20வது வருட தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு

November 26, 2016

இந்தியா – கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ, ஆஷிகுல் அவ்லியா அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் நினைவாக 20வருடமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 25.11.2016 அன்று அன்னார் பேரிலான அருள்மிகு கந்தூரி நடைபெற்றது.

இந்நிகழ்வில் அன்றைய தினம் பி.ப 4:45 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும் நடைபெற்றது. அடுத்த நிகழ்வாக மஃரிப் தொழுகையின் பின் “அல் கஸாயிதுல் மிஸ்பாஹிய்யஹ் பீ மத்ஹில் ஹழ்றதிர் றஷீதிய்யஹ்” மௌலித் மஜ்லிஸ் நடைபெற்றது.

இஷா தொழுகையி்ன் பின் சங்கைக்குரிய மௌலவீ HMM.இப்றாஹீம் நத்வீ அன்னவர்களினால் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு இறுதியாக தங்கள் வாப்பாவின் மீது காதல் கொண்ட முஹிப்புகளால் எழுதப்பட்ட புகழ் கீதங்கள் பாடப்பட்டது.

நிறைவாக பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகமும் நிறைவு பெற்றவுடன் இனிதே ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்

_dsc0049-forweb _dsc0064-forweb _dsc0069-forweb _dsc0070-forweb _dsc0073-forweb _dsc0086-forweb dsc_0025-forweb dsc_0029-forweb dsc_0034-forweb dsc_0043-forweb dsc_0051-forweb dsc_0056-forweb dsc_0061-forweb dsc_0069-forweb dsc_0077-forweb dsc_0081-forweb dsc_0087-forweb dsc_0112-forweb dsc_0117-forweb dsc_0162-forweb dsc_0177-forweb dsc_0181-forweb dsc_0194-forweb dsc_0211-forweb dsc_0214-forweb dsc_0236-forweb

You may also like

Leave a Comment