28வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ், ரிபாஈ நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு – 2019

January 22, 2019

வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக 18.01.2019 தொடக்கம் 20.01.2019 வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன.

தொடர்ச்சியாக 3 தினங்கள் நடைபெற்ற மஜ்லிஸ் நிகழ்வுகளில் 1ம் நாளன்று பி.ப 5.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வாக திருக்கொடிகளேற்றமும், கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினது சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்று துஆ ஸலவாதுடன் 1ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

2ம் நாள் நிகழ்வி்ல் பி.ப 5.00 மணிக்கு றிபாஈ நாயகம் மவ்லி்த் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் தலைபாதிஹா மவ்லித் மஜ்லிஸ் நிகழ்வும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MSA.ஸாஹ்ஜஹான் றப்பானீ அவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்று துஆ ஸலவாதுடன் 2ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

இறுதித் தினமான 3ம் நாளன்று பி.ப 5.00 மணிக்கு ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ், ரிபாஈ நாயகம் மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ அவர்களின் ஆன்மீக சொற்பொழிவும், இறைஞான கீதமும் பாடப்பட்டு இறுதியாக துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.

அல்ஹம்துலில்லாஹ்.

You may also like

Leave a Comment