ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாடு 2014ற்கான -ஊடகவியலாளர் சந்திப்பு-

October 13, 2014
காத்தான்குடியில்
நடைபெறவுள்ள ஸுன்னத் வல் ஜமா அத் உலமாக்களுக்கான மாநாடு பற்றி ஊடகவியலாளர்களுக்கு
விளக்க மளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு காத்தான்குடி அல் ஜாமிஅதுர் றப்பானியா
மண்டபத்தில் 10-10-2014 அன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டின்
ஏற்பாட்டுக்குழுத்தலைவர் மௌலவீ எச்.எம்.எம்.இப்றாகீம் நத்வீ கருத்து
தெரிவிக்கையில் இந்த மாநாட்டில் ஆரம்ப வைபவம் 18.10.2014 சனிக்கிழமை காலை நடைபெறும். இதில்
அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இராணுவ பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து
கொள்ளவுள்ளனர். இந்த மாநாடு எமது அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பின்
பொதுக்குறிக்கோள்கள் தொடர்பாக கூறப்படுள்ளதன் அடிப்படையிலயே நாங்கள் ஏற்பாடுசெய்துள்ளோம்.

எமது மேற்படி அல்ஹாஜ்
அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பு இலங்கை பாராளுமன்றத்தில்
கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமாகும்.
இங்கு பல்வேறு
இஸ்லாமிய அமைப்புக்களும் பல மாநாடுகளை நடாத்துகின்றனர். நாங்கள் ஸுன்னத்வல் ஜமா
அத் உலமாக்களை ஒன்று திரட்டி இந்த மாநாட்டை நடாத்துகின்றோம். இந்த மாநாட்டுக்கான
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த
ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ்
நம்பிக்கைப்பொறுப்பின் செயலாளர் மௌலவீ கே.ஆர்.எம்.ஸஹ்லான் றப்பானீ இந்த ஸுன்னத்
வல் ஜமா அத் உலமாக்களுக்கான மாநாடு எதிர்வரும் 18, 19, 20ம் திகதிகளில் காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி பத்ரியா ஜும் பள்ளிவாயல்
மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அல்ஹாஜ் அப்துல்
ஜவாத் ஆலிம் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பின் ஏற்பாட்டில் இந்த மாநாடு
நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில்
இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கையைச் சேர்ந்த 300 உலமாக்கள் கலந்து கொள்வதுடன் இந்தியாவிலிருந்தும் உலமாக்கள் பேச்சாளர்கள்
கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாடு 18, 19ம் திகதிகளில் உலமாக்களுக்கு நடைபெறவுள்ளது. 20ம் திகதி
பொதுமக்களுக்கு ஸுன்னத் வல்ஜமாஅத்கொள்கை விளக்கப்பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இஸ்லாமிய
பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்ட ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கையின் அடிப்படையிலான
விடயங்கள் தொடர்பில் உலமாக்களுடன் கலந்துரையாடுவதே ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள்
மாநாட்டின் நோக்கமாகுமென அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்
கருத்துத்தெரிவிக்குமபோது ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களை ஒன்றினைத்து அவர்கள்
மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதும், இஸ்லாமிய
பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்ட ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கையின் அடிப்படையிலான
விடயங்கள் தொடர்பில் உலமாக்களுடன் கலந்துரையாடுவதும், ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கையின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதும், பொதுமக்களை சாத்வீகத்தின் பால் வழிகாட்டவும் ஒற்றுமை புரிந்துணர்வு சமாதானம்
இனங்களுக்கிடையிலான நல்லுறவு என்பவற்றை பொதுமக்களுக்கு போதிக்க உலமாக்களை
ஊக்குவிக்கவும் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும், நல்லெண்ணத்தையும் ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் பற்றியும்
அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும்
பற்றிய தவறான எண்ணங்களை நீக்குவதற்கான வழிமுறை பற்றி ஆராய்வதும்
பொதுமக்களுக்கு
இஸ்லாமிய பாரம்பரியங்களை அடிப்படையாக கொண்ட ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கை விளக்கத்தை
ஏற்படுத்துவதுமே இந்த மாநட்டின் நோக்கங்களாகும் என தெரிவித்தார்.

இந்த
மாநாட்டுக்கு உள்ளுர் உலமாக்களுக்கு அழைப்பு விடுத்தீர்களா எனக் கேட்ட போது. இந்த பிரதேசத்தில் இருக்கின்ற ஸுன்னத் வல் ஜமா அத் கொள்கையுடைய உலமாக்களுக்கு
அழைப்பு விடுத்துள்ளோம் என மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவின் செயலாளர் மௌலவி
எம்.எல்.எம்.காசீம் பலாஹி தெரிவித்தார்.
இந்த
ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் சட்டத்தரணி
எம்.ஐ.ஏ.எச்.நவாஸும் கலந்து கொண்டிருந்தார்.

You may also like

Leave a Comment