கொள்கை விளக்கக் கருத்தரங்கு 2ம் கட்டம்

September 6, 2015
மஹ்பிலுர் றப்பானிய்யீன் சங்கத்தினரால் நடாத்தப்பட்டு வருகின்ற கொள்கை விளக்கக் கருத்தரங்கு 02ம் கட்டமாக சுன்னத் வல் ஜமாஅத் சமூகத்தில் வாழ்கின்ற பெண்களுக்கான செயலமர்வாக 06.09.2015 (ஞாயிற்றுக்கிமை) காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 02.00 மணி வரை காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளதாரர்களாக சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons) அன்னவர்களும், சங்கைக்குரிய மௌலவீ MYM. ஜீலானீ றப்பானீ அன்னவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் இந்நிகழ்வில் பெருமதியான கொள்கை சார்ந்த விளக்கங்களையும் அள்ளி வழங்கினார்கள். இச்செயலமர்வில் பங்கு கொண்டவர்களால் வைக்கப்பட்ட ஆக்கபூர்வமான கேள்விகளுக்கு மிகத் தெளிவான முறையில் பதில்களும் அளித்தார்கள்.
இது மஹ்பிலுர் றப்பானிய்யீன் ஏற்பாடு செய்த இரண்டாவது செயலமர்வாகும். முதலாவது செயலமர்வு கடந்த 17.05.2015 அன்று ஆண்களுக்கு நடாத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்த விடயமாகும்.
 – அல்ஹம்துலில்லாஹ் –

You may also like

Leave a Comment