Friday, April 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

(தொகுப்பு: மௌலவி அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜி)

ஒரு மனிதனின் செல்வங்களில் நோயற்ற, நிம்மதியான வாழ்வு ஒன்று மட்டுமே குறைவற்ற, குறையற்ற செல்வமாகும்.
ஒரு நாளில் ஒரு வேளை உணவுக்கு வழியின்றியும், மானத்தை மறைக்கக்கூட ஒரு சிறு துணியின்றியும், குடிக்கவும், குளிக்கவும் சுத்தமான நீரின்றியும், பசியால் வாடி, தாகத்தால் தள்ளாடி, தலைவலி போன்ற ஒரு சிறு நோயுமின்றி ஆரோக்கியமாக வாழும் ஓர் ஏழைக்குள்ள நிம்மதி பல்லாயிரம் கோடிக்குச் சொந்தக் காரனான, பல வாகனங்களும், கடைகளும், கம்பனிகளும், தோட்டங்களும், மாளிகைளுமுள்ள தீராத பயங்கர நோயால் துவண்டு போய் அனுக்கத்தோடும், அழுகையோடும் வாழும் ஒரு கோடீஸ்வரனுக்கு இல்லையெனில் ஆரோக்கியத்தின் பெறுமதியை என்னென்று சொல்வது?! இதனால்தானோ என்னவோ முன்னோர்கள் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று சொன்னார்கள் போலும்! “சுத்தம் “ஈமான்” நம்பிக்கையில் ஓர் அங்கம்” என்றுரைத்த ஏந்தல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தினமும் காலை மாலை தவறாது ஆரோக்கிய வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தார்கள். ஆரோக்கிய வாழ்வுக்காக அவர்கள் கையாண்ட நடைமுறைகளில் ஒன்று

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: ‘ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيهِمَا، وَقَرَأَ فِيهِمَا قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ: يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ، يَفْعَلُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ ‘ (بخاري 5017 – مسلم 2192- 50)

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உறக்கத்திற்காக தங்களின் விரிப்புக்கு வந்தால் தங்களின் இரு “கப்பு”களையும் ஒன்றாகச் சேர்த்து அவ்விரண்டிலும் “குல் ஹுவல்லாஹு அஹத்”, “குல் அஊது பிறப்பில் பலக்”, “குல் அஊது பிறப்பின்னாஸ்” என்ற மூன்று அத்தியாயங்களையும் ஓதி அவ்விரு உள்ளங்கைகளிலும் ஊதி அவ்விரண்டாலும் உடலில் தடவுவதற்கு முடியுமான இடங்களில் தடவுவார்கள். தலையிலிருந்து முகம் வழியாக முன் பக்கம் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

ஆதாரம் – புஹாரீ, ஹதீது எண் – 5017, அறிவிப்பு – ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா
ஆதாரம் – முஸ்லிம், ஹதீது எண் – 2192-50, அறிவிப்பு – ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா

கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் இரவில் உறக்கத்திற்குச் சென்றால் மேற்கண்டவாறு செய்யத் தவறமாட்டார்கள். இவ்வாறு தொடராகச் செய்து வருபவர்களுக்கு உடல் நோய் வரவும் மாட்டாது, உள நோய் வரவும் மாட்டாது. நபீகள் கோமான் அர்த்தமில்லாமல் இவ்வாறு செய்யவுமில்லை, வேலையில்லாமல் இவ்வாறு செய்யவுமில்லை. தங்களின் “உம்மத்” சமூகத்துக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தார்கள். “பிறாஷ்” என்றால் விரிப்பு. உறங்குவதற்காக பயன்படுத்தக் கூடிய பாய், பெட்சீட், மெத்தை போன்ற ஒன்று. “கப்” அல்லது “கப்புன்” என்றால் கையில் மணிக்கட்டிலிருந்து விரல் தொங்கல் வரையான பகுதி. نَفَثَ என்றால் ஊதினார். تَفَلَ என்றால் துப்பினார் அல்லது உமிழ்ந்தார். உறங்கச் சென்று இவ்வாறு செய்வதற்கோ, ஓதுவதற்கோ “வுழூ” என்ற சுத்தம் தேவையில்லை. அவசியமில்லை. “வுழூ” உடன் சொல்லுதல் نُوْرٌ عَلَى نُوْرٍ ஆகும். மிக நல்லது.

மனைவி ஓதத் தெரியாதவளாயிருந்தால் கணவன் ஓதி அவளின் கையில் ஊதி அவளின் கையால் உடலைத் தடவச் சொல்லலாம். அவள் கை இயக்கமற்றவளாயின் கணவன் தனது கையில் ஊதி அவளின் உடலைத் தடவி விடலாம். மனைவி வஹ்ஹாபிக் கொள்கையுடையவளாக இருந்தால் இவ்வாறு செய்வது அவளுக்குப் பிடிக்காது. அவள் விரும்பினால் மட்டுமே அவளுக்கு செய்து விடல் வேண்டும். ஆயினும் கணவன் இவ்வாறு செய்வதை தடுப்பதற்கு அவளுக்கு உரிமை கிடையாது. “ஸுன்னத்” ஆன ஒரு வணக்கத்தைச் செய்யக் கூடாதென்று அவள் தடுத்தால் அவ்விடயத்தில் அவளுக்கு வழிப்படுதல் மார்க்கமில்லை. சொல்லித் திருத்தப் பார்க்க வேண்டும். அதற்கு முடியாது போனால் “காழீ” நீதி மன்றம் செல்வது தவிர இதற்கு வேறு வழியில்லை. அவளை அடித்துத் திருத்த வேண்டியதுமில்லை. அவள் திருந்தவும் மாட்டாள். இது “ஸுன்னத்”ஆன விடயமாகும். “பர்ழ்” கடமையான விடயத்தில் அவள் தடை செய்தால் அதற்கு “காழீ” நீதி மன்றம்தான் ஒரே மருந்து. இவ்வாறுதான் தாடி வைக்கும் விடயமுமாகும். எனினும் மனைவி அடர்ந்த, பெரிய தாடியை விரும்பாத போது ஓரளவு – ஒரு பிடியளவு தாடி வைப்பது குற்றமாகாது. ஏனெனில் எனது மனைவி எனக்கு அழகு காட்டுவது போல் நானும் அவளுக்கு அழகு காட்டுகிறேன் என்று நபீ தோழர்களில் ஒருவர் கூறியதாக நான் ஒரு ஹதீதில் பார்த்திருக்கிறேன். அது தற்போது என் நினைவில் இல்லை. நினைவு வந்தால் பதிவு செய்வேன் இன்ஷா அல்லாஹ். قَالَتْ عَائِشَةُ:”فَلَمَّا اشْتَكَى كَانَ يَأْمُرُنِي أَنْ أَفْعَلَ ذَلِكَ بِهِ “பெருமானார் நோயுற்ற நேரம் அவ்வாறு அவர்களால் செய்ய முடியாது போன போது அவ்வாறு செய்யுமாறு என்னைப் பணிக்க நான் செய்தேன்” என்று ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் – புஹாரீ, ஹதீது எண் – 5748,
ஆதாரம் – முஸ்லிம், ஹதீது எண் – 2192-50

قَالَتْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْفُثُ عَلَى نَفْسِهِ فِي المَرَضِ الَّذِي مَاتَ فِيهِ بِ”الْمُعَوِّذَاتِ”( فَلَمَّا ثَقُلَ كُنْتُ أَنْفُثُ عَلَيْهِ بِهِنَّ، وَأَمْسَحُ بِيَدِ نَفْسِهِ لِبَرَكَتِهَا)

நபீ அலைஹிஸ்ஸலாம் மரண நோயிலிருந்த சமயம் கூட “குல் அஊது பிறப்பில் பலக்”, “குல் அஊது பிறப்பின்னாஸ்” என்ற இரண்டு அத்தியாயங்களையும் அவர்களே ஓதி அவர்களே தங்களின் திருவுடலைத் தங்களின் திருக் கரத்தால் தடவிக் கொண்டார்கள். அவர்களுக்கு இயலாமற்போன போது இவ்விரண்டையும் நான் ஓதி அவர்களின் கை கொண்டு தடவி விட்டேன். அருளை நாடி இவ்வாறு செய்தேன் என்று ஆயிஷா நாயகி கூறினார்கள்.
ஆதாரம் – புஹாரீ, ஹதீது எண் – 5735,
ஆதாரம் – முஸ்லிம், ஹதீது எண் – 2192-51

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களின் “ஸக்றாத்” மரண வருத்தத்தின் போது கூட குறித்த இரு அத்தியாயங்களையும் ஒதி தங்களின் உடலைத் தடவி உள்ளார்கள். அவர்களுக்கு முடியாமற்போன போது ஆயிஷா நாயகி அவர்கள் ஒதி நபீ பெருமானின் திருக்கரம் பிடித்து தடவி விட்டுள்ளார்கள். இந்த ஹதீதில் لِبَرَ كَتِهَا என்று ஒரு சொல் வந்துள்ளது. இது ஆயிஷா நாயகி அவர்கள் சொன்னது. அதாவது நபீ அவர்களின் கையை “பறகத்” அருள் பெறுவதற்காகப் பிடித்தேன் என்று கூறியுள்ளார்கள். நபீமார்களிலோ, உலமாஉகளிலோ, வலீமார்களிலோ “பறகத்” இல்லையென்று ஒப்பாரி வைத்து வருகின்ற மகான்களுக்கு இந்த நபீ மொழி ஒரு பாடமாக உள்ளது. உறக்கத்திற்கு சென்ற நேரமோ நோயுள்ள நேரமோ மேற்கண்டவாறு செய்வதால் நோய் குணமாகும். அல்லது குறையும். கொரோனா வைரஸ் நோய்க்கும் இது மருந்துதான். இது ஆன்மீக மருந்து.

——————————————————————————————————————–

ලෙඩෙන් තොර දිවිය නොඅඩු සම්පතකි.

Written by: Moulavee Alhaaj A Abdurrauf Misbaahee Bahjee

මිනිසෙකුගේ සම්පත්වලින් එකක් ලෙස රෝගයෙන් තොර, සැනසුම් දිවිය පමණක් නොඅඩු සම්පතකි.
දවසකට එක් වේලක් ආහාර නොමැතිවත්, ඇදුමක් නොමැතිවත්, බීමට, නෑමට පිරිසිදු ජලය නොමැතිවත්, කුසගින්නෙන් පෙලී, තිබහින් පිරී, හිසේ කැක්කුමක්වත් නොමැතිව නිරෝගීව ජීවත් වන දුගියෙකුට ඇති සැනසීම දහස් කෝටි ගණනාවකට හිමිකම් කියන වාහන, කඩ සාප්පු, සමාගම්, වතුපිටි, මාළිගාවලට හිමිකම් කියන කෝටිපතියෙකු භයානක රෝගයෙන් හෙම්බත් වී කෙඳිරි ගැසීමෙන් හා ඇඬීමෙන් අහිමි වූ නිරෝගී කමේ විටනාකම කෙලෙස කියන්නද?
“රෝගයෙන් තොර ජීවිතය නොඅඩු සම්පතකි” යන පැරැන්නන්ගේ කියමන එනිසා බිහිවූ එකක් වේ.
“පිරිසිදුකම “ඊමාන්” විශ්වාසයේ එක් අංගයකි යන්න ප්‍රකාශ කල නබිතුමාණන් දිනපතා උදේ සවස නොඅඩුව නිරෝගී දිවිය පතා යාච්ඥා කල සේක.

නිරෝගී දිවියට උන් වහන්සේ ක්‍රියා කල එක් මාර්ගයක්
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: ‘ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيهِمَا، وَقَرَأَ فِيهِمَا قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ: يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ، يَفْعَلُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ ‘ (بخاري 5017 – مسلم 2192- 50)

නබි සල් තුමාණන් නින්දට පැමිණි විට තමන්ගේ දෙඅත් එක් කර කුල්හුවල්ලාහු අහද්, කුල් අඌදු බිරබ්බිල් පලක්, කුල් අඌදු බිරබ්බින්නාස් යන වගන්ති තුන පාරායනය කරමින් දෙඅත් ගෙන ඇග පුරා ගල්වා හිසේ සිට මුහුණ ඉදිරිපසින් වතාවන් තුනකදී ගැල්වූ සේක.
උපුටා ගැනීම – බුහාරි හදීස් අංක – 5017
දැන්වීම – ආයිෂා නායකි රලියල්ලාහු අන්හා
උපුටා ගැනීම – මුස්ලිම් හදීස් අංක – 2192 – 50
දැන්වීම – ආයිෂා නායකි රලියල්ලාහු අන්හා

නබිසල් තුමාණන් රෑ නින්දට ගියවිට උක්ත අන්දමින් කිරීමට අමතක කරන්නේ නැත. එසේ අඛණ්ඩව කරන්නන්ට කායික හා මානසික රෝග පැතිරෙන්නේ නැත. නබිතුමාණන් තේරුමකින් තොරව එසේ කලේ නැත. වැඩක් නොමැතිව එසේ කලේ නැත. තමාගේ අනුගාමිකයින්ට පාඩමක් වීමට එසේ කල සේක.
පිරාෂ් යන්න ඇතිරිල්ලකි. නිදා ගැනීමට උපයෝගි කර ගන්නා පැදුරකි, බෙඩ්ෂීට්, මෙට්ටයක් වැනිය.
“කප්” හෝ “කප්පුන්” එනම් අතේ සිට ඇගිල්ල දක්වා පෙදෙස වේ. نَفَثَ එනම් පිඹීම. تَفَلَ එනම් කෙල ගැසීම වේ.
නිදා ගැනීමට ගොස් එසේ කිරීමට හෝ පාරායනය කිරීමට වුලු නැමැති පවිත්‍රතාවය අවශ්‍ය නැත. වුලු සමග යෑම نُوْرٌ عَلَى نُوْرٍ ඉතා හොදය.
බිරිඳ පාරායනය කිරීමට නොදන්නේ නම් සැමියා පාරායනය කර ඇයගේ දෙඅත් ගෙන පිඹ එම අත්වලින් ඇඟ පුරා ගෑවිය හැක. ඇයගේ අත් ක්‍රියා විරහිත නම් සැමියාගේ අත්වලින් ඇයගේ ඇඟ පුරා ගෑවිය හැක.
බිරිඳ වහ්හාබ්වාදී ප්‍රතිපත්ති අනුගමනය කරන්නේ නම් එසේ කිරීමට ඇය විරෝධය පල කරයි. ඇය කැමැති වූවහොත් පමණක් එසේ කල යුතුය. නමුත් සැමියා එසේ කිරීම වැලැක්වීමට ඇයට අයිතියක් නොමැත. “සුන්නත්” යන ආගමික ක්‍රමයක් කිරීමට ඇය වැලැක්වුවහොත් එයට එකඟ විය යුතු යන්න ආගමේ නැත. ඇයව නිවැරදි කිරීම උත්සහ දැරිය යුතුය. එසේ නොමැති නම් හාලි උසාවියට යෑම හැර වෙන මගක් නොමැත. ඇයට පහර දීමෙන් ඇය හරියන්නේ නැත.
එය “සුන්නත්” වතාවත් ක්‍රමයකි. “පර්ල්” වතාවකදී ඇය එසේ කරන්නේ නම් හාලි උසාවිය එකම ක්‍රමයකි. යටි රැවුල වැවීමත් එවැන්නකි. බිරිඳ පැතිරුණු රැවුලට කැමැත්තක් නොදක්වන විට කුඩා රැවුලක් වැවීම වැරැද්දක් නොවේ. මගේ බිරිඳ මට ලස්සන පෙන්වන්නා සේ මමද ඇයට ලස්සන පෙන්වන බව නබි තුමාණන්ගේ ගෝලයෙක් පැවසී තිබීම මම හදීස් එකක කියවා ඇත්තෙමි. දැනට එය මතකයේ නොමැත. මතක් වූ අවස්ථාවක සටහන් කරමි.

قَالَتْ عَائِشَةُ:”فَلَمَّا اشْتَكَى كَانَ يَأْمُرُنِي أَنْ أَفْعَلَ ذَلِكَ بِهِ
නබිතුමාණන් ලෙඩ වූ අවස්ථාවේ එසේ උන් වහන්සේට කල නොහැකි නිසා මා හට එසේ කරන ලෙස පැවසීමෙන් මම එසේ කල බව ආයිෂාතුමිය පවසා ඇත.

උපුටා ගැනීම – බුහාරි
හදීස් අංක – 5748
උපුටා ගැනීම – මුස්ලිම් හදීස් අංක – 2192 – 50

قَالَتْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْفُثُ عَلَى نَفْسِهِ فِي المَرَضِ الَّذِي مَاتَ فِيهِ بِ”الْمُعَوِّذَاتِ”( فَلَمَّا ثَقُلَ كُنْتُ أَنْفُثُ عَلَيْهِ بِهِنَّ، وَأَمْسَحُ بِيَدِ نَفْسِهِ لِبَرَكَتِهَا)
නබිතුමාණන් ලෙඩ වූ අවස්ථාවේ පවා කුල් අඌදු බිරබ්බිල් පලක්, කුල් අඌදු බිරබ්බින්නාස් යන වගන්ති දෙක පාරායනය කරමින් දෙඅත් ගෙන ඇග පුරා ගල්වා ගත් සේක. උන් වහන්සේට නොහැකි අවස්ථාවලදී මම එම ක්‍රියාව උන් වහන්සේගේ දෙඅත් ගෙන කල බව ආයිෂාතුමිය පවසා ඇත.
උපුටා ගැනීම – බුහාරි
හදීස් අංක – 5735
උපුටා ගැනීම – මුස්ලිම් හදීස් අංක – 2192 – 51

නබිතුමාණන් තමන්ගේ අවසාන ලෙඩ අවස්ථාවේදී පවා උක්ත වගන්ති දෙක පාරායනය කරමින් තමනගේ ඇග පුරා ගල්වා ගත් සේක. උන් වහන්සේට නොහැකි අවස්ථාවලදී එම ක්‍රියාව උන් වහන්සේගේ දෙඅත් ගෙන ආයිෂාතුමිය සිදුකර ඇත.
එම හදිස්හි لِبَرَكَتِهَا නමින් වදනක් ඇත. එය ආයිෂාතුමිය පවසා ඇත. නබිතුමාණන්ගේ දෙඅත් පිං ලබා ගැනීමට ඇල්ලූ බව පැවසුවාය.
නබිවරුන්, උලමාවරුන්, වලිවරුන් කෙරෙහි පිං නොමැති බව හඩා වැළපෙන උගතුන්ට මෙම නබි වදන හොඳ පාඩමක් වනු ඇත.
නින්දට ගිය අවස්ථාවේ හෝ ලෙඩ ඇති අවස්ථාවේ උක්ත අයුරු කරන්නේ නම් ලෙඩ සුව වේ. නැතහොත් අඩුවේ. කොරෝනා වෛරස් රෝගයට මෙය බෙහෙතකි.මෙය ආත්මික බෙහෙතකි.


HEALTH IS THE BEST WEALTH

(Written by Moulavee Alhaaj A Abdurrauff Misbaahee, Bahjee)

Only the healthy soothing life is the unmitigated and immaculate wealth in the life of a man.

How to say the value of health comparing the life of a millionaire though he is living among luxury vehicles, estates, palaces, shops and companies but struggling with incurable disease; while a poor man is living peaceful life even if he has no food for a time, no pure water for drinking and bathing; struggling with hunger and thirsty but free of disease without even a headache.

For this reason itself, our ancestors said “The Health is the Best Wealth”. The prophet (pbuh), who said that the Purity is a part of Eaman (Faith), invoked in the morning and evening daily without missing.

One of the activity that he performed in his life.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: ‘ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ ثُمَّ نَفَثَ فِيهِمَا، وَقَرَأَ فِيهِمَا قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ: يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ، يَفْعَلُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ ‘ (بخاري 5017 – مسلم 2192- 50)

When holy prophet (pbuh) comes to the mat for sleeping, he keeps the brink of both palm hands together and recites the three chapters ‘Kul Huwallaahu Ahath’, ‘Kul Aoothubi rabbil falaq’, and ‘Kul Aoothubi rabbinn naaz. Then blows on to the both palm hands and applies on his body as possible with those both palm hands starting from head to front body. He would repeat so thrice.
Source: Buhari.
Hatheez number 5017.
Informer: Aysha (RA)

Source :Muslim-Hatheez number:2192-50
Informer (Aysha (RA)

As Nabee (Pbuh) goes to sleep, he never skips to do so. Neither mental disease nor physical disease will affect those who follow this performance regularly. Nabee (pbuh) never did it hopelessly. He did it as pioneer lesson to his community.
“FIRAASH” means a sheet or mat for sleeping.

QAF or QAFFUN means the brink part from wrist to the tip of small finger.

نَفَثَ (blew) تَفَلَ (spit)
To go to sleep or to recite so, the ablution (wulzoo) is not necessary but better نُوْرٌ عَلَى نُوْرٍ if recited with Wulzoo.

If the wife does not know to recite, the hubby can recite and blow on her palm hand and ask her to apply on her body. If she is handicapped, the hubby can recite and apply on to her body.

If the wife is a Wahhabi follower, she won’t like to do so. Husband can do so only if she consents for it. But she has no right to ban her husband to do do.
If she bans not to do an activity of SUNNAH, it is not permitted in the religion to consent with her. Husband should try to make consent her. If it fails there is no other option but going to Quazi court. Not necessary to improve her by beating since she will never agree with it. This is a matter of SUNNAH. But if she bans in the subject of FARLZ, nothing but to go to Quazi Court

In the matter of having beard also like this alone. However, it would not be offence of having a small beard (in the quantity of fist) as the consort does not like the big beard. Because I have learnt in a hatheez that a companion of Nabee(pbuh) said “I show my beauty as my wife shows me beauty”. At present it is not in memory. When I get back to memory I will publish it.Insha Allah.

قَالَتْ عَائِشَةُ:”فَلَمَّا اشْتَكَى كَانَ يَأْمُرُنِي أَنْ أَفْعَلَ ذَلِكَ بِهِ
Aysha (RA) said,
“When Nabee (pbuh) was ill, he could not do so. But as he ordered to me I performed so”
Source Buhari
Hatheez number 5748
Source Muslim
Hatheez number 2192-50
قَالَتْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْفُثُ عَلَى نَفْسِهِ فِي المَرَضِ الَّذِي مَاتَ فِيهِ بِ”الْمُعَوِّذَاتِ”( فَلَمَّا ثَقُلَ كُنْتُ أَنْفُثُ عَلَيْهِ بِهِنَّ، وَأَمْسَحُ بِيَدِ نَفْسِهِ لِبَرَكَتِهَا)

“When Nabee (pbuh) was even in agony, he recited the ‘Kul Aoodu birabbil Falaq and Kul Aoodu birabbin naas and appled on his body himself, when he couldn’t do I recited the both myself and applied on him woth his hand.I did so for mercy” said Aysha (RA)
Source Buhari
Hatheez number 5735
Source Muslim
Hatheez number 2192-91

Even in the state of agony, Nabee (pbuh) has recited the above two chapters and has applied on his body with his sacred hands. When he could not, Aysha (RA) has done so with the sacred hands of Nabee (pbuh)
In this hatheez لِبَرَكَتِهَا has come said by Aysha (RA)
She has said that she held Nabee’hand for mercy.

This is a good lesson for the legends who have been crying that the Nabees and Awliyas have no mercy at all.

If this performance is followed at the time of going to sleep or at the time of diseased, we can get remedy or get reduced the affect of disease. This is a spiritual medicine for Corona too.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments