31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அங்குரார்ப்பணக் கூட்டம்

February 18, 2017

அஜ்மீர் அரசர், கரீபே நவாஸ், அதாயே றஸூல் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அங்குரார்ப்பணக் கூட்டம் 18.02.2017 அன்றிரவு 8:00 மணிக்கு காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் – ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்கள், சங்கைக்குரிய உலமாஉகள், பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் முக்கியஸ்தர்கள், ஹாஜாஜீ முஹிப்பீன்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் உரையாற்றுகையில், இதுவரை 30 வருடங்கள் ஹாஜாஜீ மாகந்தூரியை சிறப்பாக செய்தது போல் இவ்வருடம் அதை விட பன்மடங்கு சிறப்பாக நடாத்த வேண்டும் என்றும், தொண்டர்கள் தலைமைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன், ஒற்றுமையாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான தலைவர்கள், செயலாளர்கள், பொருளாலர், கந்தூரிக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10.05.2017 தொடக்கம் 14.05.2017 வரை 5 தினங்கள் கந்தூரியை நடாத்துவது என்று தீர்மானம் செய்யப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

You may also like

Leave a Comment