30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 05ம் நாள் நிகழ்வு

June 3, 2016

அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 05ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 29.05.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வாக பி.ப 5.00 மணிக்கு மௌலிது அதாஇர் றஸூல் மஜ்லிஸுவும்,மஃரிப் தொழுகையின் பின் கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷாத் தொழுகையின் பின் ஹாழிறூ பாச்சரமும், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லலூரியில் இருந்து “மௌலவீ பாஸில் றப்பானீ” பட்டம் பெற்று வெளியேறும் 10 உலமாஉகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து விஷேட நிகழ்வாக இவ்வாண்டு றப்பானீ பட்டம் பெற்று வெளியேறும் சங்கைக்குரிய மௌலவீ MJA.ஸுஹ்ரீ றப்பானீ அவர்கள் எழுதிய الكواكب المفتوحة من الصحائف المفهومة எனும் பெயரில் அறபு மத்றஸாக்களில் கல்வி பயிலுகின்ற ஆரம்ப மாணவர்களுக்கு பிரயோசனம் அளிக்கும் வகையில் அறபு இலக்கண, இலக்கிய சட்டங்கள் அடங்கிய நூல் வெளியீட்டு நிகழ்வும் மிகச்சிறப்பாக நடந்தேறியது. அடுத்த நிகழ்வாக ஷம்ஸ் மீடியா யுனிட்டின் ஏற்பாட்டில் ஹாஜா நாயகம் அன்னவர்களைப் புகழ்ந்து பாடக் கூடிய கவ்வாலீ மஜ்லிஸ் நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இறுதியாக பெரிய துஆ ஓதப்பட்டு ஹாஜாஜீ கந்தூரிக்காக அணிதிரண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு அருள் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்…. 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 05ம் நிகழ்வுகளின் தொகுப்பு

DSC_0015

DSC_0016

DSC_0017

DSC_0018

DSC_0019

DSC_0022

DSC_0023 2 [for web]

DSC_0041 [for web]

DSC_0085 [for web]

DSC_0098 [for web]

DSC_0099 [for web]

DSC_0181 [for web]

DSC_0182 [for web]

DSC_0183 [for web]

DSC_0187 [for web]

DSC_0195 [for web]

DSC_0196 [for web]

DSC_0200 [for web]

DSC_0203 [for web]

DSC_0210 [for web]

DSC_0282 [for web]

DSC_0304 [for web]

DSC_0343 [for web]

DSC_0346 [for web]

DSC_0347 [for web]

DSC_0348 [for web]

DSC_0367 [for web]

DSC_0372 [for web]

DSC_0412 [for web]

DSC_0509 [for web]

DSC_0514 [for web]

DSC_0570 [for web]

DSC_0576 [for web]

DSC_0578 [for web]

DSC_0586 [for web]

DSC_0603 [for web]

DSC_1656 [for web]

You may also like

Leave a Comment