Friday, April 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஏகனின் தண்டனையை எதிர் கொள்ள எவரால் முடியும்?! சாது மிரண்டால் காடும் இடம் கொடாது.

ஏகனின் தண்டனையை எதிர் கொள்ள எவரால் முடியும்?! சாது மிரண்டால் காடும் இடம் கொடாது.

(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)

அன்புக்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!

நான் இங்கு கூறும் இவ்வறிவுரை எனக்கும், உங்களுக்குமேயன்றி உங்களுக்கு மட்டுமல்ல.

நாம் அனைவரும் இறைவனுக்கு வழிப்பட்டு வாழ வேண்டும். எங்களின் சொல், செயல், எண்ணம் யாவும் உண்மையானவையாகவும், நேர்மையானவையாகவும் இருக்க வேண்டும்.

அநீதி, அட்டூழியம், குடி, விபச்சாரம், கொலை, கொள்ளை போன்ற பாவச் செயல்கள் இப்புவியில் எல்லை மீறுமாயின் இறைவனின் தண்டனையும், சோதனையும் ஒன்றன் பின் ஒன்றாக இறங்கிக் கொண்டே இருக்கும். அவன் இறக்கிய தண்டனைகளில் அல்லது சோதனைகளில் ஒன்றுதான் இன்று உலகளாவிய ரீதியில் பரவி வருகின்ற கொரோனா வைரசாகும்.

கொரோனா வைரஸ் என்பது இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைத்து மத, இன மக்களுக்கும் இறைவன் வழங்கிய சோதனையாகவும், தண்டனையாகவும் இருப்பதற்கு வாய்ப்புண்டு.

இந்தச் சோதனையில் அல்லது தண்டனையில் இப்புவியில் வாழும் அனைத்து மக்களும் பாடம் கற்றுத் தமது தவறையுணர்ந்து இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு இஸ்லாமிய “தஸவ்வுப்” ஸுபிஸம் கூறும் ஆன்மீக வழிக்கு வந்து தமது வாழ்வை இறைவனின் வழிகாட்டற் படி அமைத்துக் கொள்ளாமல் மீண்டும் அவர்கள் குறுக்கு வழியிற் சென்றார்களாயின் இதற்கு முன் வாழ்ந்தவர்களுக்கு இறக்கப்பட்ட சோதனைகளையும், தண்டனைகளையும் விடப் பதின் மடங்கு கடுமையான சோதனைகளையும், தண்டனைகளையும் இறக்குவான் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இறைவன் எவருக்கும் அநீதி செய்வதுமில்லை, அநீதியை நாடுவதுமில்லை. எனினும் அடியார்களின் அட்டூழியமும், அட்டகாசமும் வரம்பைக் கடந்து செல்லும் போது அவர்களைத் தண்டிப்பது அநீதியாகாது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு கொடுக்கும் தண்டனைக்கும், இறைவன் தனது அடியார்களில் அட்டூழியக் காரர்களுக்கு வழங்கும் தண்டனைக்கும் வேறுபாடுண்டு. மலைக்கும், மடுவுக்குமுள்ள வித்தியாசம் உண்டு. இறைவனின் கோபத்தால் ஏற்படும் தண்டனைக்கும், அவனின் ரோஷத்தால் ஏற்படும் தண்டனைக்கும் வித்தியாசமுண்டு. கோபத்தால் ஏற்படுகின்ற தண்டனையை விட ரோஷத்தால் ஏற்படுகின்ற தண்டனை மிக்க கடுமையானதாயிருக்கும்.

ஒரு கணவன் தனது மனைவி பொய் சொன்னதற்காக அவளைத் தண்டிப்பதற்கும், அவள் இன்னொருவனுடன் உடலுறவு கொண்டதற்காக அவளைத் தண்டிப்பதற்கும் தண்டனையில் வித்தியாசமிருக்கும். பொய் சொன்னதற்காக அவளைத் தண்டிப்பது கோபத்தினாலாகும். பிறருடன் உடலுறவு கொண்டதற்காக தண்டிப்பது ரோஷத்தினாலாகும். ரோஷத்தின் தண்டனையை எவராலும் எதிர் கொள்ள – அதற்கு முகம் கொடுக்க முடியாது.

اِنَّ الله لَاَغْيَرُ அல்லாஹ் மிகவும் ரோஷக்காரன் என்பது பெருமானாரின் அருள்வாக்காகும். “அக்யர்” என்ற அறபுச் சொல்லுக்கு “மிகவும் ரோஷக்காரன்” என்று பொருள் வரும். இதன் விபரம் அறபு மொழியிலக்கணம் படித்தவர்களுக்குத் தெரியும்.
முன் வாழ்ந்த ஒரு சமூகத்தின் பட்டணத்தை தலைகீழாகப் புரட்டியதும், கல் மழையை இறக்கி இன்னொரு சமூகத்தை அழித்ததும், தவளை மழையையும், பேன் மழையையும், வெட்டுக்கிளிகளையும் இறக்கி இன்னும் பல சமூகங்களைத் தண்டித்ததும் கோபத்தின் தண்டனைகளல்ல. இவையாவும் ரோஷத்தின் தண்டனைகளாகும்.

கொரோனா வைரசோடு தண்டனை முடிந்து விட்தென்று எவரும் நினைத்து விடக்கூடாது. அடியார்களின் அட்டூழியம் அணையைத் தாண்டுமாயின் முன்வாழ்ந்த சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை விட பதின் மடங்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

அடியார்களின் அட்டூழியம் வரம்பைத் தாண்டினால் رِيْحٌ حَمْرَاءَ நெருப்புக் காற்று கொண்டு அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்று நபீகட்கரசர் முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள். இந்த நபீ மொழி பல நபீ மொழி நூல்களில் இடம் பெற்றுள்ளது.

நெருப்புக் காற்று என்றால் சூடான, உஷ்ணமான காற்றென்பது கருத்தல்ல. உடல்களை எரித்து அவற்றைச் சாம்பலாக்கும் காற்றென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நெருப்புக் காற்றில் நச்சுக் காற்றும் அடங்கும். நச்சுக் காற்று தண்டனையாக இறக்கப்பட்டால் அக்காற்றைச் சுவாசிக்கும் உயிரினங்கள் யாவும் செத்து மடிந்து போகும்.

தண்டனைகள் தொடர்பான திருக்குர்ஆன் வசனங்கள் அத்தியாயம் 69 – வசனங்கள் 4, 5, 6, 7, 8 இவற்றுக்கான விளக்கம் தொடரும்.

—————————————–

WHO_CAN_FACE_THE_PUNISHMENT_OF_GOD

(Written_By_Moulavee_Alhaj_A_abdurrauff_Misbaahee_Bahjee)

(Heavens will burst when the innocents suffer)
Dear good servants of Allah!
The advice here I am saying is not only for you but also to me.
We all should obey to God. Our word, deed and thought must be true and honest.
If the sins such as injustice, atrocity, drinking and prostitution override, God’s tribulation and punishment will have been descending one by one upon us. One of his tribulation and punishment is CORONA that threatens the entire world now. There is opportunity that the CORONA virus to be tribulation and punishment for the people globally.
Learning lesson from this tribulation and punishment, all the people on the earth now should supplicate from him and to live under the spiritual way under the Sufi path of Islam. If they follow the same routine as before without supplicating from God, worse punishment than that were given to the ancestors will be descended upon us. People should realize this truth and live with the fear of God. The God doesn’t hurt anyone nor does he like to hurt. However, to punish the people when their atrocity overrides is not injustice.
There is more different between the punishment given by people and God. Further, there is difference between the punishment given by God due to the punishment and self-respect. There is a difference between for husband hitting a wife for telling lie and for doing intercourse with someone else. Punishing her for telling lie is anger. But punishing her for doing intercourse is self-respect. No one can face the punishment given due to the self-respect.

اِنَّ الله لَاَغْيَرُ It is a holy tongue of Nabee (pbuh) that Allah is most self-respectful one. Meaning of the Arabic word AGHYAR is “more prestigious one.” Those who have learnt the Arabic Grammar know the definition of this word.
Destroying the ancient community by turning the city upside down, destroying another community with shower of stones and punishing another community with shower of frogs; lice, and locusts is not the result of anger. It is the result of self-respect. No one should think that the punishment is over with CORONA. As the atrocity of servants overcomes many folds of punishments than going on now will descend upon us.
Nabee (pbuh) has said that when the atrocity of servants overcomes they will be punished with (رِيْحٌ حَمْرَاءَ) fire wind. This tongue of Nabee has been recorded in many tomes of Hathees. It does not mean WARM WIND or HOT WIND. The fire wind that burns our body in to ash. This fire wind includes a venomous wind to. If venomous wind blows, those who breathe will have died.
The Qur’aanic chapters on the punishments. 69 verses 4,5,6,7, and 8.
Enunciation for this will continue….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments