Thursday, March 28, 2024
Homeநிகழ்வுகள்29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் பெருவிழா நிகழ்வு

29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் பெருவிழா நிகழ்வு

திருக்கொடியேற்றம்.

ஏந்தல் ஹாஜா
பேரில்
ஏற்றினோம்
திருக்கொடி!
சாந்தி பெற்றோம்!
சற்குணம்
அடைந்தோம்!
அந்தம் ஆதி இல்லா
(த)
அல்லாஹ் ஆசி
பெற்றோம்!
அண்ணல் ஹாஜாவின்
நேசம் பெற்று நேர்வழி கண்டோம்!

ஹாஜாஜீ மஜ்லிஸ்

இறையருள்
சுரக்கும்
இங்கு இறையறிவு
பேசும்!
இறையன்புடன்
இறைஆசியும் கிடைக்கும்!
இறைநேசம் பெற்ற
இறை நேசர் ஹாஜாவின்
எதார்த்த புகழ்
என்றும் பாடும்!

மனக்கும்
மொளிதுகள்
மண்ணை மட்டுமல்ல 
மனங்களையும் மணக்கவைக்கும் 
இந்த மௌலிதுகள்!
சங்கைமிக்க
சாந்தி நபிகள் மீது 
சலாத்தையும் சலவாத்தையும் 
சங்கமிக்க வைக்கிறது!



அப்துல் ஜவாத்
ஆலிம் வலியுல்லாஹ்வின் அற்புதமிக்க சியாரம்

கண்ணியமிக்க
புண்ணிய சியாரம்
இறைசின்னமிக்க ஏற்றமிக்க சியாரம்!
இதனைக்கானும்
போது இறை எண்ணம் வரும்
இறை இன்பம் தரும்!
அஜ்மீர் அரசரின்
அருள்மிகு தர்கா சரீப்
உள்ளமை அல்லாஹ்வை
உணர்வினால் உணர்கின்றோம்
வல்லமை
வல்லோனனவனின் வல்லமையை புரிகின்றோம்
கள்ளத்தனம்
கலைந்து கவலைகளை மறக்கிறோம்

அற்புதமிக்க
அலங்காரம்
அல்லாஹ் அவனின்
அன்பர் ஹாஜாவின்
வருகைக்காய்
அற்புதமிக்க அலங்காரங்கள் 
எல்லோரையும் ஏங்கவைக்கிறது!
எல்லோரின்
அகங்களில் 
ஆனந்தத்தை வரவேற்கிறது! 
ஒளிவிலக்குகளின்  ஒளிர்வுகள் 
இல்லப்பள்ளி
மட்டுமல்ல
உள்ளத்து
உணர்வுகளும்
ஒளிரும்
விளக்குகளால்
ஒளிர்வு அடைகிறது!


ஏற்றம் காணும்
அன்னதானம்
மனங்களை
மட்டுமல்ல
இனங்களையும் இந்த
தானம் இணைக்கிறது!
விருந்தாக
மட்டுமல்ல 
நோய்களுக்கு மருந்தாகவும் 
இது மகத்துவம் அளிக்கிறது!

தொண்டர்களின் தொண்டுகள்
தீனுக்காக
தீனோருகாக்க
தீச்செயலை ஒழிப்பதற்காக
தியாகங்களை செய்து
திருப்தியாக வாழ்வது!


சன்மார்க்க
உரைகள்
சத்தியம் இதனால்
சரித்திரமாகிறது!
உத்தம நபியின்
உன்னத போதனை
உயிர் பெறுகிறது!
அறிவு மட்டுமல்ல
அனைவருக்கும்
அருளும் கிடைகிறது!



மாணவர் கௌரவம்
கல்வி சமூகம்
கண்திரப்பதால்
மாணவர் சமூகம்
மகிமை பெறுகிறது!
உலக வாழ்வில்
ஏற்றம் மட்டுமல்ல
மாற்றமும்
காண்கிறது!



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments