30வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரிக்கான அங்குரார்ப்பன கூட்டம்

March 19, 2016
கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 30வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரிக்கான அங்குரார்ப்பன கூட்டம் 16.03.2016ம் திகதி அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பி்ன் முகாமைத்துவ சபை உறுப்பினர்களும், அவ்வமைப்பின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் நிர்வாகிகளும் அதே போன்று சமூக தொண்டார்வ நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் 30வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரிக்கான தலைவர், உபதலைவர், செயலாளர், நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு இனிதே ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.
 – அல்ஹம்துலில்லாஹ் –

30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான கொடியேற்ற திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

You may also like

Leave a Comment