25வது வருட அருள் மிகு கந்தூரி, நினைவு தின மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு

February 29, 2016
முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடையில் வாழும் வைத்தியக் கலாநிதி ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் 25வது வருட அருள்மிகு கந்தூரியும், றிபாயிய்யஹ் தரீகாவின் ஸ்தாபகர் சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களின் நினைவு தின மஜ்லிஸும் 26.02.2016 (வெள்ளிக்கிழமை) – 28.02.2106 (ஞாயிற்றுக்கிழமை) வரை காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக வெள்ளிக்கிழமையன்று இரு நாதாக்கள் பெயரி்ல் திருக்கொடியேற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன், ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மௌலித், தலைபாதிஹா, றிபாயீ நாயகம் மௌலித், கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
தொடர்ந்து மூன்று தினங்களும் சங்கைக்குரிய உலமாஉகளால் சன்மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்றதுடன் இறுதித்தினமான ஞாயிற்றுக்கிழமை அன்றிரவு பெரிய துஆ ஓதப்பட்டு தபர்றுக் விநியோகமும் செய்யப்பட்டு ஸலவாத்துடன் இனிதே நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

மூன்று நாள் நிகழ்வுகளின் தொகுப்பு…

You may also like

Leave a Comment