18வது வருட தங்கள் வாப்பா கந்தூரி

December 16, 2014
ஆஷிகுல் அவ்லியா, ஆரிப்பில்லாஹ் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களின் நினைவாக 18வது வருட மாகந்தூரி, அன்னதானம் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் கடந்த 15.12.2014 (திங்கட்கிழமை) அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பி.ப 05 மணிக்கு சங்கைக்குரிய உலமாஉகளால் அன்னார் பேரில் திருக் கொடியேற்றப்பட்டு, நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் சிறந்த தலைமைத்துவம் வேண்டி துஆப் பிரார்த்தனை நிகழ்வு இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து மஜ்லிஸ் மண்டபத்தில் அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களுக்காக திருக்குர்ஆன் முழுமையாக ஓதப்பட்டு அவர்களின் ஆத்மாவுக்கா ஹதியா செய்து வைக்கபட்டது.

மஃரிப் தொழுகையின் பின் ஸபர் மாதத்தை முன்னிட்டு பள்ளிவாயலில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து பாடும் கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ (அதாலல்லாஹு பகாஅஹு) அன்னவர்களினால் அப்துர் றஷீத் கோயாத்தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களின் பேரில் எழுதப்பட்ட (القصائد المصباحية فى مدح الحضرة الرشيدية) எனும் மௌலித் ஓதப்பட்டு இஷா தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது.
 இஷாத் தொழுகையின் பின் கலாபூஷணம் மௌலவீ  HMM.இப்றாஹீம் நத்வீ அன்னவர்களினால் எழுதப்பட்ட “றஷீதிய்யஹ் கானங்கள்” , “பயணத் தொழுகை” என்ற இரு நூற்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விரு நூற்களின் முதற் பிரதியினை மௌலவீ அப்துல் மஜீத் றப்பானீ அவர்களுக்கு மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அடுத்தடுத்த பிரதிகளை ஏனைய உலமாக்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இறுதியாக மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களினால் தௌஹீதுக்காக பணிபுரிந்த குத்புஸ் ஸமான் அப்துர் றஷீத் தங்கள் வாப்பா அன்னவர்களின் அகமியங்களை விளக்கி சிறப்புரை ஆற்றப்பட்டது. தொடர்ந்து மௌலவீ அப்துல் மஜீத் றப்பானீ அவர்களார் பெரிய துஆ ஓதப்பட்டு துஆவின் பின் தபர்றுக் விநியோகம் செய்யப்பட்டு இனிதே ஸலவாத்துடன் கந்தூரி நிகழ்வுகள் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்

கந்தூரிக்காக தொண்டாற்றிய தொண்டர்கள்

You may also like

Leave a Comment