15வது வருட முஹ்யித்தீன் இப்னு றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு

January 31, 2017

சிரியா நாட்டின் டமஸ்கஸ் நகரில் பள்ளிகொண்டுள்ள மெய்ஞ்ஞானக்கடல், அஷ்ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அந்நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி- 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னார் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக அன்றைய தினம் பி.ப 5.00 மணிக்கு அன்னார் பேரிலான திருக்கொடியேற்றமும், கத்முல் குர்ஆன் மஜ்லிஸும் நடைபெற்றது. மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆத்மீகப் பேருரை நிகழ்வும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து இறைஞான கீதம் பாடப்பட்டு விஷேட நிகழ்வாக ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த 6 சகோதர, சகோதரிகளுக்கு கட்டார் நாட்டு 5 ரியாழ் பணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இறுதியாக துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகமும் நடைபெற்று இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

You may also like

Leave a Comment