மஞ்சந்தொடுவாயில் நடைபெற்ற 16வது வருட மீலாதுன் நபீ பெருவிழா – 2019

November 25, 2019

அகிலத்தின் உதயம், றஹ்மதுன்லில் ஆலமீன் எம்பெருமானார் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பிறந்த மாதத்தை கௌரவித்து மட்டக்களப்பு-மஞ்சந்தொடுவாய் ஹிழுறியா கலாசார நன்நோக்குச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட மீலாதுன் நபீ பெருவிழா – 2019 23.11.2019, 24.11.2019 ஆகிய இரு தினங்களில் ஹிழுறியா நன்நோக்குச் சங்க மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.முதலாம் நாள் நிகழ்வில் திருக்கொடியேற்றமும், மௌலித் மஜ்லிஸும், இரண்டாம் நாள் நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வும், சங்கைக்குரிய மௌலவீ MM.ஜுமான் றவ்ழீ அவர்களினால் சிறப்பு சொற்பொழிவும், அதிதிகளின் விஷேட உரையும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் சங்கைக்குரிய உலமாஉகளும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருவாளர் வ. வாசுதேவன் அவர்கள் பிரதம அதிதியாகவும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இறுதியாக துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

You may also like

Leave a Comment