றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் கணிணிப் பிரிவு திறப்பு விழா

January 6, 2012

றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட மாணவர்களின் கணிணி அறிவை மேம்படுத்துவதற்காக 03.01.2012 செவ்வாய்க்கிழமை பி.ப 04.30 மணியளவில் இக்கலாபீடத்தில் ‘‘கணிணிப்பிரிவு’’ ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

இவ்வைபவத்தில் அதிசங்கைக்கும் மரியதைக்குமுரிய ஆன்மீகத் தந்தை கலாநிதி அல்ஹாஜ் A. அப்துர் றவூப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ (தால உம்றுஹூ) அன்னவர்களும் மற்றும் சிறுவர் மகளிர் விவகார பிரதியமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் M.A, காத்தான்குடி நகரபை பிரதி முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் KLM. பரீட் JP, றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட அதிபர் மெளலவீ HMM. இப்றாஹீம் நத்வீ, சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ, அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் நம்பிக்கைப் பொறுப்பின் செயலாளர் மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA மற்றும் உலமாக்கள், பிரமுகர்கள், பொதுமக்கள், ஜாமிஅஹ் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்திற்கு 10 கணிணிகளும், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் நம்பிக்கைப் பொறுப்பிற்கு மடிக் கணிணி ஒன்றும், ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்திற்கு கணிணி உபகரணங்களும் பிரதி நகர முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்களின் வேண்டுகோளின் பேரில் பிரதி அமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் M.A அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
அதே போல் பிரதி நகர முதல்வரின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் KLM. பரீட் JP அவர்களினால் ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்திற்கு அலுவலக தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

You may also like

Leave a Comment