33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்.

April 27, 2019
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
 
அஜ்மீர் அரசர், கரீபே நவாஸ் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 33வது வருட கந்தூரிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன.
 
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும், பொதுமக்களின் நன்மை கருதியும், பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளை கருத்திற் கொண்டும் குறிப்பாக ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் வேண்டுகோளை கருத்திற் கொண்டும் எமது 33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகள் யாவும் காலவரையறையின்றி மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை ஹாஜாஜீ முஹிப்பீன்கள், முரீதீன்கள், பொதுமக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

 
கந்தூரிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் இராப்பகலாக ஈடுபட்ட அனைத்து தொண்டர்களுக்கும் குறிப்பாக அலங்காரப் பிரிவு, வீதி ஒழுங்குப் பிரிவு, மின் அலங்காரப் பிரிவு மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், கந்தூரிக்காக நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் கரீப் நவாஸ் பௌண்டேஷன் கந்தூரி ஏற்பாட்டுக் குழு சார்பிலும், பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மற்றும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
இவ்வண்ணம்
கரீப் நவாஸ் பௌண்டேஷன்
மற்றும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு
காத்தான்குடி.

You may also like

Leave a Comment