Thursday, March 28, 2024
Homeநிகழ்வுகள்33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி-2019 (3ம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு)

33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி-2019 (3ம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு)

அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் குடும்பத்தாரினதும் நினைவாக நடைபெறும் 33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 3ம் நாள் நிகழ்வுகள் 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு மவ்லிது அதாயிர் றஸூல் மஜ்லிஸும், பி.ப 6.00 மணியளவில் காட்நார்ஸா விநியோக நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் முகமாக கிறாஅத் ஓதப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தினத்தில்  உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டியும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களின் நினைவாகவும், நாட்டின் அமைதி வேண்டியும் 2 நிமிட மௌன பிரார்த்தனையும், விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்வும் நடைபெற்றது.

நகர சபை உறுப்பிர்ப்பினர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய  ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களும்,   மேஜர் ஜெனரல் கபில உடுலுபொல அவர்களும், மட்டக்களப்பு பிராந்திய  231வது படைப்பிரிவின் பிரிகேட் கொமண்டர் லெப்டினன் கேர்ணல் மிஹிந்து பிரேரா அவர்களும் மற்றும் பாதுகாப்பு படை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அடுத்த அமர்வாக மஃரிப் தொழுகையின் பின்னர் புனித கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின்னர் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய  ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அஜ்மீர் ஷரீப் சென்று வருவதற்கான ஹாஜாஜீ தொண்டர்களுக்கான பயணச் சீட்டு குலுக்களில் ஹாஜாஜீ தொண்டர் MSM.மத்லூப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இறுதியாக துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் 33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments