17வது வருட புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு – 2018

November 22, 2018

மாதவக் கோன், மழ்ஹறுல் அதம்மு, அஷ்றபுல் வறா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தையும், அவர்கள் பிறந்த நாளான றபீஉனில் அவ்வல் பிறை 12ம் நாளையும், அவர்கள் பிறந்த நேரமான பஜ்ருடைய நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக 21.11.2018 புதன்கிழமையன்று காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் புனித ஸலவாத் மஜ்லிஸும், திருமுடிகள், திருப்பாத சுவடு தரிசனமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அன்றைய தினம் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான இறைநபீ நேசர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினது திருப்பாத சுவடு, திருமுடிகளையும், நான்காவது கலீபா இமாம் அலீ இப்னு அபீதாலிப் றழியல்லாஹு அன்ஹு, நபீமணி பேரர் இமாமுனா ஷஹீதே கர்பலா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு, ஸெய்யிதுனா உவைஸுல் கர்னீ றழியல்லாஹு அன்ஹு, குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு, கரீப் நவாஸ் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு ஆகியோரினது  திருமுடிகளையும் இன்னும் பல அருள் நிறைந்த பொருட்களையும் இரவு 8.00 மணிதொடக்கம் அதிகாலை 02.00 மணி வரை தரிசித்து அருள் பெற்றார்கள்.

அதனைத் தொடர்ந்து அதிகாலை 2.30 – 3.30 மணி வரை சங்கைக்குரிய மௌலவீ MM.ஜுமான் றவ்ழீ அன்னவர்களினால் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

அதன்பின் சுப்ஹ் தொழுகைக்கான அதான் வரை பல்லாயிரக்கணக்கான மக்களின் ஒருமித்த குரலில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் முழங்கப்பட்டது. இறுதியாக துஆ ஓதப்பட்டு, நாயகத்தின் அன்புக்காக ஒன்று சேர்ந்த மக்களுக்காக அருள் அன்னதானம் வழங்கப்பட்டு, சுப்ஹ் தொழுகை ஜமாஅத்துடன் இனிதே ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.

அல்ஹம்துலில்லாஹ்.You may also like

Leave a Comment