما تدّعون ‘
ويقول هذا العالم أيضا (إنّ مذهب وحدة الوجود صحيح، وحكمة موافقة للكتاب والسنّة، لا ريب لي فى هذا، ولكن لا أقبل القول بكون الأشياء كلِّها عينَ الحقّ سبحانه وتعالى)

سبحان الله! هذا عالم عجيب!يطلب الدّليل لكون الأشياء عينَ الله، وهو عينها، يمكنني أن أجيب هذا العالم من الكتاب والسنّة ، ومن أقوال العارفين المتصوّفين المُكاشفين، القائلين بعينيّة الوجود والموجود، – الخالق والمخلوق – ولكنّي أجيبه بآية واحدة من الكتاب، وحديث واحد من أحاديث النبيّ صلّى الله عليه وسلّم، وأترك الدّلائل الباقية، لأنّه إن كان بليدا لا يفيده التطويل ولو تليت عليه التوراة والإنجيل،

فأقول وبالله التوفيق، قال الله تعالى فى كتابه ‘ ولله المشـرق والمغرب فأينما تولّوا فثمّ وجه الله ‘ (البقرة 115) والمعنى الظاهر المتبادر للأذهان من هذه الآية ‘ أنّ المشـرق والمغرب مِلْكٌ لله تعالى فقط، لا لأحد غيره، لأنّ اللّام فى قوله تعالى ‘ ولله ‘ بمعنى المِلْكِ، فلا نزاع فيه ولا خلاف لأحد، وفى هذه الآية تقديم الخبر وتأخير المبتدأ للحصـر، أي حصر الملك لله فقط، كما لا يخفى على من عرف اللّغة العربيّة وفصاحتها وبلاغتها،

قوله تعالى ‘ فأينما تُولّوا فثمّ وجه الله ‘ أينما اسم شرط، يجزم فعلين، يتضمّن معنى ظرف مكان، نحو ‘ أينما تذهب أذهب ‘ ، وهو مركّب مِن ‘ أين ‘ وَ ‘ ما ‘ الزائدة ، ثَمَّ وَثَمَّتَ وثُمَّةَ اسم يشار به إلى البعيد بمعنى هناك، ‘ تُولّوا ‘ أي قابلتُم وواجهتُم، وأقبلتُم وأدبرتُم،

‘وجه الله ‘ والمراد بوجه الله ذاته تعالى، ليس المراد به الوجهَ المعروف عند جميع النّاس، كوجه الإنسان، ووجوه سائر الحيوانات، لأنّ الله تعالى منزّه عن كلّ عيب ونقص، وعن كلّ شيئ يُماثل المحدثات -الخلائق – ، فيجب على الإنسان أن يؤمن بهذه الآية، ويريد بلفظة الوجه ذاته تعالى المطلقة من غير قيد وحدّ وحصر ونِدّ ومِثل،

இலங்கையில் இருந்து கொண்டு இலங்கையைத் தேடும் அறிஞப் பெருமகன்.

இலங்கையிலேயே பிறந்து. இலங்கையிலேயே வளர்ந்து, தற்போது இலங்கையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் அறிஞப் பெருமகன் இலங்கையை அது எங்கே உள்ளது? என்று தேடி அலைகிறார். அவரைப் பார்த்து நான் மட்டிலா ஆச்சரியம் அடைகிறேன். ஏனெனில் அவர் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் பேசுகின்ற ஸூபீகளைப் பார்த்து “படைப்பு – பிரபஞ்சம் – படைத்தவன் தானானதே” என்பதற்கு ஆதாரம் கேட்கின்றார். குறித்த ஸூபீகளைப் பார்த்து நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் பேசுகின்ற, நம்புகின்ற தத்துவத்திற்கு அல்குர்ஆன், மற்றும் ஹதீதுகளிலிருந்து ஆதாரத்தைக் கொண்டுவாருங்கள் என்று கேட்கிறார்.

இன்னும் இந்த அறிஞப் பெருமகன் “வஹ்ததுல் வுஜூத் – இறையியல் என்பது சரியானதே! அது அல்குர்ஆன், மற்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸலலம் அவர்களின் அருள் மொழிக்கு அமைவானதே! மாறுபாடானதல்ல. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வஸ்த்துக்கள் அனைத்தும் அல்லாஹ் தானானதே என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்று கூறுகின்றார்.

ஸுப்ஹானல்லாஹ்! இவர் ஒரு ஆச்சரியமான, அதிசயமான “ஆலிம்”தான். பிரபஞ்சம் அவன் தானானதாக இருக்க, அது அவன் தானானது என்பதற்கு ஆதாரம் தேடுகின்றார். இந்த மகானுக்கு அல்குர்ஆன், அல்ஹதீது, மற்றும் “ஐனிய்யத்” படைப்பும், படைத்தவனும் ஒன்றுதான் என்று சொல்லக் கூடிய இறை உதிப்பு வழங்கப்பட்ட ஆரிபீன்களின் கூற்றுக்களிலிலிருந்தும் ஆதாரம் காட்ட என்னால் முடியும். ஆனாலும் நான் திருமறையிலிருந்து ஓர் ஆதாரமும், திரு நபீயின் பொன் மொழியிலிருந்து ஓர் ஆதாரமும் காட்டுகின்றேன். ஏனைய ஆதாரங்களை விட்டு விடுகின்றேன். ஏனெனில் இவர் ஒரு மட்டி மடையனாக இருந்தால் இவருக்கு “தௌறாத்” வேதத்தையும், “இன்ஜீல்” வேதத்தையும் ஓதிக்காட்டினாலும் அது அவருக்குப் பயனளிக்காது.

அல்லாஹு தஆலா திருமறையில் ஸூறதுல் பகறா 115ம் வசனத்தில் “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் (அவனே) இருக்கின்றது. உள்ளத்தில் பதிவாகக் கூடிய வெளிரங்கமான கருத்து என்னவெனில் கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குச் சொந்தம். அவை வேறெவருக்கும் சொந்தமல்ல. குறித்த வசனத்தில் வந்துள்ள “வலில்லாஹி” என்பதிலுள்ள “லாம்” உடைய கருத்தாகின்றது “சொந்தம்” என்பதைக் காட்டும். இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இத்திரு வசனத்தில் பயனிலையை முற்படுத்தி எழுவாயை பிற்படுத்திச் சொல்லப்பட்டுள்ளது. காரணம் கிழக்கும், மேற்கும் அவனுக்கே சொந்தம் என்பதைக் காட்டுவதற்காகவாகும். அவை வேறெவருக்கும் சொந்தமாகாது என்பதைக் காட்டும். இதை அறபு மொழியிலக்கண, இலக்கியம் அறிந்தவன் புரிந்து கொள்வான்.

“பஅய்னமா துவல்லூ பதம்ம வஜ்ஹுல்லாஹ்” என்ற வசனத்தில் வந்துள்ள “பஅய்னமா” என்பது நிபந்தனை வாக்கியமாகும். அது இடத்தைக் காட்டக் கூடியதாகும். உதாரணமாக நீ எங்கு சென்றாலும் அங்கு நான் வருவேன் என்பது போன்று. மேலும் வசனத்தில் வந்துள்ள “தம்ம” என்ற சொல் தொலைவை காட்டக் கூடியது. அதாவது அங்கே என்ற கருத்தை தரும். “துவல்லூ” என்றால் நீங்கள் நோக்குகிறீர்கள் என்று கருத்து வரும்.

“வஜ்ஹுல்லாஹ்” என்பது கொண்டு குறித்த திருவசனத்தில் அல்லாஹ்வின் முகம் என்றல்லாமல் அவனின் “தாத்” என்பதே கருதப்பட்டுள்ளது. அதாவது அவனே என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. மனிதனின் முகம், மற்றும் ஏனைய விலங்குகளின் முகங்கள் என்று சொல்லப்படுவது போன்றல்ல. ஏனெனில் அல்லாஹு தஆலா சகல குறைகளை விட்டும் தூய்மையானவன். அதேபோல் படைப்புகளுக்கு ஒப்பான சகலவற்றைவிட்டும் பரிசுத்தமானவன். எனவே, இத்திருமறை வசனத்தில் வந்துள்ள “வஜ்ஹ்” என்பதற்கு எந்தவொரு கட்டுப்பாடோ, ஒப்பாகுதலோ இன்றி அவனுடைய “தாத்” என்று நம்புதல் கடமையாகும்.

فظهر ممّا ذكرت أنّ كلّ شيئ وكلّ خلق مَرئيٍّ بالأبصار، وغير مرئـيٍّ بها، ومشهودٍ بالقلب وغيرِ مشهود به، سواء كان المرئيّ جوهرا أو عرضا، مجسّما أو غير مجسَّم، مقيّدا أو غير مقيّدٍ، كلّها مظاهر الله تعالى، أي أنّ الأشياء كلّها عينُ الله لا غير الله تعالى، لأنّ الظاهر لا يفارق المظهر أبدا، أصلا، كما أنّ الصفة لا تفارق الموصوف أبدا ، أصلا،

اختلف المفسّرون فى معنى هذه الآية، فبعضهم قال معنى فثمّ وجه الله أي قبلة الله، وبعضهم قال معناها رضا الله، وبعضهم قال ذات الله، وبعضهم قال الله، آراءُ وأقوال مختلفة، والشيخ الأكبر محي الدين ابن عربي رضي الله عنه قال ذات الله، وكثير من العارفين قالوا ذات الله،

وما بالُ أئمّة فسّروا قول الله ‘ فثمّ وجه الله ‘ بقبلة الله ورضاه، لا أدري هل فسّروه بالدّلائل أو برأيهم، ولكنّي أحسن الظنّ بهم، وأعرض عن كلّ ظنّ يدور بقلبي فى حقّهم، تلك أمّة قد خلت فحسابهم على الله،

وإن قلت يا أخي أنّ القميص مظهر القطن فمعناه الحقيقيّ أنّ القميص عينُ القطن لا غيرُ القطن، وإن قلت أنّ الخاتم مظهر الذّهب فمعناه الحقيقيّ أنّ الخاتم عينُ الذّهب لا غيرُ الذّهب، وكذلك الخلق، وإن قلت إنّه مظهر الله فمعناه الحقيقيّ أنّه عين الله تعالى من غير حلول ولا اتّحاد،

الَمْ يكف العالم دليلا الآيةُ المذكورة، (ولله المشـرق والمغرب فأينما تُولّوا فثمّ وجه الله)وأيّ دليل يطلب منّا ذلك العالم؟ وماذا يفهم هذا العالم من الآية المذكورة، هل فسد عقله؟ أو نزل مُخُّه إلى إسته؟ اليست هذه الآية دليلا على أنّ الموجوداتِ كلَّها من المحسوسات وغيرها، والمرئيّات وغيرها وجودُه تعالى، أيظنّ هذا العالم أن يأتي الله الدليل بعبارة شاءها ذلك العالم أو أرادها أو أحبّها؟ كأن يقول الله تعالى كلُّ شيئٍ الله ، أو كلُّ خلقٍ الله ، أو كلّ شيئ وجودُ الله أو كلّ خلق وجودُه، أو كلّ موجودٍ عينُ الله تعالى،

المْ يعلم هذا العالم علم المعاني والبلاغة والبديع؟ الم يعرف هذا العالم أنّ إطلاق الجُزْءِ من شيئ وإرادةَ الكلّ به من فصاحة الكلام وبلاغته؟

وأنا أتعجّب من عالم يطلب الدلائل من المشـرق إلى المغرب لكون المخلوقات عينَ الله، مع وجود آية من القرآن الكريم صريحةٍ تُثبتُ كونَ المخلوقات كلِّها ذاتَ الله تعالى، وإن كان هذا العالم ذا عقل سليم وفهم مستقيم لَكَفاه هذه الآية المذكورة، فلا حاجة له إلى طلب دليل آخر من المشرق إلى المغرب، وهذا العالم حاذق جدّا، لأنّه يدور العوالم ويطير فى الهوى بطلب لبن النّارجيل وبيده النّارجيل،

நான் கூறியதிலிருந்து சகல வஸ்த்துக்களும் அவை கண்ணால் காணக் கூடியவையாக இருந்தாலும், காண முடியாதவைகளாக இருந்தாலும், உள்ளத்தால் காணக் கூடியவைகளாக இருந்தாலும், அல்லது காண முடியாதவைகளாக இருந்தாலும், ஆதேயமான வஸ்த்துக்களாக இருந்தாலும், ஆதாராமானவைகளாக இருந்தாலும், சடமுள்ளவைகளாக இருந்தாலும், சடமற்றவைகளாக இருந்தாலும், வரையறுக்கப்பட்டவைகளாக இருந்தாலும், வரையறுக்கப்படாதவைகளாக இருந்தாலும் அவை அனைத்தும் அல்லாஹ்வின் வெளிப்பாடுகளே! அதாவது அனைத்து வஸ்த்துக்களும் அல்லாஹ் தானானவைகளேயன்றி வேறானவையல்ல. ஏனெனில் “ளாஹிர்” வெளியானவன் வெளிப்பாட்டை விட்டும் ஒருபோதும் பிரிவதில்லை. வருணிக்கப்பட்டவன் குறித்த வருணனையை விட்டும் ஒரு காலமும், அறவே பிரியாதது போல.

மேலே (கடந்த பதிவில்) சொல்லப்பட்ட “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வே இருக்கின்றான்” என்ற மறைவசனத்தை விளங்குவதில் “முபஸ்ஸிரீன்” திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளார்கள். சிலர் “பதம்ம வஜ்ஹுல்லாஹ்” என்பதற்கு “நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் “கிப்லா” திசையே உள்ளது என்றும், இன்னும் சிலர் “அங்கு அல்லாஹ்வின் பொருத்தம் உண்டு” என்றும், இன்னும் சிலர் “அங்கு அல்லாஹ்வின் “தாத்” உண்டு என்றும், இன்னும் சிலர் “அங்கு அல்லாஹ்வே உள்ளான்” என்றும் கருத்துக் கொள்கின்றார்கள். பலதரப்பட்ட கருத்துக்களும், சிந்தனைகளும் காணப்படுகின்றன. அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்லாஹ்வின் “தாத்” உண்டு” என்ற கருத்தையே சொல்லியுள்ளார்கள். ஆரிபீன்களில் அதிகமானோர் இவ்வாறே சொல்லியுமுள்ளார்கள்.

“பதம்ம வஜ்ஹுல்லாஹ்” என்பதற்கு அல்லாஹ்வின் திசை, அல்லாஹ்வின் பொருத்தம் என்றெல்லாம் விளக்கம் கூறியவர்களின் நோக்கம் என்ன? அவர்கள் ஆதாரங்கள் கொண்டுதான் விளக்கம் சொன்னார்களா? அல்லது தங்களின் சுய விருப்பின் அடிப்படையில் விளக்கம் சொன்னார்களா? என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்டு அவர்கள் பற்றி என்னுள்ளத்தில் உலாவுகின்ற எண்ணங்களையெல்லாம் தவிர்ந்து கொள்கிறேன். அவர்கள் நமக்கு முன் வாழ்ந்து மறைந்து போனவர்கள். அவர்களை அல்லாஹ்வே விசாரிப்பவன்.

எனதன்புச் சகோதரனே! நீ ஷேட் என்பது பஞ்சின் வெளிப்பாடு என்று சொன்னால் அதன் எதார்த்தமான கருத்து ஷேட் பஞ்சு தானானதேயன்றி வேறானதல்ல என்பதாகும். அதேபோல் மோதிரம் தங்கத்தின் வெளிப்பாடு என்றால் அதன் எதார்த்தமான கருத்து மோதிரம் தங்கமேதான். தங்கத்திற்கு வேறில்லை என்பதாகும். அதேபோன்றுதான் “கல்குன்” படைப்பு என்பதுமாகும். அது அல்லாஹ்வின் வெளிப்பாடு என்று சொன்னால் அதன் எதார்த்தமான கருத்து அது – படைப்பு “ஹுலூல் – இத்திஹாத்” அடிப்படையிலன்றி அல்லாஹ் தானானதே என்பதாகும்.

இந்த அறிஞப் பெருமகனுக்கு மேலே கூறிக்காட்டிய திருமறை வசனம் (கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் “தாத்”தே உள்ளது) போதாதா? இதைவிட என்ன ஆதாரத்தை எங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்? குறித்த இந்த வசனத்திலிருந்து இந்த ஆலிம் பெருந்தகை என்ன விளங்குகின்றார்? அவருடைய புத்தி கெட்டுவிட்டதா? அல்லது அவரது மூளை மூலத்தடியில் இறங்கிவிட்டதா? இந்த திருவசனம் புலன்களால் உணரப்படக்கூடிய, புலன்களால் உணரப்படாத அனைத்து வஸ்த்துக்களும், கண்களால் காணக்கூடிய, மற்றும் காணமுடியாத அனைத்தும் அல்லாஹ்வின் உள்ளமைதான் என்பதற்கு ஆதாரமாக இல்லையா? இந்த அறிஞப் பெருமகன் தான் நாடிய விதத்தில், தான் விரும்புகின்ற வசன அமைப்பில் அல்லாஹு தஆலா வசனமமைத்து ஆதாரம் சொல்லியிருக்க வேண்டுமென்று எண்ணுகிறாரா? “அனைத்து வஸ்த்துக்ளும் அல்லாஹ்வே” என்றோ, அல்லது “சகல படைப்புக்களும் அல்லாஹ்தான்” என்றோ, அல்லது “சகல வஸ்த்துக்களும் அவனது உள்ளமை” என்றோ, அல்லது “சகல படைப்புக்களும் அவனது உள்ளமை என்றோ”, அல்லது இருப்பது அனைத்தும் அல்லாஹ்தானானது என்றோ அல்லாஹ் வசனம் சொல்லியிருக்க வேண்டும் என்றா எண்ணுகிறார்?

இந்த அறிஞப் பெருமகனுக்கு அறபு மொழியில் உள்ள “இல்முல் மஆனீ, பலாஙா, பதீஉ” கலைகளை உள்ளடக்கிய நாகரிகமான பேச்சு தெரியாதா? ஒன்றின் பகுதியைக் கூறி அதை முழுமையாக நாடுதல் என்பது நாகரிக பேச்சு என்பது இவருக்கு தெரியாதா?

படைப்புக்கள் அல்லாஹ் தானானவை என்பதை தரிபடுத்தக் கூடிய பகிரங்கமான, தெளிவான ஆதாரம் திருமறையில் உள்ளபோது உதயகிரியிலிருந்து அஸ்த்தகிரி வரை ஆதாரம் தேடும் அறிஞப் பெருமகனை எண்ணி ஆச்சரியப்படுகின்றேன். இவர் நல்ல புத்தியுடையவராகவும், நேரான சிந்தனையுடையவராகவும் இருந்தால் மேலே சொல்லிக் காட்டிய திருமறை வசனம் ஒன்று மட்டும் இவருக்கு போதுமானது. கிழக்கிலிருந்து மேற்கு வரை இவர் இன்னோர் ஆதாரம் தேடத் தேவையில்லை. இவர் மிகவும் கூர்மையான புத்தியுடைய அறிஞன். ஏனென்றால் கையில் தேங்காயை வைத்துக் கொண்டு தேங்காய்ப்பாலுக்காக உலகெலாம் சுற்றுகிறார், ஆகாயத்தில் பறக்கிறார்.

وأمّا الحديث الّذي يُثبت كون الأكوان عينَ الله فقوله صلّى الله عليه وسلّم لو أنّكم دلّيتم بحبل إلى الأرض السفلى لهبط على الله، ثمّ قرأ النبيّ صلّى الله عليه وسلّم هو الأوّل والآخر والظاهر والباطن، وهو بكلّ شيئ عليم

சகல பிரபஞ்சங்களும் அல்லாஹ் தானானது என்பதை தரிபடுத்தக்கூடிய ஹதீதாகிறது “நீங்கள் ஒரு கயிற்றை பூமியை நோக்கித் தொங்கவிட்டால் அது அல்லாஹ்விலே விழும்” பின்பு பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே. சகல வஸ்த்துக்களையும் அறிந்தவனாக அவன் இருக்கின்றான்” என்ற திருமறை வசனத்தை ஓதினார்கள் என்ற ஹதீதாகும்.

ومعلوم لدى كلّ أحد من الصغار والكبار أنّ رجلا إذا أخذ بيده حبلا ودلّاه إلى الأرض سقط ذلك الحبل على الأرض، وهذا ممّا لا يشكّ فيه أحد، ولكنّ الرسول صلّى الله عليه وسلّم قال لهبط على الله بدل لهبط على الأرض،

ஒருவர் தனது கையில் ஒரு கயிற்றை எடுத்து அதை பூமியை நோக்கித் தொங்கவிட்டால் அது பூமியிலே விழும் என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அறிந்த விடயம்தான். இதிலே எவருக்கும் சந்தேகமே வராது. ஆனாலும் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பூமியில் விழும் என்று சொல்வதற்குப் பதிலாக அல்லாஹ்விலே விழும் என்று கூறியுள்ளார்கள்.

ففهم من هذه العبارة أنّ الأرض عينُ الله تعالى، يؤيّد هذا المعنى قراءةُ النبيّ صلّى الله عليه وسلّم الآيةَ المذكورة فى الحديث – هو الأوّل والآخر والظاهر والباطن، وهو بكلّ شيئ عليم – عقب قوله لهبط على الله ، وإلّا – وإن لم تكن الأرض عينَ الله – فلا مناسبة بين قوله لهبط على الله وبين قرائته هذه الآية فى ذلك الوقت، ولكلّ شيئ مناسبة وسبب،

பெருமானாரின் இந்த வசனத்திலிருந்து பூமியாகிறது அல்லாஹ் தானானதே என்பது விளங்கப்படுகின்றது. இந்தக் கருத்தை பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் குறித்த ஹதீதின் தொடரில் ஓதிக்காட்டிய திருமறை வசனம் உறுதி செய்கிறது (முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே. அவன் சகல வஸ்த்துக்களையும் அறிந்தவனாக இருக்கின்றான்). பூமி அல்லாஹ்வுக்கு வேறானதாக இருந்தால் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொன்ன ஹதீதுக்கும், ஓதிக்காட்டிய வசனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாமல் போய்விடும். ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான காரணம் உண்டு.

وأمّا العالم المنكر يقول ‘ معنى هبط على الله هبط على قدرة الله، والمضاف هنا محذوف ‘ فقوله هذا مردود بسبب استحالة مفارقة الصفة عن الموصوف، لأنّ قدرة الله صفة له قائمة به، لاتفارق ذاتَه فى أيّ حال من الأحوال، كما لا تفارق الحلاوةُ عن السكّر والمرارة عن الملح، وهذا أمر معروف معلوم لا حاجة إلى بحثه،

“ஐனிய்யத்” படைப்பு படைத்தவன் தானானதே என்ற தத்துவத்தை மறுக்கக் கூடிய அறிஞப் பெருமகன் “அல்லாஹ்வில் விழும்” என்றால் “அல்லாஹ்வின் சக்தியில் விழும்” என்றும், “சக்தி” என்ற சொல் இங்கு நீக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார். இவருடைய இவ்வாதம் “வருணனை வருணிக்கப்பட்டவனை விட்டும் பிரியாது” என்ற தத்துவத்தின் அடிப்படையில் மறுக்கப்படுகின்றது. ஏனெனில் அல்லாஹ்வின் சக்தி அவனைக் கொண்டு நிற்கக் கூடிய வருணனை – தன்மையாகும். எச்சந்தர்ப்பத்திலும் இனிப்பு சீனியை விட்டும் பிரயாதது போலும், உப்பை விட்டும் உவர்ப்பு பிரயாதது போலும் அவனை விட்டும் அது பிரியாது. இது யாவரும் அறிந்த விடயமாகையால் இது பற்றி ஆய்வு செய்தல் அவசியமற்றது.
فكيف يقول العالم المنكر أنّ الحبل هبط على قدرة الله لا على الله؟ ألا يعرف هذا العالم أنّ الصّفة لا تفارق الموصوف؟ هل يستطيع هذا العالم أن يفرّق قدرة عبد الرحمن عنه؟ وسمعه عنه؟ وبصـره عنه؟ وعلمه عنه؟ وإرادته عنه؟ وكلامه عنه؟ وحياته عنه؟ وإن كان صادقا فيما يدّعي أخذ منّي قدرتي، وهذا أمر مستحيل،
அறிஞப் பெருமகன் கயிறு அல்லாஹ்வில் விழவில்லை அவனது சக்தியிலேயே விழுந்தது என்று எவ்வாறு கூறுவார்? வருணிக்கப்பட்டவனை விட்டும் வருணனை பிரியாதது என்று இந்த அறிஞப் பெருமகனுக்கு தெரியாதா? அப்துர் றஹ்மான் என்பவனின் சக்தியை அவனை விட்டும் பிரிக்க இந்த பெருமகனால் முடியுமா? அதேபோல் அவனது கேள்வி, பார்வை, அறிவு, நாட்டம், பேச்சு, உயிர் என்பவற்றையும் அவனை விட்டும் பிரிக்க முடியுமா? அவர் தனது வாதத்தில் உண்மையாளனாக இருந்தால் என்னை விட்டும் எனது சக்தியை பிரித்தெடுத்திருப்பார். இது அசாத்தியமான விடயம்.

وكيف يفسّر المفسّرُ للآية المذكورة ‘ فأينما تُولّوا فثمّ وجه الله ‘ بأنّ المراد بوجه الله قبلته وجهته ورضاه؟ وكيف يفرّق القبلة والجهة عن ذاته وهما خلقان من خلقه تعالى؟ وكيف يفرّق رضاه الّذي لا ينفكّ عن ذاته فى أيّ حال من الأحوال؟

மேற் சொன்ன வசனத்திற்கு (நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் “வஜ்ஹ்” உண்டு) திருக்குர்ஆன் விரிவுரையாளர் ஒருவர் “வஜ்ஹ்” என்பது கொண்டு நாட்டம் அவனது “கிப்லா”, திசை, மற்றும் பொருத்தம் என்று எவ்வாறு கூறுவார்? “கிப்லா”வையும், திசையையும் அவனுடைய “தாத்”தை விட்டும் அவ்விரண்டும் அவனுடைய “கல்க்” ஆக இருக்கின்ற நிலையில் எவ்வாறு பிரிப்பார்? அவனுடைய “தாத்”தை விட்டும் எச்சந்தர்ப்பத்திலும் பிரியாத “பொருத்தம்” என்பதை எவ்வாறு பிரிப்பார்?

فتلخّص ممّا قلت إلى هذا الوقت أنّ المراد بالوجه فى قوله تعالى ‘ فأينما تُولّوا فثمّ وجه الله ‘ هو تجلّياته وشئوناته الخارجيّة الّتي لا تفارق ذاته المقدّسة، وبالجملة أنّ تجلّياته تعالى هي عين ذاته لا غير ذاته، وإن رُؤيت فى صور محدودة ومعدودة ومعيّنة ومقيّدة، لأنّ تجلّياته تعالى لا يراها أحد إلّا محدودة ومقيّدة بالصُّور، ولأنّ الباصر لا يبصـر إلّا ما هو مقيّد ومصوّر، والله أعلم بالصواب،

எனவே, இதுவரை நான் கூறியவற்றிலிருந்து “வஜ்ஹ்” என்பது கொண்டு நாட்டம் (எங்கு நோக்கினாலும் அவனது “வஜ்ஹ்” உண்டு என்ற வசனத்திலுள்ள “வஜ்ஹ்”) அவனை விட்டும் பிரியாத அவனது வெளிப்பாடுகள் என்பதாகும். ஆக மொத்தத்தில் அவனது வெளிப்பாடுகள் அவனேதான். அவனுக்கு வேறானவை அல்ல. கட்டுப்பாடுள்ள, குறிப்பான, எண்ணிக்கையுடைய பல உருவங்களில் நாம் பார்த்தாலும் சரியே. ஏனெனில் அவனது வெளிப்பாடுகளை கட்டுப்பாடான உருவங்களில்தான் ஒருவரால் பார்க்க முடியும். ஏனெனில் பார்க்கக் கூடிய ஒருவரால் மட்டுப்பாடான உருவங்களையே பார்க்க முடியும். அல்லாஹ்தான் சரியானதை அறிந்தவன்.

وأخيرا، أسئل من يحسن اللّغة العربيّة مع الفصاحة والبلاغة ومع العربيّة المعاصرة أن لا يعيبني لعدم أسلوبي موافقا لأسلوب الفصحاء والبلغاء وللعربيّة المعاصرة، لأنّ مقصودي تفهيم الحقّ والصّواب وتفهيم معاني وحدة الوجود ، وتبيين عقيدة الصوفيّة للإخوة المسلمين ولوبأيّ أسلوب لا تزيين العبارة بألفاظ جديدة، لا يعلمها كثير من العلماء وطلّاب العلم، وأمّا التكلُّف بطلب ألفاظ غريبة لتحسين العبارة بقصد ثناء النّاس فهو من أخلاق النّفس الأمّارة، كما قال أهل التصوّف، وفوق كلّ ذي علم عليم،
இறுதியாக அறபு மொழியை அதன் நாகரீக நடையில் அறிந்தவர்களிடமும், தற்கால அறபு மொழி அறிந்தவர்களிடமும் குறித்த நாகரீகமும், தற்கால அறபு மொழி நடையும் என்னுடைய எழுத்தில் இல்லையென்று என்னைக் குறை கூற வேண்டாம் என்று வேண்டிக் கொள்கின்றேன். என்னுடைய நோக்கம் சரியான, உண்மையானதை விளக்கி வைப்பதும், “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை விளக்கி வைப்பதுமாகும். மேலும் ஸூபிய்யாக்களின் கொள்கையை முஸ்லிம் சகோதரர்களுக்கு எப்படியாயினும் விளக்கி வைப்பதாகும். அதிகமான அறிஞர்களும், மாணவர்களும் அறியாத புதிய வசன நடை, சொற்கள் கொண்டு என்னுடைய வசனங்களை அழகுபடுத்திக் காட்டுவது நோக்கமல்ல. கடினமான சொற்கள் கொண்டு வசனங்களை அழகுபடுத்திக் காட்டி மற்றவர்களின் புகழ்ச்சியை எதிர்பார்ப்பது ஸூபீகள் கூறியது போன்று “நப்ஸ் அம்மாறா”வின் தீக்குணமாகும். “அறிஞனுக்கு மேல் ஒரு அறிஞன் இருக்கின்றான்”

واعلم أنّ الحق سبحانه وتعالى هو الوجود وأن ذلك الوجود ليس له شكل ولا حدّ ولا حصر وأنّ الله بكلّ شيئ محيط، ومع هذا ظهر بالشكل والحدّ ولم يتغيّر عمّا كان عليه من عدم الشكل وعدم الحدّ ، بل الآن هو كما كان ، وأنّ الوجود واحد والألباس مختلفة ومتعدّدة، وأنّ ذلك الوجود حقيقة جميع الموجودات وباطنها،

அறிந்து கொள்! ஹக் தஆலா மாத்திரமே உள்ளமையாக (மெய்ப் பொருளாக) உள்ளான். அந்த மெய்ப் பொருளாகிறது எவ்வித உருவமோ, கட்டுப்பாடோ இல்லாததாகும். மேலும் அல்லாஹு தஆலாவாகிறவன் அனைத்து வஸ்த்துக்களையும் சூழ்ந்தவனாக உள்ளான். இவ்வாறு இருப்பதுடன் உருவத்திலும், கட்டுப்பாடுடனும் அவனே வெளியாகியுள்ளான். உருவத்திலும், கட்டுப்பாடுடனும் அவன் வெளியாகியிருப்பதால் அவனது பரிசுத்த தன்மையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அவன் இவ்வாறு வெளியாகுவதற்கு முன் எவ்வாறிருந்தானோ அவ்வாறே இருக்கின்றான். உள்ளமை (மெய்ப் பொருள்) ஒன்றே! அதன் கோலங்கள்தான் பல. அந்த மெய்ப் பொருளே அனைத்து வஸ்த்துக்களின் எதார்த்தமும், உற் பொருளுமாகும்.

وأنّ جميع الموجودات عين الحقّ سبحانه وتعالى ولكنّها من حيث التعيّن غير الحقّ سبحانه وتعالى، والغيريّة إعتباريّة ، وأمّا من حيث الحقيقة فالكلّ هو الحقّ سبحانه وتعالى ومثاله الحباب والموج والثلج ، فإنّ كلّهنّ من حيث الحقيقة عين الماء ومن حيث التعيّن غير الماء، والسراب فإنّه من حيث الحقيقة عين الهواء ومن حيث التعيّن غير الهواء، ولأنّ السراب فى الحقيقة هواء ظهر بصورة الماء،

மேலும் நிச்சயமாக சகல வஸ்த்துக்களும் ஹக் தஆலா தானானதே! ஆனால் குறிப்பாகுதல் (தஅய்யுன்) அடிப்படையில் ஹக் தஆலாவுக்கு வேறானதாகும். வேறு என்பது கவனிப்பைக் கொண்டதாயிருக்கும்.. அறிந்து கொள் எதார்த்தத்தின் அடிப்படையில் அனைத்தும் அல்லாஹ் தானனதாகும். அதற்கு உதாரணமாகிறது நீர்க் குமிழி, அலை, ஐஸ்கட்டி போன்றவையாகும். எதார்த்தத்தின் அடிப்படையில் இவைகள் தண்ணீர் தானானவையும், குறிப்பாகுதலின் அடிப்படையில் இவைகள் தண்ணீருக்கு வேறானவையும் ஆகும். கானல் நீர் என்பது எதார்த்தத்தில் காற்றேதான். குறிப்பாகுதல் என்ற அடிப்படையில் காற்றுக்கு வேறானதாகும். ஏனெனில் கானல் நீர் என்பது எதார்த்தத்தில் அதன் உருவில் தோற்றியது காற்றேதான்.

(منقول من الكتاب الّذي استدلّ به جمعيّة الحمقى للإفتاء بردّة من قال بوحدة الوجود وبردّة من صدّق قوله ‘ التحفة المرسلة ‘ عام 1979 – 1980)

(அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 1979 – 1980 காலப் பகுதிகளில் வஹ்ததுல் வுஜூத் பேசிய எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் “முர்தத்” பத்வா வழங்க ஆதாரமாக எடுத்துக் கொண்ட “அத்துஹ்பதுல் முர்ஸலஹ்” என்ற நூலில் இருந்து… இந்நூல் அதன் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தையே கூறி நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது)

அல் இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

أبو حامد محمد الغزّالي الطوسي النيسابوري الصوفي الشافعي الأشعري، أحد أعلام عصـره وأحد أشهر علماء المسلمين في القرن الخامس الهجري، (450 هـ – 505 هـ ஃ 1058م – 1111م).

அவர்களின் இயற் பெயர் முஹம்மத் ஆகும். அபூ ஹாமித் என்பது புனைப் பெயராகும். (அல் கஸ்ஸாலீ அத்தூஸீ, அந் நைஸாபூரீ, அஸ் ஸூபீ, அஷ் ஷாபிஈ அல் அஷ்அரீ) அவர்கள் தங்களின் காலத்தில் (ஹிஜ்ரீ 450 – 505 , ஆங்கில வருடம் 1058 – 1111) வாழ்ந்த பிரபல்யமான அறிஞர்களில் ஒருவராவர்கள்.

كان فقيهاً وأصولياً وفيلسوفاً، وكان صوفيّ الطريقةِ، شافعيّ الفقهِ إذ لم يكن للشافعية في آخر عصـره مثلَه . وكان على مذهب الأشاعرة في العقيدة،
அவர்கள் ஒரு சட்டக்கலை வல்லுநராகவும், கலைகளின் அடிப்படை உடையவராகவும், தத்துவஞானியாகவும் காணப்பட்டார்கள். மேலும் ஞான வழியில் ஸூபீயாகவும், மத்ஹபுகளில் ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றுபவராகவும் காணப்பட்டார்கள். அந் நேரம் ஷாபிஈ மத்ஹபில் இவர்கள் போன்ற திறமை மிக்க எவரும் இருக்கவில்லை. அகீதாவில் அஷ்அரிய்யாக்களைப் பின்பற்று பவராகவும் இருந்தார்கள்.
لُقّب الغزالي بألقاب كثيرة في حياته، أشهرها لقبُ ‘حُجّة الإسلام’، وله أيضاً ألقاب مثل: زين الدين، ومحجّة الدين، والعالِم الأوحد، ومفتي الأمّة، وبركة الأنام، وإمام أئمة الدين، وشرف الأئمة.
இமாம் கஸ்ஸாலீ அவர்கள் தன்னுடைய காலத்திலேயே பல பெயர்களைக் கொண்டு பட்டம் சூட்டப் பட்டவர்களாக இருந்தார்கள். அவற்றில் மிகப் பிரபல்யமானது “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” என்பதாகும். மேலும் அவர்களுக்கு “ஸைனுத்தீன்” “மஹஜ்ஜதுத் தீன்” “அல் ஆலிமுல் அவ்ஹத்” “முப்தில் உம்மஹ்” “பறகதுல் அனாம்” “இமாமு அஇம்மதித் தீன்” “ஷறபுல் உம்மஹ்” போன்ற பெயர்களும் உண்டு.

ولقد ضَمَّنَ أبو حامد الغزّالي رحمه الله كتُبه الصوفيّة – وبخاصّة إحياءَ علوم الدين – عقيدةَ وحدة الوجود، وفيما يَلي نَمَاذِجُ من ذلك،
இமாம் கஸ்ஸாலீ அவர்கள் தன்னுடைய ஸூபித்துவ நூல்களை (குறிப்பாக இஹ்யாஉ உலூமித்தீன்) “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை உள்ளடக்கியதாகவே ஆக்கியுள்ளார்கள். அதன் விபரங்கள் பின்னால் வரும்.

قال أبو حامد الغزالي رحمه الله : (للتوحيد أربع مراتب) فذكر ثلاث مراتبَ، ثمّ قال، والرابعة أن لا يرى فى الوجود إلّا واحدا، وهي مشاهدة الصِّدّيقين، وتُسمّيه الصوفيّةُ الفناءَ فى التّوحيد، لأنّه من حيث لا يَرى إلّا واحدا، فلا يرى نفسه أيضا، وإذا لم يَرَ نفسَه – لكونه مستغرقا بالتوحيد – كان فانيا عن نفسه فى توحيده، بمعنى أنّه فَنَى عن رؤية نفسه والخلق،
இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். ஏகத்துவத்திற்கு நான்கு படித்தரங்கள் உள்ளன. மூன்றைக் கூறிவிட்டு பின்பு கூறினார்கள். நான்காவதாகிறது உள்ளமையில் ஒன்றையே பார்ப்பான். அது “ஸித்தீகீன்”களின் காட்சி நிலையாகும். அதை ஸூபீகள் “அல் பனாஉ பித் தௌஹீத்” ஏகத்துவத்தில் அழிதல் என்று கூறுவார்கள். ஏனெனில் உள்ளமையில் ஒன்றையே பார்ப்பது கொண்டு அவன் தன்னையும் காண மாட்டான். ஏகத்துவத்தில் மூழ்கியிருப்பது கொண்டு தன்னையே காணவில்லையானால் அவன் தன்னை விட்டும் (நான் என்பதை விட்டும்) ஏகத்துவத்தில் அழிந்தவனாக ஆகிவிட்டான். அதாவது தன்னையும் ஏனையவற்றையும் காணாமல் “பனா” ஆகிவிடுவான்.
ويقول الغزّالي: ليس فى الوجود – تحقيقا – إلّا الله وأفعالُه،
மேலும் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள். உள்ளமையில் (உறுதியாக) அல்லாஹ்வையும், அவனது செயல்களையும் தவிர வேறு இல்லை.

وتحت عنوان (حقيقة الحقائق) يقول الغزالي فى كتاب مشكاة الأنوار: ومن هنا يفاع العارفون من حَضيض المجاز إلى ذروة الحقيقة، واستكملوا معراجَهم، فَرَأَوْا بالمشاهدة العِيانيّة – أن ليس فى الوجود إلّا الله تعالى – وأنّ كلّ شيئ هالك إلّا وجهه، لا أنّه يصير هالكا فى وقت من الأوقات، بَل هو هالك أزلا وأبدا، إذ لا يُتصوّر إلّا كذلك، فإنّ كلّ شيئ سواه إذا اعتُبر ذاته من حيث ذاته فهو عدمٌ محضٌ، وإذا اعتُبر من الوجه الذي يسري إليه الوجود من الأوّل الحقّ رُؤِيَ موجودا لا فى ذاته، لكن من الوجه الذي يلى مُوجدَه، فيكون الموجود وجه الله تعالى فقط،
(مشكاة الأنوار للغزالي، ص 69 )
ஹகீகதுல் ஹகாயிக் எனும் தலைப்பின் கீழ் தன்னுடைய மிஷ்காதுல் அன்வார் எனும் நூலில் பின்வருமாறு கூறுகின்றார்கள். இந்த இடத்திலிருந்துதான் ஆரிபீன்களாகிய ஞானிகள் ஏற்படுத்தப்பட்டதின் (மஜாஸ் – ஒரு பொருள் மற்றொண்டாக குறிக்கப்படும் ஓர் உருவணி) அடியிலிருந்து எதார்த்தத்தின் உச்சிக்கு ஏறுகின்றார்கள். தங்களின் விண்ணுலக யாத்திரையை சம்பூரணப்படுத்திக் கொள்கின்றார்கள். அல்லாஹு தஆலா தவிர வேறொன்று இல்லை என்று நேரடிக் காட்சி மூலம் காணுகின்றார்கள். அவனைத் தவிர உள்ள அனைத்தும் அழிந்தவை, இல்லாதவை என்று காணுகின்றார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் அது அழியும் என்பதல்ல. மாறாக அது (படைப்பு) நிரந்தரமாக அழிந்த, இல்லாத ஒன்றாகும். அது வெறும் கற்பனை மாத்திரமே. ஏனெனில் அனைத்து வஸ்த்துக்களும் அதன் அதனுடைய “தாத்” உள்ளமையை எடுத்துப் பார்த்தால் அது கலப்பற்ற “அதம்” இல்லாமையாகும். ஆரம்பத்திலிருந்து “வுஜூத்” உள்ளமை பொருந்தக்கூடிய வகையில் எடுத்துப் பார்த்தால் ஹக் தஆலா தான் சிருட்டியாக தெரிகிறான். உண்மையில் சிருட்டி என்று ஒன்று இல்லை. ஆனால் அதை உண்டாக்கியவனை வைத்துப் பார்க்கும் போது இருப்பது அவன் மாத்திரமே!
(மிஷ்காதுல் அன்வார், இமாம் கஸ்ஸாலீ, பக்கம்: 69)
فمن ادّعى أحد منكم أنّ هذا العلم – ولو كان صحيحا فى نفس الأمر – فلا يجوز إظهاره وإفشائه لغير المستحقّين فادّعائه باطل، لأنّ الإمام الغزالي أفضل وأعلم ممّن يدّعي هكذا، وإظهارُه بالكتابة فى مؤلَّفاته دليلٌ لنا لجواز إظهاره مطلقا،
இந்த ஞானம் உண்மையில் சரியான, ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான். ஆனால் இதை வெளிப்படுத்துவது தான் கூடாது என்று உங்களில் எவராவது கூறினால் அவரின் வாதம் தவறானதாகும். ஏனெனில் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு வாதிப்பவரை விட பன்மடங்கு சிறந்த அறிவாளியாவார்கள். அவர்கள் தன்னுடைய நூற்களில் இத் தத்துவத்தை எழுதியிருப்பது அதை வெளிப்படுத்தலாம் என்பதற்கு தெளிவான ஆதாரமாகும்.
ثمّ انْتَهت أزمّته وحيرتُه بترجيح طريق الصوفيّة ، وتريِيفِ ما عداها، يقول الغزالي : ثمّ إنّي لمّا فرغتُ من هذه العلوم ، أقبلتُ بهمّتي على طريق الصوفيّة ،
பின் அவர்களின் பிரச்சினைகள், தடுமாற்றம் எல்லாம் ஸூபிய்யாக்களின் வழியை மேம்படுத்துவது கொண்டும், அது அல்லாததை விடுவது கொண்டும் இல்லாமலாகிவிட்டன. பின்பு இந்த அறிவுகளிலிருந்து ஓய்வு பெற்று ஸூபிய்யாக்களின் வழியை நோக்கி உண்மையான எண்ணத்துடன் சென்றார்கள்.
حصّل الغزالي رحمه الله علومَ الصوفيّة من مطالعة كتبهم، مِثْلَ قوت القلوب لأبي طالب المكّي، ودِراسةِ أقوال شيوخِ التصوّفِ الأوائل، كأبي يزيدَ البسطامي، والجنيد، والحلّاج ،والشّبلي ونحوِهم، رضي الله عنهم،
இமாம் கஸ்ஸாலீ அவர்கள் ஸூபிய்யாக்களின் நூல்களை மீட்டிப் பார்ப்பதன் மூலம் அவர்களின் அறிவுகளை உண்டாக்கிக் கொண்டார்கள். அபூ தாலிபுல் அல் மக்கீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “கூதுல் குலூப்” என்ற நூல், மற்றும் ஸூபிஸத்தின் குருமார்களின் பேச்சுக்கள் போன்று. (அபூ யஸீத் அல் பிஸ்தாமீ, ஜுனைதுல் பக்தாதீ, இமாம் ஹல்லாஜ், இமாம் ஷிப்லீ றஹிமஹுமுல்லாஹ் இன்னுமிவர்கள் போன்றோர்கள்)
ولم يكتف بالتصوّف العلميّ المأخوذِ من بُطونِ كتب الصوفيّة، بل عزم على تحصيل التصوّف العمليّ، لِينال غايةَ التصوّف بالذّوق والحال والكشف،
இவ்வாறு நூற்களை மாத்திரம் படிப்பதன் மூலம் அவர்களுக்கு கிடைத்த அறிவுகள் தனக்கு போதாது என்று எண்ணிய அவர்கள், ஸூபிஸ ஞானத்தை (வஹ்ததுல் வுஜூதை) அனுபவ ரீதியாக பெற்றுக் கொள்ள முயற்சித்தார்கள்.
فخرج من بغداد سائحا فى الأرض، مُتنقِّلا بين مكّةَ ودمشقَ، وبيتِ المقدّس، مُلازِما للخلوة، تاركًا الجاهَ والمالَ والعلمَ،
எனவே பக்தாத் நகரிலிருந்து வெளியாகி புனித மக்கஹ், சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் மற்றும் பைதுல் மக்திஸ் ஆகியவற்றுக்கிடையே பதவி, பட்டம், பொருளாதாரம் ஆகியவற்றை துறந்து தனிமையை (கல்வத்) அவசியமாக்கிக்கொண்டு சுற்றித் திரிந்தார்கள்.

قال تلميذه أبو بكر ابن العربي رحمه الله (رأيت الغزالي فى البرّيّة، وعليه مُرَقَّعةٌ ، وعلى عاتقه رَكوةٌ، وقد كنت رأيته ببغداد يحضـر دروسَه أربعُمأةِ عِمامةٍ، من أكابر النّاس وأفاضلِهم، يأخذون عنه العلم) الركوة: إناء صغير من جلد، يُشرب فيه الماءُ،
அவர்களின் மாணவர் அபூ பக்ர் இப்னுல் அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். நான் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களை ஸூபிய்யாக்களின் ஆடை அணிந்தவராக வனாந்தரப் பகுதிகளில் கண்டேன். அவர்களின் தோள்புயத்தில் தோலினால் ஆன ஒரு நீர் அருந்தும் பாத்திரமும் இருக்கக் கண்டேன். அதேபோன்று பக்தாதில் அவர்களின் சபையில் 400 தலைப்பாகை அணிந்த பெரியவர்கள் அவர்களிடமிருந்து அறிவு கற்பதையும் கண்டுள்ளேன்.
وبعد عشـر سنين من السّياحة والخلوة والمجاهدة على طريقة المتصوّفة ، عاد الغزاليّ إلى طُوس، وبَنَى بِجِوارِ دارِه مدرسةً للفقهاء ومأوى للصّوفيّة،
இவ்வாறு சுற்றியும் “கல்வத்” தனித்திருந்தும், நப்ஸுடன் போராடியும் பத்து வருடங்களின் பின் மீண்டும் தூஸ் நகர் நோக்கி வந்து தன்னுடைய வீட்டுக்கு அருகில் ஒரு “புகஹாஉ” சட்டக் கலை வல்லுநர்களுக்கு ஒரு கல்லூரியையும், ஸூபிய்யாக்களுக்கு ஒரு தளத்தையும் கட்டினார்கள்.
وفى آخر عمره أقبل على طلب الحديث ، ومُجالسة أهله، حتّى توفّي سنة 505 هـ ،
தன்னுடைய இறுதி காலத்தில் தான் மரணிக்கும் வரை (ஹிஜ்ரீ 505) ஹதீதுகளைத் தேடிப்படித்து, “முஹத்திதீன்” களுடன் அமர்வதையும் ஆக்கிக் கொண்டார்கள்.

وللغزاليّ مؤلّفات كثيرة فى التصوّف والفقه والأصول والمنطق وعلم الكلام والردّ على الفلاسفة وغير ذلك،

ومن الكتب الّتي ألّفها بعد سلوكه طريقَ التصوّف
01) إحياء علوم الدين
02) المنقذ من الضلال
03) المضنون به على غير أهله
04) المضنون به على أهله
05 ) مشكاة الأنوار
06 ) المقصد الاَسْنَى فى شرح أسماء الله الحُسنى
இமாம் கஸ்ஸாலீ அவர்களுக்கு ஸூபித்துவம், சட்டக்கலை, “உஸூல்” அடிப்படை, தர்க்கவியல், “இல்முல் கலாம்” கொள்கையறிவு, தத்துவ வாதிகளுக்கு மறுப்பு, இன்னும் இது போன்றவற்றில் அதிகமான நூற்கள் உள்ளன.

அவர்கள் ஸூபிஸ வழியில் சென்ற பிறகு கோர்வை செய்த நூற்கள்:

01. இஹ்யாஉ உலூமித்தீன்
02. அல் முன்கிது மினள்ளலால்
03. அல் மள்னூனு பிஹீ அலா ஙைரி அஹ்லிஹ்
04. அல் மள்னூனு பிஹீ அலா அஹ்லிஹ்
05. மிஷ்காதுல் அன்வார்
06. அல் மக்ஸதுல் அஸ்னா பீ ஷர்ஹி அஸ்மாஇல்லாஹில்
ஹுஸ்னா
وينقل الغزالي رحمه الله إجماعَ الصوفيّة على اعتقاد وحدة الوجود، فيقول العارفون – بعد العروج إلى سماء الحقيقة – اتّفقوا على أنّهم لم يَرَوْا فى الوجود إلّا الواحدَ الحقَّ، لكن منهم من كان له هذه الحال عرفانا علميّا، ومنهم من صار له ذلك حالا ذوقيّا، وانتفتْ عنهم الكثرةُ بالكليّة، واستغرقوا بالفردانيّة المَحْضَةِ …..،
இமாம் கஸ்ஸாலீ அவர்கள் ஸூபீகள் அனைவரும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். மேலும் ஆரிபீன்கள் – ஞானிகள் எதார்த்தம் என்ற வானின் பக்கம் உயர்த்தப்பட்ட பிறகு ஹக் தஆலா தவிர எதையும் காணவில்லை என்று ஏகோபித்துவிட்டதாகவும் கூறுகின்றார்கள். ஆனால் அவர்களில் சிலருக்கு இந்நிலமை அறிவு ஞானத்தைக் கொண்டு ஏற்படுவதாகவும், மேலும் சிலருக்கு அனுபவத்தால் ஏற்படுவதாகவும், அவர்கள் அனைவரிடத்திலும் பல அல்லது இருமை என்பது இல்லாமலாகி தூய ஏகத்துவத்தில் மூழ்கிவிட்டதாகவும் கூறுகின்றார்கள்.
وهذه الحالة إذا غلبت سُمّيت بالإضافة إلى صاحب الحالة فناءً، بل ‘فناءَ الفناء ‘ ، ….. وتُسمّى هذه الحالة بالإضافة إلى المستغرق به بلسان المجاز إتّحادا، أوبلسان الحقيقة تَوحيدا، ووراء هذه الحقائق أيضا أسرارٌ يطول الخوض فيها، (مشكاة الأنوار للغزالي، ص 72 – 76 )
இந்நிலை மிகைத்தால் அந்நிலையுடைவரைப் பொறுத்து “பனா” என்று சொல்லப்படும்…. மேலும் இந்நிலை மூழ்கக் கூடியவரைப் பொறுத்து “மஜாஸ்” அடிப்படையில் “இத்திஹாத்” என்றும், “ஹகீகத்” அடிப்படையில் “தௌஹீத்” என்றும் கூறப்படும். இவ் எதார்த்தங்களுக்கு அப்பால் பல இரகசியங்கள் உள்ளன. அதிலே பேச்சு நீண்டு விடும்.
(மிஷ்காதுல் அன்வார், பக்கம்: 72 -76)
ومن أقوال الغزالي رحمه الله الدالّةِ على وحدة الوجود قولُه : ههنا نظران، النّظر بعين التوحيد المحضِ وهذا النّظر يُعرِّفك قطعا أنّه الشاكر وأنّه المشكور، وأنّه المحِبُّ وأنّه المحبوب، وهذا نظر من عرف أنّه ليس فى الوجود غيرُه،
(86- إحياء علوم الدين، 4)
மேலும் இமாம் கஸ்ஸாலீ அவர்களின் “வஹ்ததுல் வுஜூத்” ஐக் காட்டக் கூடிய பேச்சுக்களில் நின்றும்: இங்கு இரு பார்வைகள் உள்ளன. தூய ஏகத்துவத்தின் கண் கொண்டு பார்த்தலாகிறது உனக்கு நன்றி செலுத்துபவனும், நன்றி செலுத்தப்படுபவனும் அவனே என்பதை தெளிவாகக் காட்டும். மேலும் நேசிப்பவனும், நேசம் வைக்கப்படுபவனும் அவனே என்றும் தெளிவாகக் காட்டும். இது உள்ளமையில் அவனன்றி எதுவுமில்லை என்று அறிந்தவனின் பார்வையாகும்.
(இஹ்யாஉ உலூமித்தீன், 86 -4 )
يقول الغزالي رحمه الله: والعارفون لم يفهموا من قوله (الله أكبر) أنّه أكبر من غيره، حاش لله إذ ليس فى الوجود معه غيرُه، حتّى يكونَ هو أكبرَ منه، بل ليس لغيره رُتبة المعيّة ، بل ليس لغيره وجود إلّا من الوجه الّذي يليه، فالموجود وجهُه فقط، ومُحال أن يقال إنّه أكبرُ من وجهه، (مشكاة الأنوار للغزالي ص – 71 )

மேலும் கஸ்ஸாலீ றஹிமஹூல்லாஹ் கூறுகின்றார்கள். “ஆரிபீன்கள்” – ஞானிகள் “அல்லாஹு அக்பர்” என்பதிலிருந்து அல்லாஹ் பிறிதொன்றைவிடப் பெரியவன் என்று விளங்கவில்லை. ஏனெனில் இன்னொன்றைவிடப் பெரியவன் என்று விளங்க அல்லாஹ்வுடன் அவனல்லாத ஒன்று இல்லை. அவனல்லாதவற்றுக்கு உடனிருத்தல் “மஇய்யத்” என்பது இல்லை. இன்னும் சொன்னால் அவனல்லாதவற்றுக்கு “வுஜூத்” என்பதே இல்லை. இருப்பது அவன் மாத்திரமே. ஆகவே இன்னொன்றை விடப் பெரியவன் என்று கூறுவது அசாத்தியமாகும்.
(மிஷ்காதுல் அன்வார், பக்கம்: 71)

فالكائنات ليس لها عنده – الغزالي -وجود حقيقيّ، بل هي من حيث ذاتها معدومةٌ، وهي موجودة بوجود الله، وفى هذا يقول (والوجودُ ينقسم إلى ماللشيئ من ذاته، وإلى ما له من غيره، وما له الوجودُ من غيره فوجوده مستعارٌ ، لا قِوام له بنفسه، بل إذا اعتُبر ذاتُه – من حيث ذاته – فهو عدم محض، وإنّما هو موجود من حيثُ نسبتِه إلى غيره، وذلك ليس بوجود حقيقيّ كما عرفت فى مثال استعارة الثوب من الغنيّ فالموجود الحقّ هو الله تعالى، كما أنّ النّور الحقّ هو الله تعالى،
(مشكاة الأنوار للغزالي ، ص 68 )
இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் சிருஷ்டிகளுக்கு எதார்த்தமான வுஜூத் – உள்ளமை இல்லை என்பதுதான் முடிவு. அவற்றின் “தாத்” இருப்பு என்ற வகையில் அவை இல்லாதவை. ஆனால் அல்லாஹ்வின் உள்ளமை கொண்டே உளதாகத் தெரிகின்றன. இந்த விடயத்தைப் பின்வருமாறு கூறுகின்றார்கள். “வுஜூத்” – உள்ளமை என்பது இரண்டு வகைப்படும். ஒன்று, தன்னுடைய இருப்பைக் கொண்டு உளதாக இருத்தல். இரண்டு, தன்னல்லாததின் இருப்பைக் கொண்டு உளதாகத் தெரிதல். இவ்வாறு தன்னல்லாததின் இருப்பைக் கொண்டு உளதாக இருக்கக் கூடிய ஒன்றின் “வுஜூத்” உள்ளமை ஆகிறது இரவலாகும். தன்னைக் கொண்டு தரிபாடானது அல்ல. அதன் “தாத்” – இருப்பை எடுத்துக் கொண்டால் அது அறவே இல்லாதது. அது இருப்பதாகிறது தன்னல்லாததைக் கொண்டாகும். அது எதார்த்தமான வுஜூத் அல்ல. ஒரு செல்வந்தனிடமிருந்து உடுப்பை இரவலாகப் பெற்றுக் கொள்ளல் என்ற உதாரணத்தில் இருந்து நீ விளங்குவது போன்று. எனவே உண்மையான வுஜூத் – உள்ளமை அல்லாஹ் மாத்திரமே! உண்மையான ஒளி அல்லாஹ்மாத்திரமே என்பது போன்று.(மிஷ்காதுல் அன்வார் , பக்கம்:68 )
ويقول الغزالي: أنّ أهمّ جوانب كمال الله ورُبُوبيّته إثباتُ تفرُّدِه بالوجود، ونفيُ الوجود عن غيره، ويُقرِّرُ أنّ إثبات موجودٍ مع الله شركٌ محقَّقٌ، مستلزمٌ لوصف الله بالنّقائِص،
மேலும் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள். அல்லாஹ்வின் சம்பூரணத்துவம், பிரபு நிலை என்பதில் மிக முக்கியமான விடயம் உள்ளமையைக் கொண்டு தனித்திருத்தல். அதாவது அவன் மாத்திரமே இருத்தல். அவனல்லாதவற்றுக்கு உள்ளமை இல்லை என்றாக்குவதாகும். அல்லாஹ்வுடன் இன்னொன்று இருத்தல் என்பது திடமான இணை, அவனுக்கு பரிபூரணம் இல்லை, அவன் குறையுள்ளவன் என்பதாகும்.

وفى هذا يقول الغزالي رحمه الله: ومعنى الرُّبوبيّة التوحُّدُ بالكمال والتفرُّدُ بالوجود على سبيل الإستقلال،….. فإنّ المشاركة فى الوجود نقصٌ لا مَحالةَ،….. والمنفرِدُ بالوجود هو الله تعالى، إذ ليس معه موجود سواه،
(إحياء علوم الدين، 3 ஃ 281 )
இதை அவர்கள் பின்வருமாறு சுட்டிக் காட்டுகின்றார்கள். பிரபு நிலை என்பதன் கருத்து அவன் மாத்திரமே பரிபூரணமாக இருத்தலும், அவன் மாத்திரமே உள்ளமையாக இருத்தலுமாகும்…. உள்ளமையில் கூட்டென்பது சந்தேகமின்றி குறையாகும். “வுஜூத்” உள்ளமை கொண்டு தனித்திருத்தல் என்பது அல்லாஹ் மாத்திரமே. அப்படியானால் அவனன்றி எதுவும் இல்லை என்பதாகும்.
(இஹ்யாஉ உலூமித்தீன், 281 – 3 )

ويقول أيضا : إنّ من لم يُبصـر فناءَ غير الموجود الحقّ، فأثبت موجودا آخر مع الله تعالى فهذا مشـرك تحقيقا،
(إحياء علوم الدين ، 4 ஃ 86 )
மீண்டும் கூறுகின்றார்கள். எவன் ஒருவன் அல்லாஹ் தவிரவுள்ளவை இல்லை என்று பார்க்கவில்லையோ அவன் அல்லாஹ்வுடன் இன்னொன்றைத் தரிபடுத்துகின்றான். இது திடமான இணைவைப்பாகும்.
(இஹ்யாஉ உலூமித்தீன், 86-4)
ويقرّ الإمام الغزالي رحمه الله أنّ عقيدة الصوفيّة التي يدعو إليها تَتَنَافَى مع كلمة التوحيد (لا إله إلّا الله ) الّتي هي عنده دالّة على توحيد العوامّ المحجوبين عن الحقيقة،
மேலும் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள். ஸூபிய்யாக்களின் கொள்கையாகிறது எதார்த்தத்தை விட்டும் திரையிடப்பட்ட பாமரர்களின் தௌஹீதின் பால் காட்டக் கூடிய “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவுடன் நிலை பெறாது.
يقول الغزالي : فإذن لا إله إلّا هو: فإنّ الإله عبارة عما الوجه موليه نحوه بالعبادة والتأله: أعنى وجوه القلوب فإنّها الأنوار، بل كما لا إله إلّا هو، فلا هو إلّا هو، لأنّ ‘ هو ‘ عبارة عما إليه إشارة كيفما كان، ولا إشارة إلّا إليه،…..
இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள். “லா இலாஹ இல்லா ஹூ” என்பதாகும். “இலாஹ்” என்பது வணங்குவது கொண்டு, வழிபடுவது கொண்டு எதனளவில் முகம் முன்னோக்குகின்றதோ அதற்குச் சொல்லப்படும். அதாவது இதயங்களின் முகங்கள். அவைகள் ஒளிகளாகும். ஆனால் “லாஇலாஹ இல்லா ஹூ”, “லா ஹூ இல்லா ஹூ” போன்றதாகும். “ஹூ” என்பது அவன் எவ்வாறிருந்தாலும் அவனையே சுட்டி நிற்கின்றது….
فإذن ‘ لا إله إلّا الله ‘ توحيد العوامّ ، ‘ ولا إله إلّا هو ‘ توحيد الخواصّ، لأنّ هذا أتمّ وأخصّ وأشمل وأحقّ وأدقّ وأدخل بصاحبه فى الفردانيّة المحضة والوحدانيّة الصرفة، (مشكاة الأنوار، ص 79 )
எனவே “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பது பாமரர்களின் தௌஹீதாகும். “லா இலாஹ இல்லா ஹூ” என்பது குறிப்பானவர்களின் – விஷேடமானவர்களின் “தௌஹீத்” ஆகும். இதுவே பரிபூரணமானதும், குறிப்பானதும், மிக நுட்பமானதும் தகுதியானதுமாகும். இவ்வாறு நம்புபவரே பரிபூரண ஏகத்துவத்தில் நுழைந்தவராகுவார். (மிஷ்காதுல் அன்வார், பக்கம்: 79)

و’لا هُوْ إلّا هُوْ ‘ يعنى بها أن لا موجود فى الكون إلّا الله، وأنّ كُلّ ما يُرى فهو الله،
“லா ஹூ இல்லா ஹூ” என்பது கொண்டு அல்லாஹ் தவிர எந்தப் படைப்பும் இல்லை என்பதையே கருதுகிறார்கள். பார்க்கப்படுபவை அனைத்தும் அவை அல்லாஹ் என்றும் கருதுகின்றார்கள்.
هذا محمد الغزالي صرّح بوحدة الوجود فى مواضع كثيرة من كتابيه ‘ إحياء علوم الدين ‘ ، و’مشكاة الأنوار ‘ كما نقلت بعض العبارات منهما، وهذه العبارات المنقولة قد صرّحت بوحدة الوجود، وصرّحت أيضا بأنّ الغزالي مؤمن بوحدة الوجود، وناطق بها ومصرّح بها كتابة وخطبة،
இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய “மிஷ்காதுல் அன்வார்” மற்றும் “இஹ்யாஉ உலூமித்தீன்” போன்ற நூற்களில் பல இடங்களில் நான் எழுதிக் காட்டியது போன்று “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையைப் பகிரங்கமாக, தெளிவாகக் கூறியுள்ளார்கள். நான் எழுதிக்காட்டிய வசனங்கள் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை ஏற்றுக் கொண்டு, அதைப் பகிரங்கமாகப் பேசியும், எழுதியும் உள்ளார்கள் என்பதையே காட்டுகின்றன.
فالعجب من شيخ يمنع مريديه من مطالعة كتابه (إحياء علوم الدين) ومِنْ مسِّه بأيديهم، مع كونه مشهورا فى العالم الإسلاميّ ومقبولا عند جميع الأئمّة المعتَمَدين، والإمام الغزالي يُحْيِيْ قلوب المريدين بإحيائه، ولكن هذا الشيخ يميت قلوب المريدين بمنعه من مطالعته ، ويصيّرهم جاهلين بالله كعادته وغافلين عنه، ويُمرِضُهم بأمراض القلوب،ள்!

ஆனால் ஆச்சரியம் என்னவெனில், இமாம் கஸ்ஸாலீ அவர்கள் எழுதிய “இஹ்யாஉ உலூமித்தீன்” இஸ்லாமிய உலகில் பிரபல்யாமான ஏற்றுக் கொள்ளப்பட்ட நூலாக இருந்தும் அதனைத் தொடுவதைவிட்டும், அதை வாசிப்பதை விட்டும் தன்னுடைய முரீதுகளை தடுக்கின்றார் ஒரு ஷெய்கு – குரு நாதர். இமாம் கஸ்ஸாலீயோ தன்னுடைய இஹ்யாஉ உலூமித்தீன் மூலம் முரீதீன்களின் உள்ளங்களை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த ஷெய்கு – குரு நாதர் அதை வாசிப்பதை விட்டும் தடுப்பதன் மூலம் முரீதுகளின் உள்ளங்களை மரிக்கச் செய்கின்றார். மேலும் அவர்களை அல்லாஹ்வை அறியாதவர்களாக்கி, உள நோயுள்ளவர்களாக ஆக்குகின்றார்.
وأتذكّر هنا سيّدا عاش فى بلدة بَلْقَامْ قبل سنين ، اسمه السيّد يحيى رحمه الله رحمة واسعة، أعطى كتابَ إحياء علوم الدين حائرا فى معرفة الله جالسا فى داره ساكتًا لا يتكلّم مع أحد ، فقال له ‘ أنا يحيى، هذا إحياء ، طالع إحياء، وأنت تُحيى ‘
பல வருடங்களுக்கு முன் வெலிகமவில் இருந்த ஒரு ஸெய்யித் – நபீ வழித் தோன்றலை இங்கு நான் நினைவு கூறுகின்றேன். அவரது பெயர் அஸ் ஸெய்யித் யஹ்யா றஹிமஹுல்லாஹ். இறைஞான வழியில் முறையற்ற விதத்தில் சென்று எவருடனும் பேசாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த, தடுமாறிய ஒருவருக்கு “இஹ்யா உலூமித்தீன்”ஐக் கொடுத்து “அன யஹ்யா, ஹாதா இஹ்யா, தாலிஃ இஹ்யா, வஅந்த துஹ்யா” (நான் யஹ்யா, இது இஹ்யா, இஹ்யாவை வாசி, நீ உயிர் பெறுவாய்) என்று கூறிக் கொடுத்தார். அவர் சுகம் பெற்றார்.
أيّها العلماء المنكرون وحدةَ الوجود! والقائلون بكفرها وردّة قائلها! ما فتواكم عن الإمام الغزالي – بحر وحدة الوجود -؟ أهو مؤمن أو هو مرتدّ؟ وما فتواكم عن شيخ منع مريديه من مطالعة إحياء علوم الدين ؟ أظهروا فتواكم وأظهروا تقواكم، قبل أن يطوي الرقيب والعتيد دفترهما،
“வஹ்ததுல் வுஜூத்”ஐ மறுக்கக் கூடிய உலமாஉகளே! அது “குப்ர்” என்றும், அதைப் பேசுபவன் “முர்தத்” என்றும் கூறுபவர்களே! “வஹ்ததுல் வுஜூத்”இன் கடல் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் பற்றி உங்கள் தீர்ப்பு என்ன? அவர்கள் முஃமினா? அல்லது முர்தத்தா? மேலும் தன்னுடைய முரீதுகளை அதை வாசிப்பதை விட்டும் தடுக்கின்ற ஷெய்கு நாயகம் – குரு நாதர் பற்றிய தீர்ப்பு என்ன? உங்களின் “பத்வா” மற்றும் “தக்வா”வை “றகீப்” , “அதீத்” அலைஹிமஸ்ஸலாம் ஏட்டை மூடுமுன் வெளிப்படுத்துங்கள்.

#இமாம்_இப்னுல்_பாரிள்_றஹிமஹுல்லாஹ்_அன்னவர்கள்.

هو عُمر بن عليّ بن مرشد الحموي، حمويّ الأصل، مصـريّ المولد والمنشأ والوفاة، عُرف بابن الفارض، لأنّ والده كان يُثبت الفروض للنّساء على الرجال عند القُضاة، وُلد بالقاهرة سنة 576 هـ، واشتغل فى أوّل حياته بطلب العلم ، فَدَرَسَ الحديث والفقه الشافعيّ وعلوما أخرى،

அவர்களின் இயற் பெயர் உமர் ஆகும். அவர்களின் தந்தை அலீ என்பவரும் அவர்களின் தந்தை முர்ஷித் அல் ஹமவீயும் ஆகும். அடிப்படை “ஹமவீ” நகரைச் சார்ந்தவர்கள் (சிரிய பகுதியில் உள்ள ஓர் ஊர்). இவர்கள் பிறந்தது, வளர்ந்தது, வபாத் ஆனது அனைத்தும் எகிப்து ஆகும். இப்னுல் பாரிள் என்று அறியப்பட்டவர்கள். காரணம் அவர்களின் தந்தை பெண்களுக்கு ஆண்களால் செய்யப்பட வேண்டிய கடமைகளை காளீ – நீதிபதிகளிடம் நிலைநாட்டுபவராக காணப்பட்டார்கள். இவர்கள் (இப்னுல் பாரிள்) கெய்ரோவில் ஹிஜ்ரீ 576ல் பிறந்தார்கள். தனது ஆரம்ப காலத்தில் அறிவைத் தேடுவதில் ஈடுபட்டார்கள். ஹதீது, ஷாபிஈ மத்ஹப் சட்டங்கள் மற்றும் ஏனைய அறிவுகளைக் கற்றார்கள்.

ثمّ سَلَكَ طريقَ الصوفيّة، وسافر بإشارة من أحدِ شيوخه إلى مكّة، فأقام فيها خمسة عشـر عاما، مُرَوِّضًا نفسه على طريقة الصوفيّة، فكان يخرج إلى الأماكن النّائية الخَرِبة، ويَسيح فى شِعاب مكة وأودِيتها، وكان يبقى أيّاما لا يأكل ولا ينام،

பின்பு ஸூபிய்யாக்களின் வழி சென்றார்கள். தன்னுடைய ஷெய்குமார்களில் நின்றும் ஒருவரின் கட்டளைக்கமைய புனித மக்கஹ் நகர் நோக்கிப் பயணித்தார்கள். தன்னுடைய “நப்ஸ்”ஐ ஸூபிய்யாக்களின் வழியில் பழக்குபவர்களாக அங்கு 15 வருடங்கள் தங்கியிருந்தார்கள். தூரப் பிரதேசங்களுக்குச் செல்பவராகவும் இருந்தார்கள். மக்கஹ் மற்றும் அதன் சூழவுள்ள பிரதேசங்களில் நடந்து திரிந்து, பல நாட்கள் உண்ணாமல், உறங்காமல் தங்குவார்கள்.

وبعد أن بلغ ابن الفارض درجةَ الكمالِ الصوفيّ، بوصوله إلى ذروة الإعتقاد بوحدة الوجود، عاد إلى القاهرة سنة 628 هـ فاشتهر أمره عند العامّة والحُكّام، وعظّمه الصوفيّة وغَلَوا فيه، حتّى عدَّوْه قطب زمانه، ولقّبوه سلطان العاشقين، وإمام المحبّين، وتوفّي سنة 632 هـ،

இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை நம்புவதில் உச்ச நிலையை அடைவது கொண்டு அவர்கள் ஸூபிஸத்தில் பரிபூரண நிலையை அடைந்த பின் மீண்டும் ஹிஜ்ரீ 628ல் கெய்ரோ திரும்பினார்கள். அவர்கள் பொது மக்களிடத்திலும், ஞானிகளிடத்திலும் பிரபல்யமானார்கள். ஸூபீகள் அவர்களை உச்ச நிலையில் கண்ணியம் செய்தார்கள். எந்தளவு என்றால், அவர்கள்தான் அக்காலத்து “குத்பு” என்று எண்ணினார்கள். “ஸுல்தானுல் ஆஷிகீன்” (காதலர்களின் அரசன்), “இமாமுல் முஹிப்பீன்” (காதலர்களின் தலைவன்) என்று அவர்களுக்கு பட்டம் சூட்டினார்கள். இமாம் இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் ஹிஜ்ரீ 632ல் வபாத் ஆனார்கள்.

وديوان الشِّعر هو ا|لإنتاج الوحيد لابن الفارض، فلم يؤلّف كتابا، ولم تُرْوَ عنه أقوال فى علوم الصوفيّة، ولكن مع هذا فإنّ أثره على الصوفيّة – كان ولا يزال – عظيما، وذلك يرجع إلى أنّه أشعرُ المتصوّفين، وحاملُ لِواء الشِّعر بينهم،

இப்னுல் பாரிள் அவர்களின் கவிதைத் தொகுப்பு ஒன்று மட்டுமே அவர்களின் வெளியீடாகும். அவர்கள் எந்த ஒரு நூலையும் தொகுக்கவில்லை. அவர்களைத் தொட்டும் “தஸவ்வுப்” கலையில் எந்தவொரு சொல்லும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையிலும் அவர்களின் பிரதிபலிப்பு ஸூபிய்யாக்களிடம் மிக வலுப்பமானது. எந்த அளவு என்றால் ஸூபிய்யாக்களில் மிகப் பெரிய கவிஞன் என்று கூறப்படுகின்றது. கவி என்ற கொடியை ஸூபிய்யாக்கள் மத்தியில் சுமப்பவர்களாகவும் கருதப்படுகின்றது.

ولـهذا فَقَدْ أكثر مؤلّفوا الصوفيّة من الإستدلال بشعره على مسائل التصوّف، وكانت قصائدُه زَادَ الصوفيّة فى مجالس السَّماع، (أنظر: التصوّف الإسلاميّ فى الأدب والأخلاق لِزَكيّ مبارك (1ஃ 309 ) وكان الطُّلّاب يدرسون ديوانه، بل ويحفظونه عن ظهر قلب، (أنظر : الفارض والحبّ الإلهي لمحمد مصطفى حِلمي ص 84 )

இதன் காரணமாகவே “தஸவ்வுப்” உடைய விடயத்தில் அவர்களின் கவிதையிலிருந்து ஸூபிய்யாக்கள் அதிகமானவற்றை ஆதாரங்களாக காட்டுகின்றார்கள். “மஜ்லிஸுஸ் ஸமாஇ” எனும் சபைகளில் ஸூபிய்யாக்களின் உணவாக அவர்களின் கவிதைகள் ஆகிவிட்டன. (அத் தஸவ்வுபுல் இஸ்லாமீ பில் அதபி வல் அக்லாகி – ஸகீ முபாறக் , பக்கம் 309 பாகம் 01 ) மாணவர்கள் அவர்களின் கவிப் பெட்டகத்தை படிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். மாறாக அதனை உள்ளத்தில் மனனம் செய்யக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். (அல் பாரிள் வல் ஹுப்புல் இலாஹீ – முஹம்மத் முஸ்தபா ஹில்மீ, பக்கம் 84)

يقول أحمد بن عبد العزيز القصير مصنّف كتاب ‘عقيدة الصوفيّة وحدة الوجود الخفيّة ‘- وشعر ابن الفارض شعر رائقٌ، عذْبٌ، ولكنّه يَنْعق بوحدة الوجود، ولهذا فقد شبّهَهُ الذّهبي بـ ‘الْفَالُوْذَج المسموم ‘

“அகீததுஸ் ஸூபிய்யா வஹ்ததுல் வுஜூதில் கபிய்யஹ்” எனும் நூலை எழுதிய அஹ்மத் அப்துல் அஸீஸ் அல் கஸீர் என்பவர் “இப்னுல் பாரிள் உடைய கவிதை தெளிவானது, இன்பமானது. ஆனால் அவர் காகம் கரைவது போன்று வஹ்ததுல் வுஜூத் பற்றி கரைகின்றார். இதனாலேயே இமாம் தஹபீ அவர்கள் இப்னுல் பாரிள் அவர்களின் கவிதையை “அல் பாலூதஜுல் மஸ்மூம்” (நஞ்சூட்டப்பட்ட இனிப்புப் பண்டம்) என்று ஒப்பிட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார்”

(إنّ الإمام الذّهبي ولو كان بحرا عميقا فى الحديث والتّاريخ – بعيد عن التصوّف بُعدَ الثّرى عن الثُّرَيّا، لأنّه يستهزأ بقصيدة ابن الفارض بقوله ‘ الفالوذج المسموم ‘ ، وهذا هوالدليل عندي لبُعده عن التصوّف بُعد المشـرق عن المغرب، ويُلحق به الدكتور أحمد بن عبد العزيز القصير، مؤلِّف كتاب ‘ عقيدة الصوفيّة وحدة الوجود الخفيّة ‘ ، لأنّه طعن على شعر ابن الفارض بقوله – بعبارته فى الكتاب المذكور – لكنّه يَنْعق بوحدة الوجود، لأنّ النّعق صوت الغراب، هدى الله هذا المصنّف إلى الصـراط المستقيم، إن كان حيّا، وغفر ذنوبه إن كان مات، وكذلك غفر الله ذنوب الإمام الذّهبي، )

(இமாம் தஹபீ ஹதீதுக் கலையிலும், வரலாற்றுக் கலையிலும் கடலாக இருந்தாலும் “தஸவ்வுப்” கலைக்கும் அவருக்கும் (துரையா நட்சத்திரத்திற்கும் , பூமிக்குமுள்ள தூரம் போன்று) வெகு தூரம். ஏனெனில் இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அவர்களின் கஸீதாவைக் கொண்டு ஏளனம் செய்கின்றார். இதுவே அவருக்கும் ஸூபிஸத்திற்கும் (உதயகிரிக்கும் அஸ்தகிரிக்குமிடையேயான தூரம் போன்று) வெகு தூரம் என்பதற்கு ஆதாரம். இமாம் தஹபீயின் இக்கருத்தை கலாநிதி அஹ்மத் அப்துல் அஸீஸ் அல் கஸீர் (அகீததுஸ் ஸூபிய்யா வஹ்ததுல் வுஜூதில் கபிய்யா நூலாசிரியர்) மேற்குறித்த தனது நூலில் கூறிக்காட்டுகின்றார். இந் நூலாசிரியர் உயிரோடிருந்தால் அல்லாஹ் அவருக்கு நேர்வழியைக் காட்டுவானாக! மரணித்திருந்தால் அவரது பாவங்களை மன்னிப்பானாக! அதே போன்று இமாம் தஹபீயின் பாவங்களையும் மன்னிப்பானாக!)

اشتهرت قصيدة ابن الفارض : التّائيّة الكبرى والميميّة فأمّا التّائيّة فهي أطولُ قصائده ، إذْ تبلغ 761 بيتا، وقد زعم أنّ النّبي صلّى الله عليه وسلّم أمره أن يُسمّيها ‘نظم السُّلوك ‘ وأمّا الميميّة فهي الّتي تُسمّى ‘ الخمريّة ‘ وعدد أبياتها 41 بيتا، وهاتان القصيدتان أصرَح قصائده، وأوضحُها فى الدّلالة على مذهبه فى وحدة الوجود، وأمّا باقي قصائده فهي – فى ظاهرها – قصائد غَزْليّة، يذكر فيها أوصاف النّساء، وشوقَه إليهنّ، وهو يَرْمُزُ بهنّ إلى الذّات الإلهيّة،
இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அவர்களின் அத் தாஇய்யதுல் குப்றா மற்றும் அல் மீமிய்யஹ் இரு கஸீதஹ் களும் பிரபல்யமானவை. “தாஇய்யஹ்” என்பது அவர்களின் கஸீதஹ்களில் பெரியது. 761 பாடல் அடிகளைக் கொண்டது. இந்த கஸீதஹ் வுக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் “நள்முஸ் ஸுலூக்” என்று பெயர் வைக்கச் சொன்னதாக கூறுகின்றார்கள். “மீமிய்யஹ்” என்ற கஸீதஹ் ஆகிறது அதற்கு “அல் கخம்ரிய்யஹ்” என்றும் சொல்லப்படுகின்றது. அது 41 பாடல் அடிகளைக் கொண்டதாகும். இவ்விரு கஸீதஹ் களும் இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் வழி “வஹ்ததுல் வுஜூத்” என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. அவர்களின் ஏனைய கஸீதஹ்கள் (அதிலே பெண்களில் மீது தனக்குள்ள காதலையும், அவர்களின் வர்ணனைகளையும் கூறுகின்றார்கள்) காதல் கவிதைகள் போன்று வெளிரங்கத்தில் தெரிந்தாலும் அதைக் கொண்டு அவர்கள் இறை காதலையே வெளிப்படுத்துகின்றார்கள்.

(كان فى الزمان الماضي شاعر مشهور صوفي زاهد، مجنون أو مجذوب بحبّ الله، اسمه العالم عبد القادر، والمشهور بِمَسْتانْ، له أشعار كثيرة ودِيْوانُ شِعرٍ فى التصوّف وفى وصف الله تعالى، يصف ربَّه بأشعاره كما يصف عاشق معشوقه وحبيب محبوبه، ويأتي بقصائده بألفاظ، يخالف ظاهرُها الشـريعة، مع كونها موافقة لها فى باطنها، ولكنّ علماء الظاهر – غير المتصوّفين – لا يقبلونه ولا يعظّمونه، ويقولون ‘ إنّه مَسْتَانٌ – سكران – يُلَقْلِقُ من شدّة سكرِ المُسْكِرات، كالحشيش والأفيون، ويحقّرونه تحقيرا، ويُفتونه بكفره، وينهون النّاس عن مطالعة ديوانه، وانشاد قصائده، وله أشعار تبلغ الآلاف، كلّها بلغة تامِلْ، قضـى هذا الشاعر أكثر زمانه فى الآجام، وفى حُفرة من الأرض، لئلّا يراه أحد ولا يَرى أحدا، كان الكافرون – الهندوسيّون – يحبّونه ويُعظّمونه ويأخذون منه العلوم، ويتبرّكون به، ويخدمونه خدمة العبيد، له مزار بعاصمة تامل نادو، مَدْرَاسْ، يزوره المحبّون، ونحن – معاشر المتصوّفة – نعظّمه ونوقِّره ، ونستدلّ بأشعاره، ) نماذج من أشعاره بلغة تَامِلْ :

(முன்னொரு காலத்தில் ஒரு பிரபல்யமான ஸூபீ இருந்தார்கள். அவர்கள் துறவியாகவும், இறை காதல் கொண்டு மஜ்தூப் ஆகவும் காணப்பட்டார்கள். அவர்களின் பெயர் அப்துல் காதிர். மஸ்தான் ஸாஹிப் அப்பா என்று பிரபல்யமானவர்கள். அவர்களுக்கு ஸூபிஸ ஞானத்திலும், இறை வர்ணனையிலும் பல கவிதைகள் உண்டு. தன்னுடைய கவிதைகள் மூலம் ஒரு காதலன் தன்னுடைய காதலியை வருணிப்பது போன்று வருணிக்கின்றார்கள். அவர்கள் பயன்படுத்துகின்ற சொற்பிரயோகங்கள் வெளிரங்கத்தில் ஷரீஅத்திற்கு முரணானது போல் தெரிந்தாலும், எதார்த்தத்தில் அவை ஷரீஅத்திற்கு முரணானதில்லை. ஆனால் ஸூபீகளல்லாத வெளிப்படையான உலமாஉகள் அவர்களை (மஸ்தான் ஸாஹிப் அப்பா) ஏற்றுக் கொள்வதுமில்லை. அவர்களை கண்ணியம் செய்வதுமில்லை. அவர் போதை தலைக்கேறிய ஒரு மஸ்தான். அதிக போதை காரணமாக உளறுகின்றார் என்று கூறுகின்றார்கள். மேலும் அவர்களை இழிவு படுத்துவது மாத்திரமின்றி அவர்களை காபிர் என்று கூறி அவர்களின் கவிதைகளை பார்ப்பதை விட்டும், பாடுவதை விட்டும் மக்களை தடுக்கவும் செய்கின்றார்கள். மஸ்தான் ஸாஹிப் அப்பா றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு ஆயிரக் கணக்கான கவிதைகள் தமிழ் மொழியில் காணப்படுகின்றன. இவர்கள் தன்னை யாரும் பார்த்து விடக் கூடாதென்றும், தான் யாரையும் காணக் கூடாதென்றும் தனது அதிகமான காலத்தை மறைவான இடங்களிலும், பதுங்கு குழிகளிலுமே கழித்துள்ளார்கள். ஆனால் இந்துக்கள் இவர்களை கண்ணியம் செய்து இவர்களிடமிருந்து அறிவு ஞானங்களைப் பெற்று இவர்களுக்கு பணிவிடை செய்தும் வந்தார்கள். இவர்களின் மஸார் தமிழ் நாட்டின் தலை நகர் மெட்றாஸில் உள்ளது. இவர்களை நேசிக்கக்கூடிய மக்கள் இவர்களை தரிசித்து அருள் பெற்று வருகின்றார்கள். ஸூபிஸ வழி செல்லக் கூடிய நாங்கள் இவர்களை கண்ணியம் செய்து, இவர்களின் கவிதைகளை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றோம். இவர்களின் கவிதைகளில் ஒரு சிலதை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன்.

01. என்னைப் போல் மாப்பிள்ளை மார் எத்தனை பேர்
உன்தனக்கு
உன்னைப் போல் பெண் எனக்கு இல்லை மனோன்மணியே!

02. கூந்தலுக்கு நெய்தோய்த்து குளிர் மஞ்சள் நீராட்டி
வார்ந்து சிங்காரித்து வைப்பேன் மனோன்மணியே!

03. காதம் பரிமளிக்கும் கஸ்தூரிப் பொட்டிடுவேன்
போதும் ஜவ்வாதணிந்து புணர்வேன் மனோன்மணியே!
04. ஊனாகி ஊனிலுயிராகி யெவ்வுலகுமாகி
யொன்றா யிரண்டுமாகி
உள்ளாகி வெளியாகி யொளியாகியிருளாகி
ஊருடன் பேருமாகி
கானாகி மலையாகி வளை கடலுமாகிமலை
கானக விலங்குமாகி
கங்குல்பகலாகி மதியாகிரவியாகி வெளி
கண்ட பொருளெவையுமாகி
நானாகி நீயாகியவனாகியவளாகி
நாத மொடு பூதமாகி
நாடு மொழிபுரியவடியேனுமுமை நம்பினேன்
நன்மை செய்தாளுதற்கே
வானோரு மடி பணிதலுள்ள நீர் பின் தொடர
வள்ளலிறஸூல் வருகவே
வளருமருள் நிறை குணங்குடிவாழுமென்னிருகண்
மணியே முஹ்யித்தீனே!

يقول ابن الفارض أنّ الذّات الإلهيّة كشفت له عن حقيقة الكون، وهو أنّه كلّه مَجَالِى لله تعالى، فكلّ ما يرى ببصـره فهو مظهر للوجود الإلهيّ بزعمه،

இமாம் இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் “இறைவனுடைய “தாத்” தனக்கு இப் பிரபஞ்சத்தின் எதார்த்த நிலையை காட்டியது. இப்பிரபஞ்சம் முழுவதும் அல்லாஹு தஆலாவின் வெளிப்பாடுகள். தன்னுடைய பார்வை கொண்டு காண்பவை அனைத்தும் இறை உள்ளமையின் வெளிப்பாடுகள்” என்று பின்வரும் பாடல் மூலம் கூறுகின்றார்கள்.

جَلَتْ فِى تَجَلِّيْهَا الوجود لناظري – فَفِيْ كُلِّ مَرْئِيٍّ أَرَاهَا بِرُؤْيَةٍ

ولئلّا يتوهّم أحد أنّ هذا الشُّعور بوحدة الوجود أمرٌ طارئٌ، أو مُوَقّتٌ بحال السّكر والمحو، أكّد ابن الفارض على أنّ اعتقاده بوحدة الوجود ثابتٌ فى حَالَيِ الصّحو والمحو،

எவரும் “வஹ்ததுல் வுஜூத்” ஐ உணர்வது புதிதான ஒரு விடயம் அல்லது போதையில் ஏற்படக் கூடிய விடயம் என்று எண்ணாமலிருக்க “வஹ்ததுல் வுஜூத்” ஐ நம்புதல் என் நிலையிலும் தரிபாடான விடயம் என்பதை பின் வரும் பாடல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

فَفِى الصَّحْوِ بَعْدَ الْمَحْوِ لَمْ أَكُ غَيْرَهَا -وَذَاتِيْ بِذَاتِيْ إِذَا تَحَلَّتْ تَجَلَّتِ

إنّ العاشق ابن الفارض – وإن لم يؤلّف كتابا – فهو فانٍ فى الله، وفانٍ فى ذاته ، وفان فى صفاته ، وفانٍ فى أسمائه وأفعاله ، وفانٍ بكليّته فى الله،

இமாம் இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் எந்தவொரு நூலையும் கோர்வை செய்யாவிட்டாலும் அவர்கள் இறைவனில் “பனா” வான, அவனது “தாத்” இல் “பனா” வான, அவனது “ஸிபாத்” தன்மைகளில் “பனா” வான, அவனது “அஸ்மா” க்களில் , அவனது செயல்களில் “பனா” வான ஏன் முழுமையாகவே அவனிலேயே “பனா” வான ஒரு மாமேதையாவார்கள்.
وأمّا أشعاره ‘ التائيّة ‘ فهي أشعار معروفة بين المتصوّفين، ومشهورة فى العالم الصوفيّ ، وما من صوفيّ فى العالم إلّا علم أحواله وأشعاره ومكانته عند الله،

அவர்களின் “அத் தாஇய்யஹ்” என்ற கவித் தொகுப்பாகின்றது ஸூபிய்யாக்களிடம் அறியப்பட்ட ஒன்றாகும். மேலும் ஸூபிஸ உலகில் பிரபல்யமானதுமாகும். உலகில் தோன்றிய எந்தவொரு ஸூபீயாவது இப்னுல் பாரிள் அன்னவர்களின் நிலைகளை அறியாதவராக, அவர்களின் கவிதைகளை அறியாதவராக, அல்லாஹ்விடம் அவர்களின் அந்தஸ்த்தை அறியாதவராக இருக்க முடியாது.

وبالإختصار أنّ ابن الفارض أكبر المتصوّفين حالا وذوقا وشهودا، وأقربهم إلى الله ، ومن لا له دخل فى علم التصوّف وعلمٌ بأحوال العاشقين حكم عليه بالردّة والكفر، وأفتى بإخراجه من بلده، لأنّه كان فى زمانه كالحلّاج المقتول فى زمانه،
சுருங்கக் கூறின், இப்னுல் பாரிள் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் ஸூபிய்யாக்களில் நிலையாலும், அனுபவத்தாலும், காட்சி நிலையாலும் பெரியவர்கள் என்பதாகும். மேலும் அவர்களில் அல்லாஹ்வை மிக நெருங்கியவர்களுமாவார்கள். ஸூபிஸக் கலையில் அனுபவம் இல்லாத, ஆஷிகீன் – இறை காதலர்கள் பற்றி அறிவில்லாத மடையர்கள், அவர்களை “முர்தத்” என்றும், “காபிர்” என்றும் தீர்ப்புச் செய்தார்கள். அவர்களை ஊரை விட்டும் வெளியேற்றும்படி “பத்வா” மார்க்கத்தீர்ப்பு வழங்கினார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் காலத்தில், இமாம் ஹல்லாஜ் அவர்கள் போன்றவராவார்.
أيّها العلماء الكرام المنكرون وحدة الوجود!
ما قولكم عن ابن الفارض العاشق الشاعر الفاني فى الله الباقى به، هل هو مرتدّ عن دين الإسلام لإعتقاده صحّةَ وحدة الوجود؟ أو هو موحّد مخلص؟ أظهروا فتواكم عنه؟ وأظهروا تقواكم، أو ارجعوا عن فتواكم؟

“வஹ்ததுல் வுஜூத்” இறையியலை மறுக்கக் கூடிய உலமாஉகளே!

அல்லாஹ்வில் அழிந்து, அவனைக் கொண்டு தரிபாடான, இறை காதலரான, கவிஞர் இப்னுல் பாரிள் அன்னவர்கள் பற்றி உங்கள் கருத்தென்ன? அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” இறையியலை சரி என்று நம்பியதால் இஸ்லாம் ஐ விட்டும் வெளியேறிவிட்டார்களா? அல்லது கலப்பற்ற ஏகத்துவ வாதியா? உங்கள் தீர்ப்பை வெளியிடுங்கள்? உங்கள் உள்ளச்சத்தை வெளிப்படுத்துங்கள்? அல்லது உங்கள் தீர்ப்பிலிருந்து மீளுங்கள்?

الشيخ_الأكبر_محي_الدين_ابن_عربي_رحمه_الله

#அஷ்_ஷெய்குல்_அக்பர்_முஹ்யித்தீன்_இப்னு_அறபீ_றஹிமஹுல்லாஹ்_அன்னவர்கள்.

(#மேற்கண்ட_தலைப்பிலான_இப்பதிவை_மிக_நிதானத்தோடும்_சிந்தனையோடும்_வாசிக்குமாறு_அன்பாய்க்_கேட்டுக்_கொள்கின்றோம்)

(#தொகுப்பு_மௌலவீ_அல்ஹாஜ்_A_அப்துர்_றஊப்_மிஸ்பாஹீ_பஹ்ஜீ)

هو محمد بن علي بن محمد، الحاتميّ الطائيّ المُرسي، الملقّب عند الصوفيّة بالشيخ الأكبر، المشهور عند أهل المشـرق بابن عربي، بدون أداة التعريف، ليُميّزوا بينه وبين القاضي أبي بكر ابن العربي، وأمّا أهل المغرب فشُهرته عندهم ابن العربي، بالألف واللّام، كما يسمّي هو نفسه بذلك فى كتبه،

அவர்களின் இயற் பெயர் முஹம்மத். அவர்களின் தந்தையின் பெயர் அலீ. ஸ்பெய்ன், ஹாதிம் தாஈ வமிசத்தைச் சேர்ந்தவர்கள். ஸூபிய்யாக்களிடம் “அஷ் ஷெய்குல் அக்பர்” என்று பெயர் பெற்றவர்கள். பூமி மத்தியின் கிழக்குப் பகுதியில் வாழ்பவர்களிடம் “அலிப், லாம்” இல்லாமல் “இப்னு அறபீ” என்று பிரபல்யமானவர்கள். காரணம் அந்த மக்கள் அல் காளீ அபூ பக்ர் இப்னுல் அறபீ அவர்களை விட்டும் வேறுபடுத்தி அறிவதற்கேயாகும். மொரோக்கோ வாசிகளிடம் “இப்னுல் அறபீ” என்பதாகும். (“அலிப்”, “லாம்” சேர்த்து) அஷ் ஷெய்குல் அக்பர் நாயகம் அன்னவர்களும் இவ்வாறே “அலிப்” , “லாம்” உடனேயே தன்னுடைய நூற்களில் எழுதுகின்றார்கள்.
وُلد فى مدينة مُرسيّة بالأُندلس سنة 560 هـ ، ولمّا بلغ الثامنةَمن عمره انتقلت أسرته إلى مدينة إشبيلية، وفيها بدأ بطلب العلم، فدرس القرآن والحديث والفقه، وعمل فى شبابه كاتبا لبعض الحُكّام،

ஸ்பெயினின் “முர்சியா” நகரில் ஹிஜ்ரீ 560ல் பிறந்தார்கள். தனது 8 வது வயதில் தன் குடும்பத்தாருடன் இஷ்பீலிய்யா – SEVILLA – நகரை நோக்கிச் சென்றார்கள். அங்கேதான் கல்வி கற்கத் தொடங்கினார்கள். அல் குர்ஆன், ஹதீது, சட்டம் போன்றவற்றைக் கற்றார்கள். தன்னுடைய வாலிப வயதில் சில நீதிபதிகளுக்கு எழுத்தாளராகப் பணி புரிந்தார்கள்.
ثمّ سلك طريق التصوّف، فانقطع عن الدنيا، وتزهَّدَ، واعتزلَ النّاس، وسَاحَ فى بُلدان الأندلس وشمالي إفريقة مُدّة عشـر سنين، إلتقى خلالها بعدد من شيوخ التصوّف،

பின்பு “துன்யா” இவ்வுலக தொடர்புகளைத் துண்டித்து “ஸூபிஸ” வழியில் சென்றார்கள். துறவறம் பூண்டு, மனித தொடர்புகளைக் குறைத்துக் கொண்டார்கள். சுமார் பத்து வருடங்கள் ஸ்பெய்ன் மற்றும் ஆபிரிக்க பகுதிகளில் சுற்றித் திரிந்தார்கள். இக்காலப் பகுதியில் ஸூபீகள் பலரைச் சந்தித்தார்கள்.

ثمّ اتّجه إلى مكّة فأقام بها سنتين، ثمّ أقام بمَلَطْيَة من بلاد الأَنَاضُول، وتزوّج بأمّ تِلميذه محمد القَونَوي، ثمّ استقرّ فى دمشق، إلى وفاته سنة 638 هـ (الأَنَاضُول معناها الشـرق، وتُطلق الآن على الأراضي الواقعة شرقيّ البحرالمُتوسِّط،وهي جزء من الجمهورية التركيّة)

பின்பு புனித மக்கஹ் நகரை நோக்கிச் சென்றார்கள். அங்கே இரண்டு வருடங்கள் தங்கினார்கள். அதன்பின் துருக்கி நாட்டு அனாளூல் – மலத்யஹ் பகுதியில் சிறு காலம் தங்கினார்கள். தன்னுடைய மாணவர் முஹம்மத் கவ்னவீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் தாயைத் திருமணம் செய்தார்கள். பின் டமஸ்கஸ் நகரிலேயே தனது “வபாத்” வரை (ஹிஜ்ரீ – 638) தங்கியிருந்தார்கள்.

والشيخ الأكبر محي الدين ابن عربي رحمه الله هو أكبر دُعاة وحدة الوجود، يرى ابن عربي أن (ما فى الوجود إلّا الله ) وأنّ جميعَ ما يُدركون بالحواسّ هو مظهرٌ للهِ تعالى، وهذه عنده ‘ حقيقةُ الحقائق ‘، الّتي تُفرِّق بين العارف بالله والجاهل به،

அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் அன்னவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய மகான்களில் மிகப் பிரசித்தி பெற்ற பெரிய மகான் ஆவார்கள். அவர்கள் “அல்லாஹ் தவிர எதுவுமே இல்லை” என்று நம்புகின்றார்கள். மேலும் புலன்களால் உணரப்படுபவை அனைத்தும் அல்லாஹு தஆலாவின் வெளிப்பாடுகள் என்றும் கருதுகின்றார்கள். இது – இந்த நம்பிக்கை அவர்களிடம் அல்லாஹ்வை அறிந்த ஞானிக்கும், அவனை அறியாத ஜாஹிலுக்கும் இடையே பிரித்துக் காட்டக் கூடிய “ஹகீகதுல் ஹகாயிக்” – எதார்த்தங்களின் எதார்த்தம் ஆகும்.

يقول الشيخ الأكبر ابن عربي رحمه الله(فإنّ العارف من يَرى الحقّ فى كلّ شيئ، بَلْ يراه عينَ كلّ شيئ) – (فصوص الحكم ، ص 192)

ஆரிப் – இறை ஞானி என்பவர் அனைத்து வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வை – ஹக்கை பார்ப்பவரே! இல்லை, அனைத்தையும் அவனாகப் பார்ப்பவரே! என்று அஷ் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்.
(புஸூஸுல் ஹிகம் – பக்கம்192)

فالعوامّ والمحجوبون يفرِّقون بين الحقّ والخلق، ويُثبتون للكون وُجودا غير وجود الله، ولكن هذا عند ابن عربي وهمٌ وخيالٌ، وفى هذا يقول : إنّما الكون خيالٌ، وهو حقٌّ فى الحقيقة ، (فصوص الحكم ، ص 160)

பாமரர்களும், திரையிடப்பட்டவர்களும் ஹக் (இறைவனையும்), கல்க் – படைப்பையும் பிரிக்கின்றார்கள். படைப்புக்கு அல்லாஹ்வின் வேறான ஒரு வுஜூத் – உள்ளமையை தரிபடுத்துகின்றார்கள். ஆனால் இது இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களிடம் பேதமை ஆகும். இதையே அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். படைப்பென்பது மாயை ஆகும். எதார்த்தத்தில் அது ஹக் – இறைவனே!
(புஸூஸுல் ஹிகம், பக்கம் – 160 )
والكون عنده معدومٌ ، والّذي جَعَلَنا نَتَوَهَّمُ وجودَه هو سَرَيَانُ الله فيه،

படைப்பென்பது அவர்களிடம் “இல்லாதது”. அது இருப்பது போன்று எமக்கு காட்சியளிப்பது அதிலே “ஹக்” ஊடுருவிப் பாய்வதினாலாகும்.

يقول الشيخ الأكبر ابن عربي: ولو لا سَرَيَانُ الحقّ فى الموجودات بالصورة، ما كان للعالَمِ وجود، (فصوص الحكم ، ص 55)

படைப்புக்கள் என்ற உருவத்தில் ஹக் தஆலா ஊடுருவிப் பாயவில்லையானால் இவ் வையகத்திற்கு “வுஜூத்” உள்ளமையே இருந்திருக்காது. (புஸூஸுல் ஹிகம், பக்கம் 55)

فالشيخ الأكبر ابن عربي لا يؤمن بالخلق من العدم ، وهو يفسّر وجود الموجودات بالتّجَلّى الإلهيّ الدّائم ، وظهورِ الله بصورة الكائنات، فعلى الحقيقة ليس هناك عند الشيخ الأكبر ابن عربي خالقٌ ومخلوقٌ،

அஷ் ஷெய்குல் அக்பர் நாயகம் சிருட்டி இல்லாமையிலிருந்து வந்ததென்று நம்பவில்லை. இப்படைப்புக்கள் இருப்பதானது நிரந்தரமான, இறைவனின் “தஜல்லீ” வெளிப்பாடு என்றே விபரிக்கின்றார்கள். அங்கே ஷெய்குல் அக்பர் நாயகத்திடம் “காலிக்” படைத்தவன், “மக்லூக்” படைப்பு என்று இரண்டு இல்லை. இக்கருத்தைப் பின்வரும் கவியின் மூலம் கூறிக் காட்டுகின்றார்கள்.
فَالْحَقُّ خَلْقٌ بِـهَذَا الْوَجْهِ فَاعْتَبِرُوْا
وَلَيْسَ خَلْقًا بِـذَاكَ الْوَجْهِ فَادَّكِرُوْا
مَنْ يَدْرِ مَا قُلْتُ لَمْ تَخْذُلْ بَصِيْرَتُهُ
وَلَـيْـسَ يَـدْرِيْهِ إِلَّا مَنْ لَـهُ بَـصَرٌ
جَـمِّـعْ وَفَـرِّقْ فَـإِنَّ الْعَيْـنَ وَاحِدَةٌ
وَهِـيَ الْكَثِـيْـرَةُ لَا تَبْقَـى وَلَا تَذَرُ
(فصوص الحكم ، ص 79)

(#மேற்கண்ட_தலைப்பிலான_இப்பதிவை_மிக_நிதானத்தோடும்_சிந்தனையோடும்_வாசிக்குமாறு_அன்பாய்க்_கேட்டுக்_கொள்கின்றோம்)

(#தொகுப்பு_மௌலவீ_அல்ஹாஜ்_A_அப்துர்_றஊப்_மிஸ்பாஹீ_பஹ்ஜீ)

وجعل الصوفيّة قولَ الشيخ الأكبر ابن عربي هو القولَ الفصلَ، والمعتمدَ فى مسائل التصوّف، وصار مِقْياسَ العلم بالتصوّف هومقدارُ ما يستوعب الصوفيُّ من آراء الشيخ الأكبر ابن عربي، بل اعتقدوا أنّ إدامةَ مطالعةِ كتبِه تجعل المرأ وليّا عارفا بالله ، (مراتب الوجود للجيلي، ص – 9 )
ஸூபிய்யாக்கள் இப்னு அறபீ நாயகத்தின் சொல்லையே இறுதி முடிவாக எடுத்துக் கொள்கின்றார்கள். ஸூபிஸம் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர்களின் சொல்லையே நம்பத்தகுந்த வார்த்தையாகவும் எடுத்துக் கொள்கின்றார்கள். ஒரு ஸூபீயின் தஸவ்வுப் பற்றிய அறிவின் அளவுகோல் அவர் இப்னு அறபீ நாயகத்தின் கருத்துக்களை எந்தளவு புரிந்து கொள்கின்றாரோ அந்த அளவு ஆகும். இல்லை. இப்னு அறபீ நாயகத்தின் நூற்களை ஒருவன் தொடர்ந்து படித்துவருவதால் அவனை அவை அல்லாஹ்வை அறிந்த வலிய்யாக ஆக்கும் என்று நம்புகின்றார்கள்.
(மறாதிபுல் வுஜூத் லில் ஜீலீ, பக்கம் – 9)

وباختصارٍ فقد صار ابن عربي (بُرهان متقدّمي هؤلاء الطائفة، وحُجّةَ متأخِّرِيهم) (المكتوبات للسّرهندي، 2 ஃ5 )

சுருங்கக் கூறின் இப்னு அறபீ நாயகம் இக் கூட்டத்தாரில் (ஸூபீகளின்) முன்னோர்களின் சான்றாகவும், பின்னோர்களின் ஆதாரமாகவும் ஆகிவிட்டார்கள்.
(அல் மக்தூபாத் லிஸ் ஸர்ஹன்தீ, பக்கம் 2-5 )

ويزعم محمد البُوطي أنّ ما فى كُتب ابن عربي من الأقوال الدالّة على وحدة الوجود مَدْسوسٌ عليه، ويرى أنّ الحقّ (الإمساك عن اتّهامه بأيّ جنوح أو زيغ، فإنّنا لا نملك أن نَجْزِمَ بأن هذا الباطل من كلامه يقينا، بل لا نملك حتّى الظّنَّ الراجح بذلك)
(التصوّف السليم جوهر ا|لإسلام، مقال للبوطي)
முஹம்மத் அல் பூதீ, இப்னு அறபீ நாயகம் அவர்களின் நூல்களில் “வஹ்ததுல் வுஜூத்”ஐ காட்டக் கூடிய அனைத்தும் அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுகின்றார். அவர்களை எந்தவொரு தவறைக் கொண்டும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதும், அவர்களின் பேச்சிலிருந்து இந்தப் பொய்யை உறுதி செய்யாமலிருப்பதும், நல்லெண்ணம் கொள்ளாமலிருப்பதும் உண்மை என்றும் கூறுகின்றார்.
(அத் தஸவ்வுபுஸ் ஸலீம் ஜௌஹறுல் இஸ்லாம் – மகாலுல் பூதீ)

وممّا ينقضُ هذا الزعم أنّ كتابه المشهور ‘ الفتوحات المكيّة ‘ يوجد منه الآن نسخة كاملة فى سبعة وثلاثين مجلّدا، هي بخطّ ابن عربي نفسه، وكتابه ‘ فصوص الحكم ‘ يوجد منه الآن نسخة بخطّ محمد القونوي تلميذ ابن عربي وربيبه، وعلى هذه النسخة سماع مصدّق عليه من ابن عربي، فهل دسّ ابن عربي على نفسه؟
(مؤلّفات ابن عربي لعثمان يحيى، ص – 431 ، 477 ، 479 )

இப்னு அறபீ நாயகம் அன்னவர்களின் பிரபல்யமான “அல் புதூஹாதுல் மக்கிய்யஹ்” என்ற நூல் இப்போதும் 37 வால்யூம் கொண்ட அவர்களின் கையெழுத்துப் பிரதிகளாக கிடைக்கப் பெறுவதும், மேலும் அவர்களின் பிரதான மாணவனும், வளர்ப்பு மகனுமாகிய முஹம்மத் அல் கவ்னவீ அவர்களின் கையெழுத்துடன் “புஸூஸுல் ஹிகம்” என்ற நூல் கிடைக்கப் பெறுவதும் (இப்பிரதிகளில் இப்னு அறபீ நாயகம் அவர்களிடமிருந்து கேட்டு உண்மைப்படுத்தப்பட்டவைகளும் உள்ளவை குறிப்பிடத்தக்கது), மேலே கூறிய முஹம்மத் அல்பூதீ உடைய நம்பிக்கையை மறுக்கின்றன. ஆகவே இப்னு அறபீ நாயகம் தன்மீது தானே இட்டுக் கட்டினார்களா? என்ற வினாவும் உண்டாகின்றது.

(முஅல்லபாது இப்னி அறபீ லிஉத்மான் யஹ்யா, பக்கம் – 431, 477, 479)

وهذا الكلام الوارد فى فصوص الحكم يؤمن به كلّ الصوفيّة، لأنّهم يؤمنون بأنّ ابن عربي هو وليّ الأولياء، وصدّيق الصِّدّيقين، ومقَرَّبُ المقرّبين، والشيخ الأكبر والكبريت الأحمر، وكتابه ‘ فصوص الحكم ‘ هو أعظم مؤلّفاته كلّها قدرًا، وأعمقُها غورا، وأبعدها أثرا، وقد شَرَحَه شُرَّاحٌ كثيرون من أئمّة الصوفيّة، وكُبرائهم حتّى صار ابن عربي يُعرف بِـ صاحب الفصوص،

இந்த புஸூஸுல் ஹிகம் என்ற நூலில் வரக் கூடிய பேச்சுக்களை அனைத்து ஸூபிய்யாக்களும் முழுமையாக நம்புகின்றார்கள். ஏனெனில் இப்னு அறபீ நாயகத்தை அவர்கள் அவ்லியாஉகளுக்கெல்லாம் அதிகாரியானவர்கள் என்றும், ஸீத்தீகீன்களுக்கெல்லாம் ஸித்தீக் என்றும், இறை நெருக்கத்தைப் பெற்றவர்களில் எல்லாம் மிக நெருக்கம் பெற்றவர்கள் என்றும், பெரும் ஷெய்கு (அஷ் ஷெய்குல் அக்பர்) என்றும், செங்கெந்தகம் (அல் கிப்ரீதுல் அஹ்மர்) என்றும் நம்புகின்றார்கள். அவர்களின் “புஸூஸுல் ஹிகம்” என்ற நூல் அவர்கள் கோர்வை செய்த நூற்களில் மிக ஆழம் நிறைந்த வலுப்பமானது என்றும் நம்புகின்றார்கள். அந்த நூலுக்கு ஸூபீ இமாம்களில் பல விரிவுரையாளர்கள் விரிவுரை எழுதியுள்ளார்கள். இப்னு அறபீ நாயகம் அன்னவர்களை “ஸாஹிபுல் புஸூஸ்” என்று அறியப்படும் அளவுக்கு விரிவுரை எழுதியுள்ளார்கள்.

ويقول ابن عربي نفسُه عن كتاب (الفصوص) ما يلي، أمّا بعد، فقد رأيتُ رسول الله صلّى الله عليه وسلّم فى مُبشِّرةٍ اُريتُها فى العشـر الآخر من محرّم سنة سبعٍ وعشـرين وستّمأةٍ، بِمحرُوسة دمشق، وبيده صلّى الله عليه وسلّم كتابٌ، فقال لي: هذا كتاب ‘فصوص الحكم ‘ ، خُذْهُ واخرج به إلى النّاس ينتفعون به، فقلت السَّمْعَ والطَّاعةَ لله ولرسوله وأولى الأمر منا كما أمرنا ، فحققت الأمنية وأخلصت النيّة، وجرّدتُ القصد والهمّة إلى إبراز هذا الكتاب ، كما حدّه لي رسولُ الله صلّى الله عليه وسلّم من غير زيادة ولا نُقصان،
(فصوص الحكم ، ص 47 )
இப்னு அறபீ நாயகம் தனது புஸூஸுல் ஹிகம் என்ற நூலைப் பற்றி கூறுகையில் பின்வருமாறு கூறுகின்றார்கள். அறிந்து கொள்! ஹிஜ்ரீ 627ம் ஆண்டு முஹர்றம் இறுதிப்பத்தில் நான் நபீ பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைக் கனவில் கண்டேன். அவர்களின் முபாறகான கரத்தில் ஒரு “கிதாப்” நூல் ஒன்று இருந்தது. இது “புஸூஸுல் ஹிகம்” என்ற நூல் இதை எடுத்து மக்களிடம் கொண்டு சேருங்கள். அவர்கள் இதைக் கொண்டு பயனடைவார்கள் என்று சொன்னார்கள். நான் “அல்லாஹ்வுக்கும் அவனது திருத்தூதருக்கும், அவனது அவ்லியாஉகளுக்கும் செவிமடுத்து, வழிப்படுமாறு இறைவன் கட்டளையிட்டதுபோல் நான் செவிமடுத்து வழிப்படுகின்றேன் என்று கூறினேன். நம்பிக்கையை உறுதி செய்து கொண்டு, எண்ணத்தை தூய்மைப்படுத்திக் கொண்டு இந்தப் புத்தகத்தை (கிதாபை) வெளிப்படுத்தும் நோக்கத்தை (எனக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கட்டளையிட்டது போன்று கூட்டாமலும், குறைக்காமலும்) உறுதி செய்து கொண்டேன்.
(புஸூஸுல் ஹிகம், பக்கம் – 47)

ويقرّر ابن عربي: أنّ الله تعالى يتَجلَّى فى جميع الكائنات ، ويظهر فى جميع المظاهر ، ولكن أكمل شُهودٍ له وأجملُه هو شُهودُه فى النّساء،

இப்னு அறபீ நாயகம் பின்வருமாறு பதிவிடுகின்றார்கள். அல்லாஹு தஆலா சகல வஸ்த்துக்களிலும் வெளியாகின்றான். எல்லா வெளிப்பாடுகளிலும் “ழாஹிர்” வெளியாகி உள்ளான். ஆனால் அவனை “ஷுஹூத்” காணுதலில் மிக சம்பூரணமானதும், அழகானதும் பெண்களிலேதான் என்று கூறியுள்ளார்கள்.
فإذا شاهد الرجل الحق فى المراة كان شهودا فى منفعل، وإذا شاهده فى نفسه – من حيث ظهور المرأة عنه – شاهده فى فاعل، وإذا شاهده فى نفسه من غير استحضار صورة ما تكوَّن عنه كان شهوده فى منفعل عن الحق بلا واسطة، فشهوده للحق فى المرأة أتمّ وأكمل، لأنّه يشاهد الحقّ من حيث هو فاعل منفعل، ومن نفسه من حيث هومنفعل خاصة، فلهذا أحبّ صلّى الله عليه وسلّم النّساء لكمال شهود الحقّ فيهنّ، إذ لا يشاهد الحقّ مجردا عن المواد أبدا، فإنّ الله بالذات غنيّ عن العالمين،

ஒரு மனிதன் ஹக் தஆலாவை பெண்ணிலே காட்சி பெற்றால் அது தனது பிரதிபலிப்பில் பெறும் காட்சியாகும். அவன் தன்னிலே காட்சி பெற்றால் “செய்பவன்” என்ற நிலையில் பெறும் காட்சியாகும். தன்னை விட்டும் வெளியான ஒரு உருவத்தின் உதவி இன்றி தன்னிலே ஹக் உடைய ஷுஹூதைப் பெற்றால் அவனுடைய “ஷுஹூத்” காட்சி ஒரு “வாஸிதா” உதவியின்றி பிரதிபலிப்பிலே பெற்ற ஷுஹூதாக – காட்சியாக ஆகும். எனவே அவன் பெண்ணிலே பெறக் கூடிய காட்சியே சம்பூரணமானதாகும். ஏனெனில் அவன் ஹக்கை “பாஇல், முன்பஇல்” (செயலுக்குரியவன், அதன் பிரதிபலிப்பு) என்ற அடிப்படையில் காணுகின்றான். அவனில் நினறும் அவனே குறிப்பாக பிரதிபலிப்பவன் என்ற அடிப்படையில் காணுகின்றான். இதனாலேயே நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பெண்களை விரும்பினார்கள். அவர்களிலே சமபூரண காட்சியை பெற முடியும் என்பதனாலேயே! ஏனெனில் ஒருபோதும் ஒரு பொருளின்றி ஹக்கை காணமுடியாது. அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் உள்ளமை (தாத்) கொண்டு தேவையற்றவன்.

وإذا كان الأمر من هذا الوجه ممتنعا، ولم تكن الشهادة إلا فى مادة، فشهود الحقّ فى النّساء أعظم الشهود وأكمله،
(فصوص الحكم ، ص 217 )
இந்த அடிப்படையில் இல்லையென்றால் ஒரு பொருளின்றி ஹக்கை ஷுஹூத் செய்ய முடியாது. எனவே பெண்களில் காட்சி பெறுதல் என்பது காட்சிகளில் மிக வலுப்பமானதும், சம்பூரணமானதுமாகும்.
(புஸூஸுல் ஹிகம், பக்கம் – 217)

وجعل ابن عربي اعتقادَ وحدة الوجود أصلَ أصولِ طريقة الصوفيّة المُسمّاةِ ‘ الأكبريّة ‘ المنسوبة إليه من حيث إنّه شيخ الصوفيّة الأكبر، كما بثّها فى كتبه ورسائله التّي تجاوزت 400 مؤلّف، من مؤلّفاته،

இப்னு அறபீ நாயகம் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை நம்புவதை தன்னுடைய 400 க்கும் அதிகமான நூல்களில் வியாபித்திருப்பது போன்று “அல் அக்பரிய்யஹ்” எனும் தன்னுடைய ஸூபிஸ தரீகஹ் வின் அடிப்படையாக ஆக்கியுள்ளார்கள். . அவர்களின் நூல்களில் பிராதனமானவைகள் சில…

01 ) الفتوحات المكيّة
02 ) فصوص الحكم
03 ) إنشاء الدوائر
04 ) التنزُّلاتُ المَوصلِيّة
05 ) الفناء
06 ) التجلّيات
07 ) ذخائر الأعلاق وترجمان الأشواق،

01. அல் புதூஹாதுல் மக்கிய்யஹ்.
02. புஸூஸுல் ஹிகம்
03. இன்ஷாஉத் தவாஇர்
04. அத் தனஸ்ஸுலாதுல் மவ்ஸிலிய்யஹ்.
05. அல் பனாஉ
06. அத்தஜல்லியாத்
07. தகாயிருல் அஃலாக் வதர்ஜுமானுல் அஷ்வாக்.

يقول عبد الوهّاب الشعراني : اعلم يا أخي أنّي اِطَّلعتُ من كلام أهل الكشف ما لا يُحصـى من الرسائل، وما رأيت فى عبارتهم أوسعَ من عبارة الشيخ الكامل المحقّق مربّي العارفين الشيخ محي الدين ابن عربي،
(اليواقيت والجواهر،1 – 3)
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். நான் ஸூபிய்யாக்களில் (கஷ்புடையவர்களின்) எண்ணற்ற நூல்களை பார்த்துள்ளேன். அவற்றில் அஷ் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்களின் வசனங்களைப் போன்று விசாலமான, கருத்தாழமுள்ள ஒன்றை நான் காணவில்லை என்று கூறியுள்ளாரகள்.

(அல் யவாகீது வல் ஜவாஹிர் – 1(3) )

يقول الشيخ الأكبر ابن عربي رحمه الله

இப்னு அறபீ நாயகம் அன்னவர்கள் அல் புதூஹாதுல் மக்கிய்யஹ் என்ற தன்னுடைய நூலின் 4ம் பாகம் 136 வது பக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

سبحان من أظهر الأشياء وهوعينها
(الفتوحات المكيّة ، ص 4 – 136 )

“அனைத்து வஸ்த்துக்களாகவும் தானே இருந்து கொண்டு அவற்றை வெளிப்படுத்தியவன் துய்யவன்”

يقول ابن عربي، إذا قيل لك بِمَاذا وحّدت الحقّ؟ فقل بقبوله الضِّدَّين معا، فإن قيل ما معنى الضِّدّين؟ قل ما من كون يُنعتُ أو يُوصف بأمرٍ إلّا وهو مسلوبٌ من ضِدِّ ذلك الأمر، عندما يُنعت به من ذلك الوجه، وهذا الأمر أي قبول الضِّدّين يصحّ فى نعت الحقّ خصوصا، إذ ذاتُه لا تُشبهُ الذّوات، والحُكم عليه لا يشبه الأحكام،(التجليات لابن عربي، ص447 )

மேலும் இப்னு அறபீ நாயகம் கூறுகின்றார்கள். உன்னிடம் யாராவது நீ எதைக் கொண்டு இறைவனை தவ்ஹீத் செய்தாய் (ஒன்றாக்கினாய்) என்று கேட்டால், அவனிடம் “அவன் (அல்லாஹ்) எதிரான தன்மைகளை ஒரே நேரத்தில் ஏற்றுக் கொள்வதால்” என்று சொல். “ளித்தைன்” எதிரான இரண்டு எது என்று கேட்டால், எந்தவொரு பொருளாயினும் அதை வருணிக்கப்படும் போது அதற்கு எதிரான ஒன்று இருக்கும். ஆனால் இறைவனை வருணிக்கும் போது அந்த வருணனைக்கு எதிரானதையும் அவன் ஏற்றுக் கொள்கின்றான். அவனுடைய உள்ளமை “தாத்” ஏனைய உள்ளமைகளுக்கு (படைப்புக்களின் “தாத்”) ஒப்பாகாது. அவனுடைய சட்டம் ஏனைய சட்டங்களுக்கு ஒப்பாகாது.
(அத் தஜல்லியாத் லிப்னி அறபீ , பக்கம் – 447 )

قال الشيخ ابن عربي فى الباب الثمانين ومأتين من الفتوحات المكيّة اعلم أنّه لا يصحّ من إنسان عبادةٌ إلّا إن كان يعرف ربّه على القَطع، وأمّا من أقام فى نفسه معبودا ليعبده على الظنّ لا على القطع فلا بدّ أن يحزنه ذلك الظنّ ولا يغني عنه من الله شيأ،

இப்னு அறபீ நாயகம் தனது அல் புதூஹாதுல் மக்கிய்யஹ் என்ற நூல் 280 வது பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். அறிந்து கொள். எந்தவொரு மனிதனின் வணக்கமும் அவன் இறைவனை சரியாக அறியாத வரை “ஸிஹ்ஹத்” ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆகாது. தன்னுடைய எண்ணத்தில் ஒரு “மஃபூத்” வணங்கப்படக் கூடிய ஒன்றை ஆக்கி அதை வணங்க வேண்டுமென்று எண்ணி அவன் வணங்கினால் அவனுக்கு அது கவலையையே ஏற்படுத்தும். மாறாக அல்லாஹ்விடமிருந்து எதனையும் பெற்றுத் தராது.
قال ابن عربي فى أكثر كتبه:
إنّما الكون خَيال – وهو حقٌّ فى الحقيقة
كلّ من يعرف هذا – حاز أسرارَ الطريقة

இப்னு அறபி நாயகம் தன்னுடைய அதிக நூல்களில்,

“படைப்பு என்பது மாயை –
எதார்த்தத்தில் அது ஹக்கேதான்.
இதை அறிந்த அனைவரும் –
தரீகஹ் வின் இரகசியங்களைப் பெற்றுக் கொண்டார்கள்”

என்று கூறியுள்ளார்கள்.
وكذلك قال فى أكثر كتبه : إذا تغيّبتُ بَدَا وإن بَدَا غَيَّبَنِيْ
(تفسير ابن عربي، 2 – 31 )
அதே போன்று அநேக நூல்களில் பின்வருமாறும் கூறியுள்ளார்கள்.

“நான் மறைந்தால் அவன் வெளியாவான். அவன் வெளியானால் நான் மறைவேன்”
(தப்ஸீர் இப்னி அறபீ – 2-31 )

اعلم أنّ الأصل فى صحّة الرؤية ما رواه الطبراني وغيره مرفوعا رأيتُ اللّيلة ربّي فى صورة شابٍّ أمرد قطط له وفرة من شعر، وفى رجليه نعلان من ذهب، الحديث، قال الحافظ السيوطي رحمه الله وهو حديث صحيح، (اليواقيت والجواهر للشعراني، ج – 1 ، ص – 115 )

அறிந்து கொள்! கனவில் இறைவனைக் காணலாம் என்பதில் அடிப்படையாகின்றது இமாம் தப்றானீ உள்ளிட்ட சில முஹத்திதீன்கள் பதிவு செய்த ஹதீது ஆகும். “நான் என்னுடைய இறைவனை முகத்தில் முடி முளைக்காத சுருண்ட முடியுள்ள வாலிபனின் உருவில் இரவு கனவில் கண்டேன். அதிக முடியிருந்தது. அவனின் இரு கால்களிலும் தங்கத்திலான இரு செருப்புக்கள் இருந்தன…” (இந்த ஹதீது ஸஹீஹ் என்று இமாம் அல் ஹாபிழ் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

(அல் யவாகீது வல் ஜவாஹிர் லிஷ் ஷஃறானீ, பாகம் – 01, பக்கம் – 115)

قال الشيخ محي الدين ابن عربي فى الباب الأحد وثمانين وثلاثمأة فى الفتوحات المكيّة قد اضطربت عقول العلماء فى معنى هذا الحديث وفى صحّته، فَنَفَاهُ بعضُهم،وأثبته بعضُهم، وتوقّفَ فى معناه وأوّله، ولا يحتاج الأمر إلى تأويل، فإنّه صلّى الله عليه وسلّم إنّما رأى هذه الرؤيا فى عالم الخيال، الّذي هو النّوم، ومن شأن الخيال أنّ النائم يَرى فيه تجرُّدَ المعاني فى الصُّور المحسوسة، وتجسُّدَ ما ليس من شأنه أن يكون جسدًا، لأنّ حضرته تُعطي ذلك، فما ثمّ أوسعُ من الخيال ،قال : ومن حضرته أيضاظهرَ وجودُ المُحال، فإنّك ترى فيه واجب الوجود الّذي لا يقبل الصُّورَ فى صورة ، ويقول لك مُعبَّرُ المنام صحيحٌ ما رأيتَ، ولكنّ تأويلها كذا وكذا، فقد قَبِلَ المُحالَ الوجودُ، فى هذه الحضـرة، فإذا كان الخيالُ بهذه القوّةِ من التّحكّم فى الأمور من تجسُّدِ المعاني وجعلِه ما ليس قائما بنفسه وهو مخلوقٌ، فكيف بالخالق؟ وكيف يقول بعضهم إنّ الله تعالى غيرُ قادرٍ على خلق المُحال، وهو يشهد من نفسه قدرة الخيال على المحال، وأطال الشيخ الكلام على ذلك فى الباب الثامن والتّسعة ومأة، ثمّ قال ولو لمْ يكن من قُوّة الخيال إلّا انّه يريك الجسم فى مكانين، فيكون الإنسان نائما فى بيته ويرى فى منامه أنّ عينَ جسمه فى مدينة أخرى، وعلى حالة أخرى، تخالف حاله الّذي هو عليه فى بيته، وهوعينُه لا غيرُه، (اليواقيت ،ج- 1 ، ص – 115 )

இப்னு அறபீ நாயகம் அவர்கள் தன்னுடைய அல் புதூஹாதுல் மக்கிய்யஹ் என்ற நூல் 381 வது பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். மேலே கூறப்பட்டுள்ள ஹதீதை விளங்குவதிலும், சரியானதா என்பதிலும் உலமாஉகளின் புத்திகள் தடுமாறின. அவர்களிற் சிலர் அதை மறுத்தனர். சிலர் தரிபடுத்தி அதன் கருத்தில் நின்று வலிந்துரை செய்தார்கள். ஆனால் எந்த வலிந்துரையும் அவசியமில்லை. நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்தக் கனவை கண்டது “ஆலமுல் கயால்” கனவுலகிலேயே. (தூக்கத்திலேயே). கனவுலக விடயத்தில் நின்றுமுள்ளதுதான் ஒரு மனிதன் கருத்து ரீதியானதை புலன்களால் உணரக் கூடியதாக கனவுலகில் காண்பதென்பது முடியுமான ஒன்றாகும். ஜடமில்லாத ஒன்றை ஜடத்தில் காண்பதும் முடியுமான ஒன்றாகும். ஏனெனில் கனவுலகம் என்பது அதைக் கொடுக்கும். அதைவிட விசாலமான ஒன்று இல்லை. மேலும் கூறுகின்றார்கள். அந்தக் கனவுலகின் விடயத்தில் நின்றுமுள்ளதுதான் அசாத்தியமான ஒன்றையும் சாத்தியமாகக் காட்டும். எந்தவொரு உருவத்தினையும் ஏற்காத “வாஜிபுல் வுஜூத்” ஆகிய அல்லாஹ்வைக் காண்கின்றாய். நீ கண்ட கனவு சரியானது என்று சொல்வார். ஆனால் அதன் வலிந்துரை இவ்வாறு என்றும் சொல்வார். கனவுலகில் அசாத்தியமான ஒன்றை உள்ளமை ஏற்றுக் கொள்கின்றது. கருத்து ரீதியானவற்றை ஜடமாகக் கண்டு அதற்கு சட்டம் எடுக்க முடியுமானால் (அது படைப்பாக இருக்கின்ற நிலையிலும்) படைத்தவனுக்கு ஏன் முடியாது? அவர்களிற் சிலர் எவ்வாறு இறைவனுக்கு அசாத்தியமானதைப் படைக்க முடியாதென்று கூற முடியம்? அவனுக்கு அசாத்தியமான ஒன்றை “கயால்” ஆக ஆக்க முடியும். இப்னு அறபீ நாயகம் அவர்கள் இது தொடர்பாக 108, 109ம் பாடங்களில் நீட்டிக் கொண்டே செல்கின்றார்கள். கனவுலகில் இவ்வாறு நடப்பது அசாத்தியம் என்றால் எப்படி ஒரு மனிதன் தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் (அந்த நேரத்தில் தன்னுடைய எதார்த்தமான நிலைக்கு மாற்றமாக) இன்னொரு நகரில் வேறோரு நிலையில் தன்னைக் காண்பான்? அது அவனேதான் வேறான ஒன்றல்ல.
(அல் யவாகீத், பாகம் 01, பக்கம் 115 )

قال الشيخ أبو طاهر رحمه الله فعلم أنّه لا يلزم من كون الشيئ لا صورة له أن لا يُرى في صورة على ما قرّرناه ، ألا ترى أنّ كثيرا من الأشياء التي لا أشخاص لها ولا صورة تُرى في المنام بأمثلة تناسبها بأدنى معنى ولا يوجب التشبيه ولا التمثيل، وذلك كالمعاني المجرّدة مثل الإيمان والكفر والشـرف والقرآن والهدي والضّلالة والحياة الدنيا ونحو ذلك،

அஷ் ஷெய்கு அபூ தாஹிர் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கூறுகின்றார்கள். ஒரு உருவமில்லாத வஸ்த்து உருவத்தில் பார்க்கப்படுவது முடியாதென்பதல்ல. நீ பார்க்கவில்லையா? எத்தனையோ உருவமற்ற வஸ்த்துக்கள் கனவுலகில் பொருத்தமான உருவங்களில் பொருந்தக் கூடிய கருத்துக்களைத் தரக்கூடிய அமைப்பில் காண்பிக்கப்படுகின்றது. ஒப்புதல்களாகவோ, உதாரணங்களாகவோ அல்ல. அது ஈமான், “குப்ர்” , சிறப்பு, அல் குர்ஆன், நேர்வழி, வழிகேடு, உயிர் வாழ்தல் போன்ற கருத்து ரீதியானவை போல.

وأمّا الإيمان فكقول النبيّ صلّى الله عليه وسلّم رأيت النّاس في المنام يُعرضون، منهم من قميصه إلى كعبه، ومنهم من قميصه إلى أنصاف ساقَيْهِ، فجاء عمر بن الخطاب وهو يجرّ قميصه ، فقالوا يا رسول الله ما أوّلتَ ذلك؟ قال الإيمان، فالإيمان لا شكل له ولا صورة، ولكن جُعل القميصُ له مثالا فرُؤي بواسطته، وكذلك الكفر يُمثّل في المنام بالظّلمة، وكذلك الشـرف والعِزُّ يُرى بواسطة صورة الفرس، وكذلك يُمثَّل القرآن باللّؤلؤ، ويمثّل الهدى بالنّور، والضّلالةُ بالعَمَى، (اليواقيت ، ج – 1 ، ص – 108 )

அறிந்து கொள்! ஈமானாகிறது, நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சொன்னது போல. (கனவுலகில் மனிதர்களை எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது. அவர்களில் சிலரினது “கமீஸ்” ஷேட் ஆகிறது கரண்டை வரை காணப்பட்டது. சிலரினது “ஷேட்” தண்டைக்கால் அரைவாசிக்கு காணப்பட்டது. உமர் இப்னுல் கத்தாப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய “ஷேட்” ஐ தரையிலே இழுத்துக் கொண்டு வந்தார்கள். இதைக் கேட்ட ஸஹாபாக்கள், அதற்கு என்ன வலிந்துரை கொடுத்தீர்கள் நாயகமே? என்று கேட்டார்கள். ஈமான் என்று பதிலளித்தார்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்) எனவே ஈமான் என்பதற்கு உருவமில்லை. தோற்றமில்லை. ஆனால் ஈமான் “ஷேட்” உடைய உருவத்தில் காண்பிக்கட்டுள்ளது. அதே போன்றுதான் இணை வைத்தல் “குப்ர்” உம் ஆகும். கனவுலகிலே இருளின் உருவத்தைப் பெறும். அதேபோல் சிறப்பு என்பது குதிரையின் உருவிலும், அல் குர்ஆன் ஆகிறது முத்தின் உருவிலும், நேர்வழி என்பது ஒளியின் உருவிலும், வழிகேடு என்பது குருடு என்ற தோற்றத்திலும் உருப்பெறும்.

இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

هو عبد الحقّ بن إبراهيم بن محمد، ابن سبعين، الرُّقُوطي المرسي الأندلسـي، ولد فى بلدة رُقُوطة فى مرسيّة بالأندلس، سنة 613 هـ أو 614 هـ ،
அவர்களின் இயற் பெயர் அப்துல் ஹக் என்பதாகும். அவர்களின் தந்தை இப்றாஹீம் என்பவரும், அவரின் தந்தை முஹம்மத் என்பவருமாவர். ஸ்பெய்ன் நாட்டின் றிகோட் (Ricote) நகரைச் சேர்ந்தவர்கள். ஹிஜ்ரீ 613 அல்லது 614ல் பிறந்தார்கள்.

نشأ فى الأندلس ، تعلّم فيها مَبَادِئَ العلوم الشـرعيّةِ والعربيّةِ، وتعمّق فى علوم الفلسفة والمنطق والسحر، وسلك طريق المتصوّفة على يد كبار صوفيّة الأندلس،
ஸ்பெய்ன் நாட்டில் வளர்ந்த அவர்கள் அங்கேயே தனது ஆரம்பக் கல்வியை – ஷரீஅத் மற்றும் அறபு – கற்றார்கள். தத்துவம் (philosophy), தர்க்கவியல் மற்றும் சூனியக் கலைகளை ஆழமாகக் கற்றிருந்த அவர்கள் உந்துலுஸ் (ஸ்பெய்ன்) நகரில் இருந்த பெரும் ஸூபிய்யாக்களிடம் சென்று அவ்வழியே (ஸூபிஸம்) சென்றார்கள்.

وفى سنة 640 نُفي ابن سبعين من الأندلس، فانتقل هو وبعضُ أتباعِه إلى المغرب، وعكَفَ فى المغرب على قرائة كتب التصوّف وتدريسها، كما قام بتأليف أكثر كتبه ورسائله هناك، وتَجَوَّلَ فى بلدان المغرب لِنَشْرِ طريقته السّبعينيّة، ولمّا تكشّف مذهبه ، أنكر عليه العلماء الجاهلون بعقيدة وحدة الوجود ، وحَكَمُوا عليه بالزّندقة، ثمّ أخرجوه من المغرب،
ஹிஜ்ரீ 640ல் ஸ்பெய்ன் நாட்டிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள். அவர்களும், அவர்களின் சில சீடர்களும் அங்கிருந்து வெளியாகி “மொரோக்கோ” நாட்டுக்கு வந்தார்கள். அவர்களின் அநேக நூல்களை “மொரோக்கோ” விலேயே கோர்வை செய்தது போன்று, அங்கேயே “ஸூபிஸ” நூல்களைப் படித்து, அவைகளைக் கற்றுக் கொடுக்கும் வேலையிலும் ஈடுபட்டார்கள். “மொரோக்கோ” நாட்டின் பல பாகங்களுக்கும் தன்னுடைய “ஸப்ஈனிய்யஹ்” தரீகஹ்வை பரப்புவதற்காகச் சென்றார்கள். அவர்களின் வழி பரவியபோது “வஹ்ததுல் வுஜூத்” தெரியாத உலமாஉகள் அவர்களை எதிர்த்தார்கள். அவர்களுக்கு “ஸிந்தீக்” பட்டம் வழங்கி அங்கிருந்தும் வெளியேற்றினார்கள்.

فكّر ابن سبعين فى بلد آخر يُقيم فيه، وينشـر فيه دعوته، فاتّجه إلى مصـر، ولكنّ علماء المغرب الجاهلين بوحدة الوجود قد أرسلوا رسولا إلى أهل مصـر، لِيُحذِّرَهم من ابن سبعين، ولِيُبيِّنَ لهم عقيدتَه وقولَه بوحدة الوجود، فلم يلقَ ابن سبعين قبولا من أهل مصـر، بل قام بعض علمائها بكشف عقيدته، والرَّدِّ عليه، وتنفير النّاس عنه، فغادرَ مصر، متوجّها إلى مكّة،
இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் தான் குடியேறுவதற்காக, அங்கே தனது அழைப்புப் பணியை மேற்கொள்வதற்காக ஒரு நாட்டை யோசித்து “மிஸ்ர்” நாட்டை வந்தடைகின்றார்கள். இதை கேள்வியுற்ற “மொரோக்கோ” வாசிகள், இமாம் இப்னு ஸப்ஈன் அவர்களின் கொள்கையை விளங்கப்படுத்தி “மிஸ்ர்” நாட்டு மக்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு தூதரை அனுப்புகின்றார்கள். “மிஸ்ர்” வாசிகளிடமிருந்து எந்த வரவேற்பும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவர்களில் (“மிஸ்ர்” வாசிகளில்) சில உலமாஉகள் இமாம் இப்னு ஸப்ஈன் அவர்களை மறுத்து, அவர்களின் கொள்கையை இல்லாமலாக்கி, அவர்களை விட்டும் மக்களை திசை திருப்பவுதில் ஈடுபட்டனர். எனவே இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் அங்கிருந்தும் வெளியாகி திரு “மக்கஹ்” வந்தடைந்தார்கள்.

أقام ابن سبعين بمكّة من سنة 652 هـ حتّى وفاته، وكان خِلالَ هذه الفترة موضع تقدير وتشجيع وحماية من حَاكِم مكّة أبي نُمَيْ، (هو الشـريف محمد بن الحسن بن علي بن قتادة بن راجح، شريف حَسَنِيٌّ، من أمراء مكّة، كان شجاعا حازما، شارك أباه فى الإمارة، سنة 647 هـ ، ووَثَبَ على عمّ أبيه، إدريس بن قتادة، سنة 670 هـ ، فقتله واستقلّ بالإِمْرَةِ، استمرّ فى حكم مكة حتّى وفاته ، سنة 701 هـ ، البداية والنّهاية 14 ஃ 21، والأعلام 6 ஃ 86)

இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் ஹிஜ்ரீ 652 தொடக்கம் தான் “வபாத்” ஆகும் வரை திரு மக்கஹ் நகரிலேயே இருந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் அன்றைய மக்காவின் ஆட்சியாளராக இருந்த அபூ நுமை என்பவரினால் பாதுகாக்கப்பட்டு, பாராட்டப்பட்டு, உற்சாகப்படுத்தப்பட்டார்கள். (அவர் – அபூ நுமை முஹம்மத் திரு மக்காவின் ஆட்சியாளர்களான ஹஸன் இப்னு அலீ இப்னு கதாதா இப்னு றாஜிஹ் ஆகியோரின் வழித்தோன்றலாவார். அவர் நீதி, நியாயமுள்ள உற்சாகமானவராக காணப்பட்டார். ஹிஜ்ரீ 647ல் தன்னுடைய தந்தையுடன் ஆட்சியில் பங்கேற்றார். தன்னுடைய தந்தையின் சாச்சாவுக்கு (இத்ரீஸ் இப்னு கதாதா) எதிராக ஹிஜ்ரீ 670ல் போராடி, அவரைக் கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். திரு மக்காவின் ஆட்சியில் ஹிஜ்ரீ 701ல் தான் “வபாத்” ஆகும் வரை நிலைத்திருந்தார். ( அல்பிதாயா வந்நிஹாயா 14 – 21, அல் அஃலாம் 86 -6)
فقام ابن سبعين بمكّة بِنَشاطٍ مَلْحُوظٍ، فى الدعوة إلى مذهبه،
இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் தன்னுடைய “வஹ்ததுல் வுஜூத்” வழிக்கு மக்களை அழைக்கும் பணியில் தீவிரமாக இருந்தார்கள்.
ثمّ إنّ علماء مكّة أنكروا عليه مَسْلَكَه الصوفيّ، وحذّروا النّاس منه، فَهَمَّ بالإرتحال إلى الهند، بزعم أنّ أرض الإسلام لا تَسَعُهُ، ولكنّه بعد ذلك آثَرَ الإرتحال عن الدنيا بالكليّة ، فقد ذكر جمع من المؤرّخين أنّه مات بمكّة مُنتحرا، وكان ذلك سنة 669 هـ ،(البداية والنّهاية 13 ஃ261 ، ولسان الميزان 2 ஃ 392 ، والطبقات الكبرى 1 ஃ 203 ، والموسوعة الصوفيّة 197 ، وابن سبعين وفلسفته الصوفيّة)
பின்பு திரு மக்கஹ் நகரில் இருந்த உலமாஉகள் அவர்களின் ஸூபிஸ வழியை மறுத்து, மக்களை எச்சரிக்கவும் செய்தார்கள். அதன் காரணத்தால் (இஸ்லாமிய பூமி தனக்கு இடமளிக்காது என்றெண்ணி) அங்கிருந்தும் வெளியாகி இந்தியா செல்ல எண்ணினார்கள். ஆனால் அவர்கள் இந்தியா செல்லாமலேயே தன்னுடைய வாழ்வை முடித்துக் கொண்டார்கள். வரலாற்றாசிரியர்கள் ஒரு கூட்டம் அவர்கள் திரு மக்கஹ் நகரில் கொலை செய்யப்பட்டு மரணித்ததாக கூறுகின்றார்கள். இது ஹிஜ்ரீ 669 ல் நடைபெற்றதாகவும் கூறப்படுகின்றது.

(அல் பிதாயஹ் வந் நிஹாயஹ் 13 -261, லிஸானுல் அறப் 2-392, அத் தபகாதுல் குப்றா 1-203, அல் மவ்ஸூஅதுஸ் ஸூபிய்யஹ் 197, இப்னு ஸப்ஈன் வபல்ஸபதுஸ் ஸூபிய்யஹ்)

ولابن سبعين عددٌ من المؤلّفات : منها
01 ) بَدُّ العارف 02 ) المسائل الصقليّة
03 ) الإحاطة 04 ) الألواح
05 ) التوجّه 06 ) الرسالة النوريّة

இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் அதிக எண்ணிக்கையிலான நூல்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.

01. பத்துல் ஆரிப்
02. அல் மஸாயிலுஸ் ஸக்லிய்யஹ்
03. அல் இஹாதஹ்
04. அல் அல்வாஹ்
05. அத் தவஜ்ஜுஹ்
06. அர் றிஸாலதுன் நூரிய்யஹ்.

آمن ابن سبعين بوحدة الوجود، ولخَّصَ مذهبه بعبارة موجزة، هي قولُه ‘ الله فقط ،الكلّ له بالأصالة كلّ كمال وهو الكلّ بالمطابقة ، (رسائل ابن سبعين، ص 192 ) فليس فى الوجود عنده إلّا الله، والله عنده هو كلُّ ما فى الكون،
இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை நம்பியவர்களும், தனது வழியை சுருக்கமாகப் பின்வரும் வார்த்தை மூலம் கூறியுள்ளார்கள். அதுவாகின்றது, “அல்லாஹ் மாத்திரமே உள்ளான். அனைத்துக்கும் அடிப்படையான, சம்பூரணமானவன் அவனே! எல்லாம் அவனே!” என்பதாகும்.
(றஸாயில் இப்னு ஸப்ஈன், பக்கம் 192 )

இமாம் இப்னு ஸப்ஈன் அவர்களிடம் உள்ளமையில் அல்லாஹ் தவிர வேறொன்று இல்லை. பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அவனே என்பதுமாகும்.
وقد اعتمد ابن سبعين على مَبْدَءِ التّمييز بين ما هو (وجود حقيقيّ ) وما هو (وجود وهميّ ) (حركة التصوّف الإسلاميّ لمحمد شرف ، ص 659 ) مقرّرا أنّ (الحقّ واحد ، وما عداه وهم ) (رسالة ابن سبعين ، ص 276 )
இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் உண்மையான “வுஜூத்” இற்கும், பேதமையான “வுஜூத்” இற்குமிடையில் பாகுபாட்டை உறுதி கொண்டார்கள்.
(ஹறகதுத் தஸவ்வுபுல் இஸ்லாமீ – முஹம்மத் ஷறப், பக்கம் – 659)

மேலும் மெய்ப்பொருள் ஒன்றே என்றும் அது தவிரவுள்ளவை பேதமை என்றும் கூறுகின்றார்கள்.
(றிஸாலதுப்னி ஸப்ஈன், பக்கம் – 276 )

ومعنى اسم الله الظاهر عنده : (أنّ الله هو عين كلّ مظاهر الكون، يقول ابن سبعين : (هو عين كلّ ظاهر، فحُقَّ له أن يتسمّى بالظاهر) (رسائل ابن سبعين ، ص 190 )

இமாம் இப்னு ஸப்ஈன் அவர்களிடம் அல்லாஹ்வின் திரு நாமமாகிய “ளாஹிர்” வெளியானவன் என்பது “நிச்சயமாக பிரபஞ்சத்தின் அனைத்து வெளிப்பாடுகளும் அல்லாஹ் தானானதே! மேலும் கூறுகின்றார்கள். வெளியான ஒவ்வொன்றும் அவன் தானானதே! அதனாலேதான் தனக்கு “ளாஹிர்” வெளியானவன் என்று பெயர் வைக்கத் தகுதியானான் என்று கூறுகின்றார்கள்.
(றிஸாலதுப்னி ஸப்ஈன், பக்கம் – 190 )
أنّ العوامّ – الّذين يحكمون بالوهم – يعتقدون أنّ الله هو خالق الكون، ويرون أنّ المخلوقات من آثار قدرته، وأمّا العلماء : أي هو وأمثاله فهم الذين يعتقدون أنّ المخلوقات هي الله، أو كما يقول (هي بالله فى الوهم ، وهي الله فى الحقيقة) (رسائل ابن سبعين ، ص 136 )
பாமரர்கள் – பேதமமை கொண்டு பார்க்கக் கூடியவர்கள் – அல்லாஹ் சகல வஸ்த்துக்களையும் படைத்தவன் என நம்புகின்றார்கள். அதே நேரம் அனைத்து வஸ்த்துக்களும் அவனுடைய “குத்றத்” சக்தியின் பிரதிபலிப்பு என்றும் நம்புகின்றார்கள். ஆனால் உலமாஉகள் அதாவது இப்னு ஸப்ஈன் மற்றும் அவர்கள் போன்றவர்கள் படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ் தான் என்று நம்புகின்றார்கள். அல்லது அவர்கள் கூறுவது போன்று “படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வைக் கொண்டு பேதமையில் காட்சியளிக்கின்றன. எதார்த்தத்தில் அவை அல்லாஹ்வேதான்”
(றஸாயில் இப்னு ஸப்ஈன், பக்கம் – 136 )
ويؤكّد ابن سبعين هذا المعنى بقوله (الله فى كلّ شيئ بكلّه، وليس فى الكلّ والبعض، وهوشيئ فيه ما ليس بشيئ وما هو شيئ معا، فعينُ ماتَرى ذاتٌ لاتُرى ، وذاتٌ لاتُرى عينُ ما تَرى) (رسائل ابن سبعين، ص 196) أي أنّ الذات الإلهيّة الغايبة عنّا الّتي لا تُرى فى الدنيا بالأبصار ، هي عينُ الذّوات الظاهرة، المُدرَكَة بالحواسّ،
இக்கருத்தை இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு உறுதி செய்கின்றார்கள். “அல்லாஹ் அனைத்து வஸ்த்துக்களிலும் முழுமையாக உள்ளான். அவன் சிலவற்றில் முழுமையாகவும், சிலவற்றில் கொஞ்சமாகவும் இருக்கின்றான் என்பதல்ல. ஒரே நேரத்தில் “ஷைஉன்” வஸ்த்துவாகவும், வஸ்த்துக்களல்லாமலும் இருக்கின்றான். நீ காணக் கூடிய அனைத்தும் இன்னொன்றால் பார்க்க முடியாத “தாத்”. அத்தகைய “தாத்” ஐயே நீ பார்த்துக் கொண்டிருக்கின்றாய்.
(றஸாயில் இப்னி ஸப்ஈன், பக்கம் 196)

அதாவது எம்மை விட்டும் மறைந்துள்ள, வெளிக் கண்களால் இவ்வுலகில் பார்க்க முடியாத அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையாகின்றது அதுவே புலன்களால் உணரப்படக் கூடிய வஸ்த்துக்களாக வெளியாகி உள்ளன.

ويقول أيضا: (فالوجود واحد، هو القائم بجميع الصُّور)
(رسائل ابن سبعين، ص 242 )

இன்னும் கூறுகின்றார்கள். உள்ளமை ஒன்றே! அதுவே அனைத்து உருவங்களாகவும் இருக்கின்றது.
(றிஸாலதுப்னி ஸப்ஈன், பக்கம் – 242 )

وهو يرى بُطلانَ كلّ اعتقاد يُنافى الوحدة ، حتّى التوحيد الّذي يدين به المسلمون ،وفى هذا يقول (لا منفعة فى التوحيد، ولا خير عندي فى الفيض، ولا سعادة فى الحلول، ولا فائدة فى الإتّحاد ، ولا شوق إلى مقام…. ثمّ انظر إلى الإحاطة، (أي وحدة الوجود ) وتأمّل ما فيها ، وحرِّر القول فيها، (رسائل ابن سبعين، ص 133 )

இமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் “வஹ்ததுல் வுஜுத்” ஐ மறுக்கக் கூடிய முஸ்லிம்கள் தௌஹீதாக கொண்டுள்ள அனைத்து நம்பிக்கைகளையும் பிழை காணுகின்றார்கள். இது தொடர்பாக பின்வருமாறு கூறுகின்றார்கள். (பாமரர்களின் தௌஹீதில் பிரயோசனம் இல்லை. உதவி பெறுவதில் சிறப்பில்லை. “ஹுலூல்” கோட்பாட்டில் ஈடேற்றம் இல்லை. “இத்திஹாத்” கோட்பாட்டிலும் பிரயோசனம் இல்லை. எந்தவொரு அந்தஸ்த்திலும் ஆசையில்லை… பின் “வஹ்ததுல் வுஜூத்” – சூழ்தல் – அளவில் பார். அதிலே சிந்தனை செய். அதை சுதந்திரமாகச் சொல்.
(றஸாயில் இப்னு ஸப்ஈன், பக்கம் – 133)
يقول ابن سبعين ‘ الله لا وصف له سوى الثُّبوت، وهو الوجود فى كلّ موجود ‘
(حركة التصوّف الإسلاميّ ، ص – 284 )
அல்லாஹு தஆலாவுக்கு “தரிபாடாகுதல்” (உள்ளமையாக இருத்தல்) என்ற வர்ணனை தவிர எந்த ஒரு வர்ணனையும் இல்லை. அவனே சகல வஸ்த்துக்களிலும் இருக்கின்றான்.
(ஹறகதுத் தஸவ்வுபுல் இஸ்லாமீ, பக்கம் – 284 )
وهذا من حيث اسمه الباطن، وأمّا من حيث اسمه الظاهر فالله موصوف بكلّ صفات الكائنات، ومُسمًّى بكلّ أسمائها ، لأنّها ليست إلّا هو،

இக்கருத்தாகின்றது அவன் – அல்லாஹ் – “பாதின்” (உள்ளானவன்) என்ற தனது பெயரின் அடிப்படையிலாகும். அறிந்து கொள்! அவனது “ளாஹிர்” – வெளியானவன் – என்ற பெயரின் அடிப்படையில் படைப்புக்கள் அனைத்தினதும் தன்மைகள் கொண்டு வருணிக்கப்பட்டவன் ஆவான். அதுமட்டுமன்றி அவற்றின் பெயர்கள் கொண்டும் பெயர் வைக்கப்பட்டவன். ஏனெனில் அவை அனைத்தும் அவனே!

والوحدة الإلهيّة عنده تشمل كلّ حسن وقبيح، وكلّ شريف وخَسِيس، قال ابن تيميّة (حدّثني من كان معه – أي ابن سبعين – ومع آخر نظيرله، فمَرَّا على كلب أجربَ مَيِّتٍ بالطريق، فقال له رفيقُه هذا أيضا هو ذاتُ الله؟ فقال ابن سبعين وهل ثَمَّ شيئ خارج عنه؟ نعم، الجميع فى ذات الله )
(مجموع فتاوى ابن تيميّة ، 13 ஃ 186)

“அல் வஹ்ததுல் இலாஹிய்யஹ்” என்ற “வஹ்ததுல் வுஜூத்” அனைத்து அழகிய மற்றும் இழிவானவைகளையும் உள்ளடக்கிக் கொள்ளும். மேலும் சிறப்பான, சிறப்பற்றவைகளையும் அடக்கும். இப்னு தைமிய்யஹ் என்பவர் சொன்னார். (எனக்கு இப்னு ஸப்ஈன் அவர்களுடனும் அவர்கள் போன்றவர்களுடனும் இருந்தவர்கள் பின்வருமாறு சொன்னார்கள். ஒரு தடவை இமாம் இப்னு ஸப்ஈன் அவர்கள் வீதியால் ஒரு செத்த நாயின் பிணத்துக்கருகால் சென்ற போது அவர்களின் நண்பன் அவர்களிடம் இதுவும் அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையில் கட்டுப்பட்டதுதானா? என்று கேட்டதற்கு, அவனுக்கு வேறான ஒரு பொருள் உண்டா? ஆம், இதுவும் அவனின் உள்ளமையில் உள்ளதுதான் என்று பதில் அளித்தார்கள்.
(மஜ்மூஉ பதாவா இப்னி தைமிய்யஹ், 13-186 )

(இமாம் அப்துல் கரீம் அல் ஜீலீ அவர்கள் தொடர்பாக இதே தொடரில் முன்னால் சிறு குறிப்பும், அவர்களின் “அந்நாதிறாதுல் ஐனிய்யா” என்ற நூலில் வரும் ஒரு பாடலுக்கு விளக்கமும் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)

هو عبد الكريم بن إبراهيم بن عبد الكريم، اَلْجِيْلِيْ أو الجِيْلَانِيْ، نسبته إلى جيلان، وهي منطقةٌ فى بلاد فارس، (أنظر معجم البلدان (2ஃ201 )) وهو بغداديُّ الأصل، وُلد سنة 767 هـ، وتَنَقَّلَ فى بُلدان كثيرة، كالهند وفارس ومصر وفلسطين والحجاز، ثمّ اتّجه سنة 796 هـ، إلى مدينة زُبَيْد فى اليمن ، فأقام فيها حتّى وفاته سنة 826 هـ ،
அவர்களின் இயற் பெயர் அப்துல் கரீம் ஆகும். அவர்களின் தந்தை இப்றாஹீம் என்பவரும், அவர்களின் தந்தை அப்துல் கரீம் என்பவருமாவர். “அல் ஜீலீ” அல்லது “அல் ஜீலானீ” என்று “ஜீலான்” நகரைச் சார்ந்தவர்கள் என்பதால் சொல்லப்படுகின்றது. (ஜீலான் நகர் பாரிஸ் நகர்களில் ஒரு பகுதியாகும்) அடிப்படை “பக்தாத்” நகரைச் சார்ந்தவர்கள். ஹிஜ்ரீ 767ல் பிறந்தார்கள். இந்தியா, பாரிஸ், மிஸ்ர், பலஸ்தீன், ஹிஜாஸ் போன்ற அதிக ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள். பின்பு ஹிஜ்ரீ 796ல் யமன் தேசத்திலுள்ள “ஸுபைத்” நகர் வந்து அங்கேயே தனத “வபாத்” மரணம் வரை (ஹிஜ்ரீ – 826) இருந்தார்கள்.
أخذ الجيلي التصوّف عن شيخ صوفيّة اليمن اسماعيل الجَبْرَتِيْ وعن مؤلّفاتِ من سبقه من أئمّة الصوفيّة، فَبَرِعَ فى علم القوم حتّى صار من أكبر صوفيّة القرن التاسع الهجري،
இமாம் அப்துல் கரீம் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் “ஸுபிஸ” வழியை யமன் தேச ஸூபீகளின் தலைவர் இஸ்மாயீல் அல் ஜப்றதீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களிடமிருந்தும், அவர்களுக்கு முன் வாழ்ந்த “ஸூபிய்யஹ்”களின் நூல்களிலிருந்தும் பெற்றுக் கொண்டார்கள். ஹிஜ்ரீ 9ம் நூற்றாண்டின் தலைசிறந்த பெரிய ஸூபீ என்று சொல்லப்படும் அளவிற்கு சிறந்து விளங்கினார்கள்.

وللجيلي نحو ثلاثين مؤلّفا، عامّتُها فى تقرير العقيدة الصوفيّة، منها الإنسان الكامل ، والمناظر الإلهيّة، والقاموس الأعظم، وشرح مشكلات الفتوحات، والوجود المطلق، ومراتب الوجود، (قام يوسف زيدان بحَصـر مؤلّفات الجيلي والتعريف بها، فى كتابه الفكرُ الصوفي عند الجيلي، ص 52 )
இமாம் ஜீலீ அவர்களுக்கு சுமார் 30க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை “ஸூபிய்யஹ்”களின் கொள்கையை எடுத்துக் கூறக் கூடிதாகவே உள்ளன. அவற்றில் முக்கியமான சில நூல்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.
* அல் இன்ஸானுல் காமில்
* அல் மனாளிறுல் இலாஹிய்யஹ்
* அல் காமூஸுல் அஃளம்
* ஷர்ஹு முஷ்கிலாதில் புதூஹாத்
* அல் வுஜூதுல் முத்லக்
* மறாதிபுல் வுஜூத்

والجيلي من دُعاة مذهب وحدة الوجود، فلقد كانت هذه العقيدة هي الشغلَ الشاغِلَ له، وهي ظاهرة بوُضوحٍ فى مُعظمِ مؤلّفاته،
இமாம் ஜீலீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை போதித்தவர்கள் ஆவர். அவர்களுக்கு இக் கொள்கையைப் போதிப்பதே தொழிலாக இருந்தது. இது இவர்களின் பிரதான நூல்களில் தெளிவாக விளங்குகின்றது.

فهو يرى أي يعتقد أنّ الله تعالى هو المنفرد بالوجود، وإثبات هذا هو غاية التوحيد، وفى هذا يقول ‘ كلمة الشهادة مَبْنِيّة على سلب، وهي ‘ لا ‘ وإيجابٍ، وهي ‘ إلّا ‘ ، معناه لا وجود لشيئ إلّا الله (الإنسان الكامل للجيلي ، 2 ஃ 134 )
அவர்கள் “அல்லாஹ் மாத்திரமே தனியான உள்ளமை உடையவன்” என்று கருதுகின்றார்கள். இதை தரிபடுத்துவதே தவ்ஹீதின் உச்ச நிலை என்றும் கருதுகின்றார்கள். இந்த விடயத்தையே பின்வருமாறு கூறுகின்றார்கள். “ஷஹாதஹ் கலிமஹ்” என்ற لا إله إلا الله என்பது அதிலுள்ள “லா” என்ற சொல் மூலம் ஒன்றுமே இல்லையென்றும், அதிலுள்ள “இல்லா” என்ற சொல் மூலம் அல்லாஹ் மட்டும் உள்ளான் என்றும் அமைக்கப்பட்டதாகும். இதன் பொருளாகின்றது “அல்லாஹ் தவிர எந்தவொரு படைப்புக்கும் உள்ளமை கிடையாது” என்பதாகும்.
(அல் இன்ஸானுல் காமில் 2-134 )
أمّا الكون أو الخلق أو العالم فهو وهم من الأوهام، أو خَيَالٌ من الخيالات، الّتي تَطْرَأ على عقول المحجوبين، والخلقُ عند الجيلي ليس له وجود حقيقيّ ، بل وجودُه مجازيّ إعتباريّ، وحقيقته عنده أنّه هو الله، ولكنّه تجلّى بصُور المخلوقات،
பிரபஞ்சம் அல்லது படைப்பு அல்லது வையகம் என்பது திரையிடப்பட்டவர்களின் புத்தியில் திடீரென ஏற்படும் பேதமைகளில் நின்றும் ஒரு பேதமையாகும். அல்லது மாயைகளில் நின்றும் ஒரு மாயை ஆகும். படைப்பென்பது இமாம் ஜீலீ அவர்களிடம் சுயமான உள்ளமை இல்லாததாகும். அதனுடைய உள்ளமை “மஜாஸீ” (மெய்நிகர்) ஆகும். அதனுடைய எதார்த்தம் அல்லாஹ்வேதான். ஆனால் அவனே அவைகளின் உருவங்களில் வெளியாகி உள்ளான்.
يقول الجيلي:
فأوصافه والاسم والأثـر الّـذي – هو الكون عينُ الذات والله جامع
فما ثمّ من شيئ سوى الله فى الورى – وما ثمّ مسموع وما ثمّ سامع
قصيدة النّادرات العينيّة للجيلي، ص 88
இமாம் ஜீலீ அவர்கள் அந் நாதிறாதுல் ஐனிய்யஹ் என்ற தனது பாடல் தொகுப்பில் பின்வருமாறு ஒரு பாடலில் கூறுகின்றார்கள்.

“அவனுடைய பிரதிபலிப்பாக, பெயராக, வர்ணனைகளாக உள்ள பிரபஞ்சம் அவன் தானானதே! அல்லாஹ் என்பது அனைத்தையும் உள்ளடக்கியவன். அங்கே அல்லாஹ் தவிர எதுவும் கிடையாது. அவனன்றி கேட்பவனும், கேட்கப்படுபவனும் இல்லை”
يقول الجيلي رحمه الله:

هو المُوجد الأشياء وهو وجودها – وعـينُ ذوات الكُلِّ وهــو الجوامـعُ
حــقائق ذاتٍ فـى مراتب حــقِّـه – تُسمَّى باسم الـخلق والحقّ واسـع
(قصيدة النّادرات العينيّة للجيلي، ص 91،92 )
மேலும் ஒரு பாடல் அடியில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

“வஸ்த்துக்களின் உள்ளமையாக அவனே இருந்து கொண்டு அவற்றை வெளிப்படுத்தியவன் அவன். அனைத்தினதும் “தாத்” உள்ளமையாக அவனே உள்ளான். அவன் அனைத்தையும் உள்ளடக்கியவன். தன்னுடைய “தாத்”தின் படித்தரங்களின் அடிப்படையில் “ஹக்” என்றும் “கல்க்” என்றும் பெயர் சொல்லப்படும் அவன் விசாலமானவன்.
ولئلّا يظنّ أحد أنّ الجيلي يعتقد أنّ المخلوق له وجود حقيقيّ أو ذاتٌ مستقلّة يتجلّى الله فيها، بيّن الجيليّ (فما تجلّى إلّا على نفسه، لكنّا نُسمّي تلك اللّطيفة الإلهيّة ‘عبدا ‘ باعتبار أنّها عوض عن العبد، وإلّا فلا عبدَ ولا ربّ، إذ بانتفاء المربُوب انْتَفى اسمُ الربّ ، فما ثمّ إلّا الله وحده، الواحد الأحد )
(الإنسان الكامل للجيلي ، ص 97 )
எவரும் தன்னை, படைப்புகளுக்கு தனியான “வுஜூத்” உண்டு என்றும் அதிலே இறைவன் வெளியாகின்றான் என்றும் நம்புவதாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காக பின்வருமாறு கூறுகின்றார்கள். “அவன் தன்னிலேயன்றி வேறெதிலும் வெளியாகவில்லை. ஆனால் நாங்கள்தான் அந்த இலாஹிய்யத்தான நுட்பத்திற்கு “அப்து” அடிமை என்று (அடிமைக்குப் பகரமாக உள்ளதென்று எண்ணி) பெயர் வைக்கின்றோம். அப்படி இல்லை என்றால் “றப்பு” ம் இல்லை, “அப்து” அடிமையும் இல்லை. ஏனெனில் வளர்க்கப்படுபவன் இல்லை என்றால் வளர்ப்பவன் எப்படி இருப்பான். அதாவது “மர்பூப்” வளர்க்கப்படுபவன் என்பதே இல்லை என்றால் “றப்பு” வளர்ப்பவன் என்ற பெயர் எதற்கு? அல்லாஹ் மாத்திரமே உள்ளான்”
(அல் இன்ஸானுல் காமில், பக்கம் – 97)

وصرّح الجيلي أنّ الله تبارك وتعالى هو (عينُ هويّة المسمّى بالخلق والحقّ)
((الإنسان الكامل للجيلي ،ص 5
இமாம் ஜீலீ அவர்கள் படைப்பு (கல்கு), படைத்தவன் (ஹக்கு) என்ற பெயர்கள் சூட்டப்படுபவைகளின் எதார்த்தம் அவனே! அல்லாஹ்வே! என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.
(அல் இன்ஸானுல் காமில், பக்கம் – 5)
وقد مثّل الجيلي للتَّجلِّي الإلهيّ بصُور المخلوقات، كما يزعم بالماء والثلج، فالله عنده مَثل الماء ،والخلقُ كالثّلج، وليس الثلج فى الحقيقة إلّا ماءً ظهر بصورة الثلج،

இமாம் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் படைப்புக்கு ஐஸ்கட்டி, நீர் ஆகிவற்றை உதாரணமாகச் சொல்லிக் காட்டியுள்ளார்கள். அவர்களிடம் அல்லாஹ்வாகிறவன் நீர் போன்றும், படைப்பாகின்றது ஐஸ்கட்டி போன்றும் ஆகும். ஐஸ்கட்டியென்பது எதார்த்தத்தில் அவ்வுருவில் தோன்றிய நீரன்றி வேறில்லை. இதையே பின்வரும் பாடல் மூலம் கூறுகின்றார்கள்.

قال الجيلي، وما الخلقُ فى التِّمْثَال إلّا كثَلْجَةٍ – وأنت بها الماء الّذي هو نابعٌ
(قصيدة النادرات العينيّة للجيلي ، ص 94)

وبناءً على اعتقاده الوحدة بين الخالق والخلق، فإنّه يرى أنّ الله موصوف بكلّ صفات الخلق، أو كما يقول ‘ظهر فى كلّ ذات بكلّ خلق واتّصف بكلّ معنًى فى كلّ خلق وحقّ ‘ وموصوفٌ بكلّ وصفٍ، (الكهف والرقيم للجيلي ، ص 8)

இமாம் ஜீலீ அவர்கள் படைப்புக்கும், படைத்தவனுக்கும் உள்ளமை ஒன்று என்ற அடிப்படையில் அல்லாஹு தஆலா படைப்புக்களின் அனைத்து தன்மைகள் கொண்டும் வருணிக்கப்பட்டவன் என்று கருதுகின்றார்கள். அல்லது அவர்கள் பின்வருமாறு கூறுவது போன்று. “ஒவ்வொரு வஸ்த்துவிலும் அவன் வெளியாகியுள்ளான். “ஹக்”, “கல்கு” ஆகியவற்றின் கருத்துக்கள் ஒவ்வொன்றைக் கொண்டும் குணம் பெற்றுவிட்டான்”
(அல் இன்ஸானுல் காமில், பக்கம் – 8)

இமாம் அப்துல் கனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

هو عبد الغنيّ بن إسماعيل بن عبد الغنيّ ، الدمشقي، الحنفيّ، المشهور كأسلافه بالنابلسـي، وُلد سنة 1050 هـ، فى مدينة دمشق، ونشأ بها، تحت كنف والده، الذي كان صوفيّا على طريقة ابن عربي،
அவர்களின் இயற் பெயர் அப்துல் கனீ. அவர்களின் தந்தை இஸ்மாயீல், அவர்களின் தந்தை அப்துல் கனீ . டமஸ்கஸ் நகரைச் சேர்ந்தவர்கள். ஹனபீ மத்ஹபைப் பின்பற்றியவர்களுமாவர். தன்னுடைய முன்னோர்கள் போன்று “அந் நாபலஸீ” என்று பிரபல்யமானவர்கள். ஹிஜ்ரீ 1050ல் டமஸ்கஸ் நகரில் பிறந்து, அங்கேயே தனது தந்தையான இப்னு அறபீ நாயகத்தின் வழி செல்லும் ஸூபீ அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்கள்.
أخذ الشيخ عبد الغنيّ النابلسـي رحمه الله علوم الفقه، والحديث، والكلام ، واللّغة عن علماء الشّام، حتّى تمكّن من هذه العلوم، وأخذ التصوّف عن البَلْخِيّ، (البَلْخِيّ : هو سعيد البلخي ، من مشائخ الطريقة النّقشبنديّة ، قَدِم دمشق سنة 1087 هـ )
இமாம் அப்துல் கனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடிக்கும் அளவு சட்டக்கலை, ஹதீதுக்கலை, இல்முல் கலாம் (கொள்கை), மற்றும் மொழியறிவு போன்பவற்றை ஷாம் – சிரிய அறிஞர்களிடமிருந்து பெற்றார்கள். “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்தை “பல்கீ” அவர்களிடமிருந்து பெற்றார்கள். (அல் பல்கீ: ஸஈதுல் பல்கீ, நக்ஷபந்திய்யஹ் தரீகஹ்வின் ஷெய்குமார்களில் ஒருவர். டமஸ்கஸ் நகருக்கு ஹிஜ்ரீ 1087ல் வந்தார்கள்)
ولمّا تجاوز النّابلـسـي الأربعين من العمرلزم الخلوة المُقرّرة عند الصوفيّة، فأقام فى بيته سبع سنين، لا يخرج منه، معفيا شعره، مُطيلا أظفاره، مُلازما للرّياضات الصوفيّة، مواظبا على قرائة كتب دُعاة وحدة الوجود،
இமாம் நாபலஸீ அவர்கள் தனது 40வது வயதை கடந்ததும் ஸூபிய்யாக்களிடம் உள்ள “கல்வத்” தனிமையை தனக்கு அவசியமாக்கிக் கொண்டார்கள். தனது வீட்டிலேயே 07 வருடங்கள் வெளியாகாமல் தங்கியிருந்தார்கள். முடிகள் நீளமாக வளர்ந்தும், நகங்கள் வளர்ந்தும், ஸூபீகளின் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டும், “வஹ்ததுல் வுஜூத்” பேசிய ஸூபீகளின் நூல்களை வாசித்துக் கொண்டும் இருந்தார்கள்.
يقول عنه أحد معاصريه من الصوفيّة، أدْمن المطالعة فى كتب الشيخ محي الدين ابن عربي قدّس الله سرّه، وكتُبَ السادة الصوفيّة، كابن سبعين، فعادت عليه بركةُ أنفاسهم، فأتاه الفتحُ اللّدنّي،
அவர்களின் காலத்து ஸூபீகளில் ஒருவர் பின்வருமாறு கூறுகின்றார். “இப்னு அறபீ நாயகம், இப்னு ஸப்ஈன் மற்றும் ஸூபீகளின் நூல்களைப் படிப்பதில் நிரந்தரமாக இருந்ததால் இவர்களின் அருள் கிடைக்கப்பெற்று அவர்களின் உள்ளம் “பத்ஹுல் லதுன்னீ” என்ற இறைஞானம் (உள்ளம் திறக்கப்படல்) கிடைக்கப்பெற்றார்கள்.
ولمّا بلغ مرتبة اليقين عند الصوفيّة ، واستشعر وحدة الوجود خرج من خلوته، وقلع عَزْلتَه،وقام برحلات إلى بلدان الشام ومصـر، لزيارة أضْرِحَةِ المقدّسين عند الصوفيّة، وللإتّصال بأقطاب الصوفيّة الأحياء، ثم عاد إلى دمشق، سنة 1143 هـ ،
ஸூபிய்யாக்களிடமுள்ள உறுதி நிலையைப் பெற்றதும் “வஹ்ததுல் வுஜூத்” ஐ உணர்ந்தார்கள். தனது வீட்டை விட்டும் (“கல்வத்” ஐ விட்டும்) வெளியேறினார்கள். சிரிய மற்றும், எகிப்து நாட்டின் பல ஊர்களுக்கும் ஸூபிய்யாக்களின் புனித தலங்களைத் தரிசிப்பதற்காகவும், உயிர் வாழ்ந்து கொண்டிருந்த ஸூபிய்யாக்களில் “குத்பு”மார்களைத் தரிசிப்பதற்காகவும் சென்றார்கள். மீண்டும் டமஸ்கஸ் நகருக்கு ஹிஜ்ரீ 1143ல் வந்தார்கள்.

وللنّابلسـي رحمه الله مؤلّفات كثيرة فى التصوّف وعلوم الشـريعة واللّغة، وغير ذلك، وله دواوين شعريّة، ومن مؤلّفاته الصوفيّة،

01 ) إيضاح المقصود من معنى وحدة الوجود،
02 ) جواهر النّصوص فى حلّ كلمات الفصوص،
03 ) جمع الأسرار فى منع الأشرار من الطعن على الصوفية الأخيار،
04 ) الوجود الحقّ
05 ) شرح ديوان ابن الفارض
06 ) ديوان الحقائق
இமாம் நாபலஸீ அவர்களுக்கு ஸூபிஸம், ஷரீஅத், மொழி மற்றுமுள்ள கலைகளில் அதிக நூல்கள் உள்ளன. மேலும் கவி ஏடுகள் பலவும் உள்ளன. அவர்களின் ஸூபிஸம் சம்பந்தப்பட்ட நூல்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.

01. ஈளாஹுல் மக்ஸூத் மின் மஃனா வஹ்ததில் வுஜூத்
02. ஜவாஹிருன் நுஸூஸ் பீ ஹல்லி கலிமாதில் புஸூஸ்
03. ஜம்உல் அஸ்ரார் பீ மன்இல் அஷ்றார் மினத் தஃனி அலஸ்
ஸூபிய்யதில் அக்யார்.
04. அல்வுஜூதுல் ஹக்
05. ஷர்ஹு தீவானி இப்னில் பாரிழ்
06. தீவானுல் ஹகாயிக்
ويرى النّابلسـي رحمه الله أنّ الله وحده هو الموصوف بالوجود على وجه الحقيقة ، وفى هذا يقول:
ليس لله فى الوجود شريك – لا اشتباه فيه ولا تشكيكٌ
(ديوان الحقائق للنّابلسي – 16 -2 )
இமாம் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள், அல்லாஹ் மாத்திரமே எதார்த்தமான “வுஜூத்” உள்ளமை கொண்டு வர்ணிக்கப்பட்டவன் என்று கருதுகின்றார்கள். பின்வரும் பாடல் மூலம் இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
ليس لله فى الوجود شريك – لا اشتباه فيه ولا تشكيكٌ
(உள்ளமை என்ற விடயத்தில் அல்லாஹ்வுக்கு சந்தேகமின்றி எந்தக் கூட்டும் இல்லை. அவன் மாத்திரமே உள்ளமை உடையவன்)

ثمّ اعتقد تبعا لذلك أنّ كلّ موجود فهو الله،

ألا إنّ ذاتي ذاتُ كُلِّ الخلائقِ – وسَلْ عنه ذا علمٍ كريمِ الخلائقِ
(ديوان الحقائق للنّابلسي – 343-2)
பின்பு அதைத் தொடர்ந்து படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வே என்று நம்புகின்றார்கள். பின்வரும் பாடல் மூலம் இக்கருத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

ألا إنّ ذاتي ذاتُ كُلِّ الخلائقِ – وسَلْ عنه ذا علمٍ كريمِ الخلائقِ

(அறிந்து கொள்! என்னுடைய “தாத்” உள்ளமையாகின்றது எல்லா படைப்புக்களினதும் “தாத்” உள்ளமையாகும். அதுபற்றி அறிவும், நற்குணங்களும் உள்ளவரிடம் கேள்!)

وقال :
وَحَقِّقْ وجودَ الحقِّ فى الكونِ وحده – ولا كونٌ ولا شفعٌ هناك ولا وِتْرٌ
( ديوان الحقائق للنّابلسي 1-229-1)
மேலும் “சிருஷ்டியில் இறைவனின் உள்ளமையை மட்டும் உறுதி செய். அங்கே சிருஷ்டி, இரட்டை, ஒற்றை என்பன கிடையாது” என்றும் ஒரு பாடலில் கூறுகின்றார்கள்.
(தீவானுல் ஹகாயிக் லின் நாபலஸீ, 1-229)
ومن هنا آمن النابلسـي بوحدة الوجود ، وقال إذ الوجود كلّه عندهم أي عند الصوفيّة حقيقة واحدة، متميّزة عن الأشياء،
(الوجود الحقّ للنّابلسي، ص 104 )
இந்த இடத்தில் இமாம் அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஐ நம்புகின்றார்கள். “ஸுபிய்யஹ்” களிடம் அனைத்து உள்ளமைகளும் ஒரே எதார்த்தம்தான். வஸ்த்துக்களை விட்டும் வேறுபட்டதாகும். (அல் வுஜூதுல் ஹக் லிந் நாபலஸீ, பக்கம் – 104)
وقال أيضا:
إنّ الوجودَ الحقّ شيئٌ واحدٌ – يا سعدُ مَنْ يُجْلِيْ له فَيُشاهِدُ
(ديوان الحقائق للنّابلسي ، 1- 138)
தனது தீவானுல் ஹக் என்ற பாடல் ஏட்டின் ஒரு பாடலில் (1-138) பின்வருமாறு கூறுகின்றார்கள். “உண்மையான வுஜூத் – உள்ளமை ஒன்றுதான். அதன் வெளிப்பாட்டை எவன் தரிசிக்கின்றானோ அவன் சீதேவியாகிவிட்டான்”
ويرى النّابلسـي – يعتقد – أنّ وحدة الوجود شاملة للحقّ والخلق، والربِّ والمربوبِ، وفى هذا يقول : وما هما – الخالقُ والمخلوقُ – إثنان، بل عينٌ واحدةٌ،
(حكم شطح الولي للنّابلسي، ص 196)
இமாம் அந் நாபலஸீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” என்பது படைப்பையும், படைத்தவனையும், பரிபாலிப்பவனையும் (றப்பு), பரிபாலிக்கப்பட்டவனையும் (மர்பூப்) சேர்த்த ஒன்றாகும் என்று பின்வரும் வாக்கியத்தின் மூலம் கூறிக் காட்டுகின்றார்கள். “அவ்விரண்டும் (படைப்பும், படைத்தவனும்) இரண்டல்ல. ஆனால் ஒன்றேதான். (ஹுக்மு ஷத்ஹில் வலிய்யி லிந் நாபலஸீ, பக்கம் – 196 )
ويقول
ليس الوجودُ كما يقال إثنان – حــقٌ وخلـقٌ إِذْهُـمَا شَيْئَانِ
هذا المقالُ عليه قُبْحُ عـقيدةٍ – عند المحقِّقِ ظاهرُ البُطلانِ
(ديوان الحقائق للنّابلسي ، 2- 170)
இதேபோல் தன்னுடைய தீவானுல் ஹகாயிக் பாடல் ஏட்டிலும் (2-170) கூறிக்காட்டுகின்றார்கள். “வுஜூத் – உள்ளமை என்பது படைத்தவன், படைப்பு என்று இரண்டில்லை. அப்படியென்றால் இரண்டு வஸ்த்துக்களாகிவிடும். இது (இரண்டென்பது) எதார்த்த வாதியிடம் இழி கொள்கையும், பொய்யானதுமாகும்.
قال النابلسـي: ثبت أنّ كلَّ ما سوى اللهِ تعالى صورٌ قائمةٌ بالوجودِ الحقِّ سبحانه وتعالى لا غيرُ،
(الوجود الحقّ للنابلسي، ص 37)
தன்னுடைய அல் வுஜூதுல் ஹக் என்ற நூல் 37ம் பக்கத்தில் கூறுகின்றார்கள். “அல்லாஹ் தவிரவுள்ள அனைத்தும் எதார்த்தமான அவனது வுஜூத் – உள்ளமை கொண்டு தரிபட்டதாகும். வேறு கிடையாது”.
إنّ العارف من الصوفية يَرَى كما يُقرِّرُ النّابلسـي أنّ ما يعتقدُهُ النّاسُ كونًا أو خلقًا هو من حيث ذاته كالخيال، أو السَّراب، الذي يراه الإنسانُ من بعيد، فإذا قَرُبَ منه أدرك أنّه ليس له وجودٌ حقيقيّ،

ஒரு ஆரிப் – இறை ஞானி இமாம் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கருதுவது போல் “மனிதர்கள் சிருஷ்டி என்று அல்லது படைப்பு என்று பார்க்கின்ற – நம்புகின்ற அனைத்தும் அவைகளின் “தாத்” அடிப்படையில் மாயை அல்லது கானல்நீர் போன்றதாகும். கானல் நீர் என்பது தொலைவில் இருந்து பார்க்கும் போது தெரியும். ஆனால் அருகில் சென்று பார்க்கும் போது அங்கே அது இருக்காது. அதற்கு சுயமான வுஜூத் – உள்ளமை இல்லை.
يقول النّابلسـي رحمه الله : إعلم أنّ الأشياء كلّها أمورٌ لطيفةٌ جِدًّا، بحيث إنّها بمنزلة الخيال، أو السّراب، الذي يُرى من بعيد، وهو ليس بشيئ،
(الوجود الحقّ للنّابلسي، ص193 )

இமாம் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கின்றார்கள். வஸ்த்துக்கள் அனைத்தும் மிகவும் நுட்பமான விடயங்களாகும். அவைகள் “கயால்” – மாயை ஆகும். அல்லது தொலைவில் தெரிகின்ற ஆனால் உண்மையில் இல்லாத கானல் நீர் போன்றாகும்.
(அல் வுஜூதுல் ஹக் லிந் நாபலஸீ, பக்கம் – 193)
وما يَتَخَيَّلُه النّاسُ كونا أو خلقًا هو عند النّابلسي مَجَالِيْ ومظاهرُ للذّات الإلهيّة ، وفى هذا يقول:

جميعُ الكون مظهرُه – فَيُخْفِيْهِ ويُظْهِرُهُ
(ديوان الحقائق للنابلسي 1- 255 )
மனிதர்கள் சிருஷ்டியாக அல்லது படைப்பாக காணுகின்ற மாயை இமாம் அந் நாபலஸீ அவர்களிடம் இறைவனின் வெளிப்பாடுகள் ஆகும். இதைப் பின்வரும் பாடல் மூலம் குறிப்பிடுகின்றார்கள்.

جميعُ الكون مظهرُه – فَيُخْفِيْهِ ويُظْهِرُهُ
(ديوان الحقائق للنابلسي 1- 255 )
(சிருஷ்டிகள் அனைத்தும் அவனின் வெளிப்பாடாகும். தன்னை மறைத்து சிருஷ்டியை வெளிப்படுத்திக் காட்டுகின்றான்)

والّذين أدركوا وحدة الوجود، وآمنوا بها، هم عند النّابلسـي ‘العلماءُ المحقِّقُون ، والفُضَلاءُ العارفون، أهلُ الكشفِ والبصيرةِ، الموصوفون بنقاء السيرة، وصفاء السريرة ‘،
(التصوّف الإسلاميّ فى عصر النّابلسي لعبد القادر عطا، ص 361 )
“வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை அடைந்து, அதை நம்பியவர்களே இமாம் அந் நாபலஸீ அவர்களிடம் “அல் உலமாஉல் முஹக்கிகூன்” உண்மையான, எதார்த்தமான அறிஞர்களாவார்கள். மேலும் சிறப்புமிக்க ஞானிகளுமாவார்கள். “கஷ்பு” என்ற ஞானம் வழங்கப்பட்டவர்களுமாவார்கள். அகக்கண் பார்வை உடையவர்களுமாவார்கள். உடலும், உள்ளமும் சுத்தமானவர்களுமாவார்கள்”

(அத் தஸவ்வுபுல் இஸ்லாமீ பீ அஸ்ரிந் நாபலஸீ லிஅப்தில் காதிர் அதா, பக்கம் – 361 )
يقول النّابلسـي :ثمّ لمّا ظَهَرَ سبحانَه فى باطِنِيَّةِ آدم عليه السلام مستترة بظاهريّته ……، ولم يشعر أي إبليس بباطنيّة آدم، التي هي صورة الحقّ،
(الفتح الرّبّاني للنّابلسي، 201 – 202 )
“அல் பத்ஹுர் றப்பானீ” என்ற தன்னுடைய நூல் 201, 202ம் பக்கங்களில் இமாம் நாபலஸீ அவர்கள் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றார்கள். “நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வெளித்தோற்றத்தில் மறைந்து, “பாதினிய்யத்” உள்ளமைப்பில் – எதார்த்தமாக வெளியானபோது….. இப்லீஸ் லஃனதுல்லாஹி அலைஹி நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உள்ளமைப்பை – எதார்த்தத்தை புரியவில்லை. அதாவது அது இறைவனின் உருவம் என்பதைப் புரியவில்லை”
بل إنّ من لا يؤمن بوحدة الوجود هم عند النابلسـي المشـركون بالله، حيث أَثْبَتُوا معه موجودا آخر، وهم أيضا الكافرون به، الذين جَحَدُوا تعيُّنَه بصُوَرِ الخلقِ،
இமாம் நாபலஸீ அவர்களிடம் “வஹ்ததுல் வுஜூத்” ஐ நம்பாதவன் அல்லாஹ்வுடன் இன்னொரு “வுஜூத்”ஐ தரிபடுத்திய “முஷ்ரிக்” இணைவைத்தவனும், அல்லாஹ்வை மறுத்த (படைப்புக்களின் உருவில் அவனே உள்ளான் என்பதை மறுத்த) “காபிர்”உம் ஆகும்.

يقول النّابلسـي : والّذي يدّعي الوجودَ مع اللهِ دعواه هذه تشـريكٌ،
(ديوان الحقائق للنّابلسـي، 2- 16 )
மேலும் இதுபோன்ற கருத்தை தனது “தீவானுல் ஹகாயிக்” என்ற நூல் 2-16 ல் கூறுகின்றார்கள். “அல்லாஹ்வுடன் இன்னொரு வுஜூத் – உள்ளமையை வாதிடுபவனின் வாதம் இணை வைத்தலாகும்”

ويقول النّابلسـي: أقسام الكفر بحسب الحقيقة ثلاثة، الغفلةُ عن الله، وتَعَيُّنُ الوجودِ مع الله، والنظر إلى غير الله،
(الفتح الربّاني، ص 197)
இமாம் நாபலஸீ அவர்களிடம் எதார்த்தத்தின் அடிப்படையில் “குப்ர்” இன் வகைகள் மூன்றாகும்.

01. அல்லாஹ்வை மறந்து இருத்தல்.
02. அல்லாஹ்வுடன் இன்னொரு வுஜூதை தரிபடுத்தல்.
03. அல்லாஹ் அல்லாதவைகளைப் பார்த்தல்.

(அல் பத்ஹுர் றப்பானீ – பக்கம் – 197)
وللنّابلسـي مكانةٌ عظيمةٌ لَدَى الصوفيّة ، وهم يَعُدُّونه ‘ أستاذ الأساتذة، وجهبذ الجَهَابِذَةِ، الوليّ العارف، ينبوع العوارف والمعارف ‘،
(سلك الدُّرر للمرادي، 3- 30 )
இமாம் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களுக்கு ஸூபிய்யஹ் களிடம் ஒரு தனி அந்தஸ்த்து உண்டு. அவர்களை ஸூபிய்யஹ் கள் “ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர்”, “ஞானிகளுக்கெல்லாம் பெரும் ஞானி”, “இறைஞானியான வலீ”, “இறைஞான ஊற்றுக்கண்” என்றெல்லாம் கருதுகின்றார்கள்.

“ஷாதுலிய்யஹ் தரீகஹ்” வின் தாபகர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.

إنّ القطب الأكبر أبا الحسن علي الشاذلي قُدّس سرّه هو المؤسّس للطريقة الشّاذليّة، التي انتشـرت فى جميع أنحاء الدنيا، وُلد هذا القطب سنة 591 هـ فى غمارة ، وهي قرية فى المغرب، قريبة من مدينة سَبْتَةَ،

பூமியின் நாலா பக்கமும் பரவியிருக்கும் “ஷாதுலிய்யஹ் தரீகஹ்”வின் தாபகர் இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் ஹிஜ்ரீ 591ல் “குGமாறஹ்” (மொறோகோவிலுள்ள ஒரு கிராமம், “ஸப்தஹ்” நகருக்கு அருகில் உள்ளது) கிராமத்தில் பிறந்தார்கள்.

ثم انتقل فى صباه إلى تُونس، وتعلّم فيها، ثمّ توجّه إلى بلاد المشـرق، فَحَجَّ ودخل العراق، ثم عاد إلى غمارة، فأخذ علوم الصوفيّة عن عبد السلام بن مشيش، (هو من صوفيّة المغرب، سكن غمارة بالمغرب، وأخذ التصوّف عن عبد الرحمن العطّار الزّيّات، ولصوفيّة المغرب غُلُوٌّ شديد فى ابن مشيش، والصلاة المشيشيّة أهمّ وأشهر الأذكار عند الشّاذليّة، تُوفّى ابن مشيش مقتولا سنة 622 هـ )

தனது சிறு பராயத்திலேயே “தூனுஸ்” நாட்டிற்கு இடம் பெயர்ந்து அங்கேயே கல்வி கற்றார்கள். பின் உலகின் கிழக்குப் பிரதேசங்களுக்குச் செல்ல நாடி முதலில் “ஹஜ்” செய்துவிட்டு இறாக் நாட்டில் நுழைந்தார்கள். மீண்டும் தனது பிறந்த ஊரான “குGமாறஹ்” வுக்கு வந்தார்கள். அங்கு வந்த அவர்கள் அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களிடம் ஸூபிஸ ஞானங்களைக் கற்றார்கள்.

(அப்துஸ்ஸலாம் இப்ன மஷீஷ்: மொறோக்கோ நாட்டின் குGமாறஹ் கிராமத்தில் வாழ்ந்த ஸூபிய்யஹ் களில் ஒருவர். இவர்கள் ஸூபிஸ ஞானத்தை அப்துர் றஹ்மான் அல் அத்தார் அஸ்ஸய்யாத் அவர்களிடமிருந்து பெற்றார்கள். மொறோக்கோ “ஸூபீகளிடம்” அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களுக்கு தனிப்பெரும் மரியாதையே உண்டு. இவர்களின் “அஸ் ஸலாதுல் மஷீஷிய்யஹ்” என்ற ஸலவாத் மிகப் பிரபல்யமானதும், ஷாதுலிய்யஹ் தரீகஹ் வைச் சார்ந்தோரிடம் மிக முக்கியமான “விர்து” ஓதலுமாகும். இமாம் அஷ் ஷெய்கு இப்னு மஷீஷ் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் ஹிஜ்ரீ 622ல் கொலை செய்யப்பட்டு மரணித்தார்கள்.)

وارتحل الشاذلي بعد ذلك إلى شَاذُلَة، وهي بلدة تقع قُرب مدينة تُونس، واعتزل النّاس فى جبل زعفران، وهو ملازم للرّياضات الصوفيّة، وأقام على ذلك مدّة ، حتّى نُسب إلى هذه البلدة ،(شاذلي)

அதன் பிறகு அபுல் ஹஸன் அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் தூனுஸ் நகருக்கு அருகிலுள்ள “ஷாதுலஹ்” என்ற ஊருக்கு நகர்ந்தார்கள். “ஸஃபறான்” என்ற மலையடிவாரத்துக்கு அருகில் தனிமையில் மனிதர்களைப் பிரிந்து சில காலம் (அவர்களை அந்த ஊருடன் சேர்த்து “ஷாதுலீ” என்று கூறப்படும் அளவிற்கு) இருந்தார்கள்.

ثم انتقل من شاذلة إلى تونس، وأخذ ينشـر التصوّف، والتفّ حوله جماعة من الأتباع، ولقي فيها إنكارا شديدا، من حاكم تونس، ومن كبير قُضاتها، فترك تونس ، وتوجّه إلى مصـر، وأقام فى الإسكندريّة ،واتّخذها مَقَرًّا لدعوته، فكثر أتباعه، وعظم شأنه، وقـضـى بقيّة عمره فى ترويج التصوّف، وتسليك المريدين، توفّي سنة 656 هـ فى صحراء عيذاب شرقى مصر، وهو فى طريقه إلى الحجّ،

பின் “ஷாதுலஹ்”விலிருந்து தூனுஸ் நகருக்கு சென்றார்கள். அங்கிருந்து ஸூபிஸத்தை பரப்ப ஆரம்பித்தார்கள். தன்னைப் பின்பற்றக் கூடிய ஒரு கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அங்கே தூனுஸ் நகர தலைவர்கள், காழீ – நீதிவான்களிடமிருந்து கடும் எதிர்ப்புக்களையும் சந்தித்தார்கள். ஆதலால் அங்கிருந்து வெளியாகி எகிப்து நோக்கி வந்தார்கள். “இஸ்கன்தரிய்யஹ்” என்ற ஊரில் தங்கிய அவர்கள் அந்த ஊரை தனது “தஃவா” அழைப்புப்பணிக்கான தலமாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்களைத் துயரக் கூடியவர்கள் அதிகமாகி அவர்களின் ஆத்மீக நிலையும் வலுப்பெற்றிற்று. தனது மீதி ஆயுளை ஸூபிஸ கல்வியைப் போதிப்பதிலும், முரீதுகளை அவ்வழியில் நடாத்துவதிலும் கழித்தார்கள். ஹிஜ்ரீ 656ல் எகிப்தின் கிழக்கு “ஐதாப்” பாலைவனத்தில் புனித “மக்கஹ்” நோக்கி “ஹஜ்” செய்ய செல்லும் வேளை “வபாத்” இறையடி சேர்ந்தார்கள்.

وقد كان الشاذلي رضي الله عنه من المؤمنين بوحدة الوجود، الدّاعين إليها، كما يُبيّن هذا معتقد شيخه عبد السلام بن مشيش، وأقوالُ الإمام أبي الحسن الشّاذلي رضي الله عنهم،

அஷ் ஷெய்கு அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை நம்பி விசுவாசம் கொண்டவர்களாயும், அதன் பால் மக்களை அழைப்பவர்களாயும் இருந்தார்கள் என்பதை அவர்களின் பேச்சுக்களும், அவர்களின் ஞானகுருவாகிய அஷ் ஷெய்கு அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் நம்பிக்கையும் தெளிவுபடுத்துகின்றன.
وأمّا شيخ الشاذلي عبد السلام بن مشيش ألّف صلاة على النبيّ صلّى الله عليه وسلّم، وسمّاها بالصلاة المشيشيّة، يقرأها الشاذليون صباح كلّ يوم ومسائه، وفى أيّام المناقب، ضمّنها ابن مشيش عقيدة وحدة الوجود،

ஷாதுலீ இமாம் அவர்களின் ஷெய்காகிய அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஒரு “ஸலவாத்” ஐக் கோர்வை செய்து அதற்கு “அஸ்ஸலாதுல் மஷீஷிய்யஹ்” எனப் பெயரிட்டுள்ளார்கள். ஷாதுலிய்யஹ் தரீகஹ் வைச் சார்ந்தவர்கள் இந்த ஸலவாத்தை ஒவ்வொரு காலையிலும், “மனாகிப்” உடைய தினங்களிலும் ஓதிவருகின்றார்கள். இந்த ஸலவாத் “வஹ்ததுல் வுஜுத்” தத்துவத்தை உள்ளடக்கியதாக இருப்பது விஷேட அம்சமாகும்.
ومنها قوله ‘ اللهم زُجَّ بِيْ فى بحار الأحديّة، وانشُلني من أوحال التوحيد، وأَغْرِقْنِي فى عين بحر الوحدة، حتّى لا أرى ولا أسمعَ ولا اُحِسَّ إلّا بها ‘ (جامع الصلوات للنّبهاني، ص 93) وهذا القول -عبارة هذه تدلّ على وحدة الوجود دلالة واضحة، لا يخفى معناه على من بحثها من أهل التصوف ووحدة الوجود،

மேற்கண்ட ஸலவாத்தில் இமாம் இப்னு மஷீஷ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். “இறைவா! என்னை “அஹதிய்யத்” என்ற கடலில் எறிந்து விடு. தவ்ஹீதின் சேற்றிலிருந்து என்னைக் காப்பாற்றி “வஹ்தத்” என்ற கடலில் மூழ்கடித்துவிடு. நான் எதையும் காண்பதாயின், கேட்பதாயின், உணர்வதாயின் அதைக் கொண்டே (வஹ்ததுல் வுஜூத்) அவைகள் உண்டாக வேண்டும். (ஜாமிஉஸ் ஸலவாத் லிந்நப்ஹானீ, பக்கம் – 93 ) இந்த வசனம் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை தெளிவாகக் காட்டக் கூடியதாகும். இக்கருத்து ஸூபிஸ, வஹ்ததுல் வுஜூத் வழி நடக்கக் கூடிய ஒருவருக்கு மறைவானதல்ல.
وقال الشّاذلي رضي الله عنه ‘ أوصاني أستاذي أنْ حَدِّدْ بصرَ الإيمان تجدِ الله فى كلّ شيئ، وعند كلّ شيئ، ومع كلّ شيئ، وفوق كلّ شيئ، وقريبا من كلّ شيئ، ومحيط بكلّ شيئ بقرب هو، وصفه، وبإحاطة هي نعته، وعدعن الظرفية، والحدود، وعن الأماكن، والجهات، وعن الصحبة، والقرب بالمسافات، وعن الدور بالمخلوقات وامْحَقِ الكلّ بوصفه الأوّل والآخر والظاهر والباطن كان الله ولا شيئ معه ‘ (الطبقات الكبرى ، لوافح الأنوار فى طبقات الأخيار للشعراني، 13 ஃ 2 )

இமாம் ஷாதுலீ அவர்கள், தன்னுடைய ஆசான் பின்வருமாறு தனக்கு “வஸிய்யத்” நல்லுபதேசம் செய்ததாகக் கூறிக் காட்டுகின்றார்கள். “ஈமானுடைய பார்வையை கூர்மையாக்கிக் கொள்! ஒவ்வொரு வஸ்த்துவிலும், ஒவ்வொரு வஸ்த்துவிடத்திலும், ஒவ்வொரு வஸ்த்துவுடனும், ஒவ்வொரு வஸ்த்துவின் மேலும், ஒவ்வொரு வஸ்ததுவுக்கு சமீபமாகவும், எல்லா வஸ்த்துக்களையும் சூழ்ந்ததாகவும் அல்லாஹ்வைப் பெற்றுக் கொள்வாய். படைப்புக்களை இடத்தாலோ, திசையாலோ, மட்டுப்பாட்டாலோ சூழ்ந்தவனாக அல்லாமல், தூரத்தால் நெருக்கமானவன் என்றல்லாமல் பெற்றுக் கொள்வாய். இப்படியான குறையுள்ள தன்மைகளை அவனுடை “அவ்வல், ஆகிர், ளாஹிர், பாதின்” என்ற முந்தியவன், பிந்தியவன், உள்ளானவன், வெளியானவன் என்ற தன்மைகள் கொண்டு அழித்துவிடு. அவனுடன் எந்த வஸ்த்துவும் இல்லை.

(அத்தபகாதுல் குப்றா, லவாபிஹுல் அன்வார் பீ தபகாதில் அக்யார் லிஷ்ஷஃறானீ, 2-13)

وعبارة الإمام الشاذلي قدّس سرّه تدلّ على أنّ الكلّ هو الله تعالى،

இமாம் ஷாதுலீ அன்னவர்களின் மேற்கண்ட வசனம் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தையே அதாவது “எல்லாம் அவனே” – அல்லாஹ்தான் – என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

وقال الإمام الشاذلي قدّس سرّه ‘ قيل لي يا عليُّ ‘بِيْ قُلْ وعليَّ دُلَّ، وأنا الكلُّ ‘ ( إيقاظ الهمم شرح الحكم لابن عجيبة، ص 57 )
“அலீயே! என்னைக் கொண்டு சொல். என்னையே காட்டு. நானே எல்லாமாய் இருக்கின்றேன்” என்று எனக்குச் சொல்லப்பட்டது என்று இமாம் ஷாதுலீ அவர்கள் கூறிக்காட்டினார்கள்.
(ஈகாளுல் ஹிமம் ஷர்ஹுல் ஹிகம் லிப்னி அஜீபஹ், பக்கம் – 57)


ومن حزب البحر للشاذلي ‘ اللهم إنّا نسئلك الطاعة لأمرك، على بساط مُشاهداتك، ناظرين منك إليك، وناطقين بك عنك، اللهم ضيّق عليّ بقربك، واحجبني بحُجُبِ عزّتك وعزِّ حجبك ، وكن لي أنت حجابي، حتّى لا يقعَ شيئٌ منّي إلّا عليك، وارفع الحجاب فيما بيني وبينك، واجعل مقامي دائما بين يديك، وناظرا منك إليك، وأسقطْ البينَ عنّي، حتّى لا يكون بينٌ بيني وبينك، واكشف لي عن حقيقة الأمر، إلهي اجذبني جذبة، حتّى لا أصل بعدها إلى غيرك، اللهم هبْ لي من نور أسمائك ما اتحقّقُ به من حقيقة ذاتك، وافتح لي، عَدَمِيْ وجودي، ووجودي عدمي، طلبي لك جهلٌ ‘ (المفاخر العليّة لابن عبّاد 204 – 208 )

“ஹிஸ்புல் பஹ்ர்” என்ற தன்னுடைய “துஆ”வில் பின்வருமாறு கூறுகின்றார்கள். இறைவா! உன்னிடமிருந்து உன்னளவில் பார்த்தவர்களாக, உன்னைக் கொண்டு உன்னைப்பற்றி பேசியவர்களாக உன்னுடைய ஏவலுக்கு உன் திருமுகக் காட்சி என்ற விரிப்பில் கட்டுப்படுவதை உன்னிடம் கேட்கின்றோம். உன்னுடைய “குர்பு” நெருக்கம் கொண்டு என்னை நெருக்கி வை. உன்னுடைய “இஸ்ஸத்” கண்ணியம் என்ற திரைகள் கொண்டும், உன்னுடைய திரைகள் என்ற கண்ணியம் கொண்டும் எனக்குத் திரையிடு. என்னிலிருந்து உனக்கேயன்றி ஏதும் உண்டாகாத வரை நீ எனக்கு சாதகமாக ஆகிவிடு. நீ என்னுடைய திரையாக இருக்கின்றாய். எனக்கும் உனக்கும் இடையிலிருக்கின்ற இருட் திரைகளை அகற்றிவிடு. என்னுடைய அந்தஸ்த்தை உனக்கு முன் நிலையானதாக ஆக்கிவிடு. உன்னில் நின்றும் உன்னளவில் பார்ப்பவனாக ஆக்கிவிடு. எனக்கும், உனக்கும் “மத்தியில்” என்ற பிரிவு இல்லாமல் என்னை விட்டும் அந்த தூரத்தை இல்லாமலாக்கிவிடு. விடயத்தின் எதார்த்தத்தை எனக்கு காட்டு. உன்னையன்றி எதனளவிலும் இதன் பிறகு சேராத வண்ணம் என்னை சுண்டி இழுத்துவிடுவாயாக! உன்னுடைய பரிசுத்த “தாத்” கொண்டு நான் உறுதி பெறும் வகையில் உன்னுடைய “அஸ்மாஉ” திரு நாமங்களின் ஒளியை எனக்கு அருள்வாயாக! எனக்கு வெற்றியை தருவாயாக! நான் இல்லாமலிருப்பதுதான் எனது உள்ளமை. என்னுடைய உள்ளமை என்பது இல்லாமை. நான் உன்னைத் தேடுவது என் மடமை”
(அல் மபாகிறுல் அலிய்யஹ் லிப்னி அப்பாத், 204 – 208 )

وقال الشاذلي قدّس سرّه فى بعض كتب الله تعالى المنزلة على بعض أنبيائه ‘ من أطاعني فى كلّ شيئ أطعته فى كلّ شيئ،

நபீமார்களுக்கு அருளப்பட்ட வேதங்களில் ஒன்றில் “எவன் எனக்கு எல்லா விடயங்களிலும் வழிப்பட்டானோ அவனுக்கு நான் சகல விடயங்களிலும் வழிப்படுவேன்” என்று இருப்பதாக இமாம் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.

وقال الشاذلي قدّس سرّه ‘ من أطاعني فى كلّ شيئ ، بهجرانه لكلّ شيئ، أطعته فى كلّ شيئ، بأن أتجلّى له دون كلّ شيئ حتّى يراني أقرب إليه من كلّ شيئ’ هذه طريقة أولى وهي طريقة السالكين، (لطائف المنن لابن عطاء الله الإسكندري، ص 27)

“எவன் எனக்கு சகல விடயங்களிலும் சகல விடயங்களையும் வெறுத்து வழிப்பட்டானோ அவனுக்கு நான் அனைத்து வஸ்த்துக்களிலும் வெளியாகி என்னை அவன் அனைத்து வஸ்த்துக்களை விடவும் மிக நெருக்கமாகப் பார்க்கும் அளவு வழிப்படுவேன்” இதுவே சிறந்த வழியும், ஞான வழி நடப்பவர்களின் வழியுமாகும் என்று இமாம் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.
(லதாயிபுல் மினன் லிப்னி அதாயில்லாஹில் இஸ்கந்தரீ, பக்கம் -27)
وقال الشاذلي قدّس سرّه ‘ إنّا لا نرى أحدا من الخلق، هل فى الوجود أحد سوى الملك الحقّ؟ وإن كان ولا بُدَّ فَكَالهباءِ فى الهواء، إن فتَّشْتَهُ لم تجده شيئا، ومن أعجب العجب أن تكون الكائناتُ موصلةً إليه، فليت شعري هل لها وجود معه حتّى توصل إليه؟ ‘ (المدرسة الشاذليّة لعبد الحليم محمود، ص 76 )
“நாங்கள் படைப்புக்களில் எதையும் பார்க்கவில்லை. உள்ளமையில் “அல் மலிகுல் ஹக்” ஆகிய அல்லாஹ் தவிர வேறு உண்டோ? அந்தப் படைப்புக்கள் காற்றில் தெரியும் புழுதி துகள்கள் போன்றவை. அதை தேடிப்பார்த்தால் எதையுமே பெற்றுக் கொள்ள மாட்டாய். ஆச்சரியத்திலும் பெரிய ஆச்சரியம் என்னவெனில் அந்தப் படைப்புக்கள் அவனளவில் சேர்த்து வைக்கக் கூடியதாக இருப்பதாகும். அவனளவில் சேர்த்து வைக்க அவைகளுக்கு வுஜூத் – உள்ளமை உண்டோ? (இல்லை)” என்று இமாம் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

(அல் மத்றஸதுஷ் ஷாதுலிய்யஹ் லிஅப்தில் ஹலீம் மஹ்மூத், பக்கம் – 76)

وقال الشاذلي قدّس سرّه ‘ الكاملون حاملون لأوصاف الحقّ، وحاملون لأوصاف الخلق، فإن رأيتهم من حيث الخلق رأيت أوصاف البشـر، (أي ظاهرا) وإن رأيتهم من حيث الحقّ رأيت أوصاف الحقّ التي زيّنهم بها،
(الطبقات الكبرى للشعراني، -11-2)

“சம்பூரணமானவர்கள் (காமில்) என்பவர்கள் அல்லாஹ்வினதும், படைப்பினதும் தன்மைகளைச் சுமந்தவர்கள். அவர்களை நீ படைப்பு என்று பார்த்தால் மனித தன்மைகளைப் பார்ப்பாய். “ஹக்” அல்லாஹ் என்று பார்த்தால் தன்னுடைய பன்புகள் கொண்டு அவர்களை அழகு படுத்திய அல்லாஹ்வைப் பார்ப்பாய்” என்றும் கூறியுள்ளார்கள்.
(அத் தபகாதுல் குப்றா லிஷ்ஷஃறானீ, 2-11 )

قال القطب الأكبر أبو الحسن علي الشّاذلي قُدِّس سرّه قد مَحَقَ الحقُّ تعالى جميعَ الأغيار بقوله هو الأوّل والآخر والظاهر والباطن، فقيل له فأين الخلقُ؟ فقال موجودون، ولكن حكمهم مع الحقِّ تعالى كَالْأَنَابِيْبِ الّتي فى كوّة الشمس، تراها صاعدةً هابطةً فإذا قَبَضْتَ عليها لا تراها، فهي موجودة فى الشّهود مفقودةٌ فى الوجود،
‎اليواقيت والجواهر، الجزء الأول، ص65

ஷாதுலி நாயகம் அவர்கள் படைப்பு – சிருட்டி உண்டா இல்லையா? உண்டு என்றால் அதற்கு உதாரணம் எவ்வாறு என்பதை ஒரு சிறுவனுக்கு வாழைப்பழத்தின் தோலை உரித்து பழத்தைக் காட்டுவது போல் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் தனது “முந்தியவனும் அவனே, பிந்தியவனும் அவனே, உள்ளானவனும் அவனே, வெளியானவனும் அவனே” என்ற சொல் கொண்டு இறைவனல்லாத அனைத்தையும் அழித்துவிட்டான் – படைப்புக்கள் அனைத்தையும் இல்லாமற் செய்து விட்டான் என்று கூறிய போது அவ்வாறாயின் படைப்புக்கள் எங்கே? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் படைப்பு உண்டு. ஆனால் அதற்கு உராரணம் (ஒரு வீட்டின் கூரையிலுள்ள ஒரு ஓட்டை வழியாக சூரிய வெளிச்சம் “டார்ச்லைட்” வெளிச்சம் போல் உள்ளே வரும் வேளை அந்த வெளிச்சத்தில் ஏறுவதும், இறங்குவதும் போல் உன் கண்ணுக்குத் தெரிகின்ற தூசி போன்றதாகும். அதை நீ கையால் பிடித்தால் பிடிக்க முடியாமற் போவது போன்றதாகும். அது கண் பார்வைக்கு மட்டும் தான் தெரிகிறதேயன்றி அப்படி ஒரு தூசி இல்லை) இது போன்றதே சிருட்டி என்று உதாரணம் சொன்னார்கள்.

وقد كان للشاذلي عدد كبير من المريدين، وتخَرَّجَ على يديه عددٌ من مشائخ التصوّف، ولكن أعلاهم قدرا فى التصوّف وأعظمهم شأنا فى نظر الشاذلي أبو العبّاس المرسي، من أئمّة الشاذليّة،

இமாம் ஷாதுலீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான “முரீது”கள் இருந்தார்கள். அவர்களிடமிருந்து பலர் ஸூபிஸ குருக்களாக வெளியானார்கள். ஆனால் இவர்களில் இமாம் ஷாதுலீ அவர்களின் பார்வையில் வலுப்பமான அந்தஸ்த்தையுடையவர்களாக இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் காணப்பட்டார்கள்.

இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.


وُلد فى مرسيّة بالأندلس، سنة 616 هـ ونشأ بها، ثمّ قدم تونس، وأخذ التصوّف بها عن أبي الحسن الشاذلي، ولمّا نُفي الشاذلي من تونس خرج معه إلى مصـر، واستقرّ بالإسكندريّة، وتفرَّغَ للدعوة إلى طريقة شيخه الشاذلي، توفّي سنة 686 هـ ،

இமாம் அவர்கள் ஹிஜ்ரீ 616ல் ஸ்பெய்ன் நாட்டின் “முர்ஸியா” என்ற ஊரில் பிறந்து அங்கேயே வளர்ந்தார்கள். பின் தூனுஸ் நாட்டுக்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கே இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ நாயகத்திடம் “தஸவ்வுப்” ஞானத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இமாம் ஷாதுலீ அவர்கள் தூனுஸ் நாட்டை விட்டும் வெளியேற்றப்பட்டபோது அவர்களுடன் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ அவர்களும் வெளியேறி எகிப்துக்கு வந்தார்கள். இஸ்கந்தரிய்யஹ் நகரில் தரித்து தனது குருநாதர் இமாம் ஷாதுலீ அவர்களின் “ஷாதுலிய்யஹ்” தரீகஹ் வை வளர்த்தார்கள். ஹிஜ்ரீ 686ல் இவ்வுலகை விட்டும் பிரிந்தார்கள்.

قال المرسي قدّس سرّه ‘ إنّ لله عبادا، مَحَقَ أفعالهم بأفعاله، وأوصافهم بأوصافه، وذاتهم بذاته ‘ (الطبقات الكبرى للشعراني، 2-3) )
01. “அல்லாஹ்வுக்கு சில அடியார்கள் உள்ளார்கள். அல்லாஹ்வின் செயல்கள் கொண்டு அவர்களின் செயல்களை இல்லாமலாக்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தன்மைகள் கொண்டு அவர்களின் தன்மைகளை இல்லாமலாக்கிவிட்டார்கள். மேலும் அல்லாஹ்வின் “தாத்” உள்ளமை கொண்டு அவர்களின் “தாத்” உள்ளமையை இல்லாமலாக்கிவிட்டார்கள்”. இதன் சுருக்கம் என்னவெனில் அந்த அடியார்களை அல்லாஹ் தன்னில் “பனா” ஆனவர்களாக்கிவிட்டான். இதனால் அவர்கள் தாமும் இல்லை. தமக்கென்று ஒரு செயலும், தன்மையும் இல்லை என்று முடிவு செய்துவிட்டார்கள்.
(அத் தபகாதுல் குப்றா லிஷ் ஷஃறானீ, 2-13)

وقال أيضا ‘ أكره للفقهاء خصلتين، قولهم بكفر الحلّاج، وقولهم بموت الخضـر ‘ (لطائف المنن للشعراني، ص 473 )

02. “புகஹாஉ – சட்டமேதைகளின் இரு விடயங்களை – கருத்துக்களை நான் வெறுக்கின்றேன். ஒன்று – இமாம் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்களை “காபிர்” என்று அவர்கள் கூறுவது, இரண்டு – களிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று அவர்கள் கூறுவது”
(லதாயிபுல் மினன், பக்கம் – 473 )

وقال المرسي قدّس سرّه ‘ لو كُشف عن حقيقة وليّ لَعُبد من دون الله ، لأنّ أوصافه من أوصافه، ونُعوته من نعوته ‘
((إيقاظ الهمم، ص 199 ، الطبقات الكبرى 2 13

03. “ஒரு வலீ – இறை நேசரின் எதார்த்தம் காண்பிக்கப்பட்டால் அவரை வணங்கப்படும். ஏனெனில் அவருடைய தன்மைகள் அல்லாஹ்வின் தன்மைகளாகும்”
(ஈகாளுல் ஹிமம், பக்கம் – 199, அத்பகாதுல் குப்றா, பக்கம் -132 )

இதன் சுருக்கம் என்னவெனில் ஒரு வலீயின் அந்தரங்கத்தை, இரகசியத்தை, எதார்த்தத்தை ஒருவன் அறிந்தால் அவன் அவரை வணங்கிவிடுவான் என்பதாகும். இதன் இரகசியம் அவன் அவரை வணங்கிவிடுவான் என்பதோ, அவன் அவரை வணங்க வேண்டும் என்பதோ அல்ல. இப்பேச்சு, ஒன்றை மிகைப்படுத்திப் பேசிய பேச்சு போன்றதாகும். இந்த உண்மையை விளங்காமல் முர்ஸீ நாயகம் அவர்களுக்கு உலமா சபை “முர்தத்” பத்வா வழங்கிவிடுவார்களோ என்று எண்ணத் தோணுகிறது.

இப்பேச்சுக்கு முன்மாதிரியாக பெருமானாரின் நபீ மொழியொன்றைக் கூறலாம்.

قال النبي صلى الله عليه وسلم:لو أمرت أحدًا أن يسجد لأحد غير الله لأمرت المرأة أن تسجد لزوجها،
ஒருவருக்கு “ஸுஜூத்” செய்யுமாறு இன்னொருவருக்கு நான் ஏவுவதாயின் மனைவி கணவனுக்கு “ஸுஜூத்” செய்யுமாறு ஏவியிருப்பேன் என்று நபீ பெருமான் கூறியுள்ளார்கள். இது கூட மிகைப்படுத்திச் சொல்லப்பட்டதாகும். ஏனெனில் நபீ பெருமான் எந்த ஒரு கட்டத்திலும் மனைவி கணவனுக்கு “ஸுஜூத்” செய்ய வேண்டுமென்று சொல்லவேமாட்டார்கள். மனைவி தனது கணவனுக்கு எந்த அளவு பணிந்து நடக்க வேண்டுமென்று மிகைப்படுத்திப் பேசியுள்ளார்கள். அவ்வளவுதான்.

وتولّى مشيخة الطريقة الشاذليّة بعد أبى العبّاس المرسي تلميذه ابن عطاء الله السكندري قدّس سرّه،
இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீக்குப் பிறகு அவர்களின் “கலீபஹ்” பிரதிநிதியாக ஷாதுலிய்யஹ் தரீகஹ் வை நடத்திச் சென்றவர்கள் அவர்களின் மாணவர் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்களாகும்.
وكان كذلك مؤمنا بوحدة الوجود، ومن أقواله الدّالّة على ذلك،
அவர்களும், அவர்களின் குருமார்கள் போன்று “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை ஏற்று அதன்படி வாழ்ந்து உயர் நிலை அடைந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களின் பேச்சுக்களில் நின்றும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தைக் காட்டக் கூடிய சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம்.

كيف يتصوّر أن يحجبه شيئ، وهو الّذي أظهر كلّ شيئ؟
01. அவனே சகலவற்றையும் வெளியாக்கியவனாக இருக்க, அவனை ஒரு பொருள் எவ்வாறு மறைக்கும்?
كيف يتصوّر أن يحجبه شيئ، وهو الّذي ظهر بكلّ ؟
02. அவனே சகல வஸ்த்துக்களாகவும் வெளியாகியிருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
كيف يتصوّر أن يحجبه شيئ، وهو الّذي ظهر فى كلّ شيئ؟
03. அவனே சகல வஸ்த்துக்களிலும் வெளியாகியிருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
كيف يتصوّر أن يحجبه شيئ، وهو الّذي ظهر لكلّ شيئ؟
04. அவனே சகல வஸ்த்துக்களுக்கும் மூலமாக இருந்து வெளியாகியிருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
كيف يتصوّر أن يحجبه شيئ، وهو الظاهر قبل وجود كلّ شيئ؟
05. அவனே சகல வஸ்த்துக்களின் “வுஜூத்” உள்ளமைக்கு முன் வெளியாகியிருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
كيف يتصوّر أن يحجبه شيئ، وهو الّذي أظهر من كلّ شيئ؟
06. அவனே சகல வஸ்த்துக்களிலிருந்தும் வெளியாக்கி இருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
كيف يتصوّر أن يحجبه شيئ، وهو الواحد الذي ليس معه شيئ؟
07. அவனே “வாஹித்” தனித்தவனாக, அவனுடன் இன்னொரு பொருள் இல்லாமலிருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
كيف يتصوّر أن يحجبه شيئ، وهو أقرب إليك من كلّ شيئ؟
08. உனக்கு சகல வஸ்த்துக்களைவிடவும் மிக நெருக்கமாக இருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
كيف يتصوّر أن يحجبه شيئ، ولو لاه ماكان وجود كلّ شيئ؟
09. அவனின்றேல் எந்தவொரு பொருளுக்கும் “வுஜூத்” உள்ளமை இல்லாமலிருக்க, அவனை எவ்வாறு ஒரு வஸ்த்து மறைக்கும்?
يا عجبا ! كيف يظهر الوجود فى العدم؟ أم كيف يثبت الحادث مع من له وصف القدم؟

10. ஆச்சரியமே! இல்லாமையாக இருப்பது எவ்வாறு வெளியாகும்? அல்லது புதிதாகத் தோன்றியது பூர்வீக தன்மையுடையவனுடன் (ஆரம்பமில்லாதவன், முடிவில்லாதவன்) எவ்வாறு தரிபடும்?

((الحكم العطائيّة ابن عطاء الله السكندري، ص 04
(அல் ஹிகமுல் அதாஇய்யஹ் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ, பக்கம் – 40)

إنّ القطب الأكبر أبا الحسن علي الشاذلي قدّس سرّه قطب مشهور فى العالم الإسلاميّ، وصوفيّ وَرِع تقيّ نقيّ، وصاحبُ كرامات عجيبة، ومؤمن بوحدة الوجود، ومؤسّس الطريقة الشاذليّة، إنتشـرت هذه الطريقة فى أكثر البلدان حتّى فى سريلانكا، وكان لهذا القطب أتباع كثيرون فى حياته، وقد بايع القطب الشيخ عبد السلام بن مشيش ، مريدَ الغوث أبي مدين المغربي شعيب قدّس سرّه، وكان القطب راسخا فى عقيدة وحدة الوجود، كما تدلّ عليها أقواله المذكورة،

இமாம் அல் குத்பு அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் இஸ்லாமிய உலகில் பிரசித்தி பெற்ற ஒரு “குத்பு” மாத்திரமின்றி ஒரு ஸூபீயும், பேணுதலுள்ள ஒரு “தக்வா” தாரியுமாவார்கள். ஆச்சரியமான அற்புதக்கடலுமாகும். “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை ஏற்று அதன் வழி சென்றவர்களுமாவார்கள். “ஷாதுலிய்யஹ் தரீகஹ்” வின் தாபகருமாவார்கள். அவர்களின் தரீகஹ் இலங்கை உட்பட அநேக நாடுகளில் பரவியுள்ளது. இந்த மகானுக்கு அவர்களின் காலத்திலேயே அதிகமான “முரீது”கள் காணப்பட்டனர். அஷ் ஷெய்கு அல் குத்பு அப்துஸ் ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களிடம் “பைஅத்” செய்தவர்கள். (இப்னு மஷீஷ் அவர்கள் அல் கௌத் அபூ மத்யன் அல் மக்ரிபீ அவர்களின் முரீது – ஞான சீடர் என்பது குறிப்பிடத்தக்கது) இப்படிப்பட்ட குத்பு அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” என்ற கடலில் மூழ்கினவர்கள் என்பது அவர்களின் மேற்சொன்ன பேச்சுக்கள் மூலம் தெளிவாகின்றது.
أيّها العلماء الكرام المنكرون وحدةَ الوجود! ما تقولون عن هذا القطب؟ هل هو مرتدّخارج عن دين الإسلام؟ أو هو مؤمن موحّد؟ أظهروا فتواكم؟ وأظهروا تقواكم؟
எனவே, “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுக்கக் கூடிய சங்கைமிகு உலமாஉகளே! இந்த குத்பு பற்றி என்ன சொல்கின்றீர்கள். அவர்களும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய “முர்தத்” ஆகிவிட்டார்களா? அல்லது உண்மை விசுவாசி, ஏகத்துவவாதியா? உங்களின் தீர்ப்பை, உள்ளச்சத்தை வெளிப்படுத்துங்கள்?

ومعنى وحدة الوجود عند العارفين القائلين بها إنّ واجب الوجود واحد، أي ذات الله تعالى واحدة لا كثرة فيها ولا تعدّد، وإنّ وجوده هو الوجود الحقيقيّ فلا وجود سوى وجوده، وإنّ وجود المخلوقات كلِّها وجودٌ إعتباريٌّ وإضافيٌّ، لا وجودٌ حقيقيّ وإن الوجود الحقيقيّ وجودُه تعالى فقط لا مَحالة، وإنّ ذوات الممكناتِ أي الكائنات كلِّها إعتباريّةٌ وإضافيّةٌ لا حقيقيّةٌ، وإنّ الذات الحقيقيّة هو ذاتُه تعالى فقط كما أنّ الوجود وجودُه تعالى، وإنّ وجود المخلوقات كلِّها مُفاضٌ من وجوده تعالى لا من وجود غيره، لأنّ وجود غيره عدمٌ محضٌ حقيقةً، وإنّ الوجود وإن كان واحدا كما ذكرت بلا تعدُّد ولا تكثُّر فشُئوناتُ ذلك الوجود كثيرةٌ لاتُعدُّ ولا تُحصى، وإنّ الشّؤوناتِ الإلهيّةَ تجلّياتُهُ عزّ وجلّ، ولا حَصْرَ ولا انتهاءَ لِتَجَلِّيه تعالى وهو فى كلّ آن فى التجلّي، كما قال فى كلامه القديم كلَّ يوم هو فى شأن،والشأن جمعُه شئون، والشئون الإلهيّة تجلّياته تعالى فى كلّ حين من الأحيان وفى كلّ ذرّة من ذرّات الكائنات، كما أراد وكما شاء، وإن الشئوناتِ الإلهيّة أي تجلّياتِ الحقّ سبحانه وتعالى عينُ ذاتِه العليّة المقدّسة لا غيرُها لِعَدَمِ الغيريّة، ولو ظهرت التجلّيات فى أي مظهر من المظاهر الخلقيّة من الإنس والجنّ والمحسُوس والمعقول بخلاف المحجوبين القائلين بغيريّة تجلّياته تعالى لذاته المقدّسة،

ஆரிபீன்கள் – ஞானவான்களிடத்தில், “வஹ்ததுல் வுஜூத்” பேசக் கூடியவர்களிடத்தில் அதன் கருத்தாகின்றது “மெய்ப் பொருள் ஒன்றே” என்பதாகும். அதாவது அல்லாஹ்வின் “தாத்” உள்ளமை ஒன்று. இருமை கிடையாது. அதுவே எதார்த்தமான “வுஜூத்” உள்ளமையாகும். அவனுடைய “வுஜூத்” உள்ளமை தவிர வேறில்லை. படைப்புக்களின் “வுஜூத்” உள்ளமையாகின்றது எதார்த்தமானதல்ல. அது “இஃதிபாரீ” பொய்யானது. உண்மையான “வுஜூத்” உள்ளமை சந்தேகமின்றி அல்லாஹ்வுடையது மாத்திரமே! படைப்புக்களின் உள்ளமையாகின்றது பொய்யானது. உண்மையானதல்ல. படைப்புக்களின் “வுஜூத்” ஆகின்றது அது அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமையிலிருந்து இரவலாகப் பெறப்பட்டதேயன்றி வேறொன்றிலிருந்தல்ல. ஏனெனில் அவனுடைய உள்ளமையல்லாதது சுத்தமான இல்லாமை (அதமுன்) ஆகும். அல்லாஹ்வுடைய “வுஜூத்” உள்ளமை மேலே கூறப்பட்டது போன்று ஒன்றாக இருந்தாலும் அதன் விடயங்கள் அதிகம். அதற்கு மட்டில்லை. இங்கு விடயங்கள் எனப்படுவது அதன் “தஜல்லியாத்” வெளிப்பாடுகள் ஆகும். அவனுடைய வெளிப்பாட்டுக்கு மட்டில்லை, முடிவில்லை. அவன் ஒவ்வொரு நொடியிலும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றான். “ஒவ்வொரு விநாடியும் அவன் ஒவ்வொரு வேலையிலேயே (ஷஃன்) இருக்கின்றான்” என்று திருமறையில் கூறியிருப்பது போன்று. “ஷஃன்” என்பதன் பன்மைச் சொல் “ஷுஊன்” என்பதாகும். இறைவனுடைய “ஷுஊன்” என்பது அவன் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு அசைவும் தான் நாடிய பிரகாரம் “தஜல்லீ” வெளியாகிக் கொண்டு இருப்பதாகும். இறை வெளிப்பாடென்பது அவனுடைய பரிசுத்த “தாத்” உள்ளமையில் நின்றுமுள்ளதே தவிர, வேறொன்றின் வெளிப்பாடல்ல. ஏனெனில் வேறொரு வஸ்த்து இல்லவே இல்லை. அது மனு, ஜின், புலன்களால் உணரப்படக் கூடிய, புத்தியால் அறியப்படக் கூடிய எந்தப் படைப்பாக, வெளிப்பாடாக இருந்தாலும் அவைகள் அவனுக்கு வேறானவைதான் என்று திரையிடப்பட்ட மூதேவிகள் கூறுவது போலன்றி அவனுடைய பரிசுத்த “தாத்” உள்ளமையின் வெளிப்பாடே!

قال العلّامة الغزويني رضي الله عنه فى شرح عقائد النسفي أنّ قول المعتزلة وجمهور البخاريّة أنّ الحقّ تعالى بكلّ مكانٍ بعلمه وقدرته وتدبيره دون ذاته باطلٌ، نقله الشيخ عبد الوهّاب الشعراني رحمه الله فى كتابه اليواقيت والجواهر فى المبحث الثامن، ما احسن قول الغزويني رحمه الله ، وبأيّ حكم يفتي العلماء المنكرون لوحدة الوجود للإمام الغزويني،

அல்லாமஹ் கஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “அகாயிதுந் நஸபீ”யின் “ஷர்ஹு” விரிவுரையில் “முஃதஸிலாக்களினதும், புகாரிய்யாவின் பெரும்பாலனோரினதும், அல்லாஹு தஆலா எல்லா இடங்களிலும் தனது இல்முன் – அறிவு கொண்டும், குத்றத் – சக்தி கொண்டுமே இருக்கின்றான் என்ற பேச்சாகின்றது “பாதில்” தவறானதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதனை இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் தன்னுடைய “அல் யவாகீத் வல் ஜவாஹிர்” என்ற நூல் 8வது பாடத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் கஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளார்கள். “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை மறுப்பவர்கள் எந்த சட்டத்தை வைத்து இவர்களுக்கு “பத்வா” தீர்ப்பு வழங்குவார்கள்?

قال شيخ الإسلام ابن اللَّبَّان رحمه الله فى قوله تعالى ونحن أقرب إليه منكم ولكن لا تبصـرون، أنّ فى هذه ا|لآية دليلا على أقربيّته تعالى من عبده قربا حقيقيّا كما بذاته لِتعالِيه عن المكان، إذ لو كان المراد بِقُربِه تعالى من عبده قُربَه بالعلم أو بالقدرة أو بالتدبير مثلا لَقَال ولكن لا تعلمون ونحوه، فلمّا قال ولكن لا تبصـرون دَلَّ على أنّ المراد به القربُ الحقيقيُّ المُدركُ بالبصـر، لو كشف الله عن بصـرنا، فإنّ من المعلوم أنّ البصرَ لا تعلُّقَ لإدراكه بالصفات المعنويّة، وإنّما يتعلّق بالحقائق المرئِيَّة،

ஷெய்குல் இஸ்லாம் இப்னுல் லப்பான் றஹிமஹுல்லாஹ் “நாங்கள் அந்த மனிதனுக்கு (நோயாளிக்கு) உங்களை விட மிக நெருக்கமாக உள்ளோம். ஆனால் நீங்கள்தான் பார்க்காமல் இருக்கின்றீர்கள்” என்ற திருமறை வசனத்தில் அல்லாஹு தஆலா தன்னுடைய அடியானுக்கு எதார்த்தமாகவே நெருக்கமாக இருக்கின்றான், இடத்தை விட்டும் துய்யவனாகையால் தன்னுடைய “தாத்” கொண்டு நெருங்கி இருக்கின்றான் என்பதற்கு தெளிவான ஆதாரம் உள்ளதாகக் கூறிக் காட்டுகின்றார்கள். உண்மையிலேயே அவன் தன்னுடைய அடியானுக்கு “குத்றத்” – சக்தி கொண்டோ, அல்லது “இல்முன்” – அறிவு கொண்டோ நெருங்கியிருந்தால் “வலாகின் லா துப்ஸிறூன்” ஆனால் நீங்கள்தான் பார்க்காமல் இருக்கின்றீர்கள் என்பதற்குப் பதிலாக “வலாகின் லா தஃலமூன்” ஆனால் நீங்கள்தான் அறியாமல் இருக்கின்றீர்கள் என்றோ அல்லது அது போன்ற ஒரு வசனம் கொண்டோ சொல்லியிருப்பான். அவன் “ஆனால் நீங்கள்தான் பார்க்காமல் இருக்கின்றீர்கள்” என்று சொன்னது கொண்டு பார்வையால் எத்திக் கொள்ளக் கூடிய எதார்த்தமான நெருக்கமாகவே உள்ளான் என்பது தெளிவாகின்றது. அல்லாஹ் எமது பார்வையை கூர்மையாக்கினால் (அகக்கண்ணைத் திறந்தால்) அவனையே காண்போம். பார்வை என்பது கருத்து ரீதியான தன்மைகளை அது எத்திக் கொள்ளாது. மாறாக பார்க்கக் கூடிய எதார்த்தங்களையே அது காணும்.

وكذلك القول فى قوله تعالى ونحن أقرب إليه من حبل الوريد، هو يدلّ أيضا على ما قلناه، لأنّ أَفْعَلَ ممّا يدلّ على الإشتراك فى اسم القرب وإن اختلف الكيفُ، ولا اشتراك بين قُرب الصفات وقُرب حبلِ الوريد، لأنّ قُرب الصفات معنويٌّ وقُربَ حبلِ الوريد حِسّيٌّ، ففى نسبة أقربيّته تعالى إلى الإنسان من حبل الوريد الّذي هو حقيقيٌّ دليلٌ على أنّ قربَه تعالى حقيقيٌّ أي بالذات اللازم لها الصفاتُ، نقله الشيخ عبد الوهّاب الشعراني رحمه الله فى كتابه اليواقيت والجواهر فى المبحث الثامن، أيّها المنكرون! تفكّروا وتدبّروا واقلعوا شجرة التعصّب والعناد من قلوبكم، وشجرة الحسد من ظروفكم،

அதே போன்றே “நாங்கள் அவனுக்கு (மனிதனுக்கு) பிடரி நரம்பைவிட மிக நெருங்கியுள்ளோம்” என்ற வசமும் ஆகும். பிடரி நரம்பு நெருங்கியிருப்பதற்கும், ஸிபாத் – தன்மைகள் நெருங்கியிருப்பதற்கும் தொடர்பில்லை. ஏனெனில் ஸிபாத் – தன்மைகள் நெருங்கியிருப்பதென்பது “மஃனவிய்யத்” – கருத்து ரீதியானது. பிடரி நரம்பு நெருங்கியிருப்பதென்பது புலனைச் சார்ந்தது. அல்லாஹு தஆலா மனிதனுக்கு பிடரி நரம்பை விட நெருங்கியிருப்பதென்பது அவன் தன்னுடைய “தாத்” – உள்ளமை கொண்டு (ஸிபாத் – தன்மைகளை உடைய) நெருங்கியிருக்கின்றான் என்பதற்கான ஆதாரமாகும். இதனையும் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் தன்னுடைய “அல் யவாகீத் வல் ஜவாஹிர்” என்ற நூலின் 8வது பாடத்திலேயே பதிந்துள்ளார்கள். “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுப்பவர்களே! சிந்தியுங்கள்! உங்களின் உள்ளத்திலிருந்து மனமுரண்டு என்ற மரத்தை வேரோடு கழட்டி விடுங்கள்! அதேபோல் பொறாமை என்ற மரத்தையும் வேரோடு அறுத்து விடுங்கள்!

قال الشيخ محمد بن فضل الله فى كتابه ‘ التحفة المرسلة ‘ مع شرحها (هذا الكتاب استدلّ به العميان للإفتاء بردّتي وردّة من صدّق قولي، فالعجب كلّ العجب من المفتي وأعوانه الّذين اختاروا هذا الكتاب للإستدلال وجمعوه من العلماء ومن المكتبات، وهذا الكتاب ‘ التحفة المرسلة ‘ كتاب مبدوء بوحدة الوجود و مختوم بها، فإن كان المفتي عاقلا وحاذقا وأعوانه عقلاء وحاذقين لا يستدلّون بهذا الكتاب، ولكن عداوتهم وحماقتهم حجبت عقولهم وجعلهم حائرين، وأمّا الإستدلال بهذا الكتاب لِرَدِّ وإبطال عقيدة وحدة الوجود فحماقة خالصة صافية، وهو كاستعانة رجل بِأَعدى عدوّه،

“அத் துஹ்பதுல் முர்ஸலஹ்” என்று நூலில் இமாம் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அல் ஹிந்தீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(அத்துஹ்பதுல் முர்ஸலஹ் – இந்த நூலை ஆதாரமாக எடுத்தே எனக்கும் எனது கருத்தை சரி கண்டவர்களுக்கும் அகக் கண் குருடர்களினால் “முர்தத்’’ பத்வா வழங்கப்பட்டது. ஆச்சரியம் என்னவெனில் இந்த கிதாபை அவர்கள் ஆதாரமாக எடுத்ததுதான். ஏனெனில் இந்த கிதாபு – நூல் ஆரம்பம் முதல் இறுதி வரை “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைக் கொண்டே நிரப்பப்பட்டது. பத்வா- தீர்ப்பை எழுதியவரும், அவருக்கு உதவி செய்தவர்களும் புத்தியுள்ளவர்களாக இருந்திருந்திருந்தால் இதை ஆதாரமாக எடுத்திருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களின் எதிர்ப்பும், மடமையும் அவர்களின் புத்தியை மறைத்துவிட்டன. அவர்களை தடுமாறச் செய்துவிட்டன. “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுப்பதற்கு இந்த நூலை ஆதாரமாக எடுப்பதென்பது வடிகட்டிய முட்டாள்தனம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அது தன்னுடைய கடுமையான பகையாளி கொண்டு உதவி தேடுவது போன்றாகும்.)

اعلموا أنّ ذلك الوجود ليس له شكل ولا حدّ ولا حصـر، يعني أنّ ذلك الوجود ليس له حدّ فى ذاته ولا فى صفاته الحقيقية كلّها، لأنّ ذلك الوجود كما أنّه من حيث هُوَ هُوَ أي من غير إعتبار شيئٍ مَّا معه من صفة ولا اسم مطلقٌ غير محدود، كذلك صفاته الحقيقية منبسطة أي غير مخصوصة بِمَحَلٍّ خاصٍّ من الذات غير محدودة، ومع وجود هذا التنزيه المذكور فقد ظهر بنفسه وتجلّى بأسمائه وصفاته بالشكل أي بالأثر والحد، يعني أنّ ذلك الوجود ظهر وتجلّى فى الخارج بصور المخلوقات على نفسه وعلى غيره مدركا لنفسه ولغيره من المخلوقات المدركة كالثقلين والملائكة، ولم يتغيّر بسبب هذا الظهور فى المظاهر الخلقيّة ممّا كان هو عليه منه عدم الشكل وعدم الحد، إذ ظهور أثره كذلك لا يلزم منه شيئ من المذكورات المنفيّة، بل هو الآن إلى الأبد، كما كان عليه فى الأزل، هذا هو المراد بقول الشيخ محي الدين ابن عربي رضي الله عنه،

அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் வுஜூத் – உள்ளமைக்கு தோற்றமோ, மட்டுப்பாடோ இல்லை. அதாவது அந்த உள்ளமை தன்னுடைய தாத் – சுய இருப்பிலோ, தன்மைகளிலோ எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஏனெனில் அந்த உள்ளமையாகின்றது அது எப்படியோ அப்படியேதான். அதாவது அதனுடன் மட்டுப்பாடற்ற எந்த ஒரு தன்மையோ, பெயரோ கொண்ட வஸ்த்துவும் கிடையாது. அதே போன்றுதான் அவனுடைய ஸிபாத் – தன்மைகளுமாகும். அதாவது அவனுடைய தாத் – சுய இருப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தை கொண்டதோ அல்லது கட்டுப்பாடுடையதோ அல்ல. மேலே சொல்லப்பட்ட பரிசுத்த தன்மையில் இருப்பதுடன் அவனே தன்னுடைய அஸ்மா – திரு நாமங்கள், ஸிபாத் – தன்மைகள் கொண்டு மட்டுப்பாடுடன் “தஜல்லீ” வெளியாகியுள்ளான். அதாவது அவனுடைய உள்ளமையே படைப்புக்களின் உருவங்களில் தன்னாலும், படைப்பாலும் (மனு, ஜின், மலக்குகள்) பார்க்கும்படியானதாக வெளியாகியுள்ளான். இவ்வாறு படைப்புக்களாக வெளியாகியிருப்பதால் அவற்றை வெளிப்படுத்த முன் மட்டின்றி, உருவின்றி எவ்வாறு துய்யவனாக இருந்தானோ அதை விட்டும் மாறவில்லை. அவ்வாறு வெளியானதினால் மேலே கூறப்பட்ட அவனுக்கிருந்திராத மட்டுப்பாடுகள் அவசியமில்லை. ஆனால் அவன் இந்தப் படைப்புக்களாக “தஜல்லீ” வெளியாக முன் எவ்வாறிருந்தானோ அவ்வாறே இப்போதும், எப்போதும் இருப்பான். இதுவே அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் பின்வரும் பாடலின் கருத்தாகும்.

فإن قلت بالتنزيه كنت مقيّدا – وإن قلت بالتشبيه كنت محدّدا
فإن قلت بالأمرين كنت مسدّدا – وكنت إماما فى المعارف سيّدا
فمن قال بالإشفاع قد كان مشركا – ومن قال بالإفراد كان موحدا
وإيّاك والتشبيه إن كنت ثانيا – وإيّاك والتنزيه إن كنت مفردا

“நீ தன்ஸீஹை மட்டும் சொன்னால் நீ மட்டுப்படுத்தினவனாக ஆகிவிட்டாய்”
“நீ தஷ்பீஹை மட்டும் சொன்னாலும் நீ மட்டுப்படுத்தினவனாக ஆகிவிட்டாய்”
“இரண்டையும் சொன்னால் சரியாகச் சொன்னவனாய் ஆகிவிட்டாய்”
“மேலும் ஞானக்கலையில் தலைவனாகவும் ஆகிவிட்டாய்”
“இரட்டை கொண்டு எவன் பேசுகின்றானோ அவன் முஷ்ரிக் ஆகிவிட்டான்”
“ஒற்றை கொண்டு எவன் பேசுகின்றானோ அவன் முவஹ்ஹித் ஆகிவிட்டான்”
“நீ தஷ்பீஹ் கொண்டு மட்டும் பேசுபவனாக இருந்தால் உன்னை எச்சரிக்கின்றேன்”
“நீ தன்ஸீஹ் மட்டும் கொண்டு பேசுபவனாக இருந்தாலும் உன்னையும் எச்சரிக்கின்றேன்”

وأنّ ذلك الوجود واحد لا تعدد فيه قطعا، والألباس هي صُورُ التي احتجب بها ذلك الوجود عن نظر الأغيار، وظهر فيها لأهل الأسرار مختلفةٌ لاختلاف أجناسها وأنواعها وهيآتها وأشكالها، ومتعدّدةٌ لموجب اختلاف اللازم منه التعدد، فالتعدد فى الوجود حينئذ إنما هومن حيث المظاهر لا من حيث الظاهر كقول الشاعر،

நிச்சயமாக அல்லாஹ்வின் வுஜூத் – உள்ளமையாகின்றது அது ஒன்றேதான். அதிலே அறவே எண்ணிக்கை கிடையாது. அதன் உடைகள் – உருவங்கள் கொண்டு அந்த உள்ளமை தன்னை வேற்றுமை உடையோரின் பார்வையை விட்டும் மறைத்துக் கொண்டது. அவைகளில் (அந்த உருவங்களில்) இரகசியங்கள் உடையோருக்கு வெளியாகி உள்ளான். அந்த உருவங்கள் – உடைகள் அவற்றின் இனம், வகை, அமைப்பு, மாறுபடுவது கொண்டு மாறுபட்டதாகும். எண்ணிக்கை அவசியமானவை கொண்டு எண்ணிக்கையானதாகும். அங்கே எண்ணிக்கை என்பது வெளிப்பாடுகளைப் பொறுத்ததேயன்றி, வெளியானவனை (அல்லாஹ்வை) பொறுத்ததல்ல. ஒரு கவிஞரின் வார்த்தை போன்று.
وما الوجه إلّا واحد غير أنّه – إذا أنت عدّدت المرايا تعددا
அதாவது “முகம் ஒன்றுதான். ஆனால் நீ கண்ணாடிகளை அதிகப்படுத்தினால் அதன் எண்ணிக்கை அதிகமாகும்”

يعني أنّ لباس المخلوقات أي صورها التي ظهر بها ذلك الوجود علما كصور الأعيان الثابتة، وعينا كصور الأعيان الخارجة الروحية والمثالية والجسميّة والإنسانيّة مختلفة ومتعدّدة، وأنّ ذلك الوجود حقيقة جميع الموجودات الكونية التي حقائقها وبواطنها التعيُّنات العلمية فى المرتبة الواحدية إلى آخر ما قال،

மெய்ப் பொருளாகிய அல்லாஹ் வெளியாகிய படைப்புக்கள் என்ற உடைகள் – உருவங்கள் உயிரினங்கள், மனிதன், சடமுள்ளவை, சடமற்றவை என்று பலவாயினும் அவைகளின் மூலப் பொருளாகிய அல்லாஹ்வின் வுஜூத் – உள்ளமை “வாஹிதிய்யத்” என்ற மர்தபா – அந்தஸ்த்தில் ஒன்றுதான்.

அஷ்ஷெய்க் அபூபக்ரிஷ் ஷிப்லீ நாயகம் அன்னவர்கள்

هو الشيخ الزاهد أبو بكر دلف بن يونس الشبلي، ولد فى سامراء عام 247ه، وتوفّي عام 334ه، ولقد ظهرت عليه حالات من الجذب والشطح والغيبوبة التي كان بعض المتصوفة يصطنعوها خوفاً من الحكام والولاة وصرح بجنونه مرة بعد المحنة التي حلت بصاحبه حسين بن منصور الحلاج وإعدامه سنة 309هـ، الموافق 922م، بقوله: أنا والحلاج شر واحد، فخلصني جنوني وأهلكه عقله. ويبدو أن الشبلي كان يُتقن دوره بكفاءة عالية في افتعال الجنون ويأتي من الشطحات ما يقنع الآخرين أنه مجنون فعلاً، وكان يشاهَد على الدوام يحرق الطعام ويمزق الملابس في أزقة بغداد فيعاتبه أصحابه على هذا فيقول ((وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاء مِّمَّا تَعْبُدُونَ ))، فهذه الأطعمة والملابس والشهوات حقيقة الخلق ومعبودهم، أبرأ منها وأحرقه!

ஷிப்லீ நாயகம் அவர்களின் இயற் பெயர் அபூ பக்ர் தல்ப் ஆகும். அவர்களின் தந்தை யூனுஸ் என்பவராகும். ஹிஜ்ரீ 247ல் “ஸமர்றா” (இறாக் நாட்டிலுள்ள ஓர் ஊராகும்) என்ற ஊரில் பிறந்தார்கள். ஹிஜ்ரீ 334ல் “வபாத்” ஆனார்கள். அவர்களில் இருந்து “ஜத்பு”டைய நிலைமைகளும், “ஷத்ஹ்” (வெளிப்படை ஷரீஅத்திற்கு முரணானது போல் தெரிகின்ற) ஆன பேச்சுக்களும், “ஙைபூபத்” (உணர்வற்ற நிலை – இந்நிலையை ஸூபீகளில் சிலர் அதிகாரிகளுக்கும், தீர்ப்பளிப்பவர்களுக்கும் பயந்து தெரிவு செய்துள்ளார்கள்) உடைய நிலைமைகளும் வெளியாகின. தனது நண்பர் மன்ஸூர் அல் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு ஹிஜ்ரீ 309ம் (கி.பி 922) ஆண்டு சோதனை ஏற்பட்டு அவர்கள் கொல்லப்பட்ட பின் தன்னை பைத்தியகாரனாக காட்டிக் கொண்டார்கள். “நானும் ஹல்லாஜும் ஒரே வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான். என்னை என்னுடைய பைத்தியம் காப்பாற்றியது. அவர்களை (ஹல்லாஜை) அவர்களின் “அக்ல்” புத்தி அழித்துவிட்டது” என்று கூறினார்கள். தன்னுடைய செயற்பாடுகளைக் கண்டு மற்றவர்கள் அவர்களை பைத்தியம் என்று சொல்லுமளவு நடந்து கொள்வார்கள். தன்னுடைய பேச்சுக்களின் வெளிரங்கத்தைப் பார்த்து மற்றவர்கள் பைத்தியகாரன் என்ற சொல்ல வைக்குமளவு “ஷரீஅத்”திற்கு முரணான பேச்சுக்கள் போன்று பேசுவார்கள். எந்நேரம் பார்த்தாலும் பக்தாத் நகர் வீதிகளில் உணவுகளை எரித்துக் கொண்டும், ஆடைகளை கிழித்துக் கொண்டுமே இருப்பார்கள். அவர்களின் தோழர்கள் இது பற்றிக் கேட்டால் பின்வரும் திருமறை வசனத்தை ஓதிக் காட்டுவார்கள். وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِمَّا تَعْبُدُونَ நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் தன்னுடைய தந்தைக்கும், அவரின் கூட்டத்தாருக்கும் “நிச்சயமாக நான் நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நீங்கிக் கொண்டேன்” என்று சொன்னதை நபீயே நீங்கள் நினைத்துப் பாருங்கள். (திருமறை 43-26) எனவே, இந்த உணவுகளும், ஆடைகளும், மனோ இச்சைகளும் படைப்பினங்களின் “மஃபூத்” வணங்கப்படும் தெய்வமாகும். நான் அவற்றை விட்டும் விலகி அவற்றை எரிக்கின்றேன் என்று கூறுவார்கள்.

ஹிஜ்ரீ 300க்கு முன் வாழ்ந்தவர்களான ஸலபுகள் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் பற்றி எவரும் பேசவில்லை. இது – “வஹ்ததுல் வுஜூத்” – பின் தோன்றியவர்களால் இஸ்லாத்தின் பெயரால் உட்புகுத்தப்பட்ட ஒன்று என்று இக்காலத்தில் வாழும் “நஸீப்” நற்பாக்கியமிழந்தவர்கள் வாதிட்டு வருவதால் ஞான வழி நடக்கும் நற்பாக்கியமுடையவர்கள் கால் சறுகி விடாமலிருக்க “ஸலபு”களும் இதே தத்துவத்தைத்தான் பேசியுள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இங்கு இதை பதிவிடுகின்றோம்.

قال الإمام عبد الكريم بن هوزان القشيري فى كتابه الرسالة القشيريّة: قال الشبلي: الصوفي منقطع عن الخلق متّصل بالحقّ، (الرسالة القشيريّة ، 442 -2 )

இமாம் அப்துல் கரீம் அல் குஷைரீ றஹிமஹுல்லாஹ் தன்னுடைய “அர்ரிஸாலதுல் குஷைரிய்யா” எனும் நூல் 2ம் பாகம் 442ம் பக்கத்தில் ஷிப்லீ நாயகம் பின்வருமாறு கூறியதாக குறிப்பிடுகின்றார்கள். “ஸூபீ என்பவர் படைப்பின் தொடர்புகளை துண்டித்து ஹக் தஆலாவுடன் தொடர்புள்ளவராக இருப்பவரே” என்று கூறியுள்ளார்கள்.

ஷிப்லீ நாயகம் அவர்களின் “ஸூபீ” என்பதற்கான இவ்வரைவிலக்கணம் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தையே எடுத்துக் காட்டுகின்றது. ஏனெனில் ஒருவர் படைப்பின் தொடர்பின்றி உலகில் வாழவே முடியாது. உண்ணுதல், பருகுதல் உள்ளிட்ட அனைத்து தேவைகளும், அவற்றை நிறைவு செய்யும் வழிகளும் படைப்பாகவே இருக்கின்றன. அவ்வாறு படைப்பின் தொடர்பின்றி வாழ்வதாயின் அவையனைத்தையும் அவர் “ஹக்”காகவே காண வேண்டும். அவ்வாறு கண்டால் மட்டுமே படைப்பின் தொடர்பின்றி அல்லாஹ்வுடன் தொடர்புள்ளவராக வாழ முடியும்.
وقال أيضا (التصوّف) هو العصمة عن روية الكون (الرسالة القشيريّة، 443 – 2)

இன்னும் அவர்கள் “தஸவ்வுப்” என்றால் பிரபஞ்சத்தைப் பார்ப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளுதல், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதல் என்று கூறியுள்ளார்கள். (அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, பாகம் – 02, பக்கம் – 443)

அவர்களின் இக்கூற்றும் மேலே கூறிய விளக்கத்தின் அடிப்படையில் இல்லை அதைவிட தெளிவாக “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தையே எடுத்துக் காட்டுகின்றது.
وقال الشبلي: التصوّف الجلوس مع الله بلا هَمٍّ (الرسالة القشيريّة، 442 – 2)
“தஸவ்வுப்” என்பது “எவ்வித கவலையுமின்றி அல்லாஹ்வடன் இருத்தல்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். (அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, பாகம் 02, பக்கம் – 442)

அதாவது ஒரு மனிதன் அல்லாஹ்வின் “தஜல்லீ” – காட்சியில் லயித்துப் போயிருக்கும் நிலையில் அவனுடை உள்ளத்திலிருந்து உலகத்தோடு சம்பந்தப்பட்ட எண்ணங்கள், கவலைகள் அகன்றுவிடும். இவ்வாறிருப்பவன்தான் ஸூபீ என்று குறிப்பிட்டுளார்கள்.
سمعت عبد الله بن موسى السلامي يقول: سمعت الشبلي ينشد فى مجلسه
فلما أراني الوجد أنّك حاضري – شهدتك موجودا بكلّ مكان
(الرسالة القشيريّة، 376 -2 )
அப்துல்லாஹ் இப்னு மூஸா அஸ்ஸலாமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாம் அபூ பக்ர் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய சபைகளில் பின்வருமாறு பாடக் கேட்டதாக கூறுகின்றார்கள்.

பாடலின் சுருக்கம்: இறைவா நீ மறைவின்றி சமூகமானவனாக இருக்கின்றாய் என்பதை எனக்கு அறிவித்த போது (நான் அறிந்த போது) உன்னை எல்லா இடங்களிலும் உள்ளவனாக கண்டேன்.
(அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, பாகம் 02, பக்கம் – 376)

سمعت عبد الله بن علي البغدادي يقول سمعت الشبلي يقول سهو طرفة عين عن الله لأهل المعرفة شرك بالله،
(طبقات الصوفيّة للإمام محمد بن الحسين النيسابوري، ص- 261 )

அப்துல்லாஹ் இப்னு அலீ அல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாம் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ் சொல்லக் கேட்டதாக சொல்வதை நான் கேட்டேன் என்று “தபகாதுஸ் ஸூபிய்யா” ஆசிரியர் இமாம் முஹம்மத் இப்னுல் ஹுஸைன் அந் நைஸாபூரீ அவர்கள் தனது மேற்குறித்த நூல் 261ம் பக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

“கண் இமைக்கும் நேரமாயினும் அல்லாஹ்வை மறந்திருந்தால் அது “மஃரிபா” எனும் இறைஞானப் பேரமுதுடையவர்களிடம் “ஷிர்க்” இணை வைப்பாகும்”

وقال الشبلي لرجل أتدري لم لا يصحّ توحيدك فقال: لا، قال لأنّك تطلبه بك، (الرسالة القشيريّة، 467 – 2)

இமாம் ஷிப்லீ அவர்கள் ஒருவரிடம் ஏன் உன்னுடைய “தௌஹீத்” “ஸிஹ்ஹத்” சரியாகவில்லை என்று தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கவர் தெரியாது என்றார். “நீ உன்னைக் கொண்டு அவனைத் தேடுகின்றாய்” அதனால்தான் உனது தௌஹீத் சரியானதாக ஆகவில்லை என்று கூறினார்கள்.
(அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, பாகம் 02, பக்கம் 467)

قال الشّبلي لا يتحقّق العبد بالتوحيد حتّى يستوحش من سره وحشة لظهور الحقّ عليه، (التعرف لمذهب أهل التصوّف، ص – 135 ، المؤلّف – أبو بكر محمد بن أبي إسحاق الكلاباذي البخاري الحنفي الموفّى عام 380 هـ)
ஒரு மனிதன் “தௌஹீத்” கொண்டு உறுதி பெற்றவனாக ஆகுவதாயின் அவன் தனது இரகசியத்தைக் கொண்டு தனிமையானவனாகி “ஹக்” தஆலா அவனிலே வெளியாக வேண்டும் என்று இமாம் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
(“அத்தஅர்றுபு லிமத்ஹபி அஹ்லித் தஸவ்வுப், பக்கம் – 135, ஆசிரியர் – அபூ பக்ர் முஹம்மத் அல்கிலாபாதீ அல் புகாரீ அல்ஹனபீ, மறைவு – ஹிஜ்ரீ 380)
الوحشةُ من النّاس: الإنقطاعُ وبُعدُ القلوب عن المودّات) الوحشةُ: الخلوةُ،
அல்வஹ்ஷது மினன்நாஸ் (மனிதர்களை விட்டும் தனிமையாதல்): அனைத்தை விட்டும் உள்ளங்கள் தூரப்படுதலும், துண்டித்தலும்.
அல்வஹ்ஷது: அல்கல்வது (தனித்திருத்தல்)
وبهذا الإسناد قال سمعت الشبلي يقول ليس من احتجب بالخلق عن الحقّ كمن احتجب بالحقّ عن الخلق، (طبقات الصوفيّة للسلمي، ص 261 )
இமாம் ஷிப்லீ அவர்கள் கூறினார்கள்: “ஹக்”கை விட்டும் “கல்க்” படைப்பைக் கொண்டு திரை போட்டுக் கொண்டவன் படைப்பை விட்டும் ஹக்கை கொண்டு திரை போட்டுக் கொண்டவன் போன்றவனல்லன். (ஹக்கை மறந்து படைப்பில் மூழ்கிப்போனவனும், படைப்பை மறந்து ஹக்கில் மூழ்கிப் போனவனும் சமமானவர்களல்லர்) (தபகாதுஸ் ஸூபிய்யா லிஸ்ஸில்மீ, பக்கம் – 261)
وقال رجل للشّبلي رحمه الله، ما لي أراك قلقا أليس هُو معك وأنت معه؟ فقال الشبلي: لو كنتُ أنا معه كنت أنا ولكنّي محو فيما هُوَ والمحق فوق المحو، لأنّ المحو يبقى أثرا والمحق لا يبقى أثرا وغاية همّة القوم أن يمحقهم الحقّ عن شاهدهم ثمّ لا يردهم إليه بعد ما محقهم عنهم، (الرسالة القشيريّة، 181 -1 )
இமாம் ஷிப்லீ அவர்களிடம் ஒரு மனிதர், நான் உங்களை பயமுள்ளவர்களாக, கவலையுள்ளவர்களாகவே பார்க்கிறேன், அவன் உங்களுடனும், நீங்கள் அவனுடனும்தானே இருக்கின்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு ஷிப்லீ நாயகம், நான் அவனுடன் இருந்தால் “நான்” இருப்பேன். ஆனால் நான் அவனிலே “மஹ்வு” அழிந்தவன். “மஹ்க்” என்ற அழிவாகிறது “மஹ்வு” என்பதை விட உயர்வானது. “மஹ்வு” என்ற அழிவு நிலையில் ஒரு “அதர்” அடயாளம் மிஞ்சும். ஆனால் “மஹ்க்” என்ற அழிவு நிலையில் எந்த அடயாளமுமின்றி முழுமையாகவே அழிந்து விடுவார்கள். ஸூபீகளின் உச்ச கட்ட நோக்கம் “மஹ்க்” என்ற அழிதலைப் பெறுவதாகும். ஹக்கிலே மூழ்கி பின் மீளாமலிருப்பதாகும். (ஆக அந்த “மஹ்க்” என்ற அழியும் நிலையைப் பெற வேண்டுமென்ற கவலை, பயம்தான்)
(அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, பாகம் – 01, பக்கம் – 181 )
(المحو: رفع أوصاف العادة قيل إزالة العلّة، وقيل ما سيّره الحقّ ونفاه عنك)
(المحق: فناؤك فى عينه) (موسوعة مصطلحات التصوّف الإسلامي، 851، الدكتور رفيق العجم)
محو الجمع والمحو الحقيقي: فناء الكثرة فى الوحدة
المحق: فناء وجود العبد فى ذات الحق تعالى، كما أن المحق : فناء أفعاله من فعل الحق، والطمس: فناء الصفات فى صفات الحق،
قَلِقَ يَقْلَقُ قَلَقًا، فهو قَلِقٌ
قَلِقَ الرَّجُلُ: اِضْطَرَبَ، اِنْزَعَجَ، لم يستقرّ فى مكانٍ واحد،
وسمعته يقول، سمعت أبا القاسم الدمشقي يقول: سمعت الشبلي يقول: الورع أن تتورع عن كلّ ما سوى الله تعالى، (الرسالة القشيرية، 233 – 1)
அபுல் காஸிம் அத்திமஷ்கீ அவர்கள் இமாம் ஷிப்லீ அவர்கள் சொல்லக் கேட்டதாக பின்வருமாறு கூறுகின்றார்கள். “பேணுதல்” என்பது அல்லாஹ் தவிரவுள்ள அனைத்தை விட்டும் விலகியிருப்பதாகும்”
(அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, பாகம் 01, பக்கம் 233)
(تورّع الشّخصُ عن الأمر ஃ تورّع الشخصُ من الأمر: تجنّب الإثم فيه، وتعفّف عنه) (الرسالة القشيريّة، 233 -1)
وقال الشبلي: سميت المحبّة محبة لأنّها تمحو من القلب ما سوى المحبوب، (الرسالة القشيريّة، 487 -2)

“மஹப்பத்” என்று பெயர் வைக்கப்பட்டது அந்த “மஹப்பத்” உள்ளத்திலிருந்து அன்பு வைக்கப்பட்டவனைத் தவிரவுள்ள அனைத்தையும் அழித்துவிடுகின்றது.
(அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, பாகம் 02, பக்கம் 487)
سمعت أبا القاسم عبد الله بن محمد الدمشقي قال كنّا يوما فى بيت الشبلي فأخر العصر ونظر إلى الشمس وقد تدلت للغروب فقال الصّلاة يا سادتي وقام فصلّى ثم أنشأ يقول ملاعبة وهو يضحك ما أحسن قول من قال،

نسيت اليومَ من عشقي صلاتي – فلا أدري غداتي من عشائي
فذكرك سيّدي أكلي وشربي – ووجهك إن رأيت شفاء دائي
(طبقات الصوفيّة للسلمي، ص 262 )
அபுல் காஸிம் அப்துல்லாஹ் அத்திமஷ்கீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். நாங்கள் ஒரு நாள் இமாம் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் வீட்டில் இருந்தோம். அவர்கள் “அஸ்ர்” தொழுகையைப் பிற்படுத்தினார்கள். சூரியனைப் பார்த்தார்கள். அது மறைவதற்கு நெருங்கிவிட்டது. தலைவரே! தொழுகை என்று சொல்லி எழுந்து தொழுதார்கள். பின்பு சிரித்தவர்களாக பின்வரும் பாடலைப் பாடினார்கள்.
பாடலின் சுருக்கம்:
இன்று என்னுடைய காதலின் காரணத்தால் தொழுகையை மறந்தேன். எனக்கு இரவும் தெரியாது, பகலும் தெரியாது. என் தலைவனே! உன்னை நினைப்பதே எனது உணவும், பானமும். உன் திரு முகத்தைக் கண்டால் அதுவே என் நோய் நிவாரணி.
(தபகாதுஸ் ஸூபிய்யா லிஸ்ஸில்மீ, பக்கம் – 262 )

قال الشيخ رحمه الله، سمعت أبا عبد الله بن جابان يقول: دخلتُ على الشبلي رحمه الله، فى سنة القحط، فسلّمت عليه، فلما قمتُ على أن أخرج من عنده، فكان يقول لي ولمن معي، إلى أن خرجنا من الدار، مُروا أنا معكم حيث ما كنتم، أنتم فى رعايتي وفى كلاءتي، قلتُ أراد بقوله ذلك: إنّ الله تعالى معكم حيث ما كنتم، وهو يرعاكم ويكائكم، وأنتم فى رعايته وكلاءته،
அபூ அப்தில்லாஹ் ஜாபான் அவர்கள் சொன்னார்கள். நான் ஷிப்லீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் வறட்சி ஏற்பட்ட வருடம் சென்றேன். அவர்களுக்கு “ஸலாம்” சொன்னேன். அவர்களிடமிருந்து வெளியாவதற்கு எழுந்த போது எனக்கும், என்னுடன் வெளியானவர்களுக்கும் பின்வருமாறு சொன்னார்கள். “நீங்கள் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் நான் உங்களுடன் இருப்பேன். நீங்கள் என்னுடைய அரவணைப்பிலும், பாதுகாப்பிலுமே இருப்பீர்கள். இவர்களின் இவ்வார்த்தை கொண்டு “நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். அவன் உங்களைப் பாதுகாப்பான், அரவணைப்பான். நீங்கள் அவன் பாதுகாப்பிலும், அரவணைப்பிலுமே உள்ளீர்கள்” என்பதையே கருதுகின்றார்கள் என்று நான் எண்ணினேன்.

والمعنى فى ذلك: أنّه يرى نفسَه مَحْقًا فيما غلب على قلبه، من تجريد التوحيد، وحقيقة التفريد، والواجد إذا كان وقتُه كذلك، فإذا قال: أنا، يعبّر عن وَجده ويترجم عن الحال الّذي قد استولى على سرّه، فإذا قال: أنا يشير بذلك إلى ما غلب عليه من حقيقة صفة مشاهدته قُربَ سيّده، (اللمع للطوسي، ص-478 ، أبو نصر عبد الله السراج الطوسي،توفّي عام 378 هـ)
அதன் கருத்து: ஷிப்லீ நாயகம் அவர்கள் தன்னுடைய உள்ளத்தில் மிகைத்த ஒன்றில் (அல்லாஹ்வில்) முழுமையாக அழிந்தவராகவே தன்னை காணுகின்றார்கள். இந்நிலைமை “தவ்ஹீத்” ஐக் கொண்டு அவன் மட்டுமே உள்ளான் என்பதை உணர்ந்ததினாலாகும். தன்னுடைய நிலை அப்படியிருந்தால் அவ்வாறுதான் பேசுவார்கள். அவர்கள் “நான்” என்று சொன்னால் தன்னுடைய நிலையை, தான் மூழ்கிப்போன இரகசியத்தின் நிலையை விபரிக்கின்றார்கள் என்பது அர்த்தம். நான் என்று பேசினால் தன்னுடைய தலைவனின் காட்சியின் தன்மையை எதார்த்தத்தை சுட்டிக் காட்டுகின்றார்கள்.
(அல்லம்உ லித்தூஸீ, பக்கம் – 478, அபூ நஸ்ர் அப்துல்லாஹ் அத்தூஸீ, மறைவு – ஹிஜ்ரீ 378 )

وحُكي عن الشبلي: أنّه قال، أيضا: اللهم إن كنت تعلم أنّ فيّ بقية لغيرك فأحرقني بنارك، لا إله إلا أنت، (اللمع للطوسي، ص489)
ஷிப்லீ நாயகம் அவர்கள் ஒரு நாள் “இறைவா! என்னிலே உன்னல்லாதவருக்கு ஏதும் இருந்தால் என்னை உன்னுடைய நெருப்பு கொண்டு எரித்துவிடு. “லா இலாஹ இல்லா அன்த” உன்னையன்றி எதுவுமில்லை என்று கூறினார்கள். (அல்லம்உ லித்தூஸி, பக்கம் 489 )

அபூ யஸீத் அல்பிஸ்தாமீ

أبو يزيد طيفور بن عيسـى بن شروسان البِسطامِي، هو عالم مسلم من أهل القرن الثالث الهجري، يلقب بـ «سلطان العارفين» اسمه الفارسي «بايزيد» كما عرف كذلك باسم طيفور، كان جده شروسان مجوسيًا وأسلم، وله أخوان هما آدم وعلي. ولد سنة 188 هـ في بسطام في بلاد خراسان، في محلة يقال لها محلة موبدان . روى عن إسماعيل السدي، وجعفر الصادق. توفي سنة 261 هـ، وقيل سنة 234 هـ.
இவர்களின் பெயர் அபூ யஸீத் தைபூர். இவர்களின் தந்தையின் பெயர் ஈஸா. அவர்களின் தந்தை ஷறூஸான் என்பவருமாகும். ஹிஜ்ரீ மூன்று நூற்றாண்டுக்குட்பட்ட இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவராவார்கள். “ஸுல்தானுல் ஆரிபீன்” என்று பட்டம் சூட்டப்படுகின்றார்கள். “தைபூர்” என்பது போல் “பாரிஸீ” மொழியில் அவர்களின் பெயர் “பாயஸீத்” ஆகும். அவர்களின் பாட்டனார் ஷறூஸான் நெருப்பு வணங்கியாக இருந்து இஸ்லாத்தை தழுவியவர். இவர்களுக்கு இரு சகோதரர்கள் உள்ளனர். ஒருவர் ஆதம் என்பவரும், மற்றவர் அலீ என்பவருமாவார். ஹிஜ்ரீ 188ல் “பிஸ்தாம்” (“குறாஸான்” இல் உள்ள ஓர் ஊர்) என்ற ஊரில் “மவ்பிதான்” எனுமிடத்தில் பிறந்தார்கள். இஸ்மாயீல் அல் ஸதீ மற்றும் இமாம் ஜஃபர் ஸாதிக் ஆகியோர், அபூ யஸீத் அல் பிஸ்தாமீ அவர்கள் ஹிஜ்ரீ 261ல் “வபாத்” ஆனார்கள் என்று அறிவிக்கின்றார்கள். ஹிஜ்ரீ 234ல் “வபாத்” ஆனதாகவும் சொல்லப்படுகின்றது.

قال البسطامي بوحدة الوجود ونسبت إليه بعض الشطحات، كقول «لا إله إلا أنا فاعبدوني» وقوله «سبحاني ما أعظم شأني».
பிஸ்தாமீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் பேசினார்கள். “ஷத்ஹ்” வெளிரங்கத்தில் ஷரீஅத்திற்கு முரணாகவும், உள்ரங்கத்தில் சத்தியமான வார்த்தைகள் சிலவற்றை அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகின்றன. உதாரணமாக “லா இலாஹ இல்லா அன பஃபுதூனீ” (என்னைத் தவிர எதுவுமில்லை. என்னையே வணங்குங்கள், “ஸுப்ஹானீ மா அஃளம ஷஃனீ” (நான் துய்யவன். என்னுடைய விடயத்தை வலுப்பமாக்கி வைத்தது என்ன?) என்பன போன்று.
يعرف أتباعه بالطيفورية أو البسطامية. وما يزال قبره إلى يومنا هذا محل تقدير الصوفية وإجلالهم.

அவர்களைப் பின்பற்றுபவர்கள் “தைபூரிய்யா” அல்லது “பிஸ்தாமிய்யா” என்று அறியப்படுகின்றார்கள். இன்றுவரை அவர்களின் புனித அடக்கவிடம் ஸூபீகளின் கண்ணியத்திற்குரிய இடமாகவே காணப்படுகின்றது.

وسُئل أبو يزيد عن العارف فقال: لا يرى فى نومه غير الله تعالى، ولا فى يقظته غير الله تعالى ولا يوافق غير الله تعالى ولا يطالع غير الله تعالى، (الرسالة القشيريّة 481 – 2 )

அபூ யஸீத் அவர்களிடம் “ஆரிப்” என்றால் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், தனது கனவிலோ, நினைவிலோ அல்லாஹ் அல்லாததை பார்க்கமாட்டார். அவனல்லாத ஒன்றுக்கு நேர்படவுமாட்டார். அவனல்லாத ஒன்றை காணவுமாட்டார் என்று கூறினார்கள்.
(அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, பாகம் 02, பக்கம் 481)

قال أبو يزيد انظر أن يأتي عليك ساعة لا ترى فى السماء غيره ولا فى الأرض غيرك، (حلية الأولياء وطبقات الأصفياء – 39 – 10 )
அபூ யஸீத் அவர்கள், வானத்தில் அவனல்லாத ஒன்றையும், பூமியில் நீயல்லாத ஒன்றையும் நீ காணாத ஒரு நேரம் வருவதை எதிர்பார்த்திரு என்று கூறினார்கள். (ஹில்யதுல் அவ்லியா வதபகாதுல் அவ்லியா, 39-10)

وقال أبو يزيد: للخلق أحوال ولا حال للعارف، لأنّه محيت رسومه وفنيت هويته بهويّة غيره وغيبت آثاره بآثار غيره، (الرسالة القشيريّة 478 – 2 )

இன்னும் அபூ யஸீத் அவர்கள் கூறினார்கள். படைப்புக்கு பல நிலைகள் உள்ளன. “ஆரிப்” இறைஞானிக்கு எந்நிலையும் கிடையாது. அவருடைய அடையாளங்கள் அழிக்கப்பட்டு விட்டன. அவரல்லாத ஒருவனின் எதார்த்தம் கொண்டு அவரின் எதார்த்தம் அழிக்கப்பட்டு விட்டது. அவரின் சுவடுகள் அவரல்லாத ஒருவனின் சுவடுகள் கொண்டு மறைக்கப்பட்டுவிட்டன.
(அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, 478 -2)

ويحكى عن أبي يزيد قال: رأيت ربي عزّ وجلّ فى المنام فقلتُ كيف أجدك؟ قال: فارق نفسك وتعال،
(الرسالة القشيريّة، 223 – 1)
அபூ யஸீத் அவர்களைப் பற்றி பின்வருமாறு பேசப்படுகின்றது. “நான் இறைவனை கனவில் கண்டேன். அவனிடம், உன்னை எப்படி அடைந்து கொள்வேன்? என்று கேட்டேன். அதற்கு, உனது “நப்ஸ்”ஐ பிரிந்து வா” என்று சொன்னான் என அவர்கள் கூறியுள்ளார்கள். (அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, 223 -1)

وقد حكي أنّ ذا النّون المصريّ بعث إنسانا من أصحابه إلى أبي يزيد لينقل إليه صفة أبي يزيد، فلما جاء الرجل إلى بسطام سأل عن دار أبي يزيد فدخل عليه فقال له أبو يزيد ما تريد؟ فقال: أريد أبا يزيد، وأين أبا يزيد أنا فى طلب أبي يزيد، فخرج الرجل وقال: هذا مجنون، فرجع الرجل إلى ذى النون فأخبره بما شهد فبكى ذو النّون وقال: أخي أبو يزيد ذهب فى الذاهبين إلى الله، (الرسالة القشيريّة، 174 -1 )
துன் நூனுல் மிஸ்றீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய தோழர் ஒருவரை அபூ யஸீத் அவர்களிடம் அவர்களின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில் அனுப்பி வைக்கின்றார்கள். அந்த மனிதர் பிஸ்தாம் நகரை வந்தடைந்த போது அபூ யஸீத் பற்றி விசாரித்து அவர்களிடம் சென்றார்கள். அபூ யஸீத் அவர்கள் அந்த மனிதனிடம் நீங்கள் என்ன நாடுகிறீர்கள்? என்று கேட்க, அம்மனிதர் நான் அபூ யஸீத் அவர்களை நாடுகிறேன் என்றார். அபூ யஸீத் எங்கே இருக்கின்றார்? நானும் அவரையே தேடுகிறேன் என்றார்கள் அபூ யஸீத் அவர்கள். அந்த மனிதர் அங்கிருந்து வெளியாகி இவர் (அபூ யஸீத்) “மஜ்னூன்” பைத்தியகாரன் என்று கூறினார். துன் நூனுல் மிஸ்றீ அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினார். செய்தியைக் கேட்ட துன் நூனுல் மிஸ்றீ அவர்கள் அழுதார்கள். எனது சகோதரர் அபூ யஸீத் அல்லாஹ் அளவில் செல்லக் கூடியவர்களுடன் சேர்ந்துவிட்டார் என்றும் கூறினார்கள். (அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, 174 – 1)

قيل جاء إليه شخصٌ يطلبه، فقال أبو يزيد رضي الله عنه: وأنا أيضا أطلب أبا يزيد منذ ثلاثين سنة ولا أجده، (تذكرة الأولياء، ص 202)
மேலும் பின்வருமாறும் கூறப்பட்டுள்ளது. அபூ யஸீத் அவர்களைத் தேடி ஒருவர் வந்தார். அவரிடம் அபூ யஸீத் அவர்கள் நானும் அபூ யஸீதையே முப்பது வருடங்களாக தேடிக் கொண்டிருக்கின்றேன். இன்னும் காணவில்லை என்றார்கள். (தத்கிறதுல் அவ்லியா, பக்கம் – 202)
وأقواله الدالّة على وحدة الوجود وعلى مرتبته فيها،
“வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தையும், அத்தத்துவத்தில் அவர்கள் இருந்த அந்தஸ்த்தையும் காட்டக் கூடிய அவர்களின் வார்த்தைகள்.
سبحاني ما أعظم شأني،
“ஸுப்ஹானீ மா அஃளம ஷஃனீ” நான் துய்யவன், என்னுடைய விடயத்தை வலுப்பமாக்கியது என்ன? (நான் வலுப்பமிக்கவன்)
خرجت من بايزيديتي كما تخرج الحيّة من جلدها ونظرت فإذا العاشق والمعشوق والعشق واحد، لأنّ الكلّ واحد فى عالم التوحيد،
நான் “பாயஸீத்” (பாரிஸி மொழியில் அவர்களின் பெயர்) என்பதை விட்டும் ஒரு பாம்பு தன்னுடைய சட்டையைக் கழட்டி வெளியாவது போல் வெளியாகி பார்த்தேன். அங்கே “ஆஷிக்” காதலனும், “மஃஷூக்” காதலிக்கப்பட்டவனும், “இஷ்க்” காதலும் ஒன்றுதான். ஏனெனில் “தவ்ஹீத்” ஏகத்துவ உலகில் எல்லாமே ஒன்றுதான். வேறில்லை.

وسئل ما هو العرش؟ فأجاب: أنا هو، وما هو الكرسي؟ فأجاب: أنا هو، وما هو اللّوح والقلم؟ فأجاب: أنا هو،
(مدخل إلى التصوّف الإسلامي – أبو الوفاء التفتازاني، ص 120 )
அபூ யஸீத் அவர்களிடம் “அர்ஷ்” என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அது நான்தான் என்று பதிலளித்தார்கள். “குர்ஸீ” என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதுவும் நான்தான் என்று பதிலளித்தார்கள். “லவ்ஹு, கலம்” என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கும் அது நான்தான் என்று பதிலளித்தார்கள்.
(மத்கலுன் இலத் தஸவ்வுபில் இஸ்லாமீ, ஆசிரியர் – அபுல் வபா அத்தப்தாஸானீ, பக்கம் 120 )

وقال أبو يزيد البسطامي رضي الله عنه حججت فرأيت البيت، ولم أر ربّ البيت ثم حججت ثانية، فرأيت البيت، ورأيت ربّ البيت، ثمّ حججت ثالثة فرأيت رب البيت، ولم أر البيت،
(الطبقات الكبرى- لوافح الأنوار فى طبقات الأخيار 159 -2 )

அபூ யஸீத் அவர்கள், நான் “ஹஜ்” வணக்கத்தை செய்தேன். அப்போது ஆயலயத்தையே கண்டேன். அந்த ஆலயத்தின் “றப்”பைக் காணவில்லை. பின் இரண்டாம் தடவையாகவும் “ஹஜ்” செய்தேன். ஆலயத்தையும் கண்டேன், ஆலயத்தின் “றப்”பையும் கண்டேன். பின் மூன்றாம் தடவை “ஹஜ்” செய்தேன். ஆலயத்தின் “றப்”பை மட்டுமே கண்டேன். ஆலயத்தைக் காணவில்லை என்றார்கள்.
(அத்தபகாதுல் குப்றா, 159 – 2)

قال أبو يزيد ‘ غبتُ عن الله ثلاثين سنة وكانت غيبتي عنه ذكري إيّاه فلمّا خَنَسَتُ عنه وجدتُه فى كل حال حتّى كأنّه أنا’ (خَنَسَ عنه أي رجع ، تأخّر) (حلية الأولياء وطبقات الأصفياء، 35 -10 )

நான் முப்பது வருடங்களாக அல்லாஹ்வை விட்டும் மறைந்திருந்தேன் (காணாமலிருந்தேன்). நான் மறைந்திருந்த காலம் அவனை “திக்ர்” நினைப்பதாகவே இருந்தது. அதிலிருந்து மீண்ட போது அவனை (அல்லாஹ்வை) எல்லா நிலைகளிலும் அடைந்து கொண்டேன். எந்தளவு என்றால் என்னாக அவனே இருக்கின்றான் என்று உணருமளவு பெற்றுக் கொண்டேன்.
(ஹில்யதுல் அவ்லியா வதபகாதுல் அஸ்பியா, 35 -10)

ل أنّه قال: قلتُ فى المناجاة: كيف الوصولُ إليك؟ سمعت قائلا يقول: طلّق نفسَك ثلاثا، ثمّ قل: الله،
(تذكرة الأولياء، ص207)

அபூ யஸீத் அவர்கள் கூறியதாக பின்வருமாறு சொல்லப்படுகின்றது. “முனாஜாத்” தியானத்தின் போது இறைவா! உன்னை எப்படி அடைந்து கொள்வது? என்று கேட்டேன். எனக்கு ஒரு அசரீதி கேட்டது. உன்னுடை “நப்ஸ்”ஐ முத்தலாக் சொல்லிவிட்டு “அல்லாஹ்” என்று சொல். (தத்கிறதுல் அவ்லியா, பக்கம் – 207)

قال نسيان النفس عينُ ذكر الله تعالى، (تذكرة الأولياء، 214)

மேலும் அவர்கள், “நப்ஸ்” ஐ (தன்னை) மறப்பதுதான் அல்லாஹ்வை நினைத்தல் என்று கூறியுள்ளார்கள்.
(தத்கிறதுல் அவ்லியா, பக்கம் 214)

قال : كنت طائفا بالبيت زمانا، فحين عرفتُ الله تعالى، ووصلت إلى قاف القرب، وجدتُ البيتَ طائفا بي،

ஒரு காலத்தில் நான் புனித “கஃபா”வை “தவாப்” வலம் வந்தேன். அல்லாஹ்வை நான் அறிந்து அவனை அடைந்த போது “கஃபா” என்னை வலம் வந்தது என்று அபூ யஸீத் அவர்கள் கூறியுள்ளார்கள்.

قال: اجتهد أن تجعلَ لك ساعةً فى جميع عمرك لا ترى فيها غيرَ الله تعالى، ثم اجتهد أن يمضي عمرُكَ كلُّه بهذه الصفة،
(تذكرة الأولياء، ص 211)
அல்லாஹ் அல்லாததை பார்க்காத ஒரு நேரத்தை நீ ஆக்கிக் கொள்ளும் வரை உன் ஆயுள் முழுவதும் முயற்சி செய். பின்பு இதே நிலையிலேயே உன் ஆயுள் முழுவதும் கழிய முயற்சி செய்.

(தத்கிறதுல் அவ்லியா,பக்கம் 211 )

قَالَ أَبُو يَزِيدَ: «طَلَّقْتُ الدُّنْيَا ثَلَاثًا ثَلَاثًا بَتَاتًا لَا رَجْعَةَ فِيهَا وَصِرْتُ إِلَى رَبِّي وَحْدِي فَنَادَيْتُهُ بِالِاسْتِغَاثَةِ إِلَهِي أَدْعُوكَ دُعَاءَ مَنْ لَمْ يَبْقَ لَهُ غَيْرُكَ، فَلَمَّا عَرَفَ صِدْقَ الدُّعَاءِ مِنْ قَلْبِي وَالْإِيَاسَ مِنْ نَفْسِي كَانَ أَوَّلُ مَا وَرَدَ عَلَيَّ مِنْ إِجَابَةِ هَذَا الدُّعَاءِ أَنْ أَنْسَانِي نَفْسِي بِالْكُلِّيَّةِ وَنَصَبَ الْخَلَائِقَ بَيْنَ يَدَيَّ مَعَ إِعْرَاضِي عَنْهُمْ» (حلية الولياء وطبقات الأصفياء، 36 – 10 )
நான் “துன்யா”வை மீள முடியாதவாறு முத்தலாக் சொல்லி எனது “றப்” அளவில் ஆகிவிட்டேன். அவனை இரட்சித்தவனாக அழைத்து “இறைவா! உன்னல்லாதது இல்லையென்றான ஒருவனின் பிரார்த்தனையாக உன்னிடம் கேட்கின்றேன் என்றேன். எனது பிரார்த்தனையின் உண்மைத் தன்மையையும், என்னால் முடியாது என்ற எனது நிராசையையும் அறிந்த அவனிடமிருந்து எனக்கு வந்த முதலாவது பதில், அவன் என்னை முழுமையாக மறக்கச் செய்து, படைப்புக்களை நான் புறக்கனித்த நிலையிலும் அவற்றை என் முன் நிறுத்தினான் என்று அபூ யஸீத் அவர்கள் கூறினார்கள்.
(ஹில்யதுல் அவ்லியா, 36 -10)

وَسُئِلَ عَنْ دَرَجَةِ الْعَارِفِ , فَقَالَ: لَيْسَ هُنَاكَ دَرَجَةٌ بَلْ أَعْلَى فَائِدَةَ الْعَارِفِ وُجُودَهُ رَبَّهُ , وَقَالَ: عَرَفْتُ اللَّهَ بِاللَّهِ وَعَرَفْتُ مَا دُونَ اللَّهِ بِنُورِ اللَّهِ وَسُئِلَ: بِمَاذَا يُسْتَعَانُ عَلَى الْعِبَادَةِ فَقَالَ: بِاللَّهِ إِنْ كُنْتَ تَعْرِفُهُ , وَقَالَ: أُدَلُّ عَلَيْكَ بِكَ وَبِكَ أَصِلُ إِلَيْكَ وَقَالَ: نِسْيَانُ النَّفْسِ ذِكْرُ بَارِئِ النَّسِيْمِ ,(حلية الولياء وطبقات الأصفياء، 37 -10 )
ஒரு “ஆரிப்” இறை ஞானியின் அந்தஸ்த்து பற்றி கேட்கப்பட்டபோது, அங்கு எந்த அந்தஸ்த்தும் கிடையாது. மாறாக ஒரு ஞானியின் உயர்ந்த பிரயோசனம் அவர் தன்னுடைய “றப்” இரட்சகனாக இருப்பதாகும் என்று கூறினார்கள். மேலும் நான் அல்லாஹ்வைக் கொண்டே அல்லாஹ்வை அறிந்தேன். அவனல்லாதவற்றை அவனின் ஒளி கொண்டு அறிந்தேன் என்று கூறினார்கள். மேலும் அவர்களிடம் வணக்கத்திற்கு எது கொண்டு உதவி தேடப்படும்? என்று கேட்கப்பட்டது. நீ அல்லாஹ்வை அறிந்திருந்தால் அவனைக் கொண்டே என்றார்கள். உன்னைக் கொண்டே உன்னைப் பற்றி அறிவிக்கப்படுகின்றேன். உன்னைக் கொண்டே உன்னை அடைகிறேன். தன்னை மறத்தல் இறைவனை நினத்தலாகும் என்று கூறினார்கள். (ஹில்யதுல் அவ்லியா, 37 -10)

وَسَأَلَهُ رَجُلٌ فَقَالَ: يَا أَبَا يَزِيدَ الْعَارِفُ يَحْجُبُهُ شَيْءٌ عَنْ رَبِّهِ؟ فَقَالَ: «يَا مِسْكِينُ مَنْ كَانَ هُوَ حِجَابَهُ أَيُّ شَيْءٍ يَحْجُبُهُ» (حلية الأولياء وطبقات الأصفياء، 38- 10 )
அபூ யஸீத் அவர்களிடம் ஒருவர், அபூ யஸீதே! ஒரு ஞானிக்கு ஏதேனும் ஒரு வஸ்த்து அல்லாஹ்வை மறைக்குமா? என்று கேட்டார். ஏய் ஏழையானவனே! அவரே அவனின் திரையாக இருக்கும் போது அவருக்கு எப்படி இன்னொன்று திரையாக முடியும்? (ஹில்யதுல் அவ்லியா, 38-10)

ذكر عن أبي يزيد أنّه قال: رفعني مرةً فأقامني بين يديه، وقال لي: يا أبا يزيد! إنّ خلقي يحبون أن يروك، فقلتُ زيّنِّـيْ بوحدانيّتك، وألبسني أنانيّتك، وارفعني إلى أحديّتك، حتّى إذا رآني خلقك قالوا: رأيناك، فتكون أنت ذاك، ولا أكون أنا هنا، (اللّمع، ص – 461 )

அபூ யஸீத் அவர்கள் கூறினார்கள். என்னை இறைவன் உயர்த்தி அவன் முன் நிறுத்திப் பின்வருமாறு சொன்னான். அபூ யஸீதே! படைப்புக்கள் உங்களைப் பார்க்க விரும்புகின்றனர். நான், என்னை உன்னுடைய “வஹ்தானிய்யத்” ஒருவனாயிருத்தல் என்ற தன்மை கொண்டு அழகு படுத்தி, உன்னுடைய “நான்” என்ற அகங்காரத்தை அணிவித்து, உன்னுடைய “அஹதிய்யத்” ஏகமுமாயிருத்தல் அளவில் உயர்த்தி வை. அவர்கள் என்னைப் பார்த்தால் உன்னைப் பார்த்ததாகவே சொல்ல வேண்டும். அது (நான்) நீயாகவே இருக்க வேண்டும். அங்கு “நான்” இருக்கக் கூடாது என்று சொன்னேன். (அல்லம்உ, பக்கம் 461)

وقد ذكر عن أبي يزيد أيضا أنّه قال: أشرفتُ على ميدان اللّيسيّة، فما زلت أطير فيه عشر سنين، حتّى صرت من ليس فى ليس بليس، ثمّ أشرفت على التضييع، وهو ميدان التوحيد، فلم أزل أطير بليس فى التضييع، حتّى ضعت فى الضياع ضياعا، وضعت فضعت عن التضييع بليس فى ليس فى ضياعه التضييع، ثمّ أشرفت على التوحيد فى غيبوبة الخلق عن العارف، وغيبوبة العارف عن الخلق، (اللّمع، ص 468 )

இன்னும் அபூ யஸீத் அவர்கள் பற்றி அறிவிக்கப்படுகின்றது. நான் “லைஸிய்யா” எனும் மைதானத்தில் இறங்கினேன். அதில் நான் இல்லை என்றாகும் வரை பத்து வருடங்கள் பறந்தேன். பின் “தழ்யீஉ” வுக்குச் சென்றேன். அது “தவ்ஹீத்” உடைய மைதானம். அதில் “இல்லை” என்பது கொண்டு பறந்து கொண்டிருந்தேன். அறவே இல்லை என்றாகிவிட்டேன். பின்பு “தவ்ஹீத்” என்ற மைதானத்தில் இறைஞானிக்கு படைப்பு மறைந்திருத்தல், படைப்புக்கு இறைஞானி மறைந்திருத்தல் என்ற நிலையில் இறங்கினேன்.
(அல்லம்உ, பக்கம் 468)

விளக்கம்: (நான் “லைஸிய்யா” எனும் மைதானத்தில் இறங்கினேன். அதில் நான் இல்லை என்றாகும் வரை பத்து வருடங்கள் பறந்தேன்) “பனா” என்பதின் முதலாவது படித்தரமும், பார்க்கப்படுகின்ற, பார்க்கப்படாத அனைத்தும் போகக் கூடிய (இல்லாமலாகக் கூடிய) படித்தரமாகும். இதனையே ஒரு கூட்டத்தார் “பனா” என்று சொல்கின்றனர்.

(பின் “தழ்யீஉ” வுக்குச் சென்றேன். அது “தவ்ஹீத்” உடைய மைதானம்) இதுதான் அனைத்துமே இல்லாமல் போகின்ற இடமாகும். அதன் பிறகு “நப்ஸ்” உம் இல்லாமல் போகும்.

இமாம் ஜுனைதுல் பக்தாதீ அவர்கள் கூறுகின்றார்கள். இங்கு அபூ யஸித் அவர்கள் பத்து வருடங்கள் என்று குறிப்பிட்டிருப்பது “வக்த்” அந்த நேரத்திலாகும். இந்நிலையில் நேர, காலமெல்லாம் இல்லை.

(கிதாபு தப்ஸீரிஷ் ஷத்ஹிய்யாத் வல் கலிமாத், பக்கம் 331)

وقال أبو يزيد: إنّ لله عبادا لو حجبهم فى الجنّة عن رؤية لاستغاثوا من الجنّة كما يستغيث أهل النار من النار،

அல்லாஹ்வுக்கு சில அடியார்கள் உள்ளனர். சுவனத்தில் அவர்களுக்கு அல்லாஹ்வைப் பார்ப்பதை விட்டும் திரையிடப்பட்டால் நரக வேதனை தாங்க முடியாமல் நரகவாதிகள் அதிலிருந்து விடுதலைக்காக இரட்சிப்புத் தேடுவது போல் சுவனத்தை விட்டும் இரட்சிப்புத் தேடுவார்கள் என்று அபூ யஸீத் அவர்கள் கூறினார்கள்

رضي الله عن أبي يزيد البسطامي وأرضاه عنّا،

இமாம் ஜுனைதுல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ்.

عالم مسلم وسيد من سادات الصوفية وعلم من أعلامهم. يعد من علماء أهل السنة والجماعة ومن أعلام التصوف في الآن ذاته، إذ جمع بين قلب الصوفي وعقل الفقيه، واشتهر بلقب ‘سيد الطائفة’. وعدَّه العلماء شيخ مذهب التصوف؛ لضبط مذهبه بقواعد الكتاب والسنة، ولكونه مصونًا من العقائد الذميمة، محمي الأساس من شُبه الغلاة، سالمًا من كل ما يوجب اعتراض الشرع. قال عنه أبو عبد الرحمن السلمي: ‘هو من أئمة القوم وسادتهم؛ مقبول على جميع الألسنة’. وهو أول من تكلم في علم التوحيد ببغداد.
இமாம் ஜுனைத் அவர்கள் இஸ்லாமிய அறிஞரும், ஸூபிய்யாக்களின் தலைவர்களில் ஒரு தலைவருமாவார்கள். ஸுன்னத் வல் ஜமாஅத்தினதும், ஸூபிஸத்தினதும் அறிஞர்களில் ஒருவராக கருதப்படுகின்றார்கள். ஸூபீயின் உள்ளத்தையும், “பகீஹ்” உடைய புத்தியையும் இணைத்தவர்கள். “ஸெய்யிதுத் தாயிபா” (ஸூபிய்யாக்களின் தலைவர்) என்ற பட்டத்தால் பிரபல்யமானவர்கள். அறிஞர்கள் அவர்களை ஸூபிஸ வழியின் குரு என்று கணிக்கின்றார்கள். காரணம் அவர்களின் வழி அல்குர்ஆன், ஸுன்னாவுக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ளதாலாகும். மேலும் இழி கொள்கைகளை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்களாகவும், அடிப்படை பாதுகாக்கப்பட்டவர்களாகவும், “ஷரீஅத்”திற்கு முரணானவற்றை விட்டும் ஈடேற்றமானவர்களாகவும் இருப்பதுமாகும். அவர்கள் பற்றி அபூ அப்திர் றஹ்மான் அஸ்ஸில்மீ அவர்கள் “அவர்கள் (ஜுனைதுல் பக்தாதீ) ஸூபிய்யாக்களின் இமாம்களில் ஒருவரும், தலைர்களில் ஒருவருமாவார்கள்” என்று கூறியுள்ளார்கள். சகலரிடத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவர். “இல்முத் தவ்ஹீத்” ஏகத்துவ அறிவை பக்தாத் நகரில் முதலில் பேசிவருமாவார்கள்.
ولد ببغداد سنة 215 هـ، ونشأ فيها. وصحب جماعة من المشايخ، واشتهر بصحبة خاله سري السقطي، والحارث المحاسبي، ودرس الفقه على أبي ثور، وكان يفتي في حلقته وهو ابن عشرين سنة.
பக்தாத் நகரில் ஹிஜ்ரீ 215ல் பிறந்தார்கள். அங்கேயே வளர்ந்தார்கள். “மஷாயிக்” ஷெய்குமார்களில் ஒரு கூட்டத்தாருடன் நட்பு கொண்டார்கள். தன்னுடைய மாமா ஸரிய்யுஸ் ஸகதீ, மற்றும் அல்ஹாரிதுல் முஹாஸபீ றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களுடன் தோழமையாக இருந்ததனால் பிரசித்தி பெற்றார்கள்.

عن أبي القاسم الجنيد رضي الله عنه أنه قال: لي ثلاثون سنة أتكلم مع الله تعالى، والناس يظنون أني أتكلم معهم
(الطبقات الكبرى، 479 -1)
அபுல் காஸிம் ஜுனைதுல் பக்தாதீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள். நான் முப்பது வருடங்களாக அல்லாஹ்வுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் மனிதர்கள் நான் அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். (அத்தபகாதுல் குப்றா, 479-1)
العارفون يتكلمون مع الخلق وهم بالحق مع الحق كما حكي عن الجنيد أنّه قال لي ثلاثون سنة أتكلم مع الله تعالى، والناس يظنون أني أتكلم معهم، ( تقريب الأصول، زيني دحلان، ص 93 )
இமாம் ஜுனைதுல் பக்தாதீ அவர்கள், நான் முப்பது வருடங்களாக அல்லாஹ்வுடனேயே பேசிக் கொண்டிருக்க மக்கள் நான் அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக எண்ணுகிறார்கள் என்று கூறியிருப்பது போல் “ஆரிபீன்”கள் ஹக் தஆலாவைக் கொண்டு அவனுடனேயே இருக்கும் நிலையில் மக்களுடன் பேசுகின்றார்கள்.

(தக்ரீபுல் உஸூல், ஆசிரியர் ஸெய்னீ தஹ்லான், பக்கம் 93)

سمعت عَبْد الرَّحْمَنِ بْن يُوسُفَ الأَصْبَهَانِي يَقُول: سمعت أبا عَبْد اللَّهِ مُحَمَّد بْن عمار الهمداني يَقُول: سمعت أبا مُحَمَّد المرعشـي يَقُول سئل شيخي عَنِ التصوف فَقَالَ: سمعت الجنيدي وَقَدْ سئل عَنْهُ فَقَالَ: هُوَ أَن يُمِيتَك الحق عَنْك ويُحْيِيَك بِهِ (الرسالة القشيريّة، 441 -2)
இமாம் ஜுனைதுல் பக்தாதீ அவர்களிடம் “தஸவ்வுப்” என்றால் என்ன? என்று கேட்கப்பட்டபோது, “அது, உன்னை “ஹக்” தஆலா மரிக்கச் செய்து (உன்னினலுள்ள “நான்” என்பதை இல்லாமலாக்கி) அவனைக் கொண்டு (அவனே உள்ளான் என்ற உணர்வை தருவதாகும்) உன்னை உயிர்ப்பிப்பதாகும்”
(அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, 441-2)

فَقَالَ الْجُنَيْد الْمعرفَة وجود جهلك عِنْد قيام علمه قيل لَهُ زِدْنَا قَالَ هُوَ الْعَارِف وَهُوَ الْمَعْرُوف، مَعْنَاهُ أَنَّك جَاهِل بِهِ من حَيْثُ أَنْت وَإِنَّمَا عَرفته من حَيْثُ هُو، التعرف لمذهب أهل التصوف (ص: 66)
“மஃரிபா” என்பது அவனுடைய அறிவு நிலைபெறும் போது உன்னுடைய “ஜஹ்ல்” அறியாமை இருத்தலாகும் என்று இமாம் ஜுனைதுல் பக்தாதீ அவர்கள் சொன்ன போது இன்னும் அதிகமாகச் சொல்லுங்கள் என்று சொல்லப்பட்டது. அதற்கு “அறிபவனும் அவனே, அறியப்பட்டவனும் அவனே” என்று சொன்னார்கள். இதன் கருத்தாகிறது, நீ “நான்” என்ற உணர்வின் அடிப்படையில் அவனை அறியாதவன். “அவன்” என்ற அடிப்படையில்தான் அவனை அறிந்தவனாகுவாய். (அத்தஅர்றுபு லிமத்ஹபி அஹ்லித்தஸவ்வுப், பக்கம் 66)

قَالَ الْجُنَيْد حَقِيقَة التَّوَكُّل أَن يكون لله تَعَالَى كَمَا لم يكن فَيكون الله لَهُ كَمَا لم يزل، (التعرف لمذهب أهل التصوف، ص: 101)
قوله أن يكون (المتوكّل الّذي هو خلق) ، كما لم يكن (أي كأنّه غير موجود كما كان سابقا)، وهذا ما يسمّونه ‘ الفناء عن الخلق ‘، فيكون الله له كما لم يزل (أي هو الموجود الوحيد ولا موجود غيره)
“தவக்குல்” என்பதன் எதார்த்தம் “தவக்குல்” வைப்பவன் அவன் படைக்கப்படுவதற்கு முன் எவ்வாறு இல்லாமலிருந்தானோ அதேபோன்று அவன் அல்லாஹ்வுக்குரியவனாகும். (இது “பனா” என்ற நிலையை குறிக்கும்) அவ்வாறு “தவக்குல்” வைப்பவர் ஆகுவாராயின் அல்லாஹ் இந்த முதவக்கிலுக்கு சாதகமாக இருப்பான். அதாவது அல்லாஹ் மாத்திரமே உண்டாக்குபவன், அவனன்றி வேறு இல்லை)

(அத்தஅர்றுப் லிமத்ஹபி அஹ்லித் தஸவ்வுப், பக்கம் 101)
مسألة سُئل الجنيد رضي الله عنه إذا ذهب اسم العبد، وثبت حكم الله تعالى، قال اعلم رحمك الله تعالى، أنّه إذا عظمت المعرفة بالله ذهبت آثار العبد، وامّحت رسومه، فعند ذلك يبدو علم الحقّ، وثبت اسم حكم الله تعالى، (اللمع للطوسي ص 297)
அடியான் என்ற பெயர் போய் அல்லாஹ்வின் சட்டம் தரிபட்டால் என்று ஜுனைதுல் பக்தாதீ அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அறிந்து கொள்! அல்லாஹ் உனக்கு அருள் சொரியட்டும். அதுவாகிறது அல்லாஹ் பற்றிய ஞானம் வலுப்பெற்றால் அடியானின் சுவடுகள் போய், அடையாளங்கள் இல்லாமலாகும். அந்நேரம் ஹக் தஆலாவின் அறிவு வெளியாகும். அல்லாஹ்வின் சட்டம் என்ற பெயர் தரிபடும் என்று கூறினார்கள்.
(அல்லம்உ லித்தூஸீ, பக்கம் 297)

وقال الجنيد واصفا أهلَ الكمال: سَجَّنُوا هِمَمَهم عن التلفت إلى مذكور سوى وليهم، فحيوا حياة الأبد، بالحي الّذي لم يزل ولا يزال، (عوارفا المعارف، ص 24)
ஜுனைதுல் பக்தாதீ அவர்கள் “அஹ்லுல் கமால்” சம்பூரணமுடையோர் பற்றி விபரிக்கையில், அவர்கள் தங்களுடைய அதிகாரியான அல்லாஹ் அல்லாத குறித்த ஒன்றின் பக்கம் தங்களின் எண்ணங்கள் திரும்பாமல் அந்த எண்ணங்களை சிறைப்பிடித்து, நித்திய ஜீவனான அல்லாஹ்வைக் கொண்டு நித்திய – நிரந்தர வாழ்வு வாழ்ந்தார்கள். (அவாரிபுல் மஆரிப், பக்கம் 24)

وسئل الجنيد عَنِ التوحيد فَقَالَ: معنى تضمحل فِيهِ الرسوم وتندرج فِيهِ العلوم ويكون اللَّه تَعَالَى كَمَا لَمْ يزل
(الرسالة القشيرية 463-2)
இமாம் ஜுனைதுல் பக்தாதீ அவர்களிடம் “தவ்ஹீத்” பற்றி கேட்கப்பட்ட போது அவர்கள், அவனின் சுவடுகள் மறைந்து, அறிவுகள் இல்லமலாகி அவன் அல்லாஹ்வாக நீங்காமல் இருப்பது போல் இருப்பான்.
(அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, 463-2)

ويرى الجنيد أنّ حقيقة محبّة الله دخول صفات المحبوب على البدل من صفات المحب، (عوارف المعارف، ص 508)
ஜுனைதுல் பக்தாதீ அவர்களிடம் உண்மையான இறை அன்பு என்பது “மஹ்பூப்” ஆகிய அல்லாஹ்வின் தன்மைகள் “முஹிப்” நேசிப்பவனாகிய அடியானில் அவனது தன்மைகளுக்குப் பகரமாக நுழைதல் ஆகும் என்று கருதுகிறார்கள். (அவாரிபுல் மஆரிப், பக்கம் 508)
وحق المشاهدة مَا قاله الجنيد رحمه اللَّه: وجود الحق مَعَ فقدانك، الرسالة القشيرية (1ஃ 184)
சரியான காட்சி என்பது இமாம் ஜுனைதுல் பக்தாதீ அவர்கள் சொன்னது போல “நீ உன்னை இழந்து ஹக்கை பெறுதல்” ஆகும். (அர்ரிஸாலதுல் குஷைரிய்யா, 184 -1)
وسئل عن العارف فقال لون الماء لون إنائه (الرسالة القشيريّة، 481 – 2 )
وقد جاء فى حاشية العروسي شرح لهذه الجملة، ومنه: (يعني ليس للحقّ صورة معيّنة، فتميّزه عن صورة أخرى، كالماء لا لون له، ولكنّ الماء يتلوّن بحسب لون إنائه، فإنّ الحقّ لذاته يقتضـى القبول لكلّ نعت، والظهور بكل وصف، ومن لم يتقيّد فى معرفته فذلك هو العارف، (حاشية العروسي، 74 -4 ، وانظر معراج التشوّف لابن عجيبة، ص 29 )
இமாம் ஜுனைதுல் பக்தாதீ அவர்களிடம் “ஆரிப்” இறைஞானி பற்றி கேட்கப்பட்ட போது அவர்கள், “தண்ணீரின் நிறம் பாத்திரத்தின் நிறமாகும்” என்றார்கள்.

மேற்சொன்ன இந்த வசனம் தொடர்பாக “ஹாஷியதுல் அறூஸீ” என்ற ஷர்ஹில், தண்ணீருக்கு நிறம் இல்லாதது போல் இன்னொன்றை விட்டும் பிரித்தறிய அல்லாஹ்வுக்கு குறித்த ஒரு உருவம் இல்லை. ஆனால் தண்ணீர் அது எந்த பாத்திரத்தில் இருக்கின்றதோ அந்த நிறத்தைப் பெற்றுக் கொள்ளும். ஹக் தஆலா தன்னுடைய “தாத்” உள்ளமைக்கு சகல வர்ணனைகளையும் ஏற்றுக் கொள்வான். அனைத்து தன்மைகள் கொண்டும் வெளியாவதையும் ஏற்றுக் கொள்வான். எவன் அல்லாஹ்வை அறிவதில் மட்டாகவில்லையோ அவனே “ஆரிப்” ஞானியாவான்.
(ஹாஷியதுல் அறூஸீ 74-4, மிஃராஜுத் தஷவ்வுப் லிப்னி அஜீபா, பக்கம் 29)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments