18வது வருட புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு – 2019

November 11, 2019

மாதவக் கோன், மழ்ஹறுல் அதம்மு, அஷ்றபுல் வறா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தையும், அவர்கள் பிறந்த நாளான றபீஉனில் அவ்வல் பிறை 12ம் நாளையும், அவர்கள் பிறந்த நேரமான பஜ்ருடைய நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக 10.11.2019 ஞாயிற்றுக்கிழமையன்று காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் புனித ஸலவாத் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிகாலை 2.00 மணியளவில் அருள் நிறைந்த திருமுடிகளை பள்ளிவாயலுக்கு சுமந்து வரும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதிகாலை 2.10 – 3.30 மணி வரை அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

அதன்பின் சுப்ஹ் தொழுகைக்கான அதான் வரை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் ஸலவாத் மஜ்லிஸ் நடைபெற்றது. இறுதியாக துஆ ஓதப்பட்டு, நாயகத்தின் அன்புக்காக ஒன்று சேர்ந்த மக்களுக்காக அருள் அன்னதானம் வழங்கப்பட்டு, சுப்ஹ் தொழுகை ஜமாஅத்துடன் இனிதே ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.

அல்ஹம்துலில்லாஹ்.

You may also like

Leave a Comment