16 வது வருட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2017

December 4, 2017

மாதவக் கோன், மழ்ஹறுல் அதம்மு, அஷ்றபுல் வறா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தையும், அவர்கள் பிறந்த நாளான றபீஉனில் அவ்வல் பிறை 12ம் நாளையும், அவர்கள் பிறந்த நேரமான பஜ்ருடைய நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 02.12.2017 சனிக்கிழமை புனித ஸலவாத் மஜ்லிஸும், திருமுடிகளும் தரிசனமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அன்றைய தினம் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான இறைநபீ நேசர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், நபீமணி பேரர் இமாமுனா ஷஹீதே கர்பலா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் திருமுடிகளை இரவு 10.00 மணி தொடக்கம் 02.00 மணி வரை தரிசித்து அருள் பெற்றார்கள்.

அதனைத் தொடர்ந்து 2.30 – 3.30 மணி வரை சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹு அன்னவர்களினால் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

அதன்பின் சுப்ஹ் தொழுகைக்கான அதான் வரை பல்லாயிரக்கணக்கான மக்களின் ஒருமித்த குரலில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் முழங்கப்பட்டது. இறுதியாக துஆ ஓதப்பட்டு, நாயகத்தின் அன்புக்காக ஒன்று சேர்ந்த மக்களுக்காக அருள் அன்னதானம் வழங்கப்பட்டு, சுப்ஹ் தொழுகை ஜமாஅத்தாக நடைபெற்று இனிதே ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.

அல்ஹம்துலில்லாஹ்

You may also like

Leave a Comment